WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Over a million people strike against Sarkozy's
austerity policies
பிரான்ஸ்: சார்க்கோசியின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மில்லியன் மக்களுக்கும்
மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்
By Antoine Lerougetel
24 March 2010
Use this
version to print | Send
feedback
பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியின்
UMP (Union for a Popular Movement)
ஆனது பிராந்தியத் தேர்தல்களில் பெரும் தோல்வியை அடைந்த இரு நாட்களுக்குப் பின்னர் பிரெஞ்சு பொதுத்துறை,
அரசாங்க ஊழியர்கள் மில்லியனுக்கும் மேலானவர்கள் நேற்று அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து
வேலைநிறுத்தம் செய்தனர். பல தனியார்துறை தொழிலாளர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர்.
Place de la Bastille:
சுலோக அட்டையில்: ஓய்வூதியங்கள் - பொது,
தனியார்துறைகள் அனைவரும் இணைந்துள்ளனர் - சமூக பிற்போக்குத்தனத்திற்கு மறுப்பு
நாடு முழுவதும் 177 ஆர்ப்பாட்டங்களில் 600,000 முதல் 800,000
தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். பாரிசில் பதாகைகள் "வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகள், ஓய்வூதியங்களுக்கு
ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள்" வேண்டும் என்று கோரின.
தேசிய இரயில் நிறுவனமான
SNCF தகவலின்படி
28.3 சதவிகித ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 2007ல் குறைந்தபட்ச சேவை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதிலும்,
சாதாரண இரயில்களில் 50 சதவிகிதமும் TGV
விரைவு வண்டிகளில் 35 சதவிகிதமும் ஓடவில்லை.
RER B என்னும் ஒரு முக்கிய
வட்டார போக்குவரத்துத் இரயிலைத் தவிர பாரிஸின் நகரப் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
50 சதவிகிதம் மட்டுமே ஓடியது. தலைநகரத்திற்கு வெளியே பொதுப் போக்குவரத்து வேலைநிறுத்தங்களில் பாதிக்கப்பட்ட
சிறு நகரங்களாக Cannes,
Clermont-Ferrand, Morlaix, Nice, Pau மற்றும்
Lille
ஆகியவை இருந்தன.
ஆசிரியர் தொழிற்சங்கங்களானது ஆரம்பப் பள்ளிகளில் பாதிக்கும் மேலான ஆசிரியர்களும்
இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகித ஆசிரியர்களும் வெளிநடப்பு செய்ததாக மதிப்பிட்டுள்ளன.
பல ஆரம்பநிலை பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பல உயர்நிலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கல்விச்
செலவுக் குறைப்புக்கள், கல்விக்கான உதவித் தொகைக் குறைப்புக்களை எதிர்த்து வகுப்புக்களில் இருந்து வெளியேறினர்.
ஆட்சிப் பணித்துறை அமைச்சரகம் அதன் ஊழியர்களில் 17.4 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டதாக தகவல் கொடுத்தது. வரி, கருவூல ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்களும் "போதிய ஊழியர்கள்
இல்லாததால் ஏற்பட்டுள்ள சரிந்துவிட்ட பணிநிலைமைகள்", தங்கள் வேலைப்பழு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக
வேலைநிறுத்தம் செய்தனர்.
அஞ்சல்துறை தொழிலாளர்களும் "அனைத்துத் துறைகளிலும் தீவிர மறுசீரமைப்பு", "வேலை
வெட்டுக்கள்", "அதிகரிக்கப்பட்ட அழுத்தங்கள்" ஆகியவற்றிற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். அழுத்தம்
தொடர்புடைய தற்கொலைகளால் பேரதிர்ச்சியில் இருக்கும்
Fance Telecom
தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். விவசாயிகள் மற்றும் மின்சாரத்
தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். தொழில்துறை நடவடிக்கையினால்
Opéra Bastille
TM Preljocaj
யின் சித்தார்த்தா நடன நிகழ்ச்சியும் மூடப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களில் பல துறைகளில் இருந்து குழுக்கள் வந்திருந்தன: அதாவது ஆசிரியர்கள்,
பராமரிப்பு ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நகரசபை ஊழியர்கள், கடைத்
தொழிலாளர்கள், தீயணைப்புத் துறையினர், நீதித்துறை ஊழியர்கள், ஆவணமற்ற தொழிலாளர்கள், இன்னும் மூடல்கள்,
பணி நீக்கங்களை எதிர்பார்த்திருக்கும் பல ஆலை, பணித்துறைத் தொழிலாளர்கள் தனியார்துறையில் இருந்தும்
வந்திருந்தனர்.
மாணவர்கள்: சுலோக அட்டையில்: அழுத்தங்கள்
நிறைந்த மக்களை அரசாங்கம் அடக்குகிறது. பதாகை கூறுகிறது: சீர்திருத்தம் வேண்டாம் என்போம்.
"ஊக வணிகக்காரர்கள் ஏற்படுத்திய நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை
கொடுக்கக்கூடாது", "பள்ளிகள் வியாயபாரம் அல்ல, குழந்தைகள் விற்பனைப் பொருட்கள் அல்லர்",
"சுகாதாரம் ஒரு விலைபொருள் அல்ல", "பெரும் திரளாக திரளுகின்ற பள்ளிகள் போராட்டத்தில்: அதாவது
60,000 ஆசிரியர் வேலைகள் வெட்டு, பயிற்சிகள் படுகொலை, பொதுக் கல்வி இறக்கும் ஆபத்தில்", "சமத்துவமின்மைக்கு
முடிவு கட்டு", "அவர்கள் நெருக்கடியும் பில்லியன்களும் நம் இரத்தத்தைக் குடிக்கின்றன, நமக்கு வியர்வையையும்
கண்ணீரையும் கொடுக்கின்றன" என்று எழுதப்பட்டிருந்த அட்டைகளை ஏந்திச் சென்றனர்
பாரிசில் 30,000த்தில் இருந்து 60,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்த ஆர்ப்பாட்டம்
செய்தனர். Bordeaux
ல் கிட்டத்தட்ட 20,000 ஆர்ப்பட்டக்காரர்கள் மூன்று கிலோமீட்டர் நீள வரிசையில் இருந்ததாக தொழிற்சங்கங்கள்
தெரிவித்தன. Toulouse
தெருக்களுக்கு 9,000த்தில் இருந்து 18,000 பேர் வந்தனர்.
Marseille ஆர்ப்பாட்டங்களில்
--தொழிற்சங்க மதிப்பின்படி 50,000 பேர் பங்கு பெற்றனர்--தங்கள் மூன்றாம் நாள் வேலைநிறுத்தத்தை நடத்திய
லிப்டன் தேயிலைத் தொழிலளார்களும் அதில் அடங்கியிருந்தனர்.
Nantes TM
25,000, Rouen
TM 15,000, Caen
TM 17,000, Le
Mans TM 30,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர் என்று சங்கங்கள் மதிப்பிட்டுள்ளன.
ஞாயிறு பிராந்தியத் தேர்தல்களைப் போல், இந்த வேலைநிறுத்தங்களும், எல்லாவற்றிற்கும்
மேலாக, தொழிலாளர்களின் சமூகக் கோரிக்கைகளுக்கு அரசியல் ஸ்தாபன சிக்கன நடவடிக்கையில் கொண்டிருக்கும்
உறுதியில் இருந்து கொண்டுள்ள பெரும் பிளவை நிரூபித்தன. தன்னுடைய திட்டங்களை கைவிடுவதாக இல்லை என்பதை
அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதான் 2013க்குள் அரசாங்கச் செலவினங்களை 100 பில்லியன் குறைக்கும்
வடிவைக் கொண்டது என அது கூறுகிறது.
பிரதம மந்திரி François Fillon நேற்று செய்தி ஊடகத்திடம்,
"பற்றாக்குறைகளைக் குறைப்பது....முற்றிலும் முன்னுரிமை கொண்டது." என்றார். மேலும், "இதன் பொருள்
நாம் அரசாங்கச் செலவுகளைக் குறைக்க வேண்டும், பொதுக் கொள்கையை திருத்துதல், ஓய்வு பெறும் இரு
அரசாங்கத் தொழிலாளர்களுக்கு ஒருவர்தான் புதிதாக நியமிக்கப்படுவார் என்பதாகும்."
நேற்று செய்தித்தாட்களானது ஓய்வூதியம் பெறுவதற்கு இருக்க வேண்டிய பணிக்காலம்
41 முதல் 43.5 ஆண்டுகளாகக் கட்டாயம் இருக்கும் என்ற உயர்வை கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் வைத்துள்ளதாகக்
கூறின. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர்துறை மந்திரி எரிக் வோர்த் வெட்டுக்கான திட்டங்களை தொடர
உள்ளதாக அறிவித்து, இழிந்த முறையில் "இவை சமபங்கைக் கொண்டிருக்கும்" என்றார்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் "வியப்பு தரும் நிகழ்வு" என்று கூறிய இந்த நடவடிக்கைத்
தினம் தொழிற்சங்கங்கள் அழைப்பவிடும் குறைந்த பட்ச வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்கள் என்ற அலையின் ஒரு பகுதி
ஆகும். இவை பின்னர் குறைக்கப்பட்டுவிடும். இவற்றின் நோக்கம் நெருக்கடிக்கு விலை கொடுக்க கட்டாயப்படுத்தப்படும்
தொழிலாளர்கள், இளைஞர்களிடையே பெருகும் சீற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகும். இதற்கிடையில் தொழிற்சங்கங்கள்
இடைவிடாமல் முதலாளிகளுடனும் அரசாங்கங்களுடனும் எப்படி சிக்கன நடவடிக்கைகளை சமூக வெடிப்பைத் தூண்டாமல்
சுமத்தலாம் என்று விவாதிக்கின்றன.
நடவடிக்கை தினத்திற்கு, பெப்ருவரி 16ம் திகதி எலிசே அரண்மனையில் சார்க்கோசியுடன்
தொழிற்சங்கங்கள் "ஒரு சமூக உச்சி மாநாடு" நடத்தியபின் அழைப்புவிடுக்கப்பட்டது. இது தொழிற்சங்கங்களும்
அரசாங்கமும் வங்கிகள் பிணை எடுப்பால் ஏற்பட்டுள்ள வரவு-செலவுப்
பற்றாக்குறையை குறைக்கும் திட்டங்களை விவாதிக்க வாய்ப்பளித்தது.
CGT தலைவர் பேர்னார்ட் தீபோ
நேற்றைய தினம் மற்றொரு "ஜனாதிபதியுடன் சமூக உச்சி மாநாட்டிற்கு" அழைப்பு விடுத்தார். வேலைநிறுத்தத்திற்கு
முற்றுப்புள்ளி வேண்டும் என்றும், மேலதிக நடவடிக்கைகள் "அரசாங்கம் கூட்டங்களை எப்படிக் கருதுகிறது
என்பதையும் செயற்பட்டியல்களையும், வரவிருக்கும் சீர்திருத்தங்களையும் பொறுத்தது" என்றார்.
|