WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
Russian President Medvedev signs strategic, business
deals in France
ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் பிரான்சில் மூலோபாய, வணிக உடன்பாடுகளில்
கையெழுத்திடுகிறார்
By Kumaran Ira
10 March 2010
Use this
version to print | Send
feedback
மார்ச் 1-3 திகதிகளில் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், வணிகத் தலைவர்கள்
புடைசூழ, வணிக, இராஐதந்திர பயணமாக பிரான்சிற்கு சென்றிருந்தார். அவருடைய வருகையின்போது பிரான்ஸும்
ரஷ்யாவும் எரிசக்தி, உற்பத்தித்துறைகளில் வணிக உடன்பாடுகளை செய்ததுடன், ரஷ்யாவிற்கு பிரெஞ்சு போர்க்கப்பல்களை
விற்பது பற்றிய பேச்சுக்களையும் நடத்தின. ஈரானுக்கு எதிராக அதன் அணுத் திட்டத்தை எதிர்த்து கடுமையான
பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதற்கு ரஷ்யாவின் ஆதரவையும் பிரான்ஸ் கோரியது.
மார்ச் 1ம் தேதி பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி எலிசே அரண்மனையில் மெட்வெடேவிற்கு
விருந்தளித்தார். மெட்வெடேவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் சார்க்கோசி கூறினார்: "நாம்
ஒன்றும் பனிப்போர்க் காலத்தில் இல்லை. ரஷ்யா ஒரு விரோதி நாடு அல்ல, ஒரு பங்காளி என்ற எனது நம்பிக்கையைத்
தெரிவிக்க விரும்புகிறேன்."
தன்னுடைய பங்கிற்கு மெட்வெடேவ் கூறினார்: "உண்மையில் நம்மிடையே மூலோபாய
உறவுகள் உள்ளன. நீண்ட காலமாக எங்கள் பங்காளியாக பிரான்ஸ் உள்ளது." ரஷ்யாவில் பிரெஞ்சு முதலீட்டைப்
பற்றிக் குறிப்பிட்டு, "அமெரிக்காவை விட பிரான்ஸ் இப்பொழுது முன்னணியில் உள்ளது. இதன் பொருள் நாம் சரியான
பாதையில் செல்லுகிறோம் என்பதுதான்."
ரஷ்ய செய்தி அமைப்புக்களின் கருத்துப்படி ரஷ்யாவில் பிரெஞ்சு முதலீடு கடந்த ஆண்டு
முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாக மொத்தம் 10.4 பில்லியன் டாலர் என்று இருந்தது. பிரெஞ்சு
முதலீடுகள் எரிசக்தி, சில்லறை விற்பனை, கார்த்தொழில், போக்குவரத்து, கட்டமைப்பு, காப்பீடு மற்றும்
வங்கித்துறைகளில் இருந்தன.
ஈரானுக்கு எதிராக ஒரு முரட்டுத்தன நிலைப்பாட்டை கொண்டுள்ள சார்க்கோசி
ஐ.நா.பாதுகாப்பு குழுவில் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளைக் கொண்டுவர ரஷ்யாவின்
ஆதரவைக் கோரினார். ரஷ்யாவும் சீனாவும் இதுவரை ஈரானுக்கு எதிரான ஐ.நா. தண்டனை நடவடிக்கைகள்
பற்றித் தயக்கம் காட்டியுள்ளன.
ஈரானைப் பற்றி மெட்வெடேவ் கூறினார்: "நன்கு ஏற்கப்படக்கூடிய பொருளாதாரத்
தடைகளுக்கான தயாரிப்புக்களை பங்காளிகளுடன் செய்ய ரஷ்யா தயார். தடைகள் நன்கு பரிசீலிக்கப்பட்டு, அறிவார்ந்தும்
இருக்க வேண்டும். சாதாரண மக்களை எதிர்த்து அவை இயக்கப்படக்கூடாது. இத்தடைகளும் பேச்சுவார்த்தை இனிப்
பயன் இல்லை என்றால் கடைசி பட்சமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும்."
நான்கு Mistral
தர தரை-கடல்வழித் தாக்குதல் கப்பல்கள் பற்றிய சிறப்புப் பேச்சுவார்த்தைகளை பிரான்ஸ் தொடக்கியுள்ளது
என்று சார்க்கோசி அறிவித்தார். இவை 16 ஹெலிகாப்டர்கள், டஜன்கணக்கான டாங்குகள் மற்றும் 450
சிப்பாய்களை ஏற்றிச் செல்லக்கூடியவை. இதற்கு ஜோர்ஜியா மற்றும் நேட்டோவில் உள்ள மூன்று பால்டிக் நாடுகள்
லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றில் இருந்து எதிர்ப்புக்கள் வந்துள்ளன. "இந்த விற்பனை
மொஸ்கோவை எந்த முன்னாள் சோவியத் குடியரசின் மீதும் அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீதும் சில மணி
நேரத்திற்குள் தாக்குதல் நடத்த அனுமதித்துவிடும்" என்று பிரான்சை ஜோர்ஜியா குறைகூறியுள்ளது.
2008 தெற்கு ஒசேஷியா பற்றி ரஷ்ய-ஜோர்ஜிய போரை குறிப்பிட்ட ரஷ்ய
கடற்படை அட்மிரல் Vladimir Vyssotsky,
Nezavissimaia Gazeta
இடம் கூறியது: "தெற்கு ஒசேஷியாப் போரில் மிஸ்ட்ரல் வகைக் கப்பல் இருந்திருந்தால் ரஷ்ய இராணுவம் 26 மணி
நேரம் என்பதற்கு பதிலாக தன் பணி அனைத்தையும் 40 நிமிஷங்களில் முடித்திருக்கும்."
மார்ச் 1ம் திகதியே பிரெஞ்சு எரிசக்தி நிறுவனம்
GDF-Suez,
உலகின் மிகப் பெரிய எரிவாயு ஏற்றுமதி அமைப்பான ரஷ்யாவின் எரிசக்திப் பெருநிறுவனம்
Gazprom உடன்
Nord Stream
குழாய்த்திட்டம் பற்றி ஒரு வணிக உடன்பாட்டை செய்தது. இந்த உடன்பாடு
GDF Suez-க்கு
Nord Stream
எரிவாயுக் குழாய்த்திட்டத்தில் 9 சதவிகித உரிமை கொடுக்கிறது. அது ரஷ்யாவையும் ஜேர்மனியையும் பால்டிக்
கடல் மூலம் இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது. நிறுவனங்களின் இந்த உடன்பாட்டின்படி
Gazprom
பிரான்சிற்கு இன்னும் கூடுதலாக 1.5 பில்லியன் கியூபிக் எரிவாயுவை ஒவ்வொரு ஆண்டும் 2015 தொடங்கி
கொடுக்கும்.
பிரான்சின் போக்குவரத்து மற்றும் கார் நிறுவனங்களும் உடன்பாடுகளில்
கையெழுத்துக்களிட்டன. பிரெஞ்சு பொறியியல் நிறுவனம்
Alstom ரஷ்ய இரயில் பகுதிகள் தயாரிப்பு நிறுவனம்
Transmashholding
ல் 25 சதவிகித பங்கை எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்ச் 1ம் தேதி பிரெஞ்சு கார்த்
தயாரிப்பாளர் Renault
அதன் உயர்த்தப்பட்ட தரமுடைய Avtoframos
ஆலையை மொஸ்கோவில் 150 மில்லியன் யூரோ முதலீட்டுடன் ஆரம்பித்தது. உற்பத்தித் திறன் 2011க்குள் ஆண்டு
ஒன்றிற்கு 160,000 வண்டிகள் என்று இருக்கும்.
பல பிரெஞ்சு செய்தி ஊடகத் தகவல்கள் மெட்வெடேவின் பயணம் பிரெஞ்சு
வெளியுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை குறிக்கிறது என்று சுட்டிக் காட்டியுள்ளனர். ரஷ்யாவின் மனித உரிமைச்
சான்றுகள் மற்றும் 2007ல் அவர் தேர்தல் காலத்தில்
Chehnya வில் அது கொண்டிருந்த பங்கு பற்றிக் குறைகூறியிருந்த
சார்க்கோசி இன்னும் மரபார்ந்த வகை சார்பை ரஷ்யாவுடன் மீண்டும் கொண்டுள்ளார் என்று அவை
கூறிப்பிட்டுள்ளன.
ஈரான் பற்றிய பிரான்ஸ்-ரஷ்ய பேச்சுவார்த்தைகள் தெளிவாக்குவது போல், இந்த
மாற்றம் சார்க்கோசியின் பரந்த அமெரிக்க சார்புடைய வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில் நடைபெறுகிறது.
Le Monde
நாளேடு பிரான்ஸ் ரஷ்யாவுடன் கொண்டுள்ள நட்பு ஈரானுக்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளுக்கு
ஆதரவைத் தேடும் நோக்கத்தை கொண்டுள்ளது என்றும், இது சீனாவை ஈரானுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை
தடுக்கக் கூடாது என்று நம்பவைக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2ல் Le
Monde எழுதியது:"2010 பாரிஸ்-மொஸ்கோ அச்சு
2003 ஐப் போன்றது அல்ல. அது அமெரிக்காவை தடுக்க முயன்றது. பிரெஞ்சு கண்ணோட்டத்தின்படி இது ஈரான்
பற்றி ஒபாமா நிர்வாகம் சமீபத்தில் கொண்டுள்ள நிலைப்பாட்டில் பங்கு பெறுதல், அதிகப்படுத்துதல் என்ற வினாவைக்கூட
கொண்டுள்ளது. அணுவாயுதப் பரவாமையில் தன்னுடைய பங்கு மேற்கிற்கு ஒரு "வழிகாட்டி" என்று பாரிஸ் காண்கிறது.
அதையொட்டி ரஷ்ய உடன்பாடு ஐ.நா.வில் எதையும் தடுக்க வேண்டாம் என்று சீனாவை நம்ப வைக்க முடியும்
என்றும் கருதுகிறது.
ஆனால் மிஸ்ட்ரல் பற்றிய பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கை
என்ற தன்மையைக் கொண்டிருக்கவில்லை. 2008 ரஷ்ய ஜோர்ஜிய போரை முடிக்கும் உடன்பாட்டிற்கு
பேச்சுவார்த்தைகள் நடத்திய பிரெஞ்சு அரசாங்கம் ரஷ்யாவில் இராணுவ மோதல்ளை எதிர்க்கிறது. இது
வாஷிங்டனுக்கு ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க ஏவுகணை தளங்கள்
மீண்டும் நிறுவும் திறனைப் பற்றி வாஷிங்டன் விவாதிக்கையில் வந்துள்ளது.
மெட்வெடேவின் பயணத்திற்கு முன்பு அமெரிக்க செய்தி ஊடகம் ரஷ்யாவிற்கு மிஸ்ட்ரல்
தர கப்பல்களை விற்கும் பிரெஞ்சு திட்டங்களைக் குறைகூறியது. பெப்ருவரி 3ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்
எழுதியது: "ஜோன் மக்கைன் (அரிசோனா) உட்பட ஆறு குடியரசுக்கட்சி செனட்டர்கள் டிசம்பர் மாதம்
வாஷிங்டனில் இருந்த பிரெஞ்சு தூதர் Pierre Vimont
க்கு இந்த விற்பனை உகந்ததாக இருக்காது என்று புகார் கூறி கடிதம் எழுதினார்கள். அதில், ஏனெனில் இது
ரஷ்யாவின் நடத்தைக்கு பிரான்ஸ் ஒப்புதல் கொடுக்கிறது என்ற கருத்தை அது கொடுக்கும். ஆனால் அது பெருகிய
முறையில் ஆக்கிரோஷத்தனமானது, சட்டவிரோதமானது."
பெப்ருவரி 15ம் திகதியில் வெளியிடப்பட்ட தலையங்கம் ஒன்றில் போஸ்ட்,
ரஷ்யா "விரைவில் உறுதிமொழிகளை முறித்தது, இன்றளவும் போர்நிறுத்த உடன்பாட்டை முற்றிலும் மீறிய வகையில்
ஜோர்ஜிய நிலப்பகுதியில் பலவற்றை ஆக்கிரமித்துள்ளது. இத்தகைய ரஷ்ய மீறலுக்கு திரு சார்க்கோசியின்
விடையிறுப்பு ரஷ்ய கடற்படைக்கு ஒரு கப்பல் கொடுத்துள்ளது என்பது பற்றி வியப்பு அடைகிறோம்."
மெட்வெடேவின் வருகையின்போது, சார்க்கோசி மிஸ்ட்ரால் விற்பனையைக் காக்கும்
விதத்தில் பேசினார். அவர் கூறியது: "காலையில் நாம் ரஷ்ய தலைமையிடம், உலகில் சில நெருக்கடிகளை தீர்க்க
உங்கள் உதவி தேவை, குறிப்பாக ஈரானிய நெருக்கடி பற்றி, அது முக்கியம், பாதுகாப்புச் சபையில் எங்களுடன்
வாக்களியுங்கள், நாம் ஒரு பொதுத் தீர்மானத்திற்காக விரிவாக பேசுவோம்," பின்னர் பிற்பகல் நாம்
சொல்லுகிறோம், "இல்லை, இல்லை, மன்னிக்கவும், நாங்கள் உங்களை நம்பவில்லை ஆதலால் உங்களுக்கு மிஸ்ட்ரல்
கொடுக்க முடியாது." இத்தகைய நிலைப்பாட்டில் ஒழுங்கு எங்கே உள்ளது?'
பிரெஞ்சுக் கொள்கையில் மாற்றம் என்பது தெற்கு ஐரோப்பிய கடன் நெருக்கடியின்
வெடிப்பையும் பிரதிபலிக்கிறது. கிரேக்க அரசாங்கத்திற்கு கடன் கொடுக்க நிதிய சந்தைகள் மறுப்பதில் அது
மையம் கொண்டுள்ளது. ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலி கூட சந்தைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவையும் கடுமையான சமூக சிக்கன நடவடிக்கைகளைத் தயாரிக்கின்றன. இந்த நிகழ்வுகள் சார்க்கோசியின்
வெளியுறவுக் கொள்கைக்கு ஐரோப்பாவில் தீவிர அடி என்று ஆகும். அவர் கொள்கையோ ஒரு மத்தியதரைக்கடல்
ஒன்றியம் வருவதற்கான திறன் பற்றிய விவாதங்களில் குவிப்பைக் காட்டியிருந்தன.
செய்தி ஊடக கருத்துக்களில் பலவும் ஜேர்மனியுடன் அழுத்தங்கள் அதிகரித்தது பற்றி மையம்
கொண்டிருந்தன. பெப்ருவரி 15 அன்று நியூயோர்க் டைம்ஸ், "பிரெஞ்சு உயரடுக்கில் தீவிர உணர்வு அதன்
மரபார்ந்த குவிப்பு மத்தியதரைக்கடல் மீது என்பதாகும். அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பா மீது ஜேர்மனி
குவிப்புக் காட்டலாம். இதையொட்டி ஆபத்துக்கள் தீவிர அரசியல், பொருளாதாரச் சுமைகளாக ஆகாது."
பிரான்சின் வலதுசாரி நாளேடு
Le Figaro
கூறியது: "பிரான்ஸும் ரஷ்யாவும் நிதிய நெருக்கடியால் மாற்றப்பட்டு விட்ட உலகில் இரண்டின் உதவியும்
ஒன்றுக்கொன்று தேவை என நம்புவதற்கு காரணங்கள் உண்டு. "எமது நாடு ரஷ்யச் சந்தை அளிக்கும்
வாய்ப்புக்களில் இருந்து ஆதாயம் அடையும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, அனைத்தையும் ஜேர்மனிக்கு விடமுடியாது.
இன்று நாம் எடுக்கும் முடிவைத்தான் அது பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தது."
அது மேலும் கூறியது: "ஏழாவது மிகப் பெரிய முதலீட்டாளர் என்னும் முறையிலும்,
ரஷ்யாவிற்கு ஒன்பதாவது மிகப் பெரிய ஏற்றுமதி நாடு என்றும் முறையிலும், பிரான்ஸ் முற்றிலும் இன்னும் சிறப்பாக
ஈடுபட வேண்டும்."
இறுதி உட்குறிப்புக்கள் எப்படி வந்தாலும், பிரான்ஸ்-ரஷ்ய உடன்பாடு உலக அரசியலில்
ஏற்பட்டுள்ள உயர் அழுத்தங்கள், உறுதியற்ற தன்மைகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன--இதுதான்
பிரெஞ்சு அதிகாரிகள் பிரான்ஸ்-ரஷ்ய நட்பு வரலாற்றை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் வெளிப்பட்டுள்ளது.
பாரிசில் இறங்கியபின், மெட்வெடேவ் மூன்றாம் அலெக்சாந்தர் பாலத்தின் வழியே
ஓட்டிச் செல்லப்பட்டார். அப்பாலம் 1892ல் பிரான்ஸ்-ரஷ்ய உடன்பாட்டில் கையெழுத்திட்ட சார் மன்னர் பெயரை
கொண்டுள்ளது. ஜேர்மனிக்கு எதிராகப் பெரிதும் இயக்கப்பட்ட அந்த உடன்பாடு பிரான்ஸை ரஷ்யாவில் அதன் முதலீடுகளை
அதிகரிக்கச் செய்து, முதல் உலகப்போர் வெடிப்பில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் அக்டோபர்
புரட்சிக்கு பின்னர் போல்ஷிவிக்குகள் பிரான்சிற்கு கொடுக்க வேண்டிய கடனை நிராகரித்தனர். ஏனெனில் பிரான்ஸ்
இளம் சோவியத் ஆட்சிக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ நடவடிக்கைகள் அமைக்கப்பட உதவியது.
1927ல் ரேய்மொண்ட் புவான்கரேயின் பிரெஞ்சு அரசாங்கம் கடன் பற்றிய பேச்சுவார்த்தைகளை முறித்தமை
இன்றும் பிரான்சில் அது ஒரு அரசியல் பிரச்சினையாக உள்ளது.
மெட்வெடேவின் பயணத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில்
La Croix
பிரான்சின் கடன் கொடுத்தவர்களின் அமைப்பு ஒன்று, "போல்ஷிவிக் புரட்சிக்கு முன் வாங்கிய கடன்களை ரஷ்யா
திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோரவேண்டும்" என்று கூறிப்பிட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் "மொத்தக்
கடன் தொகை இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 75 பில்லியன் யூரோக்கள் இருக்கும். இது 1996ல் நாடுகளுக்கு
இடையே ஏற்பட்ட உடன்பாட்டில் பிரான்ஸ் பெற்ற 300 மில்லியன் யூரோக்களைவிட மிக அதிகமாகும்."
பிரெஞ்சு அரசாங்க ஆதாரங்கள் இப்பிரச்சினை மெட்வெடேவுடன் நடத்தும்
பேச்சுக்களில் வராது என்ற குறிப்பைக் காட்டின. ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் தனிப்பட்ட கடன் கொடுத்தவர்கள்
ரஷ்யாவிற்கு திரும்பக் கொடுக்க அழுத்தத்தை இன்னும் கொடுக்கலாம் என்று கூறியுள்ளது. |