World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European finance ministers divided over Greek bailout

கிரேக்க பிணை எடுப்புப் பற்றி ஐரோப்பிய நிதி மந்திரிகள் பிளவுபட்டனர்

By Stefan Steinberg
16 March 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் மார்ச் 15-16 திகதிகளில் இரு நாள் கூட்டத்தை கிரேக்கத்திற்கு பிணை எடுப்புப் பொதி ஒன்று பற்றி விவாதிக்கக் கூடுகின்றனர். ஆனால் அந்நாட்டின் பெரும் வரவு-செலவுத் திட்ட நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி பெருகிய முறையில் பிளவுகள் வெளிப்பட்டுள்ளன.ஆனால் தற்போது முக்கிய நிதி மந்திரிகள் நாட்டிற்கு அவசரக்கால கடன் கொடுப்பது பற்றிய கூட்டமானது முடிவு எடுக்கும் என்பதை மறுத்துள்ளனர்.

ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷெளபில் Bild Zeitung செய்தித்தாளிடம் ஞாயிறன்று கூறினார்: "நிதி உதவியை பற்றி முடிவுகள் எடுக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை." பிரெஞ்சு நிதி மந்திரி கிறிஸ்ரின் லாகார்ட் தான் இந்த வாரம் அறிவிப்பு வருவதை எதிர்ப்பதை தெளிவுபடுத்தினார். "எந்த முடிவும் வராது என்பது எனக்கு உறுதி, இன்னும் நேரம் கனியவில்லை ஆதலால் எந்த பொத்தான் அமுக்கப்படும், அமுக்கப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறுவதற்கு இல்லை."

ஷெளபில்லும் லாகார்டும் எதிர்கொள்ளும் தன்மை கிரேக்க வரவு-செலவுத் திட்ட நெருக்கடி பற்றி இதுவரை ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஒட்டியுள்ளது. கிரேக்க அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து அறிமுகப்படுத்தியுள்ள இரு சிக்கனப் பொதிகள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதற்கு கிரேக்க அரசாங்கத்தின் மீது அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படவேண்டும், அதுவரை நலிந்துள்ள கிரேக்கப் பொருளாதாரத்திற்கு உதவ திட்டம் ஏதும் இல்லை என்ற தோற்றத்தை அவர்கள் கொடுக்க முற்பட்டுள்ளனர்.

தாங்கள் பிணை எடுப்பு கொடுப்பதற்கு திட்டமிடுவதைப் பற்றி பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயங்கினாலும், திரைக்கு பின்னால் ஐரோப்பிய நிதி அதிகாரிகள் தீவிரமாக ஒரு மீட்புப் பொதியை அளிக்க முயல்கின்றனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி கிரேக்கத்திற்கு பிணை எடுப்புப் பொதி 20 முதல் 25 பில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன.

நிலைமையின் தீவிரத்தை சுருக்கிக் கூறுகையில், ஐரோப்பிய நிதிப் பிரிவு ஆணையர் ஒல்லி ரெஹ்ன் பிரஸ்ஸல்ஸ் இரு நாள் கூட்டத்திற்கு முன்பு அறிவித்தார்: "கிரேக்கம் தோற்றால், நாமும் தோல்வி அடைகிறோம், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மைக்கு தீவிர, ஏன் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தக்கூடும்." பின் அவர் சேர்த்துக் கொண்டார்: "யூரோ ஒரு நாணய ஏற்பாடு மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய அரசியல் திட்டமும் ஆகும்." கிரேக்கத்திற்கான எந்த நிதிய ஆதரவும் அரசாங்கம் கூடுதலான சேமிப்பு நடவடிக்கைகள் எடுப்பதுடன் பிணைக்கப்படும் என்றும் ரெஹ்ன் வலியுறுத்தினார்.

முக்கிய ஐரோப்பிய நிதியாளர்களும் வங்கியாளர்களும் பெருகிய முறையி கிரேக்கம் அதன் அரசாங்கக் கடன்களைத் திருப்பிக் கொடுப்பதில் தவறு செய்யும் என்று கவலை கொண்டுள்ளனர். கிரேக்கம் 2010த்தில் அதன் கடன்களுக்காக 54 பில்லியன் யூரோக்கள் நிதி திரட்ட வேண்டும். இதில் 20 பில்லியன் யூரோ ஏப்ரல், மே மாதம் செலுத்த வேண்டியிருக்கும். கிரேக்க அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் 5 மில்லியன் யூரோ புதிய கடன்களைப் பெற முடிந்தது. ஆனால் கூடுதல் வட்டி கொடுக்க ஒப்புக் கொண்டபின்னர்தான் அது முடிந்தது.

மார்ச் மாதம் பெறப்பட்ட 5 பில்லியன் யூரோக்கள் கடன் உண்மையில் மார்ச் 3ம் தேதி கிரேக்க அரசாங்கம் இயற்றிய கடுமையான சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டு அதன் மூலம் கிரேக்க நிதி அமைச்சரகத்தால் பெறப்பட்ட 4.8 பில்லியன் பணத்தை விட அதிகம் ஆகும்

ஒப்புக் கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் வங்கிகளுக்கு நாட்டின் கடனைத் திருப்பிக் கொடுக்க முற்றிலும் போதாது என்று சில நிதி வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். மற்றவர்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேமிப்பு நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் பலனைத் தராது என்று கருதுகின்றனர். இதுவரை இயற்றப்பட்டுள்ள இரு வரவு-செலவுத் திட்டங்களும் ஊதியங்களிலும், ஓய்வூதியங்களிலும் பெரும் வெட்டுக்களை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அடிப்படைப் பொருட்கள், எரிபொருள் மீது வரிகளை அதிகரிக்கும். இத்தகைய நடவடிக்கைகள் உள்நாட்டுத் தேவையைக் குறைத்து கிரேக்கப் பொருளாதாரம் மீள்வதற்கு வாய்ப்பைக் குறைக்கும்.

கிரேக்க அரசாங்கத்தை பிணை எடுக்கும் திட்டங்கள் ஐரோப்பிய அரசியல், நிதிய வட்டாரங்களில் எப்படி தொடர்வது என்பது பற்றி சூடான விவாதத்தைக் கொடுத்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பெரிய நாடுகள் கிரேக்கத்தில் பரந்த வங்கி முதலீடுகளை கொண்டுள்ளன. நாடு திவால் ஆவதை அனுமதிக்கத் தயாராக அவைகள் இருக்காது. அதே நேரத்தில் கிரேக்க நெருக்கடி எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. ஜேர்மனி குறிப்பாக கடுமையான நிதிய, வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாடு வேண்டும் என்பதில் முன்னணியில் உள்ளது.

ஒரு வாரம் முன்பு ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷெளபில் தான் ஐரோப்பிய நாணய நிதியம் (EMF) நிறுவப்படுவதற்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்ததில் ஜேர்மனிய அரசாங்கம் கொண்டுள்ள கடின நிலைப்பாடு கோடிட்டுக் காட்டுப்பட்டுள்ளது. அத்தகைய நிதியம் முக்கிய ஐரோப்பிய நாடுகளை, ஜேர்மனியை முன்னிறுத்தி, தனி நாடுகளின் தேசிய உரிமையை மீறி IMF சுமத்துவது போன்ற கடுமையான சிக்கனத் திட்டங்களை சுமத்த அனுமதிக்கும். IMF ல் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் குறுக்கீடு இதில் இருக்காது. தன்னுடைய EMF திட்டம் கிரேக்க நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உரிய காலத்தில் நிறுவப்பட முடியவில்லை என்றும் ஆனால் வருங்காலப் புதிய நெருக்கடிகளைச் சமாளிக்க அது தேவை என்றும் ஷெளபில் கூறினார்.

கடந்த செவ்வாயன்று "ஐரோப்பிய நிதிய ஒன்றியம் ஏன் அதன் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது" என்ற தலைப்பில் ஷெளபில் ஜேர்மனியின் சர்வதேச செயல்பாடுகள் உடைய வங்கிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடுமையான வரவு-செலவுத் திட்ட கொள்கையை வாதிடுவதாக ஷெளபில் வலியுறுத்தினார். "ஒரே ஒரு வித நடவடிக்கைதான் முடியும். அனைத்து யூரோப்பகுதி உறுப்பு நாடுகளும் உறுதி, வளர்ச்சி உடன்பாட்டை விரைவாக, கடுமையாக செயல்படுத்த வேண்டும். இத்தகவலை நான் அடிக்கோடிட்டுக் காட்டுவதற்குக் காரணம் உலக நிதிய சந்தைகள் அரசியல் அரங்கில் இருந்து வரும் பல குரல்களைவிட இன்னும் தெளிவாகக் கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது."

இதன்பின் ஷெளபில் தன்னுடைய திட்டத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய பெரும் அதிகாரங்களை, ஒரு ஐரோப்பிய நாணய நிதிக்குத் தேவையானதை கோடிட்டுக் காட்டினார். எந்த உதவி கொடுத்தலும் "கடுமையான நிபந்தனைகளையும் உயர்ந்த விலையையும் கொண்டிருக்க வேண்டும்.... அப்பொழுதுதான் உதவித் தொகை முழு யூரோப் பகுதியின் நிதிய உறுதிக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் அவசர காலத்திற்கு கோரப்படும். இந்த விளைவானது முடிவு எடுக்கும் வகையில் இருந்து உதவி கேட்ட நாட்டை அகற்றுவதால் வலுப்பெறும்--உதவி நாடுதல் கடைசிப் பட்சமாகத்தான் இருக்க வேண்டும்."

கிரேக்கம் ஏற்கனவே மிகக் கடுமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டையும் அரசியல் மேற்பார்வையையும் ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் கொண்டுள்ளது. கிரேக்க பாராளுமன்றம் நிதிய, வரவு-செலவுத் திட்ட விவகாரங்கள் பற்றி எடுக்கும் அனைத்து முடிவுகளும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய அதிகாரத்தால் பரிசீலிக்கப்பட்டு இசைவு கொடுக்கப்பட வேண்டும் இப்பொழுது ஷெளபில் நிதிய பாதிப்பில் இருக்கும் தேசிய நாடுகளின் பாராளுமன்றங்கள் தங்கள் நிதி பற்றிக் கட்டுப்பாட்டையும் இழக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவம் தேசிய இறைமையை மீறி நடப்பது போதாது என்பது போல், ஷெளபனில் ஒரு படி மேலே சென்று அவர் திட்டமிடுடம் EMF ற்கு உரிய நேரத்தில் கடன்களைத் தீர்க்க மறுக்கும் நாடுகள் மீது அபராதம் விதிக்கவும் வாதிடுகிறார். ஐரோப்பியப் பொருளாதார, நாணயச் சட்டங்களை யூரோப் பகுதி உறுப்பு நாடுகள் மீறினால் வாக்குரிமைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். தேவையானால் மீறிச் செயல்படும் நாட்டை யூரோப்பகுதியில் இருந்து ஒதுக்கி வைத்தல், அகற்றுதல் கூட வேண்டும் என்று கூறுகிறார்.

தேசிய இறைமை, ஜனநாயக நெறிகள் மீது ஷெளபிலவின் பெரும் தாக்குதல் சில கட்டுரையாளர்களை திகைப்படையச் செய்யப் போதுமானதாக இருந்தது. திங்களன்று பைனான்ஸியல் டைம்ஸில் எழுதிய Wolfgang Munchau ஷெளபில்லின் திட்டங்கள், குறிப்பாக யூரோப்பகுதி உறுப்பினர்களை விலக்குவது பற்றிய உரிமையை "நம்ப முடியாத அளவிற்குத் அதிதீவிரம்" என்று விவரித்தார்.

ஷெளபில்லவினுடைய யோசனைக்கான வரவேற்பு ஐேர்மனியில் அதிக ஆதரவாக இருந்தது. திங்கட்கிழமை தலைமையக Hamburg உள்ள இராணுவ அகடமியில் பொருளாதாரக் கொள்கைக்கான ஒரு பேராசிரியர் Taggespiegel இல் அவருடைய கட்டுரையில் எழுதினார் " கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்."

ஷெளபில்லவின் ஐரோப்பிய நாணய நிதியத்திற்கான திட்டம், ஐரோப்பாவின் முக்கிய பொருளாதாரங்களுக்கு கண்டத்தின் நிதிய, வரவு-செலவு திட்ட விவகாரங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொடுப்பது என்பது, அத்தகைய நிறுவனம் சர்வதேச நிதியத்தின் சார்பில் கடுமையான, தண்டனை வகையிலான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் சர்வாதிகார சக்திகளை கொண்டிருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இவர் முன்வைத்துள்ள கருத்து கணிசமான எதிர்ப்பை ஐரோப்பிய அரசியல், நிதிய வட்டாரங்களில் சந்தித்தது. பெருகிய முறையில் ஜேர்மனிய கொள்கை--கடுமையான வரவு-செலவுத் திட்ட தரங்களையும் பெருகிய முறையில் ஏற்றுமதி தொழிலையும், அதிக குறைவூதிய வேலைகள் துறையை தளமாகக் கொண்டுள்ளது, தாக்குதலுக்கும் உட்பட்டுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு நிதி மந்திரியிடம் இருந்து கூட இது வந்துள்ளது, அவர் ஜேர்மனிய அரசாங்கம் அதன் சந்தைக்குள் தேவையை அதிகரிக்கும்படி கோரியுள்ளார்.

ஜேர்மனியின் மிகப் பெரிய பொருளாதாரம், மிக அதிக வணிக உபரிகளை வைத்துள்ள நாடு என்று மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாதிடுகின்றன. தேவையில் இருக்கும் மற்றய ஐரோப்பிய நாடுகளுக்கு கடன், மற்றய உதவிகள் கொடுக்க அது தயாராக இருக்க வேண்டும். ஷெளபில்லவின் திட்டமான ஜேர்மனியின் ஊக்கத்தில் ஒரு ஐரோப்பிய நாணய நிதியம் நிறுவப்படுவது அத்தகைய குறைகூறலை நிராகரிக்கும் தன்மையைக் கொண்டது. ஆனால் பெருகும் வணிகம், அமெரிக்காவுடன் அழுத்தங்கள் என்ற நிலையில் ஷெளபில்லவின் சமீபத்திய திட்டம் ஐரோப்பாவிற்குள்ளேயே இருக்கும் ஆழ்ந்த, பெருகிய பிளவுகளை வெளிப்படுத்தத்தான் உதவுகிறது.