World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold series of election meetings

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பல தேர்தல் கூட்டங்களை நடத்தவுள்ளது

18 March 2010

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர் அமைப்பும், ஏப்பிரல் 8 இலங்கையில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக பல சிறப்புக் கூட்டங்களை நடத்தவுள்ளன. சோ.ச.க. தலைநகர் கொழும்பிலும், தெற்கில் காலி மாவட்டத்திலும், மத்திய பெருந்தோட்டப் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் மற்றும் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்திலுமாக நான்கு மாவட்டங்களில் மொத்தம் 58 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அடுத்த அரசாங்கம் வாழ்க்கைத் தரங்கள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் உக்கிரமான தாக்குதல்களை தொடுக்கும் என சோ.ச.க. எச்சரிக்கின்றது. அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளுமாக சகல கட்சிகளும், இலாப அமைப்பு முறையை பாதுகாப்பதோடு மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்த வேண்டும் என்பதில் உடன்பாடுகொண்டுள்ளன. நிகழ்ச்சித் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினாலேயே திட்டமிடப்படுகிறது. அது பொதுச் செலவுகளை வெட்டுவதன் மூலமும் வரிகளை அதிகரிப்பதன் மூலமும் மோசமான வெட்டுக்களை மேற்கொள்வதன் ஊடாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதியாகக் குறைக்குமாறு கோருகின்றது.

சோ.ச.க. தொழிலாளர்களுக்கு கல்வியூட்டவும் அவர்களை சகல முதலாளித்துவ கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக, ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டவும் பிரச்சாரம் செய்கின்றது. சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளை இட்டு நிரப்பக்கூடியவாறு மறு ஒழுங்கு செய்வதற்காக, ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக தமது உரிமைகளை பாதுகாக்க உழைக்கும் மக்கள் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் என சோ.ச.க. வேட்பாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

சோ.ச.க. தனது அரசியல் வேலைத் திட்டத்தை முன்வைக்கவும் மற்றும் இத்தகைய இன்றியமையாத பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலை தொடக்கி வைக்கவும் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்தக் கூட்டத்துக்க சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்டம் நடைபெறும் திகதிகள்:

ஏப்பிரல் 3, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, அம்பலங்கொட நகர சபை மண்டபம்

ஏப்பிரல் 4, ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணிக்கு, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்