சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா
SEP candidate Robert Skelton speaks on DM
Digital TV’s "Spotlight"
DM
டிஜிட்டல்
தொலைக்காட்சியின்
"Spotlight" நிகழ்ச்சியில்
சோசலிச
சமத்துவக்
கட்சி வேட்பாளர்
பேசுகிறார்
By our reporter
4 May 2010
Use this version to print | Send
feedback
வெள்ளியன்று
தொலைக்காட்சி
நிகழ்ச்சி "Spotlight"
ல்
கலந்துகொள்ளுமாறு மான்செஸ்டர்
மத்தியத்
தொகுதியின் சோசலிச
சமத்துவக்
கட்சி
வேட்பாளர் ரோபர்ட்
ஸ்பெல்டன்
அழைக்கப்பட்டார்.
"Spotlight"
நிகழ்ச்சி டி.எம்.டிஜிட்டல்
தொலைக்காட்சியால்
தயாரிக்கப்படுகிறது
அதன்
நிகழ்ச்சிகள் இங்கிலாந்து,
ஐரோப்பா,
மத்திய
கிழக்கு, ஆபிரிக்கா மற்றும்
ஆசியா
ஆகிய
பகுதிகளில் ஸ்கை
(Sky) அரங்கு
மூலம்
கேபிள், செயற்கைக்
கோள்
ஊடாக
ஒளிபரப்பபடுகிறது.
வாரத்திற்கு ஏழு
நாட்களும்
ஒளிபரப்பாகும்
இந்த
நிலையக் காட்சிகள்,
இங்கிலாந்தில் 7.1
மில்லியன் டிஜிட்டல்
செயற்கைக்
கோள்
ஒளிபரப்புப் பெறும்
வீடுகளிலும்,
ஆசியாவில் 30
மில்லியன்
வீடுகளிலும்
பார்க்கமுடியும்.
ரோபர்ட்
ஸ்கெல்டன் (இடது)
மற்றும் Spotlight
நிகழ்ச்சி தயாரிப்பாளர்
டெரிக்
மார்க்கும்
செய்தி
ஊடகம்
மூன்று முக்கிய
கட்சிகளைப்
பற்றியே
எழுதி, பேசித்
தீர்க்கும்
நிலையில்,
ஸ்பாட்லைட் சோசலிச
சமத்துவக்
கட்சி
மற்றும் இதேபோல்
இரு
சிறு கட்சி
வேட்பாளர்களை
அழைத்த
முடிவு அசாதாரணமானது,
வரவேற்கத்தக்கது,
இதற்காக
இந்த நிலையம்
பாராட்டப்பட
வேண்டும்.
ஸ்பாட்லைட்டின்
நிகழ்ச்சி தயாரிப்பாளர்
வழங்கிய
ஒரு மணி
நேர
வினா விடை
நேரடி
நிகழ்ச்சியில்
ஸ்கெல்டன்
பங்கு பெற்றார்.
மற்ற
இரு
வேட்பாளர்கள், பசுமைக்
கட்சியின்
கேல் ஓ
டோனாவன்
மற்றும்
ரெஸ்பெக்ட்டின் மகம்மது
ஜுல்பிகாருடன்
இவர்
பங்குபற்றினார்.
வேட்பாளர்களை
அவர்களுடைய
கட்சியின்
நிலைப்பாடு பற்றி
ஒரு
குறுகிய
அறிக்கையை அளிக்க
முடியுமா
என்று
மார்க் கேட்டார்.
ஓ
டோனோவன்
பசுமைக் கட்சியின்,
"புதுப்பிக்கப்படும்
தொழில்நுட்பத்
துறையில்
ஒரு மில்லியன்
வேலைகளுக்கான
திட்டங்கள்
மற்றும்
எங்களுடைய பொதுச் சேவைகள்,
பொதுப் போக்குவரத்து
ஆகியவற்றைக்
பாதுகாத்தல்,
வடமேற்குப்
பகுதியில்
இவற்றுள் 100,000 வேலைகள்
உருவாக்கல்"
ஆகியவை
பற்றிப் பேசினார்.
பசுமைக்கட்சியின்
விஞ்ஞாபனத்தைக்
காண்கையில்
பொதுச் சேவைகளைப்
பாதுகாத்தல்
போன்ற சில
கொள்கைகள் "பரந்த
அளவில்
தொழிற்
கட்சியுடையதை, தற்போதைய
அரசாங்கத்தின்
கருத்தை"
ஒத்து இருப்பது
போல்
தோன்றுகிறது
என்று
மார்க் தெரிவித்தார்.
ஸ்பாட்லைட்
மான்செஸ்டர்
கேள்வி-பதில்
நிகழ்ச்சியில்
ரோபர்ட்
ஸ்கெல்டன்
சோசலிச
சமத்துவக்
கட்சி வேட்பாளர்
ஸ்கெல்டன்
இதன் பின்,
"நன்று,
எங்கள்
கட்சியின் பெயரே
நாங்கள்
கொண்டுள்ள
நிலைப்பாட்டைச்
சுருக்கமாகக் கூறுகிறது.
நாங்கள்
ஒரு
சோசலிசக் கட்சி,
நாங்கள்
ஒரு
சர்வதேசக் கட்சி.’
என்றார்
" நாம்
அனைவரும்
ஒரு
முதலாளித்துவ சமூகத்தில்
வாழ்கிறோம்.
இதன்
பொருள் சமூகத்தில்
எடுக்கப்படும்
அனைத்து
முடிவுகளும், செய்யப்படும்
அனைத்துச்
செயல்களும்,
பெரியளவிளான
செல்வம்,
வளங்கள்
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டிருக்கும் ஒரு
மிகச்சிறுபான்மையினரின்
ஆணையில்
நடைபெறுகிறது.
ஆனால்
பேரளவான வறிய
நிலையானது
எஞ்சிய
மக்களிடையே பெருகி
வருகிறது
என்பதாகும்."
என்று அவர்
தொடர்ந்து
கூறினார்.
" எங்கள்
கட்சி
முதலாளித்துவ
முறைக்குப்
பதிலாக
இலாபத்திற்கு என்று
இல்லாமல்
மனிதத்
தேவைகளை பூர்த்தி
செய்யும்
ஒரு சோசலிச
சமூகத்தை
நிறுவ
முயல்கிறது. தொழிற்
கட்சி,
லிபரல்
மற்றும் டோரி
என்று
மூன்று
முக்கிய கட்சிகளும்
பெரிய
வங்கிகள்,
பெருநிறுவனங்களுக்குத்தான்
ஆதரவு கொடுக்கின்றன.
அவை
பெருவணிகத்தை
பிரதிநிதிப்படுத்துகின்றன.
" எங்கள்
கட்சி
சமூகத்தின்
பரந்த
பெரும்பான்மையான, உழைக்கும்
மக்களுக்கு
உறுதுணையாக
நிற்கிறது.
இவர்கள்தான்
கடந்த
ஆண்டு ஏற்பட்ட
வங்கிகளின்
பிணை
எடுப்பின் பெரும்
சுமைக்கு
விலை
கொடுக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
" இந்தப்
பொருள்
பற்றி ஒரு
கருத்தை
விரிவாகக்
நான் கூறலாம்
என்றால்,
நான்
கூறுவதை மிக
விளக்கத்துடன்
சொல்லுவதற்கு சமீபத்தில்
சண்டே
டைம்ஸ் பணக்காரர்
பட்டியல்
ஒன்றை
வெளியிட்டது. இது
கடந்த
ஆண்டில்
உயர்நிலையில் உள்ள
1,000 பேர்
தங்கள்
செல்வத்தை 30 சதவிகிதம்
அதிகமாக்கிக்
கொண்டுள்ளனர்
என்றும்
இப்பொழுது அது
மொத்தத்தில் 330
பில்லியன்
பவுண்டுகளாக உள்ளது
என்றும்
வெளியிட்டுள்ளது.
இது ஆயிரம்
பேருக்கு மட்டும்தான்
உரியது,
ஆனால் அது
தேசியக்
கடனில்
மூன்றில் ஒரு
பங்கை
குறைத்துவிடப்
போதுமானது.
" இது
நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
வேலை
இழப்புக்கள்,
ஊதிய
வெட்டுக்கள், தங்களுக்குரிய
சேவைகள் மீதான தாக்குதல் நிலையிலும் தங்கள்
வீடுகளை
இழந்த நிலை,
கல்வி,
சுகாதாரம்
மற்றும் அவர்களுடைய
பொதுநல,
ஓய்வூதியங்கள்
மீது
தாக்குதல்கள் நடத்தப்பட்ட
போது
நிகழ்ந்துள்ளது.
" இந்நிலை
நிராகரிக்கப்பட
வேண்டும்
என்று நாங்கள்
கூறுகிறோம்.
உழைக்கும்
மக்கள், இளைஞர்கள்,
மாணவர்கள்
இதற்காக
தியாகம் எதுவும்
செய்யக்கூடாது என்று மிகத்
தெளிவாக
சோசலிச
சமத்துவக் கட்சி
தெரிவிக்கிறது.
இது
ஒன்றும் அவர்களால்
ஏற்பட்டது
அல்ல.
சமூகத்தை நடத்தும்
ஒட்டுண்ணித்தன
அடுக்கினால்தான்
இது
முற்றிலும் ஏற்பட்டது.
அவர்கள்தான்
பிரச்சினையை
ஏற்படுத்தினர்."
இதன்பின்
மார்க்,
இங்கிலாந்தில்"தொழில்
துறை
குறைந்து
வருவது" பற்றி
சோசலிச
சமத்துவக்
கட்சி என்ன
திட்டமிட்டுள்ளது
என்பது
பற்றி இன்னும்
விரிவாக்கூறுமாறு
கேட்டு,
கட்சியின் விஞ்ஞாபனத்தில்
இருந்து
அவர் இது
பற்றி
மேற்கோளிட்டிருந்தார்.
ஸ்கெல்டன்
கூறினார்: "பிரிட்டனில்
உள்ள
மான்செஸ்டர்,
ஷெபீல்ட்,
பேர்மிங்ஹாம் போன்ற
நகரங்களிலும்
தொழில்துறை
குறைப்பு
மகத்தான முறையில்
நடந்து
கொண்டிருக்கிறது
என்பதைத்தான்
நாங்கள்
விளக்கியுள்ளோம்.
நூறாயிரக்கணக்கான
உற்பத்தித் துறை
வேலைகள்
இழக்கப்பட்டு
விட்டன.
மேலும் இது
இங்கிலாந்தில்
மட்டும்
நடப்பது இல்லை.
இது
ஒரு
சர்வதேச நிகழ்வுபோக்கு
ஆகும்.
எங்கள்
இணைய தளமான
உலக
சோசலிச
வலைத் தளத்தில்,
அமெரிக்காவில்
உள்ள
டெட்ரோயிட்டின் சமூகப்
பிரச்சினைகள்
பற்றி
நாங்கள் விரிவாக
எழுதியுள்ளோம்.
தாங்கள்
கட்டமைத்த, முந்தைய
தலைமுறைத்
தொழிலாளர்கள்
அரும்பாடுபட்டுக்
கட்டமைத்த
தொழில்கள் முற்றிலும்
அழிக்கப்படுவதை
தொழிலாளர்கள்
கண்டுள்ளனர்.
" எனவே
இந்த
வேலைகளுக்கு
பதிலாக
மாற்று வேலைகள்
இல்லாத
நிலைமையில்
நாம்
வந்துள்ளோம். இன்றைய
பிரிட்டிஷ்
பொருளாதாரத்தின்
பெரும்பகுதி
நிதிய,
பணித் துறைகளைத்
தளமாகக்
கொண்டுள்ளது,
மில்லியன்
கணக்கான மக்கள்
வேலையில்லாத
வருங்காலத்தை
எதிர்கொள்ள
இருக்கின்றனர்.
" செல்வந்தர்கள்
செல்வத்தை
எடுத்து
இந்த நகரங்களை
மீண்டும்
கட்டும்
மகத்தான பொதுப்
பணித்திட்டங்களுக்கும்,
நூறாயிரக்கணக்கான
வேலைகளை
தோற்றுவிப்பதற்கும்,
அனைவருக்கும் கௌரவமான
வாழ்க்கைத்
தரத்திற்கும்
அந்நிதி
ஈடுபடுத்தப்பட வேண்டும்
என்று
நாங்கள்
அழைப்பு விடுகிறோம்."
வாக்களார்கள்
எழுப்பும்
முக்கிய பிரச்சினைகள்
என்ன
என்று
மார்க் கேட்டார்.
நிதிய
நெருக்கடி,
வரவு-செலவுப் பற்றாக்குறைகள்தான்
பிரச்சினைகள்
என்று ஓ’டோனோவன்
கூறி, "மக்களுக்குத்
தேவையான
முக்கிய
பொதுப் பணிகள்மீது
நாம்
குவிப்புக்
காட்ட
வேண்டும்" என்றும்
தெரிவித்தார்.
ஸ்கெல்டன்
விடையிறுத்தார்: "நீங்கள்
கூறியுள்ளது
பற்றி
மாபெரும் அதிருப்தி
எல்லாரிடமும்
உள்ளது.
எங்களிடம் மக்கள்
கூறுவதுள்
முதலாவது "இவர்கள்
எல்லோரும்
ஒன்றுதான்.
ஒரே
நிலைப்பாட்டைத்தான்
கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையே
எந்த
வேறுபாட்டையும்
நான்
காணவில்லை. செல்வந்தர்கள்
இன்னும்
பெரும்
செல்வந்தர்களாகிக்
கொண்டிருக்கின்றனர், ஏழைகள்
இன்னும்
வறிய
நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர்.`
" அந்த
முடிவை
மக்கள்
எடுப்பதும் சரியானதே.
ஏனெனில் இந்த
மூன்று
கட்சிகளும் ஒரே
மாதிரியாகத்தான்
உள்ளன.
எனவேதான் நாங்கள்
இத்தேர்தல்
முறை
முற்றிலும் மோசடியானது
என்று
கூறுகிறோம்.
இவர்கள்
நடைமுறைப்படுத்த வேண்டிய
செயற்பட்டியல்
ஏற்கனவே
முடிவு
செய்யப்பட்டுவிட்டது. மக்கள்தான்
கடந்த
ஆண்டு பிணை
எடுப்பிற்குக்
கொடுக்கப்பட்ட
ஒரு
டிரில்லியன் பவுண்டுகளுக்கு
விலை
கொடுக்க
வேண்டும் என்று
அவர்கள்
வலியுறுத்துகின்றனர்.
" நாங்கள்
அதை
முற்றிலும்
இப்பொழுது
நிராகரிக்கிறோம். ஒரு
சோசலிச
மாற்றிட்டை
நாங்கள்
திட்டமிட்டு
முன்வைக்கும்போது அதற்கு
நல்ல
வரவேற்பு
இருக்கிறது."
பசுமைக்
கட்சி
பொதுப்பணிகளை பாதுகாக்க
முன்னுரிமை கொடுக்கும்
என்னும்
ஓ’டோனாவன்
கருத்தைப்
பற்றி
கவனத்தை ஈர்த்து,
ஸ்கெல்டன்
கூறினார்: "நம்
பொதுப்
பணிகள்
காப்பாற்றப்பட வேண்டிய
தேவை
பற்றி கேல்
சுட்டிக்
காட்டினார்.
நன்று, இது
லிபரல்கள்,
டோரிகள்
மற்றும் தொழிற்
கட்சிகள் பொதுப்
பணிகளைத்
தாக்கி, மக்கள்
வாழ்வதற்கு தேவையான
சுகாதாரம், கல்வி
ஆகியவற்றை
வீணடிப்பதோடு மட்டும் இல்லை.
அயர்லாந்தில்
அங்குள்ள
ஆளும் கூட்டணி
பசுமைக்
கட்சியுடன் சேர்ந்து அடக்கியது,
கடந்த
டிசம்பர்
மாதம் 4 பில்லியன்
பவுண்டுகள்
மொத்தக்
குறைப்பை ஏற்டுத்தியது.
பொதுத்துறையில் உள்ள
300,000 தொழிலாளர்கள்
ஊதியக்குறைப்பாக 1
பில்லியன்
பவுண்டுகளை எடுத்துக்கொண்டனர்.
" எனவே
எங்கள்
கட்சி
ஒன்றுதான் ஒரு
சோசலிச மாற்றீட்டை
முன்வைக்கிறது.
செல்வம்
இதற்காக பறித்தெடுத்துக்
கொள்ளப்பட
வேண்டும்
என்கிறது. செல்வந்தர்களைத்
தொடர்ந்து
நீடித்து
வைக்க இயலாது.
பெரும்
செல்வந்தர்களும்
அவர்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சிகளும் ஆணையிடும்
சுமையை தாங்குவது என்பதை
சமூகம்
இனியும்
பொறுத்திருக்காது."
இதற்கு
பதிலளிக்கையில்
ஓ’டோனோவன்
அயர்லாந்தின்
பசுமைக்
கட்சிக்கும் இங்கிலாந்தின்
பசுமைக்
கட்சிக்கும்
எந்தவிதத்
தொடர்பும் இல்லை
என்றார். "அது
முற்றிலும்
வேறான ஒரு
கட்சி"
என்றார்.
அயர்லாந்து
மற்றும்
இங்கிலாந்தின் பசுமைக்
கட்சிகள்
சிந்தனைப்
போக்கில் இரட்டையர்கள்
போல்
ஆகும்.
இரண்டுமே ஐரோப்பிய
பசுமைக்
கட்சியின்
உறுப்பு அமைப்புக்கள்,
ஐரோப்பிய
பாராளுமன்றத்தில்
பசுமைவாதிகள்-ஐரோப்பிய
சுதந்திரக்
கூட்டணியின்
உறுப்பினர்கள்.
தன்னுடைய
பதில்களில்
ஜுல்பிகர்
தெளிவற்ற முறையில்
"மனித
சமூகத்தை"
எதிர்கொண்டுள்ள
பிரச்சினைகள், போர்,
வறுமை,
சுகாதார,
கல்வித் துறைகளில்
திட்டமிடப்படும்
குறைப்புக்கள்
ஆகியவை
பற்றிப் பேசினார்.
இந்த
பெருவணிகத்
தலைமையிலான
மூன்று
கட்சிகளும் எதிர்கொள்ளும்
பணிகள்
பற்றி
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள்
பற்றி எந்த
பகுப்பாய்வையும்
செய்யாமல்,
அவர்
இத்தாக்குதல்களை நடத்திய
தொழிற்
கட்சி
அரசாங்கத்தின் மீதும்
குறிப்பிடத்தக்க
வகையில்
குறை எதுவும்
கூறவில்லை.
" எவருக்கும்
பெரும்பான்மை
இல்லாப்
பாராளுமன்றம்" என்று
ரெஸ்பெக்ட் கட்சி ஒரு
அறிக்கையைக்
கொடுத்துள்ளது.
அதில்
தாங்கள் போட்டியிடும்
மூன்று
தொகுதிகளை
அது வென்றால்,
பின்
ஒரு
கூட்டணி அரசாங்கம்
அமைப்பதற்கு
தொழிற்
கட்சியுடன் சேருவதற்கு
ஒரு
உடன்பாட்டைக்
கொள்ளும்
என்று கூறப்பட்டுள்ளது.
" அரசாங்கத்திற்கு
ஆதரவு
தர நாங்கள்
பரிசீலிக்க
உள்ள
மூன்று குறைந்தநிபந்தனைகள்"
என்று
அது
பட்டியல் இட்டுள்ளது.
"வீடுகள்
கட்டுவதற்கு
பெரும் சபை", "சட்டவிரோத,
பொருளற்ற
போர்களில்
இருந்து விரைவில்
பிரிட்டிஷ்
துருப்புக்களை
திரும்பப்
பெறுதல்", மற்றும்
"நம்முடைய
அரசியலமைப்பில்
ஒரு தீவிர
வகைப்படுத்துவதற்காக,
நியாயமான
விகிதாசார
வாக்கு முறை,
நியமிக்கப்பட்டுள்ள
பிரபுக்கள்
மன்றத்தை
அகற்றுதல்" என்பவையே
அவைகள்.
இத்தகைய
கொள்கைகளுக்கு
ஆதரவளித்துச்
செயல்படுத்துவதற்கு
மாறாக,
தொழிற் கட்சி
பதவியை
இழக்கவே
விரும்பும்.
Respect 2004 ல்
நிறுவப்பட்டது.
ஈராக்கில்
அமெரிக்கத் தலைமையிலான
சட்டவிரோதப்
படையெடுப்பிற்கு
தொழிற்
கட்சி அரசாங்கத்திற்கு
எதிர்ப்பு
என்ற
அடிப்படை என
கூறப்பட்டது.
இதன்
முக்கிய தலைவர்
வெளியேற்றப்பட்டிருந்த
தொழிற் கட்சி
எம்.பி.யான
ஜோர்ஜ்
காலோவே
ஆவார். ஆறு
ஆண்டுகளுக்குப்
பின்னர்
காலோவே தன்னுடைய
போர்
எதிர்ப்பு
திறன்களைப் பயன்படுத்தி
தனக்கு
ஒரு
தேர்தல் வெற்றி
வாய்ப்பு
கிடைக்குமா
என
பார்க்கிறார். அது
தொழிற்
கட்சி
அரசாங்கத்தின் உயர்
மட்டத்தில்
மீண்டும்
வருவதற்கு அவருக்கு
உதவும்.
மான்செஸ்டர்
மக்களுக்கு
சோசலிச
சமத்துவக் கட்சி
என்ன
அளிக்கக்கூடும்
என்று
விடையிறுக்கையில்,
மான்செஸ்டர் மத்தியத்
தொகுதியில்
நிலவும்
அதிக வறுமை
நிலையைக்
கருத்தில்
கொண்டு, "இது
தொழிற்
கட்சி
அரசாங்கத்தின் கடைசி
13 ஆண்டுகளின்
விளைவு.
மற்ற இடங்களில்
இருப்பது
போலவே
மான்செஸ்டரிலும் நாங்கள்
திட்டமிட்டு
ஒரு
அவசரகால செயலாக்கத்தை
முன்வைக்கிறோம். அது
இந்த
நகரங்களை மறு
கட்டமைக்கவும்,
பள்ளிகள்,
மருத்துவமனைகள் மற்றும்
கௌரவமான
வேலைகளை
அளிக்கவும் ஏற்றவிதத்தில்
இருக்கும்"
என்றார்.
" அது
ஒன்றுதான்
சமத்துவமின்மை,
வறுமையைச்
சமாளிக்கக்கூடிய வழியாகும்"
ஒவ்வொரு
வேட்பாளரையும்
தலைவர்கள்
பொருளாதாரத்தைப் பற்றி
நடத்திய
மூன்றாவது,
இறுதி
விவாதம் பற்றி
என்ன
நினைத்தார்
என்று
மார்க் கேட்டார்.
அது
முதல்நாள் மாலையில்
ஒளிபரப்பாகியிருந்தது.
ஸ்கெல்டன் , "சில
நாட்களுக்கு
முன்புதான் Iinstitute for Fiscal
Studies மூன்று
முக்கிய
கட்சிகளும் தாங்கள்
செயல்படுத்த
உள்ள
வெட்டுக்கள்,
செயல்படுத்தும்
கட்டாயத்தில் இருக்கும்
வெட்டுக்கள்
பற்றி
உண்மையைக் கூறவில்லை
என்று
தெரிவித்த
அறிக்கையை வெளியிட்டது."
என்று
குறிப்பிட்டார்.
ஒவ்வொரு
வேட்பாளரும்
விகிதாசார
பிரதிநிதித்துவ வாக்களிப்பு
முறை
பற்றி என்ன
நினைக்கிறீர்கள் என்று
கேட்ட
விதத்தில்
மார்க் நிகழ்ச்சியை
முடித்தார்.
ஸ்கெல்டன்
கூறினார்: "விகிதாசார
முறைப்
பிரதிநிதித்துவம்
ஒரு
நியாயமான முறை, ஆனால்
இன்னும்
அடிப்படையில்,
நாட்டின்
உயர்மட்ட ஒரு
சதவிகிதம்
அனைத்து
செல்வத்தையும் கொண்டு,
சமூகத்திற்கான
அனைத்து
முடிவுகளையும்
எடுக்கும்போது,
மற்றவர்களுக்கு
பிரதிநிதித்துவமே இல்லை
என்ற
நிலையில்,
உண்மையான ஜனநாயகம்
எப்படி
இருக்க
முடியும்?’ |