WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greece: Papandreou announces deeper budget cuts
கிரேக்கம்: இன்னும் தீவிர வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை பாப்பாண்ட்ரூ அறிவிக்கிறார்
By Stefan Steinberg
4 March 2010
Use this version
to print | Send
feedback
சர்வதேச வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU)
ஆழ்ந்த அழுத்தங்களுக்கு தலை வணங்கி,
PASOK என்னும்
சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் வரிகள் அதிகரிப்பு, சமூகச்
செலவுகள் குறைப்பு என்று மொத்தம் 4.8 பில்லியன் யூரோக்கள் ($6.5 பில்லியன்) இரண்டாவது திட்டப்
பொதிக்கு ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய அரசாங்கத்தின் சமீபத்திய கடும் சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்
விதத்தில் பாப்பாண்ட்ரூ கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியை "ஒரு போர்க்கால நிலைமைக்கு" ஒப்பிட்டார்.
"இந்த முடிவுகள் நாடும் மற்றும் பொருளாதாரங்கள் தப்பிப் பிழைக்க தேவையாகும்"
என்று நிருபர்களிடம் பாப்பாண்ட்ரூ: "இதையொட்டி கிரேக்கமானது ஊக வணிகர்கள், அவதூறுகள் இவைகளிடம்
இருந்து வெளியேறமுடியும். நாம் சுதந்திரமாக சுவாசித்து போராடி முன்னேறலாம்" என கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் தனக்கு முன்பிருந்த கோஸ்டாஸ் கரமன்லிஸ்ஸின் வலது
சாரி சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் சீற்றத்திற்கு முறையிட்டு பாப்பாண்ட்ரூ அதிகாரத்திற்கு வந்தார்.
இப்பொழுது அதிகாரத்திற்கு வந்த ஆறு மாதங்களுக்குள் பாப்பாண்ட்ரூ தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்
தரங்கள்மீது நீண்டவிளைவுகள் உடைய தாக்குதல்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
புதனன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்த நடவடிக்கைகளில் விற்பனை வரிகளானது
19-ல்
இருந்து 21 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டது, பொதுத்துறைப் பணிகளுக்கு 10 சதவிகிதம் ஊதியங்களில் வெட்டுதல்,
எரிபொருள், சிகரெட்டுக்கள், மதுபானம் ஆகியவற்றின் மீது கூடுதல் வரிவிதிப்புக்கள், ஓய்வூதிய கொடுப்பனவில்
முடக்கம் மற்றும் அரசாங்க ஊழியர்களின் விடுமுறை போனஸில் குறைப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைவூதியத் தொழிலாளர்கள்,
வேலையற்றவர்கள், குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகிய பிரிவுகளுக்கு பெரும் பாதிப்பு விளைவுகளைத்
தரும்.
புதிய கிரேக்க கடும் சிக்கன பொதியைப் பற்றி குறிப்பிட்டு ஐரோப்பிய ஆணையத்தின்
தலைவரான Jose Manuel Barroso
இத் திட்டம் கிரேக்க அரசாங்கம் அதன் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு
"தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்றார்.
பல வாரங்கள் முறையாக மதிப்பு சரிந்தபின் யூரோவானது புதிய நடவடிக்கைகள்
எடுக்கப்படுவது அறிவிக்கப்பட்டபின் டாலருக்கு எதிராக மதிப்பில் உயர்ந்தது. முக்கிய நிதிய நிறுவனங்களும் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கையுடன் ஒப்புதல் கொடுத்துள்ளன. கடன் தரம் அளிக்கும் நிறுவனம்
Standard & Poor's
ஏதென்ஸின் கடன் நிலைமை தொடர்பாக சந்தைகள் அதிக அவநம்பிக்கை
கொண்டிருந்தன என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனால் மறுபுறத்தில் கிரேக்க பங்குச் சந்தையில் பங்குகள் நிதானமான சரிவைப்
பதிவு செய்தன. முதலீட்டாளர்கள் குறைப்புக்களின் விளைவானது வணிக நலன்களுக்கு எப்படி இருக்குமோ என்ற
அச்சத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தின் புதிய சுற்று வெட்டுக்களானது ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஒன்றுபட்ட நடவடிக்கையினாலும் வங்கிகளின் நலன்களானது ஜேர்மனி தலைமையில் ஐரோப்பிய அரசாங்கங்கள்
ஏதென்ஸை விரைவில் கூடுதல் சிக்கன நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ள அழுத்தம் கொடுத்ததால் வந்துள்ளன.
திங்களன்று ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார, நிதியத் துறை ஆணையர்
Olli Rehn
ஏதென்ஸில் பேச்சுக்களுக்கு பின்னர் கிரேக்கம் "உங்கள் நாட்டில் வருங்காலம் பற்றி ஒரு நெருக்கடி கட்டத்தை
எதிர்கொள்கிறது. யூரோப் பகுதியில் எந்த உறுப்பு நாடும் நிரந்தரமாக வருமானத்திற்கு மீறி வாழ முடியாது."
என்றார். தனிப்பட்ட பேச்சுக்களில் ரெஹ்ன் அரசாங்கம் இன்னும் விரைவாக செயல்பட்டு கிரேக்கம்
பற்றாக்குறைகளை குறைத்து கடன்களை அடைக்கும் அதன் விருப்பத்தை நிதியச் சந்தைகளுக்கு தெரிவிக்காதது பற்றி
குறைகூறினார்.
ரெஹ்னுடைய கருத்துக்கள் பேர்லினில் உடனடி வரவேற்பைப் பெற்றன. "பந்து இப்பொழுது
கிரேக்கத்தின் பக்கம் உள்ளது" என ஜேர்மனிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் செவ்வாய் இரவு அரசாங்க மந்திரிகள்
கூட்டத்தைக் கூட்டி கிரேக்கத்திற்கு நெருக்கடிக் கால மீட்புப் பொதி கொடுப்பதற்கு உடன்பாடு பெறும் வாய்ப்பை
ஆராய்ந்தார். உத்தியோகபூர்வமாக ஜேர்மானிய அரசாங்கம் கிரேக்கத்திற்கு உதவும் என்பது
மறுக்கப்பட்டபோதிலும், ஐரோப்பிய மந்திரிகளும் வங்கியாளர்களும் தீவிர திரைக்குப் பின் பேச்சுவார்த்தைகளை
அத்தகைய அவசர திட்டத்திற்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
EU மற்றும் ஜேர்மனிய
அரசாங்கங்கள் பாப்பாண்ட்ரூ அரசாங்கம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் திவாலை நிறுத்தப் போதாது என்று
கவலை கொண்டுள்ளன. கிரேக்க அரசாங்கம் கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுப்பதில் தவறு ஏற்பட்டால்,
அது திவால் அறிவிப்பிற்கு வகை செய்வதுடன் மற்றய ஐரோப்பிய நாடுகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்தும் என்று
அஞ்சப்படுகிறது. அத்தகைய போக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு நாணயமான யூரோவை அச்சுறுத்துவதோடு
ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அச்சுறுத்தலைக் கொடுக்கும்.
மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி பகிரங்கமாக பிணை எடுப்புப்
பொதி பற்றிய எந்தத் திட்டத்தையும் அறிவிக்க தயங்குகின்றன. ஏனெனில் இது கிரேக்கத்திற்கு வங்கிகள் கோரும்
கடுமையான குறைப்புக்களை செயல்படுத்தும் அழுத்தத்தை குறைத்துவிடும். இதைத்தவிர ஐரோப்பிய வங்கிகளுக்கு மகத்தான
பிணையெடுப்பை செய்த பின்னர் கிரேக்கம் கொண்டுள்ள கடன்களுக்கு பிணை எடுப்புத் திட்டம் நிதிய நெருக்கடிக்கு
என்பது ஐரோப்பிய மற்றும் ஜேர்மனிய வாக்காளர்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தும். இதன் விளைவாக
ஜேர்மனிய அரசாங்கம் பொதுப் பார்வையில் இருந்து ஒதுங்கிய விதத்தில் ஒரு மீட்பு பொதிக்கு ஏற்பாடு செய்ய
பேச்சுக்களை நடத்துகிறது.
ஒரு முக்கிய நிதிய பகுப்பாய்வாளர் கருத்துப்படி, கிரேக்க அரசாங்கங்கள்
கோடிட்டுள்ள குறைப்புக்கள், "சந்தைகளுக்கு ஏற்றம் கொடுத்தள்ளன. ஏனெனில் அவை கிரேக்கம் அதன்
பற்றாக்குறையை குறைப்பதில் தீவிரம் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன. மற்றய யூரோப் பகுதி
நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியபடி நடவடிக்கைகளை ஏதேன்ஸ் எடுத்துள்ளது என்று தங்கள் வரி
செலுத்துபவர்களுக்கு கூறுவது எளிதாகும்."
அதே நேரத்தில், ஒரு பிணை எடுப்புத் திட்டம் பற்றி ஆழ்ந்த பிளவுகள்
உள்ளன--குறிப்பாக இவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டுமா
அல்லது அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின்
(IMF) உடைய
இருப்புக்களை தளம் கொள்ள வேண்டுமா என்பதாகவுள்ளது. பின்னையதோ வாஷிங்டன் யூரோ விவகாரத்தில் ஒரு
பங்கைக் கொள்ளும்படி திறமையுடன் செய்துவிடும்.
செவ்வாய் வரை எந்த இறுதி முடிவுத் திட்டம் பற்றியும் எடுக்கப்படவில்லை. ஆனால்
ஐரோப்பிய தளத்தைக் கொண்டு மீட்பு பொதி அநேகமாக வரலாம் என்று பைனான்ஸியல் டைம்ஸ்
கூறியுள்ளது.
புதனன்று மேர்க்கெல் பாப்பாண்ட்ரூ அறிவித்த வெட்டுக்களை வெளிப்படையாக
வரவேற்றார். அவர் பேர்லினுக்கு வெள்ளியன்று ஜேர்மனிய அரசாங்கத்துடன் கூடுதல் பேச்சுக்கள் நடத்த
பயணிக்கிறார்.
சந்தைகளும் ஐரோப்பிய ஒன்றியமும் சமீபத்திய சுற்று வெட்டுக்கள் ஏதென்ஸில் அறிவிக்கப்பட்டவை
குறித்து சாதகமாக விடையுறுத்துள்ளபோது, நிதிய மூலோபாய வல்லுனர்கள் இவை இன்னும் மிகக் கடுமையான வரவு-செலவு
திட்டக் குறைப்புக்கள் அண்மையில் கொண்டுவரப்படுவதின் தொடக்கம்தான் என்று கூறுகின்றனர்.
கிரேக்கத் தொழிற்சங்கங்களின் அரசியல் ஆதரவு இல்லாமல், பாப்பாண்ட்ரூ இத்தகைய
காட்டுமிராண்டித்தன வெட்டுக்கள் பற்றி சிந்திக்கவும் முடியாது. கடந்த வாரம் புதனன்று நடந்த வேலை நிறுத்தத்திற்குப்
பின்னர், கிரேக்கத்தின் இரு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்குள் அவை "வலியை பகிர்ந்து கொள்ள" தயார்
என்று கூறின. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் தங்கள் கோபங்களை குறுகிய வேலைநிறுத்தங்கள் மூலம் காட்ட
அனுமதிக்கின்றன. பாப்பாண்ட்ரூவின் கொள்கைகளுக்கான எதிர்ப்பு தேசியவகைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
WSWS- க்கு கொடுத்த பேட்டி
ஒன்றில் GSEE (General Confederation of
Greek Workers--கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக்
கூட்டமைப்பு) செய்தித் தொடர்பாளர் ஸ்டாடிஸ் அனெஸ்டிஸ், "கூட்டமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இந்த அரசாங்கம்
தேர்ந்தெடுக்கக்பட்டதற்கு ஆதரவு கொடுத்தன. எங்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதில் விருப்பம் இல்லை." என்றார்.
CNN- க்கு கொடுத்த பேட்டி ஒன்றில்
ADEDY (அரசாங்க
ஊழியர்கள் கூட்டமைப்பு) உடைய சர்வதேச செயலர்
Vasileios Xenakis சமீபத்திய குறைப்புக்கள் "சமசீரற்றவை"
என்று விவரித்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை வகைளில் சேர்க்கப்படாவிட்டால் ஒரு சமூக பேரழிவு ஏற்படும்
என்று எச்சரித்தார்.
வேறுவிதமாகக்கூறினால், ஜேனகிஸ்ஸும் மற்றய கிரேக்க தொழிற்சங்கங்களும்
வெட்டுக்களை நிராகரிக்கவில்லை. மாறாக சமூக எதிர்ப்பை குழப்பும் வழிவகையாக அவை
செயல்படுத்தப்படுவதற்கு தங்களது சேவையை செய்கின்றன. |