IMF, ECB மற்றும் ஐரோப்பிய ஒன்றிய
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் கிரேக்க அரசாங்க அதிகாரிகளுடன் விரிவாக்கப்பட்ட சமூகநல
வெட்டுக்கள், இன்னும் பணி நீக்கங்கள், ஆழமான
ஊதிய மற்றும் ஓய்வூதியக் குறைப்புக்கள் மற்றும் கூடுதல் வரிவிதிப்புக்களை பற்றி
உடன்பாடு காண்பதற்கு கூடியிருக்கையில் பிரதம
மந்திரியின் கூட்டமும் நடந்தது. இந்த
வார இறுதியில் அதிகாரிகள் உடன்பாட்டின் விதிகளுக்கு இறுதி
வடிவம் கொடுக்கும் நம்பிக்கையில் உள்ளனர். அதையொட்டி ஐரோப்பிய அரசாங்கங்கள் மே 7ம் தேதியை ஒட்டி
அதற்கு ஒப்புதல் கொடுக்க முடியும், நிதிகள் மே 19ம் தேதிக்குள் வரத் தொடங்கும்.
அப்பொழுது கிரேக்கம் அதன் பத்திரதாரர்களுக்கு
8 பில்லியன் யூரோக்கள் வரை
கொடுக்க வேண்டும்.
புதனன்று IMF ன் நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மற்றும் ECB தலைவர் Jean-Claude Trichet ஆகியோர் பேர்லினில் ஜேர்மனிய சட்டம்
இயற்றுபவர்களை சந்தித்து அவர்கள் விரைவில் IMF-EU பிணை எடுப்பு கிரேக்கத்திற்கு 120 பில்லியன் யூரோக்கள் மூன்று
ஆண்டுகளுக்குள் என்பதற்கு உடன்படாவிட்டால், முழு
யூரோப்பகுதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று
எச்சரித்தற்கு பின்னர் கிரேக்க நெருக்கடி பற்றி
பேச்சுக்கள் தொடர்ந்தன.
புதிய பிணை எடுப்பு பொதி முன்பு
ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டத்தை போல்
கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்
ஆகும். கிரேக்கம் மட்டுமின்றி போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் நிலைமை
மிக மோசமாகியுள்ளதைத்தான் பிரதிபலிக்கிறது. செவ்வாயன்று Standard & Poor's நிறுவனம் கிரேக்கத்தின் கடன் மதிப்புத் தரத்தை அபாயப்
பத்திர தகுதிக்கு கீழிறக்கியதுடன், போர்த்துக்கல் பற்றிய
அதன் தரத்தையும் அதிகமாகக் குறைத்தது. புதனன்று Standard & Poor's ஸ்பெயினின் தரத்தை ஒரு படி குறைத்து இன்னும் அதிக
குறைப்புக்கள் வரக்கூடும் என்றும் எச்சரித்தது.
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினின் பத்திரங்கள்
தரம் குறைக்கப்பட்டது ஐரோப்பிய, சர்வதேச நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக்
குறிக்கிறது. இது தேசியத் கடனை செலுத்த முடியாத அச்சுறுத்தலைக் கொண்டுள்ள
அரசாங்கக் கடன் நெருக்கடி, கடன் கொடுத்த வங்கிகளின் பெரியளவான இழப்புக்கள்
மற்றும் சங்கிலித் தொடர் நிதியக் கரைப்பு ஆகியவை கிரேக்கத்தில் இருந்து மற்ற
அதிக கடன்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பரவக்கூடும் என்ற பொருளைக்
காட்டுகிறது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வியாழனன்று இரு
நாட்கள் இழப்புகளுக்கு பின்னர் உறுதியாகியன. இது கிரேக்கத்திற்கான பிணை எடுப்பு
உடன்பாடு விரைவில் வரும் என்ற நம்பிக்கையை பிரதிபலித்தது. மற்றும் கிரேக்கம்,
போர்த்துக்கல், ஸ்பெயின் அரசாங்கப் பத்திரங்கள் இடம் இருந்து கிடைக்கும் ஆதாயங்கள்
போன வாரம் அதிகமான பின்னர் சற்றே குறைந்ததையும் காட்டுகிறது. ஆனால் கடன்
தரங்கள் குறைக்கப்பட்டுள்ளது அதிக கடன் செலவுகளைத் தோற்றுவிப்பதோடு, அரசாங்க
பத்திரங்களை முதலீட்டாளர்கள் விற்பனை செய்யக்கூடும். இதையொட்டி கடன் நெருக்கடி
ஆழ்ந்து போகலாம், இறுதியில் கடன் திருப்பி செலுத்த முடியாத வாய்ப்புக்கள்
அதிகரிக்கும்.
மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கையில், அனைத்து
உத்தியோகபூர்வ கட்சிகளும் முழுச் சுமையும் தொழிலாள வர்க்கத்தால் சுமக்கப்பட
வேண்டும் என்று உடன்பட்டுள்ளன.
அதன் கடன் தரம் குறைக்கப்பட்டதற்கு
விடையிறுக்கும் வகையில் போர்த்துக்கல் அரசாங்கம் தன் சிக்கன திட்ட செயல்படுத்ததலை
விரைவுபடுத்தும், முன்பு திட்டமிட்டிருந்த 2011க்குப் பதிலாக இந்த ஆண்டே தொடர்
வெட்டுக்களைச் சுமத்தும் என்று அறிவித்துள்ளது. போர்த்துக்கல்லின் சோசலிச
கட்சி பிரதம மந்திரி Jose Socrates
புதிய சாலை பயன்பாட்டுக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்தி,
வேலையின்மை இன்னும் பிற பொதுநல உதவிகளைக் குறைக்கவும் இருப்பதாகக்
கூறினார்.
"நாம் பொதுப் பற்றாக்குறைகளை குறைப்பதற்காக
நிர்ணயித்துள்ள தேவையான இலக்குகளை செய்ய நாம் முழுமையாக தீர்மானிக்கப்பட்டுள்ளோம்
" என்று அவர் கூறினார்.
இதேபோல் ஸ்பெயின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின்
அரசாங்கமும் அதன் கடன் தர மதிப்புக் குறைப்பை எதிர்கொள்ளும் விதத்தில் தான்
அதன் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தும் என்று உறுதிகளைக் கொடுத்தது.
"நிதிய ஒருங்கிணைப்பு மற்றும் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு தீவிர திட்டத்தை
நாங்கள் கொண்டுள்ளோம்" என்று துணைப் பிரதம மந்திரி Maria Teresa de
la Vega கூறினார். "நாங்கள் ஒரு சிக்கன
நடவடிக்கையை ஏற்றுள்ளோம், தொழிலாளர் சந்தை சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளோம்.
நாங்கள் கொடுக்க வேண்டியதை உரிய காலத்தில் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். எனவே மக்களுக்கு நம்பிக்கைச்
செய்தியையும், சந்தைகளுக்கும் அமைதிச் செய்தியையும் நான் அனுப்ப
விரும்புகிறேன்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.
பெப்ருவரி மாதத்தில், ஏற்கனவே 20 சதவிகித
வேலையின்மை இருக்கையில், அரசாங்கம் 5- பில்லியன் யூரோக்களை அடுத்த மூன்று
ஆண்டுகளில் வரவு-செலவைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தால்
அரசாங்கச் செலவினக் குறைப்புக்கள், அரசாங்க ஊழியர் நியமன முடக்கம் மற்றும்
வரி அதிகரிப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
சட்டபூர்வ ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67க்கு
உயர்த்துவதற்கும் இது அழைப்புவிடுத்து அதையொட்டி தொழிலாளர்களை பணி நீக்கம்
செய்வதை எளிதாகவும் செலவு குறைந்ததாகவும் செய்துள்ளது.
பிரதம மந்திரி Jose Luis Rodrigues
Zapatero இந்த மாதம் முன்னதாக அவருடைய அரசாங்கம்
தேவையானால் இன்னும் அதிக வெட்டுக்களை கொண்டுவரவும் அதிக சிக்கனத்தைக் கோரவும்"
விருப்பம் உடையதாக உள்ளது என்றார்.
பாப்பாண்ட்ரூ தலைமையில் உள்ள கிரேக்க அரசாங்கமும்,
இதே போல் ஒரு பெயரளவு "சோசலிச" கட்சியின் ஆட்சியாகும்.
ஆனால் கிரேக்கத்தின் PASOK,,
போர்த்துக்கல், ஸ்பெயினில் உள்ள அதன் பெயர் கொண்ட கட்சிகளை போலவே ஒரு முதலாளித்துவக்
கட்சிதான். இது நீண்ட காலமாக ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குத்தான் அத்துடன்
இணைந்துள்ள தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் உதவியுள்ளது.
இப்பொழுது, இந்த "இடது" என்று கூறப்படும் கட்சிகள்
அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் மீது நடக்கும் வரலாற்றுத்தன்மை மிகுந்த,
காட்டுமிராண்டித்தன தாக்குதல்களை சர்வதேச வங்கிகள், ஒதுக்கு நிதிகள்
(hedge funds)
மற்றும் ஊகக்காரர்களுக்காகவும் தங்கள் நாட்டின் பூர்ஷ்வாக்களுக்காவும்
மேற்பார்வையிடுகின்றன.
வணிக, தொழிற்சங்க தலைவர்களிடம் பாப்பாண்ட்ரூ
கூறினார்: "நாட்டை பாதுகாப்பதற்கு தேவையானவற்றை நாங்கள் செய்வோம்." கூட்டத்திற்கு
பின்னர் தொழிற்சங்க அதிகாரிகள் புதிய சிக்கனத் திட்டமானது வரவு-செலவுப் பற்றாக்குறையை
2012 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதக் குறைப்பு இருக்கும்
என்றனர். முந்தையை வெட்டுப் பொதிகளில் 7 சதவிகிதக் குறைப்பு வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விவாதிக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று கூறப்படுபவற்றில்
கிரேக்க இரயில் அமைப்பு முறையின் சில பகுதிகள் மூடப்படுவது, கூட்டுப்
பேச்சு உடன்பாடுகளை நடத்தும் தொழிற்சங்க திறனைக் குறைப்பது, தனியார் துறை
தொழிலாளர்கள் தங்கள் ஆண்டு ஊதியத்திற்கும் அப்பால் பெறும் இரு மாத ஊதியத்தைக்
குறைத்தல், ஓய்வூதிய வயதை அதிகரித்தல் மற்றும் ஓய்வூதியத் தொகைகளை குறைத்தல்
ஆகியவை அடங்கியுள்ளன.
பேச்சுக்களுக்கு அருகில் இருந்த ஆதாரங்கள்
விவாதிக்கப்பட்ட மற்ற நடவடிக்கைகளில் மதிப்புக்கூட்டு வரியை தற்போதைய 21
சதவிகிதத்தில் இருந்து இன்னும் 2முதல் 4 சதவிகித புள்ளிகளை உயர்த்துவது அதாவது
நுகர்வில் வருமானம்சார வரிவிதிப்பாக. எரிபொருள், புகையிலை மற்றும் மதுபான
வரிகளில் குறைந்தது 10 சதவிகிதம் உயர்வு ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளன.
பொதுத்துறை ADEDY
சங்கத்தின்படி, நடவடிக்கைகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு மூன்று ஆண்டு
கால ஊதிய முடக்கம், ஆண்டில் அவர்கள் பெறும் 14 ஆவது மாத ஊதியத்தில் இரண்டை
அகற்றுதல், முழு நேர பொதுத்துறை வேலைகளில் வெட்டுக்கள் ஆகியவை அடங்கும். மற்றொரு
திட்டம் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர் தொகுப்பை தற்போதைய 2 சதவிகிதம் என்பதற்கு
பதிலாக 4 சதவிகிதம் குறைத்தல் என்பதை அனுமதிக்கிறது.
கிரேக்க அரசாங்கம் முன்பு ஏற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு
தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்துள்ளது. இந்த புதிய
நடவடிக்கைகள் மக்கள் சீற்றத்தையும் எதிர்ப்பையும் அதிகரிக்கத்தான்
செய்யும்.
மே 1ம் தேதி ஒரு துறைமுக வேலைநிறுத்தம் நடக்கவுள்ளது.
ADEDY மற்றும் தனியார் துறை
GSEE தொழிற்சங்கங்கள் மே 5ம் தேதி ஒரு
நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால் தொழிற்சங்க அதிகாரிகள் பாப்பாண்ட்ரூவுடன்
பேசிய பின்னர் குறைந்த குறைகூறல் உடைய அறிக்கைகளைத்தான் கொடுத்து, புதிய
சிக்கன நடவடிக்கைகளை தடுக்கும் மக்கள் எதிர்ப்பை அணிதிரட்டும் நோக்கம் தங்களுக்கு
இல்லை என்பதை அடையாளம் காட்டியுள்ளனர். GSEE
தலைவர் Yannis Panagopoulos திட்டங்களானது
"கடுமையானவை, நியாயமற்றவை" என்று கூறி தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு
"முடுக்கி விடப்படும்" என்று தெளிவற்ற முறையில் அச்சுறுத்தினார்.
கிரேக்கப் பெருநிறுவன உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின்
எதிர்ப்பை குறைத்துச் சிதைத்துவிட இயன்றதை தொழிற்சங்கங்கள் செய்கின்றன என்பதை
நன்கு அறியும். "இதுவரை தொழிற்சங்கங்கள் எதிர்கொண்ட விதம் கிரேக்க அளவுகளில்
மிருதுவானது" என்று கிரேக்க தேசிய வங்கியின் மூத்த பொருளியலாளர்
Nikos Magginis கூறினார்.