தனிப்பட்ட
கடன் வசதியையும் பெற்றிருந்தவர்கள் இப்பொழுது தங்கள் வாழ்க்கைத் தரங்களில்
கொடூரமான சரிவை எதிர்கொள்ளுகின்றனர்.
மூன்று மில்லியன் மக்களுக்கும் மேலாக
வேலையின்மை என்று பெருகியுள்ள நிலை,
வேலை இழப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வீடுகள் பறிபோதல் ஆகியவை
பற்றிய அச்சுறுத்தல் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கிறது.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக,
தொழிற் கட்சியும் அதனுடன் இணைந்திருந்த
தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கம் நடத்திய போராட்டங்களின் முக்கிய
கருவிகளாக இருந்தன. அவை குறைந்தபட்ச சீர்திருத்தங்களை அடையும் முன்னோக்கு
உடன் மட்டுமே இருந்தன அதாவது முதலாளித்துவம் தப்பிப் பிழைப்பதற்கு எந்த
அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை.
ஆனால் புதிய தொழிற் கட்சி திட்டத்தின்
இதயத்தானத்தில் இருந்த கணக்கீடு--நிதிய தன்னலக்குழுவின் ஆதரவை அடுத்து
சீர்திருத்தங்கள் பற்றிய அதன் உறுதி மொழிகளைக் கைவிட்டாலும்
குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக தான் நீடிக்கலாம் என்று தொழிற் கட்சி
நினைத்தது ஆனால் இப்பொழுது சிதைந்த தன்மையில் உள்ளது. இந்த மூலோபாயத்தின்
விளைவு ஒரே அடியாக தொழிற் கட்சியை தீர்த்துக் கட்டிவிடுவது என்று உள்ளது.
இது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பாரிய
அரசியல் நெருக்கடியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மூன்று முக்கிய கட்சிகளும் வாக்காளார்களிடம்
வரவிருக்கும் வெட்டுக்களின் அளவு மற்றும் காட்டுமிராண்டித்தனம் பற்றி
நேர்மையாக எடுத்துரைக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளைக் கடந்த வாரம்
கண்டுள்ளது. Institute of Fiscal Studies
(IFS) என்ற கருவூல
கல்வி பயிலகத்தில் இருந்து வந்துள்ள அறிக்கை ஒன்றில் இவை உச்சக்கட்டத்தை
அடைந்துள்ளன. அது தொழிற் கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகவாதிகள்
திட்டமிட்டுள்ள வெட்டுக்கள் 1970 களில் தொழிற் கட்சி
சுமத்தியவற்றுடன் ஒப்பிடத்தக்கவை என்று கூறியுள்ளது.
அந்த நடவடிக்கைகள்
1978-79 "அதிருப்தியான குளிர்காலத்திற்கு"
வழிவகுத்தன. அது Callaghan
அரசாங்கத்தை வீழ்த்தியது. IFS
பொதுநலச் செலவுகளில் குறைப்புக்கள் என்னும் டோரித் திட்டங்கள் இரண்டாம்
உலகப் போருக்குப் பின் மிகக் கடுமையானவை என்று அடையாளம் கண்டுள்ளது. இந்த
வெட்டுக்களில் 70 முதல்
80 சதவிகிதம் இன்னும்
அடையாளம் காணப்படவில்லை,
உண்மையில் இன்னும் அதிக வெட்டுக்கள் திட்டமிடப்படுகின்றன.
அத்தகைய எச்சரிக்கைகள் என்ன செய்யப்பட
வேண்டும் என்பது பற்றிய உடன்பாடு இல்லாமல்,
எந்தக் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியும் சிக்கன
நடவடிக்கைகளைச் சுமத்தத் தேவையான மக்கள் விருப்பத்தைப் பெறாது என்ற
கவலையினால் தூண்டுதல் பெற்றுள்ளன. மக்களுடைய இணக்கத்தை சுமத்துதலுக்குப்
பெறுதல் என்பது இயலாதது என்பதுதான் பிரச்சினை. ஒரு நல்ல ஊதியம்,
ஒரு வேலை, ஒரு ஓய்வூதியம் ஏன் வீடு கூட இழக்கப்படும் என்பதற்கு
எவரும் உடன்பட மாட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
தொழிற் கட்சி தொழிற்சங்கங்களுடன் இணைந்து அத்தகைய
தாக்குதல்களைச் செயல்படுத்துவதற்கு பரந்த தொழிலாளர் பிரிவுகளை
பயன்படுத்தும் நிலையில் இனியும் இல்லை.
இவ்விதத்தில் தொழிற் கட்சியின் சரிவு
வரவிருக்கும் பெரியளவான வர்க்கப் போராட்டங்களை முன்கூட்டித் தெரிவிப்பதாக
உள்ளது. அப்போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் பிரிட்டனுக்குள் அடிப்படை
அரசியல் மறு ஒழுங்கமைவுக்கு இட்டுச்செல்லும்.
இதன் ஆரம்ப பாதிப்பு முழு முதலாளித்துவ
அரசியலையும் உறுதி குலைக்கும் வகையில் உள்ளது. பாராளுமன்றத்தின் மூலம்
தங்கள் நலன்களைப் பெற முடியும் என்று ஒரு காலத்தில் மில்லியன் கணக்கான
தொழிலாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இகழ்ச்சிபடுத்தப்பட்டுவிட்டது.
இக்காரணத்தினால்,இது
தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புதிய, உண்மையான சோசலிச இயக்கம் நிறுவப்படுவதற்கான முதல் படியின்
தேவையாகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்
முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல் இந்த இள
நிலையில் உள்ள வளர்ச்சி பற்றிய முழு நனவு, சோசலிச சமத்துவக் கட்சியை விரைவில் கட்டமைக்க வேண்டும்,
அது தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான முன்னோக்கு,
வேலைத்திட்டம் மற்றும் தலைமையை அளிக்க வேண்டும்
என்பதையும் காட்டுகிறது.