World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No letup in attack on jobs

வேலைகள் மீதான தாக்குதல் கைவிடப்படாது

11 March 2010
Barry Grey

Use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகம் மற்றும் செய்தி ஊடகத்தின் கூற்றுக்களான வேலை நிலைமை "உறுதியாகிறது" என்பவை ஏராளமான புதிய பணிநீக்க அறிவிப்புக்கள் மற்றும் வேலை இழப்பு பற்றிய அரசாங்க அறிவிப்புக்களால் பொய் ஆகின்றன. கடந்த வெள்ளியன்று நிர்வாகமானது தொழிலாளர் துறையின் அறிக்கையான அமெரிக்க ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை பெப்ருவரியில் 36,000 "மட்டுமே" குறைந்தது, உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதத்தில் இருந்தது என்பதை அதன் கொள்கைகள் செயல்படுகின்றன அத்தோடு பொருளாதாரம் மீளத் தொடங்கவிட்டது என்று பாராட்டியது.

உண்மையில் "மீட்பு" என்று கூறப்படுவது பெரு வங்கிகள், பெரு நிறுவனங்களோடு நின்றுவிடுகிறது. இவைதான் வரி செலுத்துவோரால் நிதியத்தில் இருந்து பிணை எடுப்பிற்கு டிரில்லின்களையும் குறைந்த வட்டிக் கடன்களையும் பெற்றன. வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அதிகரித்துள்ளன. அமெரிக்க மக்கள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கைத் தரங்கள்மீது ஒபாமா நிர்வாகத்தின் இயக்கத்தில் முன்னோடியில்லாத வகையில் தாக்குதல் நடத்துவது, பெரு மந்த நிலைக்கு பின்னர் இணையற்ற ஒரு சமூக நெருக்கடியை தோற்றுவித்து வருகிறது.

செவ்வாயன்று, தொழிலாளர் துறை உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஜனவரி மாதம் 30 மாநிலங்களில் அதிகரித்தது என்று கூறியுள்ளது. 16 மாநிலங்கள் தேசிய சராசரியான 9.7 சதவிகிதத்தைவிட அதிகமான வேலையின்மை விகிதத்தில் சேர்ந்தன. இவற்றில் மிச்சிகன் (14.3 சதவிகிதம்), நெவடா (13 சதவிகிதம்), ரோட் தீவுகள் (12.7 சதவிகிதம்), தெற்கு கரோலினா (12.6 சதவிகிதம்), கரோலினா (12.5 சதவிகிதம்) ஆகியவை அடங்கும்.

கலிபோர்னியா, பிளோரிடா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகியவை 1976 இந்த சான்றுகள் தொடங்கியதில் இருந்து மிக அதிக அளவை அடைந்தன.

வேறு ஒரு தனியான தொழிலாளர் துறை அறிக்கையானது அதிக பணிநீக்கங்கள் (50 அல்லது அதற்கும் மேலான வேலைகள்) தேசிய அளவில் ஜனவரியில் 1,761 ஐ எட்டி குறைந்தது 182,261 தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கு வகை செய்துள்ளது என்று தெரிவிக்கிறது.

செவ்வாயன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான Chevron 2,000 வேலைகள் அல்லது அதன் தொழிலாளர் தொகுப்பில் 3 சதவிகிதத்தைக் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 2009ல் நீக்கப்பட்ட 2,000 வேலைகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தெற்கு சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள Exelixix நிறுவனம் 270 தொழிலாளர்களை--அதன் தொகுப்பில் 40 சதவிகிதத்தை--பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

மின்னிசோட்டாவில் மனிதப் பணிகள்துறையானது 200 முழுநேர உளநல சுகாதார வேலைகளை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவையும் அலையெனத் தாக்கிக் கொண்டிருக்கும் பணிநீக்கங்களில் இவை சமீபத்தியவைதான். தனியார் நிறுவனங்களை தவிர மருத்துவமனைகள், மாநில, உள்ளூர் அரசுத் துறைகளும் பெரும் வரவு-செலவுப் பற்றாக்குறையை சமாளிக்க துரிதமாக வேலைக் குறைப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

The American Medican News வலைத் தளம் ஜனவரி மாதம் 13 பெரும் பணிநீக்கங்கள், 995 தொழிலாளர்களை பாதிப்பதை அறிவித்தது. மருத்துவமனைகளில் ஏராளமான பணிநீக்கங்கள் பெப்ருவரியில் அறிவிக்கப்பட்டதில், மான்ஹட்டனில் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் 300 தொழிலாளர்கள், செயின்ட் லூயியியில் பாரஸ்ட் பார்க் மருத்துவமனையில் 300 முழு நேரத் தொழிலாளர்கள் மற்றும் மியாமியில் ஜாக்சன் மெடிக்கல் சிஸ்டத்தில் கிட்டத்தட்ட 900 வேலைகள் ஆகியவை அடங்கும்.

இந்த வாரம் மியாமியில் ஜாக்சன் சிஸ்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இரண்டு மருத்துவ மனைகள் மூடப்படும், மற்றும் 4,5000 பணிகள்--மொத்த தொகுப்பில் 37 சதவிகிதம்--அகற்றப்படும் என்று அறிவித்தார்.

அமெரிக்க ஏயர்லைன்ஸில் மொத்த தொழிலாளர் தொகுப்பு ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட ஜனவரி மாதம் 3.2 சதவிகிதம் குறைந்தது என்று புதனன்று அமெரிக்க போக்குவரத்துத்துறை அறிவித்தது.

அமெரிக்கா முழுவதும் பெரிய நகரங்கள், சிறு நகர்கள், கிராமப்புற பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆசிரியர்கள் பணிநீக்கம் பெற்றுள்ளனர். கல்லூரிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன, பாடத்திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, பள்ளி பஸ்கள் உட்பட பஸ் பாதைகள் அகற்றப்படுகின்றன, நூலகங்கள் மூடப்படுகின்றன, பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுது போக்கு வசதிகளும் மூடப்படுகின்றன.

பொதுப்பயன்பாட்டு சேவை நிறுவனங்கள் மூடல்கள், அவற்றையொட்டி தவிர்க்க முடியாமல் ஆபத்தான வீடுகளில் தீ, முன்கூட்டி வீடுகள் ஏலத்திற்காக மூடப்படல், பட்டினியான வறுமை ஆகியவை அதிகரித்துள்ளன.

ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காங்கிரஸும் வேலை இல்லாதவர்களுக்கு தீவிர உதவி அளிக்கவோ, வேலையற்றவர்களுக்கு புதிய வேலைகளை தோற்றுவிக்கவோ எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவை டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளை பிணை எடுக்க செலவழித்துவிட்டன. மாறாக உள்ளூர் அரசாங்கங்கள் முன்னோடியில்லாத வகைத் தாக்குதல்களை அடிப்படை சமூகநல சேவைகளில் செய்ய வேண்டும் என்று கோரப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்திடம் ஒபாமாவின் உண்மையான அணுகுமுறை ரோட் தீவில் ஏராளமான ஆசிரியர்கள் ஊதியம் அதிகமின்றி கூடுதல் மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதை எதிர்த்தபோது அவர்களை நீக்கியதற்கு பகிரங்க ஆதரவு கொடுத்ததில் நன்கு நிரூபணம் ஆகியுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு முறையில் முழு மாற்றம் கொண்டுவந்து இருகட்சி ஆதரவு ஆணைக்குழு ஒன்று பல மில்லியன் தொழிலாளர்கள் நம்பியிருக்கும் உரிமைகள் திட்டத்தில் நிரந்தர வெட்டுக்களை தயாரிக்க அமைத்துள்ளதுடன்--மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில்--இதுவும் இணைந்து வந்துள்ளது.

நிர்வாகமும் இரு கட்சிகளும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் எதிர்க்கும் எந்த நடவடிக்கைகளையும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுக்க ஒரு பொதுநலத் திட்டம் போன்றவற்றை உடனடியாக நிராகரிக்கின்றன. காங்கிரசில் வரவிருக்கும் "வேலைகள்" பற்றிய சட்டம் பெருவணிகத்திற்கு வரிச் சலுகைகள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்வில் ஒவ்வொரு கூறுபாட்டின்மீதும் முதலாளித்துவம் என்னும் திவால் முறையின் நலன்களுக்காக செயல்படுத்தப்படுகிறது--இந்த முறையோ செல்வ உயரடுக்கின் தனிப்பட்ட செல்வக் கொழிப்பிற்காக சமூகத் தேவைகளை தாழ்த்துகிறது. அமெரிக்காவிலும், உலகெங்கிலும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கு இலாப முறையின் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுப்பதற்கு காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளைச் சுமத்துகிறது.

தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்தின் துணைக் கருவிகளாக செயல்பட்டு, தங்கள் முயற்சிகளை அனைத்தையும் மக்களை அடக்க ஈடுபடுத்துகின்றன. இதற்கு ஈடாக அவற்றிற்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதில் கிடைக்கும் ஆதாயங்களில் ஒரு பங்கு கிடைக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் கோபமும் எதிர்ப்பும் பெருகுகின்றன. கடந்த சில வாரங்களில் ஐரோப்பா முழுவதும் வங்கிகளின் ஆணைக்கேற்ப அரசாங்கங்கள் கொண்டுவந்துள்ள சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தங்களும் வெகுஜன எதிர்ப்புக்களும் தோன்றியுள்ளன.

மார்ச் 4ம் தேதி அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும் கல்வித்துறை வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். வரவிருக்கும் மாதங்களில் பெருகக்கூடி மக்கள் எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடுதான் இது. இந்த எதிர்ப்பு திசைதிருப்பப்பட்டு மேலே வழியில்லாத சந்தையில் திருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு புதிய முன்னோக்கும் திட்டமும் தேவையாகும்.

தொழிலாளர்கள், இளைஞர்களின் அடிப்படைத் தேவைகள் ஒபாமா நிர்வாகம் மற்றும் இரு அரசியல் கட்சிகள், அவை பாதுகாக்கும் முதலாளித்துவமுறை ஆகியவற்றுடன் பொருந்தி இருக்க முடியாதவை. ஒபாமா மற்றும் இரு கட்சி முறைக்கு எதிராக முழுத் தொழிலாள வர்க்கமும் தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சமூகத்தை மறுசீரமைக்க சுயாதீன அரசியல் சக்தியாக அணிதிரட்டப்பட வேண்டும்.

ஏப்ரல் 17, 18 திகதிகளில் சோசலிச சமத்துவக் கட்சி, அதன் இளைஞர் இயக்கம் ISSE, உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை ஒரு அவசரக்கால மாநாட்டை போர், சமூக நெருக்கடி பற்றி கூட்டுகின்றன. இம்மாநாடு போர் மற்றும் வேலைகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்த ஒரு புதிய சோசலிச மூலோபாயம் பற்றி விவாதிக்கும்.

எதிர்த்துப் போராட வழி தேடும் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்களையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்னும் கூடுதலான தகவலுக்கு இங்கு கிளிக் செய்யவும்.