World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

On eve of EU summit

Europe split over Greek crisis

ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக

கிரேக்க நெருக்கடி பற்றி ஐரோப்பிய சக்திகள் பிளவு

By Stefan Steinberg
25 March 2010

Use this version to print | Send feedback

வியாழன், வெள்ளிக் கிழமைகளில் பிரஸ்ஸல்ஸில் நடக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் தலைவர்களுடைய உச்சிமாநாட்டில் ஒரு பொருளாதார, அரசியல் சங்கடத்தை தவிர்க்கும் வகையிலும், கிரேக்க கடன் நெருக்கடி பற்றி ஒருவித சமரசத்தை அடைவதற்கும் ஐரோப்பிய இராஜதந்திரிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

உச்சி மாநாட்டிற்கு முன்பான நிலைமை முக்கிய ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலுக்கும் இடையே தீவிர வேறுபாடுகள் நிறைந்ததைக் காட்டியது. மேர்க்கெல் பல முறையும் நிதியச் சந்தைகளுக்கு உறுதிகொடுக்கும் வகையில் நிதியஉதவி கொடுக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தி வந்துள்ளார். சந்தைகளும் கிரேக்க அரசாங்க வங்குரோத்து பற்றி அதிக பந்தயம் கட்டியுள்ளன.

அதே நேரத்தில் ஐரோப்பிய நாணயத்தை கொண்டிருக்கும் 16 நாடுகளில் ஒன்றாக கிரேக்கத்தின் நெருக்கடி யூரோ மீது சர்வதேச நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. யூரோவின் மதிப்பு சமீபத்திய வாரங்களில் தீவிரமாகக் குறைந்து விட்டது.

வரவிருக்கும் மாதங்களில் தன் கடன் பாக்கிகளை சமாளிக்க ஏதென்ஸுக்கு பல பில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன. சமீபத்தில்தான் கிரேக்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சி பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ, சர்வதேச ஊகவாணிபம் தமது அரசாங்க பத்திரங்களுக்கு எதிராக நிதியுதவி பெறமுடியாமல் செய்வதால் கிரேக்கத்தின் கடன்வாங்குதல் செலவுகள் அதிகமாகிவிட்டதால், அதன் கடுமையான சேமிப்பு நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த சேமிப்புக்களை இழக்கச் செய்துவிட்டதால், தன்னுடைய அரசாங்கம் கடன் திருப்பிக் கொடுக்க முடியாது போய்விடக்கூடும் என்று எச்சரித்தார்.

கிரேக்கத்திற்குள் சிக்கன நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு ஏற்கனவே இரு ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்னமும் பெருகுகிறது. சமூக ஜனநாயக PASOK பாப்பாண்ட்ரூ கட்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள கிரேக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை குறைக்கும் விதத்தில் ஒரு நாள் நடவடிக்கைகள், பயனற்ற எதிர்ப்புக்கள் ஆகியவற்றை நடத்துவதின் மூலம் எதிர்ப்பைக் களையிளக்கச்செய்ய இயன்றதைச் செய்கின்றன. தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்களில் கடுமையான குறைப்புக்கள் தேவை, ஆனால் அவை "நியாயமாக இருக்க வேண்டும்", அவற்றை இயற்றுவதில் தொழிற்சங்கங்களுக்கும் தொடர்பு வேண்டும் என்று கூறுகின்றன.

அதே நேரத்தில் கிரேக்கத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் மக்கள் சீற்றத்தை பாப்பாண்ட்ரூவிடம் இருந்து திசை திருப்பவும், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயற்றப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அது ஒன்றுபட்ட போராட்டத்தை தடுக்கவும் தேசியவாதத்தை முன்னெடுக்கின்றன.

ஜேர்மனிய அரசாங்கத்தின் நிலைப்பாடு ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ள "ஒரு மூத்த அதிகாரியால்" சுருக்கமாக கூறப்பட்டுள்ளது: "நடவடிக்கைக்கான இறுதி நிபந்தனை, நிதிய சந்தைகள் இயலாமல் போகும் பட்சத்தில் கிரேக்கத்திற்கு உதவுவது என்பதுதான்".

ஒரு வாரத்திற்கு முன்பு அதிபர் மேர்க்கெல் தன்னுடைய நிதிய மந்திரியிடம் இருந்தே தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் (IMF) கிரேக்கத்திற்கு உதவுவதை தான் ஏற்கத் தயார் என்று அறிவித்தார்; அதே நேரத்தில் ஐரோப்பிய உதவி கிரேக்கத்திற்கு கொடுக்கப்படுவதற்கான காரணத்தை தான் காணவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரான்ஸின் தலைமையில், ஜேர்மனிய நிதிய மந்திரி வொல்ப்காங் ஷெளபில், மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் (ECB) இதுவரை சர்வதேச நாணய நிதியம் தொடர்பு கொள்ளுவதை எதிர்த்துள்ளனர். Der Spiegel கருத்தின்படி, அத்தகைய குறுக்கீடு, "ஐரோப்பாவின் திவால் என்பதை வாஷிங்டன் தளத்தைக் கொண்ட ஒரு நிறுவனம் அறிவிக்கும் விதத்தில் அமைந்துவிடும்."

ஜேர்மனிய வார ஏடு Die Zeit க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் ஐரோப்பிய மத்திய வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் Lorenzo Bini Smaghi கிரேக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் உதவி கொடுப்பதை எதிர்ப்பதை வலியுறுத்தினார். "சர்வதேச நாணய நிதியம் தலையிட்டால், ஒரு சர்வதேச அமைப்பு என்னும் வெளியுதவியின் மூலம்தான் நாணயம் தப்பிப்பிழைத்தது என்ற விதித்தில் யூரோவின் தோற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.... கடந்த சில நாட்களாக சந்தையின் விளைவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் குறுக்கிடு யூரோவின் உறுதிக்கு பாதகமாக இருக்கும் என்பதைக் காட்டியுள்ளன."

கடந்த வாரம் மேர்க்கெல் ஜேர்மனிய வானொலிக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த உதவியையும் நாடவில்லை என்று அறிவித்ததுடன், தான் அறிந்தவரையில் கிரேக்க நெருக்கடி ஐரோப்பிய உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில்கூட இல்லை என்றார்.

மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதற்கு விடையிறுப்பு விரைவில் வந்தன. திங்களன்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் கிரேக்கப் பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருக்கும் என்றும் ஒரு தீர்வு காணப்படும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறிவித்தார். இதே போன்ற கருத்துக்கள் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸே மனுவல் பரோசாவாலும் கொடுக்கப்பட்டன.

கிரேக்க அரசாங்கம் இதை கசப்புடன் எதிர்கொண்டது. "அது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றால் நாம் அதை முன்வைப்போம்" என்று பாப்பாண்ட்ரூ அறிவித்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ஸபடேரோவும் வியாழனன்று 16 யூரோப்பகுதி நாடுகளின் தனிக் கூட்டம் கிரேக்க நெருக்கடி பற்றி வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். ஐரோப்பிய நாணயத்தின் 10 ஆண்டு வரலாற்றில் அது இரண்டாவது அத்தகைய கூட்டமாக இருக்கும்.

பிரஸ்ஸல்ஸில் இருந்து உடன்பாட்டிற்கான அழுத்தம் நிதியச் சந்தைகளில் இருந்தும் வந்துள்ளன; இதையொட்டி டாலருக்கு எதிராக யூரோவின் மதிப்பு இந்த வாரம் குறைந்தது. புதனன்று ஒரு சந்தை மூலோபாயம் இயற்றுபவர் கூறினார்: "கிரேக்கம் கடன்சரிதல் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், அது எப்படி குறுகிய கால கடன் நெருக்கடிக்காக 53 பில்லியன் யூரோக்கள் வாங்கப் போகிறது என்பது பற்றி நம்பகமான தீர்வு இல்லாததால்.... யூரோ பெருகிய முறையில் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது."

இந்தப் பின்னணியில் பாரிஸில் உள்ள அரசாங்க ஆதாரங்கள் பிரான்ஸ் இப்பொழுது ஜேர்மனியின் திட்டமான சர்வதேச நாணய நிதியம் குறுக்கீட்டிற்கு உடன்படத் தயார் என்று கூறியுள்ளன. ஆனால் சர்வதேச நாணய நிதியம் கிரேக்கம் தன் கடன்களைப் புதுப்பித்துக் கொள்ள தேவையான அனைத்து நிதியையும் தன்னால் கொடுக்க முடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியமும் தன் பங்கிற்கு நிதியம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக்கியுள்ளது. Financial Times இல் வந்துள்ள ஒரு தகவல்படி சர்வதேச நாணய நிதியம் கிரேக்கத்திற்கு தேவைப்படும் 20 பில்லியன் யூரோக்களில் 10 பில்லியன் யூரோக்கள் தரத் தயார் என்றும் மற்றவை ஐரோப்பாவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

ஐரோப்பிய தலைவர்கள் கிரேக்கத்தை பிணை எடுக்க திரட்டப்படும் நிதிக்கு எந்த நாடுகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற உருப்படியான உடன்பாட்டை இன்னமும் காணவில்லை. மேர்க்கெல் இதுவரை ஜேர்மனிக்கு எந்த கொடுக்கலும் இல்லை என்று வாதிட்டு, அத்தகைய உதவி ஐரோப்பிய உடன்பாட்டு விதிகளை மீறும் என்பதுடன் அரசியலமைப்பிற்கும் முரணானது என்று கூறியுள்ளார்.

இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கிரேக்க அரசாங்கம் தொடர அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் பேர்லின் உறுதியாக உள்ளது. ஜேர்மனியில் இருந்து உருப்படியான உதவி கிடைக்காது என்று கூறிவிட்ட மேர்க்கெல் மற்ற நாடுகள் கொடுக்கும் உதவிகளும் கிரேக்கம் செலவுகளை குறைக்கும் திட்டத்துடன் கடுமையாக பிணைந்து இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் பரபரப்புடன் உச்சிமாநாட்டில் சமரச அறிக்கைக்கு பாடுபடும்போது, இறுதி அறிக்கை ஐரோப்பிய நிதி உதவி பற்றி உறுதியாக எதையும் கூறாது என்பது தெளிவு.

நெருக்கடி தீவிரமாக உள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தேசியவாதத்தை தூண்டுவிடுகின்றன. இது ஐரோப்பிய ஒன்றியத்தையே சிதைக்கக்கூடிய பிளவுப் போக்குகளுக்கு ஊக்கும் கொடுக்கிறது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் முழுப்பிரிவின் வாழ்க்கைத் தரங்ளையும் குறைப்பதற்கு ஒரு முன்னோடியை ஏற்படுத்த சக்தி வாய்ந்த நிதிய அமைப்புக்களால் இலக்கு கொள்ளப்பட்டுவிட்ட கிரேக்கம் இப்பொழுது யூரோப்பகுதி மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலம் பற்றிய போர்க்களமாக மாறிவிட்டது.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.
கிரேக்க கடன் நெருக்கடி வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை அடையாளம் காட்டுகிறது