WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
French regional elections: Ruling party defeated amid
mass abstention
பிரெஞ்சு பிராந்திய தேர்தல்கள்: ஏராளமான வாக்கு பதிவின்மையான நிலையிலும் ஆளும்
கட்சிக்கு தோல்வி
By Antoine Lerougetel and Alex Lantier
16 March 2010
Use this version
to print | Send
feedback
மார்ச் 14 அன்று நடந்த பிரான்சின் பிராந்திய தேர்தல்களில் முதலாவது சுற்றில்
பெரும்பான்மையோர் வாக்களிக்காமல், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பரந்த
மறுதலிப்பை காட்டினார்கள்.
வாக்குப்பதிவு நடைபெற்ற சூழ்நிலையானது பிரான்சின் அரசியல் ஸ்தாபனத்தின் திவால்தன்மையை
அடிக்கோடிட்டுக் காட்டியது. பிரெஞ்சு இடதில் அரசியல் வெற்றிடம் இருக்கையில், வாக்காளர்கள் தங்கள்
கருத்துக்களை எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சிக்கு (
PS) கொடுத்த ஆதரவின் மூலம் பதிவு செய்தனர். முரணான முறையில்
இந்த வணிக சார்புடைய கட்சியின் கொள்கைகள்தான் சார்க்கோசியின் கொள்கைளைகளில் இருந்து கணிசமான வேறுபாடு
இல்லாதவை என்று கருதப்படுகின்றன.
வாக்குப் பதிவின்மையானது பிரான்சின் 44 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில்
மிக அதிகமாக 53.64 சதவிகிதத்தை எட்டியது. ஆளும் பழமைவாத
UMP ( Union for a Popular Movement)
க்கு கிடைத்த 26.2 சதவிகித வாக்கானது 1958ல் ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து கோலிச வலதிற்கு
கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் ஆகும். PS
க்கு 29.14 சதவிகித வாக்குகள் கிடைத்தன--வாக்குப் பதிவு
குறைவு என்பதால் 15 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் அதற்கு வாக்களித்தும், 10 சதவிகிதத்தினர்
அதன் கூட்டுக்கட்சிகளுக்கும் 13 சதவிகிதத்தினர் UMP
க்கு வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய சுற்றுச்சூழல் கட்சி (Europe-Ecology
Party),
PS ன் மரபார்ந்த
ஒரு நட்புக்கட்சி, வாக்குகளில் 12.8 சதவிகிதத்தைப் பெற்றது. நேற்று
PS ன்
Claude Bartolone,
PS
ஆனது இரண்டாவது சுற்றில் பிராந்தியத் தேர்தல்கள் அனைத்திலும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் கட்சி உடன் தேசிய
அளவில் உடன்பாடு கொண்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் ஐரோப்பிய சுற்றுச்சூழல் கட்சியின்
Jean-Vincent Placé
அத்தகைய உடன்பாடு ஏற்படவில்லை என்று மறுத்து,
Ile-de-France (பாரிஸ் பெருநகரப் பகுதி) உட்பட பல
பிராந்தியங்களில் உடன்பாடுகள் இனித்தான் ஏற்பட வேண்டும் என்றார்.
மற்றய "இடது" கட்சிகள்,
PS உடன் சார்பு
கொண்டவை வலுவிழந்துள்ளன. பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
மற்றும் முன்னாள்
PS மந்திரி
Jean-Luc-Menelnchon
உடைய இடது கட்சி (PG)
மொத்தத்தில் 5.84 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தல்களில் அது 6.47 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒலிவியே
பெசன்ஸநோவின் NPA
எனப்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, 2009 ஐரோப்பிய தேர்தல்களில் 6.1 சதவிகிதத்தை பெற்றது
கடந்த ஞாயிறன்று 2.4 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.
புதிய பாசிச தேசிய முன்னணி (FN)
11.42 சதவிகித வாக்குகளை தேசிய அளவில்
பெற்றது--கட்சியை விட்டு விலகுதல், உள்கட்சி பிளவுகள், சார்க்கோசியினுடைய
FN
வாக்காளர்களுக்கு இனவழி முறையீடு ஆகியவற்றால் எட்டு ஆண்டுகளாக இருந்த சரிவை இது மாற்றியது. இது 10
பிராந்தியங்களில் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியது. தென்கிழக்கு
PACA
பிராந்தியத்தில் (Provence-Alpes-Cote
d'Azur) 20 சதவிகிதம் அது பெற்றது. அங்கு
Jean Marie Le Pen
போட்டியிட்டார். Nord-Pas-de-Calais
ல் 18.3 சதவிகிதம் அது பெற்றது, அங்கு அவருடைய மகள்
Marine
வேட்பாளராவார். Picardie
ல் 15 சதவிகிதம் அது பெற்றது.
இரண்டாவது இறுதிச் சுற்று அடுத்த ஞாயிறு, மார்ச் 21ல் நடைபெற உள்ளது.
PS
மற்றும் அதன் கூட்டுக் கட்சிகள் 22 பிராந்தியங்களிலும் வெற்றி பெற்று
UMP யின் கட்டுப்பாட்டிற்குள்
எந்த பிராந்திய சபைகளும் இல்லாமல் செய்யக்கூடும்.
PS ன் வெற்றி ஒரு சிதைந்த
எதிரொலி ஆகும். மக்கள், UMP
ஜனாதிபதி சார்க்கோசி தொடரும் சிக்கன அரச நடவடிக்கைகளுக்கு பெருகிய எதிர்ப்பைக் கொண்டிருந்தாலும்
வேறு எந்த அரசியல் மாற்றீடும் இல்லாத நிலையில் இது வந்துள்ளது. கடந்த மாதம், சார்க்கோசி
CGT
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் இன்னும் கூடுதலான ஓய்வூதியக் குறைப்புக்களை
அறிவித்துள்ளார்--ஐரோப்பா முழுவதும் அலையென பெருகும் சமூக நலச் செலவு வெட்டுக்கள் மற்றும் கிரேக்க
கடன் நெருக்கடி ஆகியவற்றிற்கு இடையே இது நடந்துள்ளது.
மார்ச் 11 கருத்துக் கணிப்பு ஒன்று மக்களில் 72 சதவிகிதத்தினர் சார்க்கோசி
"தேசிய கொள்கைகளை" பிராந்தியத் தேர்தல்களின் முடிவை ஒட்டி மாற்ற வேண்டும் என்று விரும்புவதாக
கூறுகிறது. மேலும் 73 சதவிகிதத்தினர் அவர் இவ் முடிவுகளை ஒட்டி ஓய்வூதிய வெட்டுக்களுக்கான அவரது திட்டத்தை
மாற்ற வேண்டும் என்றும், 70 சதவிகிதம் பொருளாதாரம் பற்றிப் பெருகிய அவநம்பிக்கையை
வெளிப்படுத்தினார்கள் என்றும் கூறுகிறது.
தேர்தல் இரவன்று PS
செய்தித் தொடர்பாளர் Benoit Hamon
இந்த உணர்விற்கு முறையீடு செய்யும் விதத்தில் மார்ச் 21ம் தேதி அதிகமாக
PS க்கு
பொருத்தமில்லாத அடிப்படையில் வாக்குகள் வேண்டும் என்று கூறினார். அதற்கு ஆதரவாக அவர்
PS
கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பிராந்திய சபைகள் தேர்தலுக்கு பின்னர் தயாரிக்கப்படும் "முன்னோடியில்லாத
சிக்கனப் பொதிகளுக்கு" எதிராக "சமூக கேடயங்களாக" இருக்கும் என்றார்.
இதன்பின் குறிப்பிடத்தக்க வகையில்
Hamon
கிரேக்கத்தில் வந்துள்ள சமூக நல வெட்டுக்கள் போல் பிரான்சிலும் சுமத்தப்பட வேண்டும் என்ற வாதங்களை
அளித்தார். அவை நியாயமானவை என்று வெறுக்கத்தக்க முறையில் கூறினார். "கிரேக்கத்திடம் இக்கொள்கையை
பிரான்ஸ் கோரியுள்ளது. பின்னர் ஐரோப்பிய ஆணையம் பிரான்சிடம் இவ்வாறு கூறினால், கிரேக்கத்திடம்
கோரியதை பிரான்ஸ் தானே செயல்படுத்தாமல் எப்படி மறுக்க முடியும்?"
சார்க்கோசியின் வெட்டுக்களுக்கும் சோசலிஸ்ட் கட்சிக்கும் எதிராக தொழிலாளர்
கோபத்தில் ஒரு வர்க்க இடைவெளி உள்ளது. சோசலிஸ்ட் கட்சி கோபத்தை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்து
மீண்டும் சார்க்கோசியை போன்ற சமூக நல வெட்டுக்களை செயல்படுத்தத்தான் விரும்புகிறது.
Hamon உடைய கருத்துக்கள்
ஐரோப்பாவில் மிகப் பெரிய சமூக நல வெட்டுக்கள் அவரைப் போன்ற சமூக ஜனநாயகவாதிகளால்தான்
செயல்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை கூறவில்லை: அதாவது கிரேக்கத்தில்
PASOK
அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ, ஸ்பெயினில்
PSOE பிரதமர்
ஜோசே லுயி ஜாபடெரோவின் அரசாங்கம், போர்த்துகல்லில்
PS பிரதமர்
ஜோசே சொக்ரடிஸின் PS
அரசாங்கம் ஆகியவை. இந்த அரசாங்கங்கள் அனைத்தும் ஓய்வூதியங்கள், பொதுத்துறை ஊதியங்கள், சமூக நலச்
செலவுகள் ஆகியவற்றில் பெரியளவில் வெட்டுக்களை முன்வைக்கின்றன. பிரான்சில்
PS ன் முதன்மைச்
செயலாளர் Martine Aubry
ஓய்வூதிய வயதில் இரு ஆண்டுகள் கூட்டப்பட வேண்டும் என்று பிராந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.
பல முதலாளித்துவ செய்தி ஊடகப் பிரிவுகள்
PS இன் தேர்தல்
முடிவுகளை அதன் கொள்கைகளுக்கான பரந்த ஆதரவு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.
வணிக நாளேடான Les Echos
"தேர்தலானது அரசியல் சக்திகள் மீது ஆழ்ந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன--அவைகள் எந்த நிறம்
உடையதாக இருந்தாலும், அவைகள் தேசிய அளவிலுள்ளதா அல்லது உள்ளூரா என்று இருந்தாலும்."
Médiapart எச்சரித்தது:
"மொத்த வாக்குகளில் 50.5 என்று கிடைத்துள்ள நிலையில் முழு இடதும் மீண்டும் கனவு காணத் தொடரலாம். அது
தவறாகிவிடும். வாக்குப் போடாமல் இருப்பது வலதின் சலுகை மட்டும் அல்ல....இது எந்த அளவிற்கு இடதில்
தீமை உள்ளது என்பதையும் குறிக்கிறது. ....மீண்டும் 25 வயதிற்குள் இருக்கும், தொழிலாள வர்க்கத்தினர்
அதாவது நகர உள் பகுதிகளில் இருக்கும் மக்கள் வாக்குகளை போடவில்லை."
PS மற்றும்
FN இரண்டிற்கும் கிடைத்த அதிக வாக்குகள் பிரான்ஸின் அரசியல்
ஸ்தாபனத்தில் நச்சுப் பிடித்த இனவெறியை தூண்டிய பின்னணியில் காணப்பட வேண்டும். குறிப்பாக 2008
பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் UMP
நடத்தியதில். கடந்த ஜூன் மாதம் சார்க்கோசியும்
PCF அரசியல்வாதி
Andre Gerin
ம் பர்க்காவைத் தடைசெய்ய ஒரு பாராளுமன்றக்குழு வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கினார்கள். இதில்
PS ம்
பங்குபற்றியது. கடந்த இலையுதிர்காலத்தில் சார்க்கோசி பிரான்சின் "தேசிய அடையாளம்" பற்றிய வலதுசாரி
விவாதத்தை தொடக்கி வைத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் மக்கள் கருத்து "தேசிய அடையாள" பிரச்சாரத்திற்கு
எதிராக உறுதியாகத் திரும்பியதால் செய்தி ஊடகமும் அதைக் குறை கூறத்தொடங்கியது.
இதன்பின் PS
பிரதிநிதிகள் பர்க்கா எதிர்ப்புக் ஆணைக்குழுவை விட்டு விலகினார்கள். ஏனெனில் கட்சி தன்னை ஒரு இனவெறி
எதிர்ப்பு சக்தி என்று மாற்றிக் காட்டிக்கொள்ள வெறுக்கத்தக்க முறையில் முயன்றது. இப்பிரச்சினையில் முக்கிய
கூறுபாடு Languedoc-Rousillon
பகுதியில் அவருடைய இனவெறிக் கருத்துக்களுக்காக அறியப்பட்ட முன்னாள்
PS அரசியல்வாதி
Georges Freche
க்கு எதிராக PS
வேட்பாளர் ஒருவரை ஒப்ரி நிறுத்த ஏற்பாடு செய்ததாகும். இந்த எதிர்ப்பும் முற்றிலும்
பாசாங்குத்தனமானதாகும். ஒப்ரி இப்பொழுது இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில்
Languedoc
பட்டியலில் உள்ள Freche
க்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தேர்தலுக்குச் செல்லுமுன், சார்க்கோசி தற்காப்பில் இருந்தார் என்பது தெளிவு.
மார்ச் 12ம் திகதி சார்க்கோசி Figaro
Magazine க்கு ஒரு பேட்டி கொடுத்தார்: அதாவது
அடுத்த ஆண்டு தன்னுடைய சமூக நலச் செலவு வெட்டுக்கள் குறைக்கப்படும் என்பது போல் பேசினார். மீண்டும் மறு
தேர்தலுக்கு நிற்காமல் இருக்க அவர் முடிவெடுப்பாரா, பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் 2012 ல் நிற்பதற்கு
வழிவகுப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஆயினும்கூட, UMP
இனப் பிரச்சினைகளில் தன் குவிப்பை தொடர்ந்தது. UMP
செனட் உறுப்பினர் Gerard Longuet
செய்தி ஊடகத்தில் ஒரு புயலை உருவாக்கியவிதமாக PS
அரசியல்வாதி Malek Boutih
சமத்துவம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான உயர் அதிகார அமைப்பு
(HALDE-High Authority Against Discrimination and for Equality)
என்பதற்கு தலைமை தாங்கக்கூடாது, ஏனெனில் அவர் "மரபார்ந்த பிரெஞ்சு சமூகத்தின்" உறுப்பினர் அல்ல என்று
கூறியிருந்தார். Boutih
அல்ஜீரிய பின்னணி கொண்ட பிரெஞ்சுக் குடிமகன் ஆவார்.
Ile-de-France ன்UMP
வேட்பாளர்கள் பலமுறையும் Seine-Saint-Denis
ல் இருந்து வந்த ஆபிரிக்க இனத்தை சேர்ந்த PS
வேட்பாளர் Ali Soumare
ஐயும் அவதூற்றை மீண்டும் மீண்டும் பரப்பினார்கள்--அதாவது அப்பகுதி பாரிஸ் வடக்கிலுள்ள வறிய புறநகர்களில்
ஒன்றாகும். அவர் "multi-recidivist
criminal" என்று கூறப்பட்டது. மார்ச் 10ம் தேதி
பொலிஸார் Soumare
யிடம் எந்த குற்ற வழக்கும் இல்லை என்று உறுதிபடுத்தினர். தன்னுடைய
சிறுநகரான Villiers-le-Bel
ல் இவர் 47.8 சதவிகித வாக்குளைப் பெற்றார். அந்த இடத்தில்தான் 2007ல் பொலிசுடன் ஒரு சம்பவத்தை
அடுத்து பல இளைஞர்கள் கொல்லப்பட்டபின் பெரும் கலகங்கள் ஏற்பட்டன. அவர்
UMP (13.5
சதவிகிதம்), FN (13.6
சதவிகிதம்)
என்ற அளவில் இரு கட்சி வேட்பாளர்களையும் தோற்கடித்தார். |