World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

At the invitation of the Left Party

The NPA's Alain Krivine speaks in Germany

இடது கட்சியின் அழைப்பின் பேரில்

NPA இன் அலன் கிறிவின் ஜேர்மனியில் பேசுகிறார்

By Dietmar Henning
27 March 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனிய இடது கட்சியுடன் இணைந்துள்ள Rosa Luxemburg Club அழைப்பின் பேரில் ஜேர்மனிய நகரமான Bielefeld ல் மார்ச் 17ம் தேதி அலன் கிறிவின் பேசினார். 69 வயது கிறிவின் French Ligue Communiste Révolutionnaire எனப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிறுவனரும் நீண்ட காலத் தலைவரும் ஆவார். கடந்த பெப்ருவரி மாதம் அது தன்னைக் கலைத்துக் கொண்டு "புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA)" ஆக மாறியது.

பார்வையாளர்களாக கிட்டத்தட்ட 40 இடது கட்சி ஆதரவாளர்களும், நகரத்தின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள் சிலரும் வந்திருந்தனர். மறுநாள் கிறிவின் பல்கலைக்கழகத்தில் 1968 மாணவர் புரட்சி பற்றிய ஒரு பட்டறையில் பங்கு பெற்றார்.

கிறிவினுடன் கழிக்கப்பட்ட மாலை எந்த அளவிற்கு NPA தன்னை உழைக்கும் மக்களுக்கு எதிராக முதலாளித்துவ அரசியலுடன் ஒருங்கிணைக்கத் தயார் அதாவது சோசலிசக் கட்சி (PS) கம்யூனிஸ்ட் கட்சி(PCF), பசுமைவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் என்பதைக் காட்டியது. மார்க்சிசத்தை தான் நிராகரித்ததையும் கிறிவின் நேரடியாக வெளிப்படுத்தினார்.

இவருடைய உரையும் அதைத் தொடர்ந்த விவாதமும் "Rage-organize the anger! On the state of the left in France (சீற்றம்! கோபத்தை ஒழுங்கு அமைக்கவும்! பிரான்ஸில் இடதின் நிலைப்பாடு பற்றி)" என்ற தலைப்பின் கீழ் இருந்தன. கிறிவின் கருத்துப்படி, தேர்தலில் முதல் சுற்றிலேயே "வலது தூக்கி எறியப்பட்டது". அவர் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தலைமையில் உள்ள ஆளும் UMP பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மை என்ன என்றால், Jean-Marie le Pen தலைமையில் உள்ள தீவிர வலதுசாரி தேசிய முன்னணியும் ஒப்புமையில் அதிக வாக்குப் பங்கைப் பெற்றது. அதே நேரத்தில் கிறிவினின் NPA 2.4 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. கடந்த ஆண்டு ஐரோப்பியத் தேர்தலில் கட்சி பெற்ற 6.1 சதவிகிதத்துடன் தெளிவாகக் குறைவு.

இந்த முடிவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தைத்தான் குறைகூறும் விதத்தில் கிறிவின் எதிர்கொண்டு, வருங்காலத்தில் இன்னும் நெருக்கமாக முதலாளித்துவ "இடது" சக்திகளுடன் ஒத்துழைக்க இருப்பதாக உறுதியளித்தார்.

இந்த முடிவிற்கு மக்களிடையே பரவியுள்ள "இருப்பதை ஏற்றுக் கொள்ளும்" தன்மைதான் பொறுப்பு என்று அவர் அறிவித்தார். குறிப்பாக "இளைஞர்களும் சாதாரண மக்களும்" வாக்களிக்கக்கூட முன்வரவில்லை." "கடந்த ஆண்டு மில்லியன் கணக்கானவர்கள் பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். இப்பொழுது அந்த இயக்கம் நாங்கள் NPA ஐ நிறுவியுள்ளபோது குறைந்துவிட்டது" என்று அவர் குறைகூறினார்.

இந்த "ஏற்றுக் கொள்ளும்" தன்மைக்கான பொறுப்பு ஓரளவிற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தைத்தான் சேரும் என்று கிறிவின் கூறினார். தனிப்பட்ட நடவடிக்கைகளை தனிமைப்படுத்தி, போராளிகளை பல தொடர்ச்சியான ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மூலம் சலிக்க வைத்து இயக்கத்தை அவர்கள் சிதைத்துவிட்டனர் என்றார். ஆனால் NPA யின் பங்கு பற்றி கிறிவின் எதுவும் கூறவில்லை. அது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை அதன் தந்திரோபாயங்களில் நெருக்கமாக ஆதரித்து எந்த நேரத்தில் குறை எதையும் கூறவில்லை.

NPA தன் பிரதான நடவடிக்கையில் ஏமாற்றம் அடைந்துள்ள தொழிலாளர்கள், இளைஞர்களை சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் கொண்டுவருவது என்பதாகக் காண்கிறது என்று கிறிவின் தெளிவுபடுத்தினார். இக்கட்சிகளுடன் NPA கூட்டு சேர்வதற்கு மேற்கோண்ட முயற்சிகளை அவர் விளக்கினார். இக்கட்சிகள் பல தசாப்தங்கள் பிரான்சுவா மித்திரோன், லியோனல் ஜோஸ்பன் ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தை நடத்தின, அவர்களுடைய வலதுசாரிக் கொள்கைகளால் பல தொழிலாளர்களின் வெறுப்பையும் சீற்றத்தையும் பெற்றனர் என்ற உண்மை இருந்தும் கூட.

சமீபத்தில்தான் NPA "அனைத்து இடது கட்சிகளையும் ஓய்வூதிய பிரச்சினையில் பொதுக் கோரிக்கைகளை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக" அவர் தெரிவித்தார். அழைக்கப்பட்டவற்றில் PS, பசுமைவாதிகள் மற்றும் PCF ஆகியவை அடங்கியிருந்தன. இந்த அமைப்புக்களுடன் NPA திட்டமிட்டு ஓய்வூதிய வயது அதிகரிக்கப்படுவதை எதிர்க்க முற்படுகிறது. சமீபத்தில்தான் PS தலைவர் Martine Aubry இன்னும் கூடுதலான பணி ஆண்டுகள் தேவை என்ற அழைப்பு விடுத்ததின் பின்னரும் இந்த நிலைப்பாடு உள்ளது. NPA அழைப்பை PS நிராகரித்தது. PCF மற்றும் பசுமைவாதிகள் ஓய்வூதியப் பிரச்சினை தொழிற்சங்கங்கள் கவனிக்க வேண்டும் என்று வாதிட்டுவிட்டன.

NPA யின் மற்றொரு கோரிக்கை, "மார்ச் 23 அன்று தெருக்களுக்கு வருக" என்பதாகும்--அந்த தினம் பிரெஞ்சு தொழிற்சங்கங்களால் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்காக என தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. "இடது ஐக்கியதைத்தான் அனைத்துப் போராட்டங்களிலும்" தான் வலியுறுத்தியதாக கிரிவின் கூறினார்.... "நாங்கள் ஒரு குறும் குழுவாதிகளாக நடந்து கொள்ளவில்லை, மற்றவர்களை துரோகிகள் என்று கூறவில்லை."

பிரான்ஸிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், NPA இழிவுபடுத்தப்பட்டுவிட்ட தொழிலாளர்களின் அதிகாரத்துவத்தினருக்கு மறைப்பு கொடுக்க NPA முற்படுகிறது. இது வெகுஜன இயக்கத்தைத் தளர்ச்சிக்கு உட்படுத்தி வீழ்த்திவிடும்.

மாலை உரையில், கிறிவின் மார்க்சிசத்திற்கு தன் இழிவையும் வெளிப்படுத்தினார். நிறுவப்பட்ட நேரத்திலேயே NPA ஆனது ட்ரொட்ஸ்கிசம், சோசலிசம் மற்றும் சர்வதேசியம் ஆகியவற்றை தூர ஏறிந்து, அமைப்பை அனைத்துவித மார்க்சிச-எதிர்ப்புச் சிந்தனைகளுக்கும் திறந்துவிட்டது. NPA க்குள் முன்னாள் LCR உறுப்பினர்களுடன், அனார்க்கிஷ்ட்டுகள், சே குவேரா ஆதரவாளர்கள், பெண்ணுரிமைவாதிகள், தொழிற்சங்கவாதிகள் இன்னும் முன்னாள் PCF மற்றும் பசுமைவாத உறுப்பினர்களும் உள்ளனர். இதைத்தவிர, எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர் என்று கிறிவின் குறிப்பிட்டார்.

ஆகவேதான், சோவியத் ஒன்றியம் எப்படி இருந்தது? இரட்டை அதிகாரம் என்றால் என்ன? Kronstad இன்னும் அதே போன்ற கேள்விகள்" பற்றி நாங்கள் விவாதம் நடத்துவதில்லை. கடந்த காலம் பற்றி விவாதித்து எவர் சரியென்று தீர்மானிப்பதும் பிரச்சினை அல்ல. இப்பொழுது முக்கியமானது, இப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும், வருங்காலத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

"LCR க்குள்ளும் நெருக்கமான வரம்புகள் உள்ளன"; இப்பொழுது அவை தேவையில்லை என்று கிறிவின் மேலும் தொடர்ந்தார்: "NPA யில் நாங்கள் பலவற்றைக் கைவிட்டோம்." கூட்டத்தில் இருந்து ஒருவர், பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் உறுப்பினரும் மொழிபெயர்ப்பாளருமான Manuel Kellner "லெனினிசம் உட்பட" என்று குறுக்கிட்டுக் கூறியபோது கிறிவின் இடித்துரைத்தார்: "ஆம், உண்மையில் அப்படித்தான்."

அன்று மாலை கிறிவின் ஒருமுறை கூட சோசலிசம் என்ற சொல்லைக் கூறவில்லை. இடைமருவல் கோரிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் தவிர்க்கும் வகையில், "நாங்கள் விரும்பும் சமூக முறை முதலில் பொருட்கள் நியாயமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதை கொண்டிருக்கும்" என்று அறிவித்தார்.

"தனியார் சொத்துக்களில் தலையீடும்" தேவைப்பட்டால் கருதப்படலாம் என்று கூறினார். ஆனால் அது ஜனநாயக முறைப்படி செய்யப்பட வேண்டும். முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் NPA க்குள் ஒற்றுமை உண்டு, "ஆனால் எப்படி என்பது பற்றித்தான் நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்."

NPA தன்னை ஏன் "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்று விவரித்துக் கொள்ளுகிறது என்று கேட்கப்பட்டதற்கு--அதே நேரத்தில் அது PS, PCF, தொழிற்சங்கங்கள் என்று முதலாளித்துவ முறையை ஆதரிப்பவற்றுடன் கூட்டுக்களை விரும்புகிறது--கிறிவின் மீண்டும் தவிர்க்கும் விதத்தில் விடை கொடுத்தார். "NPA ல் சிலர்" அத்தகைய கூட்டுக்களுக்கு எதிரானவர்கள் என்றும், மற்றவர்கள் அத்தகைய கூறுபாடுகளை குறும் குழுவாதங்களை உடையவை என்றும் கூறுகின்றனர். ஏனெனில் இன்னும் பல அதேபோன்ற கூட்டுக்கள் அமைக்கப்படலாம்--"நான் இரு குழுக்களுக்கும் நடுவில் உள்ளேன்.

ஜேர்மனிய இடது கட்சி பற்றி குறைகூறுவதையும் கிறிவின் தவிர்த்தார். அது ஜேர்மனிய மாநிலங்களான பேர்லின், பிராண்டன்பேர்க் ஆகியவற்றை ஆள்கிறது. முக்கிய சமூகநலக் குறைப்புக்களை செயல்படுத்தியுள்ளது. NPA க்கும் இடது கட்சிக்கும் அடிப்படையில் அதிக வேறுபாடுகள் இல்லை என்று கிறிவின் தெளிவுபடுத்தினார். அதுதான் அவரைப் பேச அழைத்துள்ளது. இடது கட்சி அரசாங்கத்தில் பங்கு பெற வேண்டுமா என்பது பற்றியும் விவாதம் உள்ளது என்று கிறிவின் கூறினார்.

கிறிவின் கருத்துப்படி ஒரு கட்சியில் பங்கு பெறுவது கொள்கைகளின் அடிப்படையில் என்று இல்லாமல், அது கொண்டிருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்தது. "ஒரு குழு மிகச் சிறியதாக இருந்தால், பெரிய கட்சிகளில் சேருவது பற்றி பரிசீலிக்க வேண்டும்" என்றார் அவர். இத்தகைய வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் பப்லோவாதக் குழு Sinistra Crita (Critical Left) ன் அனுபவங்களை அவர் குறிப்பிட்டார் அது பல ஆண்டுகள் Rifondazine Communista (Refounded Communism) க்குள் இத்தாலியில் செயல்பட்டது. இக்குழு பின்னர் ரோமனோ பிரோடியின் அரசாங்கத்தின் ஒரு பகுதி ஆயிற்று. இரண்டே ஆண்டுகளில் அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்திய தாக்குதல் சில்வியோ பெர்லுஸ்கோனி மீண்டும் பதவிக்கு வருவதற்கு வழிவகுத்தது. பிரோடி அரசாங்கத்தில் Sinistra Critica பங்கு பெற்றதை நியாயப்படுத்தும் வகையில் கிறிவின் அந்த அமைப்பு 150 உறுப்பினர்களைத்தான் கொண்டிருந்தது, இப்பொழுது 1,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்றார்.