செவ்வாயன்று,
கிரேக்கத்தின்
மிகப் பெரிய
செலவு
வெட்டுக்களானது நாட்டின்
கடன்
நெருக்கடியைத்
தீர்ப்பதற்குப்
போதாது
என்ற அச்சங்களால்
உந்தப்
பெற்று
உலகப் பங்குச்
சந்தைகள்
தீவிரமாக
சரிந்தன. இது
மற்றய
ஐரோப்பிய
நாடுகளுக்கும் பரவும்
என்ற
அச்சறுத்தலைக்
கொண்டுள்ளது.
செவ்வாயன்று
அரசாங்க
ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மற்றும் அதைத்
தொடர்ந்து
பொது,
தனியார் துறைத்
தொழிலாளர்கள்
புதனன்று
நடத்த இருக்கும்
பொது
வேலைநிறுத்தம்
ஆகியவை
கிரேக்கத்திலும் கண்டம்
முழுவதும்
சமூக
நலன்களுக்கு இடையே
உள்ள
மோதலை
அடிக்கோடிட்டுக்
காட்டுகின்றன. ஐரோப்பா
மற்றும்
சர்வதேச
அளவில் உள்ள
நிதிய
உயரடுக்கு, PASOK இன்
பிரதம
மந்திரி
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின்
கிரேக்க அரசாங்கத்தின்
உதவியுடன்
முன்னோடியில்லாத
வகையில்
கடும் சிக்கன
நடவடிக்கைகளைக்
கோருகிறது.
பாப்பாண்ட்ரூவுடன்
சேர்ந்து நிற்கும்
தொழிற்சங்கங்கள்
பெரும்
மக்கள் எதிர்ப்பைக்
கட்டுப்படுத்த
திணறுகின்றன.
ஞாயிறன்று
ஐரோப்பிய
அரசாங்கங்களும் சர்வதேச
நாணய
நிதியமும்
கொடுக்க இருக்கும்
110 பில்லியன்
யூரோக்களுக்கு
ஈடாக
கிரேக்க தொழிலாளர்களை
"பெரும்
தியாகங்கள்"
செய்ய
வேண்டும் என்னும்
திட்டங்களை
பாப்பாண்ட்ரூ முன்வைத்தார்.
இவற்றில்
பொதுத் துறைத்
தொழிலாளர்களுக்கு
தீவிர ஊதிய
மற்றும்
பிற
நலன்கள் குறைப்புக்கள்,
தனியார்
துறையில்
பெரும் பணி
நீக்கத்திற்கு
இருந்த
தடைகள் தளர்த்தப்படல்,
ஓய்வூதிய
வயதை
அதிகரித்தல், போக்குவரத்து,
பிற
அரசாங்கப்
பணிகள் தனியார்
மயமாக்கப்படல், வருமானம்
குறைந்த பொருட்களுக்கான
விற்பனை வரிகள்
அதிகரித்தல்
ஆகியவை
அடங்கியுள்ளன. வியாழன்
அல்லது
வெள்ளியன்று
கிரேக்கப்
பாராளுமன்றத்தில் இந்த
நடவடிக்கைகள் பற்றிய
சட்டங்கள்
வாக்களிக்கப்பட
உள்ளன.
இச்செலவின
வெட்டுக்கள்
தீவிர
பொருளாதார சுருக்கத்தை
தூண்டிவிடும்.
அதில் இந்த
ஆண்டு
மொத்து உள்நாட்டு
உற்பத்தி 4
சதவிகித
சரிவைக் காணும்
என்று
எதிர்பார்ப்பதும்
அடங்கியுள்ளது.
இதன்
பொருள் நாடு
முழுவதும்
ஏராளமான
பணிநீக்கங்கள் என்பவை
இருக்கும்.
ஐரோப்பா
மற்றும்
வாஷிங்டனில் உள்ள
அரசாங்க
அதிகாரிகள்
இத்தாக்குதலுக்கு
ஒப்புதல்
கொடுத்துள்ளனர். ஞாயிறன்று
அமெரிக்க
ஜனாதிபதி
பாரக் ஒபாமா—நிதிய
முறைக்கு
உலகந்தழுவிய
பிணை
எடுப்பிற்கு முன்னின்றவர்—பாப்பாண்ட்ரூவிடம்
தான் "பெரும்
விழைவுடைய"
வெட்டுக்கள்
திட்டத்திற்கு
வரவேற்பு
கொடுப்பதாகக் கூறினார்.
அதே
நேரத்தில்
ஜேர்மனியின் பொருளாதார
மந்திரி Rainer Bruederke
கடன்கள்
அடுத்த
மூன்று ஆண்டுகளுக்கு
தேவையான
கிரேக்க
கடன்களை அடைக்கப்
போதுமானதாக
இராது
என்று எச்சரித்தார்.
தன்னுடைய
பங்கிற்கு
ஐரோப்பிய மத்திய
வங்கி
ஞாயிறன்று "பெரும்
விழைவுடைய
நிதியச்
சரிசெய்யும் தன்மை,
விரிவான
கட்டுமானச்
சீர்திருத்தங்களை"
புகழ்ந்து
ஒரு அறிக்கையை
வெளியிட்டது.
அதே
நேரத்தில் "கிரேக்க
பொது
அதிகாரிகள்
திட்டத்தின்
இலக்குளை
அடைவதற்கு பொருத்தமான
இன்னும்
அதிக
நடவடிக்கைகளை எடுக்கத்
தயாராக
இருக்க
வேண்டும்" என்றும்
எச்சரித்தார்.
கிரேக்கத்தின்
கொந்தளிப்பு
ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும்
பங்குச்
சந்தைகளை சரித்தன.
குறிப்பாக
பாதிக்கப்பட்டவை
வங்கிகளில்
பங்குகளின்
மதிப்பு
ஆகும். இவைதான்
கிரேக்கம்
இன்னும்
மற்ற நாடுகளுக்கு
கடன்கள்
பலவற்றை
கொடுத்துள்ளன. ஏதென்ஸில்
சந்தை 6.7
சதவிகிதம்,
ஸ்பெயினில் 4.3
சதவிகிதம்,
போர்த்துக்கல்லில் 4
சதவிகிதம்
என்று சரிந்தன.
பிரிட்டன்,
ஜேர்மனி
மற்றும் பிரான்ஸில்
சந்தைகள் 2.6
முதல் 3.3
சதவிகிதம் வரை
சரிந்தன.
அட்லான்டிற்கு
அப்பால், Dew Jones Industrial
Average 224 புள்ளிகளுக்கு
மேல், 2
சதவிகிதம்
குறைந்தது. Nasdaq
கிட்டத்தட்ட மூன்று
சதவிகிதம்
குறைந்தது.
உன்னிப்பாகக்
கவனிக்கப்பட்ட
சந்தையின் மாறும் இயல்புத்
தன்மையின்
நடவடிக்கை 18 சதவிகித
உயர்வைக்
காட்டியது.
இது
வரவிருக்கும் நாட்களிலும்,
வாரங்களிலும்,
இன்னும்
அதிக சரிவுகள்
வரும்
என்று
முதலீட்டாளர்கள்
எதிர்பார்ப்பதை சுட்டிக்
காட்டுகிறது.
அரசாங்கக்
கடன்
நெருக்கடி கிரேக்கத்திற்கு
அப்பாலும்
பரவுதல்
பற்றிய கவலைகள்—மற்றும்
தொழிலாள
வர்க்கத்தின் மீது
தாக்குதல்கள்
நடத்தப்பட
வேண்டும் என்ற
கோரிக்கைகளும்—தற்பொழுது
போர்த்துக்கல்
மற்றும்
ஸ்பெயினில் மையம்
கொண்டுள்ளன.
தரம்
நிர்ணயிக்கும் அமைப்பான
Standard & Poor’s கடந்த
வாரம்
இவ்விரு
நாடுகளின் கடன்தரத்தையும்
கீழிறக்கியது.
சோசலிஸ்ட்
கட்சியைச்
சேர்ந்த பிரதம
மந்திரி
ஜோஸ் லூயி
ஜாபடெரோ
செவ்வாயன்று
ஸ்பெயின்
சர்வதேச நாணய
நிதியத்தை
அணுக
வேண்டும் என்ற
அச்சம் "முற்றிலும்
பைத்தியக்காரத்தனமானது"
என்று
அறிக்கைவிடும்
கட்டாயத்திற்கு
உள்ளானர்.
ஏற்கனவே ஜாபடெரோ
மகத்தான
செலவின
வெட்டுக்களுக்கான
திட்டங்களை அறிவித்து,
நாட்டின்
வரவு-செலவுப்
பற்றாக்குறையை
குறைப்பதற்கு "அனைத்தும்
செய்யப்படும்"
என்று
உறுதியையும் கொடுத்துள்ளார்.
இதே
போன்ற
நடவடிக்கைகள் ஐரோப்பா,
சர்வதேசம்
முழுவதும்
திட்டமிட்டுச்
செயல்படுத்தப்படுகின்றன.
நிதிய முறைக்கு
பிணை
எடுப்புக்
கொடுத்ததை தொடர்ந்து
அரசாங்க
கடனில்
விளைந்துள்ள ஏற்றத்திற்கு
தொழிலாள
வர்க்கம்
விலை கொடுக்க
வேண்டும்
என்ற
கோரிக்கைகள் வந்துள்ளன.
திங்களன்று
ஒரு
தலையங்கத்தில் மே
ஆறாம்
தேதி நடக்க
இருக்கும்
பிரிட்டிஷ்
தேர்தல்களில்
முக்கிய
வேட்பாளர்கள் எவரும்
"பிரிட்டனின்
பொது
நிதிகளை எப்படி
மீட்பது
என்ற
பிரச்சினையை முழுவதுமாக
பரிசீலிக்கவில்லை….
கட்சிகள்
வரவிருக்கும் சிக்கனம்
பற்றி
பொது
மக்களிடம் வெளிப்படையாக
இல்லை"
என்று
கவலையுடன் பைனான்சியல்
டைம்ஸ்
கூறியுள்ளது.
இந்த
வெட்டுக்களைக்
கோரும்
முதலீட்டாளர்கள் மற்றும்
அரசாங்கங்களின்
கவலைகளில்
மையமாக இருப்பது
இது
தூண்டிவிடும்
தவிர்க்க
முடியாத சமூக
எதிர்விளைவுதான்.
சார்ல்ஸ்
ஸ்ரான்லியின்
ஒரு
பகுப்பாய்வாளராக
உள்ள Jeremy Batstone-Carr "கிரேக்கம்
பரந்த
மக்கள்
எதிர்ப்பிற்கு இடையே
கடும்
சிக்கன
நடவடிக்கைகளை செயல்படுத்தத்
தவறிவிட்டால்,
பின்
சர்வதேச நாணய
நிதியம்
தன் ஆதரவை
விலக்கிக்
கொள்ளும்,
அவசர உதவி
திரும்பப்
பெறப்படும்.
இதுதான்
உடனடி நெருக்கடி."
என்று
எச்சரித்தார்.
நிதிய
உயரடுக்கு
சமூக ஜனநாயகவாத
பாப்பாண்ட்ரூவின்
அரசாங்கத்தைத்தான்
கிரேக்கத்தில்
வெட்டுக்களைக்
கொண்டுவருவதற்கு
நம்பியுள்ளது.
அரசாங்கம்
தன் பங்கிற்கு
தொழிற்சங்கங்கள்
மற்றும்
மத்தியதர வகுப்பு
அமைப்புக்களை
எதிர்ப்பைக்
கட்டுப்படுத்தி,
கலைத்துவிடும்
என்று
நம்பியுள்ளது. ஆனால்
நிலைமையானது கை நழுவி போய்விடும் என்ற கவலை பரந்த அளவில் அங்கே இருக்கிறது.
பொதுத்துறைத்
தொழிற்சங்கம் ADEDY
யின்
தலைவரான ஸ்பைராஸ்
பாப்பஸ்பைராஸ்,
பைனான்சியல்
டைம்ஸிற்கு
கொடுத்துள்ள
கருத்துக்களில்
சிக்கன
நடவடிக்கைகள் "சமூகத்தின்
பொறுமைத்தன்மை
நுழைவாயிலை
விட அதிகம்
கடந்துவிட்டது,
அடுத்து
என்ன நடக்கும்
என்று
எவரும் கூற
முடியாது"
என்று கவலை
தெரிவித்துள்ளார்.