World Socialist Web Site www.wsws.org |
Greek Parliament approves deep social cuts in face of mass opposition வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே ஆழ்ந்த சமூகநலச் செலவுகள் வெட்டுக்களுக்குக் கிரேக்கப் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது Stock markets fall sharply on fears of unrest அமைதியின்மை அச்சங்களை ஒட்டி பங்குச் சந்தைகள் தீவிரமாகச் சரிகின்றன By Joe Kishore and Alex Lantier நடவடிக்கைகளுக்கு வந்துள்ள வெகுஜன எதிர்ப்பு பங்குச் சந்தைகளை பீதி அடையச் செய்ததுடன், இது உலக சமூக அமைதியின்மை அரசாங்கத்தின் பற்றாக்குறைகளுக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டிய திட்டங்களைச் சீர்குலைக்கும் என்று பெருகிய முறையில் ஆளும் வட்டங்களில் உள்ள கவலைகளை வெளிப்படுத்துகிறது. ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சந்தைகள் அதிகம் சரிவுற்றன. வியாழக் கிழமை பிற்பகல் ஒரு கட்டத்தில் அமெரிக்கச் சந்தைகள் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் என்று பாரிய சரிவடைந்து, பின்னர் 3.2 சதவிகிதம் வீழ்ச்சியுடன் முடிவிற்கு வந்தது. அன்று மதியமளவிலான வீழ்ச்சி 2008 டிசம்பருக்கு பின்னர் பாரியளவிலானதாகும். அத்துடன் 2007 பெப்பிரவரிக்கு பின்னர் காணதளவிற்கு சந்தையின் உறுதியற்ற தன்மையையும் எடுத்துக்காட்டியது. ஐரோப்பிய வங்கிகள் வங்கிகளுக்கு இடையேயான கடன் கொடுத்தலை முடக்கத் தொடங்கியுள்ளன என்ற தகவல்களும் வந்துள்ளன; 2008 லெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடியின் போது இப்படித்தான் நடந்தது; ஏனெனில் இப்பொழுது கிரேக்க கடன் பத்திரங்களை வைத்திருக்கும் வங்கிகள் திவாலாகிப் போகக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கச் சந்தைகளில் அபாயகரமான சரிவு பின்னர் கணினி விற்பனை மூலமாக வந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இருந்தும்கூட, வோல்ஸ்ட்ரீட்டில் மேலாதிக்கம் செலுத்திய உணர்வு கிரேக்க நெருக்கடி பற்றிய கவலைதான். கிரேக்க பாராளுமன்றத்திற்கு வெளியே மோதல்கள் பற்றிய தொலைக்காட்சித் தவகல்களை பார்த்த பின்னர் வணிகர்கள் விற்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பல வர்ணனையாளர்கள் வெள்ளியன்றும் விற்பனை தொடரும் என்று எச்சரித்துள்ளனர். கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு பெரும் மக்கள் எதிர்ப்பு உள்ளது. அதில் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம், பிற சலுகைகள் குறைப்பு, ஏராளமான பணிநீக்கங்களுக்கு இருந்த தடைகள் தளர்த்தப்படுதல், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் அகற்றப்படுதல், பொதுக் கல்வி நிதியில் வெட்டுக்கள், அரசாங்கப் பணிகள் தனியார்மயம் ஆக்கப்படுதல், மற்றும் கூடுதல் மதிப்பு வரியில் (VAT) தீவிர அதிகரிப்பு ஆகியவை இருந்தன. பிணை எடுப்புக்கள் மற்றும் வெட்டுக்கள் பற்றி 61 சதவிகித மக்கள் எதிர்ப்புக் காட்டுவதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்களில் பாப்பாண்ட்ரூ கிரேக்கப் பொருளாதார அடிப்படை மறு கட்டமைப்பின் ஒரு பகுதியாக வெட்டுக்கள் தேவைப்படுகின்றன என்ற தனது வலியுறுத்தலை மீண்டும் கூறினார். “நம்முடைய நம்பகத் தன்மையை மீட்கவும், நேரத்தைப்பெறவும் அவசர நடவடிக்கைகள் கட்டாயமாகும்; பல ஆண்டுகளாக பாரிய மாறுதல்களை செய்வதற்கான நேரம் தாமதப்படுத்தப்பட்டுவிட்டது.” சட்ட வரைவிற்குப் பாராளுமன்றத்தில் இறுதியாக 172-121 என்ற சாதக வாக்களிப்பு கிடைத்தது. வாக்களிப்பில் பங்கு பெறாததற்காக தன்னுடைய பாராளுமன்ற பெரும்பான்மைக் கட்சியான PASOK சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து மூன்று பிரதிநிதிகளை பாப்பாண்ட்ரூ வெளியேற்றினார். கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சி, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் SYRIZA ஆகியவை சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. பொதுத் துறை ADEDY மற்றும் தனியார் துறை GSEE தொழிற்சங்கங்கள் நேற்று கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு எதிரே ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. பல்லாயிரக் கணக்கான எதிர்ப்பாளர்கள் ஏதென்ஸ் நகரத் தெருக்கள் வழியே “அவர்கள் போர் தொடுத்துள்ளனர். எதிர்த்துப் போரிடுக” என்று வாக்களிப்பிற்குப் பின்னர் கோஷமிட்டனர். கிரேக்க பற்றாக்குறைகளை சமசீர் செய்யும் முயற்சிக்காக நடத்தப்படும் வெட்டுக்களைச் செயல்படுத்த கொள்கை அளவில் தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுத்தாலும், தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக எதிர்ப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பிரதம மந்திரி பேச்சு வார்த்தைகளை வெட்டுக்கள் பற்றி விவாதிக்க நடத்தியபோது தொழிற்சங்கங்கள் அவரைச் சந்தித்திருந்தன. புதன் வேலைநிறுத்தத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி விவரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படையினர்களும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன; சமீபத்தில் எதிர்ப்பைக்காட்டும் வகையில் பல விமானப்படை விமான ஓட்டிகளும் நோய்விடுப்பு எடுத்தனர். செவ்வாயன்று ஒரு அரசாங்கத் தொலைக்காட்சி நிலையம் ஒரு கல்வி அதிகாரிகளைப் பேட்டி கண்டு வந்தபோது அதை நோக்கி விரைந்து சென்ற ஆசிரியர்கள் தேசியத் தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றைப்படிக்க அனுமதிக்கும் வரை இடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். கலகப் பிரிவு உடையில் இருந்த பொலிசாரால் வெளியேற்றப்படும் வரை, ஆசிரியர்கள் 17,000 பகுதிநேர ஊழியர்களை நீக்கும் திட்டங்களைக் கண்டித்தனர். புதனன்று ஏதென்ஸில் உள்ள மார்பின் எக்நேஷியா வங்கியில் குண்டு எறியப்பட்டதில் மூன்று தொழிலாளர்கள் சோகமாக இறந்தது பற்றி செய்தி ஊடகத் தகவல்கள் குவிப்பு காட்டியுள்ளன. முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காட்டப்படவில்லை. அரசாங்க அதிகாரிகள் எதிர்ப்பாளர்களைத் தாக்குதலுக்குக் குறை கூறியுள்ளனர். ஆனால் ஒரு பொலிஸ் தூண்டுதல் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம் என்பதையும் நிராகரித்துவிட முடியாது; அது கிரேக்கத்தில் நீண்ட கால மரபஈகும். இறப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் சிக்கன நடவடிக்கை தாக்குதல்கள் தொடரப்படும் என உறுதியளிப்பதுதான் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. செய்தி ஊடக வர்ணனையாளர்கள் அப்பெரும் சோகம் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் நிலைகுலையச் செய்யும், வெட்டுக்கள் செயல்படுத்தப் பயன்படும் என்று நம்பினர். நியூ யோர்க் டைம்ஸ் விளக்கியது: “இங்கு, ஏதென்ஸில், பலரும் வன்முறை அரசாங்கத்திற்கு பின்வாங்காமல் இருக்கும் விதத்தில் ஊக்கம் கொடுக்கும் என்று கூறினர்; அதே நேரத்தில் பெருகும் தீவிரவாதிகளுக்கு எதிராக கிரேக்க மக்களிடையே பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தும்.” ஆனால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் பங்கு பெறுவதைத் தடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். ஏதென்ஸ் Indymedia ஒரு கடிதத்தை “மார்பின் வங்கி ஊழியர் ஒருவர்”என்று கையெழுத்திட்டு வெளியிட்டது; அது வங்கியையும் அதன் முதலாளி திரு.ஜேனோபோலசையும் தீ, பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்ததற்காகவும், வேலைநிறுத்தம் இருந்தும் தொழிலாளர்களை பணி செய்யக் கட்டாயப்படுத்தியதற்கும் கடுமையாகக் குறை கூறியது. அது தொடர்ந்து எழுதியது: “இப்பொழுது பல நாட்களாக வங்கி ஊழியர்கள், அணிதிரளல் பற்றி முற்றிலும் அச்சுறுத்தப்படுகின்றனர்-வாய்ச் சொற்களாக, ‘நீங்கள் வேலைசெய்யுங்கள் இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள்’ என்று கூறப்படுகின்றனர். கொள்ளைத் தடுப்பிற்காக வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்ட இரு இரகசிய பொலிசார் இன்று வரவில்லை; வங்கி நிர்வாகிகள் ஊழியர்களிடம் அவர்கள் வருவர் என்று உறுதியளித்திருந்தனர்.’ கிரேக்க அரசாங்கம் சர்வதேச நிதிய அமைப்புக்களுடன் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் நெருக்கடியைச் சுமத்துவதற்கு ஒத்துழைக்கிறது என்னும் அதிக அடையாளங்கள் வந்துள்ள நேரத்தில் எதிர்ப்புக்களும் வந்துள்ளன. வணிகத்திற்கான ஐரோப்பிய ஆணையர் கரேல் டி குக்ட் El Pais பத்திரிகையிடம் கூறினார்: “கிரேக்கம் தந்திரம் செய்கிறது என்பதை அறிவோம். யூரோவில் அவர்கள் நுழையும்போதே (கிரேக்க கடன் மற்றும் பற்றாக்குறைத் தொகைகள் பற்றி) பிரச்சினைகள் இருந்தன என்பது தெரியும்.” ஐரோப்பிய ஆணைக்கு 2003-04 ல் கிரேக்க கணக்குகளை விசாரிக்க முயற்சித்தது. ஆனால் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதை எதிர்த்தன; அந்த நேரத்தில் ஜேர்மனியும் பிரான்ஸும் கூட மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்த விதிகளை மீறிய விதத்தில் பற்றாக்குறைகளைக் கொண்டிருந்த்தன. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் கடந்த இலையுதிர்காலத்தில் தன் தேர்தல் பிரச்சார உறுதிமொழியான சமூகநல செலவுகளை அதிகரித்தல் என்பதை பாப்பாண்ட்ரூ கைவிட்டவுடன், கிரேக்கம் மோசமான நிதிய நெருக்கடி நிலையில் இருப்பது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். உண்மையில் கிரேக்கம் மற்றும் ஐரோப்பாவில் ஆளும் வர்க்கம் பாப்பாண்ட்ரூவின் தேர்தல் வெட்டுக்களை இயற்றும் அரசியல் சூழ்நிலையை தோற்றுவிக்கும் என நம்பி இருந்தது. PASOK மற்றும் மத்தியதர வர்க்க கட்சிகளான SYRIZA மற்றும் தொழிற்சங்க தொடர்புகளைப் பயன்படுத்தி பாப்பாண்ட்ரூ எதிர்ப்புத் திரட்டை அகற்றிவிடுவார் என்று அது நம்பியது. சமீபத்தில் பாப்பாண்ட்ரூவால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாரிய சிக்கனத் திட்டத்தை “மிகவும் நம்பகத் தன்மை உடையது” என்று கூறிய டி குக்ட் தொடர்ந்தார்: “இதை முன்பு மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஒரு புரட்சியைத் தூண்டிவிடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” இத்தகைய கருத்துக்கள் நிதியச் சந்தைகளில் பீதி பெருகும் சூழ்நிலையை மறைக்க முடியாது. அவை நிதியச் சரிவு மற்றும் மக்கள் எதிர்ப்பு ஆகியவை விரைவில் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று அஞ்சுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: “ஏதென்ஸ் கலகங்கள் எப்படி சிக்கன நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் சமூக கூட்டொழுங்கிற்கும் தாக்கங்களை கொண்டுள்ளன என்பதை விளக்குகின்றன.” வரவு செலவுத்திட்ட வெட்டுக்கள் கிரேக்கப் பொருளாதாரத்தில் முன்னோடியில்லாத சரிவிற்கு வழி செய்யும் என்று பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது ஐரோப்பா முழுவதும் ஏற்படும். பொருளாதார வல்லுனர் டேனியல் க்ரோஸ் கணிப்புக்களை நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது: “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிரேக்க அரசாங்கச் செலவில் ஒவ்வொரு சதவிகிதச் சரிவிற்கும் நாட்டில் மொத்தத் தேவை மொத்த உள்நாட்டு உற்பத்தில் 2.5% வீழ்ச்சி என்று இருக்கும்.” அதாவது, ஏதென்ஸ் அரசாங்கச் செலவுகளை திட்டமிட்டுள்ளபடி 10 முதல் 15 சதவிகிதம் குறைத்தால், பொருளாதாரமும் கிட்டத்தட்ட முப்பது சதவிகிதம் சரியும். மற்ற நாடுகளுக்கும் இது “தொற்றும்” அடையாளங்கள் உள்ளன. வியாழனன்று, Moody’s Investor Service போர்த்துக்கல், ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி மற்றும் இங்கிலாந்தின் வங்கி முறைகள் “பெருகிய முறையில் சந்தையின் கவனத்திற்கு வருகின்றன” என்று எச்சரித்தது. “நிதிய முறை நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை சந்தை எடுத்துக்காட்டுகிறது” -அதாவது அரசாங்கங்களின் ஆதரவை என பி.என்.பி. பகுப்பாய்வாளர் ராஜீவ் ஷா கூறியுள்ளார். அவர் மேலும், “நிதிய முறையில் இருந்து அரசாங்கங்களுக்கு நிறைய ஆபத்துக்கள் நகர்த்தப்பட்டுவிட்டன; ஆனால் இத்தொற்று தொடர்ந்து பரவினால், அது மீண்டும் நிதிய முறைக்கு பழையபடி வந்து சேரும்.” வேறுவிதமாகக் கூறினால், நிதிய முறைக்கு அரசாங்கங்கள் பிணை எடுத்தது தற்காலிகமாக வங்கிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதுடன் மற்றும் அதே நேரத்தில் நிதிய உயரடுக்கின் செல்வத்தையும் உத்தரவாதம் செய்துள்ளது. ஆனால் இது 2008ல் வெடித்த நெருக்கடியைத் தீர்க்கவில்லை; அதை அரசாங்கக் கடன் நெருக்கடி பெருகும் நிலையாகத்தான் மாற்றியுள்ளது. நாடுகளின் கடன் நெருக்கடி மற்றும் இந்த கடனுக்குத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களில் முன்னோடியில்லாத தாக்குதலை ஒருவிலையாகக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூகப் புரட்சிக்கும் மற்றும் புதிய பொருளாதார, நிதியச் சரிவிற்கான நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. |
|