சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Consumption tax, benefit cuts

Obama’s blueprint for austerity

நுகர்வு வரி, உதவி நலன்களில் வெட்டுக்கள்

ஒபாமாவின் சிக்கனத்திற்கான வரைபடம்

Patrick Martin
29 April 2010

Use this version to print | Send feedback

அரச கருவூலத்திற்கான தேசிய ஆணையம் (The National Commission on Fiscal Responsibility) அதன் ஆரம்பச் செயற்பாட்டை செவ்வாயன்று ஆரம்பித்து, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுப்பதற்காக ஒபாமா நிர்வாகத் திட்டத்தின் சமூகச் செலவினங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் கடுமையான தாக்குதல்களை அறிமுகப்படுத்தும் வழிமுறைகளை ஆரம்பித்திருக்கிறது.

10 ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 8 குடியரசுக் கட்சியினர் அடங்கியுள்ள ஆணையம் வருங்கால கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைக் குறைக்கும் வழிவகைகள் பற்றி விவாதித்து, வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸிற்கும் இப்பொழுதில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் பரிந்துரைகளைக் கொடுக்கப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆணையப் பணியை முறைப்படி ஆரம்பித்து வைக்கும் தன் அறிக்கையில், ஜனாதிபதி ஒபாமா, "அனைத்தும் மேசை மீது இருக்க வேண்டும்" என்று அறிவித்தார். ஏனெனில் ஆணையம் இராணுவச் செலவுகள் குறைக்கப்படுவதை பரிசீலித்தல், வங்கி பிணை எடுப்புக்களை அகற்றுதல், அல்லது கூட்டாட்சிக் கடனில் பெரியளவில் வட்டிப் பணத்தைத் தள்ளுபடி செய்துவிடுதல் ஆகியவற்றை செய்ய தடுத்து நிறுத்துதலானது ஒரு பொய் ஆகும். நிதிய உயரடுக்கின் செல்வத்தை அதிகப்படுத்தும் முக்கிய வழிவகைகளில் இதுவும் ஒன்றாகும்.

"அனைத்தும் மேசை மீது இருக்க வேண்டும்" என்பது வாஷிங்டனின் மற்றொரு இரகசியச் சொல் ஆகும். இதன் பொருள் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி என்னும் முக்கிய நலத் திட்டங்கள் பரிசீலித்து முன்வைக்கப்படும் நடவடிக்கைளில் இருக்கும் என்பதாகும். தன்னுடைய தேர்தல் உறுதிமொழியான ஆண்டிற்கு $250,000 க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மீதான வரியை அதிகப்படுத்துவதில்லை என்பதைக் கைவிட்டு, ஆணையத்திற்கு ஒரு மதிப்புக்கூட்டு வரியை முன்வைக்க பச்சை விளக்கு காட்டியுள்ளார். இதன்படி ஓர் உடனடி கூட்டாட்சி வரி நுகர்வின் மீதி விதிக்கப்படும். அது பெருமளவில் வருமான வரிக்குப் பதிலான நடவடிக்கையாக இருக்கும், முன்னேற்றகரமான வரிவிதிப்பு முறையில் கடைசியாக எஞ்சி இருப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

பற்றாக்குறை ஆணையமானது முன்னாள் குடியரசுக் கட்சி செனட்டர், வையோமிங்கின் ஆலன் சிம்சன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வெள்ளை மாளிகை தலைமை அலுவலர், வட கரோலினாவில் எர்ஸ்கின் பொவல்ஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையைக் கொண்டுள்ளது. இந்த இருவரும் நீண்ட காலமாகவே நிதியச் சிக்கனத்தை வாதிடுபவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள். ஆணையத்தின் 18 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் இலாப முறையைக் பாதுகாப்பவர் என்று நிரூபிக்கப்பட்ட நபராவார்கள். கிட்டத்தட்ட அனைவருமே பல மில்லியன்களை கொண்டவர்கள். இதில் Service Employees International Union உடைய தலைவர் Andrew Stern ம் உள்ளார். இவர்தான் குழுவில் "லேபரின்" ஒரே பிரதிநிதியாவார்.

குழுவின் ஆரம்ப கூட்டம் தொடர்ச்சியான உயர்மட்ட சாட்சிகளைக் கொண்டிருந்தது. அதாவது ஆரம்பமாக பெடரல் ரிசேர்வ் குழுவின் தலைவர் பென் பெர்னன்கே, வெள்ளை மாளிகை வரவு-செலவுத் திட்ட இயக்குனர் பீட்டர் ஆர்சாக் ஆகிய இருவருமே நிர்வாகம் இப்பொழுது முன்வைக்கும் பல டிரில்லியன் டாலர் கூட்டாட்சிப் பற்றாக்குறை நிலைத்து நிற்காது என்று அறிவித்துள்ளனர். பெர்னன்கே கூறினார்: "காங்கிரஸ், நிர்வாகம் மற்றும் அமெரிக்க மக்கள் பொதுநல உதவித் திட்டங்களில் மாற்றங்களை செய்ய, மருத்துவப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு, மற்றவற்றிலும் கூட்டாட்சி செலவினங்களைக் குறைத்தல், அதிக வரிகள் ஏற்கப்படல் அல்லது இவற்றின் இணைப்பு ஆகியவற்றில் இருந்து தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்."

காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் இதே பல்லவியைத்தான் கூறினர். செனட்டில் பெரும்பான்மைக் கட்சியின் கொரடாவும், ஆணையத்தின் உறுப்பினருமான செனட்டர் ரிச்சர்ட் டர்பின், "நெஞ்சுதிரம் கொட்டும் தாராளவாதிகள்" பற்றாக்குறைகளை குறைக்கும் திட்டங்களில், பொதுநல உதவித்திட்டங்களில் வெட்டுக்களுக்கு தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

சிக்கனத்திற்கு மிக உறுதியான அழைப்பு மன்றப் பெரும்பான்மைத் தலைவர் Steny Hoyer இடம் இருந்து வந்துள்ளது. இவர் புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு கட்டுரையை "பகிர்ந்து கொள்ளப்படும் தியாகங்கள் கடன் நெருக்கடியைத் தீர்க்கும்" என்று வெளியிட்டுள்ளார். "நம் நீண்ட கால பற்றாக்குறைக்கு பெரும் உந்துதல் கொடுப்பது விரைவில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பொது உதவிகள், சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகள்தான்" என்று அறிவித்த ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஆணையம் "அமெரிக்கர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பதை உணர்ந்து ஓய்வூதிய வயதை படிப்படியாக சில ஆண்டுகளில் உயர்த்த வேணடும்" என்றார்.

Hoyer ம் வரவு-செலவுத் திட்ட இயக்குனர் Orszag யும் ஐரோப்பாவில் உள்ள வரவு-செலவுத் திட்ட நெருக்கடிகளை மேற்கோளிட்டனர்--கிரேக்கம், போர்த்துகல்லில் இருப்பது, இப்பொழுது ஸ்பெயின் கூட, இவற்றின் கடன்தரத் தகுதிகள் குறைக்கப்பட்டுவிட்டன, கடன்கள் பெறுவது வரண்டுவிட்டது--இது அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர். ஹோயர் எழுதினார்: "கிரேக்க நிதிய நெருக்கடி போல் இங்கும் நடக்குமா என்று அமெரிக்கர்கள் சிந்திக்கக்கூடும். நாம் போக்கை மாற்றாவிட்டால் -- அது நடக்கும்." பற்றாக்குறைக் குழுவிற்குக் கொடுத்த சாட்சியத்தில் Orszag, "பாதகமான சந்தை விடையிறுப்பு வருமுன்னரே முன்னேறுவதுதான் இலக்கு ஆகும்" என்றார்.

இது நடக்கும் நிதிய நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சரிவிற்கு வோல் ஸ்ட்ரீட்டின் நிதிய ஊகம் மற்றும் கொள்ளை அடிக்கும் முறைக்கு பதிலாக, "மிகையான", "ஊதாரித்தனமான" விதத்தில் சராசரி அமெரிக்கர் தேவைகளுக்கு செலவிடுகிறார் என்று குறைகூறும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

ஆணையத்திற்கு தன்னுடைய கருத்துக்களில் ஒபாமா "சமமான முறையில் தியாகம்" என்ற பல்லவியையே கூறினார். இதில் அவர் இறுதிப்பகுப்பாய்வில் அமெரிக்க மக்கள்மீது குறைகூறி, "ஒவ்வொரு அமெரிக்கருக்கும் நன்கு தெரிந்த உண்மை ஒரு டாலர் சேமிப்பதை விட ஒரு டாலர் செலவழிப்பது எளிது என்பதுதான். இத்தகைய வெடிப்புத் தன்மை உள்ள பற்றாக்குறைகளின் வேர்களில் அதுதான் உள்ளது. அதுதான் கணக்குச் சரிபார்க்கும் தினத்திற்கு வழிவகுக்கும்" என்றார்.

ஆனால் மகத்தான கூட்டாட்சிப் பற்றாக்குறை ஒன்றும் "அமெரிக்க மக்கள் எடுத்த" மோசமான முடிவுகளின் விளைவு அல்ல. இது இலாபமுறையின் உலகந்தழுவிய நெருக்கடியின் விளைவு ஆகும். அதே போல் அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்ற நாடுகளில் உள்ள அதன் போட்டியாளர்கள் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானமுறையில், அதன் உலக ஆதிக்கத்தைக் பாதுகாப்பதற்குக் கொண்டுள்ள உந்துதலின் விளைவும் ஆகும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையில், அமெரிக்கத் தேசியக் கடனின் விரைவான அதிகரிப்பு ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களின் விளைவு (இவை புஷ்ஷினால் ஆரம்பிக்கப்பட்டு, ஒபாமாவால் தொடரப்படுகின்றன), வோல் ஸ்ட்ரிட் பிணை எடுக்கப்பட்டது (புஷ் தொடங்கி ஒபாமாவாலும் தொடரப்படுகிறது), நடக்கும் மந்த நிலை (புஷ் காலத்தில் தொடங்கி ஒபாமாவின் கீழ் தொடர்கிறது) என்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். வேறுவிதமாகக் கூறினால், தொழிலாளர்கள் இல்லை பெருநிறுவன அமெரிக்கா தான் நெருக்கடிக்குப் பொறுப்பு ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது சிக்கனம் மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கான அழைப்புக்களை நிராகரிக்கிறது. உழைக்கும் மக்கள் அல்ல நிதிய உயரடுக்குதான் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். சமூகப்பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி இவற்றைக் குறைக்கும் அனைத்துத் திட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம். அதே போல் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் நுகர்வு வரிகளையும் எதிர்க்கிறோம்.

ஆளும் வர்க்கத்தின் கூற்றுக்களான சமூகப் பணிகளுக்கு தேவையான "பணம் இல்லை" என்பதற்கு எதிராக நாம் நிறையப் பணம் உள்ளது என்று கூறுகிறோம் அதாவது வோல் ஸ்ட்ரீட்டிலும் ஒதுக்குநிதி (hedge fund) பில்லியனர்களிடமும், மற்ற பெரும் செல்வந்தர்களிடமும் தான். இவர்களுடைய செல்வம் பொருளாதாரச் சரிவானது பெரும்பாலான மக்களுடைய வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பேரழிவுகளுக்கு உட்படுத்தியபோதும், தங்கள் செல்வம் அதிகரித்துள்ளதைக் கண்டனர்.

ஒதுக்கு நிதி (hedge fund) வைத்துள்ளவர்கள் மற்றும் பிற பெரிய ஊக வணிகர்கள் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும். பங்குச் சந்தைகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் derivatives சந்தைகள் மூடப்பட வேண்டும் மற்றும் ஒரு பகுத்தறிவுத் திட்டத்தின்கீழ் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்படுவதோடு, ஜனநாயக முறையில் அபிவிருத்திசெய்யப்பட்டு தொழிலாளர்களின் தேவைகளுக்கு சேவை செய்ய உதவ வேண்டும் என்று அழைப்பு விடுகிறோம்.

இத்துடன் இராணுவ/உளவுத்துறைகளின் வரவு-செலவுத் திட்டத்திற்கு வீணடிக்கப்படும் பரந்த வளங்கள் சமூகத் தேவைகளுக்கு மாற்றப்படுவதோடு, செல்வந்தர்களின் வருமானங்களை இலக்கு வைக்கும் உண்மையான முற்போக்கு வரிவிதிப்பு முறை நிறுவப்பட வேண்டும், மக்களுடைய ஊதியங்களும், நுகர்வும் இதற்காக இலக்கு வைக்கப்படக்கூடாது.