சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

May Day 2010

2010 மே தினம்

Peter Symonds
1 May 2010

Use this version to print | Send feedback

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின் தெளிவான சமிக்கைகளுக்கிடையே 2010 மே தினம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளர்கள் அதிகரிக்கும் வேலையின்மை, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை சேவைகள் இல்லாதொழிக்கப்படுதல், பணியிட நிலைமைகள் அழிப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றனர். அவர்கள் இப்பொழுது இதற்கெதிராக எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளனர்.

முதலாளித்துவத்தின் தோல்வியின் வெளிப்பாட்டுடன், மே தினத்தின் மிக முக்கியமான செய்தியான உலக சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும் என்பதே ஒரு உடனடித் தேவையாகிவிட்டது. 1930 களின் கோரக்காட்சிகளான, நிரந்தர பரந்த வேலையின்மை, உழைக்கும் மக்களின் பரந்த தட்டுக்களின் ஏழ்மை மற்றும் புதிய, இன்னும் கொடூரமான போர்களை நோக்கிய தீவிர நகர்வுகள் ஆகியவற்றை 2008ல் வெடித்தெழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியானது தோற்றுவிக்கின்றது.

வோல் ஸ்ட்ரீட்டில் வெடித்த பொருளாதாரக் கொந்தளிப்பானது மிகத் தீவிரமான இரண்டாவது கட்டத்தில் நுழைந்துவிட்டது. உலகெங்கிலுமுள்ள நிர்வாகங்கள், பெரும் எண்ணிக்கையான முக்கிய வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு அவைகள் பொறிந்து விடாமல் இருப்பதற்காக உட்செலுத்திய டிரில்லியன் கணக்கான டொலர்கள் இப்பொழுது அரசாங்க கணக்கு ஏடுகளில் மிகப் பெரிய அரசாங்கக் கடன்களாக உருவாகியுள்ளன. ஆளும் வட்டாரங்களில் இதற்குப் பொது விடையளித்தலாக இருப்பது, எந்தப் பொறுப்பையும் இதற்கு கொண்டிராத உழைக்கும் மக்கள் இந்த நெருக்கடிக்கு விலை கொடுக்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஆரம்பக் கவனமானது கிரேக்கத்தின் மீது குவிப்பைக் காட்டுகிறது. இங்கு பாப்பாண்ட்ரூ அரசாங்கமானது இன்னும் ஒரு கடுமையான சிக்கனப் பொதியாக ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சேவைகளை வெட்டுவதற்கும் மற்றும் பெரிய வரி உயர்வுகளைச் சுமத்துவதற்கும் தயார் செய்து வருகிறது. ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஏற்கனவே நிதியச் சந்தைகளின் அழுத்தத்தின் கீழ் உள்ளன. பொருளாதார வர்ணனையாளர்கள் பதட்டத்துடன் இந்த "தொற்று" அடுத்து எங்கு பரவும் என்று ஊகம் செய்கின்றனர். எந்த நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல: அதாவது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அனைத்தும் பெரும் மலை போன்ற கடன் ஆபத்தில் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால், சீனா ஒரு விதிவிலக்காகத் தோன்றுகிறது என்றாலும், செயற்கையான ஊக்கச் செலவினால் செயலாக்கம் பெற்ற அதன் பரபரப்பான வளர்ச்சியானது மிகப் பெரிய ஊகக் குமிழிகளை ஏற்படுத்தியுள்ளது. இவைகள் தவிர்க்க முடியாமல் வெடிக்கும்.

தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட வேண்டிய தொகைகளின் அளவானது நிதியச் சரிவின் அளவுகோளினால் வலியுறுத்திக் காட்டப்படுகின்றன. 2008-09ல் உலகச் செல்வத்தின் மதிப்பிடப்பட்ட இழப்பு $25 டிரில்லியன் டொலர்களுக்கும் அதிகமானது அதாவது கிட்டத்தட்ட உலக உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவிகிதம் ஆகும். நிதிய முறைக்கு முட்டுக் கொடுக்க அரசாங்கங்கள் நேரடியாகக் கொடுத்த உதவியானது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் ஆகும். அமெரிக்காவிலும் பிரிட்டனிலுமாக இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கால் பகுதிக்கு நெருங்கியதாக உள்ளது. இவ்வாறு கிரேக்கம் ஒரு பூகோள நிகழ்ச்சி நிரலுக்கு பரிசோதனைக் களமாக உள்ளது.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளான சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்கும், உற்பத்திச்சாதனங்கள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் இடையே உள்ள முரண்பாடும், உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிவிட்ட முதலாளித்துவ தேசிய அரசமைப்பு முறைக்கும் இடையே உள்ள முரண்பாடும் என்று கார்ல் மார்க்சினால் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே முதலில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி முன்னோடியில்லாத வகையில் சர்வதேசமயமாதல், ஆரம்பத்திலிருந்தே நெருக்கடியும் ஒரு பூகோள தன்மையைத்தான் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வர்க்க அழுத்தங்கள் விரைவாக தீவிரமாகிக் கொண்டு இருக்கின்றன. மிகவும் எடுத்துக்காட்டான முறையில் இதற்கான அடையாளங்கள் பூகோள முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் தோன்றியுள்ளன. அதாவது இங்கு நிதியப் பிரபுத்துவம் தனது ஒட்டுண்ணித்தனத்தின் நடவடிக்கைகளால் செழிப்பு அடைந்து கொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கையோ மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை அவர்களுடையே வேலைகளை விட்டு தூக்கி எறிந்துவிட்டது, அவர்களின் வீடுகளிலிருந்தே வெளியேற்றிவிட்டது மற்றும் பல சமயங்களில் தெருக்களுக்கே துரத்திவிட்டது. இந்த அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளும் செல்வந்த உயரடுக்கின் கருவியாக ஒபாமா நிர்வாகம் இருப்பது அம்பலமாகியுள்ளது. இது வெடிப்புத் தன்மை நிறைந்த வர்க்கப் போராட்டங்களுக்கு அரங்கு அமைக்கிறது.

அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியானது பதட்டங்களை முக்கிய சக்திகளிற்கு இடையே மோசமாக்குகிறது. ஏனென்றால் தம் போட்டி சக்திகளின் இழப்பில் தம்மை விடுவித்துக் கொள்ள முற்படுவது அதிகமாகிக் கொண்டு வருவதே. கிரேக்க நெருக்கடி ஏற்கனவே ஐரோப்பாவிற்குள் உறவுகளை சீர்குலைத்து, யூரோ மற்றும் ஐரோப்பிய ஐக்கியத்திற்கான முழுமையான திட்டத்தின் நீடித்து செயற்படக்கூடிய தன்மையையே வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. சீனாவிற்கு எதிராக பெரும் காப்புவரிகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் எழுந்துள்ளமை, ஒரு முழு வணிகப் போரைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாதம் என்ற நச்சு அரசியல் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நாட்டு வெறி ஆகியவை எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும், அடிப்படை காரணமான வர்க்கப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தூண்டிவிடப்படுகின்றன.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போட்டி இராணுவவாதம் மற்றும் போருக்கான எழுச்சிக்கு எரியூட்டுகின்றன. அதன் வரலாற்றுத் தன்மை வாய்ந்த வீழ்ச்சியை ஈடுகட்டும் விதத்தில் இராணுவ வலிமையை பயன்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் ஏற்கனவே உலக அரசியலில் ஸ்திரத்தன்மையை குலைக்கும் ஒரு ஆழமான காரணியாகிவிட்டது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போலியான மறைப்பின் கீழ், வாஷிங்டனானது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய முக்கிய மூலோபாயப் பகுதிகளை கட்டுப்படுத்த முயல்கிறது. ஈரானுக்கு எதிராக ஆபத்தான அச்சுறுத்தல்களை அமெரிக்கா கொடுக்கிறது. அதே நேரத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவற்றில் அதன் குற்றம் சார்ந்த போர்களைத் தொடர்கிறது. பல பிராந்திய வெடிப்புமிக்க இடங்கள் ஒரு பேரழிவைத் தரக்கூடிய சர்வதேசளவில் போரைத் தூண்டிவிடுவதற்கான சாத்தியப்பாட்டை கொண்டுள்ளன.

முதலாளித்துவத்தின் முரண்பாடுகளானது உலக மந்த நிலை மற்றும் போரை நோக்கிச் செல்லும் போது, அவை ஒரு முற்போக்கான தீர்விற்கு புறநிலைச் சூழலையும் தோற்றுவித்துள்ளன. முதலாளித்துவ வளர்ச்சி அதே வழிமுறையில் தனக்கான புதைகுழியை தோண்டுபவரான, ஒரு புதியதும் உயர்ந்த வடிவமாக சோசலிச சமூகத்தின் உருவாக்கியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்குகின்றது என்று மார்க்ஸ் விளங்கப்படுத்தினார். கடந்த மூன்று தசாப்தங்களில் உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது முன்னோடியில்லாத அளவிற்கு அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல நூறு மில்லியன் கணக்கான சீன மற்றும் இந்திய தொழிலாளர்கள் ஒரு குறுகிய காலத்தில் முதலாளித்துவ சுரண்டல் வகை சுழற்சி இலாபத்தை உயர்த்துவதற்காக இணைக்கப்பட்டாலும், தொழிலாள வர்க்கத்தின் சமூகக் கனத்தை அது மகத்தான முறையில் வலுப்பெறச் செய்துள்ளது.

பூகோளந்தழுவிய முறையில் அமைக்கப்பட்டுள்ள பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்கள் ஆகிய ஒரேவிதமான எதிரிகளைத்தான் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளுகின்றனர். அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கை நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போரிட போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே தம் கிரேக்க சக தொழிலாளர்களுடன் இணைந்துள்ளனர். தனியார்மயமாக்கல், ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புக்கள் ஆகிய திட்டத்திற்கு எதிராக இந்தியாவில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிய அளவில் இருந்தபோதிலும், ஆனால் முக்கியத்துவம் குறையாத வகையில் போராட்டங்கள் இன்னும் பலநாடுகளிலும் வெளிப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக, ஸ்ராலினிச கட்சிகள், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் ஆதரவு முன்னாள் இடதுகள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகளிடம் இருந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளர்கள் ஒரே மாதிரியான அரசியல் தடைகளைத்தான் எதிர்கொள்ளுகின்றனர். இவைகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு தாழ்த்த முற்படுகின்றன. எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்கள் தங்களின் மிக அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு அரசியல் அதிகாரத்தை நோக்கமாகவும் கொண்ட ஒரு போராட்டத்தின் ஊடாக முதலாளித்துவத்தை அகற்றி, சமூகத்தை சோசலிச வழி மூலம் மறுகட்டுமானத்திற்கு உட்படுத்துவதன் மூலமே அவைகளை பாதுகாக்க முடியும்.

1938 ல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன்கள் பற்றி ஐயம் எழுப்பிய அவநம்பிக்கைக்காரர்களுக்கு விடையிறுத்தார்: "வெகுஜனத்தின் நோக்குநிலை முதலில், முதலாளித்துவத்தின் சிதைவின் புறநிலைமைகளாலும், இரண்டாவதாக பழைய தொழிலாளர்கள் அமைப்புக்களின் துரோக அரசியலாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இக்காரணிகளில் முதலாவது தான் முக்கியமானதாகும்: அதாவது வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவக் எந்திரத்தை விட வலிமையானவை."

எழுபது ஆண்டுகளுக்கு பின்னரும், இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்த பொருளாதார ஏற்றத்தின் போது ஒரு புதிய வாழ்வை அனுபவித்த பல சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச அமைப்புகள் தற்போது இல்லை அல்லது சிதைவின் தீவிர நிலையில் தடுமாறுகின்றன. ஆனாலும் சோசலிசத்திற்கான பாதை தவிர்க்க முடியாததோ அல்லது தானாகவே ஏற்பட்டுவிடுவதோ அல்ல. ஒரு புரட்சிகர வேலைத்திட்டம், தலைமை இல்லாமல், மிக வெடிப்புத் தன்மை உடைய சமூகப் போராட்டங்களானது இலக்கு இல்லாமல் மற்றும் சிதைந்து வர்க்க எதிரிகளின் மறு குழுவாக்கத்தை அமைத்துக் கொண்டு அரசியல் பிற்போக்குத்தனத்திற்கான கதவைத் திறந்துவிட வகை செய்துவிடும்.

2010 மே தினத்தில், உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தங்கள் சகோதரத்துவ வாழ்த்துக்களை உலகெங்கிலுமுள்ள தங்கள் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இந்தப் பூகோளத்தில் சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு போராடுவதுடன், மே தினத்தின் உண்மைக் கொள்கைகளை தன்னுள் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பேரழிவுகளில் இருந்து வெளியேறும் வழி காண்பதற்கு முற்படும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இந்த சர்வதேச கட்சியில் சேர்ந்து அதை வரவிருக்கும் புரட்சிகர எழுச்சிகளுக்கான, முக்கிய புரட்சிகர தலைமையாக கட்டியமைக்க இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.