World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Netanyahu defies Washington on settlements

குடியேற்றங்கள் பிரச்சினையில் வாஷிங்டன் கருத்துக்களை நத்தேன்யாகு புறக்கணிக்கிறார்

Chris Marsden
25 March 2010

Use this version to print | Send feedback

செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நத்தேன்யாகுவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களைப் பற்றி எந்தத் தகவலும் வெளிவரல்லை. அதேபோல் செய்தியாளர் கூட்டமும் இல்லை என்பதோடு, உத்தியோகபூர்வ கைகுலுக்கலும் புகைப்படமும் எடுக்கப்படவில்லை.

புதனன்றுதான் வெள்ளை மாளிகை இஸ்ரேலுடன் வேறுபாடுகள் உள்ளன, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜேருசலத் திட்டங்கள் பற்றி அமெரிக்கா சில "விளக்கங்களைக் கேட்டுள்ளது" என்று கடுமையான அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தது. ஒபாமாவுடன் நடந்த கூட்டம் நத்தேன்யாகுவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர் அதிகாரிகளுடன் கலந்து பேச உதவும் வகையில் 90 நிமிஷங்களுக்கு பின்னர் தடைக்கு உட்பட்டது. இது அவரிடத்தில் சில வகைக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்று குறிப்பாகக் காட்டுகிறது.

இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்வதை நத்தேன்யாகு தாமதப்படுத்தி அமெரிக்காவின் மத்திய கிழக்கு சமாதானத் தூதர் ஜோர்ஜ் மிட்செலைச் சந்தித்தார். ஆனால் இஸ்ரேல் குடியேற்றக் கட்டமைப்புக்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் நிராகரித்தார் என்பது தெளிவு.

இப்பேச்சுக்கள் வாஷங்டனுக்கும் டெல் அவிவிற்கும் இடையே பகிரங்க வேறுபாடுகள் மார்ச் 9ல் இஸ்ரேல் 1,600 புதிய அடுக்குக் குடியிருப்புக்களை முக்கியமான அரேபிய கிழக்கு ஜேருசலப் பகுதியான Ramat Shlomo வில் கட்டும் என்று மார்ச் 9 வந்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்துள்ளன. அப்பகுதி 1967ல் ஜோர்டனில் இருந்து இணைக்கப்பட்டவை, பாலஸ்தீனியர்கள் வருங்கால நாட்டின் தலைநகர் என்று கருதுகின்றனர்.

இந்த நடவடிக்கை ஏற்கனவே மேற்குக் கரையில் உள்ள வெடிப்புத்தன்மை வாய்ந்த மோதல்களை மிக மோசமாக்குகின்றன. ஜேருசலம் பழைய நகரத்தில் இருந்து ஒரு யூதர் திருச்சபை பழையபடி செயல்படுவதானது அல் அக்சா மசூதியை அழித்து யூதர்களின் Temple Mout ஐ மறு கட்டமைப்பதற்கு என்று பாலஸ்தீனியர்களால் கண்டிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய படைகளுடன் மோதினர். மேற்குக்கரைப் பகுதிகள் "மூடப்பட்ட இராணுவப் பகுதிகள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஹமாஸ் மார்ச் 16 ஐ "வெஞ்சின தினம்" அல் அக்சா தொடர்பாக என்று அறிவித்தது. ஃபத்தாவின் இராணுவப் பிரிவான அல் அக்சா தியாகிகள் படைப் பிரிவு பாலஸ்தீனிய அதிகாரம் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை "ஜேருசலத்தை யூதமயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராக" தொடக்க அனுமதிக்குமாறு கோரியது. எகிப்தில் உள்ள மாணவர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ரமட் ஷ்லோமோ அறிக்கை ஆத்திரமூட்டும் தன்மையானது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடன் இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரஸுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது பற்றி விவாதிக்க வந்துள்ள அதே நேரத்தில் நடந்துள்ளது. வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனும் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் டேவிட் ஆக்சில்ரோடும் அமெரிக்காவை இஸ்ரேல் "அவமதித்துவிட்டதாக" குற்றம் சாட்டினர்.

ஆனால் ஒபாமா-நத்தேன்யாகு கூட்டத்திற்கு முன்னதாக, வாஷிங்டன் சகஜ உறவுகளை மீட்க கடின முயற்சிகளை மேற்கோண்டது. அதே நேரத்தில் நத்தேன்யாகு குடியேற்றக் கட்டுமானப் பிரச்சினையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று வலியுறுத்திவிட்டார். ஒபாமாவை சந்திக்குமுன், நத்தேன்யாகு கிளின்டனுடன் பேசினார். இருவரும் AIPAC எனப்படும் அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக்குழு ஆண்டுக் கூட்டத்தில் திங்களன்று வாஷிங்டனில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலை குடியேற்றக் கட்டுமானத்தை நிறுத்தி வைக்குமாறு கிளின்டன் வலியுறுத்தினார். பாலஸ்தீனியர்களுடன் முறையாக பேச்சுக்கள் நடத்த வேண்டும், மேற்குக்கரையில் இருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டும், சில பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார். மீண்டும் குடியேற்றத்தை நிறுத்தி வைப்பதை நத்தேன்யாகு நிராகரித்தார்.

ஆனால் AIPAC க்கு முன்பு பேசிய கிளின்டன் அமெரிக்க இஸ்ரேலிய உறவுகள் நெருக்கடியில் உள்ளன என்பதை மறுத்து, இருநாடுகளுக்கும் இடையே, "நெருக்கமான, அசைக்கமுடியாத பிணைப்பு" உண்டு, இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் "உறுதியான, அசைவற்ற, நீடித்த ஆதரவு" உண்டு என்றும் வலியுறுத்தினார்.

கிளின்டனின் "உளமார்ந்த கருத்துக்களை" நத்தேன்யாகு வரவேற்றார்; ஆனால் "ஜேருசலம் ஒரு குடியேற்றம் அல்ல. எங்கள் தலைநகரம்" என்று அறிவித்தார். பின்னர் 1967 ஆண்டு ஆறு நாள் போருக்குப்பின் தொடர்ச்சியாக இஸ்ரேல் கொண்டிருக்கும் கொள்கையைத் தானும் தொடர இருப்பதாகக் கூறினார். அமெரிக்காவின் ஆதரவை, "ஒரு ஜனாதிபதியில் இருந்து அடுத்தவர் வரை, ஒரு காங்கிரஸில் இருந்து அடுத்த காங்கிரஸ் உட்பட" தொடர்ந்து பெறும் என்பதை நன்கு அறிந்தவிதத்தில்.

சர்வதேச செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் ஒபாமா இஸ்ரேலைக் கட்டுப்படுத்த இறுதியாகத் தயாரிக்கிறார், நத்தேன்யாகுவின் உறுதியற்ற கூட்டணியை வீழ்த்தும் நோக்கத்தைக் கூட கொண்டிருக்கிறார், அவருக்குப் பதிலாக ஒரு கடிமாத் தலைமையிலான கூட்டணியை பதிலுக்கு இருத்துவார் என்று கூறின. Guardian பத்திரிக்கையில் Jonathan Freedland, "கடந்த முறை அமெரிக்காவானது இஸ்ரேல் மீது இத்தகைய அழுத்தத்தை கொடுத்தது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அப்பொழுது முதல் ஜோர்ஜ் புஷ் குடியேற்றங்கள் கட்டமைக்கப்படுவது நிறுத்தப்படாவிட்டால் உறுதியளிக்கப்பட்ட $10 பில்லியன் கடன்கள் நிறுத்திவைக்கப்படும் என்று அச்சுறுத்தினார். அது பின்னர் பிடிவாதமாக இருந்த Yitzhak Shamir பிரதமர் பதவியில் இருந்து அகற்ற வழிசெய்து அவருக்குப் பதிலாக Yitzhak Rabin பதவி ஏற்றார்.

ஆனால் அத்தகைய கூற்றுக்களுக்கு ஆதரவு தரும் வாதங்கள்--மத்திய கிழக்கில் அதன் நலன்களைத் தக்க வைத்து வலுவாக்கும் வாஷிங்டனின் விருப்பத்தில் மையம் கொண்டவை--இஸ்ரேலுடன் நேரடி மோதலுக்கு எதிராகத்தான் உள்ளன.

அது நிறுவப்பட்ட காலத்தில் இருந்து, குறிப்பாக எகிப்தி, சிரியா, ஜோர்டன் மீது 1967 வெற்றிக்கு பின்னர், இஸ்ரேல் ஒரு பிராந்திய சக்தியாகவும், அமெரிக்காவின் முக்கிய மத்திய கிழக்கு நட்பு நாடாகவும் செயல்பட்டு வருகிறது. மிகப் பெரும் பொருளாதார, இராணுவ, தூதரக ஆதரவை அமெரிக்காவிடம் இருந்து பெறுகிறது. அவை இல்லாவிட்டால் இது தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் பொதுவாக வாஷிங்டனுடைய நலன்களுடன் இதன் நலன்கள் இணைந்திருந்தாலும், அரேபிய நாடுகளிடம் இருந்து, இன்னும் முக்கியமாக அரேபிய மக்களிடம் இருந்து அமெரிக்க நலன்களுக்கு வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றாலும், அவை முழுமையாகப் ஒத்ததன்மை உடையது அல்ல. சில நேரங்களில் இது உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய அழுத்தங்களின் ஆதாரம் அமெரிக்கா மத்திய கிழக்கில் ஈராக்கிய படையெடுப்பிற்குப் பின், குறிப்பாக அரேபிய நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை எகிப்து, செளதி அரேபியா உட்பட கட்டுவதிலும், தன் செல்வாக்கை மீட்பதிலும், ஈரானுக்கு எதிரான தன் உந்துதல்களுக்கு ஆதரவை நாடுவதிலும், அதன் முயற்சிகளைக் கொண்டு இருப்பதில் உள்ளது.

செனட் இராணுவப் பிரிவுக் குழுவின் முன் சாட்சியம் அளித்த அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தளபதி டேவிட் பெட்ரீயஸ் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல்கள் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன என்று அப்பட்டமாகக் கூறினார். அவ் "அமெரிக்க-எதிர்ப்பு" உணர்வை பெருக்குகின்றன, அல் கெய்டாவிற்கு உதவுகின்றன என்றார். விரிவான மத்திய கிழக்கு சமாதானம் கொண்டுவருவதில் போதுமான முன்னேற்றம் இல்லாதது, "நம் நலன்களை முன்னேற்றுவிக்க நம் திறனில் தெளிவான சவால்களை அளிக்கின்றது" என்றார் அவர்.

ஆனால் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளைத் தக்க வைத்தல் அமெரிக்காவின் மத்திய கிழக்கு மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடாக உள்ளது. ஒபாமா நிர்வாகம் நத்தேன்யாகுவின் தடையற்ற குடியேற்றக் கட்டுமானமானது புஷ் நிர்வாகம் செய்த சேதத்தை சரிபடுத்தும் அதன் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலில் நியாயமான தரகர் என்ற நிலையை அளிப்பதில் இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டுள்ளது. ஆனால் சமீப கடந்த காலத்தில் இஸ்ரேல் நேர்மையுடன் நடந்து கொள்ளாதபோது அமெரிக்காதான் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளது.

கடந்த செப்டம்பரில் ஒபாமா நிர்வாகம் மேற்குக்கரையில் அனைத்து குடியேற்றக் கட்டமைப்புக்களையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கோரியபோது, நத்தேன்யாகு மறுத்துவிட்டார். குடியேற்றக் கட்டமைப்பை "வரம்பிற்கு உட்படுத்துவதாக" நத்தேன்யாகுவின் சந்தேகத்திற்கு உரிய உறுதிமொழியை அமெரிக்கா ஏற்றது. கிளின்டன் இது "முன்னோடியில்லாத சலுகை" என்று பாராட்டியது புகழைப் பெற்றது.

பொதுவாக இஸ்ரேலுடன் சமாதானமாகப் போகும் வாஷிங்டனின் நிலைப்பாடு ஒரு வெளிப் பிரச்சினை அல்ல. அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குக் கணிசமான அரசியல் ஆதரவை இஸ்ரேல் கொண்டுள்ளது. நேடன்யாகுவும், லிகுட்டும் குடியரசுக் கட்சியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டவை. ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் எதிர்ப்பு தங்களை இஸ்ரேலுக்கு போதுமான ஆதரவைக் கொடுக்கவில்லை என்று முத்திரையிட்டுவிடக்கூடாது என்று அஞ்சுகின்றனர்.

பாலஸ்தீனியர்கள், லெபனான், சிரியா மற்றும் ஈரான் ஆகியவற்றிற்கு எதிராக இஸ்ரேலின் கடினப் போக்குக்கு காங்கிரசில் குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் இடையே எதிரொலியைக் கொண்டுள்ளது. AIPAC யில் பேசிய பின் நத்தேன்யாகு காங்கிரசிலும் பேசினார். இரு கட்சியில் இருந்து நம்பிக்கை வாக்கைப் பெற்றார். ஜனநாயகக் கட்சியின் மன்றத் தலைவர் நான்சி பெலோசி, "காங்கிரசில் நாம் இஸ்ரேல் பற்றி ஒரு குரலில் பேசுகிறோம்" என்று அறிவித்தார்.

இந்தக் கட்டத்தில் ஒபாமா நிர்வாகம் அதன் முயற்சிகளை இன்னும் கடுமையான ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் குவிப்புக் காட்டுகிறது. அதே நேரத்தில் "விரிவான இராஐதந்திரத் தொடர்புகள், பேச்சுக்களுக்கான" அழைப்பையும் கொடுக்கிறது. ஆனால், இவை தோல்வியுற்றால், தெஹ்ரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலும் சாத்தியம், இஸ்ரேல் அப்பொழுது உறுதியாகத் தேவைப்படும்.

ஸ்கொட்லாந்தின் Sunday Herald கடந்த வார இறுதியில் அமெரிக்கா 387 நிலத்தடித் தகர்ப்பு குண்டுகளை, இந்தியப் பெருங்கடலில் டீகோ கார்சியாவில் இருப்பதை ஈரான் மீது தாக்குவதற்கு தயாரிப்பாக நகர்த்த உள்ளது என்று தெரிவித்தது. CISD எனப்படும் லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள Centre for Iternational Studies ad Diplomacy ன் இயக்குனர் Dan Plesch, அமெரிக்கத் திட்டங்கள் "ஈரானை முற்றிலும் அழிக்கும் விதத்தில், ஈரானில் 10,000 இலக்குகளை ஒரு சில மணி நேரத்தில் தாக்குவதற்கு" தயாரிப்புக்களைத் திட்டமிட்டுள்ளது என்று விவரித்தார்.

தன்னுடைய வாஷிங்டன் பயணத்தின் முழுவதும் ஈரானில் இருந்து அச்சுறுத்தல் என்பது பற்றி நத்தேன்யாகு வலியுறுத்தினார். AIPAC ல் சர்வதேச சமூகம் தெஹ்ரானுடன் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் எதிர்பார்ப்பாகவும், அது அணுவாயுதங்களைப் பெறுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். Sunday Times தெரித்ததாவது, நத்தேன்யாகுவின் விருப்பம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு bunker-buster bombs (நிலத்தடி மறைவிடங்களைத் தகர்க்கும் குண்டுகள்) தேவைப்படுவதை அளிக்க வேண்டுவதாக கூறியுள்ளது. இது ஈரானின் நிலத்தடி அணுசக்தி செறிவு உலைகளைத் தாக்க உதவும்.

"அகண்ட இஸ்ரேல்" கருத்தைத் தொடர பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நத்தேன்யாகுவின் தாக்குதலின் விளைவாக மத்திய கிழக்கு உறுதிப்பாட்டை இழக்கிறது என்பது மட்டும் அல்ல. இன்னும் அடிப்படையில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீனியர்களின் நட்பு நாடு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கக் கருத்தின் தவறை அம்பலப்படுத்துவதுடன், ஈரான் மற்றும் முழு பிரந்தியத்திலும் வாஷிங்டனின் கொள்ளைத் திட்டங்களின் உண்மைகளையும் உயர்த்திக் காட்டுகிறது.

இதுதான் மேற்குக்கரை, காசாவோடு நின்றுவிடாமல் அரேபிய மக்களிடையே சீற்ற வெடிப்பிற்கான நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.