WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
German chancellor steps up pressure on
Greece
கிரேக்கத்தின்
மீது
அழுத்தத்தை
ஜேர்மன்
அதிபர்
முடுக்கி விடுகிறார்
Peter Schwarz
28 April 2010
Back to screen version
கிரேக்கத்திற்கு
ஒப்புக்
கொண்ட நிதியத்தை ஜேர்மனிய
அரசாங்கம்
முற்றிலும்
புதிய நிபந்தனைகளுடன் இணைக்கிறது.
இதையொட்டி
நிதி உதவி தாமதப்படுகிறது.
சர்வதேச
நாணய நிதியம்
(IMF)
மற்றும்
ஐரோப்பிய
நாடுகளிடம்
இருந்து 45
பில்லியன்
யூரோக்களை
ஏதென்ஸ்
கடனாகக்
கேட்டதை
தொடர்ந்து --இந்தப்
பிணை
எடுப்பிற்கு
கொள்கையளவில்
முன்னதாகவே
உடன்பாடு
ஏற்பட்டது--
அதிபர் அங்கேலா மேர்க்கேல்
தன்னுடைய
ஒப்புதலுக்கு
கிரேக்கமானது
ஒரு "மூன்று
ஆண்டுகள்,
நிலைத்திருக்கக்கூடிய,
நம்பகத்
தன்மை உடைய மீட்புத்
திட்டத்தை"
அளிப்பதில்
தங்கியுள்ளது
என்று கூறியுள்ளார். நடைமுறையில்
இதன்
பொருள் பிரதம மந்திரி
ஜோர்ஜ்
பாப்பாண்ட்ரூவின்
அரசாங்கம்
ஏற்கனவே
ஏற்றுக்கொண்டுள்ள
இரு கடுமையான
சிக்கனப்
பொதிகளைத்
தவிர மூன்றாவது சுற்று
சிக்கன
நடவடிக்கைகளையும்
சேர்க்க
வேண்டும்
என்பதாகும்.
அரசாங்கத்திற்கு நெருக்கமான சில ஜேர்மனிய
பொருளாதார வல்லுனர்கள் கிரேக்கமானது ஒரு அரசாங்கத் திவாலுக்குத் தள்ளப்பட
வேண்டும் அல்லது நாணய ஒன்றியத்தில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட
வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஏதென்ஸுக்கு ஆதரவு கொடுப்பது யூரோ உறுதிப்பாடு
உடன்படிக்கையை மீறுவதாகும் என்றும் இதே போன்ற கோரிக்கைகள் மற்ற நாடுகளில்
இருந்து எழும் என்றும் யூரோவின் மதிப்பை குறைத்துவிடும் என்றும் அவர்கள்
வாதிடுகின்றனர்.
ஜேர்மனி தன்னை பெரிதும் ஐரோப்பிய ஒன்றியத்தில்
இருந்து தன்னுடைய வளைந்து கொடுக்காத தன்மையினால் தனிமைப்படுத்திக் கொண்டு
விட்டது. குறிப்பாக தெற்கு ஐரோப்பாவில் அதிக கடன்களைக் கொண்டிருக்கும் நாடுகள்
என்று மட்டும் இல்லமால், பிரான்ஸும் ஜேர்மனிய அரசாங்கத்தை ஏற்கனவே கிரேக்க
அரசாங்கக் கடன் பத்திரங்கள் மிக அதிக அளவு வட்டி விகிதத்திற்கு தள்ளப்பட்டுவிட்ட
ஊக அலையைத் தூண்டிவிடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும் சில ஜேர்மனிய கருத்துதெரிவிப்பாளர்கள்
ஜேர்மனியானது தன்னுடைய நிலையைத்தான் குறைமதிப்பிற்கு உட்படுத்திக்
கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளனர். ஏனெனில் யூரோப் பகுதியில் முக்கிய
நலன்களை அடையும் நாடுகளில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 70 சதவிகித ஜேர்மனிய
ஏற்றுமதிகளைப் பெறுகிறது. கிரேக்கத்திற்கு திவால் என்பது தொடர் சங்கிலி
விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், அது யூரோவின் முடிவிற்கு வழி செய்துவிடும்.
இது ஐரோப்பிய நிதியியல் முறை, ஐரோப்பிய
நாடுகளுக்கு இடையேயான வணிகம் இன்னும் குறிப்பாக ஜேர்மன் ஏற்றுமதித்
தொழிலுக்கு பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். வல்லுனர்கள் ஜேர்மன் நாணயமானது
மற்ற யூரோப் பகுதிக்கு எதிராக யூரோ தோற்றுவிட்டால் 30 சதவிகிதம் உயரும்
என்றும் அதை ஒட்டி ஜேர்மன் தொழில்துறை அதிக போட்டித்தன்மையைக்
கொண்டிருக்காது என்றும் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஜேர்மன் வங்கிகளானது கிரேக்கக் கடன்
பத்திரங்களை 45 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு வைத்துள்ளன. அரசாங்கத் திவால்
ஏற்பட்டால் இவை நட்டக் கணக்கில் தான் காட்டப்படும். இந்த வங்கிகளின்
இழப்புக்கள் ஜேர்மன் பொது நிதிகளுக்கு தற்பொழுது விவாதிக்கப்பட்டதை விட
அதிக செலவுகளைக் கொடுத்துவிடும். அதில் ஜேர்மனி கிரேக்க அரசாங்கத்திற்கு
கொடுக்கப்படவிருக்கும் கடனில் 8.4 பில்லியன் யூரோவிற்கு பொறுப்பு ஏற்பதாக
இருந்தது.
மேர்க்கெலின் கிரேக்க கொள்கை இரு பக்கங்களில்
இருந்து எதிர்கொள்ளப்படுகிறது. அவருடைய கூட்டணிப் பங்காளிகள்--கிறிஸ்துவ
ஜனநாயக ஒன்றியத்தின் சகோதரக் கட்சி, கிறிஸ்துவ சமூக ஒன்றியம்
(CSU)
மற்றும் Free Democratic Party (FDP)
ஆகியவை கிரேக்க அரசாங்கத்திடம் மிக தாராளமாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளன.
மாறாக சமூக ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகளும் மேர்க்கெலின் சொந்த
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU)
அவர் போதுமான ஆதரவை கிரேக்கத்திற்கு கொடுப்பதில் விரைந்து செயல்படவில்லை என்று
குற்றம் சாட்டியுள்ளன.
உண்மையில் அதிபர் ஒரு தெளிவான போக்கைத்தான்
பின்பற்றுகிறார். அவருடைய முக்கிய நோக்கம் நெருக்கடியின் முழுச்சுமையையும்
கிரேக்க மக்கள் மீது ஏற்றி, கிரேக்க அதிகாரத்துவம் அதைச் செயல்படுத்த
தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது
ஆகும். ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக ஆதரவு உறுதி கொடுத்திருந்தால், "கிரேக்க
அரசாங்கத்தின் மீது இருந்த அழுத்தம் உடனே மறைந்திருக்கும். பிரதம மந்திரி
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ இப்பொழுது எதிர்பார்க்கப்படும் விதத்தில் பாராளுமன்றத்தின்
முன் கடும் சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வந்திருக்க முடியாது" என்று
Suddeutsche Zeitung கூறியுள்ளது.
அதே நேரத்தில் மேர்க்கெல் வங்கிகளுக்கு அவை
தம் நிதி பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
அரசாங்க சார்பு ஆதாரங்கள் அதிபர் ஒருபொழுதும் கிரேக்க தேசிய திவால் பற்றித்
தீவிரமாக சிந்திக்கவில்லை என்று உறுதிப்படுத்துகின்றன. உள்நாட்டைப்
பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே அவர் நாடு தோல்வியுற அனுமதிக்கப்படக்கூடாது
என்றும் இறுதியில் ஆதரவு வரும் என்றும் தான் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால் அவருடைய விருப்பம் மீட்புப் பொதிக்கான விலையை உயர்த்துவது என்று
இருந்தது.
மேர்க்கெலின் முன்னுரிமை கிரேக்கம் அல்ல,
ஆனால் ஜேர்மனியும் ஐரோப்பாவும் முழுமையாக என்று உள்ளது. கிரேக்கம் ஒரு
பரிசோதனைக் களமாக உதவுகிறது. சர்வதேச நதிய நெருக்கடி, மற்றும் வங்கிகளைக்
காப்பாற்ற கொடுக்கப்பட்ட மீட்புப் பொதிகளில் இருந்து எல்லா நாடுகளிலும்
விளைந்துள்ள பெரும் பற்றாக்குறைகளுக்கு எப்படித் தொழிலாள வர்க்கம் விலை
கொடுக்கிறது என்பதைக் காண அது சோதனைக் களமாக மாறிவிட்டது.
ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுநலச்
செலவுகளில் பெரும் குறைப்புக்கள் என்று பாப்பாண்ட்ரூ கிரேக்க மக்களின் மீது
இப்பொழுது சுமத்துபவை அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி,
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் கூட என்று திட்டமிடப்பட்டுள்ளது.
எந்த அளவிற்கு பாப்பாண்ட்ரூ மக்கள் எழுச்சியை தூண்டிவிடாமல் செல்லமுடியும்
என்பது பற்றி கிரேக்கம் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது. அதே போல் எந்த
அளவிற்கு தொழிற்சங்கங்களும் போலி இடது அமைப்புக்களும் குட்டி முதலாளித்துவ
SYRIZA போன்றவை சமூக எதிர்ப்பைக்
கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிகிறது என்பதும் கண்காணிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் தான் கிரேக்க-எதிர்ப்பு
வெறி ஜேர்மனிய செய்தி ஊடகத்தால் தூண்டிவிடப்படுவது காணப்பட வேண்டும். இது
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உதவுகிறது: அதாவது ஜேர்மனி மற்றும் கிரேக்கத்
தொழிலாள வர்க்கங்களுக்கு இடையே ஐக்கியம் தடுக்கப்பட வேண்டும் என்பதே அது.
பாப்பாண்ட்ரூ, மேர்க்கெல் மற்றும் பிற ஐரோப்பியத்
தலைவர்கள், ஐரோப்பிய தொழிலாளர்கள் வெட்டுக்கள் மற்றும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு
எதிராக ஒரு பொதுப் போராட்டத்தில் ஈடுபடுவதையிட்டு அஞ்சுவது போல் வேறு எதற்கும்
அஞ்சவில்லை. தற்பொழுது கிட்டத்தட்ட 350,000 கிரேக்கத்தில் இருந்து குடியேறியவர்கள்
ஜேர்மனியில் வாழ்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட இராணுவ சர்வாதிகாரத்தில்
இருந்து அவர்கள் தப்பி ஓடிவந்தவர்கள். இத் தொழிலாளர்களில் பலர் 1970 மற்றும்
1980 களின் தொழிலாளர்கள் சம்பந்தமான மோதல்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தவர்கள்
ஆவர்.
Springer-Verlag
குழுவைச் சேர்ந்த சாக்கடைச் செய்தி ஊடகம் தான் கிரேக்கத்தின் மீது சகதியை
வாரி அடிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பிற்போக்குத்தன உணர்வுகளுக்கு உந்துதல்
கொடுக்கின்றது. பல வாரங்களாக பரபரப்பு Bild
நாளேடு அதன் வாசகர்களிடம் "கிரேக்க முறை ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு
உதவும் தன்மை உடையது" என்று கூறி "திவாலாகி விட்ட கிரேக்கர்கள், அவர்களுடைய
ஆடம்பர ஓய்வூதியங்கள் ஜேர்மனியினரால் கொடுக்கப்பட நேரிடும்" போன்ற கருத்துக்களைத்
தெரிவித்துள்ளது. கிரேக்கத்தில் உள்ள குறைந்ந வருமானங்கள், ஓய்வூதியங்கள்
பற்றியோ அல்லது யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அங்கு செலவினங்கள்
ஜேர்மன் அளவிற்கு வந்து விட்டன என்பது பற்றியோ வாசகர்களுக்கு கூறப்படுவது
இல்லை.
எது புதியது என்றால், இந்தப் போராட்டம் சாக்கடை
செய்தி ஊடகத்துடன் நின்றுவிடவில்லை. தாராளவாத மத்தியதர வகுப்பினர் படிக்கும்
வெளியீடுகளின் பக்கங்களிலும் வருகின்றன. உதாரணமாக Stern
இல் Walter Wullenweber ஆல் "பிரியமான
கிரேக்கர்களுக்கு" என்று எழுதிய ஒரு கடிதத்தை வெளியிட்டது. அது திமிர்த்தனம்,
தீய பார்வையைத்தான் உமிழ்கிறது. "கிரேக்கர்கள்" பல தசாப்தங்கள் தாங்கள் சம்பாதித்த
பணத்தைக் காட்டிலும் செலவிடுகின்றனர் என்றும் "பிறருடைய செலவில், தொடர்ந்து
ஏமாற்றிக் கொண்டு" வாழ்கின்றனர் என்றும் Wullenweber
குற்றஞ்சாட்டியுள்ளார்.
இக்கடிதம் வெளிவந்ததை அடுத்து, அவர்
Anne Will நடத்தும் மதிப்பிற்குரிய
தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு உடனே அழைக்கப்பட்டார்.
அதில் தொகுப்பாளர் இவருடன் எல்லா கிரேக்கர்களையும் சோம்பேறிகள், இலஞ்ச ஊழல்மிக்கவர்கள்
என்று குற்றஞ்சாட்டியதுடன் போட்டியிட்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமான கிரேக்க சமூகம்--ஜேர்மனியைப்போல்--வர்க்கங்களாக
பிரிந்துள்ளது என்ற உண்மையை மூடி மறைப்பதாகும். மில்லியன் கணக்கான கிரேக்கர்கள்
பெரும் வறிய நிலையில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் ஒரு சிறிய உயரடுக்கு ஐரோப்பிய
ஒன்றியத்துடன் கொண்டுள்ள உறவினால் தன்னைச் செல்வக்கொழிப்பு உடையதாக
செய்துள்ளது என்பதற்கு நன்றியாக அது இருப்பதும் மறைக்கப்படுகின்றன.
இப்பிரச்சாரத்தின் பின்னணியில் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிராக மத்திய தர வகுப்பின் பிரிவுகளை தூண்டும் முயற்சியும்
உள்ளது. இவ்விதத்தில் கிரேக்கமானது முழு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின்
மீதும் புதிய தாக்குதல் தயாரிப்பிற்கு ஒரு வழிவகையாகத்தான் சேவை செய்கிறது. |