World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

In praise of George Eliot's Adam Bede on its 150th anniversary

ஜோர்ஜ் ஏலியட்ஸின் ஆதாம் பீட் புத்தகத்தின் 150-வது ஆண்டில் அதற்கான புகழாரம்

By David Walsh
4 January 2010

Use this version to print | Send feedback

சார்ல்ஸ் டார்வினின் மிக முக்கிய முன்னோடிமிக்க உயிரினங்களின் தோற்றம் பற்றிய வெளியீட்டின் 150-வது நினைவாண்டாக, பரந்தளவில் கொண்டாடப்பட்டதும் மற்றும் அதற்கு முழுத் தகுதியுடையதுமான ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

Eliot
ஜோர்ஜ் ஏலியட்

டார்வினின் பணியை உடனடியாக மிக முக்கிய படைப்புகளில் ஒன்றாக அங்கீகரித்த மார்க்ஸ், அதே ஆண்டில் அவரின் சொந்த படைப்பான அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான ஒரு கருத்துரை (A Contribution to the Critique of Political Economy) என்பதை பிரசுரித்தார். அதன் முன்னுரை வரலாற்றின் சடவாத கருத்துக்களின் முக்கிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது (பல தசாப்தங்களுக்கு பின்னர், சோவியத் கவிஞர் விளாதிமீர் மயாகெளஸ்கி இதை படித்து மனப்பாடம் செய்தார்), அது பின்வருமாறு தொடங்குகிறது: "அவர்களின் இருப்பிற்கான சமூக உற்பத்தியில் தமது விருப்புகளுக்கு அப்பாற்பட்டு, மனிதர்கள் தவிர்க்கமுடியாதபடி ஒரு திட்டவட்டமான உறவுகளுக்குள் நுழைகின்றனர். அதாவது அவர்களின் உற்பத்தி சக்திகளின் பொருளாயத (சடத்துவ) அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பொருத்தமான உற்பத்தி உறவுகளுக்குள் நுழைகின்றனர். (1)

1859ல், இவான் கொன்ஸாரோவ் ஒப்லோமோவ் இனை (Ivan Goncharov's Oblomov-ஐ) போலவே, சார்ல்ஸ் டிக்கன்ஸினால் இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities) எழுதப்பட்டது. விமர்சிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஓவியத்தில் அப்போதைய நிஜமான தலைவராக குஸ்ராவ் கோர்பேர்ட் (Gustave Courbet) அங்கீகரிக்கப்பட்டிருந்தார். அக்டோபரில் பாரீஸில் அவரது ஸ்டூடியோவில் ஒரு யதார்த்தவாதத்தின் மாபெரும் ஓவிய கண்காட்சி ஒன்றினை நடத்தி இருந்தார், அதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவர் தம்முடைய ஒரு நண்பருக்கு பின்வருமாறு எழுதினார்: "இப்போதைய நிலைமையில் யதார்த்தவாதம் மிகவும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது... நாம் புதிய சக்திகளை அணிவகுத்து, நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்."

2009 ஆண்டு முடிவுக்கு வருவதற்கு முன்னால், 1859ன் தொடக்கத்தில் வெளியான ஜோர்ஜ் ஏலியாட்ஸின் நாவல் வெளியீடான ஆதாம் பீட் பற்றி குறிப்பிடுவது மிக பொருத்தமாக இருக்கும்.

ஏலியாட் பற்றிய எத்தனையோ வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன, ஆதாம் பீட் படைப்பையும் மிகவும் எளிதாக பெற முடியும், ஆனால் இந்த எழுத்தாளரைப் பற்றியும், அவருடை முதல் நாவலைப் பற்றியும் சில முக்கிய விபரங்களைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும்.

ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து கல்வி மந்திரியாக இருந்த அனரோலி லுனாஸார்ஸ்கி (Anatoly Lunacharsky), இவர் ஓர் இலக்கிய விமர்சகராகவும் இருந்தார், ஒருமுறை பரிந்துரைக்கையில்: "எல்லா வகையிலும் மேதையாக இருந்தாலும் கூட---முக்கியமான விஷயம் என்னவென்றால் சரியான காலத்தில் பிறந்திருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு கோத்தவின் (Goethe) சிந்தனையையும் சேர்க்கிறார், அதாவது, "20 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ நான் பிறந்திருந்தால், முற்றிலும் நான் வேறொரு மனிதனாக இருந்திருப்பேன்."

Marx
கார்ல் மார்க்ஸ்

ஏலியாட்ஸின் வாழ்நாள், 1819-1880, ஏறத்தாழ துல்லியமாக மார்க்ஸின் வாழ்க்கை காலத்தோடு (1818-1883) பொருந்தி வருகிறது. சமூகத்தின் உற்பத்தி கருவிகளின்முக்கிய அபிவிருத்திகள், தொழில்துறையிலும், தொழில்நுட்பத்திலும், இயற்கை விஞ்ஞானத்திலும், அத்துடன் கலையிலும், கலாச்சாரத்திலும் ஏற்பட்ட முக்கியமான அபிவிருத்திகள் அவர்களின் வாழ்க்கையைப் பாதித்தது---பல்வேறு வழிகளிலும், பல்வேறு நிலைமைகளிலும் அவர்களுடைய வாழ்க்கையைப் பாதித்திருந்தது.

ஏலியாட் (இவருடைய நிஜப்பெயர் மேரி அன் அல்லது மேரியன் ஏவன்ஸ்) இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பிராந்தியத்தின் வோர்விக்ஷேரில் ஓர் எஸ்டேட் மேலாளரின் மகளாக பிறந்தார், இவர் தந்தை மனசாட்சிக்கு கட்டுப்பட்ட வேலை பழக்கங்களுக்கும், பழமைவாத அரசியல் கண்ணோட்டத்தில் நம்பிக்கை உடையவராக இருந்தார். தம்முடைய இளம் பிராயத்திலேயே புத்திசாலித்தனத்தோடு விளங்கிய ஏவன்ஸூக்கு, எஸ்டேட்டின் நூலகத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இளம்பருவத்தில் பள்ளியிலும் விரும்பிய நூல்களைப் படிப்பதற்கு போதிய சுதந்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது: இவர் சேர் வால்டர் ஸ்காட்சின் நாவல்கள் உட்பட புத்தகங்களிலேயே மூழ்கி போனார்.

இளம் பிராயத்தின் பிற்காலங்களில் ஏவன்ஜெலிக்கலிசம் (Evangelicalism) ஏவன்ஸை வலுவாக தொட்டிருந்தன, பல ஆண்டுகள் மதம் மற்றும் மத ஆய்வுகளைத் தீவிரமாக கைக்கொள்வதில் தன்னை அர்பணித்தார். அந்த காலத்தின் போது, நாடகங்கள் மற்றும் நாவல்கள் போன்றவை அற்பமானவை என நிராகரித்தார். எவ்வாறிருப்பினும், அவரின் மதம் பற்றிய தத்துவார்த்த பேரார்வம் தவிர்க்கமுடியாமல் தணிந்தது, அவர் பைரோன், ஷெல்லி, கொல்ரிட்ஜ், செளதே மற்றும் குறிப்பாக மற்றவர்களை விட வோர்ட்ஸ்வொர்த்தைப் படிப்பதில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டார்.

1841ல், அவரும் அவரது தந்தையும் கோவென்ட்ரிக்கு அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள், அங்கு மேரி அன்னுக்கு பல்வேறு அறிவிஜீவிகளின் பழக்கம் கிடைத்தது. மேலும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சார்டிஸ்ட் (Chartist) இயக்கம் மற்றும் 1841-1842 மந்தநிலையின் தாக்கம் உட்பட அங்கிருந்த சமூகத்திடமும் ஏதோவொன்று தெளிவாக இருந்தது, அது அவரை புதிய சிந்தனைகளுக்குள் கூர்ந்துணர செய்தது, அவர்களில் சார்லஸ் மற்றும் கரோலின் பிரே போன்றோர் முன்னணியில் இருந்தார்கள், அவர்களும் மேரி அன்னிற்கு நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். ரிப்பன் உற்பத்தியாளரான சார்லஸ் பிரே சுதந்திர சிந்தனையாளராக இருந்தார். கற்பனைவாத சோசலிவாதியான ரோபர்ட் ஓவன் மற்றும் அமெரிக்க தத்துவவாதியான ரால்ப் வால்டோ எமர்சன் போன்ற பிற பிரபலங்கள் மத்தியில் சார்லஸ் பிரே இவருக்கு அறிமுகமாகி இருந்தார், சார்லஸ் அவர்கள் இருவரையும் மேரி அன்னுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், அப்போது அன் தேவாலயத்திற்கு போவதை நிறுத்தி விட்டிருந்தார். வாழ்க்கை வரலாற்று எழுத்தாளரான ஜோர்டன் எஸ். ஹேயட், "குக்கிராம தனிமையிலிந்து சிந்தனைகளின் உலகத்துடன் இணைதல்'' என்று எழுதுவதைப் போல, அன் "மிக வேகமாக வளர்த்தெடுக்கப்பட்டார்".

Strauss
David Friedrich Strauss

அவருடைய புத்திஜீவித வளர்ச்சி அபரிமிதமாகவும், அசாதாரணமாகவும் இருந்தது. வேற்று மொழிகள் படிப்பதில் சுறுசுறுப்பான ஒரு மாணவியாக விளங்கிய ஏவன்ஸ், 1835ல் பிரசுரமான டேவிட் பெடரிக் ஸ்ரெளவ்ஸின் இயேசுவின் வாழ்க்கை (Das Leben Jesu) என்ற புத்தகத்தை 1843ல் ஜேர்மனில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். "இடது ஹெகலிய" முன்னோடிப் பணியான இது, கிறிஸ்துவ போதனைகளில் இருந்த தெய்வீகம் மற்றும் அற்புத விஷயங்களை மறுத்ததுடன், அவைகளைக் கற்பனை புராணங்களாக எடுத்து காட்டியது. இந்த படைப்பானது பெரடரிக் ஏங்கல்ஸுக்கு (எலியோட்ஸின் இன்னொரு சமகாலத்தவர், 1820-1895) அவரது கிறிஸ்துவ நம்பிக்கைகளை முற்றாக கைவிட உதவியதுடன், மேலும் மதத்திற்கு எதிரான நவீன தத்துவார்த்த போராட்டங்களுக்கான அவரின் உணர்வுகளில், "முதல் தூண்டுதலையும்" இது ஏற்படுத்தியது.

ஹேயிட் (Haight) பின்வருமாறு எழுதுகிறார்: "ஜேர்மனில் இருந்த ஆயிரத்து ஐநூறு பக்கங்களையும், இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரூ மொழி மேற்கோள்களையும் கொண்ட இந்த புத்தகத்தை மேரி அன் இரண்டு ஆண்டுகளில் மொழிபெயர்த்தார்... அவருடைய இந்த பணிக்காக அவருக்கு 20 (இருபது பவுண்ட்) வழங்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த வெகுசில புத்தகங்கள், இங்கிலாந்தின் மத சிந்தனைகளின் மீது ஆழ்ந்த தாக்கத்தைக் கொண்டிருந்தன."

அதன் பின்னர் அவர் ரூஸ்சோ, கற்பனைவாத சோசலிஸ்ட் செயின்ட்-சிமோன், மற்றும் 'அவதூற்றுக்குரிய' நாவலாசிரியர் ஜோர்ஜ் சாண்ட் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்கள் உட்பட எல்லாவற்றையும் படித்தார்---இது அவருடைய புதிய முற்போக்கு நண்பர்களுக்கே கூட அதிர்ச்சியாக இருந்தது. 1848 மார்ச்சில், பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பை வரவேற்ற அவர், தூக்கி எறியப்பட்ட ஆட்சியாளரான லூயிஸ்-பிலிப் மீதான தம்முடைய வெறுப்பை வெளியிட்டார். "உலகம் மில்லியன் கணக்கான ஆதரவற்ற ஆன்மாக்களையும், உடல்களையும் அதனுள் கொண்டிருக்கையில், ஒரு சலுகைபெற்ற வயதான மனிதர்" மீதான உணர்ச்சிவயப்படலை தவிர்த்தார்.

எவ்வாறிருப்பினும், எந்தவித ஆங்கில புரட்சியைப் பற்றியும் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அப்போது ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு எழுதுகிறார், "புரட்சிகர இயக்கம் அழிவுக்கு தான் கொண்டு செல்லும்---ஆக்கப்பூர்வமாக இருக்காது. அதிகப்படியாக, அது கைவிடப்பட வேண்டும்... அ(இ)ங்கே நம்முடைய அரசியல் அமைப்பில் அரசியல் சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்றத்தைத் தடுக்க எதுவுமே இல்லை... ஆங்கிலேயர்களாகிய நாம் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கிறோம்."

1851ன் தொடக்கத்தில், மரியன் ஏவன்ஸ் போல ஓர் உத்தியோகப்பூர்வ எழுத்தாளராக உருவாக அவர் இலண்டனுக்கு இடம் பெயர்ந்தார். தனிப்பட்ட வகையிலும், உத்தியோகப்பூர்வமாகவும் விரைவிலேயே Westminster Review-ன் உரிமையாளராக ஆக இருந்த ஜோன் சேப்மேனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார், அப்போது இதுவொரு முன்னணி கலாச்சார மற்றும் அரசியல் பத்திரிக்கையாக இருந்தது. இந்த பத்திரிக்கை சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தம், உலக மற்றும் பிரிட்டிஷ் அரசியல், வரலாறு, மெய்யியல், விஞ்ஞானம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடத்தக்க எழுத்துக்களைப் பிரசுரித்தது. Westminster Review-ன் 10 எண்ணிக்கைகளில் ஒவ்வொன்றும் ஏவன்ஸினால் திருத்தப்பட்டு, அண்ணளவாக 100 புத்தகங்கள் மீள்பார்வை செய்யப்பட்டது.

Westminster-ன் இலண்டன் அலுவலகத்திற்கு உயிரியில் ஆராய்ச்சியாளராக இருந்து பின்னர் டார்வினின் தீவிர ஆதரவாளரான தாமஸ் ஹக்ஸ்லி, உயிரியியல் ஆராய்ச்சியாளரும், உயிரின பரிணாம ஆராய்ச்சியாளருமான ரிச்சர்டு ஓவன் மற்றும் இயற்கை விஞ்ஞானியான எட்வர்டு போர்ப்ஸ் போன்ற விஞ்ஞானிகள் உட்பட எல்லாவிதமான புத்திஜீவிகளும், கலாச்சார பிரபலங்களும் வந்தார்கள். அமெரிக்க பார்வையாளர்களாக வந்தவர்களில் பத்திரிக்கையாளரான ஹோரேஸ் க்ரீலே மற்றும் கவிஞர் வில்லியம் கலன் பிரியண்ட் ஆகியோர் உள்ளடங்குவர்.

இதற்கப்பால், ஹேயட் எழுதுகிறார், "அந்த கண்டத்தில் ஏற்பட்ட 1848 புரட்சிகளில் இருந்து வந்த அகதிகள் இலண்டனை மொய்த்துக் கொண்டிருந்தார்கள், அதில் பெரும்பாலானவர்கள் இந்த தீவிரமயப்பட்ட அறிவொளியின் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டிருந்தார்கள். சேப்மேனின் நண்பரான ஆண்ட்ரூ ஜோன்சனால் கார்ல் மார்க்ஸ் அழைத்து வரப்பட்டிருந்தார்... மரியனுடன் மார்க்ஸ் சந்திப்பு பற்றி நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஜோன்சனின் மற்றொரு நண்பரும், இலண்டனில் மார்க்ஸுடன் சேர்ந்து கொள்ள வந்த புரட்சிகர கவிஞர் பேர்டினான்ட் பிறைலிகிராத் இனை அவர் சந்தித்தார்." மேலும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரெஞ்ச் மறுமலர்ச்சி சோசலிசவாதியான லூயி பிளோகுடனும், இத்தாலிய தேசியவாத தலைவர் கிஸுப்ப மார்ஸனி உடனும் ஏவன்ஸ் தோழமை கொண்டார். அதுமட்டுமல்லாமல், ஏனைய மற்றவர்களில் சார்லஸ் டிக்கன்ஸ், ஹெர்பர்ட் ஸ்பென்சர் மற்றும் வில்கி கொல்லன்ஸ் ஆகியோரின் தொடர்பும் அவருக்கு கிடைத்தது.

Lewes
ஜோர்ஜ் ஹென்ரி லிவெஸ்

"ஜோர்ஜ் ஏலியட்டாக" உருவான பின்னர், 1850-களின் தொடக்கத்தில் அவருக்கு ஜோர்ஜ் ஹென்றி லிவெஸைச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. ஓர் இலக்கிய விமர்சகரும், ஒரு காலத்தில் மருத்துவத்துறை மாணவராக இருந்தவரும், எப்போதாவது நடிக்கும் நடிகராகவும், ஓர் ஆரம்பநிலை இயற்கை விஞ்ஞானியும், ஒரு கொம்ந்தேவாதியான (August Comte இன் கோட்பாடின் சாராம்சம், அதாவது அறிவினை ஆராய்ந்து பார்க்கவும் உண்மையினை உறுதிப்படுத்தவும், அனுபவமே ஒரேயொரு வழிமுறையாகும்.) இவரை பற்றி ஹேயட் எழுதுகிறார், "அவரது சமகாலத்தவர்களில் எவருமே இந்தளவிற்கு பல்துறை திறமை பெற்றிருக்கவில்லை. 1850 வாக்கில் இவர், தம்முடைய பதினேழாவது வயதில் இருந்து பல்வேறு விஷயங்களைப் பற்றி எழுதி வந்த வெற்றிகரமான கட்டுரைகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு புகழ்பெற்ற மெய்யியலின் வரலாறு, இரண்டு நாவல்களான, a life of Robespierre [பிரெஞ்ச் புரட்சிகர தலைவரை மறுஆக்கம் செய்யும் நோக்கத்தில் இருந்தது] மற்றும் a tragedy in blank verse…ஆகியவற்றை பிரசுரித்தார்." 1855-ல், லிவெஸ் எழுதிய கோத்தேவின் வாழ்க்கை வரலாறு வெளியானது, இது ஜேர்மனியில் பரந்தளவிலான வாசகர்களைப் பெற்று, தொடர்ந்து அச்சில் இருக்கிறது. விஞ்ஞானத்தைப் பற்றி அவர் எழுதிய எழுத்துக்களும் மிகவும் மதிப்புடையவை; அவருடைய ஆலோசனைகளில் சில பின்னர் உடற்கூறு ஆராய்ச்சியாளர்களால் ஏற்று கொள்ளப்பட்டன.

திருமணம் செய்து கொண்ட லிவெஸ், பின்னர், ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. அவரும் மரியனும் 24 ஆண்டுகள் (1878-ல் அவர் மரணமடையும் வரையில்) திருமணம் செய்து கொள்ளாதவர்கள் போலவே, ஆனால் தங்களைத் தாங்களே கணவன்-மனைவியாக பாவித்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். மதிப்புமிக்க சமுதாயம் அவர்களை ஒதுக்கி வைக்கும் என்ற நிலைமைக்கு இடையிலும், எந்தவகையில் பார்த்தாலும் அது ஓர் அசாதாரண கூட்டு வாழ்க்கை தான்.

1854-ல், அவர்கள் தேனிலவு வகையிலான ஒரு பயணத்தில் ஜேர்மனிக்கு சென்றார்கள் (அங்கு அவர்கள் பல்வேறு துறைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து பிரன்ஸ் லிஸ்ட்ஸ் இற்கு சென்று வந்தார்கள்). உண்மையில், அவர்கள் அடிக்கடி ஜேர்மனுக்கு பயணித்தார்கள், அந்நாட்டினது புத்திஜீவிதத்தின் செல்வாக்கு ஜோர்ஜ் ஏலியட்ஸை ஒரு முக்கிய நாவலாசிரியராக தவிர்க்கமுடியாமல் முன்னேற்றியதில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது.

Feuerbach
லூத்விக் ஃபயர்பாக்

இந்த காலகட்டத்தில், மற்றொரு மைல்கல்லாக 1841-ல் வெளியான லூத்விக் ஃபயர்பாக்கின் Das Wesen des Christentums (கிறிஸ்துவத்தின் சாரம்) என்ற ஜேர்மன் படைப்பின் மொழிபெயர்ப்பை ஏவன்ஸ் தொடங்கினார். (அவருடைய மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தின் தரமுடைய ஒரு மொழிபெயர்ப்பாக நிலைத்திருக்கிறது.) பல தசாப்தங்களுக்குப் பின்னர், அந்த படைப்பைப் பற்றி ஏங்கல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "மீண்டும் சடவாதத்திற்கு கிரீடம் சூட்டி இருக்கிறது... மனிதனையும், இயற்கையையும் கடந்து எதுவுமே கிடையாது, நம்முடைய மத கற்பனைகள் உருவாக்கி இருக்கும் உயர்பிறப்புகள் என்பது நம்முடைய சொந்த சாரத்தின் அருமையான பிரதிபலிப்பு மட்டும் தான்... இதைப் பற்றிய ஒரு சிந்தனையைப் பெற இந்த புத்தகத்தின் சுதந்திரத்தை உணர செய்யும் பலனை ஒருவர் அவராகவே படித்து அனுபவிக்க வேண்டும். பேரார்வம் என்பது பொதுவானது; நாம் எல்லோருமே ஒருசமயம் ஃபயர்பாக்கியவாதிகளாக இருந்தவர்கள்தான்."

Heine
ஹென்றிச் ஹெயின

1854 ஜேர்மன் விஜயத்தின் போது, ஸ்பினோசாவின் நன்னெறிகளையும் மேரியன் மொழிபெயர்த்தார், இருந்தபோதிலும் இந்த படைப்பு அவர் வாழ்ந்த காலத்தின் பிரசுரமாகவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறுகு, ஜேர்மனின் சிறந்த கவிஞரும், தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டவருமான ஹெயின்றிச் ஹெயின பற்றிய ஒரு நீண்ட, ஆழமான படைப்பை வெளியிட்டார், இருபதாம் நூற்றாண்டின் ஒரு விமர்சகர் இதை விமர்சிக்கையில், "ஹெயின போன்ற மேதையின் எழுத்துக்களை ஆங்கிலம் பேசும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது மற்றைய எந்த ஒரு படைப்பையும் விட சிறந்த பணியாகும்" என்று குறிப்பிட்டார்.

மனித இரக்கம், கருணை ஆகியவற்றோடு ஆழமாக இணைந்திருந்த ஏவன்ஸ்-ஏலியாட்ஸின் அசாதாரணமான மனதுடன் தெளிவாக நாம் முரண்பட்டோம். இளம்வயதில் எல்லோராலும் விரும்பப்பட்ட "அமைதியான குரல் கொண்ட செல்வி. ஏவன்ஸ்" (1850-களின் மத்தியில் அவர் திருமதி. லிவிஸாக மாறினார்) தான் நம்மை கவர்ந்திருந்தார், மேலும் அவருடைய அறிவின் சக்தியையும், அன்பையும் சந்தித்த பெரும்பாலானவர்களை அது தான் வென்றெடுத்திருந்தது. அவருடைய சமகாலத்தியவர்களின் கருத்துப்படி, வெளிப்படையாகவும், சில நேரங்களில் கசப்பான உண்மையையும் அவர் பேசுவார், ஆனால் ஒருபோதும் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பேச மாட்டார். அவரோடு அறிமுகமானவர் குறிப்பிடுகையில், "மேரியனிடம் இருந்த உண்மையும், நேசமும் கலந்த கலவை மிகவும் சிறப்பு பெற்றிருந்தது. அவர் எதையும் விடுவதில்லை, அது நல்லதோ, கெட்டதோ, வலிக்காக பின்வாங்காமல் ஒவ்வொரு கருத்தையும் அவர் வெளிப்படுத்திவிடுவார், இருந்தாலும் கனிவை இழக்காமல் குறைகளையும் அவரால் பார்க்க முடிந்தது."

மன்னிப்பதும், கனிவும் அவரிடம் தனித்துவமான உறவுகளைப் பெற்றிருந்தன, ஆனால் கலைஞர்களின் படைப்புகள் தவறு என்றோ அல்லது வெற்று படைப்பு என்றோ கண்டால், அவர்களைப் பற்றி மென்மையாக விமர்சனம் அளிப்பதில் இருந்து ஏவன்ஸ் மிகவும் தூரத்தில் இருந்தார். 1856 அக்டோபரில் Westminster Review-ல் வெளியான, ''பெண் நாவலாசிரியர்களின் முட்டாள்த்தனமான நாவல்கள்'' ("Silly Novels by Lady Novelists") என்ற தலைப்பிலான ஒரு கடுமையான கட்டுரையில், வெற்று ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களின் பொருளற்ற படைப்புகளைப் பற்றியும் ஏவன்ஸ் பின்வரும் விமர்சனத்தைத் தருகிறார்: "அவர்களின் கூர்ந்துணரும் திறனும், உற்று நோக்கும்தன்மையும் தகுதியுடையதாக இல்லை என்றால், அவர்களின் இலக்கிய வாசகர்களும், வர்த்தக மக்களும், குடியானவர்களும் சரியாக இருக்க முடியாது; அவர்களின் சிந்தனை அவர்கள் எதை பார்த்தார்களோ, கேட்டார்களோ அதை மறுஉருவாக்கம் செய்வதற்கும், அவர்கள் பார்த்தும், கேட்டும் இருக்காதவற்றை மறுஉருவாக்கம் செய்வதற்கும் இடையே வித்தியாசமான பாகுபாடு கொண்டிருக்கும், ஆனால் சமமான அளவில் நம்பிக்கையின்மை அதில் கலந்திருக்கும்."

Dickens
சார்லஸ் டிக்கென்ஸ்

மூன்று சிறுகதைகளின் ஒரு தொகுதியான தேவாலய வாழ்வின் காட்சிகள் (Scenes of Clerical Life) என்பதுடன், 1856-57-ல் ஏவன்ஸ் ஒரு விஞ்ஞான கற்பனைக்கதை எழுத்தாளராக தம்முடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார், இந்த புத்தகம் 1857-ல் தான் Blackwood's Magazine-ல் முதன்முதலாக பிரசுரமானது. இந்தப் படைப்பு கவனத்தை கணிசமாக ஈர்த்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களில் ஒருவர் டிக்கென்ஸ், இவர் "ஜோர்ஜ் ஏலியட்டிற்கு" (இதிலிருக்கும் முதல் பெயர் லிவெஸை கெளரவிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது) ஒரு பாராட்டு கடிதம் எழுதினார்: "இந்த கதைகளில் இருக்கும் நகைச்சுவையிலும், அவலத்திலும் இருக்கும் கூர்மையான உண்மையும், நேர்த்தியும் போல நான் வேறெதிலும் இதுவரை பார்த்ததில்லை; என்னால் எளிதில் சொல்ல முடியாத அளவிற்கு அவை என்னை கவர்ந்திருக்கின்றன." தலைப்பு பக்கத்தில் இருந்த ஆண் பெயரைப் பார்த்து டிக்கென்ஸ் ஏமாந்துவிடவில்லை, அவர் குறிப்பிடுகிறார், இந்த கதைகள் "ஒரு பெண்ணால் எழுதப்படாமல் இருந்தால், இந்த உலகம் தொடங்கியது முதலாக ஒரு பெண்ணைப் போல மனதளவில் தன்னைத்தானே உருவகப்படுத்தி கொண்டு எழுதிய எந்த ஆணும் இவருக்கு முன்னால் இருந்திருக்க முடியாது என்று நம்புகிறேன்."

இது தான் ஏலியாட்ஸின் முதல் நாவலான ஆதாம் பீட்டை நம்மிடம் கொண்டு வருகிறது. இந்த புத்தகம் 1799 இங்கிலாந்து புறநகரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. ஏலியட் தாமே அந்த நாட்டுபுறங்களைப் பற்றி ஆழமாக உணர்ந்திருந்ததை (எழுதுவதற்கு முன்னால் சோர்வில்லாமல் ஆராய்ச்சி செய்திருந்தார்) ஆழமாக எழுத்தில் கொண்டு வர கணிசமான முயற்சியை அளிக்கிறார். நேர்மையும், நாணயமும் நிறைந்த ஒரு தச்சுவேலை தொழிலாளி தான் அதன் முக்கிய கதாபாத்திரம், அவர் தன்னுடைய சகோதரர் மற்றும் தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறார். Donnithorne எஸ்டேட்டில் முக்கிய நிலத்தை வாடகைக்கு விட்டிருக்கும் போய்சர்ஸ் சகோதரனின் ஓர் ஊனமுற்ற மகளான ஹெட்டி சோரெலை ஆதம் நேசிக்கிறார். ஒரு நாடோடி மெத்தோடிஸ்ட் போதகரான தினாஹ் மோரீஸ், போய்சர்ஸின் மற்றொரு உறவுகார பெண்.

பின்னால் இருக்கும் தன்னுடைய வறண்ட பண்ணையை விடுவதற்கு மனமில்லாமல் கொஞ்சம் சுயநலமாகவும், ஆசையோடும் இருக்கும் அழகான ஹெட்டி, இளவயது நிலப்பிரபுவான ஆர்த்தர் டொனித்தோர்ன் இன் கவனத்தைக் கவர்கிறாள், விரைவிலேயே அவருடைய வயதான தாத்தாவிடம் இருந்து அந்த எஸ்டேட் ஆர்த்தருக்கு வரவிருந்தது. ஆர்த்தரும், ஹெட்டியும் காடுகளில் இரகசியமாக சந்திக்க தொடங்குகிறார்கள், ஒருநாள் மாலை அவர்கள் இருவரும் அங்கு முத்தமிட்டு கொண்டிருப்பதை ஆதம் பார்க்க நேர்கிறது. ஆதமும், ஆர்த்தரும் சண்டையிடுகிறார்கள், "அவளுடைய சின்ன கனவுலகை" நொறுக்குவதற்காக, உறவை முறித்து கொண்டதாக தெரிவித்து ஹெட்டிக்கு கடிதம் எழுதம்படி ஆதம் ஆர்த்தரைக் கட்டாயப்படுத்துகிறான். ஆர்த்தர் அவருடைய ஆட்களுடன் புறப்பட்ட பின்னர், ஹெட்டி ஆதமிற்கு நிச்சயிக்கப்படுகிறாள், ஆனால் தாம் கர்ப்பமாக இருப்பதை அவள் உணர்ந்த உடனே, ஆர்த்தரை தேட தொடங்குகிறாள்.

அவளுடைய முன்னாள் காதலனைக் கண்டுபிடிக்க முடியாமலும், வீட்டில் அவள் சந்திக்கும் வெளிப்படையான அவமானங்களாலும் துவண்டிருந்த ஹெட்டி, பயணத்தின் போது, வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணின் உதவியுடன், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அவளுடைய சூழ்நிலையால் அலைக்கழிக்கப்பட்டு, ஆனால் ஏற்கனவே தற்கொலை திட்டமிட்டிருந்தபடி தற்கொலை செய்து கொள்ளவும் முடியாமல், ஹெட்டி அந்த குழந்தையை ஒரு பண்ணையில் போட்டுவிடுகிறாள், குழந்தை அங்கே இறந்துவிடுகிறது. அவள் குழந்தை கொலைக்காக பிடிபடுகிறாள், அதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தினாஹ் அவளைச் சிறையில் சந்தித்து ஆறுதல் கூறுகிறாள், அங்கே வேதனைப்பட்ட ஆதமும் அவளை சென்று சந்திக்கிறான். கடைசி கட்டத்தில், அவளுடைய மரண தண்டனை குறைக்கப்படுகிறது. ஆதமுக்கும், தினாஹூக்கும் இடையில் படிப்படியாக ஒருவரிடத்தில் ஒருவருக்கு காதல் மலர்கிறது, அவர்கள் திருமணம் செய்து கொண்டு ஒரு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

இந்த புத்தகம் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டும், ஆனால் அதன் பல விஷயங்களை இங்கே கவனிப்பது மதிப்புடையதாக இருக்கும். முதலில், "இடது" விமர்சனம் அளிக்கும் மனிதர்களிடம் இருந்து ஆதாம் பீட்டைக் காப்பாற்றி ஆக வேண்டும், இவர்கள் ஏலியாட்ஸின் "தாராளவாத மனிதநேயம்" மற்றும் "பாரம்பரிய யதார்த்தவாதத்திற்கு" ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து, சமூகளவிலும் சரி, கலைகளிலும் சரி, 'இலைமறை காயாய் ஒரு நல்ல உடன்படிக்கை நடந்து கொண்டிருப்பதைப்' பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

கலைஞர்கள் தாங்களே தேர்ந்தெடுத்த நிலைமைகளின் கீழ் தங்களின் படைப்புகளை உருவாக்கவில்லை. புறநிலை சூழல்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது, தேடுதல்மிக்க கலைஞர்கள் அவர்களைச் சுற்றியோ அல்லது அவர்களுக்குள்ளேயே ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. எடுத்துக்காட்டாக, நாம் ஒரு நாவலாசிரியரை மதிப்பிடுவோம், ஏதோ அருவமாகவோ அல்லது வரலாற்று தளமில்லாமலோ அல்ல, அந்த நாட்களிலும், அந்த ஊடகத்திலும் கிடைத்த குறிப்பிட்ட சவால்களுக்கு அந்த பெண்ணோ அல்லது ஆணோ எவ்வாறு பிரதிபலித்தார் என்பதில் இருந்து மதிப்பிடுவோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஏலியட் அவருடைய நாவல்களை எழுத தொடங்கிய போது, சமமற்ற தொழில்துறை அபிவிருத்திகளுக்கு மத்தியில், பிரிட்டன் "உலகின் உற்பத்திபட்டறையாக" விளங்கியது. இந்த பரந்த விரிவாக்கம்---முன்னொருபோதும் இல்லாத வகையில் செல்வத்தை குவித்த விரிவாக்கம்---புத்திஜீவித்தனத்திலும், கலாச்சார வாழ்க்கையிலும், மற்றும் ஒவ்வொரு சமூக அடுக்கிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தியது.

1885-ல் ஏங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: "இங்கிலாந்தின் தொழில்துறை தனியுடைமை காலத்தின் போது, இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கம் அந்த தனியுடைமை நலன்களை, ஒரு குறிப்பிட்ட பரந்த அளவிற்குப், பகிர்ந்து கொண்டது. இந்த நலன்கள் அவர்கள் மத்தியில் மிகவும் சமமில்லாமல் பகிர்ந்து கொள்ளப்பட்டது; சலுகை பெற்ற சிறுபான்மை நிறைய ஒதுக்கி கொண்டது, ஆனால் பரந்தளவிலான மக்களுக்கு, குறைந்தபட்சம், இப்படியும், அப்படியும் தற்காலிகமாக ஏதோ கொடுக்கப்பட்டது. ஓவினிசம் (Owenism) இறந்துவிட்டதில் இருந்து, இந்த காரணத்தினால் தான் இங்கிலாந்தில் சோசலிசம் இல்லாமல் போயிருக்கிறது."

இதுபோன்ற கண்ணோட்டங்களால், தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பாலான பிரிவுகள் பாதிக்கப்பட்டிருக்காத ஒரு காலத்தில் ஏலியட் முதலாளித்துவத்தின் ஒரு புரட்சிகர எதிர்ப்பாளராக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. ஒப்பீட்டளவில், அசாதாரண விஷயம் என்னவென்றால், அப்போதிருந்த பழமைவாத சூழ்நிலையிலும் கூட, அவருடைய சமூக பார்வை ஆழமாக ஊடுருவி இருந்தது.

யதார்த்தவாதம்

யதார்த்தவாதத்தைப் பொறுத்த வரையில், அது மிகப் பெரிய விடயம், அதை இங்கே சற்று மேலோட்டமாகவே பார்க்க மட்டும் முடியும். ஏலியட்ஸின் "பாரம்பரிய" மற்றும் "ஆரம்பகால எளிமையான" கருத்துக்கள், குறிப்பாக ஆதாம் பீட்டின் அத்தியாயம் 17-ல் ("இங்கே கதையின் வேகம் சிறிது நின்றுவிடுகிறது, இதைப்பற்றி பின்னால் விவாதிக்கப்படுகிறது) குறிப்பிடும் அவருடைய கருத்துக்களைப் பற்றி நம்முடைய "நவீன" விமர்சகர்கள் எந்த கண்ணோட்டத்தில் அவரை விமர்சிக்கிறார்கள் என்று கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ஒன்றரை நூற்றாண்டின் சமூக அனுபவங்களையும், ஒரு கலைஞரின் முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு, ஏலியட்ஸின் படைப்புதிறனை விட மேலான மற்றும் அதற்கு நெருக்கமான அளவுக்கு அவர்களால் வேறெதையும் எடுத்துக்காட்ட முடியுமா அல்லது புறவுலகம் பற்றிய உண்மையை கலைக்குள் மீளுருவாக்கும் மிகுதியான சாத்தியப்பாட்டினை புறக்கணிப்பவர்களோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் அவர்களுடைய விமர்சனம் ஒரு பின்னடைவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?

Courbet
குஸ்டாவ் கோபெட்

யதார்த்தவாதத்தின் மீதான ஏலியட்ஸின் பார்வைகள், புதிய சமூக மற்றும் பொருளாதார யதார்த்தம், தத்துவார்த்த-அரசியல் கோட்பாடு மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் இணைந்து கலைஞர்களின் ஒரு தீவிரமான நிலைநோக்கை மீண்டும் கட்டமைப்பதன் ஒரு பாகமாக இருந்தது. 1830 மற்றும் 1848ஆம் ஆண்டுகளில் பிரான்சில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி, குறிப்பாக புதிய சவால்களை முன்னிறுத்தியது. விவசாயிகள், குட்டி முதலாளித்துவ குடியானவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் பற்றிய கோபெட்டின் ஓவியங்கள், "அருவருக்கத்தக்க அசிங்கங்களை வெளிப்படுத்துவதாகவும்", "ஜனநாயகத்தன்மை" கொண்டிருப்பதாகவும், "சடவாதத்தோடு கறைப்பட்டிருப்பதாகவும்" குற்றஞ்சாட்டப்பட்டது. 1851-ல், அந்த ஓவியர் தன்னைத்தானே இவ்வாறு அறிவித்தார், "எல்லாவித புரட்சியிலும் பங்கெடுப்பவன், எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தவாதி (Realist).. 'யதார்த்தவாதி' என்றால் உண்மையின் ஒரு தீவிரமான காதலன்"

''கலையில் யதார்த்தவாதம்: அண்மைக்கால ஜேர்மன் கட்டுக்கதை'' ("Realism in Art: Recent German Fiction" -1858) என்ற தம்முடைய கட்டுரையில் லிவிஸ், "கலை என்பது யதார்த்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது" என்று வாதிட்டார். அவர் எழுதியதாவது: "யதார்த்தவாதம் என்பது... எல்லா கலைகளின் அடிப்படையாகும், மேலும் அதற்கான எதிர்ப்பு என்பது கருத்துவாதம் கிடையாது, மாறாக அது பிழையியல்வாதம்- (Falsism) ஆகும். நம்முடைய ஓவியர்கள் விவசாயிகளை வழக்கமான சிறப்புகளுடனும், சிறந்த ஆடைகளுடனும் காட்டும் போது... அங்கு கருத்துவாதத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சி நடக்கிறது, அதன் விளைவு சாதரணமாக மதிப்பிழக்கப்படுகிறது மற்றும் கெட்ட கலையாகிவிடுகிறது.....அது நிஜமான விவசாயிகளையும் கொடுப்பதில்லை, அவர்களைக் கண்டுகொள்ளாமலும் விடுவதில்லை; ஒன்று ஆடைகளே இல்லாமல் வரையுங்கள் அல்லது முழுமையாக மாறுபடாதன்மையோடு வரையுங்கள்; உங்கள் மக்களை அமைதியாக வைத்திருங்கள் அல்லது அவர்களை அவர்களுடைய வர்க்கத்தின் மரபுத்தொடர்களைப் பேச அனுமதியுங்கள்."

1847-ல் ரஷ்ய விமர்சகர் வி.ஜி. பெலின்ஸ்கி எழுதுகையில், "எல்லாவித கருத்துக்களையும் விட்டொழித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் பிரத்யேகமாக கலையின் அடித்தளத்தை உருவாக்குவதன்" மூலமாக மட்டும் தான் ரஷ்ய இலக்கியத்திற்கான கோகொலின் பங்களிப்பை எட்ட முடியும் என்று குறிப்பிட்டார். இதை செய்ய வேண்டுமானால், சராசரி மக்களை நுட்பமாக விளக்கி காட்ட, மக்கள் கூட்டத்தை, மக்கள் பெருந்திரளைப் பிரத்யேகமாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது, எப்போதுமே கவிஞர்களை கருத்துவாதத்திற்கு இட்டு செல்லும் மற்றும் ஒரு மாறுபட்ட முத்திரையை அவர்கள் மீது பதிக்கும் பொது விதிகளிலிருந்து மகிழ்சியான விதிவிலக்குகள் பெற்றவர்கள் மட்டும் கிடையாது." கோகொலின் படைப்புகளுக்கு மற்றொரு வாக்கியமும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்: "அதனது நம்பிக்கைக்குரிய எல்லாவிதத்திலும் யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கலை இருக்கிறது."

ஆதாம் பீட்டின் பதினேழாம் அத்தியாயத்தில், சீர்கெட்ட வீழ்ந்துவிட்ட மனிதத்தன்மையை உண்மையாக எடுத்துக்காட்டும் ஒரு விஷயத்தை ஏலியட் உருவாக்கி காட்டுகிறார். அந்த பெண்மணி குறிப்பிடுகிறார், "நம்மை போலவே இறக்க போகும் நம்முடன் உடனிருப்பவர்கள் ஒவ்வொருவரையும், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்." "நிஜத்தில் சுவாசித்து கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள்" மீது கலைஞர்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும், உங்களுடைய நடுநிலைத்தன்மையால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் அல்லது உங்களுடைய தப்பெண்ணங்களால் அவர்கள் காயப்படுவார்கள்: உடனிருக்கும் உங்கள் உணர்வுகளால், உங்களுடைய இரக்க உணர்வினால், உங்களுடைய துணிச்சலான வெளிப்பாட்டால், உங்களுடைய தைரியமான நீதியால் அவர்கள் உற்சாகமடைவார்கள், அவர்கள் உதவியைப் பெறுவார்கள்."

ஏலியட் தொடர்ந்து எழுதுகிறார், "பொய் மிகவும் சுலபமானது, ஆனால் உண்மை மிகவும் கடினமானது... உங்களுடைய வார்த்தைகளை ஆழமாக ஆய்வு செய்து பாருங்கள், தவறு செய்யும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றாலும் கூட சரியான உண்மையைக் கூறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உங்களுடைய சொந்த உடனடி உணர்வுகளிலும் கூட இதை நீங்கள் உணரலாம்--அவர்களைப் பற்றி துல்லியமான உண்மையாக இல்லாதபட்சத்தில், கொஞ்சம் நல்லமுறையில் கூறுவதும் கூட மிகவும் கடினமாக இருக்கும்." (ஒருசில ஆண்டுகள் கழித்து யுத்தமும் அமைதியும் என்பதில் டால்ஸ்டாய், "உண்மையைச் சொல்வது மிகவும் கடினம்" என்று இதே புள்ளியை எடுத்தாள்கிறார்.)

ஆதாம் பீட்டின் ஆசிரியை குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டின் டச்சு ஓவிய பாணியைப் புகழ்கிறார், சராசரி மக்களையும், "வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளாக இருக்கும் மலிந்த பொது விஷயங்களை" அது கையாண்டிருந்த விதத்தை அவர் பாராட்டுகிறார். "கலையில்" இருந்து "வெகுஜன மக்கள்" மறைக்கப்பட்டுவிட கூடாது என்று அவர் வலியுறுத்துகிறார், "உழைத்து தேய்ந்த கைகளோடு கேரட்களைச் சீவிக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்கள், கறைப்பிடித்த மண்வீடுகளில் விடுமுறையைக் கழிக்கும் அந்த வாட்டம்சாட்டமான நாட்டுப்புறத்தவர்கள், வளைந்த முதுகோடு, குளிரால் தாக்கப்பட்ட அறியாமை நிறைந்த முகங்களோடு, மண்வெட்டியோடு வளைந்து நின்று, உலகத்தின் கரடுமுரடான வேலைகளைச் செய்தவர்கள்--தகரங்களால் ஆன அவர்களின் வீடுகள், அவர்களின் அழுக்குபிடித்த ஜாடி, அவர்களுக்குள் இருக்கும் முரட்டுத்தனமான போக்கிரிகள், அவர்களின் வெங்காயக் கொத்துக்கள்" - எல்லாம் மறைக்கப்பட்டு விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

1856-TM Westminster Review-ல் எழுதிய மற்றொரு கட்டுரையில், "மிகவும் பளுவான சுமைகள் ஏற்றப்பட்ட நம் உடன்வாழ்பவர்களை", தொழிலாளர் வர்க்கத்தை, துல்லியமாக எடுத்துக்காட்ட அவர் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதை ஏலியட் தெளிவுபடுத்தினார்: "கலை என்பது வாழ்க்கைக்கு மிகவும் அருகில் இருப்பது; அது அனுபவத்தை மேம்படுத்திக் காட்டுவதற்கான வழி, அது நம்முடைய தனிப்பட்ட எல்லைகளைக் கடந்து நம்முடைய உடன்வாழ்பவர்களுடன் நமக்கிருக்கும் தொடர்பை விரிவுபடுத்திக் காட்டுகிறது. மக்களின் வாழ்க்கையை வரைந்து காட்ட வேண்டும் என்று கலைஞன் புரிந்துகொள்ளும் போது, அவனது பணி எல்லாவற்றையும் விட மிகவும் முழுமையடைகிறது. வாழ்க்கையின் மிகவும் செயற்கையான விஷயங்களை எடுத்துக்காட்டுவதை விட, இங்கே பொய்மைப்படுத்தலை நியாயப்படுத்துவது மிகவும் கொடுமையானது." ("ஜேர்மன் வாழ்க்கையின் இயற்கை வரலாறு")

அது சாத்தியமாக இருந்திருந்தாலும் கூட, நிச்சயமாக, ஒன்றரை நூற்றாண்டுக்கு பின்னர் திரும்பி பார்த்தால், ஏலியட்ஸின் யதார்த்தவாத பதிப்பு சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் திடீர் நிகழ்வுகளுக்கும், நடுநடுங்கும் நிகழ்வுகளுக்கும் (மற்றும் புத்திஜீவித்தனமான அபிவிருத்திகளுக்கும்) பின்னர், க்யூபிசம், இமேஜினிசம், சூர்ரியலிசம், எக்ஸ்ப்ரெஷனிசம், ப்யூசரிசம்(Cubism, Imagism, Surrealism, Expressionism, Futurism) மற்றும் பிற போக்குகளுக்கு பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு நாவலாசிரியை பார்த்தது போல உலகையும், கலையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக குறிப்பிட வேண்டுமானால், புகைப்படம் மற்றும் சினிமா ஆகிய இரண்டு முக்கிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் மட்டும், தனிநபர் பிரபலத்தன்மைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு கலையை மாற்றிவிட்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த நூற்றாண்டின் பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளுக்கு இடையிலும், கலைஞர்கள் எல்லாவகையிலும் புதிதாகவும், தன்னியல்பாகவும் வாழ்க்கையை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். எந்தவகையில் பார்த்தாலும், ஆதாம் பீட் எழுதப்பட்ட காலத்தில் இருந்த ஆங்கிலேய சமூகத்தின் ஸ்திரத்தன்மை, முழுமையாக கடந்த காலத்திற்கே உரிய ஒன்றாக போய்விட்டது. விரைவாகவும், திடீரென்றும் ஏற்படும் மாற்றங்கள், பெருந்திரளான மக்கள் எழுச்சி, பேரழிவு மற்றும் வெற்றி ஆகியவற்றோடு ஒத்திசைந்த ஒரு பிரமாண்ட அளவிலான கலைதான் இன்று நமக்கு தேவைப்படுகிறது, இதெல்லாம் ஒரு தனிநபரின் வாழ்க்கையில் நடப்பது போலவோ அல்லது மேம்பட்ட உணர்ச்சிப்போக்கில் எடுத்துக்காட்டப்பட்டால் கூட போதுமானது.

எவ்வாறிருப்பினும், ஏலியட்ஸ், லிவிஸ், பெலின்ஸ்கி, கூர்பெட் மற்றும் ஏனையவர்களால் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் புத்திஜீவித்தனமான வெற்றிகளில் தான் கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் கூறுவதானால், இவை விஞ்ஞானத்தின் சாதனைகள் போன்ற புறநிலை உண்மைகளாக இருக்கும், "உண்மையின் நிஜமான விளைச்சல்கள்." டார்வினின் பணி மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும், செல்லப்பட வேண்டும், ஆனால் பேரழிவுகளால் எதுவும் சிதைந்துவிடாத போது உயிரினங்களின் தோற்றம் பற்றிய அந்த நாட்களுக்கு திரும்பி போக வேண்டியதில்லை. அதேபோல, கடந்தகாலத்தின் அல்லது மனிதர்களின் கருத்துவாதம் கலந்திருந்த கலைகளுக்கு திரும்பி செல்ல முடியாது. கொச்சையான மற்றும் உணர்ச்சிமயமான விஷயங்களை வெளிப்படுத்துதல், மேற்தட்டுக்களை மட்டுமே கவனத்தில் எடுப்பது, அழகான மற்றும் பிரிவினை ஏற்படுத்தகூடியதை மட்டும் கையில் எடுப்பது, வாழ்க்கையின் அருவருக்கத்தக்க உண்மைகளை நேர்த்தியாகவும், தன்னடக்கத்தோடும் எடுத்துக்காட்டும் தள்ளாட்டங்கள் தள்ளி வைக்கப்பட வேண்டும். எந்தவகையான பாணியினை அல்லது அணுகுமுறையினை கடைப்பிடித்தாலும் நம்பிக்கைக்கு உரியமுறையில் முற்றாக கலை யதார்த்தத்தை பிரதிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு எந்தவகையிலும் துரோகமிழைக்க முடியாது.

Engels
பிரடெரிக் ஏங்கெல்ஸ்

1859-ல் இதே விளைவுகள் குறித்து மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம், ஸ்வாபியன் மற்றும் ரையின்லாந்து வீரர்களால் நடத்தப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு எழுச்சியைப் பற்றிய சோகமான Franz von Sickingen (ரையின்லாந்து குதிரைப்படை தலைவர்) என்பதை எழுதிய ஜேர்மன் சோசலிச தலைவர் பெர்டினான்ட் லாஸ்சால்லேவிற்கு எழுதிய கடிதங்களில் குறிப்பாக தங்களுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். ஏங்கெல்ஸ், பணிவாகவும், ஆனால் குறிப்பாகவும், கலைகளில் இருக்கும் கருத்துவாதத்திற்கு மாற்றாக யதார்த்தவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை வெளியிட்டிருந்தார்: "நாடகத்தைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டத்தில், புத்திஜீவித்தனத்தை வெளிக்காட்ட நிஜத்தன்மையோ அல்லது ஷில்லருக்காக ஷேக்ஸ்பியரோ புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது... பிரபுத்துவம் உடைந்து கொண்டிருந்த காலத்தில் என்ன அருமையான கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தப்பட்டன--ஒரு கொழுத்த பின்புலத்தில், பொருள்ளற்ற ஆளும் அரசர்கள், வறுமையான கூலிக்கு பெறப்பட்ட வீரர்கள் மற்றும் எல்லாவகையான வீரதீரங்கள் போன்ற கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

லாஸ்சால்லிக்கு எழுதிய தம்முடைய கடிதத்தில், ஷேக்ஸ்பியர் மற்றும் ஷில்லருக்கு இடையிலான தம்முடைய முன்விருப்பத்தை மார்க்ஸூம் வெளிப்படுத்தி இருந்தார்: "விமர்சனத்தின் குறிப்பிட்ட புள்ளிகளுக்காக, உங்களுடைய கதாபாத்திரங்களை நீங்கள் சிலசமயங்களில் பெருமளவிற்கு சுய-பிரதிபலிப்புடன் அனுமதிக்கிறீர்கள்--இது ஷில்லர் மீதான உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கிறது." (2)

"மறைக்கப்பட்ட பேரச்சம்"

George Eliot
ஜோர்ஜ் ஏலியட்

ஆதாம் பீட்டில் இருக்கும் சில அத்தியாயங்களும், அவற்றில் ஏலியட் கையாளும் விதமும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. முதல் இரண்டு மூன்று அத்தியாயங்களில் இந்த நாவல் பல பலவந்தமான விஷயங்களைக் கொண்டிருக்கிறது--கிராமப்புற வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க மறுஉருவாக்கம்; திருமதி. போய்சர் போன்ற தெளிவான, உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள்; ஆதம் மற்றும் ஆர்த்தருக்கு இடையே உறவுகள் பரிணமிப்பது; தினாஹின் படிப்படியான உபதேசங்கள்; இன்னும் இதுபோன்ற நிறைய. எவ்வாறிருப்பினும், சில வாசகர்கள் திடீரென்று நிமிர்ந்து உட்கார கூடும், ஹெட்டியின் சோகத்தைப் பிழியும் முப்பத்தி ஐந்தாவது அத்தியாயமான "The Hidden Dread"-ஐ படிக்கும் வாசகர்களின் முதுகுதண்டு கூட சிலிர்த்துப்போகும் அனுபவத்தைப் பெறக்கூடும்.

இங்கே புதினம் ஓர் ஆழமான திருப்பத்தைப் பெறுகிறது, கடுமையான, வேதனையளிக்கும் திருப்பத்தை நோக்கி நகர்கிறது, வாழ்க்கையின் மிகவும் துக்ககரமான விஷயங்களை நோக்கி நகர்கிறது, ஏலியட் காலத்திய சில நாவலாசிரியர்கள் இதை எதிர்க்க எண்ணினார்கள் அல்லது எதிர்த்தார்கள். அதை தொடர்ந்தும், கற்பனை மாறுகிறது. "இந்த விவசாய நிலத்தில்" நாங்கள் இனிமேல் இருக்க போவதில்லை, இந்த விவசாய நிலத்தின் அழகை ஏலியாட் முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கிறார், "முள்வேலிகளால் மூடப்பட்ட, நீண்ட பசும்புல் மற்றும் செழித்த பயிர்கள் நிறைந்த அதன் பரந்த மலைகளுடன்," ஒவ்வொருமுறை ஒருவர் அங்கு வரும்போதும், "அந்த பள்ளத்தாக்கில் அல்லது கிரீடம் போன்ற அந்த சரிவில் சில அருமையான பழைய வீடு உருவாகி இருக்கும், சில வீடுகள் அதன் நீண்ட களஞ்சியத்துடனும், அதன் பொன்நிறமான வைக்கோற்போருடன் காணப்படும்."

திடீரென்று, ஹெட்டி ஓர் "கறுத்த ஏரி" அருகில் ஒரு பெரிய ஓக் மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்கிறாள். "கடந்த சில மாதங்களின் இரவுகளில் இந்த ஏரியை அவள் அடிக்கடி நினைத்திருக்கிறாள், முடிவில் அதை பார்க்க அவள் அங்கு வந்தேவிட்டாள். அவள் தன்னுடைய கைகளை கால்களுக்கு அடியில் வைத்து தட்டுகிறாள், முன்னோக்கி உடலை நீட்டுகிறாள், பின்னர் அவளுடைய ஊனமான கால்களுக்கு எந்த மாதிரியான படுக்கையை அது அளிக்கும் என்பதை ஊகிக்க முயலும் வகையில், அதை ஆர்வத்தோடு பார்க்கிறாள்." ஆங்கில கதையொன்றில், இந்த இளம், கருத்தரித்த நாட்டுப்புற பெண் ஒரு புதிய கதாபாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறாள், இரக்கத்திற்குரிய அந்த இளம்பெண், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு "கறுத்த குளிர்ந்த தண்ணீருக்கு" அருகில் உட்கார்ந்திருக்கிறாள்.

பின்னர், ஆர்த்தரைக் கண்டுபிடிக்க முடியாமல் போன பின்னர், முப்பத்தி ஏழாம் அத்தியாயத்தில் ("The Journey in Despair"), தொனி மேலும் வறண்டு, மேலும் மேலும் நடுநடுங்க வைப்பதாக இருக்கிறது. ஹெட்டி ஒரு முடிவுக்கு வருகிறாள், "கண்ணுக்கு தெரியாத அளவிற்கு போய், மூழ்கிவிட வேண்டும், தன்னுடைய உடல் கூட ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாமல் போய்விட வேண்டும், நான் என்ன ஆனேன் என்றே யாருக்கும் தெரியக்கூடாது" என்று முடிவு செய்கிறாள். அங்கும்இங்கும் தேடி ஒரு குளத்தைக் கண்டறிகிறாள், "கறுத்த மேகங்களுக்கு அடியில் அது மிகவும் கருமையாக இருக்கிறது: எந்த அசைவும் இல்லை, எந்த சத்தமும் இல்லை." "விக்டோரிய காலத்து" வசனத்தை ஏலியட்ஸ் பொதுவாக மிகவும் எளிமையாக விவரிப்பார், இந்த பத்திகளில் நிறைய உண்மைகளை விவரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த குளம் இப்போது அதன் குளிர்கால ஆழத்தில் இருந்தது: அவளை அது முழுங்கிவிட்ட பின்னர், கோடையில் ஹேஸ்லோப்பில் ஏற்படுவது போல, குளத்தின் நிலைமை ஏற்பட்டாலும், யாரும் அவள் உடலைக் கண்டுபிடிக்க முடியாது. அங்கே அவளுடைய கூடை இருந்தது--அதையும் அவள் மறைத்து வைக்க வேண்டும்: அவள் அதை தண்ணீருக்குள் தூக்கி எறிய வேண்டும்--முதலில் அதை கற்களால் நிரப்பி கனமாக்கி, பின்னர் அதை தூக்கி எறிய வேண்டும். அவள் கற்களைப் பொறுக்குவதற்காக எழுந்து நிற்கிறாள், பின்னர் ஐந்து அல்லது ஆறு கற்களைக் கொண்டு வருகிறாள், அதை கூடையின் முன்னால் வைத்துவிட்டு பின்னர் மீண்டும் உட்காருகிறாள். அங்கே அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது--இரவு முழுவதும் அவளுக்காக இருந்தது."

Theodore Dreiser
தியோடர் டெய்சர்

இந்த அத்தியாயங்களில் ஏலியட்ஸ் தன்னைத்தானே ஹெயிட்டியின் காலடியில் கொண்டு வரும் திறமை ஆச்சர்யப்படும் வகையில் நம்மை ஈர்க்கிறது; அது நம்மை அதனோடு இணைத்து கொள்கிறது, அது நம்மை நடுநடுங்க செய்கிறது. அது தியோடர் டெய்சரின் Clyde Griffiths ஏரியில் கொலைக்காக செய்து கொள்ளும் தயாரிப்புகளை நம்முடைய மனதில் கொண்டு வருகிறது, மேலும் ஒரு அமெரிக்க பெரும்துயர்(An American Tragedy) என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் மனதில் கொண்டு வருகிறது. (டெய்சர், ஏலியட்ஸ் உட்பட தாம் "கற்று தந்த" எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்.) (3)

டெய்சரின் முக்கிய படைப்பிற்கு 60 ஆண்டுகளுக்கு பின்னர், (ஜோர்ஜ் புக்னர், 1837-ல் அவருடைய மரணத்தின் போதும் முடிக்கப்படாமல் இருந்த Woyzeck-லும் இதே போன்ற தற்கொலை காட்சி இடம்பெற்றிருந்தது) அதை போலவே, ஹெட்டியின் சோகமான விதிக்காக அதை உள்வாங்கி கொண்டு ஏலியட் ஒரு தற்கொலை காட்சியில் எளிமையாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். ஏலியட் பின்னால் விவரிக்கிறார், 1802-ல் தன்னுடைய குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஓர் இளம் பெண்ணான (மேரி வோஸ்) தன்னுடைய மொதோடிஸ்ட் அத்தையால் முந்தைய தசாப்தங்களில் சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்து தான் "ஆதாம் பீட்டின் கரு" எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். ஏலியட்ஸின் அத்தை இரவு முழுவதும் அந்த குழந்தையோடு இருந்தார், "பின்னர் கொலை செய்ய இருந்த இடத்திற்கு குதிரை வண்டியில் சென்றார்." இந்த கதை தன்னை ஆழமாக பாதித்ததாகவும், அதை ஒருபோதுமே மறக்க முடியவில்லை என்றும் அந்த நாவலாசிரியை எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவங்களும்--இதற்கு பிந்தைய, ஹெட்டி வழக்கின் (4) துக்ககரமான காட்சிகளும்--புத்தகத்தில் வலுவாக இடம்பெற்றிருக்கின்றன. ஹெட்டியின் கதாபாத்திரத்தில் ஏலியட்ஸின் மனோபாவத்தில் குட்டி முதலாளித்துவ நியாயவாதங்களைப் பார்க்கும் விமர்சகர்கள், என்னுடைய பார்வையில் மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள், சிறிய பத்திகள் கூட அவ்வாறு குறிப்பிட்டு காட்டுவதாக இல்லை. (எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் விமர்சகர் டெர்ரி எக்லட்டன் குறிப்பிடுகையில், ஏலியட்ஸால் நாவலில் இருந்து ஹெட்டி "நீக்கப்படுகிறார்" அல்லது "இடம் பெயர்க்கப்படுகிறார்", ஏலியட் அந்த பெண்ணின் துரதிருஷ்டவசமான கதாபாத்திரத்தை "மிகவும் முக்கியமானதாகவும், புறமிருந்தும் கையாள்கிறார்." "ஆதரவற்ற நிலையில் கையை விரிக்கும் ஒருவராக அவரை சித்தரிக்கிறார்.") ஓப்பிட்டளவில், ஹெட்டியின் சுய-ஆர்வத்தையும், உணர்ச்சிவயப்பட்ட உறுதியையும் ஆசிரியை வலுயுறுத்தியிருந்தாலும் கூட, நம்பிக்கையிழந்த ஒரு பெண்ணுக்காக இந்த காட்சிகள் மிகவும் பரிதாபப்படுவதாக இருக்கின்றன.

நிச்சயமாக, ஏலியட் தானும் ஒரு பெண் என்கிற நிலையில் இருந்து தாண்டி வரமுடியவில்லை. அவர் திருமணமாகாமல் இருந்த நிலைக்கு இடையிலும், தாராளவாத மற்றும் "மனிதநேய," அரசியல் கண்ணோட்டங்களால், ஆடம்பரமான மரியாதைகளோடு விக்டோரிய காலத்து இங்கிலாந்தில் ஒரு முக்கிய வெகுஜன பிரமுகராக அவர் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். (அவருடைய பணி நேரடியாகவே இங்கிலாந்து அரசியின் பாராட்டைப் பெற்றது, குறிப்பாக அவருடைய மகள் இளவரசி லூயிஸின் பாராட்டைப் பெற்றது). மீண்டும், அவருடைய தெளிவான சமூக தீர்மானங்கள் எந்தளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்பதல்ல பிரச்சினை. மேலும் நாவலின் முடிவு (ஒரு மகிழ்ச்சியான திருமணம், ஒரு புதிய வாழ்க்கை, குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எல்லா சமூக ஆக்கக்கூறுகளோடும் சமரசப்படுவது)ஆனால், வர்க்க மற்றும் பாலியல் சுரண்டல்கள், மற்றும் அவற்றின் பிளவு, உருக்குலைவு மற்றும் உளவியல்ரீதியான வன்முறை குணம் ஆகியவற்றின் பின்புலத்தோடு ஒரு குறிப்பிட்ட நிலைப்புள்ளியில் அந்த "dark pool" (மற்றும் நீதிமன்றத்தில்) காட்சிகள் எந்த கோணத்தில் காட்டப்பட்டன என்பது தான் பிரச்சினையாக உள்ளது.

பொதுவான அனுபவத்தின் உணர்ச்சியற்ற வர்ணனை மற்றும் ''புறநிலை'' இன் (தொடர்புபட்ட வகையில் இது இதமாக இருந்தது) இந்த கலவையும், கூர்மையான சமூக புரிதலும் ஒரு புதிய, அல்லது மாற்றப்பட்ட ஆக்கக்கூறை ஆங்கில-மொழி இலக்கியத்தில் அறிமுகப்படுத்துகிறது. (ஹெட்டியின் முழுபெயர் ஹெஸ்டெர், இது Nathaniel Hawthorne-னின் The Scarlet Letter-ல் வரும் Hester Prynne-ஐ அடிப்படையாக கொண்டிருக்கலாம், பருவவயது மற்றும் முறையற்ற கருத்தரித்தலின் அடிப்படையில் அந்த தசாப்தத்திற்கு முன்னர் இந்த கதை எழுதப்பட்டது.)

ஒருவர் நாட்டுப்புறக்கதைகளையும், பாடல்களையும் விரும்பினால் ஷேக்ஸ்பியர் மற்றும் எலிசபெத்தன்ஸின் பக்கம் திரும்ப வேண்டும், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் மற்றும் சாமுவேல் கொலிரிட்ஜ் Lyrical Ballads-ஐ படைத்தார்கள் (ஆதாம் பீட்டில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் சில இலக்கிய படைப்புகளில் இதுவும் ஒன்று--இந்த கவிதை தொகுப்பு வெளியான அடுத்த ஆண்டு தான் ஏலியட்ஸின் நாவல் வெளியானது, இந்த கவிதை தொகுப்பில், சிசு கொலை குறித்த ஒரு பாடலான வோர்ட்ஸ்வொர்த் எழுதிய "The Thorn" (5) பாடலும் இடம்பெற்றிருந்தது), ஸ்காட் The Heart of Midlothian-ஐ படைத்தார், உண்மையில் இதுபோன்ற நிஜத்தன்மை வாய்ந்த கற்பனையையும், இரக்கமற்ற கொடுஞ்செயல்களையும் இவர்களின் படைப்புகளில் காணலாம். ஆனால், ஆதம் பீடின் மீது ஏலியட் அவரின் ஆரம்ப நேரத்தைச் செலவிட்டிருந்ததற்கு இடையில், 1859வாக்கில் புதிய சமூக நலன்களும், முரண்பாடுகளும் எழுந்திருந்தன.

"ஜேர்மனின் ஆளுமைகள்"

ஏலியட்ஸின் கண்டுபிடிப்புகளோடு சம்பந்தபட்ட ஒரு முக்கிய கற்பனை கதாபாத்திரத்தின் ஓர் இறுதி புள்ளியும் ஒன்று அங்கே இருக்கிறது: அது "ஜேர்மனின் ஆளுமைகள்". நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல, ஸ்ட்ரெளஸ் மற்றும் பயர்பாக்கின் படைப்புகளையும் மொழிபெயர்த்திருந்த ஏலியட், கோத்தவின் (Goethe) வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒரு மனிதரோடு வாழ்ந்தவரும், ஜேர்மனிக்கு பலமுறை பயணம் செய்தவரும், அங்கே பல முக்கியமான புத்திஜீவிகளோடு கலந்துரையாடியவருமான இந்த பெண்மணிக்கு, இந்த மொழிபெயர்ப்பு அனுபவம் ஹெயினவை ஆங்கில உலகத்திற்கு அறிமுகப்படுத்த உதவியது. உண்மையில், அவர் ஜேர்மனிக்கு சென்றிருந்த போது தான் அவர் ஆதாம் பீட்டின் கணிசமான பகுதியை எழுதினார், மேலும் முனிச் நகர நாடக அரங்கில், ஷில்லரின் நாடகத்தின் அடிப்படையில் ரோசினியின் (Rossini) Guillaume Tell (கியோம் தெல்)-ன் நடிப்பைப் பார்த்து கொண்டிருந்த போது, நாவலின் முக்கிய காட்சிகளில் ஒன்று, "அவசியமான ஒன்றாக" தனக்குள் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.

Georg Buchner
ஜோர்ஜ் புக்னர்

ஏலியட் மற்றும் கோத்தே பற்றியும், ஏலியட்டையும் ஸ்கெல்லரைப் பற்றியுமான பல புத்தகங்களை அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக அசாதாரணமான இலக்கியத்துறை பிரபலங்களில் ஒருவரான ஜேர்மன் எழுத்தாளர் ஜோர்ஜ் புக்னரை (ஏற்கனவே இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறோம்) நினைத்து பார்க்காமல், ஹெட்டி சோரெலின் "dark pool" பற்றியும், கொலை வழக்கு பற்றிய பத்திகளைப் படிப்பது மிகவும் சிரமம். ஜோர்ஜ் புக்னர் தன்னுடைய 23-வது வயதில் ஜன்னி காய்ச்சலால் இறந்து போனார். Danton's Death, Lenz, மற்றும் Woyzeck ஆகிய மூன்று மிகச் சிறப்பு வாய்ந்த படைப்புகளை எழுதுவதற்கு முன்னர், 1834-ல் புக்னர் புரட்சிகர ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதினார், இதற்காக அவர் மீது தொடுக்கப்பட்ட இராஜதுரோக குற்றத்திற்காக அவர் ஜேர்மனியை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.(6)

2001-TM, Modern Language Review-ல் உண்மை மிகவும் சிக்கலானது:"ஜோர்ஜ் ஏலியஸ் உம் ஜோர்க் புக்னரும், பகிர்ந்துகொண்ட காலம்'' ("Truth so difficult: George Eliot and Georg Büchner, a shared time"), என்ற ஓர் ஆவலைத் தூண்டுகிற கட்டுரையில் ஷீலா ஸ்டெர்ன் பின்வருமாறு விவாதிக்கிறார்: புக்னரின் படைப்பைப் பற்றி ஏலியட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும், அவருக்கும், லிவிஸிற்கும் அறிமுகமான ஒரு பிரபல ஜேர்மன் வேதியியல் அறிஞரான ஜுஸ்டுஸ் லீபிக் மூலமாக தெரிந்திருக்கலாம், இந்த ஜுஸ்டுஸ் லீபிக் ஹீஸென் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர், அப்போது அங்கே புக்னர் மாணவராக இருந்தார். (லிவிஸூம், ஏலியட்ஸூம் ஒல்லாந்தில் பிறந்த உடற்கூறு நிபுணரான ஜேகப் மொலெஸ்சோட்டிற்கும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் கூட ஸ்டெர்ன் குறிப்பிட்டிருந்திருக்கலாம், இந்த ஜாகோப் மொலெஸ்சோட் பெரும்பாலும் ஜோர்ஜின் இளைய சகோதரரான லுத்விக் புக்னரால் "மேலோட்டமான சடவாதி" என்று குறிப்பிடப்பட்டார்.)

J. M. R. Lenz
ஜெ.எம்.ஆர். லென்ஸ்

புக்னரின் Lenz-ன் (1836) பந்திகளில் இருக்கும் திருப்புமுனையான புள்ளிகள், ஏலியட்ஸ் உடனான நெருக்கத்தால் அவருடைய எழுத்துக்களில் வந்திருப்பதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இந்த அருமையான நாவல் ஜெ.எம்.ஆர். லென்ஸின் (1751-1792) வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் ஒரு மாற்று பதிப்பாக இருக்கிறது, ''தாக்குதலும் தூண்டுதலும்'' ("Sturm und Drang") நாடக ஆசிரியரான (குறிப்பாக, ஆசிரியரும் போர்வீரர்களும்-The Tutor and The Soldiers) அவர் 1778-ல் பிரபல பரோபகாரியும், மற்றும் திருச்சபை சமயகுருவுமான ஒருவருடன் அல்சாஸில் தங்கியிருந்த போது மூளை குழம்பி போனார்.

புக்னரின் படைப்பில், மத-சித்தாந்த மனவேதனைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் லென்ஸிற்காக எழுதுகிறார், "இந்த பிரபஞ்சம் வெளிப்படையாக காயப்படுத்தக்கூடியது; அது அவருக்கு ஆழமான சொல்லொணா வேதனையை ஏற்படுத்திவிட்டது." இந்த அரை-பைத்தியக்கார எழுத்தாளரால் ஓர் இறந்த குழந்தையைப் பிரார்த்தனை மூலமாக பிழைக்க செய்ய முடியாமல் போன பின்னர், அவர் மலைகளுக்குச் சென்று விடுகிறார். புக்னர் எழுதுகிறார், சொர்க்கத்திற்குள் சென்று பலவந்தமாக சண்டையிட்டு, கடவுளை மேகங்கள் வழியாக கீழே இழுத்துக் கொண்டு வர லென்ஸ் நினைத்தார்; தம்முடைய பற்களால் உலகை மென்று, அதை படைத்தவரின் முகத்தில் அவரால் துப்ப முடிந்தால்... லென்ஸ் சிரித்திருப்பார், நாத்திகம் அவர் மீது தவழ்ந்த போது சிரித்தார், அது அவரை அதன் பிடியில் அழுத்தமாக பிடித்து கொண்டிருந்தது. (2004-ல் ரிச்சர்டு சீபர்த்தால் மொழிபெயர்க்கப்பட்டது).

ஆதாம் பீட்டின் பதினேழாவது அத்தியாயத்தில் இருக்கும் ஏலியட்ஸின் யதார்த்தவாத நம்பிக்கையை (Realist credo) முக்கியமாக இரக்கமின்மை(Stern) என்ற காட்சி அல்லது அது ஏலியட்ஸிற்கு தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. தொலைதூர மலைக்கிராமத்திற்கு வரும் லென்ஸின் நண்பர் கெளவ்மானிற்கும், லென்ஸிற்கும் இடையில் நடக்கும் ஓர் உரையாடலை இந்த அத்தியாயம் கொண்டிருக்கிறது. அந்த உரையாடல் இலக்கியத்தை நோக்கி திரும்புகிறது. கலையில் இருக்கும் கருத்தியல்படுத்தலுக்கு எதிராக லென்ஸ் பேசுகிறார். "வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றிலும் நான் இருப்பின் அவசியத்தை எதிர்பார்க்கிறேன், அவ்வளவுதான்; அதன்பின்னர் நாம் அதை அழகா, அழகில்லையா என்று கேட்க வேண்டியதில்லை, எவையெல்லாம் படைக்கப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் வாழ்வின் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருக்கின்றன என்ற உணர்வும் ஆகிய இந்த இரண்டும் தான் கலையில் முழுமையான விதியாக இருக்கிறது. இதை அப்படியே ஷேக்ஸ்பியரிடம் பார்க்க முடிகிறது, எப்போதாவது தான் நாம் அதனுடன் எதிர் வழக்காடுகிறோம், குறிப்பாக அது முழுமையாக நாட்டுப்புற பாடல்களிலும், அப்போதும் இப்போதும் கோத்தேயிடமும் எதிரொலிக்கிறது. மற்ற எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்துவிடலாம்."

அந்த உரையாடலில் பின்னர் லென்ஸ் இவ்வாறு சேர்க்கிறார்: "ஒவ்வொரு ஜீவனின் அவற்றிற்குரிய தனித்தனி இருப்பிற்குள் ஊடுறுவுவதற்கு ஒருவர் மனித உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், யாரும் மிகவும் பணிவாகவோ, மிகவும் அருவருக்கத் தக்க வகையிலோ இருந்துவிட முடியாது, இப்படி இருந்தால் மட்டும் தான் உங்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும்; அருமையான அழகுணர்ச்சியை விட மிகவும் சிறப்பற்ற முகம் ஓர் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குகிறது, மற்றும் உயிரில்லாத, தசைகள் இல்லாத, நாடித்துடிப்பின் அதிகரிப்போ அல்லது குறைவோ இல்லாத வெளிப்புறத்தில் இருந்து அவர்களுக்குள் எதையும் நகலெடுக்காமல் அந்த உருவங்கள் தோன்ற ஒருவர் அனுமதிக்க முடியும்."(7)

புக்னரின் எழுத்துக்களினூடாக ஏலியட்ஸ் வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், அவருடைய அந்த முடிவை எட்டுவதற்கு அவருக்கு அது தேவைப்பட்டதா? நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கலை வாழ்க்கையை முழுமையாகவும், நேர்மையோடும் அதனால் முடிந்தவரைக்கும் வெளிப்படுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைகளின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கையிலெடுத்து, அதை ஆழமாக கையாள வேண்டும் என்ற கருத்து, பல கலைஞர்களாலும், விமர்சகர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. எவ்விதத்திலானாலும், ஐரோப்பாவில் ஏனைய எவரையும் விட ஷேக்ஸ்பியரின் பாரம்பரியத்தை அதிகளவில் கொண்டிருந்த ஜேர்மன் எழுத்தாளர்களுக்கும் மற்றும் புத்திஜீவிகளுக்கும் ஏலியட்ஸின் கடமைப்பாடு குறிப்பிடத்தக்கது.(8)

Vincent Van Gogh
வன்சென்ட் வான் கோஹ்

மிகவும் நேர்மையான மற்றும் மிகவும் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான, பத்தொன்பதாம் நூற்றாண்டு கலைஞர்களில் சிறந்த சிந்தனைவாதியுமான ஓவியர் வன்சென்ட் வான் கோஹ், ஒருவேளை இதுபோன்ற ஒரு கருத்தை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம், ஜோர்ஜ் ஏலியட்ஸ் பற்றி கூறிய வார்த்தைகளை எடுத்துக்காட்டுவதுடன் என்னுடைய வார்த்தைகளை முடித்துக் கொள்கிறேன்.

ஏலியட்ஸின் மொழிபெயர்ப்புகளைப் படித்த வான் கோஹ் 1884-ல் அவருடைய நண்பருக்குப் பின்வருமாறு எழுதுகிறார்: "இலக்கியத்துறையிலும், கலைத்துறையிலும் நான் யாருடைய படைப்புகளில் மிகவும் ஆழமான உயிர்துடிப்பைப் பார்க்கிறேனோ, அவர்களுக்கே என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் போய் சேரும்... மற்ற விஷயங்களுக்கு மத்தியில் இவரிடம் எதனால் நான் உந்தப்படுகிறேன் என்றால், ஏலியட்ஸ் செய்து முடிப்பதில் வல்லவர் என்ற போதினும், அதற்கு அப்பாலும், அதற்கு மேம்பட்டும் அவரளவில் அவர் ஒரு மேதை, இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஒருவேளை இந்த புத்தகங்களைப் படிப்பதன் மூலம் ஒருவர் உயர்வடைகிறார் அல்லது ஒருவேளை அந்த புத்தகங்கள் ஒருவரை உட்கார வைத்து குறிப்புகள் எடுக்கும்படி செய்வதற்கான சக்தியைப் பெற்றிருக்கின்றன... ஏலியட்ஸைப் போன்ற முழு நேர்மையான, சிறந்த எழுத்தாளர்கள் அதிக நபர்கள் கிடையாது.

* * * * * * * * * *

பின்குறிப்புகள்

(1) பார்க்கவும்: "Marx and Darwin: Two great revolutionary thinkers of the nineteenth century" (பின்புறம்)

(2) சோவியத் விமர்சகரும் (ஸ்ராலினால் கொல்லப்பட்டவருமான) அலெக்சாண்டர் வொரொன்ஸ்கி மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் பண்புகள் இந்த பாரம்பரியத்தில் அவற்றிற்குரிய இடத்தைப் பெறுகின்றன.

நிஜம் மட்டுமே இல்லாமல் நிஜத்தின் முத்திரைகளை அளிக்கும் அவருடைய பாணிக்கு கலைஞர்கள் உடைத்து கொண்டு வரவேண்டும் என்று வொரொன்ஸ்கி அழைப்புவிடுக்கிறார். ஒருவருடைய படைப்பில் உலகம் உள்ளது உள்ளபடியே படைத்துக் காட்டப்பட வேண்டும், அதன் மூலம் அழகும், அருவருப்பும், அன்பும், வெறுப்பும், மகிழ்ச்சியும், துக்கமும் அப்படியே காட்டப்படும், கலைஞர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அல்ல, அவையெல்லாம் நிஜ வாழ்க்கையில் உள்ளடங்கி இருக்கின்றன என்பதற்காக" ("உலகைப் பார்க்கும் கலை").

இலக்கியமும், புரட்சியும் என்பதில் டிரொட்ஸ்கி "யதார்த்தவாதம்", "உலகின் முழுமையான மற்றும் முக்கியமான உணர்வு" என்று விளக்கினார். வாழ்வில் உள்ளபடியே, நிஜத்தை ஏற்று கொள்வதன் ஒரு கலைத்துவத்தின் ஓர் உணர்வில் அது அடங்கி உள்ளது, அதிலிருந்து சுருங்கிவிடுவதில் இல்லை, உறுதியான ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்வின் நகர்வில் இருக்கும் ஒரு துடிப்பான ஆர்வத்தில் இருக்கிறது." நம்முடைய வாழ்வுடனான இந்த வகையான கலையின் முன்னீடுபாட்டை மூன்று பரிணாமங்களில் டிரொட்ஸ்கி வலியுறுத்தினார்... ஒரு கல்விக்கூடத்தின் குறுகிய உணர்வில் இருந்தல்லாமல், இந்த பரந்த மெய்யியல் உணர்வில், புதிய கலை நிஜத்தன்மையோடு இருக்கும் என்று ஒருவரால் உறுதியாக கூற முடியும்". (back)

(3) நாவலாசிரியர் தாமஸ் ஹார்டியைப் (1840-1928) பொறுத்த வரையில், 1894-ல் ஒரு தொடர் வடிவத்தில் அறிமுகமில்லாதவராக, அந்த பித்துப்பிடித்த கூட்டத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்த ஏலியெட்டின் முதல் படைப்பு வெளியிடப்பட்ட போது, அவருடைய பாதிப்பு மிகவும் வெளிப்படையாக இருந்தது. பல்வேறு விமர்சகர்களால் அவரே அதை எழுதியிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்பட்டார். (back)

(4) ''தீர்ப்பு'' ("The Verdict") என்ற நாற்பத்தி மூன்றாவது அத்தியாயத்தில், ஹெட்டியின் வழக்கிற்காக இரண்டு சாட்சிகள் வருகிறார்கள். ஏலியட்ஸ் அவர்களின் கொடூரமான சான்றுகளை---ஹெட்டியின் குழந்தையினுடைய பிறப்பைச் சார்ந்த உண்மைகளையும், ஒரு நிலைமையில் அவர் தொடர்ந்து கைவிடப்பட்டதையும்---புறநிலை தொனியில் குறைத்துக் குறிப்பிட்டு காட்டுகிறார். முதல் சாட்சி இவ்வாறு விளக்கி கொண்டு தொடங்குகிறார்: "என்னுடைய பெயர் சாராஹ் ஸ்டோன். நான் ஒரு விதவை, புகையிலை, மூக்குப்பொடி மற்றும் தேயிலை ஆகியவற்றை விற்கும் ஒரு சிறிய கடையை ஸ்டோனிடோனில் சேர்ச் தெருவில் வைத்திருக்கிறேன். இந்த கூண்டில் இருக்கும் குற்றவாளி அதே இளம் பெண் தான், இவர் தான் அன்று பலவீனமாகவும், சோர்வாகவும், தன்னுடைய கையில் ஒரு கூடையுடன், பெப்ரவரி 27 சனிக்கிழமை மாலை என்னுடைய வீட்டில் தங்குவதற்கு இடம் கேட்டு வந்திருந்தார்..."

பின்னர் ஏலியட்ஸ் எளிமையாக எழுதுகிறார்: "அந்த சாட்சி பின்னர், இரவில் ஒரு குழந்தை பிறந்ததாக குறிப்பிடுகிறார், மேலும் அந்த பெண் தானே அந்த குழந்தைக்கு உடுத்திய ஆடைகளை அவருக்கு காட்டியதால் அந்த பெண்மணி குழந்தையின் ஆடைகளை அடையாளம் காட்டினார்."

இரண்டாவது சாட்சி இவ்வாறு தொடங்குகிறார்: "என் பெயர் ஜோன் ஓல்டிங். நான் ஒரு தொழிலாளர், ஸ்டோனிடனில் இருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் Tedd's Hole-ல் வசித்து வருகிறேன். கடந்த திங்கட்கிழமைக்கு ஒரு வாரத்திற்கு முன்னால், மதியம் ஒரு மணி வாக்கில், நான் ஹெட்டன் கோப்பஸ் போய் கொண்டிருந்தேன், கோப்பஸில் இருந்து சுமார் கால் மைல் முன்னால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இவரை ஒரு சிவப்பு நிற மேலங்கியோடு பார்த்தேன், அப்போது இவர் படிகளில் இருந்து வெகுதூரத்தில் இல்லாத ஒரு வைக்கோல்போரிற்கு கீழே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் இவள் எழுந்து கொண்டாள், பின்னர் மற்றொரு பாதையில் நடந்து சென்றது போல தெரிந்தது. அது வயல்வெளிகளுக்கு ஊடாக செல்லும் சாதாரண பாதை தான், அங்கே ஓர் இளம் பெண்ணைப் பார்ப்பதற்கான எந்தவித மிக அவசியமான காரணமும் இல்லை, ஆனால் அவள் வெளுத்தும், பயந்தும் காணப்பட்டதால் நான் அவளைக் கவனித்து பார்த்தேன்..." இதை தொடர்ந்தும் கூறுகிறார்.

ஹெட்டி வழக்கில் கையாளப்பட்டிருக்கும் கலைத்துவமான அணுகுமுறை புக்னர், பெர்த்தோல்ட் பிரெஹ்ட், அல்லது ஆல்பிரட் டோல்பின் (Berlin Alexanderplatz) ஆகியோருக்கு இணையாக மதிப்புடையது. (back)

(5) வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் "The Thorn"-ல் இருந்து சில வரிகள்:

"XI

…'Tis now some two and twenty years,
Since she (her name is Martha Ray)
Gave with a maiden's true good will
Her company to Stephen Hill;
And she was blithe and gay,
And she was happy, happy still
Whene'er she thought of Stephen Hill.

"XII

And they had fix'd the wedding-day,
The morning that must wed them both;
But Stephen to another maid
Had sworn another oath;
And with this other maid to church
ஹிஸீtலீவீஸீளீவீஸீரீ ஷிtமீஜீலீமீஸீ ஷ்மீஸீt
Poor Martha! on that woful day
A cruel, cruel fire, they say,
Into her bones was sent:
It dried her body like a cinder,
And almost turn'd her brain to tinder.

"XIII

They say, full six months after this,
While yet the summer leaves were green,
She to the mountain-top would go,
And there was often seen.
Tis said, a child was in her womb,
As now to any eye was plain;
She was with child, and she was mad,
Yet often she was sober sad
From her exceeding pain.
Oh me! ten thousand times I'd rather,
That he had died, that cruel father!"

வோர்ட்ஸ்வொர்த் (1770-1853) மற்றும் கோலிரிட்ஜால் (1772-1834) 1798-ல் பிரசுரிக்கப்பட்ட Lyrical Ballads-ன் முன்னுரையில் இருந்து:

"பின்வரும் கவிதைகளில் பெரும்பான்மையானவற்றை பரிசோதனைகளாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதைகளின் உற்சாகத்தை எந்தளவிற்கு சமூகத்தின் மத்திய மற்றும் கீழ்நிலை வர்க்கங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதையே இவை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தன. விளையாட்டுத்தனத்திற்கும், பல நவீன எழுத்தாளர்களின் உபயோகமற்ற வார்த்தைஜாலங்களுக்கும் பழக்கப்பட்டு போன வாசகர்கள், இந்த புத்தகத்தை அதன் இறுதிமுடிவுக்காக வலுக்கட்டாயமாக படிக்க ஆர்வம் கொண்டால், ஒருவேளை அவர்கள் அடிக்கடி வித்தியாசமான உணர்வுகளுடனும், தடுமாற்றங்களுடனும் போராட வேண்டியதிருக்கும்: அவர்கள் கவிதைகளைச் சுற்றி வலம் வரத் தொடங்குவார்கள், மேலும் இந்த தலைப்பைப் புனைய என்ன எந்த சலுகையின் அடிப்படையில் இந்த முயற்சிகள் அனுமதிக்கப்பட்டன என்று விசாரிக்க தூண்டப்படுவார்கள்." (back)

(6) ஜோர்ஜ் லூகாஸ், புக்னரின் 100-வது நினைவாண்டில், அதாவது 1937-ல் எழுதும் போது, இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இந்த எழுத்தாளர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சியாளர் ஆவார், இவர் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்கான பொருளாதார அடித்தளங்களின் தெளிவை உணர்ந்திருக்கிறார். ஹெராக்குஸ் பாபேவ் இருந்து பிளாங்கி வரைக்கும் ஏற்பட்ட நிகழ்வுகளில் (1848 ஜூனில் ஏற்பட்ட எழுச்சி) இவர் ஒரு முக்கிய பிரமுகராக இருக்கிறார்."

பின்னர்: "ஷேக்ஸ்பியர் மீதான துடிதுடிப்பான பழைய நினைவுகளுடனும், தெளிவுடனும், இந்த பிரச்சினை நாடகத்தின் முதல் காட்சிகளிலேயே [டன்ரொனின் மரணம்-Danton's Death] வெளிப்படுத்தப்படுகிறது... வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கலைத்துவமான வார்த்தைகளில், புக்னரை முழுமையாக ஒத்திருக்கிறார், அதாவது அவர் இந்த சாமானியமான காட்சியை ஒரு பொருந்தாக் கற்பனையுடன், கசப்பான நகைச்சுவையின் நிஜ வடிவத்துடன் (ஷேக்ஸ்பியரிடம் இருந்து படித்த ஒரு வகையான நகைச்சுவை) வர்ணிக்கிறார்...

"மிக முக்கியமாக, இது தான் புக்னரின் யதார்த்தவாதத்தைக் கொண்டு வருகிறது, ஷேக்ஸ்பியர் மற்றும் கோத்தேயின் பாரம்பரியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட ஒருவர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அரசியல்ரீதியாக அவர் 'ஏழைகள்' அறிவொளியைப் பெற வேண்டும், அவர்கள் அரசியல் போராட்டங்களில் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கான தொலைநோக்கைக் கொண்டிருக்கிறார். எவ்வாறிருப்பினும், ஒரு சிறந்த யதார்த்தவாதியாக இருந்து, அவர் வர்ணிக்கும் ஒரு இலக்கிய பிரபலம் வோய்ஷெக் ஆவார்: ஆதரவற்றவர்கள், சுரண்டப்படுபவர்கள், இடைவிடாமல் முன்னும், பின்னும் அடிக்கப்படுபவர்கள், ஒவ்வொருவராலும் உதைத்து பந்தாடப்படுபவர்கள்---அந்த காலத்தில் இருந்த ஜேர்மன் 'ஏழைகளை' மிகச் சிறப்பாக வரைந்து காட்டுகிறார். ''உண்மையான ஜோர்ஜ் புக்னரும் அவரை பாசிஸ்ட் என தவறாக அர்த்தப்படுத்தலும்''-"The Real Georg Büchner and his Fascist Misrepresentation," பத்தொன்பதால் நூற்றாண்டின் ஜேர்மன் யதார்த்தவாதிகள், The MIT Press, 1993).

இது வோய்ஷெக் புக்னரின் நாடகத்தில் பேசுகிறார்: "ஏழை மக்களான நாங்கள்---பாருங்கள், கேப்டன்: பணம், பணம். ஒரு மனிதரிடம் பணம் இல்லை என்றால்---அவர் அவருக்கு பொறுத்தமான நியாயமான வழியில் அவர் அதை உருவாக்க முயற்சிக்கட்டும்! மற்றவர்களைப் போல நாங்களும் தசையும், இரத்தமும் சேர்ந்து தான் உருவாகி இருக்கிறோம். இந்த உலகிலும், அடுத்ததிலும் கூட எங்கள் இனம் எப்போதும் ஆசிர்வதிக்கப்படாமல் இருக்கிறது. நாங்கள் சொர்க்கத்திற்கு போனால், இடிமுழக்க-பேரொலியை உருவாக்கவே நாங்கள் உதவுவோம் என்று நான் நினைக்கிறேன்."

வோய்ஷெக் படைப்பு ஆதாம் பீட்டின் ஹெட்டி சோரெல் விளைவுகளுடன் நெருக்கமாக காணப்படுகிறது, இதன் இறுதி காட்சிகளில் ஒன்றில் "நீரோடையால்" அமைக்கப்பட்டிருக்கிறது, இதில் தான் வோய்ஷெக் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆயுதத்தைப் போடுகிறார், அதாவது இரத்தந்தோய்ந்த கத்தியைப் போடுகிறார்: "அது அந்த கறுத்த தண்ணீரில் ஒரு கல்லைப் போல மூழ்குகிறது!" ஆனால் ஏலியட்ஸ் அந்த படைப்பைக் கண்டிருக்காமல் இருக்கலாம், அந்த ஜேர்மன் எழுத்தாளர் இறந்த பின்னர், 1879 வரை அது பதிப்பிக்கப்படாமலேயே இருந்தது. (back)

(7) லென்ஸின் ஆசிரியர்களும் போர்வீரர்களும் (The Tutors and The soldiers) இனது (University of Chicago Press, 1972) ஆங்கில மொழி பதிப்பிற்கு வில்லியம் ஈ. யூல்லால் எழுதப்பட்ட முன்னுரையில் இருந்து: "வீரர்களைப் பற்றி கூறிக் கொண்டே அவர் [லென்ஸ்] ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் 'மக்களின் துர்நாற்றமான சுவாசம்' (the stinking breath of the people')… என்று அவர் தம்முடைய விவரிப்பைக் கொண்டு செல்கிறார். அவர் வாழும் சமுதாயத்தின் தவறுகளைச் சுட்டுக்காட்டுவதே அவருடைய தொடர் முயற்சியாக இருக்கிறது, 'சமூக வர்க்கங்களை மிகவும் மேலடுக்கு மக்கள் எப்படி காண்கிறார்களோ அப்படி காட்டாமல், நிஜமாக அவை எப்படி இருக்கின்றனவோ, அவற்றை அப்படியே பிரதிபலிக்கவும், தெய்வீகத்தால் தூண்டப்பட்ட தங்களின் சேவைக்கான வழிகள் மற்றும் புத்துணர்ச்சி எதிர்பார்ப்பை எதிர்நோக்குபவர்கள் மத்தியில் ஆழ்ந்த கருணையையும், உணர்வுகளையும், இரக்கத்தையும், மற்றும் தொண்டு இதயத்தையும் கொண்டு வருவது.' ...ஒட்டுமொத்தமாக, லென்ஜ் ஏழை வர்க்கங்களின் வாழ்வில் ஓர் அறிவிக்கப்பட்ட ஆர்வத்தையும், அவருடைய காலத்தில் அசாதாரணமாக இருந்த அவர்களுடைய பிரச்சினைகள் மீது இரக்கத்தையும் காட்டுகிறார். தொழில்துறை, உற்சாகம் ஆகியவற்றின் மீதும், உழைக்கும் மக்களின் பொது அறிவு மீதும் அவர் வெளிபடுத்தும் புகழுரைகள், சிறிய மனிதன் (The Little Men -Die Kleinen) என்ற நாடகத்தில் இடம் பெற்றிருக்கின்றன." (back)

(8) இந்த மேலோட்டமான, உணர்வல்லாத, "ஷேக்ஸ்பியரின்" தாக்கம் ஹென்றிஸ் ஹெயினிடத்திலும் (1797-1856) காணப்படுகிறது---''ஒரு பெண்''("Ein Weib" - A Woman") என்பதைப் பார்க்கவும், எடுத்துக்காட்டாக, ஒரு விலைமாதுவையும், ஒரு திருடனையும் பற்றியது. மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்ட, கடைசி அடிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

"At six o'clock, he hung from a pole
At seven, he was stuck in a hole;
But by eight, or a little after,
She gulped red wine and roared with laughter!"
("Um sechs des Morgens ward er gehenkt,
Um sieben ward er ins Grab gesenkt;
Sie aber schon um achte
Trank roten Wein und lachte.")

ஜேர்மன் நாடகாசிரியர் பெர்த்தோல்ட் பிரெஸ்ட் நாடகத்தில் இந்த மரபை (இந்த மரபுடன் சேர்த்தும்) பல தடவைகள் கண்டுபிடித்திருக்கிறார். அவருடைய ஆரம்பகால நாடகங்களில் குறிப்பாக (Christopher Marlowe's Edward II-ன் அவருடைய தழுவலுடன் சேர்த்து Baal, Drums in the Night, மற்றும் In the Jungle of Cities) ஆகிய நாடகங்கள் இந்த பாதிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

அவருடைய "Notes on the Realist Mode of Writing" (1940) என்பதில், அப்போதிருந்த யதார்த்தவாதியான லென்ஸ், இளம் வயது ஷில்லர், புக்னர், [Michael] Kohlhaas... என்பதை எழுதிய [Heinrich von] Kleist, [Frank] Wedekind of Spring Awakening.…(Brecht on Theatre, Hill and Wang, 1977) என்பதை எழுதிய இளம்வயது [Gerhart] Hauptmann ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

மேலும் அவருடைய இதழில் 1950-ல் அவர் எழுதிய ஒரு குறிப்பில், லென்ஸின் The Tutor (கிழக்கு ஜேர்மனியில் இதில் அவர் நடித்தார்) "நடிகர்கள் யதார்த்தவாதத்திலும், அதனோடு சேர்ந்து சிறந்த பாணியிலும் நடிக்க பயில்வதற்கு சிறந்த தேர்வாக தெரிகிறது. இது ஷேக்ஸ்பியரை நோக்கி செல்வதாகும், அதாவது மீண்டும் அவரை நோக்கி திரும்புவதாகும்; இது ஜேர்மனியில் பெருமளவிற்கு புரிந்து கொள்ளப்பட்டது" (இதழ் 1934-1955, Routledge, 1995).

பிரெஸ்ட் அவரின் சொந்த படைப்பான ''குழந்தைகொலையாளி மேரி ஃபாரர்''("Of the infanticide Marie Farrar" - Von der Kindesmörderin Marie Farrar-1920) என்பதில் சிசுக்கொலையைக் கையாண்டார், அதன் இறுதி வரிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

"Marie Farrar: month of birth, April
Died in the Meissen penitentiary
An unwed mother, judged by the law, she will
Show you how all that lives, lives frailly.
You who bear your sons in laundered linen sheets
And call your pregnancies a ‘blessed' state
Should never damn the outcast and the weak:
Her sin was heavy, but her suffering great.
Therefore, I beg, make not your anger manifest
For all that lives needs help from all the rest."

செய்யுள் வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Sidney H. Bremer, 1913-1956, Methuen, 1976. (back)