WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Bush, Clinton visit Port-au-Prince
Washington dictates terms to devastated Haiti
புஷ், கிளின்டன்
Port-au-Prince க்கு வருகை
பேரழிவிற்கு உட்பட்ட ஹைட்டிக்கு வாஷிங்டன் ஆணையிடுகிறது
By Patrick Martin
24 March 2010
Use this version
to print | Send
feedback
ஜனவரி 12 நிலநடுக்கத்தை தொடர்ந்து சர்வதேச உதவி மற்றும் முதலீடுகளை
அந்நாட்டிற்கு அளிப்பது பற்றிய நியூயோர்க் நகரத்தில் நடக்க இருக்கும் நன்கொடையாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாகவே,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், பில் கிளின்டனும் ஹைட்டியத் தலைநகர்
Port-au-Prince க்கு வருகை புரிந்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க நிதி திரட்டும் முயற்சிக்கு புஷ்ஷையும், கிளின்டனையும்
ஜனாதிபதி ஒபாமா இணைத் தலைவர்களாக நியமித்திருந்தார். இந்தக் கூட்டு வருகை அக்கறைகள் பற்றிய பொதுக்
கவனமானது, அகதிகள் முகாம் மற்றும் இரு உள்ளூர் வணிகங்களுக்கு சென்றது, ஹைட்டிய ஜனாதிபதி ரெனே மற்றும்
பிற அதிகாரிகளுடன் பேச்சுக்கள் ஆகிவற்றை புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் வருகையை காட்டியிருந்தது.
தொலைக்காட்சி தகவல்கள் ஹைட்டிக்கு இதற்கு முன் சென்றிராத புஷ் தன் முகத்தில்
ஒரு நிரந்தர சிரிப்புடன் நிலநடுக்கத்தில் தப்பியவர்களுடன் கைகுலுக்குவதையும், அதிக ஊக்கத்துடன் இல்லாததையும்
காட்டுகின்றன. தன்னுடைய பயணத்தின் நோக்கம் நில நடுக்கத்தால் ஏற்பட்ட அழிவை நேரில் காண்பது, "அமெரிக்க
மக்களுக்கு இங்கு இன்னும் இடர்பாடுகள் உள்ளன, பணிகள் உள்ளன என்பதை நினைவுறுத்துதல்" என்று உணர்ச்சியற்ற குரலில்
கூறினார்.
ஜனாதிபதி அரண்மனைக்கு அருகே உள்ள
Champ de Mars
அகதிகள் முகாமில் புஷ்-கிளின்டன் வருகைக்காக அதிக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. டஜன் கணக்கான
அமெரிக்க இரகசியப் பிரிவு முகவர்கள், ஹைட்டிய பொலிஸ் மற்றும் நீலத் தலைக் கவசமணிந்த ஐ.நா.
பாதுகாப்புத் துருப்புக்கள், அவர்களையும் பிரேவலையும் நிலநடுக்கத்தில் தப்பியவர்களுடன் கைகுலுக்கும்போது
சூழ்ந்திருந்தனர்.
வருகையாளர்கள் பற்றிய ஹைட்டிய மக்களின் அணுகுமுறை விரோதப் போக்கு மற்றும்
பொருட்படுத்தாத்தன்மையின் கலவையாக இருந்தது. குறிப்பாக 2004 ல் ஜனாதிபதி
Jean-Bertrand Aristide
ஐ ஆட்சியை விட்டு அகற்றி தென்னாபிரிக்காவிற்கு நாடு கடத்திய ஆட்சி மாற்றத்தில் பங்கு கொண்டிருந்ததால் புஷ்
வெறுக்கப்படுகிறார். ஹைட்டியின் "நண்பர்" என்று காட்டிக் கொண்டாலும், கிளின்டன் நாட்டின் விவசாயத்தை
அழிவிற்கு உட்படுத்திய ஹைட்டிய சந்தையை வெளிப் போட்டிக்கு திறந்து விட்ட கொள்கையுடன் அடையாளம் காணப்படுகிறார்.
அவர் இப்பொழுது ஹைட்டிக்கு ஐ.நா.வின் சிறப்பு தூதராக உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அரிஸ்டைடின் ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 100 பேர் தேசிய
அரண்னைக்கு வெளியே டயர்களையும் ஒரு அமெரிக்கக் கொடியை எரித்தும் எதிர்ப்புக் காட்டினர். "அரிஸ்டைட்
மீண்டும் வரவேண்டும்! பிரேவல் ஒழிக! புஷ் ஒழிக!" என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இப்பொழுது தேர்தலில்
நிற்பதில் தடை செய்யப்பட்டுள்ள அரிஸ்டைடின் Fanmi
Lavalas கட்சியின் தலைவர் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம்
"இவர்களிடம் நிறைய பணம் உள்ளது. இவர்கள் ஹைட்டிக்கு ஏதேனும் செய்யலாம். ஆனால் செய்யவில்லை" என்றார்.
நிலநடுக்கத்தில் தப்பித்த, வீடிழந்துள்ள, 35 வயதான ரேனே பீரி அமெரிக்க
நிருபர் ஒருவரிடம் கூறினார்: "இந்தப் பயணம் ஒரு பயணம் போலவே இல்லை. அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
இது வெறுமனே காட்சிக்காகத்தான்." பெல் ஏயர் சேரியில் ஒரு தெருமுனை விவாதம் பற்றி
AP கூறியது:
"அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஓரளவு சரிந்துவிட்ட ஒரு கட்டிடத்தின் பின் குறுகிய சந்தையில் கூட்டமாக நின்று
தங்கள் கருத்துக்களை உரக்கக் கூறுகின்றனர். புஷ் மோசம், பிரேவல் திறமையற்றவர், ஐ.நா.தூதராக கிளின்டன்
ஏமாற்றம் தருகிறார்" போன்றவை கூறப்படுகின்றன.
புஷ், கிளின்டன் மற்றும் பிரேவல் அகதிகள் முகாமில் நுழைவதை
Miami Herald விவரிக்கிறது: "நிலநடுக்கத்தில்
தப்பித்தவர்கள் மூன்று தலைவர்களையும் பார்த்து உரக்கக் கூச்சலிட்டனர். தங்கள் இழப்புக்களின் விவரங்களை
உரைத்தனர்....மற்றவர்கள் தங்கள் ஜனாதிபதி தலைமையைக் குறைகூறினர். 'இதற்கு முன் எங்களை ஜனாதிபதி
பிரேவல் பார்க்க வரவே இல்லை! என்று Myrlande
Saint-Louis கூச்சலிட்டார். இவர் ஜனாதிபதிகள் வருகை
தந்த Place Mosolee
முகாமில் வாழ்கிறார். "இப்பொழுது புஷ் இருப்பதால் அவர் இங்கு வந்துள்ளார்? இப்பொழுது எங்களைப் பார்க்க
விரும்புகிறார்!' "
கிளின்டன்-புஷ் வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நிலநடுக்கத்தில் தப்பிப்
பிழைத்தவர்கள் பலரை வேறு இடத்தில் குடிஇருத்தும் முயற்சிகளில் குறுக்கே நிற்கும் நில உரிமைப் பூசலைப் பற்றி
நடவடிக்கை எடுக்குமாறு பிரேவலைத் தூண்டுவது ஆகும். ஹைட்டிய உயரடுக்கில் உள்ள பல தனி நிலச் சொந்தக்காரர்கள்
அரசாங்கம் கொடுக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையை விட அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் நிலத்தைக்
கொடுக்கத் தயக்கமும் காட்டுகின்றனர். பிரெஞ்சு தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அடிமைகள் எழுச்சி 200
ஆண்டுகளுக்கு முன் செய்ததில் வேர்களைக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர் நில உரிமை கொண்டாடுவது, அரசாங்கம்
சாரா அமைப்புக்கள் மற்றும் பெருநிறுவனங்களின் செயல்களை பாதித்துள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஹைட்டியின் பொருளாதார புத்துயிர்ப்பிற்கு வெளிநாட்டு
முதலீடு, குறிப்பாக ஆடைத் தயாரிப்புத் தொழில், முக்கிய திறவுகோல் என்ற கருத்தாய்வை கிளின்டன் தீவிரமாக
கொண்டவர். அவருடைய பயணத்தின்போது, பல ஆசிய, பிரேசிலிய நிறுவனங்கள் வழிவகை தடைகள் நீங்குவதற்கு
காத்திருக்கின்றன, பின் அவை Port-au-Prince
லும் மற்ற பகுதிகளிலும் ஆலைகளை தொடங்கும் என்று பலமுறை குறிப்புக் காட்டியுள்ளார்.
இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் பிரேவல் ஹைட்டிய நில
சொந்தக்காரர்கள் சிறப்பு பகுதியின் கீழ் நிதி இழப்பீடு பெற்றபின், உதவி அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் பயன்படுத்த சொத்தை மாற்றுவதற்கு நிர்வாக ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப குவிப்பு Pole
Nord என்று தலைநகரத்திற்கு வடக்கே ஒரு புதிய புறநகரை
ஏற்படுத்துவது ஆகும். இதில் 150,000 மக்கள் குடியேற்றப்படுவர். இவர்கள் 29 குறைந்த வசதி உடைய
முகாம்களில் வசிப்பவர்களாக இருப்பர் (மொத்தம் 425 அகதிகள் முகாம்கள் உள்ளன). அடுத்த மாதம் மழைகாலம்
தொடங்கியவுடன் இவை ஆபத்தான சறுக்குப் பகுதிகளாக இருக்கும். பிரேவிலின் உதவியாளர் ஒருவர் நிலத்தை வாங்க
அரசாங்கம் $40 மில்லியன் செலவழிக்கும்,
Port-au-Prince ஐ விட்டு நீங்குபவர்களுக்கு உறைவிடம்
கொடுக்க $86 மில்லியன் செலவழிக்கும் எனக் கூறினார்.
மழைக்காலத்தின் முதல் மழைகள் கடந்த வாரம் பெய்து விரைவில் பல முகாம்களில்
வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தின. முகாம் வாசிகள் கஷ்டப்பட அனுமதித்த அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு
எதிர்ப்புக்கள் வெடித்தன. பல ஆயிரக்கணக்கான மக்கள் அதில் பங்கு பெற்றனர். ஆர்ப்பாட்டம் ஒரு அமெரிக்க,
ஐ.நா. எதிர்ப்பு திசையில் மாறியது. எதிர்ப்பாளர்கள் "இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்!" என்று
கூச்சலிட்டனர். அவர்கள் இப்பொழுது அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்
Toussaint Louverture Airport
க்கு அணிவகுத்துச் சென்றனர். ஆனால் தடிகளை உருட்டிய ஹைட்டிய கலகப் பிரிவு பொலிசால் தடைக்கு
உட்பட்டனர்.
தங்கள் பணயத்தின்போது புஷ், கிளின்டன் இருவருமே ஹைட்டியின் வாழ்வில் உள்ள
இழிநிலைக்கு முதலாளித்துவம் தீர்வு என்று உபதேசித்தனர். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "முயல்வோர் திறனுக்கு
ஊக்கம் கொடுப்பது, சிறுவணிகம் நாட்டின் மீட்பிற்கு வழிகாட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று புஷ்
கூறினார். HOPE II
என்னும் அமெரிக்கச் சட்டம், ஹைட்டிய ஆடை உற்பத்தியாளர்கள் அமெரிக்க சந்தையை அணுகுவதற்கான சுங்கவரி
இல்லாத முறை வாய்ப்பை விரிவாக்கத் திருத்தப்பட வேண்டும் என்று கிளின்டன்அழைப்பு விடுத்தார். இதையொட்டி
"நாம் குறுகிய காலத்திலேயே 100,000 வேலைகளைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.
உண்மையில் தோற்றுவிக்கப்பட்டால் இந்த வேலைகள் ஹைட்டிக்கு மற்ற ஆசிய, இலத்தின்
அமெரிக்க குறைவூதிய நாடுகளில் இருந்து உற்பத்தி திசைதிரும்புவதை பிரதிபலிக்கும் என்று கிளின்டன் தெளிவாக்கினார்.
வேறுவிதமாகக் கூறினால், ஹைட்டியத் தொழிலாளர்கள் சீனா, கொரியா, மெக்சிகோ அல்லது பிரேசில்
தொழிலாளர்களின் இழப்பில் வேலைபெறுவர்.
தடையற்ற சந்தை, மற்றும் ஹைட்டிக்கு வெளிநாட்டு முதலீடு தடையற்று வருவதின்
சிறப்புக்களை பாராட்டினாலும், கிளின்டன் இம்மாதத் தொடக்கத்தில் ஹைட்டியின் தற்போதைய பொருளாதார
முடக்கம் தன்னுடைய நிர்வாக காலத்தில் (1993-2001) வாஷிங்டன் தடையற்ற வணிகக் கொள்கைகளை
வலியுறுத்தியதின் விளைவு என்றார்.
செனட் வெளியுறவுக் குழுவின் முன் மார்ச் 10ம் திகதி சாட்சியம் அளித்த கிளின்டன்
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீது காப்புவரிகள் அகற்றப்படுவது--கிளின்டன் நிர்வாகத்தின் வலியுறுத்தலின்கீழ்
1994-95 ல் Jean Bertran Aristide
ஆல் செயல்படுத்தப்பட்டது--ஹைட்டியின் நெருக்கடி நிறைந்த விவசாயத்தை அழித்துவிட்டது என்றார். "ஒரு நாடு
தனக்கு உணவு தயார் செய்து கொள்ளும் திறைமையை முற்றிலும் தகர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது,
வளர்ச்சியின் ஒரு கட்டத்தை தாண்டிவிடுவது, என்பதை எதிர்பார்ப்பது பொருந்தாது ஆகும்." என்றார் அவர்.
மேலும், "நான் செய்ததால், வேறு எவரும் இல்லை, ஹைட்டியில் தனக்கு தேவையானவற்றை அரிசி விளைச்சல்
உற்பத்தி செய்தல் மூலம் பூர்த்தி செய்ய முடியாததால் ஏற்பட்ட இழப்பை ஒவ்வொரு நாளும் நான்
உணர்ந்துள்ளேன்" என்றார். இன்னும் முக்கியமாக, ஹைட்டிய மக்களும் அதன்படி வாழவேண்டி இருந்தது.
அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி, ஹைட்டியில் நுகரப்படும் அனைத்து உணவுப்
பொருட்களில் 51 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் 80 சதவிகித அரிசியும் அடங்கும். அமெரிக்கா
உற்பத்தி செய்யும் அரிசிக்கு ஹைட்டி ஐந்தாவது மிகப் பெரிய வாங்கும் நாடாக உள்ளது. இதில் முக்கிய நிறுவனம்
கிளின்டனின் மாநிலமான அர்கன்சாசில் Stuttgart
ஐத் தளமாக கொண்ட Riceland Foods
அமைப்பு ஆகும்.
மார்ச் 31 அன்று நியூயோர்க் நகரத்தில் நடைபெற உள்ள நன்கொடையாளர்
மாநாடு ஒரு வெளிநாட்டு சக்திகளின் ஆணையம் ஹைட்டியை திறமையுடன் எடுத்துக் கொள்ள அரங்கு அமைக்கும்.
நாட்டிற்கு $11.5 பில்லியன் உதவி பொதிக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு மாநாடு கூட்டப்படுகிறது. இது எப்படி செலவழிக்கப்படுகிறது
என்பது ஒரு இடைக்கால ஹைட்டிய மீட்பு ஆணையத்தால் மேற்பார்வையிடப்படும். அதில் வெளிநாட்டவர்களுக்கு உதவித்
தொகை செலவிடப்படுவது பற்றிய முறையான, வாக்களிக்கும் உரிமையும் இருக்கும். ஹைட்டிய பிரதம மந்திரி
Jean-Max Bellerive
உடன் கிளின்டனும் இதற்கு இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதை வாங்குவதற்கான விலை $100 மில்லியன் ஆகும்: அந்த அளவு இல்லாவிடின்
அதற்கும் அதிகமாக உதவி நன்கொடை அளிப்பவருக்கு ஆணையத்தின் குழுவில் வாக்களிக்கும் உரிமையுடன் இடம்
கொடுக்கப்படும். ஹைட்டி கொடுக்க வேண்டிய கடனில் $200 மில்லியன் அல்லது அதற்கும் மேலாகத் தள்ளுபடி செய்பவர்களுக்கும்
வாக்குரிமை கொடுக்கப்படும். கடந்த வாரம் ஹைட்டி கொடுக்க வேண்டிய $200 மில்லியன் கடனை இரத்து செய்து
அறிவித்த வெனிசுவெலியாவின் ஜனதிபதி ஹ்யூகோ ஷாவேஸுக்கும் குழு உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம்
உண்டு. அதேபோல் மார்ச் 22 அன்று ஹைட்டி கொடுக்க வேண்டிய $479 மில்லியன் கடனை தள்ளுபடி செய்ததாக
அறிவித்த Inter-American Development
Bank இற்கும் ஒரு உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம்
உண்டு. |