World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா 500,000 Portuguese public sector workers set to strike 500,000 போர்த்துக்கல் பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர் By Paul Mitchell PS எனப்படும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வியாழனன்று பொதுத்துறை வேலை நிறுத்தத்தில் போர்த்துகல்லின் 500,000 பொதுத்துறை தொழிலாளர்கள் பங்கு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்ததை ஈடு செய்யும் வகையில் மக்களின் பரந்த அடுக்குகளின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் குறைக்கும் நோக்கத்தை கொண்டவிதத்தில் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. அதிக கடன், தேவையான சமூகத் தாக்குதல்களை நடத்துவதற்கு அதிக தாமதம் எடுக்கும் பொருளாதாரங்கள் நிதியச் சந்தைகளின் தாக்குதலுக்கு உட்படுகின்றன. போர்த்துக்கல், இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகள்--இழிவுடன் செய்தி ஊடகத்தால் "PIGS" என்று அழைக்கப்படுபவை--வங்கிகளாலும், நிதிய ஊகக்காரர்களாலும் இலக்கு வைக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தால் அதன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3 சதவிகிதத்தில் இருந்து 2013-க்குள் 3 ஆகக் குறைக்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஆணையம் கணித்துள்ள கடந்த ஆண்டு 77 சதவிகிதத்தில் இருந்து 2011-ல் பொருளாதார உற்பத்தியில் 91 சதவிகிதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் அதன் பொதுக் கடனை சமாளிக்கவும் கோரப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியில் போர்த்துகீச சோசலிஸ்ட்டுக்கள், கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் இருக்கும் சக சமூக ஜனநாயகக் கட்சியினரை போலவே போர்த்துகீச சோசலிஸ்ட்டுக்களும் போர்த்துகீச முதலாளித்துவம், உலக நிதிய நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடிக் கருவி என்று நிரூபித்துக் கொண்டுள்ளனர். PS கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வெட்கமற்று துணை போகிறது. அதன் தற்போதைய திட்டங்களில் ஒரு மூன்றாண்டு ஊதிய முடக்கம், ஓய்வூதியச் "சீர்திருத்தங்கள்", கடுமையான பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், எஞ்சியிருக்கும் அரசாங்க சொத்துக்களையும் தனியார் மயமாக்குதல் ஆகியவை உள்ளன. இந்த நடவடிக்கைகள் PS- ன் உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்படுமுன் பாராளுமன்றத்தில் மார்ச் 12-ல் இசைவிற்காக அளிக்கப்பட உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள CGTP எனப்படும் போர்த்துகீச தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் Common Front , மார்ச் 4-ம் தேதி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, தொழிலாளர்கள் தங்கள் சீற்றத்தை வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. இதையொட்டி அரசாங்கத்திற்கு கால அவகாசம் கிடைக்கும். UGT எனப்படும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம், போர்த்துகல்லின் இரண்டாவது மிகப் பெரிய தொழிற்சங்கம், மரபார்ந்த முறையில் PS உடன் பிணைந்தது, இதே காரணத்திற்காகத்தான் வேலைநிறுத்த அழைப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. PS- ஐ தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்பதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்/அல்லது ஊக வணிகர்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சித்தரிக்கின்றன. பொது முன்னணியின் தலைவர் Ana Avoila வியாழனன்று தொழிற்சங்கங்களால் முடியும் என்றால், மே மாதம் குறிப்பிடப்படாத தேதியில் ஒரு "பெரிய தேசிய ஆர்ப்பாட்டம்" நடத்தப்படும் வரை, அடுத்த நடவடிக்கை பிராந்திய தலைநகரங்களுடன் நிறுத்தப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்--அந்த காலத்திற்குள் உறுதித்தன்மை, வளர்ச்சி திட்டம் முழுவீச்சில் இருக்கும்.OGTP தலைவரும் PCB உறுப்பினருமான Carvalho de Silva ஒரு நாடு தழுவிய போராட்டத்தின் வாய்ப்பை, பொது மற்றும் தனியார் தொழிலாளர்கள் இணைந்து நடத்துவது பற்றிக் கூறும் விதத்தில், "கிரேக்கத்திற்கு இது போன்ற ஒரு ஆர்ப்பாட்டம் தேவை" என்றார். ஆனால் தான் அழைப்புவிடத் தயாரில்லை என்பதோடு தேதியையும் குறிக்கவில்லை.UGT தலைவர் Joao Proenca அரசாங்கம் இந்த ஆண்டு முடக்கத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விரிவுபடுத்த முயற்சித்தால் இன்னும் அதிக வேலைநிறுத்தங்கள் ஏற்படும் என்றார். அரசாங்கத்தின் திட்டம் "கடுமையாக, சமூகத்தில் ஏற்கப்பட முடியாது என்றால், அரசியல் மற்றும் சமூக தீவிரமயமாதலின் ஆபத்து உறுதியாக இருக்கும்" என்று ப்ரோன்கா எச்சரித்தார்.அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது, ஏற்கனவே அரசியல் மற்றும் சமூக தீவிரமயமாதலை எதிர்கொண்டுள்ளது. பாராளுமன்றக் கட்சிகளுக்கும் குறிப்பாக PS-க்கும் மிகப் பெரிய ஆதரவுச் சரிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பின் ஆய்வுப்படி, போர்த்துகீச மக்களின் 19 சதவிகிதத்தினர்தான் பாராளுமன்றம் இக்காலத்திற்கும் பொருத்தமானது என்று நம்புகின்றனர். கடந்த வார இறுதியில் நடந்த கருத்துக் கணிப்பு ஒன்று PS பிரதம மந்திரி ஜோசே சோக்ரடிஸின் செல்வாக்கு ஒரு சில வாரங்களிலேயே ஜனவரி மாதம் 40.3 சதவிகிதம் என்பதில் இருந்து 29.4 சதவிகிதத்திற்கு சரிந்துவிட்டது, அதே நேரத்தில் PS-க்கு மொத்தத்தில் 40.5 என்பதில் இருந்து 35.9 எனக் குறைந்துவிட்டது என்று காட்டியுள்ளது. PS-க்கு அடிமைத்தனமாக ஆதரவு கொடுத்த PCP தன் ஆதரவுத் தளத்தில் 8.5-ல் இருந்து 6.8 சதவிகிதம் என்ற சரிவைக் கண்டது. இந்தச் சரிவில் ஆதாயத்தை இடது முகாம் அடைந்துள்ளது. அதன் மக்கள் ஆதரவுத் தளம் 10.6 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. இதில் பல குட்டி முதலாளித்துவ கட்சிகள் உள்ளன. அதில் PSR எனப்படும் புரட்சிகர சோசலிசக் கட்சி, பப்லோவாத ஐக்கிய செயலகத்தை சேர்ந்தது--இது ட்ரொட்ஸ்கிசவாதத்தை பின்பற்றுவதாக கூறிக் கொள்ளுவது, ஆனால் நீண்டகாலமாக சீர்திருத்தவாதம் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச கட்சிகளுக்கு அரசியல் மறைப்பை கொடுத்துள்ளது. ஐக்கிய செயலக உறுப்பினர்கள் சர்வதேச அளவில் (உதாரணத்திற்கு இத்தாலியிலும், பிரேசிலிலும்) தொழிலாள வர்க்கத்தின்மீது முக்கிய தாக்குதல்களை நடத்திய பல போலி இடதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் அல்லது அவர்களோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். இடது முகாம் ஆதரிக்கும் கொள்கைகள் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட கீன்சிய வகைச் சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவு என்ற வகையில் உள்ளவை. அமைப்பின் அரசியல் குழுவின் தலைவர் மற்றும் PSR தலைவரான பிரான்ஸிஸ்கோ லெளகா கடந்த வாரம், தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கு பதிலாக "அரசாங்கம் சமூகநலச் செலவுகளை குறைத்தல், ஊதியத்தை குறைத்தல்" என்ற தவறான கொள்கையை கடைப்பிடிக்கிறது என்று குற்றம் சாட்டினார். ஐரோப்பா தழுவிய நிதி ஒன்றானது எளிதாக கடன் கொடுப்பதற்குத் தேவை, பொது-தனியார் பங்காளித்தனம் பற்றிய மறு பேச்சுவார்த்தைகள், வீடுகள் விலையைக் குறைத்தும் பொதுச் சேவைகளையும் குறைத்து மறைமுகமாக ஊதியத்தை உயர்த்துதல், வரி ஏய்ப்பை பிடித்தல் என்ற விதத்தில் ஆகியவை வேண்டும் என்று அவர் கூறினார். மனத்தளர்ச்சி தரும் வகையில் "பொருளாதாரப் பேரழிவு மற்றும் வேலையின்மைக்கு நாம் கொடுக்க முடியாத ஒரே மாற்று விட்டுவிட முடியாததுதான்" என்று அவர் முடிவாகக் கூறினார். தொழிற்சங்கங்களானது PS-க்கு பெப்ருவரி 2005-ல் அது அதிகாரத்திற்கு வந்தபோது முழுமையாக ஆதரவைக் கொடுத்தன. Petro Santana Lopes இன் வலதுசாரி சமூக ஜனநாயக மற்றும் மக்கள் கட்சிக் கூட்டணி அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கும் பரந்த எதிர்ப்பை கொண்டு அகற்றப்பட்டுவிட்டது. PSD-PP கூட்டணி பொதுத்துறை ஊதியங்களை முடக்கிவிட்டது, முதல் தடவையாக வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகைகளை நிறுத்தி விட்டது மற்றும் மதிப்புக்கூட்டு வரியை அதிகரித்துவிட்டது. யூரோப்பகுதியிலேயே பொருளாதாரம் சரிவு பெற்ற ஒரே நாடு போர்த்துக்கல்தான். அது ஐரோப்பிய ஒன்றியத்தின் வறிய நாடுகளில் ஒன்றாக இருந்தது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. வேலையின்மை ஏழாண்டு இல்லாத அளவிற்கு 7 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளதுடன் சராசரி மாத ஊதியம் அற்பமான 750 யூரோ என்று மட்டுமே உள்ளது.சோசலிஸ்ட் கட்சி 45 சதவிகித வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1974-ல் சலாசர்-கேடனோ சர்வாதிகாரம் முடிந்த பின் முதல்தடவையாக ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க முடிந்தது. "வேறு சிறந்த போர்த்துக்கல் வர வாய்ப்புள்ளது" என்ற கோஷத்தில் பிரச்சாரம் செய்த இடது முகாம் அதன் வாக்குகள் 2002-ல் இருந்த 2.8 சதவிகிதத்தில் இருந்து 2005-ல் 6.4 சதவிகிதம் உயர்த்திவிட்டது. லெளகா உட்பட எட்டு பிரதிநிதிகளைப் பெற்றது. PCP மற்றும் பசுமைவாதிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 7.6 சதவிகித வாக்குகளையும் 14 பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே PS நிர்வாகம் ஒரு நெருக்கடி அரசாங்கம்தான். பெயரளவிற்கு இடது கட்சிகள் என்பதற்கு வாக்களித்தவர்களின் விழைவுகளை காட்டிக் கொடுக்க முற்பட்டது. சோசலிஸ்ட்டுக்களும் PSD-PP-க்கு எதிரான மக்கள் சீற்ற எழுச்சியில் ஆதாயம் பெற்றாலும், சோக்ரடிஸ் ஜனரஞ்சக உறுதிமொழிகளான வறுமையைக் குறைத்தல், வேலையை 150,000 அதிகரித்தல் போன்றவற்றைக் கொடுத்தாலும், அவருடைய அரசாங்கம் உடனடியாக மூன்று ஆண்டுகால கடும் சிக்கன நடவடிக்கைகளை தொடக்கியது. இவற்றில் பொதுத்துறை வேலைகள் குறைப்புக்கள், பதவி உயர்வுகள் முடக்கம், ஓய்வூதியத் தகுதி வயதை 60-ல் இருந்து 65-க்கு உயர்த்தியது, நோய்க்கால விடுப்பைக் குறைத்தல், கூடுதல் மதிப்பு வரி அதிகரிக்கப்பட்டது, புகையிலை, எரிபொருள்மீது வரிகள் ஆகியவை அடங்கியிருந்தன. தொழிற்சங்கங்களானது PS அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொதுத் துறை வேலைகள் குறைக்கப்படுவதற்கும் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியல் 6.1 சதவிகிதத்தில் இருந்து 2.6 என்று குறைக்கவும் முக்கிய உதவியை அளித்தன. பொது முன்னணித் தலைவர் அவோய்லா சமீபத்தில் கட்டாயமாக ஒப்புக் கொண்டுள்ளபடி, தொழிலாளர்கள் தங்கள் வாங்கும் சக்தி கடந்த தசாப்தத்தில் எட்டு சதவிகிதம் குறைந்து விட்டது. வேலையின்மை கிட்டத்தட்ட 11 சதவிகிதம் என்று உள்ளது--இளவயதினரிடையே இதைப்போல் இருமடங்கு--என்பதுடன் இன்னும் உயரக்கூடும். PS அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே சர்வதேச நாணய நிதியம் அதை "சமூகப் பங்காளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு" [வணிக, தொழிற்சங்கங்களுடன்] பாராட்டியது. ஆனால் இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று கோரியது. "ஊதியக் கட்டுப்பாட்டின் மத்திய பங்கு" நன்கு உணரப்பட வேண்டும், தொழிலாளர் சந்தை இன்னும் வளைந்து கொடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. தொழிற்சங்கங்கள் இக்கோரிக்கையை உவந்து கேட்கின்றன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பை கட்டுப்படுத்தி அதைக் காட்டிக் கொடுத்தால்தான் அது செயல்பட முடியும். |