சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

An exchange with a reader on postmodernism

பின்நவீனத்துவம் பற்றி ஒரு வாசகருடனான ஒரு பரிமாற்றம்

4 December 2000

Use this version to print | Send feedback

"பின்நவீனத்துவ அதிசய உலகம்: அலன் சோகல் மற்றும் ஜீன் பிரிக்மொண்ட்டின் புத்திஜீவித மோசடிகள்" பின்நவீனத்துவ அதிசய உலகம்: புத்திஜீவித மோசடிகள் அலன் சோகல் மற்றும் ஜீன் ப்ரிக்மொன்ட் - ஆல் எழுதப்பட்ட புத்தகம் என்ற கட்டுரையைப் பற்றி ஒரு கடிதம் கிடைக்க பெற்றோம். இது உலக சோசலிச வலைத் தளத்தின் ஆங்கில பதிப்பில் ஜூலை 1, 2000-ல் பதிப்பிக்கப்பட்டது. கட்டுரையின் ஆசிரியர் ஸ்ரெபான் ஸ்ரைன்பேர்க்கின் பதிலுரை முடிவில் தொடர்கிறது.

ஸ்ரெபான் ஸ்ரைன்பேர்க் அவர்களே,

பின்நவீனத்துவம் பற்றிய உங்களுடைய கட்டுரையை நான் மிகவும் ஆர்வத்துடன் வாசித்தேன். அதைப் பற்றிய சில கருத்துக்களைக் குறிப்பிட விரும்புகிறேன். [புத்திஜீவித்தனமான மோசடிகள்] என்ற அந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது, உண்மையில், மெய்யியல், இலக்கிய விஞ்ஞானம் அல்லது இயற்கை விஞ்ஞானங்களில் தனது சொந்த குழப்பங்களுடன் இருக்கும் பின்நவீனத்துவம் என்றழைக்கப்படும் சில பிரிவுகளை எதிர்க்கும் அதன் அணுகுமுறை குறிப்பிடத்தக்கதாகும். அங்கே ஐரிகரே மற்றும் கிறிஸ்டிவா* மீது நீளமாக கருத்தூன்றி இருக்க வேண்டியதில்லை, ஏனென்றால் உண்மையில் அவர்கள், எடுத்துக்காட்டப்பட்டுள்ளபடி, "பின்நவீனத்துவம்" என்ற வார்த்தையின் ஒரு முழுமையான தனிச்சிறப்பார்ந்த கருத்துக்களை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையிலும், இன்னும் பலரைப் பொறுத்த வரையிலும் கூட, பின்நவீனத்துவம் என்பது ஒரு புத்திஜீவித்தனமான உல்லாச உலகமின்றி வேறொன்றுமில்லை. இது, எவரும் எவரையும் சந்தோஷப்படுத்தலாம் என்ற மனம்போன போக்கின் மீது கிளர்ச்சியூட்டப்பட்டது. எக்லிக்டிசம் (Eclecticism ஒரு தொடர் கருதுகோள்களுக்கு அல்லது ஒரு தனி ஒப்பீட்டிற்கு ஒரு கருத்து, காரணம் என்ற அணுகுமுறை இல்லாது ஒரு பொருளை விளங்கிக்கொள்ள பல கருத்துக்களையும் சிந்தனைகளையும் பிரயோகிப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட விடயத்தில் பல தத்துவங்களை பிரயோகிப்பது) இவர்களின் கொள்கை. ஒரு கணித அளவீட்டுடன் கவிதையை எதிர்நிறுத்திபார்ப்பதும், அல்லது சார்பியல் கோட்பாட்டை ஒரு பாலினம்-சார்ந்த கண்ணோட்டத்தில் காட்டுவதும் அவர்களின் முற்றிலும் தர்க்க உணர்வில்லாத தன்மையையே காட்டுகிறது.

இப்போது, "பின்நவீனத்துவம் என்றால் என்ன" என்ற உங்களுடைய பிரதிபலிப்புகளின் மீது பார்ப்போம். பின்நவீனத்துவ சிந்தனையின் பொதுவான போக்கு விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு புறநிலை உண்மையினை மறுப்பதாக இருப்பதுடன், விஞ்ஞானம் மற்றும் ஒவ்வொரு சிந்தனைத்துறையிலும் சார்புநிலைவாதத்தை அறிமுகப்படுத்துகிறது என்று சோகலும்/பிரிக்மொண்ட்டும் குறிப்பிடுவதாக நீங்கள் அடிக்கோடிடுகிறீர்கள். இதில் முதல் கருத்து முற்றிலுமாக தவறு, மேலும் இரண்டாவது, சார்புவாதம் பொதுவழக்கில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் வகையில் தொடப்படவில்லை. அதாவது ஒருவர் சார்புவாதத்தை ஒரு மனோநிலையாக கருதும் போது, அதன்படி ஒன்றைப் பற்றிய ஒருவரின் உணர்வு அவரைப் பொறுத்தவரைக்கும் மட்டுமே சரியானது, அதாவது அது பொதுவில் மதிப்புடையதில்லை என்று பார்க்கப்படுகிறது.

பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைப் பற்றி பார்ப்போம். 1880 வாக்கில், புகழ்பெற்ற ஆங்கிலேய ஓவியர் ஜோன் வாட்கின்ஸ் கூறுகையில், அவரும் அவருடைய தோழர்களும் "பின்நவீனத்துவ பாணியிலான ஓவியமுறையை" நோக்கி நகர விரும்புவதாக குறிப்பிட்டார்கள் (Higgins, Dick: A dialectic of centuries. Notes towards a theory of New Arts, New York, 1978). அவர் போராடிய இந்த ஓவிய பாணி மிகவும் நவீனமானது என்று அவர் கருதினார், இது பிரெஞ்சு காட்சிவாதிகளால் எதிர்க்கப்பட்டது. இவ்வகையில் இந்த சொல், ஒரு பிற்போக்குத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஒரு முற்போக்கான விமர்சனத்தைக் கொண்டிருந்தது (இதற்கு இது தகுதி உடையது தானா என்பதை பின்னால் பார்ப்போம்). பின்நவீனத்துவம் என்ற சொல்லை, Rudolf Panwitz-ம் உபயோகப்படுத்துகிறார். இவர் தம்முடைய புத்தகமான, 1971-ல் வெளியிடப்பட்ட ஐரோப்பிய கலாச்சாரத்தின் நெருக்கடி (The Crisis of European Culture) என்பதில் பின்நவீனத்துவம் குறித்து எழுதுகிறார். இருப்பினும், அப்புத்தகத்தில் பின்நவீனத்துவம் ஒரு துணைப்பொருள் வடிவத்தில் இருக்கிறது. 1934-ல், Federico de Onizபின்நவீனத்துவம் என்பதை முற்றிலும் எதிர்ப்பதமான பொருளில் பயன்படுத்தினார். அவரைப் பொறுத்த வரையில், இது இலக்கியத்தை ஆய்வதற்கான ஒரு வகையாக இருந்தது. முதன்மையாக அவர் இதை அமெரிக்க வரலாற்று கவிதையின் ஒரு திருத்திய சொற்தொடர்களில் பயன்படுத்தினார். அதன் பின்னர், Arnold J. Toynbee -ம் 1947-ல் பின்நவீனத்துவம் என்ற இப்பதத்தை பயன்படுத்தினார், ஆனால் இதைப் பற்றி இங்கே விரிவாக விவாதிக்க வேண்டியதில்லை.

Irving Howe, அவருடைய பாரிய சமுதாயமும் பின்நவீனத்துவ கட்டுக்கதை(Mass Society and Postmodern Fiction (Partisan Review XXVI, 1959, pp. 420-36) என்ற கட்டுரையில் இந்த சொல்லை முற்றிலும் தலைகீழாக வெளிப்படுத்தியதன் மூலம் தொடக்கி வைத்த, அமெரிக்க இலக்கிய விவாதத்தோடு, நம்முடைய விவாதத்திற்கும் இந்த சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே நிஜமான சுவாரசியத்தை அளிக்கும். இவர் சமகாலத்திய இலக்கியம் அதன் ஆற்றலை இழந்துவிட்டிருப்பதால், அது ஊனப்பட்டிருப்பதாக பாத்திரப்படுத்தி விவரிக்கிறார். புதிய மக்கள் சமூகம் இலக்கியத்தில் அதன் மந்தமான வடிவத்தை கண்டிருப்பதாக, அதாவது தொடர்ந்து அது புதிய சக்தியை முன்னிருத்தவில்லை என்று அவர் குறிப்பிட்ட காரணத்தால் இது ஒரு பழிப்புரையாக இருந்தது. Leslie Fiedler இன் எல்லையை கட- இடைவெளியை மூடு (Cross the Border-Close the Gap- Playboy, December1969) (ஆகவே அப்போதே எல்லைகளைக் கடப்பது இருந்திருக்கிறது!) குறித்தும் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும், ஏனைய பிறரை, அவர்களின் பெயர் எனக்கு தெரியும் என்றாலும், அவர்களின் எழுத்துக்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்பதால் அவர்களை என்னால் தொட முடியாது. ஆகவே இது என் பக்கம் புத்திஜீவித்தனமான தடையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், 1950களின் அமெரிக்க இலக்கிய விவாதத்தில் இந்த சொல் ஒரு மையத் தலைப்பாக மாறியிருந்தது.

TRANS-AVANGARDE (தனிமனித வெளிப்பாடுகளை மையமாக கொண்டு எழுபதுகளின் பின்னர் இத்தாலியல் உருவான கலைப்போக்கு) கோட்பாடு, ஆரம்ப காலக்கட்ட கலைகளில் அதன் அடிச்சுவடுகளைப் பதித்தது. இது எதைக் குறிக்கிறது என்றால், பல நவீன கலைஞர்கள் தொடர்ந்து தங்களைத்தாங்களே ஒரு சமூக நோக்கத்தின் பிரச்சாரகர்களாகவோ அல்லது அதை சார்ந்தவர்களாகவோ பார்க்க விரும்பவில்லை என்பதையே குறித்துக்காட்டுகிறது. புரிந்து கொள்ளத்தக்க அளவில், இது உங்களுக்கு தனிமனிதவாதத்தின் (INDIVIDUALISM) தனித்தன்மையாகத் தோன்றக்கூடும். ஏனென்றால் கலையின் சமூக ஆதாரங்கள், பாத்திரப்படுத்தப்பட்ட வகையில், எப்போதும் ஒரு சமூக உட்கூறின் இடத்தில் இருந்தன, ஆனால், Bonito Olivas ன் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், கலை சமூகத்தை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதில்லை, அப்படியிருப்பின் எப்போதும் அது ஓர் அபாய அறிவிப்பு அமைப்புமுறையாகவே புரிந்து கொள்ளப்படும். சமூகவியலில், "பின்நவீனத்துவ சமூகம்" என்ற சொல் முதன்முறையாக Amitai Etzioni இன் எழுத்துக்களில் காணப்படுகிறது (IBID: THE ACTIVE SOCIETY. ATHEORY OF SOCIAL AND POLITICAL PROCESS, NEW YORK, 1968). எட்ஜியோனி சமுதாயம் ஒரு சமூக வகையில் இருப்பதாக வரையறுத்தார். தன் தேவைகள் மற்றும் உறுப்பினர்களோடு உறவு கொண்டிருக்கும் இது தொடர்ந்து தன்மாற்றத்திற்குத் தள்ளப்படுவதாகவும், இவ்வாறு மாற்றத்தையும், பன்மையையும் சமுதாயம் எதிர்கொள்கிறது என்று எட்ஜியோனி வரையறுத்தார். விஷயங்களை நாம் ஆழமாக எடுத்துப்பார்ப்போமேயானால், பின்நவீனத்துவம் என்ற வார்த்தை முதன்முறையாக லியோத்தார் எழுத்துக்களில் அதன் தத்துவார்த்த வரையறையைப் பெறுகிறது (LA CONDITION POSTMODERNE. RAPPORT SUR LE SAVOIR, PARIS, 1979) ----இவ்வாறு நாம் விஷயத்தின் மையத்திற்கு வருகிறோம். உண்மையில், தொடக்கத்தில், லியோத்தார் கூட பின்நவீனத்துவத்தை குறிக்கவில்லை, மாறாக அவர் நவீனத்துவத்தின் தனித்தன்மையைத் தான் குறிப்பிட்டார் என்பது தான் மைய புள்ளியாகும்.

ஆகவே, "பின்நவீனத்துவவாதிகளின்" கருத்தில்,---நவீனத்துவம் என்றால் என்ன?---என்பது அடிக்கடி குறிப்பிடப்பட்டது.

"இன்று கலாச்சாரம் அனைத்தையும் ஒரேமாதிரியாக எதிர்கொள்கிறது" என்பதே ஹோர்க்கன்கைய்மர் (Horkheirmer) மற்றும் அடோர்னோவின் (Adorno) மைய அடிக்கோளாக இருக்கிறது, இதை வைத்து கொண்டு தான் ஆழமான மெய்யியலில் கடுமையாக இருந்த ஒரு குறிப்பிட்ட ஒப்பாரி குரல்களோடு அவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். இதுவே விஷயத்தில் தெளிவான பிரச்சனைக்குரிய புள்ளியாகவுள்ளது. புத்திஜீவிகளோடு தொடர்புபட்ட வகையில், இது வரலாற்றோடு கண்டறியப்பட்ட ஒரு விஷயத்தின் அடையாளத்தையே குறிக்கிறது, வரலாற்றுரீதியாக மறைத்துவைக்கப்பட்ட பிரபஞ்ச முக்கியத்துவம் பற்றிய விஷயத்தைப் பிரச்சாரம் செய்த புத்திஜீவிகளை ஒருமைவாதம் (singularism) மற்றும் பிரபஞ்சத்துவவாதம் (universalism) மூலமாக மட்டுமே அணுக முடியும்---இந்த சகாப்தம் லியோத்தாருடன் முடிந்துவிட்டது. எல்லையில்லா பூரணத்துவம் (முழுமை) ஒரு பகுத்தறிவார்ந்த தனித்துவமானது, அதை பிரபஞ்ச விஞ்ஞானத்தின் மூலம் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தே நவீனத்துவத்தின் உத்திகளில் ஒன்றாக இருந்தது (எடுத்துக்காட்டாக, "தொழில்நுட்பமே அறிவின் சாரமாக இருக்கிறது"---என்பதே நவீனத்துவத்தின் முதன்மையான கோட்பாடாகும்). இவ்வாறு, அவர்கள் ஹெகல் மற்றும் மார்க்ஸூக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள், அவர்கள் சமகாலத்திய கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு இந்த நிலைப்பாட்டிற்கு வரவில்லை, மாறாக இது அவர்களின் மெய்யியலில் இந்த கருத்து உள்ளடங்கி இருக்கிறது. இதன்மூலம் "முழுமையே உண்மை" என்ற ஹெகலின் கருப்பொருளும் இத்துடன் இருக்கிறது. இவ்வாறு லியோத்தாரின் பெரும்-சொல்லாடல் மார்க்சிச தத்துவங்களை மட்டுமில்லாமல், தத்துவங்களைப் பொதுவாக ஒருங்கிணைக்க (முழுமைப்படுத்த) வேண்டியதை வலியுறுத்துகிறது. எவ்வாறிருப்பினும், நவீனத்துவம் ஓர் எதிர்தரப்பு நிலைப்பாடாகவும் வரையறுக்கப்படுகிறது, அது "கடந்த காலத்தை உங்களால் மேம்படுத்த முடியாது, புதிதாக ஒன்றை தான் நீங்கள் உருவாக்க வேண்டும்" என்ற போக்கில் வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் மூலமாக தாண்டி வரவேண்டிய உண்மைகளை அது கேள்விக்கு உட்படுத்தியது. பகுத்தறிவின் வடிவங்கள் பன்முகமானவை, அவை உள்ளபடியே தொடரப்படுகின்றன, இதன்மூலம் ஓர் உயர்ந்த மட்டத்தை எட்ட முடியும். இவ்வாறு, இயங்கியல்களும் இதில் உள்ளடங்கி உள்ளன.

நீங்கள் ஹெய்சன்பேர்க் மற்றும் ஐன்ஸ்டீனை குறிப்பிடுகிறீர்கள். அவர்களுடைய விஞ்ஞானம், இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் என்ன முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஓர் ஆதார அமைப்புமுறையில் வரையறுக்கப்பட்ட அனைத்து பரும அளவுகளையும் முழுமையான துல்லியத்தன்மையோடு வரையறுக்க முடியாது என்பதை முன்மொழியவே அவர்களால் சாத்தியப்பட்டது. இது ஐன்ஸ்டீனின் காலக்கோட்பாட்டிற்கும், ஹெய்சன்பேர்க்கின் அணுத்துகளை வெளிப்படுத்தும் கோட்பாடு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். இவை இரண்டுக்குமான மையக் கருத்தை, இந்த தலைப்பிற்காக பின்வருமாறு தொகுத்து அளிக்கலாம்: முழுமையை அடைய முடியாது, எல்லா அறிவும் எல்லைக்கு உட்பட்டவையே. மாஹ் மற்றும் போக்டானோவ் அணுத்துகள் கிடையாது என்பதை இதிலிருந்து ஊகிக்க விரும்பினார்கள் என்பது, பின்நவீனத்துவத்தின் இந்த விவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்புபடவில்லை. அவர்களால் ஏதோவொரு புதிய மற்றும் ஆக்கபூர்வமான, ஒரு கருத்துரு அணுகுமுறைக்கு வரமுடியவில்லை என்று இப்போது நீங்கள் கூறுகிறீர்கள். இதை நான் ஏற்கவில்லை. உற்பத்தி துறைகளின் திசைமாற்றத்தை அடையாளம் காண்பதிலும், சமூக அமைப்புகளின் மாற்றங்களும், தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்புகளின் மாற்றங்களும், பகுத்தறிவு வடிவங்களின் திசைமாற்றத்திற்கான இடைமருவுதல்களுமே பின்நவீன நிலைக்கான முக்கிய அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நவீனத்துவ மாற்றமானது என்ன இருக்கிறதோ அதை முற்றிலுமாக உடைப்பதன் மூலம் ஏற்படுவதில்லை, மாறாக தன்மாற்றத்தின் மூலமாகவே ஏற்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நிகழ்வுபோக்கின் ஊடாக ஏற்படுகிறது.

பின்நவீனத்துவம் தன்னைத்தானே நவீனத்துவத்திற்குப் பின்னால் நிறுத்திக் கொள்ளவில்லை, மாறாக இருக்கின்ற பின்நவீனத்துவ போக்குகள் மற்றும் ஏற்கனவே இருந்த பின்நவீனத்துவ போக்குகள் நவீனத்துவத்திற்கு உள்ளேயே இருந்தன என்ற ஊகத்தில் இருந்து தொடங்குகிறது, வெறுமனே அவை நவீனத்துவத்திற்குள் உள்ளடங்கி இருந்தன. உண்மை, நீதி, மனிதநேயம் போன்றவை பன்மையில் மட்டுமே இருக்கின்றன, இவ்வாறு இவை அனைத்து முக்கிய அணுகுமுறைகளுக்கும் (அதவாது சிந்தனை வடிவங்கள், சமூக கொள்கைகள், நிலைநோக்கு அமைப்புமுறைகள் போன்றவை) எதிர்தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நவீனத்துவத்தால் ஏற்கனவே பனமுகத்தன்மை பிரச்சாரம் செய்யப்பட்டிருப்பதால் (cf. Max Weber: the “polytheism of values” as a characteristic of modernity), பின்நவீனத்துவம் நவீனத்துவத்திற்கு எதிரானது கிடையாது. ஆனால் அது சமூக கற்பனாவாதம் (இங்கே இது "பெரும்-சொல்லாடல்" என்ற வகையில்) மற்றும் மெய்யியலை ஐக்கியப்படுத்துவதை உறுதியாக எதிர்க்கிறது. "ஒரு பின்நவீனத்துவவாதியானவர், சிந்தனை மற்றும் வாழ்க்கையின் வடிவங்களில் இருக்கும் குறைக்கமுடியாத பல்வகைக்காரணிகளை புரிந்தவராக இருப்பதுடன், அந்த அறிதலை பயன்படுத்தக் கூடியவராக இருக்கிறார்".

இதுவே பின்நவீனத்துவத்தின் மையக் கருத்தாகும். சமூகத்திற்கு ஒரு புதிய உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை ஒரு பின்நவீனத்துவவாதியால் உணரமுடியும், ஆனால் நவீனத்துவத்தில் இது ஒரு புதிய ஒருமைப்பாட்டின் (Unity) மூலமாகவே சாத்தியப்படும் என்று பார்க்கப்படுகிறது; பின்நவீனத்துவம் இதை முற்றிலுமாக தவறு என்றுரைக்கிறது. "எதுவும் நிகழ்த்தப்பட வேண்டியதில்லை, அனைத்துமே அதன்படி நடந்துகொண்டிருக்கின்றன" என்று கூறுவது பின்நவீனத்துவத்தின் நிலைப்பாடு கிடையாது; இது நவீனத்துவத்தின் நிலைப்பாடு. இந்த விவாத வடிவமானது, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருக்கின்றன, அவை நிற்காமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, அவற்றிற்கு பொருந்தும் வகையில் நம்முடைய சிந்தனை போக்கை உருவாக்கி கொள்வோம் என்பதாக இருக்கிறது. போப்பர், ஹாபர்மாஸ் அல்லது லூக்மான் (Popper, Habermas, Luhmann) ஆகியோரின் மெய்யியல் அணுகுமுறைகளுக்கும் கூடுதலாக, அதை "பிந்தைய நவீனம்" என்று வரையறுக்க முடியாது என்பதற்கு அங்கே ஓர் எதிர்நிலைப்பாடு இருக்கிறதல்லவா? துல்லியமின்மையே அளவுகோல் அல்லது, மிகவும் மாறாக, அந்த கருத்தின் பிரத்யேக முறையீடு கேள்விக்கு உட்படுகிறது. பனமுகத்தன்மை, தொடர்ச்சியின்மை, பகைமை, சிறப்பியல்பு ஆகியவை இவ்வாறு விஞ்ஞான அறிவின் கருமையத்தை ஊடுருவுகின்றன. பிரத்தியேகமானவைகள் (Monopolisam/Universalism) போன்றவை இகழப்படுகின்றன.

ஹெகலுக்கு எதிராக அடோர்னோ பேசுகையில்: முழுமை உண்மையில்லை. முக்கியமாக வாழ்வின் மாறுபட்ட உலகங்களையும், அர்த்தத்தையும் பாதுகாக்கும் தன்மையே பின்நவீனத்துவத்தின் ஈர்ப்பாக இருக்கிறது. எவ்வாறிருப்பினும், முழுமையில் கரைவதை ஒருவர் இழப்பாக உணரும் வரைக்கும், அவர் நவீனத்துவத்தின் செல்வாக்கில் தான் இருக்கிறார். தலைமைச்சிறப்பு என்பது தன்னிலிருக்கும் தகுதியற்றமையை சரிபடுத்துவது என்பதாக இன்று இல்லை, மாறாக அது மற்றவர்களின் அடிப்படை உரிமை, மேலும் அதன் மற்றவைகளில் மற்றதன் ஓர் அடிப்படை அங்கீகரிப்பாகும். இவ்வாறு சமூகமானது உலக கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, ஏற்கனவே அது அதன் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளிலும் வேறுபட்டிருக்கிறது. பன்முகத்தன்மை (Plurality) ஒரு புதிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுவதில்லை, மாறாக அது கட்டாய சுழற்சியில் இருந்தது. இப்போது அது வாழ்க்கையின் மற்றும் கலாச்சாரத்தின் ஒவ்வொரு உயிர்துடிப்பிலும் கட்டாயமாகி இருக்கிறது. பன்முகத்தன்மை (Plurality) என்பது ஒரு வரலாற்று சாதனம். பன்முகத்தன்மை என்பது நிகழ்கால சூத்திரம். பலவாறாக இருப்பது வரம்புமீறாமையும், வெளிப்படைத்தன்மையும் மீட்டு அளிப்பனவாக இருக்கிறது. யதார்த்தம் என்பது ஒருமுகத்தன்மை (ஒரேமாதிரியானது--homogenous) கிடையாது, மாறாக அது பன்முகத்தன்மையானதாகும் (பலமாதிரியானதாகும்-heterogenous) ஆகும்; இணக்கமானது கிடையாது, மாறாக அது முரண்கள் நிறைந்ததாகும் (dramatic); ஒருங்கிணைந்தது கிடையாது, மாறாக மாறுபட்டதன்மையானதாகும். அங்கே சொல்லாடல் வகைகளின் (அதாவது, எதிர்-பிரபஞ்சத்துவவாதம்) ஒரு கட்டுப்பாடு இருக்கிறது, மேலும் இவ்வாறு அனைத்து முழுமைவாதத்திற்கும் எதிரான ஒரு போக்கு இருக்கிறது; இதுவே பின்நவீனத்துவத்தின் முக்கிய கொள்கையாகவும் இருக்கிறது. வெறுமனே ஒரு முடிவுக்கான துணுக்குகளை மட்டும் அளிக்க ஒரு மெய்யியலாளர் அழைக்கப்படுவதில்லை, மாறாக விவாதத்தின் தர்க்கம் மற்றும் நிகழ்முறை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், உள்ளவாறே உணரப்பட்டிருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தவே அழைக்கப்படுகிறார்.

ஒரேமாதிரியான இலக்குகளின் நுண்மையும், இந்த இலக்குகளை பின்தொடரும் விவாத வகைகளும், சமகாலத்திய மனிதகுலத்தின் சாரமாக இருக்கின்றன. இவையே பின்நவீனத்துவ மெய்யியலாளரின் சீர்மையாகும். வெளிப்படையாக, இது எனக்கு ஏதோ புதிதாக தெரிந்தது. மேலும் "இது நீண்டதூரம் ஓடிவந்த ஓடையைப் போன்ற இந்த சமூகத்தின் தெளிவற்ற பிரதிபலிப்பல்ல". ஆனால் இதில் பின்நவீனத்துவ மெய்யியலின் முக்கிய பிரச்சினை எங்கே இருக்கிறது? திசைமாற்றங்கள் (அல்லது அங்கே இருக்கும் போலித்தோற்றங்கள்), தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இதர பிறவற்றால் இவற்றை எல்லாம் எளிதாக உள்ளடக்கிவிடலாம், இது மெய்யியல் என்பதில் இருந்து மிக தூரத்தில் இருக்கிறது. விவாதத்தின் நிஜமான சாரம் அரசியல் விஞ்ஞானத்தின் பிரச்சினைகளில் இருக்கிறது, அதாவது சமூக செயல்முறைகள் சார்ந்த முடிவுகளை ஓர் ஒருமைப்பட்ட பாணியில் எவ்வாறு நெறிமுறைப்படுத்துவது? ஆகவே திசைமாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வகையில், ஐக்கியப்படுத்துவது குறித்த தீர்மானங்கள் எவை? என்பதே விவாதத்தின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. மெய்யியல் சார்ந்த கேள்வி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது: இன்றைய பகுத்தறிவுகளின் வேறுபட்ட கண்ணோட்டத்தில், பகுத்தறிவான சிந்தனையின் சாத்தியமான மற்றும் அவசியமான வடிவம் என்ன? இந்த தலைப்பை பற்றி தான் விவாதிக்கப்பட வேண்டியதிருக்கிறது, ஏனென்றால் இந்த கேள்வியை ஆராய்வது மிகவும் சுவாரசியமாக இருக்கக்கூடும்; இது இதனுடன் சில சிறந்த "மெய்யியல் பரிசோதனை முறையையும்" கொண்டு வரக்கூடும், அது நிஜமாக சொர்க்கபூமிக்கு அழைத்துச் செல்லும். நான் இங்கேயே முடித்து கொண்டிருப்பேன், ஆனால் இன்னும் ஒரேயொரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். ஒருவரின் மெய்யியல் உலக கண்ணோட்டத்தை தானாகவே எட்டுவதற்காக, அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய வேண்டிய தேவை ஒருவருக்கு இருக்கிறது என்று நினைப்பது, முற்றிலுமாக ஒரு விஞ்ஞானரீதியான முறையல்ல. நான்காம் அகிலத்தைப் பற்றி, "அமைச்சகத்தில் இருந்து புரட்சி வரை" என்ற தலைப்பில், நான் ஒரு புத்தகம் எழுதும் போது, வாசகர்கள் "ஆகா! இவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, அவர்கள் எல்லோரும் கிறிஸ்துவ குழுக்களின் போலி-மோர்போசிஸ்கள்!" என்று கூறுவதற்காக, பல உறுப்பினர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டி கொண்டிருப்பது, மிக எளிதாகவும், குட்டி-முதலாளித்துவ சிந்தனையாகவும் தான் இருக்கும்.

இதை நான் அடிக்கடி கவனிக்கிறேன், இது ஒரேயொரு ஆதாரம் தான் என்றாலும், இது (சுவாரசியமற்று இருந்தாலும் கூட) எழுத்துக்களால் வரிகளை நிரப்ப உதவுகிறது. ஒழுக்க மதிப்பீடுகளும், சமூகவியல் பகுப்பாய்வுகளும் அடிக்கடி இங்கே ஒன்று கலக்கப்படுகின்றன. "புத்திஜீவிகளின் முற்போக்கான பிரிவுகள் வலதுநோக்கி பயணித்ததற்கு ஸ்ராலினிசத்தின் சீரழிவு தீர்மானகரமாக இருந்தது..." என்று நீங்கள் குறிப்பிடும் போது, நிச்சயமாக நீங்கள் உங்களுடைய அடிப்படை ஊகத்தில் சரியாக இருக்கிறீர்கள். இது நிச்சயமாக பல பிரெஞ்சு அறிவுஜீவிகளுக்கு பொருந்துகிறது, ஆனால் கலாச்சார வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு மெய்யியலை விவரிப்பது என்பது அதன்வகையில் தவறானதாகும். என்னவாக இருந்தாலும், கோட்பாடுகளின் பற்றாக்குறைக்கும், "விஞ்ஞான புறநிலைமைக்கும்" எவ்வித உள்தொடர்பும் கிடையாது. மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிப்பதும், (ஊகத்தில் ஏதோவொரு வகையில் புறநிலையாக) அனுபவ அறிவும் அடிப்படையில் வெவ்வேறானவை. என்னவாக இருந்தாலும், ஒருவர் இந்த அல்லது அந்த குழுவின் கூட்டத்தில் ஒருகாலத்தில் இருந்தார் என்பதில் இது எந்த மாற்றத்தையும் கொடுப்பதில்லை. இந்த வலைத் தளத்தின் தொடர் வெற்றிக்காக என்னுடைய வாழத்துக்களையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொண்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்.

எம்.ஜி.

அன்பில் எம்.ஜி:

அலன் சோகல் மற்றும் ஜீன் பிரிக்மொண்ட் எழுதிய புத்திஜீவித மோசடிகள் என்ற புத்தகத்தின் மீதான என்னுடைய விமர்சனத்தின் மீது நீங்கள் எழுதிய கருத்துக்களுக்கும், கடிதத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் எழுப்பி இருக்கும் பல்வேறு புள்ளிகள் குறித்து எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது, என்னுடைய கருத்தில், இவை நீங்கள் ஆதரிக்கும் பின்நவீனத்துவ சிந்தனையின் அடிப்படையான, சமூகரீதியான பிற்போக்கான பார்வையையும், குழப்பத்தையுமே மிக துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. உங்கள் கடிதத்தின் முதல் பத்தியில் நீங்கள் "பின்நவீனத்துவம் என்றழைக்கப்படும்" "சில பிரிவுகள்" என்பதைக் குறிப்பிட்டு, ஐரகரே மற்றும் கிறிஸ்டிவாவின் எக்லிக்டிசத்தைப் பற்றி எழுதுகிறீர்கள். "என்றழைக்கப்படும்" என்ற சேர்க்கை, ஏதோவொரு வகையில் சோகல் மற்றும் பிரிக்மாண்டால் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு பொருந்துகிறது என்பது உங்களுடைய கண்டுபிடிப்பு. ஐரகரே மற்றும் கிறிஸ்டிவாவின் மிகைப்படுத்தப்பட்டவை மீது என்னுடைய விமர்சனம் ஒருமுகப்பட்டிருந்தாலும் கூட, புத்திஜீவித மோசடிகள் புத்தகத்தின் வலிமைகளில் ஒன்று அதன் முழுமைத்தன்மையாகும். ஆசிரியர்கள் வெறுமனே விளிம்பில் இருக்கும் சில பிரபலங்களை மட்டும் கையாளவில்லை, மாறாக பிரெஞ்சு பின்நவீனத்துவ இயக்கத்தின் முன்னணி ஒளிவிளக்குகளைக் கையாள்கிறார்கள். புத்தகத்தை படித்த பின்னர் ஏற்படும் நழுவ முடியாத தீர்மானமாக இருப்பது என்னவென்றால், நாம் ஏதோ சில ஆரோக்கியமற்ற கிளைகளோடு மட்டும் தொடர்பு கொள்ளவில்லை, அதாவது மரத்தை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வர அவற்றை மட்டும் வெட்டிவிட முடியாது. அடிப்படை விஞ்ஞான கருத்துக்கள் மற்றும் செயல்முறைகளை பழிப்புரைக்கும் அளவு பின்நவீனத்துவ பள்ளியில் மிகவும் விரிந்திருக்கிறது, அதை அதன் வேரில் இருந்து நாம் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.

ஓர் உணரக்கூடிய புறநிலை உண்மையை நிராகரிப்பது பின்நவீனத்துவத்தின் பொதுவான போக்கு என்ற என்னுடைய முடிவை நீங்கள் உங்களுடைய இரண்டாவது பத்தியில் நிராகரித்திருக்கிறீர்கள். இந்த வலியுறுத்தல் முற்றிலுமாக தவறு என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வருந்தத்தக்களவில் இந்த மொத்த கடிதத்தில் ஓரிடத்தில் கூட, ''உணரத்தக்க புறநிலை உண்மை'' இருக்கிறது என்ற நிலைபாட்டு புள்ளியை ஆதரிக்க உங்களுடைய சொந்த ஒரேயொரு வாதத்தையோ அல்லது உங்களின் பின்நவீனத்துவ முன்மாதிரிகளிடமிருந்து பெறப்பட்ட ஒரேயொரு வார்த்தையைக் கூட நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் கடிதத்தின் இரண்டாவது பக்கத்தில், என்னுடைய விமர்சனத்திற்கு எதிராக பின்வரும் வார்த்தைகளுடன் ஒரு வாதத்தை தொடங்குகிறீர்கள்: "ஹெசன்பெர்க் மற்றும் ஐன்ஸ்டீன் குறித்து நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்", பின்னர் மாஹ் மற்றும் போக்டானோவ், "அணுத்துகள் கிடையாது என்பதை ஊகிக்க செய்த முயற்சி, பின்நவீனத்துவத்தின் இந்த விவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்புபடவில்லை" என்ற முறையீட்டுடன் உங்கள் பத்தியை முடிவு செய்தீர்கள். முதலாவதாக, என்னுடைய விமர்சனத்தில் நான் ஒருபோதும் ஹெசன்பெர்க் அல்லது ஐன்ஸ்டீனைக் (இவர் அணுப்பொருளின் மறைவு குறித்து மாஹின் வாதங்களைக் கடுமையாக எதிர்த்தார்) குறிப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். லெனினால் அளிக்கப்பட்ட மெய்யியல் கேள்விகள் மற்றும் பதில்களுக்குள் இயற்பியல்வாதி மாஹால் செய்யப்பட்ட தலையீடுகளை சுற்றியிருந்த முரண்பாடுகளைத் தான் நான் குறிப்பிட்டேன். இரண்டாவதாக, என்னுடைய கட்டுரையில் நான் குறிப்பிடாத, நிலைமைகள் மற்றும் மனிதர்களுக்கு எதிரான விவாதங்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்ற உண்மையைக் குறித்து கூறுவதானால், ஓர் உணரக்கூடிய புறநிலை உண்மையைப் பின்நவீனத்துவத்தின் பொதுவான போக்கு மறுக்கிறது என்பதை நீங்கள் முனைப்பாக மறுக்கும் போது, எவ்வாறு நாம் மேற்கொண்டு தொடர முடியும். இந்த கேள்வி முக்கியமாக முன்நின்றிருப்பதால், ஒரு வரலாற்று எடுத்துக்காட்டை பற்றிய விவாதங்களை பின்னர் பார்க்கலாம்.

இந்த பிரச்சினையைப் பற்றி நீங்கள் ஏன் விவாதிக்க வில்லை? நான் மீண்டும் கூறுகிறேன், நீங்கள் வரலாற்று எடுத்துக்காட்டைக் கணிசமாக நிராகரிக்கும் போது, பின்நவீனத்துவத்தின் அறிவாதார முறையியல் பார்வையை (epistemological) எவ்வாறு நாம் கையாள முடியும்? இதுவே இந்த விவாதத்தின் மையத்தில் நிற்கிறது? இயக்கங்களின் அறிவாதார முறையியல் பிரச்சினைகள் மீது பின்நவீனத்துவவாதிகளின் எழுத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. நம்முடைய வாசகர்களின் பொறுமையை இன்னும் சோதிக்காமல் ஒரு முன்னணி அமெரிக்க பின்நவீனத்துவ எழுத்தாளரான எலிசபெத் எர்மாத்தின் மேற்கோளைச் சுட்டிக்காட்ட அனுமதியுங்கள். இதுபோன்றவர்களின் ஒரு தனி முத்திரையாக இருக்கும் வழக்கமான ஆரவார தொனியில் அவர் எழுதுகிறார்: தமது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கான---ஒரு நனவிற்கும் இன்னொன்றிற்கும் இடையிலான உறவுகள், அல்லது மாயைகளுக்கு இடையிலான ஓர் அடையாளத்திற்கு ஏதோவொரு வகை வங்கியைப் போல உத்திரவாதமளிக்க பின்நவீனத்துவவாதிகளுக்கு ஒரு 'புறநிலை' உலகம் தேவைப்படுவதில்லை. இங்கே அகநிலைவாதம் மட்டுமே உள்ளது. இங்கே மாயை மட்டுமே இருக்கிறது. இதற்கு நிரந்தரமான புறநிலைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு இல்லாததால், ஒவ்வொரு மாயையும் நிஜத்தை உருவாக்குகிறது. மேலும் இதன்மூலம் அது அதன்காலத்திற்கு முழுவதுமாக 'புறநிலையாக' இருக்கிறது." (Sequel to History, Princeton, 1992).

இதேபோன்ற பாணியில் விவாதிக்கும் பல ஏனைய பின்நவீனத்துவ ஆதாரங்களையும் என்னால் குறிப்பிட்டுக் காட்ட முடியும், ஆனால் இந்த செய்தியே தெளிவாக இருப்பதாக நான் காண்கிறேன். நவீனத்துவவாதிகள் என்றழைக்கப்படும் இரங்கத்தக்கவர்களுக்கு தங்கள் வாழ்க்கை முழுவதும் நொண்டி அடித்துக் கொண்டே செல்ல புறநிலை உண்மையின் ஊன்றுகோல் (அல்லது அணை) தேவைப்படுகிறது. ஆனால் இந்த சாமர்த்தியமான பின்நவீனத்துவவாதிகள் வஞ்சனையாக பார்ப்பதிலும், பிரமை மற்றும் அகநிலைத்துவத்தின் மிகச்சிறந்த அதிகார எல்லைகளில் நழுவி செல்வதற்கு இந்த புவிக்கழிவின் எடையில் இருந்து தங்களைத்தாங்களே சுதந்திரமாக பாத்திரப்படுத்தி கொள்கிறார்கள்.

நவீனமும், பின்-நவீனமும்

அணுப்பொருட்களைப் பற்றி விவரிக்க, நீங்கள் "நவீனம்" மற்றும் "பின்நவீனம்" என்று எதை குறிப்பிடுகிறீர்களோ அந்த உங்களின் விளக்கத்தைத் தொகுத்தளிக்க என்னை அனுமதியுங்கள். உங்களுடைய சொந்த பல வாதங்களின் பொருத்தமின்மையை மூளையில் தாங்கி வைத்து கொண்டிருப்பது என்பது எளிய காரியமல்ல. ஒரு மனோபாவத்தை உள்ளடக்கிய நவீனத்துவம் பற்றிய உங்களின் விளக்கத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று, என்னவென்றால்: " "கடந்த காலத்தை உங்களால் மேம்படுத்த முடியாது, புதிதாக ஒன்றை தான் நீங்கள் உருவாக்க வேண்டும்... மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் மூலமாக தாண்டி வரவேண்டிய உண்மைகளை அது கேள்விக்கு..." இது யதார்த்தத்தை மாற்றுவதில் மனிதகுலத்தின் முக்கியமான பாத்திரத்தை வலியுறுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது. மேலும் நவீனத்துவத்தின் நிலைப்பாடு பற்றிய உங்களுடைய பிந்தைய முறையீடு என்னவென்றால்" ""எதுவும் நிகழ்த்தப்பட வேண்டியதில்லை, அனைத்துமே அதன்படி நடந்துகொண்டிருக்கின்றன", இது ஒவ்வொன்றும் மனிதனின் அகத்தலையீடு இல்லாமலேயே சுயாதீனமாக நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுவதாக தோன்றுகிறது.

குழப்பமில்லாத வகையில் ஒரு சில அடிப்படை நிலைப்பாடுகள் உங்கள் கடிதத்தில் தெளிவாக இருக்கின்றன. நீங்கள் எழுதுகிறீர்கள்:

1. "எல்லையில்லா பூரணத்துவம் (முழுமை) ஒரு பகுத்தறிவார்ந்த தனித்துவமானது, அதை பிரபஞ்ச விஞ்ஞானத்தின் மூலம் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தே நவீனத்துவத்தின் உத்திகளில் ஒன்றாக இருந்தது (எடுத்துக்காட்டாக, "தொழில்நுட்பமே அறிவின் சாரமாக இருக்கிறது)". உங்களுடைய வாதத்தில் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடுவதாவது:

2. லியோத்தார்டின் (குறிப்பு) பெரும்-சொல்லாடல் "தத்துவங்களைப் பொதுவாக ஒருங்கிணைக்க (முழுமைப்படுத்த) வேண்டியதை வலியுறுத்துகிறது" என்பதை உள்ளடக்கி உள்ளது.

3. மார்க்ஸ் மற்றும் ஹெகலின் "பூரணம்" அல்லது "முழுமை" ஆகிய பதங்களுக்கு எதிராக ஜேர்மன் சிந்தனையாளர் தியோடர் அடொர்னோவுக்கு ஆதரவளிக்க செல்கிறீர்கள்.

4. இறுதியாக, கேட்கப்பட வேண்டிய பொருத்தமான கேள்வி என்று பின்வருவதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்: "இன்றைய பகுத்தறிவுகளின் வேறுபட்ட கண்ணோட்டத்தில், பகுத்தறிவு சிந்தனையின் சாத்தியப்படும் மற்றும் அவசியமான வடிவம் என்ன?"

5. பின்நவீனத்துவ சிந்தனையின் மூலங்கள் குறித்து குறிப்பிடுகையில், நீங்கள் குறிப்பிடுவதாவது: "உற்பத்தி துறைகளின் திசைமாற்றத்தை அடையாளம் காண்பதிலும், சமூக அமைப்புகளின் மாற்றங்களும், தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்ட தொலைதொடர்புகளின் மாற்றங்களும், பகுத்தறிவு வடிவங்களின் திசைமாற்றத்திற்கான இடைமருவுதல்களுமே பின்நவீன நிலைக்கான முக்கிய மூல காரணங்களாக இருக்கின்றன" என்கிறீர்கள். நீங்கள் "வாழ்வின் மாறுபட்ட உலகங்களையும், அர்த்தத்தையும் பாதுகாக்கும் தன்மையே பின்நவீனத்துவத்தின் ஈர்ப்பாக இருக்கிறது" என்று பேசும் போதும் இதே புள்ளியை மீண்டும் வலியுறுத்துகிறீர்கள்.

புள்ளி 1-ல், நீங்கள் குறிப்பிடுவதற்கும் அப்பாற்பட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் நனவுபூர்வமான பயன்பாட்டைக் கொண்டு இந்த உலகை அறியவும் முடியும், அபிவிருத்தி செய்யவும் முடியும் என்ற அறிவொளி சிந்தனையின் ஓர் அடிப்படை முகவுரை இருப்பதாக நான் ஊகிக்கிறேன். பல நூற்றாண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த பொதுவான கருத்து, மதத்தில் இருந்து விஞ்ஞானத்தை பிரித்ததால் ஏற்பட்டதாகும். அத்துடன் இது ஒரு சமூக அமைப்பு முறையில் இருந்து மற்றொன்றிற்கு (அதாவது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு) மாறுவதில் ஓர் ஆக்கபூர்வமான ஆக்ககூறாக இருக்கிறது என்பதுடன் அதிலேயே இணைந்தும் இருக்கிறது. இந்த கருத்துருவை ஏன் ஓர் "உத்தியாக" (trick) கூறுகிறீர்கள்---இதுவொரு உத்தி என்ற முறையீட்டை நியாயப்படுத்த உங்களுடைய வாதம் என்ன? அதற்கும் மேலாக மேற்கூறிய முகவுரையை நீங்கள் நிராகரிப்பீர்களேயானால், பின்னர் பின்நவீனத்துவவாதிகள் ஓர் உணரக்கூடிய புறநிலை உண்மையின் கருத்தை நிராகரிக்கவில்லை என்ற உங்களுடைய கருத்துடன் நீங்கள் எவ்வாறு சமரசப்பட முடியும்? அதே பத்தியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தை பற்றிய உங்களின் ஆழமான மனோபாவம், நிச்சயமாக, ஜேர்மன் மெய்யியல்வாதி மார்ட்டின் ஹெய்டெக்கரின் பிற்போக்குவாத நிலைப்பாடுகளையே நினைவுபடுத்துகிறது. அவருடைய நிலைப்பாடுகள், உலக சோசலிச வலைத் தளத்தின் சமீபத்திய தொடர் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டிருந்தன.

புள்ளி 2-ல், யதார்த்தத்தை பற்றிய எந்த பகுப்பாய்விற்கும் சாத்தியப்பட்ட அடிப்படையை நிராகரிக்கும் லியோத்தார்டின் மூன்று "பெரும்-சொல்லாடல்" என்றழைக்கப்படுவதையும் சேர்த்து கொண்டு, நீங்கள் "நடைமுறையில் இருக்கும் கோட்பாடுகளை" அகற்ற வேண்டும் என்று முறையிடுகிறீர்கள். ஆனால், இதுவொரு தூர்த்துபெயர்க்கும் நகர்வாக (sweeping move) இல்லையா? நீங்கள் சொல்வதில் இருந்து எழும்பும் எதிரொலிகளைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா? பின்-நவீனத்துவம் ஒரு கோட்பாடா இல்லையா?---குழப்பமாக இருக்கும், பின்னோக்கி திரும்பி பார்க்கையில், இது அகநிலை கருத்துவாதத்தை சார்ந்திருக்கிறது---ஆனால், ஒருபோதும் இதுவொரு கோட்பாடல்ல. இந்த வகையில், புள்ளி 4-ல், நீங்கள், "இன்றைய பகுத்தறிவுகளின் வேறுபட்ட கண்ணோட்டத்தில், பகுத்தறிவு சிந்தனையின் சாத்தியப்படும் மற்றும் அவசியமான வடிவம் என்ன?" என்ற கேள்வியை முன்வைக்கிறீர்கள்.

மேலும் தொடர்ந்து எழுதுகையில், "சமூக செயல்முறைகள் சார்ந்த முடிவுகளை ஓர் ஒருமைப்பட்ட பாணியில் எவ்வாறு நெறிமுறைப்படுத்துவது?... ஆகவே திசைமாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வகையில், ஒருமைப்படுத்துவது குறித்த தீர்மானங்கள் எவை?" ஆனால் இதுபோன்ற கேள்விகளை ஒரு கோட்பாடு இல்லாமல் கையாள்வது எவ்வாறு சாத்தியப்படும்? அதாவது, ஒப்பீடுகள் செய்ய அனுமதிக்கும், மற்றும் மேற்கொண்டும் செயல்முறைகளின் அடித்தளத்தில் தீர்மானங்களுக்கு வருவதற்கு அனுமதிக்கும் பயிற்சி மற்றும் அனுபவத்தில் இருந்து பெறப்பட்ட உலகுபற்றிய ஒரு பொதுவான கருத்துப்பாடு. என்னுடைய பதிலுரையை முடிப்பதற்கு முன்னால், நான் புள்ளி 5 குறித்து குறிப்பிட விரும்புகிறேன். அனைத்திற்கும் முதன்மையாக, நிச்சயமாக பின்நவீனத்துவ சிந்தனையின் ஒரு மைக்கல்லாக இருக்கும், ஹெகல் மற்றும் மார்க்ஸ் பற்றிய உங்களின் மறுப்புகளைக் கையில் எடுக்க அனுமதியுங்கள். ஹெகலிய இயங்கியலை, ஸ்ராலினிச அரசியலின் வறட்டுவாதத்துடன் சமப்படுத்த வேண்டும் என்பதும், ஹெகலிய சிந்தனை கொடுங்கோன்மையானது, மாற்றமில்லாதது மற்றும் வறட்டுத்தனமானது என்று அறிவிக்க வேண்டும் என்பதுமே பின்நவீனத்துவவாதிகளால் பிரச்சாரம் செய்யப்பட்ட ஹெகலிய சிந்தனையைப் பற்றிய பிரபலமான கருத்தாகும்.

ஒரு விஞ்ஞானரீதியான அல்லது மெய்யியல்ரீதியான கருத்தாக, ஹெகலிய ''கொடுங்கோன்மையின்'' பின்நவீனத்துவ பதிப்பு, ஏதோவொரு வகையில் கடினமான, சர்வாதிகாரம்மிக்க மற்றும் தனிநபர்களை ஒடுக்குவதைச் செயல்படுத்துவதற்கு உரிய சர்வாதிகார அரசியலமைப்புகளின் கருத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவே பின்னர் "நவீன" நிலைமை என்று கூறப்படுகின்றது. வெளிப்படையான தாராளவாதம், தனிநபர்வாதம் (Individualism) மற்றும் அரசற்ற நிலை ஆகியவற்றை வழங்கும் ஒரு பின்நவீனத்துவ உலகத்திற்கு எதிராக இது முன்வைக்கப்படுகின்றது. உண்மையில், கருத்துமுதல்வாத கோட்டையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய ஹெகலிய சிந்தனையின் புரட்சிகர மூலம், இயங்கியல் முப்பட்டை கண்ணாடியின் (Prism) வழியாக பார்க்கப்பட்ட ஒவ்வொன்றின் இடைமருவு இயல்பையும் வலியுறுத்துவதாக இருந்தது என்பதை மார்க்சிச இயக்கத்தின் ஒவ்வொரு முன்னணி நபர்களும் உணர்ந்திருந்தார்கள். அதே நேரத்தில், இந்த இடைமருவு இயல்பை அங்கீகரிப்பதற்கான சாத்தியப்பாடு மட்டுமே இருந்தது, ஏனென்றால் அனைத்து பொருட்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டத்தன்மையினாலும், அணுப்பொருளும் சிந்தனையும் பொதுவான விதிகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையினாலும் இந்த சாத்தியப்பாடு இருந்தது. இந்த உண்மைகளே கண்டுபிடிக்கப்பட வேண்டியனவாகவும், ஒவ்வொரு குறிப்பிட்ட துறையிலும் உறுதியான ஆய்வின் போக்கில் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதாகவும் இருக்கிறது.

ஹெகலும், மார்க்சிஸ்டுகளும் என்ன சொல்கிறார்கள்?

பின்நவீனத்துவவாதிகளின் முதன்மை நோக்கத்திற்கு பொருத்தமாக, நீங்களும் முழுமை பற்றிய ஹெகலின் கருத்தை முக்கிய எதிரியாக அடையாளம் காண்கிறீர்கள். ஹெகல் என்ன கூறினார்? அவருடைய உணர்மையியலின் சிந்தனை (Phenomenoly of Spirit) என்ற படைப்பில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்: "முழுமையே நிஜம். ஆனால் முழுமை என்பது, அதன் அபிவிருத்தியின் மூலம் அது தன்னைத்தானே முழுமையாக்கி கொள்கிறது என்ற சாரம் தானே தவிர வேறொன்றுமில்லை. முடிவாக கூறுவதானால், அதுவொரு முக்கியமான விளைவு என்று கூறப்பட வேண்டும், எது நிஜமோ அது அதன் இறுதியில் மட்டுமே இருக்கிறது; அது துல்லியமாக அதில் அதன் இயல்பைக் கொண்டிருக்கிறது, யதார்த்தமாகவும், விஷயமாகவும், அதுவாகவே தன்னிச்சையாகவும் மாறுவதன் மூலமாகவும் இவ்வாறு இருக்கிறது." ஹெகல் அவருடைய மெய்யியல் விஞ்ஞானத்தின் தொகுப்பு (Encyclopaedia of the Philosophical Sciences-128) என்பதில் ஒரு மிக பிரபலமான வடிவத்தில் இதே சிந்தனையை வெளிப்படுத்தினார்: "அனைத்து பொருட்களும்... அவற்றின் அழிவைச் சந்திக்கின்றன; மேலும் இவ்வாறு கூறுவதன் மூலம், இயங்கியலே பிரபஞ்சம் முழுமைக்குமானதாகவும், தடுக்கமுடியாத சக்தியாகவும் இருக்கிறது, இதற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது, எவ்வாறாயினும் அது தன்னைதானே கணித்துக் கொண்டு நிலையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என்ற யூகத்தை நாம் கொண்டிருக்கிறோம்." ஹெகலிய இயங்கியலை அதன் கருத்துவாத கோட்டையில் இருந்து விடுவிப்பதற்காகவும், நிஜமாக அடிக்கோடிடும் சமூக மற்றும் இயற்கை அபிவிருத்தியின் உந்துசக்திகளைப் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் அடித்தளத்தில், இயங்கியலை ஒரு சடவாத அடிப்படையில் உருவாக்குவதே மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் திட்டமிட்ட முன்னெடுப்பாக இருந்தது. தன்னுடைய டூரிங்கிற்கு மறுப்பு என்ற புத்தகத்தில் பெடரிக் ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: "அனைத்தும்-ஆச்சர்யப்படுத்துவதாகவும் மற்றும் எல்லா காலத்திற்கும் இறுதியாகவும் இருக்கும் இயற்கைரீதியான மற்றும் வரலாற்றுரீதியான அறிவின் ஓர் அமைப்புமுறையானது, இயங்கியல் சிந்தனையின் அடிப்படை விதிகளுக்கு முரண்பாடாக இருக்கிறது; எவ்வாறாயினும், விதிவிலக்கில் இருந்து விடுபடுவதில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் இது, நேர்எதிர்மறையான வகையில், வெளிப்புறம் இருக்கும் பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறைப்பட்ட அறிவால் தலைமுறைக்கு தலைமுறை மாபெரும் தாவுதல்களை உருவாக்க முடியும் என்ற சிந்தனையை உள்ளடக்கி உள்ளது." மேலும் அதிலேயே தொடர்ந்து எழுதுகையில்: "உலகின் நிஜமான ஒருமைப்பாடு அதன் பொருளாயதத்தில் (சடத்துவத்தில்) தங்கி இருக்கிறது, இதை ஒருசில வார்த்தைஜாலங்களால் நிரூபிக்க முடியாது, மாறாக மெய்யியல் மற்றும் இயற்கை விஞ்ஞானத்தின் நீண்ட மற்றும் இடைவிடா அபிவிருத்தியால் மட்டுமே நிரூபிக்கப்பட முடியும்." (டூரிங்கிற்கு மறுப்பு, அத்தியாயம் நான்கு) முதல் உலக போரின் போது, ஹெகலின் தர்க்கவியலின் விஞ்ஞானம் (Science of Logic) என்ற லெனினின் ஆய்வுகளில் உண்மை மற்றும் அறிந்துகொள்ளலின் இயங்கியல் தன்மை அவரால் விளக்கப்பட்டது: "அறிந்துகொள்ளல் என்பது நிரந்தரமானது, ஆய்வுபொருளுக்கு சிந்தனையின் முடிவில்லா அணுகுதலாக இருப்பது. மனிதர்களின் சிந்தனைகளில் இயற்கையின் பிரதிபலிப்பு உயிரோட்டம் இல்லாமல், 'சூக்குமமாகவும்', இயக்கத்தில் முற்றிலும் இல்லாததுமாகவும், முரண்பாடுகள் இல்லாததாகவும் புரிந்து கொள்ளப்படக்கூடாது, மாறாக இயக்கத்தின் நிரந்தரமான நிகழ்வுபோக்கில், முரண்பாடுகளும் அவற்றின் தீர்வுகளும் உருவாகின்றன" (லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 38). இறுதியாக, லியோன் ட்ரொட்ஸ்கியும் கூட அவருடைய எழுத்துக்களில் இயங்கியல் அணுகுமுறையினால் கிடைக்கும் ஆதாயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்: "இயங்கியலானது, உண்மையில் தரவுகளின் வலிமிகுந்த ஆராய்ச்சிலிருந்து ஆய்வு செய்பவரை சுதந்திரப்படுத்துவதில்லை, நேர்எதிர்மறையாக; அதற்கு அது தேவைப்படுகிறது. ஆனால் பதிலாக அது புலனாய்வு சிந்தனைக்கு இலகுத்தன்மையை அளிக்கிறது; கடுமையான எதிர்சார்புகளுடன் அது கைகோர்க்கவும் உதவுகிறது, மதிப்பற்ற ஒப்புமைகளை தாங்கி பிடிக்கிறது, மேலும் அது பரிசீலனையை அடித்தளமாக கொண்டு, பயத்தூண்டுதலோடு படிப்பிக்கிறது" (1933-35, ட்ரொட்ஸ்கியின் குறிப்புகள் என்பதிலிருந்து, தொகுத்தவர் பிலிப் போம்பர்). ஒரு நிலையான, சிந்தனைகளின் அசைக்க முடியாத அமைப்பின் வடிவத்தில் உண்மையைக் கைப்பற்றுதல் அல்லது நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடும் (ஊகத்தின் மூலம்) முழுமையான இறுதி உண்மையின் ஒரு வகையை அடைவது சாத்தியம் என்ற கருத்து, ஹெகலிச சிந்தனையோடோ அல்லது மார்க்சிச சிந்தனையோடோ எவ்வகையிலும் தொடர்புபட்டதில்லை. ஹெகல் மற்றும் மார்க்ஸ் இருவருமே கற்பதன் மூலமாகவும், தத்துவங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமாகவும், அவற்றின் அடிப்படையில் நாம் வாழும் சமூகத்தையும், இயற்கையையும் மாற்றுவது, அபிவிருத்தி செய்வது மனிதகுலத்தால் சாத்தியமே என்று வலியுறுத்தினார்கள். அதன் தீவிர போலிப்பகட்டுகள் மற்றும் அலங்கார வார்த்தைஜாலங்களால் இருந்தபோதும், பின்நவீனத்துவ சிந்தனையையினை எது வரையறுக்கிறதென்றால் முக்கியமாக அதன் பழமைவாதமே, "நுண்ணிய-அரசியல்" மற்றும் தனிநபர் முன்னேற்றம் ஆகியவற்றின் ஒரு சிறிய மாற்றத்திற்காக சமூக அந்தஸ்துகளை ஏற்றுக்கொள்ளும் தயார்தன்மை அதனிடத்தில் இருக்கிறது. இந்த வகையில், பின்நவீனத்துவ இயக்கம் ஹெகலின் இயங்கியலின் புரட்சிகர நிறுவுதலுக்கு மிகவும் எதிராக இருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சமுதாயம் மற்றும் உற்பத்தியின் அபிவிருத்தி

இந்த இடத்தில் நான் உங்களின் ஐந்தாவது புள்ளிக்குத் திரும்புகிறேன். பின்நவீனத்துவம் அதன் வேர்களை.... "உற்பத்தி துறைகளின் திசைமாற்றத்தை... சமூக அமைப்புகள்... தொலைதொடர்புகளின் மாற்றங்களும், இதரபிறவும்" என்பதில் வேரூன்றி இருப்பதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் ஒரு மிக முரண்பட்ட செயல்முறையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். சமூக கோளத்தில் திசைமாற்றம் (புதிய தேசிய அரசுகள், பிராந்திய நலன்களின் உருவாக்கம், பிரிவினைவாத அரசியல், இதர பிறவற்றின் உருவாக்கம்) என்பது செல்வாக்குப்பெற்ற போக்காக தோன்றுகிறது என்பது உண்மையாக இருப்பினும், இருபதாம் நூற்றாண்டும் கூட அறிவின் இணக்கத்தின் மீதும், மனிதத்தன்மையின் ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பின் மீதும் மாபெரும் தாவல்களைக் காட்டி இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், நுண்திட (MICROSCOPIC PHYSICAL) செயல்முறையின் (MICRO PHYSICS) உள்ளார்ந்த அறிவுடன் மட்டுமே, பிரபஞ்ச (விண்ணியல் பௌதீகம்) அபிவிருத்தியின் ஓர் ஆழ்ந்த புரிதல் சாத்தியமாகும் என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் பல பிரிவுகளில் முழுமையாக்கம் (INTEGRATION) மற்றும் ஒன்றுபடுத்துதல் (ASSIMILATION) ---எடுத்துக்காட்டாக இயற்பியல் மற்றும் கணிதம்---மீதான போக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உலக மக்களை ஒன்றுபடுத்துவதற்கான திறன், முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு கணிணி மற்றும் இணைய தொலைதொடர்பின் அறிமுகத்தால் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி ஏற்படுத்திய மேதையான லியோனார்டோ டாவின்சி அவருடைய புதிர்களில் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்: "மிக தூர நாடுகளில் இருந்தும் மக்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் பதில் கூறிக் கொள்ளவும் கூடிய காலம் வரும்." லியோனார்டோவின் கனவு 600 ஆண்டுகளுக்கு பின்னர் நனவாக வேண்டுமானால், அதுவொரு தொழில்நுட்ப பணியால் மட்டும் முடியாது, அது சமூகம் சார்ந்தது---அதாவது, முதலாளித்துவ அமைப்புமுறையின் உற்பத்தியில் காணப்படும் சமூக சமத்துவமின்மையை தாண்டுவதன் மூலமாக தான் எட்டப்பட முடியும்.

சக்திவாய்ந்த புறநிலை நிகழ்வுபோக்குகள், மனிதகுலத்தை ஒன்றிணைக்கப் பணியாற்றி வருகின்றன. ஒரு புதிய சர்வதேச சோசலிச சமூகத்தை நோக்கி நகர்ந்து வரும் மனிதகுலத்திற்கு முன்னால் இருக்கும் முக்கிய சித்தாந்த தடையானது, வரலாற்று பாடங்கள் மீதிருக்கும் குழப்பம் மற்றும் குழுவாக பிரிந்திருக்கும் சமூக நலன்களின் மீதான வெறுப்பு ஆகியவற்றில் வெளிப்படுகிறது---இந்த இரண்டு ஆக்கக்கூறுகளும் பின்நவீனத்துவ பள்ளியின் சிந்தனையாளர்களினால் சக்திவாய்ந்தமுறையில் பிரதிபலிக்கப்படுகின்றன. ஓர் இறுதி புள்ளி: ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாறில் இருந்து அவருடைய மெய்யியல் உலக கண்ணோட்டத்தைப் பெறுவதில் இருந்தும், "அமைச்சகத்தில் இருந்து புரட்சிக்கு" என்ற ஸ்ராலினிசத்தின் படைக்கல சாலையில் இருந்து ஓர் ஒப்புமையை நிறுவுவதில் இருந்தும் தீர்மானித்தைப் பெறுவது முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்றது என்று உங்கள் கடிதத்தின் இறுதியில் நீங்கள் எழுதுகிறீர்கள். மெய்யியல் உலகப்பார்வை பிரச்சினைக்கு சடவாத அணுகுமுறை என்பதற்கும், ஸ்ராலினிசத்தின் பக்குவமடையாத தன்மைக்கும் நிச்சயமாக எதுவும் பொதுவான விஷயம் கிடையாது. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவர் கொண்டிருக்கும் மெய்யியலுக்கும் தொடர்பு இல்லை என்பதையா இது குறிக்கிறது? ஆடிகளை துல்லியமாக தேய்த்து பளபளப்பாக்குவது தான் டச்சு மெய்யியலாளர் ஸ்பைனோசாவின் தொழில். இந்த ஆடிகள் தான் பிரபஞ்சத்தை உள்ளார்ந்து பார்ப்பதற்கான முதல் தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்பட்டன. இந்த உண்மை அவர் உருவாக்கிய மெய்யியலோடு எதையாவது கொண்டிருந்ததா?---நான் அப்படி தான் நினைக்கிறேன். என்னால் தொடர்ந்து சொல்ல முடியும்: கண்ணாடிகளைப் பற்றி அபாரமான ஆய்வுக்கட்டுரைகளை டெஸ்கார்டெஸ் எழுதினார், லையிப்னிஸ் differential calculu -ஐ (கணிதத்தின் ஒருபிரிவு) உருவாக்கினார், கான்ட் இந்த பிரபஞ்சம் பற்றிய அவரின் சொந்த தத்துவத்தை உருவாக்கினார். இந்த மிகச்சிறந்த அறிவொளி சிந்தனையாளர்கள் அனைவரும் விஞ்ஞான அபிவிருத்திக்கு ஆழமான நலனில் கவனம் செலுத்தினார்கள், மேலும் அவர்களின் சொந்த சுயாதீனமான பங்களிப்பையும் அளித்தார்கள்.

விஞ்ஞானத்துடனான இந்த விஷயம், நேரடியாக அவர்களுடைய மெய்யியல் கண்ணோட்டத்தை பிரதிபலித்தது, மற்றும் அதனுடன் இணைந்திருந்திருந்தது. புத்திஜீவித மோசடிகள் என்ற புத்தகம் ஒன்றை தெளிவுபடுத்தி இருக்கிறது என்றால், அது பின்வரும் விஷயத்தைத் தான் தெளிவுபடுத்துகிறது: அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு அது தொடர்புபட்டிருக்கிறது, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு பின்நவீனத்துவவாதிகளின் தரப்பில் முற்றிலுமான நிராகரிப்பும், எதிர்ப்புமே இருக்கிறது. இது அவர்களின் மெய்யியல் உலக கண்ணோட்டத்தை தாங்கி நிற்கவில்லையா?---நான் அப்படி தான் நினைக்கிறேன். ரஷ்ய எழுத்தாளர் இயன்கோ இனால் மேற்கோளிட்டுக் காட்டப்பட்ட ஜேர்மன் மெய்யியல்வாதி ஃபிஸ்ட்ட இன் சூத்திரத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்: "ஃபிஸ்ட்ட கூறிய வகையில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மெய்யியலின் வகையே நீங்கள் எந்த மாதிரியான மனிதர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொருவரும் அவரின் சொந்த சிந்தனையில் ஏற்கனவே உருவாக்கி கொண்டிருக்கும் கருத்துருவிற்கு ஏற்ற வகையில் ஒரு மெய்யியலால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர் அதையொரு பிரதிபலிப்பில் காண்கிறார், அதாவது முன்னர் இருந்த ஒவ்வொன்றையும் அவர் ஒரு வெற்று போக்கின் வடிவமாகவும், விளக்கமில்லாமல் வெளிப்படுத்தப்பட்ட குறிப்பாகவும் காண்கிறார்." (E.V. Ilyenkov, Leninist Dialectics and the Metaphysics of Positivism). முடிப்பதற்கு முன்னால், "எக்லிக்டிசம்" மற்றும் "உல்லாசபூமி" பற்றிய இரிகரே மற்றும் கிறிஸ்தேவாவின் வாதத்தின் மீதான உங்களுடைய ஆரம்ப கருத்துக்களை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். வெளிப்படையாக கூறுவதானால், எக்லிக்டிச சித்தாந்தத்தில் உங்களின் சொந்த பங்களிப்பின்படி, மொழியிலும், கருத்திலும் முழுமையாக கொச்சையான பயன்பாட்டுடனும், ஆழமான விவாதத்திற்கான சிறிய முயற்சியும் கூட இல்லாமல் புறந்தள்ளும் கருத்துக்களை அளிக்கும் உங்களுடைய போக்கு என்னை எதைக்கூற இட்டுச்செல்கிறது என்றால், என்னுடைய கருத்துப்படி, நீங்கள் இரிகரே மற்றும் கிறிஸ்தேவாவிற்கு மதிப்பளிக்கிறீர்கள், அவர்கள் உங்களுக்கு மதிப்பளிக்கிறார்கள். இருந்தபோதிலும், இந்த சுருக்கமான குறிப்பின் மூலமாக, பின்நவீனத்துவம் என்றழைக்கப்படும் சிந்தனைப்பள்ளிக்கும், மார்க்சிச இயக்கம் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் பாதுக்காக்கப்படும் சிந்தனைகளுக்கும் இடையில் சில வித்தியாசங்களை என்னால் தெளிவுபடுத்தமுடிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

தோழமையுடன்,
ஸ்டீபன் ஸ்டீன்பெர்க் குறிப்பு:

புத்திஜீவித மோசடிகள் என்ற என்னுடைய விமர்சனத்தில் லியோதெர்டின் மாறா-உரைகள் பற்றியும் நான் எழுதி இருக்கிறேன்.

*Luce Irigaray was born in Belguim in the 1930s. She received a Master's Degree from the University of Louvain in 1955. She taught high school in Brussells from 1956-1959. Irigaray moved to France in the early 1960s. In 1961 she received a Master's Degree in psychology from the University of Paris. In 1962 she received a Diploma in Psychopathology. From 1962-1964 she worked for the Fondation Nationale de la Recherche Scientifique in Belgium. After this she began work as a research assistant at the Centre National de la Recherche Scientifique in Paris where she is currently Director of Research.

Born in Sliven, Bulgaria. Kristeva and her sister were enrolled in a Francophone school run by Dominican nuns. Kristeva became acquainted with the work of Mikhail Bakhtin at this time in Bulgaria. Kristeva went on to study at the University of Sofia, and while a postgraduate there obtained a research fellowship that enabled her to move to France in December 1965, when she was 24, She continued her education at several French universities.She trained in psychoanalysis, and earned her degree in 1979. In some ways, her work can be seen as trying to adapt a psychoanalytic approach to the poststructuralist criticism. For example, her view of the subject, and its construction, shares similarities with Sigmund Freud and Jacques Lacan. However, Kristeva rejects any understanding of the subject in a structuralist sense, instead, she favors a a subject always "in process" or "in crisis." In this way, she contributes to the poststructuralist critique of essentialized structures, whilst preserving the teachings of psychoanalysis.