World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிStudy shows steep rise of poverty in Germany ஜேர்மனியில் வறுமை தீவிரமாக உயர்வதை ஆய்வு காட்டுகிறது By Elizabeth Zimmermann ஜேர்மனியில், கடந்த சில ஆண்டுகளில் வறுமையும், வறுமையில் மூழ்கும் அபாயமும் மிகவும் தீவிரமாகியுள்ளன. பெப்ருவரி 17ம் தேதி German Institute for Economic Reseasrch (DIW) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முடிவுதான் கூறப்பட்டுள்ளது. DIW நிர்ணயித்துள்ள அளவுகோல்படி மொத்த மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு அல்லது 14 சதவிகிதமானோர் 2008ம் ஆண்டில் வறுமையில் வாழ்ந்தனர் அல்லது வறுமையின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டனர். 1999 ல் ஒப்பிடத்தக்க வறுமைத் தரம் 10.3 சதவிகிதம் என்று இருந்தது. இதன் பொருள் கடந்த 10 ஆண்டுகளில் வறுமை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகமாகிவிட்டது என்பதாகும். அதே நேரத்தில், இப்புள்ளிவிவரங்கள் 2008 ஆண்டுவரைதான் தகவல்களை கொடுக்கின்றன. கடந்த ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதிய, பொருளாதார நெருக்கடியை ஒட்டி இந்த விகிதம் கணிசமாக உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.DIW ஆய்வு இந்த வறுமைக்கான அளவுத் தரங்களை ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் இருந்து ஏற்றுள்ளது. அதன்படி அந்தந்த நாட்டின் சராசரி வருமானம் என்பதில் 60 சதவிகிதத்திற்கும் குறைவாக உடையவர்கள் அனைவரும் வறுமையில் இருப்பவர் என்று கொள்ளப்படும். இந்த அடிப்படையில் DIW ஒவ்வொரு ஆண்டும் தனியார் இல்லங்களில் இருந்து SOEP எனப்படும் ஜேர்மனிய சமூகப் பொருளாதார குழுவின் பின்னணியில் தகவலை சேகரிக்கிறது. இந்த இல்லத் தள ஆய்வு 1984ம் ஆண்டு தொடக்கப்பட்டது. இது அனைத்து இல்ல உறுப்பினர்களின் தரத்தையும் ஒவ்வொரு ஆண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.குழந்தைகளும் இளைஞர்களும் குறிப்பாக வறுமையால் பெரும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர். 19ல் இருந்து 25 வயதுவரை இருக்கும் இளைஞர்களில் கால் பகுதியினர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இந்தப்பிரிவு கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வறுமை அனுபவத்தை (6 சதவிகிதத்திற்கும் அதிகமாக) பெற்றுள்ளது. DIW ஆய்வு இந்த வறுமை அதிகரிப்பிற்கு மூன்று முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளது. பயிற்சிக்காலம் அதிகரித்துள்ளது, கல்லூரிப் பட்டதாரிகளின் விகிதத்தில் அதிகரிப்பு ஆகியவை தொழில் வாழ்க்கையில் நுழைவதை தாமதப்படுத்துகின்றன; குறைந்த ஊதிய பயிற்சிக்காலம், இன்னும் பிறவகை நிலையில்லாத வேலைகள் (தற்காலிக/அல்லது குறைந்த ஊதியம்); மூன்றாவதாக, பெற்றோர் வீடுகளில் இருந்து முன்னதாகவே தனியாக குடிபெயரும் போக்கு வளர்ந்துள்ளது.இந்தக் கடைசி போக்கின் வளர்ச்சியுடன் பிணைந்திருப்பது "ஒற்றை மற்றும் ஒற்றைப் பெற்றோர் இல்லங்களின்" வளர்ச்சியும் ஆகும். பிந்தயை பிரிவில் 7 சதவிகித வளர்ச்சி 1998ல் இருந்து காணப்படுகிறது. தனியாக வாழும் இளம் வயதுவந்தோர் வறுமை விகிதம் 2008ல் 65 சதவிகிதம் ஆக இருந்தது." மேற்கூறிய சராசரி வறுமை நிலையினால் பாதிக்கப்பட்ட மற்ற பிரிவினர் குழந்தைகளுடன் இருக்கும் ஒற்றைப் பெற்றோர்கள் (40 சதவிகிதம்), மற்றும் இரு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பங்களாகும். மூன்று குழந்தைகள் கொண்ட இல்லங்களுக்கு வறுமை ஆபத்து என்பது 22 சதவிகிதம் ஆகிவிட்டது, நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை உடைய இல்லங்களுக்கு அது 36 சதவிகிதம் என்று உள்ளது. மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட ஒற்றைப் பெற்றோர் இல்லங்களின் வறுமைத்தரம் 50 சதவிகிதம் உயர்ந்து விட்டது. ஆய்வில் இதன் இணை ஆசிரியர் Joachim R. Frick கொடுத்த பேட்டி ஒன்றும் உள்ளது. அதில் அவர் உயர்ந்த அளவு வேலையின்மை குறிப்பிடத்தக்க வகையில் வறுமை அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் என்று மேற்கோளிட்டுள்ளார். அவர் மேலும் கூறுவது: "அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வருமான வேலை உள்ள நபர்களிடையேயும் பெருகிய முறையில் வறுமை ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறைவூதியத்துறை விரிவாக்கம் மற்றும் நிலையற்ற வேலைகள் வகைப் பெருக்கம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது." மேற்கு ஜேர்மனியின் 13 சதவிகிதத்துடன், கிழக்கு ஜேர்மனியில் ஒப்புமையில் அதிக வறுமை விகிதம் (19 சதவிகிதம்) இருப்பதற்கு காரணம் நீண்ட காலமாக கிழக்கில் நீடித்த அதிக வேலையின்மை விகிதத்தினால்தான். அதேபோல் DIW ஆய்வுப்படி, கிழக்கில் வருமானத்திற்கான மாற்று வகைகளுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்பதும் ஒரு காரணம் ஆகும் (உதாரணமாக முதலீட்டின்மூலம் பெறப்படும் வருமானம்). ஐரோப்பிய ஒன்றியப் பகுதிகள் இல்லாதவற்றில் இருந்து வந்து குடியேறியவர்களும் அதிக வறுமை ஆபத்து விகித்திற்கு உட்பட்டுள்ளனர். DIW ஆய்வின் ஆசிரியர்கள் ஹார்ட்ஸ் பொதுநல விரோதச் சட்டங்கள் பற்றி வெளிப்படையான குறைகூறல் கூறவில்லை. அவர்கள் குறைவூதிய துறை (ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்கள் இந்த விளைவுதான் வரவேண்டும் என விரும்பினர்) வறுமை விரிவாக்கத்திற்கு வகை செய்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத்தவிர ஆய்வு கூறுகிறது: "வேலைத் தீவிரம் குறைவாக இருக்கும் இல்லங்கள் (அதாவது ஒரு முழு நேரத்தில் பாதி நேரத்திற்கும் குறைவு என்ற வேலைகள்) பெருகிய முறையில் முறையான ஊதியமற்ற வேலைகள் இல்லாத குடும்பங்களில் காணப்படும் வறுமைத் தரங்களை நெருங்குகின்றன."உண்மையில் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் இருந்த சமூக ஜனநாயக-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஹார்ட்ஸ் விதிகள்தான் குறைவூதியத்துறை வெடித்தெழுந்துள்ளதற்கும் வறுமை பெரிதாகிவிட்டதற்கும் முக்கிய பொறுப்பாகும். கடந்த ஆண்டை ஒட்டி, குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பில் 6.5 மில்லியன் இருந்தனர், இந்தப் போக்கு உயர்கிறது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) அங்கேலா மேர்க்கெலின் தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கூட்டணி இப்போக்கைத் தொடர்கிறது. மேலும் ஓய்வூதிய வயதினை 65ல் இருந்து 67 க்கு உயர்த்திய விதத்தில், வரவிருக்கும் ஆண்டுகளில் ஓய்வூதியம் பெறுபவர்களிடையே வறுமை வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றது. அதே நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கம் வங்கிகளுக்கு அவை ஆரம்பித்துவைத்த நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றுவதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைக் கொடுத்துள்ளது. "கடன் தடை" என்பதையும் அரசியல் அமைப்பில் சேர்த்துள்ளது. இதன்படி வரவிருக்கும் அரசாங்கங்கள் நாட்டின் மிகப் பெரிய கடன்களை பெரும்பான்மையான மக்களின் மீது காட்டுமிராண்டித்தன தாக்குதல்களை நடத்தும் கட்டாயத்திற்கு உட்படுகின்றன. துணை அதிபர் கீடோ வெஸ்டர்வெல்ல வேலையில்லாதவர்களையும் ஹார்ட்ஸ் IV உதவி நிதி பெறுபவர்களையும் தாக்கியிருக்கும் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் தொலைவிளைவுடைய தாக்குதல்களுக்கு தயாரிப்பு நடத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இப்பொழுது பேர்லினில் உள்ள அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள சேமிப்புத் திட்டம் தவிர்க்க முடியாமல் வேலையின்மையை வியத்தகு அளவில் அதிகரிக்கும். மேலும் நாட்டின் சமூகநல செலவுகளில் பேரழிவான குறைப்புக்களுக்கு உட்படுத்தும். அதனால் வறுமைத் தரங்கள் இன்னும் அதிகமாகும். |