World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe Citizens Inquiry into the Dexter Avenue Fire டெக்ஸ்டர் அவென்யூ தீ விபத்து பற்றி மக்கள் விசாரணை Tom Eley டெக்ஸ்டர் அவெனியூ இல் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நிகழ்ந்த தீவிபத்தில் 2 ஊனமுற்றவர்களும் இன்னுமொரு டெட்ரோயிட்வாசியும் கொல்லப்பட்டனர். இந்த மரணத்திற்கான பின்னணியை கண்டறிவதற்காக ஒரு விசாரணையை நடாத்த சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் டெட்ரோயிற் நகரத்தின் மோசமடைந்துகொண்டிருக்கும் சமூக நிலைமைகள் தொடர்பாக அக்கறைகொண்டவர்களுக்கும் அழைப்புவிட்டது. இவ்விசாரணை மார்ச் மாதம் 20ம் திகதி 1-5 மணி பிற்பகல் நடைபெறவுள்ளது. DTE Energy நிறுவனம் டெக்ஸ்டர் அவனியூவில் உள்ள இரட்டை மாடி வீட்டிற்கான எரிவாயு மற்றும் மின்சார வெட்டை 2008 யூலை மாதம் அமுல்படுத்தியமையால் வீட்டிலிருந்தோர் வீட்டினை வெப்பமாக்க தற்காலிக வெப்பமாக்கும் கருவியை பாவித்ததால் இந்த தீவிபத்து நிகழ்ந்தது. இது ஒரு தனி நிகழ்வல்ல. கடந்த வருடம் மட்டும் டெட்ரோயிட்டில் இவ்வாறான 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அநேகமானவை வெப்பமாக்கும் வசதிகள் வெட்டப்பட்டதால், உறையும் குளிரை சமாளிக்க வீட்டிலிருந்தோர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நிகழ்ந்ததாகும். இதில் ஒரு குழந்தையும் கிழக்கு டெட்ரோயிட்டின் தீவிபத்தில் இறந்தது.இந்த மரணங்கள் முற்றிலும் அவசியமற்றவை. எவருமே அடிப்படை வசதிகளான மின்சாரம், எரிவாயு, தண்ணீர் இல்லாமல் வாழவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அவ்வாறு வாழவேண்டியுள்ளது. இது டெட்ரோயிட்டில் மட்டுமல்ல முழு நாட்டிலும் நடக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சி, டெக்ஸ்டர் அவென்யூ தீ விபத்து பற்றி ஒரு மக்கள் விசாரணையை, சேவைகள் மூடப்படுதலை ஒட்டி ஏற்படும் ஆபத்தான அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவதற்கு தொடக்கியுள்ளது. அவற்றை நிறுத்த ஒரு இயக்கத்தையும் கட்டமைக்க விரும்புகிறது. மிச்சிகன் டெட்ரோயிட்டில் 8011 டெக்ஸ்டர் அவென்யூவில் இரண்டு வயதான ஊனமுற்ற சகோதரர்கள் மார்வின் ஆலென் (62 வயது), டிரோன் ஆலென் (61) மற்றும் லின் க்ரீர் (58 வயது) என்று மூன்று பேர் உயிரை ஒரு தீ விபத்து பறித்த பின்னர் விசாரணைக்கான பிரச்சாரம் தொடக்கப்பட்டது. DTE அதன் சேவைகள் மூடிவிட்டது, வீட்டில் இருந்த பல வெப்பமளிக்கும் கருவிகளில் இருந்து ஒன்றினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. இக்குறிப்பிட்ட பெரும் சோகம் ஒரு பரந்த நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். டெக்ஸ்டர் அவென்யூ தீ விபத்திற்கு அடுத்த வாரங்களில் இன்னும் அதிக உயிரிழப்புக்கள் இதே போன்ற சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளன. மார்ச் 2ம் தேதி மூன்று குழந்தைகள் (3,4,5 வயதுடையவை) வெப்பமாக்கும் கருவி ஒன்றினால் ஏற்பட்ட தீயில் கருகினர். தன் வெப்பக் கருவி மற்றும் மின்சாரத்தை மூடிவிடவேண்டாம் என குழந்தைகளின் தாயார் DTE இடம் கேட்டுக் கொண்ட சில மணி நேரத்தில் இது நடைபெற்றது. DTE உடைய தகவல் தொகுப்பே 2009ல் அது 221,000 வீடுகளில் கருவிகளை மூடிவிட்டது, இது முந்தைய ஆண்டில் இருந்து 50 சதவிகிதம் அதிகம் என்பதைக் காட்டுகின்றது. டெட்ரோயிட்டில் பல தசாப்தங்கள் தொழில்கள் குறைந்துவிட்டது, நூறாயிரக்கணக்கான வேலைகள் தகர்க்கப்பட்டது ஆகியவற்றின் விளைவான பாரிய சமூக நெருக்கடி பொருளாதார சரிவினால் மேலும் தீவிரமாகியுள்ளது. ஒருகாலத்தில் அமெரிக்காவிலேயே செல்வக் கொழிப்பு அதிகம் இருந்த நகரத்தில் உத்தியோகபூர்வ வறுமை இப்பொழுது 30 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது. உண்மை வேலையின்மை விகிதம் 50 சதவிகிதத்தை எட்டியுள்ளது.மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அமெரிக்கா, மற்றும் சர்வதேச அளவில் இதே போன்ற நிலைமையைத்தான் எதிர்கொள்ளுகின்றனர். பொருளாதார நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை சுரண்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதை தீவிரமாக்கியுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன, மிக அடிப்படை தேவைகள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. மக்களின் பரந்த பிரிவினர் தங்கள் வீடுகளில் வெப்பமாக்கல் அல்லது வாடகை, சுகாதாரப் பாதுகாப்பிற்கு பணம் கொடுத்தல் அல்லது உணவைப் பெறுதல் இவற்றிற்கிடையே பணம் செலவழிப்பதில் திகைத்துள்ளனர். இந்த நிலைமைகள் எதிர்க்கப்பட்டு, மாற்றப்பட வேண்டும். அனைத்து சேவைகள் மூடல்களுக்கும், வீடுகள் ஏலத்திற்கு விற்கப்படுவதற்கும் உடனே முடிவு கட்டப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. ஒரு மிகப் பெரிய பொதுப்பணித் திட்டம் தொடங்கப்பட்டு அனைவருக்கும் வேலைகள் கொடுக்கப்பட்டு டெட்ரோயிட் போன்ற நகரங்களின் உள்கட்டுமானங்கள் மறுகட்டமைக்கப்பட வேண்டும். அத்தகைய திட்டம் எப்படி சாதிக்கப்பட முடியும்? சேவைகள் மூடப்படுதல் அல்லது சமூக நெருக்கடியின் மற்ற கூறுபாடுகள் பற்றி ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு பல மத்தியதர வகுப்பு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்கின்றன. ஆயினும் அவற்றின் எதிர்ப்புக்கள் ஜனநாயகக் கட்சி அல்லது தொழிற்சங்கங்களுடன் அவை கொண்டுள்ள அரசியல் உறவுகளால் தொடர்ந்து சமரசத்திற்கு உட்பட்டுவிடுகின்றன. தங்கள் இணைவில் உறுதியாக உள்ள அவை, சமூக நெருக்கடியின் குறிப்பிட்ட கூறுபாடுகளை அவற்றை ஏற்படுத்திய சமூக, அரசியல் நிலைமைகளின் அடித்தளத்தில் இருப்பவற்றுடன் தொடர்புபடுத்த மறுக்கின்றன. ஒரு மக்கள் விசாரணை வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும்போது, சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலும் வேறு கண்ணோட்டத்தில் தொடங்க விரும்புகிறது. தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை ஒரு சுயாதீன முயற்சியின் மூலம்தான், ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கு எதிர்த்த வகையிலும், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசியல் முறைக்கு எதிர்ப்பாகவும்தான் போராட முடியும் என்ற அடிப்படையில் தொடங்குகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் வலிமையில் மகத்தான நம்பிக்கையை கொண்டுள்ளது. டெக்ஸ்டர் அவென்யூ தீவிபத்து மற்றும் பிற கொடிய தீவிபத்துக்களின் சமூக, அரசியல் வேர்களை அம்பலப்படுத்தும் விடத்தில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் உணர்மையை உயர்த்தும் நோக்கத்தையும் அதன் சுயாதீன ஒழுங்கமைப்பிற்கு ஊக்கம் கொடுப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. வெள்ளியன்று மக்கள் விசாரணை நடத்திய செய்தியாளர், கூட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரையில் Detorit News, "சோசலிச சமத்துவக் கட்சி எவ்வாறு DTE மூடல்களைக் கையாள்கிறது என்பது பற்றி அரசாங்க சட்டமியற்றுபவர்கள் ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது" என்று எழுதியது. இது தவறான கூற்றாகும். இந்த விசாரணை லான்சிங்கிலோ வாஷிங்டனிலோ உள்ள அதிகாரிகளுக்கு முறையீடு செய்யவில்லை. மாறாக நீண்ட காலமாக டெட்ரோயிட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் DTE உட்பட பெருநிறுவன உயரடுக்கிற்கும் இடையே உள்ள தகாத உறவுகளை அம்பலப்படுத்துவதைத்தான் நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது இந்த விசாரணை மக்களில் ஒரு சிறு தட்டினரின் இலாபத்திற்காகவும் தனியார் செல்வக் குவிப்பிற்காகவும் இடைவிடாமல் மில்லியன் கணக்கான மக்களை சுரண்டுவதின் விளைவுகளையும் ஆராய்ந்து அம்பலப்படுத்தும். கடந்த இரு ஆண்டுகளில் DTE நூற்றுக்கணக்கான மில்லியன்களை இலாபமாகக் கொண்டு பல மில்லியன்களை அதன் நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளது. இதற்கிடையில், DTE டெட்ரோயிட்டில் வாடிக்கையாளர்களுக்கு நகரத்தின் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் கணிசமான விலையேற்றம் செய்துள்ளதற்கும் அரசாங்க கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். வேலைகள், ஊதியங்களில் இருந்து பொதுக் கல்வி வரை, பூங்காக்கள், நூலகங்களில் இருந்து மிக அடிப்படைத் தேவைகளான வெப்பம், நீர், மின்சாரம் போன்றவை வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாடும் பெருவணிக நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இலாப உந்துதலின் ஆணைகளுக்கு அடிபணியச் செய்யப்படுகின்றன. இந்த முறை இரக்கமற்ற முறையில் பெருவணிகத்தின் இரு கட்சிகளாலும் செயல்படுத்தப்படுகின்றது. பெருமந்த நிலைக்குப் பின் மோசமான நாட்டின் சமூக நெருக்கடி ஒபாமா நிர்வாகத்தால் கார்த் தொழிலாளர்கள், ஆசிரியர்களை இலக்கு வைப்பதற்கும் சமூகநலத் திட்டங்களை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் சமூகச் செல்வத்தின் டிரில்லியன் கணக்கான டாலர்கள் பொருளாதார பேரழிவை தூண்டிய அதே வோல்ஸ்ட்ரீட் ஊக வணிகர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒபாமா ஒரு "மாற்றத்திற்கான" சகாப்தத்தை கொண்டுவருவார் என்ற கூற்றுக்கள் சிதைந்துவிட்டன. செய்தியாளர் கூட்டத்தில் விசாரணைக்குழுத் தலைவர் லோரன்ஸ் போர்ட்டர் கூறியது போல், "இது ஒன்றும் இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும்." ஒரு முந்தைய காலத்தில் டெட்ரோயிட் தொழிலாளர்களின் போராட்டங்கள் பரந்த அளவில் வாழ்க்கைத்தரங்கள் உயர்த்தப்பட வழிவகுத்தன. இப்பொழுது டெட்ரோயிட்டில் உள்ள தொழிலாளர்களே முழு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் எதிராக நீண்டகால விளைவுகளை கொடுக்கும் தாக்குதலை நடத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சேவைகள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டு நிர்வாகிகள், நிதிய ஊகக்காரர்களின் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கு பதிலாக சமூகம் முழுவதில் நலனுக்காக கொண்டுவரப்பட வேண்டும். தொழிலாளர்களும் மாணவர்களும் போராட்டத்தில் நுழைகின்றனர். மார்ச் 4ம் தேதி நூறாயிரக்கணக்கான மக்கள் உயர்கல்விக்கு நிதியம் கொடுப்பதில் குறைப்பு ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமீப வாரங்களில் ஐரோப்பா முழுவதும் பொருளாரா பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலைகொடுக்கும் கடும் எனப்படும் சிக்கன நடவடிக்கைகள் வேண்டும் என்னும் வங்கியாளர்கள் கோரிக்கையை எதிர்த்து அலையென வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடபெற்றன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புதிய இயக்கத்திற்கு ஒரு புதிய முன்னோக்கு தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மக்கள் விசாரணையை கவனித்து ஆதரவு கொடுக்குமாறும், டெட்ரோயின் மக்களை முதல் மார்ச் 20 அன்று பிற்பகல் 1 முதல் 5 மணி வரை டெட்ரோயிட் வேன் ஸ்டேட் பல்கலைக்ககத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு வருமாறும், தங்கள் தகவல்களை அளிக்குமாறும் ஒரு பரந்த இயக்கத்தை முன்வைத்துப் போராடுவதற்கும் அழைக்கிறது. டெக்ஸ்டர் விசாரணை பற்றி கூடுதல் தகவலுக்கு இங்கு அழுத்தவும். |