WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஜேர்மனி
Germany: The significance of the North Rhine-Westphalia
state elections
ஜேர்மனி: வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தேர்தல்களின் முக்கியத்துவம்
By Ulrich Rippert
9 March 2010
Use this
version to print | Send
feedback
மே 9ம் தேதி வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW)
வில் தேர்தல் நடக்க இருக்கின்றன. டுசுல்டோர்ப் இன்னும் பிற
ரைன் பகுதி பெருநகர உள்ளூர் சட்டமன்றங்களின் அமைப்பை மட்டும் இத்தேர்தல்கள் முடிவு எடுப்பது மட்டுமின்றி
ஜேர்மனியக் கூட்டாட்சி அரசாங்கத்திலும் உறுதியான தாக்கங்களை கொண்டிருக்கும்.
18 மில்லியன் மக்கள் தொகையையும் (ஐந்து முன்னாள் கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களின்
மொத்த மக்கள் தொகையைவிட அதிகமானது) 13 மில்லியனுக்கும் மேலான வாக்காளர்களையும் கொண்டிருக்கும்
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மிகப் பெரிய அளவில் ஜேர்மனிய கூட்டாட்சியில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம்
ஆகும். ரூர் பகுதி எனப்படும் மிகப் பெரிய ஜேர்மனியத் தொழில் பகுதியையும் இது கொண்டுள்ளது. பல
சுரங்கங்களும் எஃகுத் தொழில்களும் நீண்ட நாட்களுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன என்றாலும், ரூர் பகுதி இன்னும்
ஜேர்மனியில் மிகப்பெரிய தொழில்துறைப் பேட்டையாக உள்ளது.
"ஒரு மினி தேசிய தேர்தல்களை" ஒத்திருக்கும் என்று வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா
தேர்தல்கள் எப்பொழுதும் கருதப்படுவது சரியே ஆகும். 1966ல் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி ஹெய்ன்ஸ்
கூன் உடைய சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP)
கூட்டணி 1969ல் அதிபர் வில்லி பிராண்ட் நிறுவிய மத்திய சமூக ஜனநாயக தாராளவாதக் கூட்டணிக்கு
முன்னோடியாக இருந்தது. மே 1995ல் சமூக ஜனநாயகக் கட்சியின் யோகானஸ் ராவ் பசுமைக் கட்சியுடன் மாநில
நிர்வாகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஜெகார்ட் ஷ்ரோடர் (SPD),
ஜொஸ்கா பிஷ்ஷருடன்
(பசுமைக் கட்சி)
சமூக ஜனநாயகக் கட்சி-
பசுமைக் கட்சி மத்திய அரசிற்கு முன்னோடியாயிற்று.
மத்திய அரசியலில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தல்களின் முக்கியத்துவம் ஐந்து
ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு நீடித்த காலத்தில்
அதிக இழப்புக்களை எதிர்கொள்ளும் வகையில், அதிபர் ஷ்ரோடர் அப்பொழுது சமூக ஜனநாயகக் கட்சி
தலைவராக இருந்த பிரான்ஸ் முன்டபெயரிங்குடன் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தல்களுக்கு முந்தைய நேரத்தை
வாய்ப்பாகப் பயன்படுத்தி சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி
பெரும்பான்மை பாராளுமன்றத்தை கலைத்து விரைவில் தேசிய தேர்தல்கள் நடத்தும் முடிவை அறிவித்தார்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தல்களை தேசிய அரசியலுக்கு ஒரு முன்னோடியாக
நிறுத்தும் மரபு தற்போதைய வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தலில் கூறுபாடாகவும் உள்ளது.
மத்திய மட்டத்தில் நாடு கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்
(CDU,CSU)
மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP)
கூட்டினால் நடத்தப்படுகிறது. ஆனால் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இதே சக்திகளின் கூட்டு ஏற்கனவே ஐந்து
ஆண்டுகள் ஆட்சியை நடத்தியுள்ளது. அப்பொழுது அது பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டது. செப்டம்பர்
மாதம் நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் வாக்குகள் முந்தைய தேர்தலைவிட
4.8 சதவிகிதம் குறைந்தது. 1999ல் அது 13.5 சதவிகிதத்தை இழந்திருந்தது ஒப்புநோக்கத்தக்கது.
Forsa and Infra நடத்திய
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்,
மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி மே மாதம்
பெரும்பான்மையை இழக்கும் என்று கூறப்படுகிறது. கருத்துக் கணிப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க வகையில்
தாராளவாத ஜனநாயகக் கட்சி நிராகரிப்பை எதிர்கொண்டது. 2009 தேர்தல்களில் அவை 14.6 சதவிகித
வாக்குகளை பெற்றாலும் NRW
தேர்தல்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவை வாக்குகளில் 6 சதவிகிதத்தை மட்டுமே பெற்றன. மாநிலப்
பாராளுமன்றத்தில் இடம் பெறத் தேவையான குறைந்த பட்ச 5 சதவிகித வாக்குகளை பெற முடியாமல்
போகலாம்.
கிறிஸ்துவ ஜனநாயக-தாராளவாத ஜனநாயகக் கட்சி கூட்டணி டுசுல்டோர்பில்
பெரும்பான்மையை இழந்தால், ஜேர்மனியின் கீழ்பாராளுமன்றமான
Bundesrat லும்
அது பெரும்பான்மையை இழக்கும். இதையொட்டி எத்தகைய கூட்டணி மாற்றீட்டு வகைகள் கூட்டாட்சி அரசாங்கத்தில்
இயலும் என்பது பற்றி அதிக ஊகங்கள் வந்துள்ளன.
பொதுவாக தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு தங்கள் இடைவிடா ஆதரவைக்
கொடுக்கும் வணிக, தொழில்துறைகளின் முக்கிய பிரதிநிதிகள்கூட பல வாரங்களாக அரசாங்கத்தை குறைகூறி
வருகின்றனர். அரசாங்கத்தின் பங்காளிகள் தங்கள் சக்தியை வணிக நலன்கள் கோரும் "சீர்திருத்தங்களை"
செயல்படுத்தாமல் உட்பூசல்களில் வீணடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். தாராளவாத ஜனநாயகக் கட்சி
தலைவர் கீடோ வெஸ்டர்வெல்லவின் சமூகநல அரசாங்கத்தை பற்றிய சொற்தாக்குதல்கள் பயன் கொடுக்காது
என்றும் கருதுகின்றனர்.
BDI எனப்படும் ஜேர்மனிய
தொழில்துறைக்கூட்டமைப்பின் தலைவரான ஹன்ஸ் பீட்டர் கீட்டல்
Frankfurter Allgemeinen Zeitung
பத்திரிகையிடம் கடந்த வாரம் தேசிய
அரசாங்கம்--தேசிய தேர்தல்கள் நடந்து ஐந்து மாதங்கள்தான் ஆகியுள்ளன என்றாலும்"--அதன் உறுதிப்பாடுகளை
இழந்து விட்டது என்றார். "தான் பல துறைகளிலும் சரியாகச் செயல்படவில்லை என்பதை தேசிய அரசாங்கம்
உணர்ந்துள்ளதாகவும், பொறுப்பற்ற தன்மையில் சிலதுறைகளில் நடந்து கொள்கிறது என்றும், ஒரு தீவிர கவனத்துடன்
நல்ல முறையில் செயலாற்றலாம் என்றும் கூறினார். தாராளவாத ஜனநாயகக் கட்சித்தலைவர், துணை அதிபர்
வெஸ்டர்வெல்ல பெயரை கூறாமல், "கருத்துக் கணிப்புக்கள் நம்மை பீதியில் ஆழ்த்தி, அதையொட்டி ஜனரஞ்சக
நிலைப்பாடுகளுக்கு ஓடிவிடக்கூடாது" என்றார் கீட்டல்.
சர்வதேச நிதிய நெருக்கடியின் பெரும் பாதிப்பை எதிர்கொள்கையில் திட்டமிட்ட
சிக்கன நடவடிக்கை திட்டம், "குறைந்தது 10 பில்லியன் யூரோக்களாவது ஆண்டில் சேமிப்பதற்கு" (நிதி மந்திரி
வொல்ப்காங் ஷெளய்பிள), பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு இருக்கையில், பெருவணிகம், தொழில்துறைப்
பிரதிநிதிகள் அரசாங்கம் அது தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு கூடுதலான அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்
என்று வலியுறுத்துகிறது; அரசாங்கம் நேரத்தை வெஸ்டெர்வெல்லயின் தேவையற்ற தூண்டுதல் நடவடிக்கைகள்
போன்றவற்றில் ஈடுபடக்கூடாது, அவை முக்கிய பூசல் தொடங்குவதற்கு முன்பு எதிர்ப்பை தூண்டும் என்று அழுத்தம்
கொடுக்கிறது.
NRW தேர்தல்கள் ஒரு புதிய
மறுஇணைப்பு கொண்டுள்ள அரசாங்கத்தை அமைக்க பயனுடைய கருவியாக இருக்கும் என்று அவர்கள் காண்கின்றனர்.
தற்பொழுது அவர்கள் ஒரு புதிய கூட்டமைப்பில் இருக்க வேண்டிய கட்சிகள் பற்றி அனைத்து கூறுபாடுகளைப் பற்றியும்
நிறையப் பேசுகின்றனர்.
அதிபர் அங்கேலா மேர்க்கெல் மே தேர்தல்களில் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்,
தாராளவாத ஜனநாயகக் கட்சி கூட்டணியின் வலுவற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் பசுமைவாதிகளுடன் சேர்வதற்கு
ஆதரவைக் கொடுக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தன்னுடைய சக ஊழியரும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின்
பிரதம மந்திரியுமான யூர்கன் ருட்கர்ஸ் உடன் எசன் நகரத்தில் இரகசிய இடம் ஒன்றில் பேச்சுக்களை நடத்தினார்.
திட்டம் B
என்பது பற்றி அவர்கள் விவாதித்தனர். அடிப்படையில் இது பசுமைவாதிகளுடன் கூட்டணி ஏற்படுத்துவது பற்றி ஆகும்.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய சுற்றுச்சூழல் மந்திரி நோர்பேர்ட் ரொட்கன் திடீரென பெப்ருவரித் தொடக்கத்தில்
அணுசக்திதிட்டங்கள் விரைவில் மூடப்பட வேண்டும் என்று கொடுத்த அழைப்பு வேண்டுமென்றே பசுமைவாதிகளுடன்
சேருவதற்கு ஒரு வாய்ப்பு என்ற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது ஆகும்.
அதன் பின் ஐயத்திற்கு இடமின்றி தங்கள் ஆர்வத்தை பசுமைவாதிகள் அடையாளம்
காட்டியுள்ளனர். "அடிப்படைவாதிகளுடன்" கடுமையாகப் போரிடும் அவர்களுடைய முக்கிய வேட்பாளர் சில்வியா
லோஹர்மன் வலதுசாரி பழைமைவாத கட்சிகளுடன் ''இடது அரசாங்க'' என்ற கூட்டணி வேண்டும் என்று
முயல்கிறார். ஆனால் தன்மை "இடது பசுமைவாதி" என்று கூறிக்கொள்ளும் பேர்பல் ஹோர்ன் ஏற்கனவே கிறிஸ்துவ
ஜனநாயக ஒன்றிய மாநிலத் தலைவர் ருட்கர்ஸை 2004ல் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அவர் வடக்கு ரைன்
வெஸ்ட்பாலியா மாநில சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் கூட்டணியில் விவசாய மந்திரியாக இருந்துள்ளார்.
ருட்கர்ஸ் ஓராண்டிற்கு பின் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், பசுமைவாதிகள் அவர் தயவை நாடி தாராளவாத
ஜனநாயகக் கட்சியை அகற்ற விரும்பினர்.
கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்-பசுமைவாதிகள்
கூட்டணி இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹாம்பர்க் நகர-அரசாங்கத்தில் முடிவடைவதற்கு முன்பே, பசுமைவாதிகள்
அதிகாரத்திற்காக தங்கள் தேர்தலுக்கு முந்தை உறுதிமொழிகள் அனைத்தையும் தூக்கியெறிய தயார் என்று
நிரூபித்தனர். ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கத்தின் (1998-2005) கூட்டணி பங்காளி என்ற முறையில் முன்னாள்
அமைதிவாதிகள் ஜேர்மனிய இராணுவம் சேர்பியாவிற்கு எதிரான நேட்டோப் போரில் குறுக்கிடவும் மற்ற சர்வதேச
பணிகளில் ஈடுபடவும் அனுமதிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஷ்ரோடரின் சமூகல விரோத செயற்பட்டியல்
2010க்கு வலுவான ஆதரவை அவர்கள் கொடுத்தனர், கொடுக்கின்றனர். சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை
வாதக் கூட்டணியில் தங்கள் முக்கிய பங்கு பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சியின்
கரங்களை வலுப்படுத்துவது என்று கருதினர்.
ஆனால் ஒரு பழைமைவாத-பசுமைவாதக் கூட்டணியும் விவாதத்திற்கு உரிய
பொருள்தான். இதன் கட்சித் தலைமையில் வரம்பற்ற அரசியல் சந்தர்ப்பவாதம் பற்றி எந்தவித சந்தேகங்களும்
இல்லை என்றாலும், சமூக, ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படும் திட்டம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும்
வாக்காளர்களிடையே ஏற்கப்படுமா என்பது பற்றி கவலைகள் உள்ளன.
சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கை புதிப்பிப்பதற்கான முயற்சிகளை இது
விளக்குகிறது. செய்தி ஊடக வர்ணனையாளர்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் சமூக நல நாட்டின்மீது மிக அதிக
விளைவு கொடுக்கும் தாக்குதல்கள் (ஹார்ட்ஸ் விதிகள் இழைத்தவை) ஒரு சமூக ஜனநாயகக் கூட்டாட்சி
அரசாங்கத்தால்தான் நடத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் செய்தி ஊடகத்தில் அதாவது
NRW
வின் பிரதம மந்திரி ருட்கர்ஸ் பயன்படுத்தும் சில ஆதரவுப் போக்குகள் மற்றும் சமூக ஜனநாயககட்சிக்கான
பாராட்டுக்கள் இணைந்த விதத்தில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் நிதியசெயல்கள் பற்றி அதிகக் குறைகூறல்கள்
உள்ளன. சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்பிரியேல் சமீபத்தில் தாராளவாத ஜனநாயக கட்சியின்
வெஸ்டர்வெல்லவை ஜேர்மனிய அரசாங்கம் மாநகரங்கள் ஆகியவற்றில் "பேரரசர் நீரோ போல்" தூண்டிவிடும்
தன்மையைக்காக குற்றம் சாட்டினார்; அந்தப் பேச்சு ஒரு சிறப்பான வனப்புரை என்று பாராட்டப்பட்டது.
தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சியை புதுப்பிக்கும் இத்தகைய முயற்சிகள் செய்தி
ஊடகத்தின் சில பிரிவுகளால் வழிநடத்தப்படுகின்றன. வாக்காளர்களின் உண்மை உணர்வில் இவற்றைப் பற்றி அதிகம்
இல்லை. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா உள்ளூர் தேர்தல் ஆறு மாதங்கள் முன்ப நடந்தபோது சமூக ஜனநாயகக்
கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் இழப்பில் இருந்து சிறிதும் ஆதாயம் காணமுடியவில்லை, கிட்டத்தட்ட 5
சதவிகித புள்ளிகளை இழந்தது. தன்னுடைய பங்கிற்கு சமூக ஜனநாயகக் கட்சி வாக்காளர் ஆதரவில் 2.3 சதவிகிதம்
இழந்தது.
இந்தப் பின்னணியில்தான் இடதுகட்சி சமூக ஜனநாயகக் கட்சிக்கு முட்டுக் கொடுத்து
நிறுத்த தலையிடுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்களின்படி இடதுகட்சி
NRW ல் குறைந்த
பட்ச 5 சதவிகித வரம்பைக் கடந்துவிடுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் உண்டு என்று காட்டுகின்றன
Duisburg நகரத்தில்
சமீபத்தில் கூடிய மாநில பிரதிநிதிகள் மாநாட்டில், இடது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில்
பயன்படுத்தும் நன்கறிந்த சொற்றொடர்களான குறைந்தபட்ச ஊதியம், செல்வத்தின்மீது வரி, பெரும் விசை
நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பவற்றை பயன்படுத்தினர். ஆனால் மாநாட்டின் உண்மை விவாதப்
பொருளுரை இடது கட்சியின் பிராந்தியத் தலைவர் கத்தரினை ஸ்வாபடிஸ்ஸன் சமூக ஜனநாயகக் கட்சி மாநில
தலைவர் ஜோகன் ஒட் இனை பிரதிநிதிகள் மாநாட்டிற்கு முன்பு சந்தித்து இரகசிய விவாதம் நடத்தியதில் சுருக்கமாக
காணப்படுகிறது.
தன்னுடைய பங்கிற்கு ஸ்வாபடிஸ்ஸன்
இருவரும் "முறைசாரா பேச்சிற்குத்தான்" சந்தித்தாக அறிவித்தார்.
அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மாநில நிர்வாகக் குழு ஜோகன் ஒட் இற்கு அத்தகைய ஒரு கலந்துரையாடலுக்கு
அனுமதி கொடுக்கப்படவில்லை என்று அறிவித்தது. அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி அனைத்து அரசியல்
வாய்ப்புக்களையும் பரிசீலிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தல்களுக்கு இரு மாதங்களுக்கு முன்பு இரண்டு
பொருள்கள் தெளிவாகியுள்ளன. முதலில் மே 9 தேர்தல் தேசிய அரசியலில் கணிசமான முக்கியத்துவத்தைக்
கொண்டுள்ளது. இரண்டாவதாக, அடிப்படை பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பரந்த ஒருமித்த
உணர்வு உள்ளது. முக்கிய பிரச்சினை எந்தவித அமைப்பு இருந்தால் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும்
மக்கள் தலையில் சுமத்த சிறந்ததாக இருக்கும் என்பதுதான். |