World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Former CIA asset Allawi touted as next Iraqi prime minister முன்னாள் CIA சொத்தான அல்லாவி அடுத்த ஈராக்கிய பிரதம மந்திரியாக ஊக்குவிக்கப்படுகிறார் By James Cogan மார்ச் 7 ஈராக்கிய தேர்தலின் முடிவானது 325 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மிக அதிக மொத்த இடங்களை சுன்னி தளத்தை உடையதும், மதசார்பற்றது எனக் கூறிக்கொள்ளும் ஐயத் அல்லாவி தலைமையில் உள்ள ஈராக்கியா கூட்டணி பெற்றுள்ளது. அவர் ஒரு முன்னாள் CIA இன் சொத்தும், அமெரிக்கா அமர்த்திய பிரதம மந்திரியும் ஆவார். ஆனால் வெறும் 91 உறுப்பினர் இடங்களைப் பெற்றுள்ள அல்லாவி தேவையான 163 இடப் பெரும்பான்மையை பெறுவதற்கு மற்ற பிரிவுகளுடன் உடன்பாடு செய்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பரபரப்பான பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு காண்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி மற்றும் அவருடைய பெரும்பான்மை ஷியைத் தளமாக கொண்ட State of Law கூட்டணி 89 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது மிகப் பெரிய உறுப்பினர்கள் தொகுப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இக் கட்சியானது முடிவுகள் நெறியற்றவை என்று அறிவித்து கைகள் மூலம் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. இருந்த போதிலும்கூட, கடந்த வார இறுதியில் State of Law பிரதிநிதிகள் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஈரானில் ஷியைட் அடிப்படைவாத ஈராக்கிய தேசிய கூட்டணி (INA) தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். INA மதகுருமார் மொக்டடா அல்-சதர் மற்றும் ஈரானிய தொடர்புடைய ISCI என்னும் ஈராக்கிய இஸ்லாமிய தலைமைக் குழுவிற்கு விசுவாசமாக இருக்கும் சாத்தியக் கூறுபாடுகளின் ஆதிக்கத்தில் உள்ளது. ஒரு சில மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவுடன் இரு ஷியைட் பிரிவுகளும் பெரும்பான்மையை கொண்டு அல்லாவி பதவிக்கு வருவதைத் தடுக்க முடியும். மாலிகியின் குற்றச்சாட்டுகளை ஒபாமா நிர்வாகம் நிராகரித்து, அது அல்லாவியின் வெற்றியை வரவேற்கிறது, அவர் பிரதமராவதை விரும்புகிறது என்ற தெளிவான அடையாளத்தை கொடுத்துள்ளது. அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஹில் மற்றும் இராணுவத் தளபதி ரேமண்ட் ஒடியர்னோ ஆகியோரின் கூட்டறிக்கை, "பரந்த அல்லது தீவிர மோசடி இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை" என்று கூறுகிறது. ஐ.நா. தூதர் அட் மெல்கெர்ட் முடிவுகள் "நம்பகத் தன்மை உடையவை", "நேரத்தை ஒட்டி வாக்குகள் மறு எண்ணப்படல் கடினம்" என்று கூறியுள்ளார். எகிப்து, ஜோர்டான், செளதி அரேபிய நாடுகளின் அரசாங்கங்கள் பகிரங்கமாக அல்லாவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. ஈரானில் அமெரிக்கப் போர் வெளிப்படையாக விவாதிக்கப்படும் சூழ்நிலையில், வாஷிங்டன் வரவிருக்கும் அடுத்த அரசாங்கம் மீண்டும் ஈராக்கிய ஷியைட் கட்சிகள், ஈரானிய ஆட்சியுடன் நீண்ட காலத் தொடர்புடையவை, பக்தாத்தை ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. இதற்கு எதிராக அல்லாவி பகுதியிலுள்ள அமெரிக்க சார்பு ஆளும் உயரடுக்குகள் மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கிற்கு கொண்டுள்ள விரோதப் போக்கில் தோய்ந்தவர் ஆவார். இரு ஷியைட் பிரிவுகளும் இல்லாத ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கு, மற்ற அனைத்துப் பிரிவுகளின் உடன்பாட்டையும் பெற வேண்டும் சிறிய சுன்னி, இனவழி துர்க்மன், 18 இடங்களை கொண்டுள்ள கிறிஸ்துவ தளமுடைய கட்சிகள், இவருக்கு அனேகமாக ஆதரவைத் தரும். ஆனால் வடக்கிலுள்ள தன்னாட்சி குர்திஷ வட்டார அரசாங்கத்தின் (KRG) குர்திஷ் கட்சிகளுடனும் உடன்பாட்டை காண வேண்டும். KRG ஆளும் கட்சிகளின் குர்திஷ் கூட்டு 43 இடங்களை கொண்டுள்ளது. இரு குர்திஷ் எதிர்ப்பு இயக்கங்களான Gorran மற்றும் Kurdish Islamic Party ஆகியவை 14 இடங்களைப் பெற்றன. ஈராக்கியா மற்றும் குர்திஷ் பிரிவுகளுக்கு இடையே எந்த உடன்பாடும் இடர்பாடுகளைக் கொடுக்கும். வடக்கு ஈராக்கில் கூடுதலாக கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகள் வேண்டும் என்ற குர்திஷ் விழைவுகளை அல்லாவி எதிர்த்துள்ளார். அவருடைய ஆதரவாளர்களில் சிலர் குர்திஷ் கோரிக்கையான எண்ணெய் வளமுடைய மாநிலமான கிர்குர்க் ஆனது KRG உடன் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட நிராகரித்துள்ளனர். ஈராக்கியா கிர்குர்க்கில் பாதி இடங்களை வென்றுள்ளது, பெரும்பாலான வாக்குகள் மாநிலத்தின் இனவழி அரபு, துர்க்மன் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. சர்வதேச செய்தி ஊடகமானது சதரிய இயக்கத்தின் வாய்ப்பு பற்றியும் ஊகத்தை வெளியிட்டுள்ளது. இது INA வின் 70 தொகுதிகளில் 38 ஐக் கைப்பற்றியது. ISCI ல் இருந்து பிரிந்து அல்லாவிக்கு ஆதரவு கொடுக்கக்கூடும். முக்கிய சதரிஸ்ட்டுக்கள் தேர்தலின்போது அவர்களின் முன்னுரிமை மாலிகி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் என்று கூறினர். அல்லாவிக்கும் மொக்டாடா அல் சதரின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. எந்த அமெரிக்க முக்கிய புள்ளியும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், வாஷிங்டன் விரும்பக்கூடிய விளைவு அல்லாவியும், மாலிகியும் தங்கள் இரு கூட்டணிகளை தலைமையாக கொண்டு அரசாங்கத்தை அமைப்பது என்பதாக இருக்கலாம். மாலிகி ஒரு ஷியைட் அடிப்படைவாதி, ஈரானுக்கு பரிவு உணர்வு காட்டுபவர் ஆனால் பிரதம மந்திரி என்னும் முறையில், 2006 இருந்து 2008 வரை ஈராக்கியப் போரின் குருதி சிந்திய மோதல்களில் அவர் அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமாக பணியாற்றியுள்ளார். பஸ்ரா, அமரா மற்றும் பாக்தாத்தில் குடிப்படை ஷியைட் போராளிகள் அழிக்கப்படுவதற்கு அவர் தலைமை தாங்கினார். அவர்கள் அமெரிக்க இராணுவத்தை எதிர்ப்பதில் தொடர்ந்து செயற்பட்டனர். 2009 ல் மாலிகியின் Da'wa கட்சி ISCIல் இருந்து பிரிந்து State of Law என்று INA க்கு போட்டியான ஷியா கட்சியாயிற்று. அவர் தன்னுடைய முக்கிய ஆதரவை அமெரிக்காவிடமிருந்து பயிற்சி பெற்ற இராணுவ, பொலிஸ் கருவிகள் முலமும் மற்றும் அரசாங்க அதிகாரத்துவத்தில் இருந்தும் பெறுகிறது. இவை ஈராக் மீது தொடர்ந்து அமெரிக்க கட்டுப்பாட்டை நம்பியுள்ளன. இவருடைய கூட்டணி பாக்தாத்திலும் ஷியைட் மக்கள் நிறைந்த தெற்கிலும் அதிக வாக்குகளைப் பெற்றது. அல்லாவியின் தளமானது சுன்னி மக்கள் மற்றும் மதசார்பற்ற ஷியைட்டுக்களிடம் இருந்து வருகிறது. ஈராக்கியா அதன் பெரும்பான்மையான பாக்தாத் தொகுதிகளை வென்றது, மேலும் மத்திய, மேற்கு சுன்னிப் பெரும்பான்மை மாநிலங்களில் இருந்தும் பெற்றது. சுன்னி உயரடுக்கு அவருக்கு ஆதரவாகப் பின் நின்றது. 2004ல் இடைக்கால பிரதமராக அல்லாவி இருந்த சுன்னி நகரமான பல்லுஜாவின் அழிவிற்கு துணை நின்றும், சுன்னி மக்கள் இருந்த இடங்கில் எதிர்ப்பை பொது அடக்குமுறை கொண்டு அடக்கியும் அவருக்கு ஆதரவு கிடைத்துள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ், சதாம் ஹுசனைனின் பாத்திஸ்ட் ஆட்சியில் அதிகாரத்தைக் கொண்டிருந்த சுன்னி அரசியல் ஸ்தாபனம் ஓரம் கட்டப்பட்டது. அவர்கள் அல்லாவியை தங்கள் சலுகைகளை மீட்கும் கருவியாகக் காண்கின்றனர். ஒரு முக்கிய சுன்னி மத குரு ஷேக் மகமுத் அல்-சுமைடி, British Guardian இடம், "இது அரசியல், அரசியல் ஒரு கறைபடிந்த கலை. சுன்னி அறிவாளிகள் அவரை பல்லுஜாவை பொறுத்த வரை மன்னித்துவிட்டனர், நாங்கள் அவர் பிரதமராக ஆதரவு கொடுக்கிறோம்" என்று அப்பட்டமாக கூறினார். இந்தக் கட்டத்தில் மாலிகியின் கூட்டணி தான் அல்லாவியுடன் கூட்டுக் கொள்ளுவதற்கில்லை என்று பகிரங்காமாக கூறுகிறது. ஆனால் திரைக்குப் பின், அமெரிக்க ராஜதந்திர மற்றும் இராணுவக் கட்டுப்பாடு ஈராக்கிய பிரிவுகளுக்கு அழுத்தம் கொடுத்தும் ஏதேனும் உடன்பாடு விரைவில் வர முயற்சி எடுக்கும்--டிசம்பர் 2005 தேர்தல் போது இருந்ததைப் போல் இல்லாமல், அப்பொழுது அது அரசாங்கத்தை அமைக்கக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களை எடுத்துக் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து, அடுத்த ஈராக்கிய அரசாங்கம், அல்லாவி, மாலிகி அல்லது எவர் தலைமை தாங்கினாலும், ஈராக்குக்கு எதிராக வாஷிங்டனுடன் இணைந்து நிற்பதைத் தவிர முன்று முக்கிய பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்: * அது அமெரிக்காவுடன் 2011 இறுதியில் ஒரு புதிய உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும்--அப்பொழுதுதான் தற்போதைய படைகள் நிலை கொண்டிருக்கும் உடன்பாடு முடிவிற்கு வருகிறது. அதையொட்டி அமெரிக்க இராணுவம் காலவரையறையற்று பாலட், அல் அசத், தல்லில் ஆகிய இடங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள விமானத் தளங்களை பயன்படுத்த அனுமதிக்கும்.* அது ஈராக்கின் எண்ணெய் தொழில் தனியார்மயம் ஆக்கப்படுவதை அனுமதிக்கும் சட்டங்களை செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் வாய்ப்புக்களையும் கட்டுப்பாடுகளையும் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களை எடுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும். தற்போதைய சட்டம் பெருப்பாலும் எரிசக்தி சர்வதேச நிறுவனங்களால் போதாதவை என்று நினைக்கப்படுகின்றன. அவை உற்பத்திப் பகிர்வு உடன்பாட்டை அனுமதிக்கவில்லை. அதில்தான் கூடுதல் இலாபங்கள் கிடைக்கும். * பெரும்பாலான அமெரிக்கத் துருப்புக்கள் அடுத்த 18 மாதங்களில் திரும்பும் ஆகையால், ஈராக்கிய அரசாங்கமானது ஈராக்கிய தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் தற்போதைய எதிர்ப்பை அடக்க வேண்டும். அவர்கள் வறுமை, வேலையின்மை, நாட்டின் இருப்புக்கள் கொள்ளை அடிக்கப்படுதல், நடக்கும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றனர்.அதே நேரத்தில், பாக்தாத்தில் உள்ள கைப்பாவை அரசாங்கம் நாட்டை ஒன்றாக நிலைநிறுத்த முயற்சித்து வெற்றி காண வேண்டும். வடக்கில் குர்திஷ் உயரடுக்கு பெருகிய முறையில் கிர்குக் மற்றும் வடக்கு எண்ணெய் வயல்கள் மீது கட்டுப்பாட்டை பெறாததற்கு விரோதம் கொண்டுள்ளன. இவைதான் அவை அமெரிக்கப் படையெடுப்பு 2003ல் நடைபெற்றதற்கு ஆதரவு கொடுத்ததற்கு காரணம் ஆகும். ஷியைட் அமைப்புமுறையில் பிரிவுகள், மதக் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவை அரசாங்கத்தில் சுன்னி செல்வாக்கு கணிசமாவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. சுன்னி உயரடுக்குகள் ஒதுக்கப்பட்டால், அவை மீண்டும் பரந்த ஆயுதமேந்திய எழுச்சிக்கு ஆதரவு தரக்கூடும். கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சம்பவங்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்படுத்தியுள்ள, எப்பொழுதும் இருக்கும் அரசியல், இனவழி, குறுகிய பற்று போட்டிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வெள்ளிக்கிழமை, தியாலா மாநிலத்தின் முக்கிய நகரமான பக்குவாபாவியின் ஒரு சந்தையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் 59 பேரைக் கொன்று, 73 பேரைக் காயப்படுத்தியது. ஈராக்கிய தொடர்புடைய தலைவர் ஒருவரின் வீடு ஞாயிறன்று அன்பர் மாநிலத்தில் குவைம் என்னும் சிறு நகரத்தில் குண்டுவீச்சிற்கு உட்பட்டபோது, 5 பேர் இறந்தனர், 18 பேர் காயமுற்றனர். பாக்தாத்தில் ஒரு ஸ்னைப்பர் ஈராக்கியா ஆதரவாளரைக் கொன்றார். இன்னும் தூண்டிவிடும் விதத்தில், மாலிகிக்கு ஆதரவான படைகள் "பயங்கரவாதத்தில்" தொடர்பு உடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தியாலா மாநிலத்தில் நான்கு ஈராக்கியா வேட்பாளர்களை கைது செய்தன. அதே நேரத்தில் ஷியைட் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நீதி மற்றும் பொறுப்புக் குழு சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அதைப் பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கான காரணம், அவர்களுடைய சதாம் ஹுசைனின் பாத் கட்சியுடனான பழைய தொடர்புகள் என்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு "பாத்திஸ்ட்டுக்கள்" என்று தடைசெய்யப்பட்டவர்கள் ஈராக்கியா கட்சியினர் அல்லது மற்ற சுன்னி, மத சார்பற்ற ஷியைட் தளத்தைக் கொண்டவர்கள். |