WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australia: Rudd government steps up anti-refugee
measures
ஆஸ்திரேலியா: ரூட் அரசாங்கம் அகதிகள்-எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறது
By Mike Head
20 March 2010
Use this
version to print | Send
feedback
பெப்ருவரி 23 அன்று ஆட்கள் கடத்தலுக்கு எதிரான சட்டவரைவு என்று அழைக்கப்பட்ட
கடுமையான சட்டத்தை தொழிற்கட்சி அரசாங்கம் இயற்றியது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் நாடுவோருக்கு உதவி செய்பவர்கள்
எவருக்கும் கடுமையான சிறை தண்டனையாக 20 ஆண்டுகள் வரை இதன்மூலம் விதிக்கப்பட முடியும்--சில கொலைவழக்குகளில்
கொடுக்கப்படும் தண்டனையை விட இது அதிகமாகும். "ஆட்கள் கடத்தல்" என்று சொற்றொடர் முன்னாள்
ஹோவர்ட் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது. அகதிகள் வருவதற்கு ஏற்பாடு செய்தல், படகுகளை இயக்குதல்
இவற்றுடன் தொடர்புடைய அனைவரையும் இது அரக்கத்தனமாக பார்க்கிறது.
இச்சட்டத்தின் முக்கிய அரசியல் நோக்கம் தொழிற்கட்சியானது "மிக மிருதுவாக"
எல்லைப் பாதுகாப்பு என்ற துறையில் நடந்து கொள்ளுவதாக கூறப்படும் கூற்றுக்களை எதிர்ப்பதற்கு, குறிப்பாக
எதிர்க்கட்சி தாராளவாதிகளும் மர்டோச் செய்தி ஊடகமும் கூறும் கருத்துக்களை எதிர்ப்பதாகும். சட்டவரைவை
அறிமுகப்படுத்திய அரசாங்கத் தலைமை வக்கீல் ரொபேர்ட் மக்ளீலண்ட் "ஆட்கள் கடத்தல்" ஒரு "கொடுமையான
வியாபாரம்" என்றும் "பேராசையால் உந்தப்படுகிறது" என்றும் கூறினார். "ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள்
வாழ்வை அச்சுறுத்தும் வியாபாரத்திற்கு மக்கள் கடத்தலில் நிதி அளித்தோ, வேறுவிதத்தில் உதவியோ செய்யக்கூடாது"
என்று அறிவித்தார்.
வழக்குத் தொடர்தல் இருந்து தப்பிச் செல்லுதல் இப்பொழுது "வாழ்க்கையை
அச்சுறுத்தும் வியாபாரமாக" போய்விட்டது. இதற்குக் காரணம் தொடர்ச்சியான ஆஸ்திரேலிய அரசாங்கங்களும்
அவற்றின் சர்வதேச சக அரசாங்கங்களும் பாரிய சட்டபூர்வ, இராணுவ-பொலிஸ் தடைகளையும் அகதிகள் நுழைவதைத்
தடுத்தலில் கொண்டுவந்து அவர்களை ஆபத்து நிறைந்த கடல்பயணத்தை மேற்கொள்ள வைத்துள்ளன. ரூட்
அரசாங்கமும் அகதிகள் படகுகளை குறுக்கிட்டு நிறுத்தி பயணிப்பவர்களை இந்தியப் பெருங்கடலின் தொலைப்பகுதியில்
உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் இடத்தில் நிறுத்த கடற்படையை பயன்படுத்துகிறது.
அரசியல், இன ரீதியான அல்லது மத அடக்குமுறை, போர் ஆகிய அடக்குமுறைகளில்
இருந்து தப்பிச் செல்லும் பல மக்களுக்கும் சட்ட அனுமதியுடன் வெளியேற முடியாது என்று ஆகிவிட்டது. இவர்கள் வெளியேற
உதவுபவர்களில் குடும்ப நண்பர்களும் மனிதாபிமான அமைப்புக்களும் உள்ளன. தவிர மற்ற முறையான குழுக்கள் வாடகைக்கு
எடுக்கும் வறிய நிலையில் உள்ள மீன்பிடிப்போரும் உண்டு. சமீபத்திய அகதிகளில் பலரும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க
தலைமையில் நடக்கும் அதிகரித்துச்செல்லும் போரில் இருந்து தப்புபவர்கள் ஆவர். இதில் ஆஸ்திரேலிய துருப்புக்களும்
நேரடியாக தொடர்பு கொண்டவை. அதேபோல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடு, அடக்குமுறை
இவற்றில் இருந்து தப்புபவர்களும் உண்டு. அந்த அடக்குமுறையை உட்குறிப்பாக ரூட் அரசாங்கம் ஆதரிக்கிறது.
இதையே தொழிலாகக் கொண்டிருக்கும் "கடத்தல்காரர்களுக்கு" எதிராக
இயக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், சட்டவரைவானது குடும்ப உறவினர்கள், சொந்தக்காரர்கள் மற்றும்
ஆஸ்திரேலியாவில் வாழும் மற்ற ஆதரவளிப்போர், பணம் கொடுப்பவர்கள் அல்லது வேறுவிதத்தில் அகதிகள்
படகுகளில் பயணிக்க உதவுவோரையும் இலக்கு கொண்டுள்ளது.
"ஆட்கள் கடத்தலுக்கு பொருள் உதவி, ஆதாரங்கள் அளிப்போர்" என்ற பிரிவும்
புதிய குற்றம் செய்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு குறைந்த பட்ச தண்டனை 10 ஆண்டுகள்
சிறைதண்டனை மற்றும்/அல்லது $110,000 அபராதம் ஆகும்.
தாங்கள் அனுப்பும் பணம் ஆஸ்திரேலியாவிற்கு தப்பி ஓடிவர பயன்படும் என்று
தெரியாமல் பணம் அனுப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. குற்றம் சாட்டும் அரசாங்க வக்கீல்கள் இந்த நபர்கள்
"பொறுப்பற்றதனமாக", அதாவது இப்படி நடக்கக்கூடும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்று நிரூபித்தால்
போதும். மற்றொரு திருத்தமாக அகதிகளுக்கு உதவுபவர்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அவர்கள் இச்செயலில்
இருந்து நலன்கள் அடைவர் என்று காட்ட வேண்டிய தேவையில்லை. வேறுவிதமாகக்கூறினால், தஞ்சம் நாடுவோருக்கு
உதவி எவர் செய்தாலும் சிறைக்கு அனுப்பப்படலாம்.
மக்கள் கடத்தலில் ஒரு புதிய குற்றமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது சுரண்டப்படுதல்,
இறப்பு அல்லது தீவிர ஆபத்து வாய்ப்பு இருக்கக் காரணமானால் 20 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு வகை செய்யும்
மற்றும் /அல்லது $220,000 அபராதம் கட்ட வேண்டும். பெரும்பாலான பயணங்கள் இறப்பு ஆபத்தைக்
கொண்டுள்ளதால், இச்சிறைவாசங்கள் அதிக அளவில் கொடுக்கப்படும். குறிப்பாக நீதிமன்றங்களுக்கு உரிய
சூழ்நிலையை கணக்கில் கொண்டு தண்டனையைக் குறைக்கும் முறைகள் அதிகம் கொடுக்கப்பட மாட்டாது. பல முறை
தவறில் ஈடுபட்டால் கட்டாயமாக குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சிறைதண்டனை என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
இச்சட்டவரைவு ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பு (ASIO)
என்னும் உள்நாட்டு உளவு அமைப்பிற்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும். அது "எல்லைப் பாதுகாப்பிற்கு"
அச்சுறுத்தல் கொடுக்கும் எவருக்கு எதிராகவும், மக்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் உட்பட, பரந்த முறையில்
செயல்படும். வெளிநாட்டு உளவுப் பிரிவான ASIS
க்கும், இராணுவ மின்னணு கண்காணிப்பு அமைப்பு, பாதுகாப்பு அடையாள இயக்குனரகம் (DSD)
ஆகியவற்றிற்கும் வெளிநாட்டில் இருந்து உளவுத் தகவல்ககளை அகதிகள் படகுகள் தொடர்புடையவர்கள் பற்றி
சேகரிக்க ஒப்புதல் தரும்.
தற்பொழுது உளவுத்துறை பிரிவுகள் சட்டபூர்வமாக தேசியப்பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
என்று அழைக்கப்படுவதற்கு எதிராக வரம்பு கட்டப்பட்டுள்ளன. ஐயத்திற்கு இடமின்றி, இந்த தடைகள் நடைமுறையில்
மீறப்படுகின்றன. ஆனால் சட்டவரைவு முறையாக இந்த அமைப்புக்களை இன்னும் பரந்த செயல்களில் ஈடுபடுமாறு
அனுமதிக்கும், தங்கள் தகவல்களை ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸுக்கு விசாரணை, குற்றச்சாட்டு சுமத்துதல்
ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் விதத்தில் கொடுக்கும். கூட்டாட்சி மற்றும் மாநிலப் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் தகவல்
கண்காணிப்புக் கருவிகளை நிறுவுதல், பயன்படுத்துதல், அகற்றுதல், மற்றும் கேட்டல், பார்வை மூலம் கண்காணித்தல்,
அவசர நடவடிக்கைகள் என்று கூறப்படுபவற்றில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மக்கள் கடத்தல்காரர்களை பின்தொடர்தல்
ஆகியவற்றை செய்ய அனுமதிக்கும்.
தஞ்சம் கோருவோருக்கு எதிரான மற்ற நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே கூட்டம் நிறைந்திருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியான கிறிஸ்துமஸ் தீவில் 5,000 பேர் வரை
காவலில் 2014க்குள் வைக்கப்பட ஏற்பாடுகள் விரிவாக்கப்படும். தற்போதைய உத்தியோகபூர்வ தரமான
2,040 ஐ காவலில் இருப்பவர்கள் எண்ணிக்கை ஏற்கனவே எட்டிவிட்ட நிலையில், அரசாங்கமானது தீவில் இன்னும்
3,000 பேரை வைப்பதற்குக் கிடைக்கக்கூடிய இடங்களை இரகசியமாக தேடுவதாக
Australian
தகவல் கொடுத்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் அரசாங்கமானது மக்களைப் பெரிய கூடாரங்கள், பிரித்துக்
கட்டக்கூடிய கட்டிடங்களில் வைத்திருக்கின்றது. 400 பேருக்கான புதிய வளாகம் முடிவடையும் நிலையில் உள்ளது.
முதலில் காவல் மையமாக இருந்த இவ்விடம் ஹோவர்ட் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுது 400
பேருக்கு மட்டும்தான் வசதி இருந்தது. செய்தி ஊடக, எதிர்த்தரப்பு கூற்றான அவருடைய அரசாங்கம் சில
கைதிகளை டார்வின் அல்லது மற்ற முக்கிய உள்நாட்டு இடங்களுக்கு மாற்ற உள்ளது என்பதை உறுதியாக
நிராகரித்தார். பாராளுமன்றத்தில் தன் ஆட்சி "கரைக்கு வெளியே நிறுத்தும் வழிவகைதான் கடுமையாக
கையாளப்படும் என்று வலியுறுத்தினார்.
மேலும் தொழிற்கட்சி அரசாங்கம் ஹோவர்ட் அரசாங்கத்தின் ஆஸ்திரேலிய கடல்
தீவுகளை நாட்டின் குடியேற்றப் பகுதியில் இருந்து "அகற்றும்" திட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதையொட்டி காவலில் இருப்பவர்களுக்கு ஆஸ்திரேலிய சட்டத்தின்கீழ் எந்த உரிமையும் மறுக்கப்படும்.
நீதிமன்றங்களில் முறையீடும் செய்ய முடியாது. இது சர்வதேச அகதிகள் சாசனத்தை மீறுகிறது. அதன்படி
"நீதிமன்றங்களுக்கு தடையற்ற அணுகும் வாய்ப்பு" இருக்க வேண்டும்.
2007ல் தொழிற்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம் மக்கள் ஹோவர்ட்
அரசாங்கம் நீண்ட காலம் அகதிகளை சிறு பசிபிக் தீவான நெளருவில் இருத்தியது பற்றிக் கொண்ட வெறுப்புத்தான்.
ஆனால் ரூட்டின் அகதிகள்-எதிர்ப்பு ஆட்சி இன்னும் கடுமையான சட்டங்களை கொண்டுள்ளது. அத்துடன் அருகில் உள்ள
இந்தோனேசியா, மலேசியா நாடுகளுடன் இணைந்து அகதிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்லுவதைத் தடுக்க, எதிர்க்க
செயல்படுகிறது. அந்நாடுகள் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடவில்லை.
இந்தோனிசியாவின் ஜனாதிபதி
Susilo BambangYudhoyono
கடந்த வார வருகையை ரூட் பயன்படுத்தி, "ஆட்கள் கடத்தல், கொண்டுவரப் பயன்படல் பற்றி ஒரு வடிவமைக்கப்பட்ட
திட்டத்தை செயல்படுத்த" இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்று அறிவித்தார். மற்றய விவரங்களை அவர்
கொடுக்க மறுத்தாலும், இதன் பொருள் தீவிர பொலிஸ், உளவுத்துறை, இராணுவ நடவடிக்கைகள் இந்தோனிசியாவில்
இருந்து புறப்படும் படகுகளை நிறுத்த பயன்படும் என்பதுதான். ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேசிய
Yudhoyono
இந்தோனிசியாவிலும் "ஆட்கள் கடத்தலை" தீவிரக் குற்றமாக ஆக்கும் முயற்சிக்கு உறுதியளித்ததும் பெரும் கைதட்டலை
பெற்றார்.
மேரக் என்னும் மேற்கு ஜாவாத் துறைமுகத்தில், ஆண், பெண், குழந்தைகள் என்று
240 தமிழர்கள் ஒரு ஆபத்தான 10 மீட்டர் படகில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்னர்.
அக்டோபர் 11 ல் கான்பெர்ரா வேண்டுகோளுக்கு இணங்க இந்தோனிசிய கடற்படை இதை தடுத்து நிறுத்தியது.
சுகாதார நிலைமைகள் மோசமாகி விட்ட போதிலும், நோயினால் ஒருவர் இறந்துவிட்ட போதிலும், ரூட் அரசாங்க
அவர்களை ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு
Oceanic Viking
கதை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. அப்பொழுது மற்றொரு படகில் நிறைந்திருந்த
தமிழர்கள் ஆஸ்திரேலிய சுங்கத்துறை கப்பலில் அரசாங்கம் அவர்கள் தஞ்ச மனுக்களை விரைவில் பரிசீலனை செய்ய
ஒப்புக் கொள்ளும் வரை ஆக்கிரமித்திருந்தனர்.
ரூட் அரசாங்கமும் அதன் செய்தி ஊடக, அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள குறைகூறுபவர்களும்
மீண்டும் அகதிகள் பிரச்சினையை உலகப் பொருளாதார நெருக்கடி, சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள்,
அரசாங்கம் சாதாரண மக்கள் மீது சுமத்தியுள்ள வாழ்க்கைத்தர குறைப்புக்கள் இவற்றில் இருந்து திசை திருப்ப உணர்வுகளை
தூண்டிவிடுகின்றன. அதாவது இந்தநெருக்கடிகள் அகதிகளால் ஏற்பட்டவை அல்ல. அனைத்து மக்களும் விரும்பும் இடத்தில்
வாழ்ந்து, வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டிய அடிப்படை உரிமையைத்தான் அவர்கள் கோருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டு
துரத்தப்படல், வறுமை ஆகியவற்றில் இருந்து ஒதுங்கவும், முழு சமூக அரசியல் உரிமைகளுடன் வாழவும்தான் அவர்கள்
விரும்புகின்றனர். |