World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Appeal by Polanski's lawyers exposes new details of judicial misconduct

நீதித்துறை முறைகேடு பற்றிய புதிய விவரங்களை பொலன்ஸ்கியின் வக்கீல்களுடைய முறையீடு அம்பலப்படுத்துகிறது

By Hiram Lee
20 March 2010

Use this version to print | Send feedback

Polanski
ரோமன் பொலன்ஸ்கி

வியாழனன்று திரைப்படத் தயாரிப்பாளர் ரோமன் பொலன்ஸ்கியின் வக்கீல்கள் பதிவு செய்த முறையீடுகளானது ஒரு இளம் பெண்ணிடம் இவருடைய பாலியல் தொடர்பு பற்றி 1977 விசாரணைகளில் இருந்த நீதித்துறை முறைகேடுகளைப் பற்றிய மேசமான புதிய சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

முறையீடானது ஆரம்ப நீதிமன்ற விசாரணையில் மாவட்ட அரசாங்க வங்கீல், நீதிபதிகளின் முறைகேடுகள் பற்றி வந்துள்ள புதிய வெளிப்பாடுகளின் அடிப்படையில், பொலன்ஸ்கி உடனடியாக காவலில் இருந்து "தண்டணைக் காலம் முடிக்கப்பட்டது" என்று வெளியே விடப்பட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் முறைகேடுகளை பற்றி வந்துள்ள சமீபத்திய இரகசிய சாட்சியம் சுவிஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு போலந்து-பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வேண்டுமா என்ற முடிவிற்கு விடப்பட வேண்டும் என்று வாதிடுகிறது.

1977ல் கலிபோர்னியா லொஸ் ஏஞ்சல்ஸில் பொலன்ஸ்கி முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் இளவயது விளம்பர அழகி சமந்தா கீமருடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள் செய்தி ஊடக சர்க்கஸ் போல் இருந்து, பின்னர் தலைமை வகித்த லொஸ் ஏஞ்சல்ஸ் வட்டார மேல் நீதிமன்ற நீதிபதி லொரன்ஸ் ஜே. ரிட்டன்பாண்ட்டின் முறைகேடான நடத்தையால் இழிவுற்றது.

2008 ரோமன் பொலன்ஸ்கி பற்றிய ஆவணம்: தேடப்படுபவர் மற்றும் ஆசை (மரிநா ஜெனோவிச்) நீதிபதியின் பல முறைகேடுகளை இவ்வழக்கு பற்றி விசாரித்து அம்பலப்படுத்தியது. அவற்றுள் Rittenband முடிவு ஒன்று கலிபோர்னியாவில் சீனோ அரச சிறையில் 90 நாட்கள் கட்டாயமான கண்டறிதலுக்கான மதிப்பீடு மற்றும் மனநிலை பற்றிய ஆய்வு என்பவை பொலன்ஸ்கீ மீது சுமத்தியது, இயக்குனரை தண்டனைக்கு உட்படுத்திய வகையாயிற்று. கண்டறிதல் கட்டாயம் என்பதால், இந்த ஒரு வழியில்தான் பொலன்ஸ்கி சட்டபூர்வ முறையீடு செய்ய முடியாமல் சிறைக்கு அனுப்பப்பட முடியும். அரசாங்க வக்கீல், எதிர்த்தரப்பு வக்கீல் குழுக்கள் இரண்டுமே முடிவைப் பற்றிய சோதனையை தண்டனை வகையாகப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று வாதிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆவணத்தின் பெரும்பகுதி வழக்கைப் பற்றி தெரிவித்துள்ளது சமீப காலம் வரையில் அதிகம் அறியப்படாமல் இருந்தது என்று நம்பப்பட்டது. ஆனால் 1977 விசாரணைகளின்போது முக்கிய வக்கீலாக இருந்த ரோஜர் கன்சன் கொடுத்துள்ள புதிய சாட்சியம் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா குற்றவியல் நீதித்துறையில் இருந்த முக்கிய அதிகாரிகள் அந்த நேரத்தில் நீதிபதி ரிட்டன்பாண்ட் நடந்து கொண்ட முறை பற்றி அறிந்திருந்தனர், ஆனால் ஒன்றும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.

வியாழனன்று பதிவு செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டின்படி, ரோஜர் கன்சன் வட்டார அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் தன் மேலதிகாரிகளுக்கு ஆரம்ப நீதிமன்ற விசாரணைக் காலத்தில் தான் ரிட்டன்பாண்ட் வழக்கில் இருந்து அகற்றப்படுவதற்கான ஆதாரங்களை தயாரித்து வருவதாகக் கூறியிருந்தார். தன்னுடைய பிரமாணப்பத்திரத்தின் வரைவு ஒன்றை லொஸ் ஏஞ்சல்ஸ் அரசாங்க துணைத் தலைமை வக்கீல் ஸ்டீபன் டிராட்டிடமும் மேற்பார்வையிடும் துணை மாவட்ட அரசாங்க வக்கீல் மைக்கேல் மோன்டக்னாவிடமும் கொடுத்திருந்தார். அவர்கள் எப்படி நீதிபதிக்கு எதிரான கன்சனின் கூற்றுக்களை சரிபார்க்க முடியும் என்று கேட்கப்பட்டதற்கு கன்சன் அவர்களை ரிட்டன்பாண்டுடன் நேரடியாகப் பேசுமாறு கோரியிருந்தார்.

இதன்பின், டிரோட்டும் மோன்டக்னாவும் ரிட்டன்பாண்டைச் சந்தித்து கன்சனிடம் தகவல் கொடுத்தனர். "அனைத்து முறைகேடுகள் எனக்கூறப்பட்டவற்றையும்" ரிட்டன்பாண்ட் ஒப்புக் கொண்டார் என்று அவர்கள் வியத்தகு முறையில் கன்சனிடம் கூறினர். அப்படி இருந்தும் அவர்கள் வழக்கில் இருந்து நீதிபதியை அகற்ற கன்சனுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

இந்தக் கண்டுபிடிப்பு எந்த அளவிற்கு 1977 நீதிமன்ற நடவடிக்கைளில் சட்டவிரோத நடத்தை இருந்தது, நீதிபதியின் நடத்தை மட்டும் இல்லாமல், "ஆகஸ்ட் 1977ல் அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் உயர்மட்டங்களிலும்" என்பதை அம்பலப்படுத்துகிறது என்று மேல்முறையீட்டு மனு கூறுகிறது. முன்னரைவிட இப்பொழுது ரோமன் பொலன்ஸ்கிக்கு நியாயமான விசாரணை அமெரிக்காவில் கிடைக்கவில்லை என்பது இன்னும் தெளிவாகிறது. அவருடைய அரசியலமைப்பின் படியான அடிப்படை உரிமைகள் இந்த விவகாரத்தின்போது பல முறை மீறப்பட்டன.

1977 விசாரணைகளின்போது இருந்த முறைகேடுகள் பற்றிய கண்டுபிடிப்புக்களை தவிர, திரைப்படத் தயாரிப்பாளரின் வக்கீல்கள் பொலன்ஸ்கியை தற்பொழுது அமெரிக்காவிற்கு கொண்டுவருவது பற்றிய சட்ட பூசல் வழக்கில் அரசாங்க வக்கீல்கள் சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு பொலன்ஸ்கியை தருவிப்பதற்கு ஆதரவான முறையில் தவறான தீர்ப்புத் தகவல்களை கொடுத்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். பல ஆண்டுகளாகவே நீதிபதி ரிட்டன்பாண்ட் பொலன்ஸ்கி 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க விரும்பவில்லை என்று விரும்பினார் என்றும் இந்த தண்டனை சுவிஸ் அரசாங்கத்தின் அனுப்பிவைக்கப்படும் கைதிகளுக்கு தேவையான வழக்கின் தரத்திற்கு மிகவும் குறைந்தது என்றும் அவருடைய வக்கீல்கள் வாதிட்டுள்ளனர். நாட்டின் நீதித்துறை அமைச்சரகத்தின் கருத்துப்படி சுவிட்சர்லாந்து குறைந்தது ஆறுமாத காலம் சிறையில் இருக்க வேண்டும் என்று இல்லாதவர்களை அனுப்பி வைக்காது என்று தெரிகிறது.

பொலன்ஸ்கி ஏற்கனவே ரிட்டன்பாண்ட் உத்தரவிட்டபடி 90 நாட்களுக்கு மேல் காவலில் இருந்துவிட்டார். இதைத்தவிர அதிகாரிகள் அவர் முன்கூட்டி விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்திய கண்டறியும் சோதனையை நடத்துவதற்கு முன் 1977ல் சீனோ அரச சிறையில் அவர் 42 நாட்கள் இருந்தார். மொத்தம் பொலன்ஸ்கி 69 நாட்கள் 2009ல் ஜூரிச் சிறையில் இருந்தார் அப்பொழுது முதல் அவர் சுவிட்சர்லாந்தில் தன் வீட்டில் Gstaad ல் 100 நாட்கள் வீட்டுக்காவலில் இருந்தார்.

சமீபத்திய முறையீட்டின் முடிவை எதிர்நோக்கி, பொலன்ஸ்கி வீட்டுக் காவலில் இருக்கிறார். சுவிஸ் அரசாங்கம் பொலன்ஸ்கி வராவிட்டாலும் அவர் மீது தண்டனை விதிக்க முடியுமா என்பது பற்றி லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவரை அமெரிக்காவிற்கு அனுப்பும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று குறிப்புக் காட்டியுள்ளது.