World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குGreece: The pseudo-left and the trade unions கிரேக்கம்: போலி இடதும் தொழிற்சங்கங்களும் Ulrich Rippert கிரேக்கம் தற்பொழுது சர்வதேச பொருளாதார, அரசியல் நெருக்கடியின் முக்கிய மையப் புள்ளியாக உள்ளது. இங்குதான் ஐரோப்பிய, சர்வதேச நிதியுயரடுக்கு கிரேக்கத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னோடியில்லாத வகைத் தாக்குதல்களை செய்ய அதன் வழிவகைகளை பரிசோதித்து வருகிறது. கிரேக்கத்தில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் பல தசாப்த போராட்டத்திற்குப் பின்னர் பெறப்பட்ட சமூக தேட்டங்களை அகற்றி தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்களை பெரிதும் குறைக்கும் சிக்கன நடவடிக்கள் சுமத்தப்படுவதற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர். இது அனைத்து அரசியல் போக்குகளையும் தாங்கள் புறநிலையில் பிரதிபலிக்கும் சமூக சக்திகளை வெளியிட வைக்கும் கட்டாயத்தில் தள்ளியுள்ளது. கிரேக்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஏதென்ஸ், தெசலோனிகி ஆகியவற்றிற்கும் அப்பால் மிகவும் தொலைவிலும் உள்ள அரசியல் பிரச்சினைகள் மீது ஒளிவீச்சைக் காட்டுகின்றன. குறிப்பாக தங்களை "இடது" என்று காட்டிக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ அரசியல் குழுக்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை தடுக்கும் விதத்தில் கொண்டுள்ள முக்கிய பங்கைக் காட்டுவதுடன் அவை எவ்வாறு முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாக்கின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. கிரேக்கத்தின் அரசியல் நிலைமையின் தற்பொழுது உள்ள சிறப்புத் தன்மை யாது? சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் சர்வதேச நிதிய மூலதனத்தின் சார்பாக நடந்து கொள்ளும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான வெட்டுக்களை சுமத்துகிறது. அதையொட்டி தொழிலாளர்களானவர்கள் அரசாங்கத்தின் திவால்தன்மைக்கு விலைகொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதன் அரச திவால்தன்மைக்கு காரணம் வங்கிகளுக்கு பிணைஎடுப்பு கொடுக்க நிதியளித்ததும், மொத்தத்தில் முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும்தான். இதையொட்டி PASOK உடன் நீண்டகால தொடர்பு உள்ள தொழிற்சங்களை அதற்கு நம்பியுள்ளது. பயனற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் வரையறை இட்டுக் கொள்ளும் விதத்தில் தொழிற்சங்கங்களானது தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை எதிர்த்து, சிதைத்து, களைப்படையவும் செய்துவிடுகின்றன. தொழிற்சங்கங்களானது ஆர்ப்பாட்டங்களில் வெட்டுக்களை குறைகூறினாலும், அவை அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து தங்கள் முயற்சிகளை முதலாளித்துவத்தை உறுதிபடுத்த செலவிடுகின்றன. நடைமுறையில் இதன் பொருள் PASOK ஆனது வங்கிகள் கோரும் வெட்டுக்களை செயல்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவதுதான். தொழிற்சங்கங்களின் துரோகம் இன்னும் வெளிப்படையாக இருக்கும் சூழ்நிலையில், தொழிலாளர்களின் குறைகூறலை எதிர்கொள்ளும் நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் தன் பங்கிற்கு போலி இடது குழுக்களை நம்பியுள்ளது. அவற்றின் பங்கு தொழிற்சங்கக் கருவிகளின் அமைப்பு மற்றும் அரசியல் கட்டுப்படுத்தும் தன்மைக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சியை தடுத்துவிடுவதுதான். SYRIZA போன்ற அரசியல் அமைப்புக்களானது தங்களை "தீவிர இடதுகளின் கூட்டணி" என்று அழைத்துக் கொள்பவை மற்றும் Antarsya என்று கடந்த வசந்த காலத்தில் நிறுவப்பட்ட "புரட்சிக்கான முதலாளித்துவ எதிர்ப்பு இடதின் ஒத்துழைப்பு" அமைப்பானது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அவை தொழிற்சங்கங்களால் வழிநடத்தப்பட்டால் அன்றி இயலாது, நெறிப்படுத்த முடியாது என்று கூறுகின்றன.இரு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான தனியார்துறை GSEE, பொதுத்துறை ADEDY ஆகியவை பெரும்பாலும் PASOK உறுப்பினர்களை கொண்டவை. இரு அமைப்புக்களும் தொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்தும் அதே கட்சியுடன்தான் இணைந்தவை. SYRIZA மற்றும் Antarsya வின் மத்திய கோரிக்கை GSEE மற்றும் ADEDY ஆகியவற்றின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு "இடதின் ஐக்கியத்தை" ஆதரவாகக் கொடுப்பது ஆகும். இந்த தொழிற்சங்கங்களுக்கான "ஐக்கியம்" என்னும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை காட்டிக் கொடுப்பது ஆகும். இதன் நோக்கம் தொழிலாளர்களின் தோல்விக்குப் பாடுபாடும் வலதுசாரி அமைப்புக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஆகும்.தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஐக்கியம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான எழுச்சியை அடிப்படையாக கொண்டு, ஒரு புதிய, ஜனநாயக போராட்ட அமைப்பை சோசலிச முன்னோக்கில் நிறுவுவதின்மூலம்தான் முடியும்--அந்தப் போராட்டம் தொழிலாளர்களை அணிதிரட்டி PASOK அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இந்தப் போலி "இடதுகளின்" நோக்குநிலை தற்செயல் நிகழ்வு ஏதும் இல்லை. இது தனிப்பட்ட தலைவர்களின் உந்துதலில் இருந்தும் எழவில்லை. குட்டி முதலாளித்துவ முன்னாள் இடது அமைப்புக்கள், தொழிற்சங்கக் கருவிகளுடன் சேர்ந்துகொள்வது எல்லா இடங்களிலும் நடக்கும் அரசியல் நிகழ்வுதான். ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இதைக் காண முடியும். அவைகளாக இருப்பவை அமெரிக்காவின் முன்னாள் தீவிரமயப்பட்ட தட்டுக்கள், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியின் இடது கட்சி, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி, இத்தாலியில் Rifondazione Communista போன்றவைகள். எல்லா இடங்களிலும், இக்குழுக்கள் பல தசாப்தங்கள் வெளிப்படையாக முதலாளிகளுடனும் அரசாங்கங்களுடனும் ஒத்துழைத்தவை, அவைகளின் துரோகத்தின் விளைவாக பெரும்பாலான உறுப்பினர்களை இழந்துள்ளன, இப்பொழுது உண்மையான மற்றும் சட்டரீதியான தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளனர். இது அரசியலைத் தவறாகப் புரிந்து கொண்டதின் விளைவு அல்ல. முன்னாள் இடதுகளானது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் அடையாளம் காண்பது மற்றும் அவைகளுடைய தனிப்பட்ட உயர்வு தொழிற்சங்கக்கருவியின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பது என்பது முதலாளித்துவ அரசியலின் வடிவமைப்பிற்குள் இந்த சக்திகள் இணைந்துகொள்ள அது முக்கியமான கருவியாக இருப்பதைப் பிரதிபலிக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை நியாயப்படுத்தும் வகையில் அவை தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான பிணைப்புக்கள் கொண்டவை என்று வாதிடுகின்றனர். இதற்கு எதிர்ப்புறத்தில் அவர்கள் புதிய கட்சிகளின் நிறுவலுக்கு ஆதரவு கொடுத்தால், அவற்றின் வெற்றிகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முக்கிய பிரிவின் ஆதரவை வென்றுவிட்டோமா என்பதை வைத்து அளவிடுகின்றனர். இச்சக்திகளில் பலவும் சமூக நல அரசாங்கத்துடன் ஆழ்ந்து ஒருங்கிணைந்திருப்பவை. கடந்த தசாப்தத்தில் தொழிற்சங்கத்தை சுற்றியிருந்த முழு அடுக்கையும் முற்றிலும் வசதியான, சலுகை பெற்ற வாழ்க்கையை அனுபவிக்க உதவின. இவர்கள் சமூக நல அரசாங்கத்தை ஒழுங்கின் சக்தி என்று கருதினர், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்திற்கு இயல்பான விரோதப் போக்கை கொண்டிருந்தனர். இன்று அவர்கள் பொருளாதார நெருக்கடியின் சமூக, அரசியல் உட்குறிப்புக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டம் தீவிரமடைவது பற்றி. எனவே தொழிற்சங்கங்களுடன் இன்னும் அதிகமாகவும், தீவிரமாகவும் பிணைந்துள்ளனர். சாராம்சத்தில் இந்த அரசியல் குழுக்கள் குட்டி முதலாளித்துவ அடுக்குகளின் கூறுபாடுகள் ஆகும். நெருக்கடி இவர்களை வலதிற்குத் தள்கிறது, தொழிற்சங்கங்களை சமூகப் புரட்சிக்கு எதிரான ஒரு தடுப்பு என்று காண்கிறது. இதுதான் SYRIZA மற்றும் Antarsya போன்ற கிரேக்க அமைப்புக்கள் மற்றும் இவை போன்ற மற்றய நாடுகளில் இருக்கும் அமைப்புக்களின் வலதுபுற விரைவான நகர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜேர்மனிய இடது கட்சியின் இடைக்காலத் தலைவரும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் ஐரோப்பிய இடதின் தலைவருமான Lothar Bisky கிரேக்கத்தின் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு சில நாட்கள் முன்பு, "மக்கள் கடன் குறைப்புக்களில் பங்கு பெறவேண்டும், ஆனால் நிதானத்துடன்" என்று கூறியது தற்செயல் நிகழ்வு அல்ல. அது கற்பனைக்கு எதையும் விட்டுவிடவில்லை. SYRIZA ஆனது பெப்ருவரி மாத இறுதியில் நடைபெற்ற அதன் ஏதென்ஸ் மாநாட்டின் முடிவில் பிஸ்கி இரு அமைப்புக்களுக்காகவும் பேசினார், இவற்றின் நெருக்கமான ஒத்துழைப்பையும் அதில் வலியுறுத்திப் பேசினார். மார்ச் 17ம் தேதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு அறிக்கையில் கூறியதைத்தான் பிஸ்கி உறுதிபடுத்திகிறார். கிரேக்கத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு வெற்றிகரப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களும் அவைகளின் முன்னாள் இடது பாதுகாப்பாளர்கள் ஆகியோருடன் முழுமையாக முறித்துக் கொள்ளுவதான் அவசியமான தேவையாகும். |