தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
வரலாறு
This week in history: May 10-May 16வரலாற்றில் இந்த வாரம்: மே 10 - மே 1610 May 2010 வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர்: பிளெடெல்பியா பொலிசாரால் கருப்பின தீவிரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர்
1985, மே 13 அன்று, கருப்பின தீவிரவாதிகளும் அவர்களது குடும்பங்களும் வாழ்ந்த வரிசை வீடுகளின் கூரை மீது பிளெடெல்பியா பொலிஸ் திணைக்களம் நான்கு இறாத்தல் குண்டொன்றை வீசியது. அதனால் ஏற்பட்ட தீயினால் 61 வீடுகள், ஒரு முழு நகரப் பகுதியே எரிந்துபோனதோடு 5 சிறுவர்கள் மற்றும் எம்.ஓ.வி.ஈ. குழுவின் (MOVE group) தலைவர் ஜோன் ஆபிரிக்கா உட்பட 11 பேர் பலியாகினர். "சத்தம் பற்றி முறைப்பாடுகள்" வந்ததன் காரணமாக பொலிசார் வெளிவேடமாக கட்டிடத்தை சூழ்ந்துகொண்டனர். எம்.ஓ.வி.ஈ. உறுப்பினர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியில் வரத் தவறியதன் பின்னரே, கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரங்களையும் பயன்படுத்துவதைத் தவிர வேறு தேர்வு பொலிசாருக்கு இருக்கவில்லை என நகர அதிகாரிகள் கூறிகொண்டனர். வீட்டுக்குள் இருந்தே துப்பாக்கிச் சூடு வந்ததாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர். சுமார் 90 வினாடிகள் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான ரவைகளை சுட்டுத் தீர்த்ததன் மூலம் பொலிசார் பிரதிபலித்தனர். இதன் பின்னர் ஒரு ஹெலிகொப்டர் கட்டிடத்தின் மேல் குண்டை வீசியது. காரணமின்றி படைகளை பயன்படுத்தியதற்கும் முன்னறிவிப்பற்ற தேடுதல் நடவடிக்கை மற்றும் ஆக்கிரமிப்புகளுக்காக நகர அதிகாரிகள் மீது குற்றங்கண்ட ஒரு ஜூரி, உயிர் பிழைத்தவர்களுக்கு 1.5 மில்லியன் டொலர் செலுத்த நெருக்கியது. எம்.ஓ.வி.ஈ. சுய திருப்தியை பரிந்துரைத்ததோடு பெரிய- ஆபிரிக்கவாத தனித்துவ அரசியலை தழுவிக்கொண்டது. அது 1978ல் பிளெடெல்பியா பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்காக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த ஒன்பது உறுப்பினர்களின் சார்பில் வலுவாகப் பிரச்சாரம் செய்தது. இந்தப் பொலிசார் எம்.ஓ.வி.ஈ. மீதான இன்னுமொரு இராணுவ-முறையிலான தாக்குதலில் தங்களுக்குள்ளேயே தவறுதலாக சுட்டுக்கொண்டதில் கொல்லப்பட்டதாக தெரிகின்றது. 1981ல் நடந்த சூட்டில் ஒரு பொலிசார் உயிரிழந்ததற்காக இந்தக் குழுவின் நன்கு அறியப்பட்ட ஆதரவாளர் -ஆனால் உறுப்பினர் அல்ல- பத்திரிகையாளர் முமையா அபு ஜமால், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆர்ஜன்டீனாவில் இஸ்ரேல் முகவர்களால் ஐஷ்மன் கைதுசெய்யப்பட்டார்
மில்லியன் கணக்கானவர்களை அழிப்பதில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்த நாஸி ஜேர்மனியின் உயர்மட்ட அதிகாரியாக இருந்த அடொல்ஃ ஐஷ்மன், 1960 மே 11 அன்று ஆர்ஜன்டீனா, பியூனெஸ் எயாரெஸ்ஸில் இஸ்ரேல் மொஸாட் முகவர்களால் கைது செய்யப்பட்டு நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நாசி அதிகாரத்துவவாதி என்ற வகையில் அவரது ஆரம்ப ஆண்டுகளில், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் இருந்து பாலஸ்தீனத்துக்கு யூதர்களை பலாத்காரமாக குடியேற்றும் நடவடிக்கையில் ஐஷ்மன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த இயலுமையுடன், அத்தகைய அபிவிருத்தியை வரவேற்ற முன்னணி சியோனிஸ்டுகளுடன் அவர் நெருக்கமாக செயற்பட்டார். பிரிட்டிஷ் எதிர்ப்பு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை இட்டதோடு, இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் யூதர்களை மடகஸ்காருக்கு அகற்றுவதற்கான ஐஷ்மனின் திட்டம் தோல்வியடைந்த பின்னர், அவர் ஐரோப்பாவின் யூத மக்களை அழிப்பதிலும், கூலித்தொழிலாளர்களுக்கான போக்குவரத்தையும் மற்றும் நாடு கடத்தும் முகாங்களை மேற்பார்வை செய்வதிலும் ஈடுபட்ட பிரதான புள்ளிகளில் ஒருவரானார். யுத்தத்தின் முடிவில் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஈச்மன் மறுபெயர் ஒன்றை வைத்துக்கொண்டு 1946ல் தப்பிச் சென்றார். 1950ல் ரோமுக்குச் சென்ற அவரை, ஐரோப்பா பூராவுமிருந்த ஏனைய பாசிச குற்றவாளிகளில் பலரைப் போல் இவரையும் வத்திகான் பாதுகாத்தது. அது ஆர்ஜன்டீனாவுக்கு குடி பெயர்வதற்கு அவருக்கு நம்பகத்தன்மையை வழங்கியது. அங்கு அவர் 1960 வரை தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்துவந்ததோடு தண்ணீர் விநியோகத் துறையிலும் வேலை செய்தார். அவர் உயிர் வாழ்வதைப் பற்றியும் ரிகார்டோ கிளெமென்ட் என்ற அவரது மறுபெயரைப் பற்றியும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஜேர்மன் அரசாங்கங்களும் அறிந்திருந்தது பின்னர் அம்பலத்துக்கு வந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்னர்: பிலிப்பைன்சில் அமெரிக்கா திணித்த அரசியலமைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
14 மே 1935ல் அப்போது அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிலிப்பைன்சில் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. பிலிப்பைன்ஸ் சட்ட மன்றத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கே இந்த வாக்கெடுப்பு நடந்தது. சுதந்திரத்தை நோக்கிய அடியெடுப்பைக் காட்டும் வகையில், இந்த அரசியலமைப்பு 44,963 க்கு 1,213,046 அதிக வாக்குகள் எண்ணிக்கையில் அங்கீகரிக்கப்பட்டது. 1934ல் டைடிங்-மெக் டஃபி சட்டம் (Tydings-McDuffie Act) அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டு , 10 ஆண்டுகளின் பின்னர் பிலிப்பைன்ஸ் அதன் சுதந்திரத்தைப் பெறும் வகையில் ஒரு கால இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட்டது. இந்தக் காலத்தின் போது பிலிப்பைன்சில் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுநலவாயத்தை நிர்வகிக்கக் கூடிய ஒரு அரசியலமைப்பை வரையும் உரிமை இந்தச் சட்டத்தின் மூலம் பிலிப்பைன்ஸ் சட்டமன்றத்துக்கு வழங்கப்பட்டது. முதலில் வாஷிங்டனால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு பெயரளவிலான சுதந்திரத்தை மட்டுமே வழங்கியது. வெளி விவகாரங்கள் சம்பந்தமான முழுமையான கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கொடுத்த அது, சகல அமெரிக்க சொத்துக்களுக்கும் வரி விலக்கு அளித்ததோடு அமெரிக்க ஜனாதிபதியின் அனுமதியற்ற இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் குடிவரவு சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் தடுத்து நிறுத்தியது. இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வாரத்தில் பிலிப்பைன்சில் பதட்ட நிலைமை உக்கிரமடைந்திருந்தது. மே 2 அன்று சக்டாலிஸ்டா விவசாயிகளின் எழுச்சியை நாடு சந்தித்ததோடு மே 14 வாக்கெடுப்பின் போது போராட்டங்கள் நடக்கக் கூடும் என்பது பற்றிய கணிசமான பீதி ஆளும் தட்டுக்கள் மத்தியில் நிலவியது. இந்த நிகழ்வுக்கான தயாரிப்பில், நாட்டின் பத்திரிகை வெளியீட்டகங்களின் மையம் உட்பட தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்கள் ஆயுதம் தரித்த பாதுகாவலர்களின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. தலைநகர் மனிலாவின் வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன. சக்டால் பத்திரிகையின் ஆசிரியர், செலரினோ டியொன்கோ போன்ற சக்டாலிஸ்டா இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர்: களஞ்சிய அரணில் ஏற்பட்ட தீயினால் 36 கருப்பின சிறைச்சாலை தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
முப்பத்தாறு கருப்பின சிறைச்சாலை தொழிலாளர்கள், தாம் வேலைசெய்யத் தள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் அகப்பட்ட பின்னர் கொல்லப்பட்டனர். ஊடக கணக்கின்படி "சிலர் உயிர்பிழைத்திருந்தனர்". அவர்களில் மூவர் வெள்ளையின கைதிகள். அலபாமா மாநிலத்தின் சட்ட முறைமையின் கீழ் ரெட் பெதர் நிலக்கரி கம்பனிக்கு அவர்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தார்கள். இந்த அழிவுபற்றி சிறிய ஊடக செய்திகள் வெளியாயின. கைதி ஓருவர் தப்பிச் செல்ல எடுத்த முயற்சியினாலேயே தீ பற்றியது என்ற கம்பனியின் கூற்றை நியூ யோர்க் டைம்ஸ் மீண்டும் மீண்டும் தெரிவித்தது. டைம்ஸ் பத்திரிகையின்படி, எரிந்துபோனவர்களில் தீயை பற்றவைக்கத் தொடங்கிய கருப்பினத்தவரும் இருந்தார். அந்த மனிதன் இறந்துவிட்டால் இதை எப்படி நிரூபிக்க முடியும் என்பது பற்றி டைம்ஸ் கவலைப்படவில்லை. எவரும் தப்பிச்செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்துவதிலேயே "காப்பாற்றும்" முயற்சிகளில் ஆரம்பத்தில் அக்கறை காட்டப்பட்டது. அல்லது டைம்ஸ் அதை குறிப்பிட்டது போல், "வேகமாக வெளியில் ஓடி காப்பாற்றும் வேலைகளுக்கு பெரும் தடை ஏற்படுத்திய கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே" அந்த முயற்சி. உண்மையில், கொல்லப்பட்ட 36 பேரில் ஒருவர் "தப்பிக்க முயற்சிக்கும் போது பாதுகாவலர்களால் சுடப்பட்டுள்ளார்." "பாதுகாவலர்களை ஏமாற்றி தப்பிச்செல்ல முடியாமல்" உயிர் பிழைத்த சிலரை "தடுப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது" என டைம்ஸ் முடிவுரை எழுதியுள்ளது. அமெரிக்க உள்நாட்டு யுத்தம் ( 1861-1865) அடிமைத்தனத்தை தூக்கியெறிந்த பின்னர் 1870களில் தெற்கில் குற்றவாளி சிறைக் கைதிகளிடம் வேலை வாங்குவது தொடங்கியது. "தெற்கு ஆட்சியாளர்கள் கருப்பின ஆண்களையும், அதே போல் வறிய வெள்ளையர்களையும் சுற்றி வளைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சுரங்கங்கள், ரயில் பாதைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு கூலிக்கு விற்கப்பட்டனர். இந்த ஆண்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை, அவர்களுக்கு உரிமைகள் இருக்கவில்லை, அவர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். |
|
|