World Socialist Web Site www.wsws.org |
|
Emergency Conference on the Social Crisis & War The Fight for a Socialist Alternative சமூக நெருக்கடி, யுத்தம் பற்றிய அவசர மாநாடு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டம் 23 February 2010 உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பும் சமூக நெருக்கடி மற்றும் போர் பற்றி ஒரு அவசர தேசிய மாநாட்டை ஏப்ரல்17-18ல் மிச்சிகன் ஆன் ஆர்பரில் கூட்டுகின்றன. நம் வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் பதிவு செய்து கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு இன்றே திட்டமிடுமாறு கேட்டுக் கோள்ளுகிறோம். உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், அமைதிமான முறையில் முதலாளித்துவ சமசீர்நிலையை மீட்பதற்கான வாய்ப்பு சிதைந்துவிட்டது. உலகப் பொருளாதாரம் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ அமைப்புக்களும் மக்களின் ஒரு மிகச் சிறிய அடுக்கின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன. அதுவோ தன்னுடைய நலன்களை உறுதியாக்கிக் கொள்ளும் விதத்தில் நெருக்கடிக்கு தீர்வு காண முற்படுகிறது. ஆனால் முதலாளித்துவ வர்க்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நெருக்கடிக்கு புதிய மூலங்களை தோற்றுவித்துள்ளதுடன், ஒவ்வொரு நாட்டிலும் வர்க்க முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கங்கள் நிதிய அமைப்பு முறைகளை பிணை எடுத்ததை ஒட்டி குவிந்த மகத்தான கடன்களால் உலகச் சந்தைகள் கொந்தளிப்பில் உள்ளன. கிரேக்கம், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகியவை நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் நோக்கத்துடன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திட்டமிடுகின்றன. அந்நாடுகளுக்கு பின் கடன் நெருக்கடியை எதிர்நோக்கிய விதத்தில் இத்தாலி, பிரான்ஸ், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா ஆகியவை உள்ளன. அமெரிக்காவின் நீண்டகால பொருளாதாரச் சரிவை ஒட்டி, அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு, அதன் நிலைமையை தக்க வைத்துக் கொள்ளவதற்கு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் குறைக்கவும், அத்துடன் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் காணப்படாத அளவிற்கு இராணுவ வன்முறையை கட்டவிழ்த்தல், உள்நாட்டில் அடக்குமுறை ஆகியவற்றின் மூலம் முயல்கிறது. அமெரிக்காவிலும் சர்வேதேச அளவிலும் பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்ப்பட்டது வெறுக்கப்பட்ட புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த ஆண்டில் அதிர்ச்சியைத்தான் கொடுத்துள்ளது. தடையற்ற இழிந்த முறையில் ஒபாமா மிகுந்த வங்கிகள் பிணை எடுப்புக்களில் இருந்து, போர், கல்வி, சுகாதாரக் காப்புறுதி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் என்ற விதத்தில் வலதுசாரி கொள்கைகளைத்தான் தொடர்ந்துள்ளார். தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் தாங்கள் எதிர்நோக்கியுள்ளது ஒரு தற்காலிக சரிவு அல்லது ஒரு தனிநபர் அல்லது கட்சியின் கொள்கைகள் சரிவு என்று இல்லாமல் முதலாளித்துவம் என்னும் ஒரு முழு அமைப்பு முறையின் வீழ்ச்சி என்பதை உணர்ந்து வருகின்றன. தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடிக்கு அதன் சொந்ததீர்வை முன்வைக்கவேண்டும். ஆனால் அது இலாப உந்துதலுக்கு என்று இல்லாமல் உலகப் பொருளாதாரத்தை சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்திற்கு புத்துயிர்ப்பு கொடுப்பதன் மூலம்தான் முடியும். அமெரிக்காவின் சமூக நெருக்கடி அமெரிக்காவில் பெரும்பாலான மக்களுடைய நிலைமை கடுமையாக, மோசமாக உள்ளது. உழைக்கும் தொகுப்பில் கிட்டத்தட்ட 10 சதவிகிதமான கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக வேலையின்மையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 4.2 மில்லியன் வேலைகளுக்கும் மேலாக கடந்த ஆண்டு மட்டும் அழிக்கப்பட்டுவிட்டன. உண்மையான வேலையின்மை விகிதம், வேலை தேடலை நிறுத்திவிட்டவர்கள், வழியின்றி பகுதி நேர வேலையில் இருப்பவர்களை சேர்த்தால், உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கக்கூடும். சில பகுதிகளில் வேலையின்மை மந்த நிலைமைக் கால தரங்களில் உள்ளது. ஒருகாலத்தில் நாட்டிலேயே சராசரி வருமானம் மிக உயர்ந்திருந்த இடமான மிச்சிகனின் டெட்ரோயிட்டில் பாதிக்கும் மேலான மக்கள் வேலையில் இல்லை. நாட்டில் 6 மில்லியன் மக்களுக்கு வருமானம் ஏதும் இல்லை, உணவு உதவியை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். நாடு முழுவதும் மாநிலங்களும் நகரங்களும் திவாலாகின்றன, பள்ளிகள் மூடப்படுகின்றன, ஆலைகள் மூடப்படுகின்றன, கல்லூரிக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஊதியங்களும் சமூகப் பணிகளும் முன்னோடியில்லாத அளவிற்கு குறைக்கப்படுகின்றன நிதிய உயரடுக்கை காப்பாற்ற பல டிரில்லியன் டாலர்கள் பிணையெடுப்பு நடந்தும் வங்கிகள் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு கொடுக்கும் கடன்களை நெரிக்கின்றன. ஒரு அமெரிக்க இல்லத்தின் நிகர மதிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான தசாப்த சரிவு என்று கூறும் விதத்தில் கடந்த தசாப்தத்தில் 13 சதவிகிதம் சரிவுற்றது. வீடுகள் சொந்தம் என்னும் "அமெரிக்கக் கனவு" ஒரு தீய கனவாக மாறி வருகிறது. கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடுகள் 2009ல் ஏலத்தில் விற்கப்பட்டதுடன், இன்னமும் பல மில்லியன் குடும்பங்கள் 2010ல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவர். மக்களின் மிகச்செல்வம் வாய்ந்த பகுதியினர் இன்னும் செல்வக் குவிப்பை அடைவதற்கும் சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கவும் பொருளாதார நெருக்கடி பயன்படுத்தப்படுகிறது. புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கொள்கையினால், உயர்மட்ட வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் 2009ம் ஆண்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 145 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளன. போர் பொருளாதார நெருக்கடி தேசிய அரசமைப்பு முறையின் முறிவை விரைவுபடுத்தியுள்ளது. ஏனெனில் போட்டி முதலாளித்துவ நாடுகள் சுமையை தங்கள் போட்டியாளர்கள் மீது சுமத்த விரும்புகின்றன. கடந்த தசாப்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வன்முறையில் வெடித்து எழுந்துள்ளது. ஒருதலைப்பட்சமான போர் என்ற கோட்பாடு பிரகடனம் செய்யப்பட்டது உட்பட, இது தொடர்கிறது. இது உலக அரசியலில் மிக உறுதிகுலைக்கும் காரணியாக உள்ளது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அழைக்கப்படும் நிகழ்வின் பத்தாண்டு நிறைவை அமெரிக்கா அணுகிக் கொண்டிருக்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க கட்டுப்பாட்டை நிறுவும் நோக்கத்தில் தொடக்கப்பட்ட முடிவிலா போர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க குண்டுகளால் இலக்கு வைக்கப்படும் மக்களுக்கு போர்கள் பேரழிவுகளை தருகின்றன. ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்களும், ஆப்கானிஸ்தானியர்களும், ஆயிரக்கணக்கான அமெரிக்க, கூட்டணி படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் ஆக்கிரமிப்பு ஒபாமாவின் கீழும் தொடர்கிறது. ஆப்கானிய போர், இன்னும் கூடுதலான பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் அனுப்பப்பட்டதால் எரியூட்டப்பெற்று இன்னும் குருதி கொட்டும் கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஆளற்ற விமான, ஏவுகணைத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு பாக்கிஸ்தானில் தீவிரமாக அதிகரித்துள்ளன. குண்டுவீச்சு அல்லது படையெடுப்பு நடத்தப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில் யேமன் சேர்க்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அச்சுறுத்துகிறது. இது ஈரானுக்கு எதிரான போருக்கு முன்பு கூறப்பட்ட கருத்துக்களை மறைமுகமான முறையில் நினைவிற்கு கொண்டு வருகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் அதிகரிப்பு என்ற நிலையில் புதிய ஆண்டு தொடங்கியுள்ளது. இதில் நாணய மதிப்பீடுகள் பற்றிய அச்சுறுத்தல், வணிகத் தடைகள், தைவானுக்கு கூடுதலான அமெரிக்க இராணுவ ஆதரவு ஆகியவை அடங்கியுள்ளன. முதலாளித்துவ தேசிய அரசமைப்பு முறையின் வடிவமைப்பிற்குள் உலகப் பொருளாதாரத்தின் ஒரு சமாதான "மறுசமசீர்நிலை" வராது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் இல்லாததால் உலகம் தவிர்க்க முடியாமல், மனித குலம் முழுவதற்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கக்கூடிய புதிய உலகப் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகம் ஒபாமா நிர்வாகத்தினால் மக்கள் கசப்பான அனுபவத்தைத்தான் பெற்றுள்ளனர். "நம்பிக்கை", "மாற்றம்" ஆகியவற்றை கொண்டுவரக்கூடிய வேட்பாளர் என்று காட்டிக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஒபாமா நிதிய உயரடுக்கின் நலன்களுக்கு உறுதியான பாதுகாப்பு கொடுப்பவராகத்தான் நிரூபணம் ஆகியுள்ளார். வங்கிகள் மகத்தான முறையில் பிணையெடுப்பு செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்க பற்றாக்குறை மும்மடங்கு ஆனதால், அச்செலவுகள் நிதிய சிக்கனம், சமூகநலச் செலவுகள் குறைக்கப்பட்டது ஆகியவற்றின்மூலம் ஈடு செய்யப்படும். ஒரு பற்றாக்குறைக் குழுவை (deficit panel) ஒபாமா நிறுவியுள்ளார். அதன் பணி மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்று சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை தாக்குவதாகும். ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு "சீர்திருத்தம்" அரசாங்க நலத்திட்டங்கள், மற்றும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுடைய சமூகநல திட்டங்களை குறைக்கும் இழிந்த திட்டம் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமந்த நிலைக்குப் பின் மோசமான சமூக நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ஒபாமா தொழிலாளர்களுடைய அவநம்பிக்கை நிலையைக் குறைக்க ஏதும் செய்யவில்லை. நிர்வாகத்தின் அநேகமாக வணிகங்களுக்கு வரிக்குறைப்புக்கள் என்று இருப்பவை "ஊக்க" நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியை தீர்க்க முக்கிய நடவடிக்கையை நிராகரிப்பதை தளமாக கொண்டுள்ளது. அதாவது கூட்டாட்சி ஒரு வேலைகள் திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை. மாநிலங்களுக்கு பிணை எடுக்க ஒபாமா மறுத்துவிட்டார், இதையொட்டி அங்கு கல்வி இன்னும் பல சமூக பணிகளுக்கான செலவுகள் முடக்கும் வகையில் குறைந்துவிட்டன. போருக்கான பரந்த எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டின் ஆதரவினால் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒபாமா இராணுவச் செலவினங்களை அதிகரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். புஷ்ஷின் போர்களை வழிநடத்திய அதே உயர்மட்ட தளபதிகளும் உயர்மட்ட அதிகாரிகளும்தான் இப்பொழுதும் உள்ளனர். ஒபாமாவிற்கு மக்கள் ஆதரவுத் தளம் வியத்தகு விரைவில் சரிந்துவிட்டது. ஒபாமா பதவி ஏற்ற ஓராண்டிற்குள் ஜனநாயகக் கட்சியினர் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்பான தொகுதி என்று கருதப்பட்ட மாசாச்சுசட்ஸில் ஒரு செனட் இடத்தை இழந்துவிட்டனர். ஜனநாயகக் கட்சியினர் வாக்குகள் சரிந்தததால்தான் இந்தத் தோல்வி முக்கியமாக வந்தது. ஜனாதிபதியின் நேரடி அழைப்புகளும் இருந்தும் இந்த நிலை ஏற்பட்டது. மக்கள் ஆதரவு சரிந்ததற்கு நிர்வாகத்தின் விடையிறுப்பு இன்னும் தீவிரமாக வலதிற்கு செல்லுதல், குடியரசுக் கட்சியையும் ஒபாமாவுடன் சேர்ந்து மக்களின் பெரும்பான்மையினரின் நலன்களை இருகட்சி ஆதரவில் தாக்குவது என்று உள்ளது. ஓராண்டிற்கு முன் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியை மறுகட்டமைக்க ஒபாமா அயராமல் உழைக்கிறார். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் மில்லியன் கணக்கான மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள நிலைக்கு எதிர்ப்பு தவிர்க்க முடியாதது ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கும் அனைத்து அமைப்புகளுக்கும் இடையே மகத்தான, பெருகிய இடைவெளி உள்ளது. அதில் தொழிற்சங்கங்களும் அடங்கியுள்ளன. இவை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் துணைக் கருவிகளாக மாறி, தொழிலாளர்கள் மீது வறிய நிலையைச் சுமத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி புதிய, சுயாதீன வெகுஜனப் போராட்டத்தின் இயக்கத்திற்கான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுக்கிறது. ஆனால் முக்கியமான பிரச்சினை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைப்பது ஆகும். ஒரு சோசலிச ேைலைத்திட்டத்தின் அடிப்படையில்தான் தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலாளித்துவ முறை என்னும் நெருக்கடியின் அடித்தளத்தில் இருக்கும் காரணத்திற்கு எதிராக இயக்கப்பட முடியும். அத்தகைய திட்டத்தில் கீழ்க்கண்ட அடிப்படைக்கூறுபாடுகள் அடங்கியுள்ளன: 1. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம். நெருக்கடியின் சர்வதேச தன்மை உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்கான புறநிலை ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரம் பூகோளரீதியாக ஒன்றுபட்டிருப்பது மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரங்களில் பரந்த வளர்ச்சிக்கு தளத்தை கொடுக்கிறது. ஆனால் முதலாளித்துவத்தின் வடிவமைப்பிற்குள் இது தொழிலாளர்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலைத்தான் எல்லா இடங்களிலும் தோற்றுவித்துள்ளதுடன் தேசிய அரசுகளுக்கு இடையே போட்டியையும் அதிகரித்துள்ளது. இத்தாக்குதலக்கு எதிராக போரிட, தொழிலாளர்கள் அனைத்துவித தேசிய, நாட்டு வெறி ஆகியவற்றை நிராகரித்து உலக முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப் போராட்டம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். 2. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம். பெரு வணிகத்தின் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் ஒரு அரசியல் முறையின் வடிவமைப்பிற்குள் தொழிலாளர்கள் தங்கள் நலன்களைக் காத்தல் இயலாது என்பதை ஒபாமா நிர்வாகம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி, இரு கட்சி முறை ஆகியவற்றில் இருந்து முறித்துக் கொண்டு தொழிலாளர் அரசாங்கத்திற்கு போராட தங்கள் வெகுஜனக்கட்சியை கட்டமைக்க வேண்டும்.3. ஒரு அவசரக்கால பொதுப்பணித் திட்டம். வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு இன்னும் பிற சமூகப் பணிகளுக்கு பணம் இல்லை என்று கூறுவது, அதே நேரத்தில் டிரில்லியன்கள் வங்கிகளுக்கு பிணை எடுக்கவும், பெரும் இராணுவச் செலவிற்கு ஒதுக்குதல் என்பவை இழிவுடன் ஒதுக்கப்பட வேண்டும். அவசரக்கால பொதுப் பணித் திட்டங்கள் உழைக்கக் கூடிய அனைவருக்கும் நல்ல ஊதியத்துடன் கொடுக்கக்கூடிய வகையில் வகுக்கப்பட வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் பள்ளிகள் கட்ட, வசதியான வீடுகளைப் பெற, அடிப்படை சமூக கட்டமானத்தைப் புதுப்பிக்க ஈடுபடுத்தப்பட வேண்டும். இலவச, உயர்ந்த தரமுடைய கல்வி மழலையர் தரத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை கொடுப்பதற்கும், சுகாதாரப் பாதுகாப்பு, கெளரவமான ஓய்வு காலம் ஆகியவை அனைவருக்கும் அளிப்பதற்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும். 4. வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படல். அரசியல், பொருளாதார வாழ்வின்மீது நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கு செலுத்தும் இடுக்கிப்படிதான் நெருக்கடிக்கு பகுத்தறிவார்ந்த, சமத்துவ முறையில் தீர்வு காண்பதற்கு முக்கிய தடையாகும். அனைத்து வங்கிகளும், முக்கிய பெருநிறுவனங்களும் பொது உடைமையாக்கப்பட்டு ஜனநாயகமுறையில் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாக்க வேண்டும். 5. செல்வம் மறுபங்கீடு அளிக்கப்படுதல்: செல்வந்தர்களின் பணப்பையை எப்படிப் பாதிக்கும்? என்ற ஒரு வினாவில் ஒவ்வொரு அடிப்படை முடிவுகளும் வந்து நிற்கையில் வெகுஜன சமூகத்தின் தேவைகள் இந்த பொருளாதார கட்டமைப்பினுள் தீர்க்கப்பட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் பற்றிய நெருக்கடிக்கு தீர்வு பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு அந்த இருப்புக்களை அமெரிக்க, சர்வதேச அவசரத்தேவைகளுக்கு பயன்படுத்துவதுதான்.6. இராணுவவாதத்திற்கும் போருக்கும் முற்றுப்புள்ளி: பெருநிறுவன, நிதிய உயரடுக்கு நலன்களின் வெளிப்பாட்டுதான் ஏகாதிபத்திய போர் ஆகும். அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் நலன்களை பாதுகாப்பது என்பது அமெரிக்க இராணுவம் இலக்கு வைத்துள்ள தொழிலாளர்கள் நலன்களைக் பாதுகாக்காமல் முடியாது. அனைத்து அமெரிக்க துருப்புக்களும் ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து திரும்பப் பெற வேண்டும். அமெரிக்க போர் இயந்திரம் களையப்பட வேண்டும். அமெரிக்க குண்டுகளால் அழிவிற்கு உட்பட்ட சமூகங்களுக்கு இழப்புத் தொகை கொடுக்கப்பட வேண்டும்.7. ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்: உள்நாட்டில் மகத்தான சமூகச் சமத்துவமின்மை மற்றும் வெளியே ஏகாதிபத்தியப் போர் என்பவற்றுடன் ஜனநாயகம் பொருத்தமற்றது. தன்னுடைய செல்வாக்கற்ற கொள்கைகளை செயல்படுத்துவதற்கு அமெரிக்க ஆளும்வர்க்கம் இன்னும் வெளிப்படையாக அடக்குமுறையைக் கையாளும். சித்திரவதை, கடத்தல்கள், படுகொலைகள், காலவரையற்ற காவல், போலீஸ் அரசாங்க அமைப்புக்களை நிறுவதல், உள்நாட்டு ஒற்றுவேலை அதிகரித்தல் ஆகியவை பயன்படுத்தப்படுதல் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கை மூலம்தான் நிறுத்தப்பட முடியும். ஜனநாயக உரிமைகளைக்காத்தல் என்பதற்கு ஜனநாயகம் விரிவாக்கப்பட வேண்டும்; அதில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை நிர்ணயிக்கும் பெரும் பொருளாதார சக்திகள் மீது மக்கள் கட்டுப்பாடு இருத்தலும் அடங்கும்.சர்வதேச அளவில் தொழிலாளர் எதிர்கொள்ளும் நெருக்கடி உலக சமூகத்தை தொலைநோக்குடன் மாற்றுதல், ஜனநாயக முறைப்படி, அறிவார்ந்த வகையில் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது, நிறுவப்படுவதின்மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும். சோசலிம் ஒரு புறநிலை தேவையாக எழுகிறது. இது தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுடன் தொடர்புபட்டுள்ளது. ஆனால் சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு அரசியல் தலைமையின் கட்டமைப்பு தேவையாகும். சர்வதே தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட அரசியல் இயக்கம் இல்லாவிடின், தனித்தனி போராட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டுவிடும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை மறுகட்டமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்னணியில் நிற்கிறது. போராடுவதற்கு ஒரு வழியைக் காண விரும்பும் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு, ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் படிப்பினைகளை உணர்ந்தவர்களுக்கும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுத்தப்பட வேண்டிய தேவையை அறிந்துள்ளவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம்: ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் அவசர மாநாட்டில் பங்கு பெறுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டமையுங்கள், சோசலிசத்திற்கான போராட்டத்தை ஆரம்பியுங்கள்! |
|