World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

In the aftermath of the health care vote

வைத்திய பராமரிப்பு பாதுகாப்புச் சட்ட வாக்களிப்பிற்கு பின்னர்

David North and Joe Kishore
27 March 2010

Use this version to print | Send feedback

வைத்திய பராமரிப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டபின், கடந்த வாரம் சட்டத்திற்காக வாக்களித்த காங்கிரஸின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வலதுசாரிகளின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள், மிரட்டல்கள் பல இருந்தன. தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன. நியூயோர்க், ஓகையோ, கன்சாஸ், அரிஜோனா ஆகிய நகரங்களில் உள்ள ஜனநாயக் கட்சி அலுவலகங்கள் ஜன்னல்கள் வழியே கற்கள் வீசப்பட்டன.

இச்செயல்கள் பெரும்பாலும் பாசிச கூறுபாடுகளினுடையவை. பல நேரமும் மூளைக் கோளாறு விளிம்பில் இருப்பவர்களுடையது. அவர்களுடைய சமூகக் கருத்தாய்வுகள் அமெரிக்காவில் வானொலிப் பேச்சில் அன்றாடம் வாடிக்கையாக கூறப்படும் பிற்போக்குத்தன எதிர்ப்புக்களால் தூண்டப்படுபவை, ஊக்கம் பெறுபவை.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, புதனன்று பிரதிநிதிகள் மன்றத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஒரு உள்கூட்டத்தை FBI, அமெரிக்க தலைநகர பொலிஸாருடனும் நடத்தினர். கூட்டத்தில் இருந்து ஒருவர் கூறியபடி அவர்கள் வாஷிங்டனிலும் அவர்கள் தொகுதிகளிலும் இப்பொழுது தொடங்கியுள்ள வசந்தகால இடைவெளியின்போது பாதுகாப்பு பற்றி "தீவிர கவலை" கொண்டுள்ளது பற்றி விவாதித்தனர்.

காங்கிரஸின் தனி உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறை அச்சம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த வாரம் வந்துள்ள இந்தச் செயல்கள், அச்சுறுத்தல்கள் ஒரு வெகுஜன வலதுசாரி இயக்கத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவதற்கு சான்றுகள் அதிகம் இல்லை. மாறாக, தீவிர வலதில் இருந்து வந்துள்ள எதிர்ப்பின் அளவையும், அரசியல் முக்கியத்துவத்தையும் செய்தி ஊடகம் பெரிதாகக் காட்டுகின்றது என்ற உணர்வுதான் இருக்கிறது.

எதற்காக இப்படிச் செய்ய வேண்டும்? ஒபாமாவின் வைத்திய பராமரிப்பு பாதுகாப்புச் சட்டம் நிதிய, பெருநிறுவன உயயரடுக்கின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. சட்டம் இயற்றப்படும்போது, மக்களைத் திருப்தி செய்வதற்காக, காப்பீடு இல்லாத மில்லியன் கணக்கான மக்களுக்கு இது வழங்கும் "சீர்திருத்தம்" என்று கூறப்பட்டாலும், ஆளும் உயரடுக்கிற்குள் சட்டத்தின் முக்கிய நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு கொடுக்கும் வைத்திய பராமரிப்பு பாதுகாப்புச் செலவுகளை கணிசமாக குறைக்க வேண்டும் என்பது எப்பொழுதுமே அறியப்பட்டிருந்தது.

உண்மையில், வைத்திய பராமரிப்பு பாதுகாப்பு செலவுகள் குறைக்கப்படுதல், "தேவையற்ற பரிசோதனைகள் குறைத்தல்" போன்றவற்றை பற்றிய மறைமுக, தெளிவற்ற குறிப்புக்கள்தான் ஒபாமா நிர்வாகம் மக்களுக்கு அதன் திட்டமிடப்பட்டுள்ள "சீர்திருத்தம் பற்றிய உண்மை, நோக்கம், இறுதி விளைவு பற்றி தெரிவிக்கவில்லை என்ற பரந்த சந்தேகத்தை மக்களிடையே தூண்டிவிட்டது. மேலும் "மக்கள் விருப்பம்" என்ற தன் உறுதியை விரைவில் கைவிட்டதும், அக்கருத்து வைத்திய பராமரிப்பு பாதுகாப்பு முறையில் எந்த தீவிர சீர்திருத்தத்திற்கு முற்றிலும் அடிப்படையானது என்று தாராளவாத ஆதரவாளர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்ததும் முழு முயற்சியின் அரசியல் நம்பகத் தன்மையையும் சிதைத்தது.

பெருகிய முறையில் மக்கள் விரோதப் போக்கு ஏற்பட்டது, மாசாச்சுசட்ஸ் "தாராளவாத கோட்டை என்று ஜனநாயகக் கட்சி கருதியிருந்ததில் தேர்தல் சங்கடத்தை ஏற்படுத்தியது; அந்த மாநிலத்தில் ஏற்கனவே மாற்றத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் தனிநபர் "கட்டாயப் பங்கு" சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மறைந்த எட்வர்ட் கென்னடியின் இடத்திற்கு நடந்த செனட் தேர்தல் வைத்திய பராமரிப்பு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான "41வது வாக்கை" கொடுக்க உறுதியளித்த குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு சென்றது.

தேர்தல் முடிந்தவுடன் ஜனநாயகக் கட்சியின் தொழிலாள வர்க்க பிரிவு ஒபாமாவின் சட்டத்தை பேரவலம் கொடுக்கும் விதத்தில் நிராகரித்தது என்பது பரந்த அளவில் உணரப்பட்டது. இதனால் நிர்வாகமும் ஜனநாயக காங்கிரஸ் தலைமையும் மூலோபாயம், தந்திரோபாயத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்தன.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை, "மக்கள் கருத்து" தகர்க்கப்பட்டதை நியாப்படுத்தி, பல மற்ற சலுகைகளையும் "இருகட்சி முறை" என்ற பெயரில் அளித்தது, சட்டத்தை குடியரசுக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் இயற்ற அழுத்தும் கொடுக்கும் என்று அறிவித்தது. ஆனால் இந்த மாற்றம் முந்தைய சலுகைகளை நிராகரித்தல் என்பதைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் மிகப் பிற்போக்குத்தன பிரிவுகளுக்கு கருக்கலைப்பு பிரச்சினை உட்பட இன்னும் பல சலுகைகளை ஒபாமா கொடுத்தார்.

பிரதிநிதிகள் மன்றம், செனட் இரண்டிலும் பொதுவாக ஓய்வறைக்குக்கூட குடியரசுக் கட்சியினரின் அனுமதிக்கு கெஞ்சி உள்ளே நுழையும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் திடீரென வலுவான உறுதிப்பாட்டை கொண்ட நிலைப்பாட்டைப் பெற்றனர். பல தசாப்தங்களாக எந்தச் சட்டமும் "மிக அதிக" 60 வாக்குகள் பெரும்பான்மை இல்லாமல் இயற்றப்படக்கூடாது என்று வலியுறுத்தியவர்கள், திடீரென சட்டவரைவை இயற்ற ஒரு வாக்கு வித்தியாசம்கூட போதும் என்று புதிய மூலோபாயத்தை நிறுவினர்.

ஜனநாயகக் கட்சியினரின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தைரியத்தின் ஆதாரம் எது? வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள அவர்கள் எஜமானர்களும், சக்தி வாய்ந்த பெருநிறுவன இயக்குனர்களும் தாங்கள் சட்டம் இயற்றப்பட வேண்டும் என விரும்புவதைத் தெளிவுபடுத்திவிட்டனர்.

தன்னுடைய பங்கிற்கு குடியரசுக் கட்சித் தலைமை தடுமாற்றத்தில் விடப்பட்டது. மிகுந்த வலதுசாரி பிரிவினர் எப்பொழுதும் எதிர்க்கும் தளத்தில் நிறுத்தும் அரசியல் மூலோபாயத்தை அது நம்பியிருக்கும் வரை, இப்படி காற்று திசை மாறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. வைத்திய பராமரிப்பு பாதுகாப்பு மொத்த மாற்றத்தை ஒரு சோசலிச நடவடிக்கை என்று காட்ட முற்பட்ட அவர்களுடைய தந்திரோபாய சார்பு மாற்றம் அவர்களுடைய முயற்சியில் தெளிவாக இருந்தது. பெருநிறுவன உயரடுக்கு ஆதரவாளர்கள் சமூகநலச் செலவுகள்மீது ஆரம்பகட்ட தாக்குதல் என்று அதை எடுத்துக் கொண்டனர்.

வைத்திய பராமரிப்பு பாதுகாப்பு "விவாதத்தின்" இறுதிநாட்களில் செய்தி ஊடகத்தின் மாற்றம் வெள்ளை மாளிகை, காங்கிரஸில் ஏற்பட்டத்தை போலவே வியத்தகு முறையில் இருந்தது. குடியரசு எதிர்க்கட்சியினர் தடைசெய்தல், இன்னும் மோசமான தன்மையுடையது என்று சித்தரிக்கப்பட்டது. பொதுவாக செய்தி ஊடகம் குடியரசு சட்டமன்ற உறுப்பினர்கள் பாசிச கூறுபாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பைப் புறக்கணிக்கும். ஆனால் சட்டவரைவின்மீது இறுதியான வாக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு, முக்கிய இணையங்கள் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது இனவெறியாளர்கள், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நிறைந்த கூட்டம் வசைச்சொற்களை வாரிவழங்கியதை காட்டின.

சட்ட வரைவு இயற்றப்பட்டபின், செய்தி ஊடகம் இதை மகத்தான சீர்திருத்தச் செயல் என்று ஒபாமா நிர்வாகம் சித்தரிக்க முயன்றதற்கு பெரும் ஒப்புதல் கொடுத்தது. சட்டத்திற்கு எதிர்ப்பு ஒரு வலதுசாரி நிகழ்வு என்று காட்டப்பட்டது. வலதுசாரியின் வன்முறைக் குவிப்பு இன்னும் பரந்த அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் கவலைகள் ஆகியவற்றை மெளனப்படுத்தவும், இழிவுபடுத்தவும் மேற்கோள்ளப்பட்ட முயற்சி ஆகும்.

உண்மையில் வன்முறையை கருத்திலெடுக்காமல் விடக்கூடாது. ஒரு புறநிலை நெருக்கடியில் இருந்து வரும் ஆழ்ந்த அழுத்தங்களை இது பிரதிபலிக்கிறது. ஆனால், தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய ஆபத்து ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து உள்ள வெகுஜன எதிர்ப்பு ஒரு முற்போக்கான சோசலிச வெளிப்பாட்டை காணவில்லை என்பதுதான். இந்த நிலைமைகளின் கீழ்த்தான் ஜனரஞ்சக வார்த்தை ஜாலங்களுடனான ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி ஒரு உண்மை அச்சுறுத்தலாக மாறும்.