By Stefan Steinberg
6 May 2010
Use this version to print | Send
feedback
புதனன்று கிரேக்க அரசாங்கம் கடந்த ஞாயிறு அறிவித்த சமீபத்திய சுற்று சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து கிட்டத்தட்ட மூன்று மில்லியன் தொழிலாளர்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 100,000 பேர் கிரேக்க தலைநகரான ஏதென்ஸில் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்.
அன்று பல பணிகளும் வணிகங்களும் மூடப்பட்டிருந்தன; இதில் விமானங்கள், துறைமுகங்கள், பள்ளிகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தலங்களும் அடங்கின. செய்தியாளர்களும் பெரும்பாலான மருத்துவமனை தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர்; இது தனியார் துறை கிரேக்கத் தொழிலாளர்கள் பொதுக்கூட்டமைப்பு (GSEE) மற்றும் பொதுத்துறை ஆட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பு ADEDY ஆகியவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் மிகப் பெரிய திரட்டு என்று சிலர் விளக்கிய இந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தூண்டுதல் தன்மை உடைய அதிக பொலிஸ் நிலைப்பாட்டையும் எதிர்கொண்டன. கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ ஒரு வங்கியில் நடந்த குண்டுத் தாக்குதலில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததைப் பயன்படுத்தி அனைத்து எதிர்ப்பையும் தவறு என்று கூறவும் சிக்கன நடவடிக்கைகளை துரிதப்படுத்துவும் பயன்படுத்திக் கொண்டார்.
வியாழனன்று கிரேக்கப் பாராளுமன்றம் கடும் சிக்கன நடவடிக்கைகள்மீது வாக்களிக்க இருக்கிறது. பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட இத்திட்டங்கள் ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதி ஆகியவை கொடுக்கும் 110 பில்லியன் யூரோக்கள் உடன்பாட்டின் ஒரு பகுதி ஆகும். இவற்றில் பொதுத்துறைத் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள், போனஸ்களில் பெரும் வெட்டுக்கள், தனியார் துறைத் தொழிலாளர்கள் ஏராள பணிநீக்கம் செய்வதற்கு இருந்த தடைகள் தளர்த்தப்பட்டது, அரசாங்கப்பணிகள் தனியார்மயம் ஆக்கப்படுவது மற்றும் தொழிலாள வர்க்கத்தை இலக்கு கொள்ளும் பிற்போக்குத்தன வரிகளில் தீவிர அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண தொழிலாளிகள் ஆவர். வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின்மீது பெருகும் வெகுஜன எதிர்ப்பு அதிகரிப்பை பிரதிபலித்தன.—கிரேக்கத்தில் மட்டும் இல்லாது ஐரோப்பா, சர்வதேச அளவில் நடைபெறுவதை எதிர்த்து. மகத்தான அரசாங்கக் கடன்கள் மற்றொரு நிதிய நெருக்கடியை தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன; வர்க்கப் பிரிவுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன.
சர்வதேச நிதிய நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் கொண்டுள்ள பெரும் கவலை --செய்தி ஊடகத்தின் ஆதரவையும் இது பெற்றது-- எதிர்ப்பு இப்பொழுது பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கிகள் பிணை எடுப்பினால் கொண்டுவரப்பட்ட பற்றாக் குறைகளுக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்கக்கூடும் என்பதுதான்.
ஏதென்ஸில் சில எதிர்ப்பாளர்கள் "திருடர்கள், திருடர்கள்" என்று கோஷமிட்டுக் கொண்டு ஒரு பொலிஸ் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்பட்டபோது பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே மோதல்கள் ஏற்பட்டன. மற்ற பல மோதல்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் பொலிஸ் மீது வீசினர். அவர்கள் பதிலுக்கு மிளகாய்ப் பொடி, கண்ணீர்ப்புகை, ஆபத்தளிக்காத அதிர்வு கையெறி குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்
ஏதென்ஸில் Marfin வங்கிக்கு அடையாளம் காணப்படாத சிலர் தீ வைத்து மூன்று வங்கி தொழிலாளர்களை கொன்றனர். உடனே இந்தப் பிற்போக்குத்தன நிகழ்வை பாப்பாண்ட்ரூ பயன்படுத்தி எதிர்ப்பை நெறி தவறியது எனக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த முற்பட்டார்.
"இன்று ஒரு கொலைச் செயலின் பாதிப்பாளர்களாக ஆகிவிட்ட நீதியற்ற வகையில் மூன்று தொழிலாளர்கள் இறந்துவிட்டது பற்றி நாங்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி உற்றோம்" என்று பாப்பாண்ட்ரூ கூறினார். குண்டு எறிதல் மற்றும் எதிர்ப்புக்களுக்கு இடையே கலவையை ஏற்படுத்தும் விதத்தில் "இதற்குத்தான் கட்டுப்பாடில்லாத வன்முறையும் பொறுப்பற்ற அரசியலும் நம்மை வழிநடத்தும் என்று சேர்த்துக் கொண்டார்.
வெட்டுக்கள் தொடரும் என்று பாப்பாண்ட்ரூ வலியுறுத்தினார். தொழிலாளர்கள் ஊதியங்கள் மற்றும் நலன்கள் மீது நடத்தப்படும் முடக்கும் தாக்குதல்கள் "வேலைகளைக் காப்பாற்றும் மற்றும் குடும்பங்கள், வீடுகள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டது" என்று அவர் அறிவித்தார். நிதி மந்திரி ஜோர்ஜ் பாப்பகான்ஸ்டான்டினோ, "ஒரு தப்படி கூடப் பின் வைக்க மாட்டோம்" என்றார்.
வங்கி மீது குண்டு எறிதல் போன்ற வன்முறை நிகழ்வுகளில் பல நேரமும் இருப்பதுபோல், அதற்குப் பொறுப்பானவர்களின் அடையாளங்கள் தெளிவாக இல்லை. முகமூடி அணிந்து செயல்பட்டவர்கள், அனார்க்கிஸ்ட்டுகள் பற்றி பொலிசார் கூறினர். பொலிஸ் தூண்டும் முகவர்களும் தொடர்பு கொண்டிருக்கக்கூடும் – இது கிரேக்க அரசியலில் வாடிக்கையாக நடப்பதுதான். 2 வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில், 2008 கடைசியில் இளைஞர்கள் எழுச்சியின் போது கடைகள், வங்கிகள் உடைக்கப்பட்டு, தீவைக்கப்படுவதில் தொடர்பு கொண்டிருந்த‘அனார்க்கிஸ்டுகளுடன்’ பொலிஸ் நயமுடன் பேசிய காட்சியை கிரேக்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
எதிர்ப்புத் திரட்டு ஏற்படாமலும் அது ஒரு சுயாதீன அரசியல் வெளிப்பாட்டை காணமுடியாமல் செய்வதற்கும் பாப்பாண்ட்ரூ அரசாங்கம் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது. சிக்கன நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்றன; ADEDY, யின் தலைவர் ஸ்பைரோஸ் பாப்பஸ்பைரோஸ் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன் பைனான்சியல் டைம்ஸிடம் தொழிற்சங்கங்கள் நாட்டின் கடன் திருப்பிக் கொடுத்தலுக்கு ஆபத்தளிக்கும் எதையும் செய்யாது என்று கூறினார். டைம்ஸ் கூற்றின்படி, "தொழிற்சங்கங்கள் இயன்றளவு ஒரு நியாயமான முறையில் சிக்கன நடவடிக்கைகள் செலவு பற்றி அழுத்தம் கொடுக்கும், ஆனால் கிரேக்க அரசாங்கம் கடன் கொடுக்க முடியாது என்பதற்கு பந்தயம் கட்டும் ஊகக்கார்களுக்கு உதவத் தயாராக இல்லை என்று திரு பாப்பாண்ட்ரூ கூறினார்"