Greek government announces major pension cuts
கிரேக்க அரசாங்கம் மிகப்பெரும் ஓய்வூதிய வெட்டுக்களை அறிவிக்கிறது
By Robert Stevens and Alex Lantier
13 May 2010
Use this version to print | Send
feedback
செவ்வாயன்று கிரேக்க அரசாங்கம் மிகப் பெரிய வெட்டுக்களை ஓய்வூதிய நலன்களில் அறிவித்துள்ளது. இச்சட்டம், முதல் நாள் இரவு நடடைபெற்ற மந்திரிசபைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கபட்டு தயாரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, கிரேக்க கடன் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கம் செயல்படுத்தி வரும் தொடர்ந்த வெட்டுக்களில் சமீபத்தியதாகும். மே 2 ம் தேதி நாடெங்கிலும் தொலைக்காட்சி மூலம் அறிவிக்கப்பட்ட 30 பில்லியன் யூரோக்கள் சிக்கன நடவடிக்கை திட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அதில் பாரிய ஊதிய வெட்டுக்கள், விற்பனை வரி அதிகரிப்புக்கள் மற்றும் தனியார் மயமாக்கல்கள் அடங்கியிருந்தன. இதற்கு ஈடாக ஒரு கூட்டு சர்வதேச நாணய நிதிய-ஐரோப்பிய ஒன்றியப் பிணை எடுப்பு கிடைக்கும்.
இச்சட்டம் பெண்களின் ஓய்வூதிய வயதை 60ல் இருந்து 65க்கு உயர்த்துகிறது. அது ஆண்களின் உயர்விற்கு ஒப்ப அமைந்துள்ளது. இதையொட்டி முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணி ஆண்டுகள் 35 முதல் 40 ஆண்டுகள் இருத்தல் வேண்டும் என்று உயர்த்துகிறது. அதைவிடக் குறைவாக உள்ள ஒவ்வொரு ஆண்டிற்கும் ஆறு சதவிகித ஓய்வூதியக் குறைப்பு என்னும் அபராதத்தையும் தொடக்கியுள்ளது. இதையொட்டி அரசாங்கம் சராசரி ஓய்வூதிய வயதை தற்போதுள்ள 61.4 என்பதில் இருந்து 2015 க்குள் 63.5 என உயர்த்தும் நோக்கத்தை கொண்டது. அதே நேரத்தில் இது அரசாங்கத்தை முன்கூட்டிய ஓய்விற்கான அபராதங்களையும் மதிப்பீடு செய்ய அனுமதிக்கும்.
மாத ஓய்வூதியத் தொகையின் அடிப்படை 10 சதவிகிதமாக குறைந்து 400 யூரோக்களில் இருந்து 360 யூரோக்கள் என (கிட்டத்தட்ட அமெரிக்க 450 டொலர் என தற்போதைய மாற்று விகிதத்தில்) இருக்கும். ஓய்வூதியம் பெறுபவர்கள் பல நேரமும் அரசாங்க ஓய்வூதியத் தொகையுடன் சேர்த்துக் கொள்ள தங்கள் பணியிடங்களில் உள்ள சேமிப்புக்களில் பங்கு பெறுவர். ஆனால் இந்த ஓய்வூதிய நிதிகளில் பலவும் திவாலாகிவிட்டன, அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. இப்பொழுது அரசாங்கம் நடத்தும் 13 ஓய்வூதிய நிதிகள் 2018க்குள் 3 ஆக இணைக்கப்பட்டுவிடும். அது "சேமிப்புக்களைத் தோற்றுவிப்பதின் மூலம்" அதாவது ஓய்வூதியங்களை குறைப்பதின் மூலம் தோற்றுவிக்கப்படும்.
ஓய்வூதிய நலன்களானது அவை ஓய்வு பெறுபவர்களின் சரசாரி வருமானம், அவர்கள் பணிவாழ்வில் இருந்த சராசரியின் அடிபடையில் இருந்து கணக்கிடப்படும். இது இறுதியாக பெற்ற ஊதியம் என்பதில் இருந்து இறுதியில் ஓய்வூதியத்தில் குறையும்--ஏனெனில் பிந்தையது மிக அதிகமாகத்தான் இருக்கும்.
2014 தொடங்கி, ஓய்வூதிய நலன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் குறியீட்டைப் பெறும்--அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன். கிரேக்கப் பொருளாதாரத்தின் ஆழமான சரிவில், பெரும் ஊதிய, வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் நிலையில், இது இன்னும் பெரும் வெட்டுக்களுக்கு உகந்ததாகி விடுகிறது.
மற்ற நடவடிக்கைகளில் அடங்கியுள்ளவையாக--"கடுமையான தொழில்கள்" பட்டியலை வரம்பிற்கு உட்படுத்துவது அதாவது முன்கூட்டிய ஓய்வைப் பெற அனுமதிக்கும் வேலைகள் மற்றும் இயலாமை விதிகளுக்கான வழிகாட்டிகளும் கடுமையாக்கப்படும். இறந்துபோன ஆட்சிப்பணி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் இராணுவ ஊழியர்களினது திருமணமாகாத அல்லது விவாகரத்து ஆன மகள்களின் 18 வயதில் தங்கள் ஓய்வூதியங்களை இழப்பர்--இந்த நடவடிக்கை 40,000 பெண்களைப் பாதிக்கும்.
அரசாங்கம் இன்னும் ஒரு 3 பில்லியன் யூரோக்களை இருக்கும் ஓய்வூதிய முடக்கத்தில் இருந்து சேமிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மாதம் 1,400 க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் 5-10 சதவிகிதம் அதிகரிக்கப்படும், மற்றும் விடுமுறை போனஸ்கள் வெட்டப்படும்.
இச்சட்டம் அறிவிக்கப்படும்போது, பாப்பாண்ட்ரூ SEV எனப்படும் ஹெலெனிக் நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில், ஏதென்ஸில் பேசினார். அரசாங்கமானது IMF, EU உடன் ஒத்துழைப்பதை பாதுகாத்துப் பேசினார். "நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு கிரேக்கத்தின் அடிப்படை முன்னிபந்தனைகளுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும் என்பதாகும். நேற்றைய கிரேக்கத்தை பின்னே தள்ளிவிடும் வாய்ப்பு நம் அனைவருக்கும் உள்ளது, அதாவது ஒட்டுண்ணித்தனம், வளர்ச்சிக் குறைவு மற்றும் சமூக அநீதி ஆகியவற்றை அகற்ற." என்று அவர் கூறினார்.
ஒரு அனைத்துக் கட்சிகளின் பொருளாதார நெருக்கடி பற்றிய "தேசியக் குழு" கூட்டத்தில் கலந்து கொண்டு 24 மணி நேரத்திற்குள் பாப்பாண்ட்ரூ வணிகத் தலைவர்களுக்கு உரையாற்றினார். இக்கூட்டம் புதிய ஜனநாயக( New Democracy ) எதிர்க்கட்சியினாலும் பங்கு பெறப்பட்டது, வலதுசாரியான மக்கள் மரபார்ந்த அணியும் (Popular Orthodox Rally) கலந்து கொண்டது.
பாப்பாண்ட்ரூ அரசாங்கம் சுமத்தும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சமூக அதிருப்தி பெருகுகையில், கிரேக்க செய்தி ஊடகத்தின் பிரிவுகள் இன்னும் கூடுதலான சர்வாதிகார ஆட்சி வடிவமைப்புக்களுக்கு அழைப்பு கொடுப்பதில் உரத்துக்குரல் கொடுத்து நிற்கின்றன. புதனன்று, Eleftherotypia நாளேட்டில் எழுதிய வர்ணனையாளர் டாசோஸ் டெலோக்ளோ அரசியலமைப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் புதிய அரசாங்கம் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
"இந்த அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைக் கொள்ள வேண்டும். எளிமையாக கூறினால், சர்வாதிகாரம் இல்லாவிடில் நாடு நெருக்கடி நிலையில் இருக்கும். ஆனால் அரசியலமைப்பின் சில விதிகள் உரிய முறையில் எடுக்கப்படவேண்டும் அல்லது தக்க விதத்தில் விளக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புடைய தொழிற்சங்கமான பெய்ராக்கூசில் உள்ள PAME போன்றவை சட்டவிரோதம் என உடனடியாக நீதிமன்ற நடவடிக்கை மூலம் அறிவிக்கப்படுவதற்கான திறமை வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் உரிமை குறைக்கப்பட வேண்டும். அதேபோல் பல முக்கிய பகுதிகளைப் பாதிக்கும் எதிர்ப்புக்களை நடத்தும் உரிமைகளும் குறைக்கப்பட வேண்டும்.....அத்தகைய அரசாங்கத்தை நடத்துவதற்கு பாப்பாண்ட்ரூ பொருத்தமானவர் அல்ல." என்று அவர் எழுதினார்.
Kathemerini யில் ஸ்டார்வோஸ் லைகெரோஸ் புதிய ஜனநாயகத்திற்கு வந்துள்ள கன்சர்வேடிவ் எதிர்ப்பு, PASOK க்கு நம்பிக்கைக்கு உகந்த மாற்றீட்டைப் பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். லைகெரோஸ் எழுதினார்: "மக்கள் அதிருப்தி தொடர்ந்து தீவிரமாகி வருகின்றது, அரசியல் அமைப்பு முறையையே ஒதுக்கிவிடும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. புதிய ஜனநாயகம் ஒரு மாற்றீட்டுத் தீர்வைக் கொடுக்கும் விதத்தில் இல்லை." ஆனால், "அரசியல் அமைப்பு முறைக்கு வெளியே முன்முயற்சிக்கான வாய்ப்பு உண்டு. நீண்டகாலமாகவே, பெரு வணிகர் ஆண்ட்ரே ஜெனோபோலோஸ் தன் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அதை மறுத்தாலும்கூட, அரசியல் அரங்கில் தான் நுழைவதற்கான தளத்தை அவர் தயாரிக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
மார்பின் முதலீட்டுக் குழுவின் (Marfin Investment Group) தலைவராக ஜெனோபோலோஸ் உள்ளார். மே 5 ம் திகதி ஏதென்ஸில் உள்ள மார்பின் எக்நேடியா வங்கியில் இன்னும் விளக்கப்படாத குண்டுத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஜேனோபோலோஸ் Panathinaikos கால்பந்து அமைப்பின் முக்கிய பங்குதாரர் என்பதுடன் ஒலிம்பிக் ஏயரின் தலைவருமாவர். இவரிடம் 800 மில்லியன் மதிப்பு உடைய நிகரச் செல்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "நாட்டின் திவால்தன்மைக்கு "அரசியல்வாதிகள்தான்" காரணம் என்று சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் கிரேக்கத்தில் உள்ள பல மத்தியதர வர்க்க இயக்கங்களும், பாப்பாண்ட்ரூவிற்கு தங்கள் ஆதரவைக் கொடுப்பதின் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்டிக்கொடுப்பை முள்னெடுக்க உறுதி செய்கின்றன. அவரோ தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை வெட்டித்தள்ளுகிறார். அவற்றின் முக்கிய அக்கறை வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவிதமான சுயாதீன அரசியல் அணிதிரள்வையும் தடுப்பது என்றுதான் உள்ளது.
தீவிர இடது கூட்டணியான சிரிசாவின் ஒரு பிரிவான ரின்யூவல் விங் கட்சி பாப்பாண்ட்ரூ அரசாங்கத்துடன் பங்காளித்தனத்திற்கு நுழைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. சிரிசாவின் நாளேடான Avghi ல் வந்துள்ள தகவல் ஒன்று சிரிசாவின் தலைமை ரின்யூவல் விங்கின் திட்டங்கள் அதன் சமீபத்திய கூட்டத்தில் விவாதித்தது என்று கூறியுள்ளது.. ரின்யூவல் விங்கின் கருத்துக்களை சிரிசா எதிர்க்காது என்று கூறும் விதத்தில் ஸ்பைரோஸ் லிகௌடிஸ் "ஒரு பெரும் ஒற்றைக் கட்சியாக இருக்கும் நிலைக்கு நாம் திரும்பிச் செல்ல மறுக்கிறோம்" என்றார். கூட்டத்தில் வந்த ஒருமித்த கருத்து இப்பிரச்சினை பற்றி பகிரங்க அறிக்கைகள் எதுவும் கூடாது என்பதுதான் என்றும் Avghi கூறியுள்ளது.
ANTARSYA (Anticapitalist Left Cooperatioin for the Overthrow) வின் பிரிவுகள், பல ஸ்தாபன அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஆதரவு கொடுப்பர் என்ற கூற்றுக்களை பரப்புகின்றன. பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள் சோசலிஸ்ட் வேர்க்கர் உடன் செவ்வாயன்று நடத்திய பேட்டி ஒன்றில் கிரேக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவரும் கிரேக்க ஏடான Workers' Solidarity யின் ஆசிரியருமான பானோஸ் கார்கனஸ் அரசியல் ஸ்தாபனம் "வெடிப்பு நிலையில்" உள்ளது என்றார்.
PASOK க்குள் இருக்கும் கூறுபாடுகள், வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக கூறிய அவர் தொழிலாளர்கள் அவற்றிற்கு ஆதரவு தரவேண்டும் என்றார். "ஒரு அரசியல் நெருக்கடி வந்துகொண்டிருக்கிறது. Yiannis Dimaras, Sofia Sakorata என்னும் PASOK எம்.பி.க்கள் இருவர், வெளியேற்றப்பட்டவர்கள், இடதுசாரியைச் சேர்ந்தவர்கள், செல்வாக்கு உடையவர்கள்" என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
PASOK பற்றி பிரமைகளை விதைப்பதுடன் திருப்தியடையாமல், எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிகளுக்குள்ளும் தொழிலாள வர்க்கம் நம்பிக்கை வைக்கக் கூடிய சக்திகள் உள்ளன என்று கார்கனஸ் கூறியுள்ளார். "பெரும்பாலான மக்கள் இதே போன்ற கருத்தை உடைய பல எம்.பி.க்கள் உள்ளனர் என்று நினைக்கின்றனர். வலதுசாரி புதிய ஜனநாயக கட்சிக்குள்ளும் பிளவு உண்டு. அவை நடவடிக்கைளை எதிர்க்கின்றன. ஒரு முக்கிய தலைவரும் முன்னாள் வெளியுறவு மந்திரியுமான Dora Bakoyannis அதற்கு வாக்களித்தார், அதையொட்டி வெளியேற்றப்பட்டார்." என்றார். |