World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSEP public meeting in Colombo to launch election campaign தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க சோ.ச.க. கொழும்பில் பொதுக் கூட்டம் நடத்துகிறது 2 March 2010 சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் (ஐ.எஸ்.எஸ.ஈ.), ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியின் பிரச்சாரத்தை தொடக்கி வைப்பதற்காக மார்ச் 5 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, காலி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 58 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அடுத்து வரும் அரசாங்கம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் பூராவும் கட்டவிழ்ந்து வரும் கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்கொள்வதற்கு மாறாக, இலங்கை குறிப்பாக அதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதிக்கும் மேலாக குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது. இது உயர்ந்த வரிகள் விதிப்பதற்கும் சமூக சேவைகள் மற்றும் மானியங்களை வெட்டித் தள்ளுவதற்கும் வழி வகுக்கும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அண்மையில் எதிர்க் கட்சிகள் மீது பாய்ந்தது, தொழிலாள வர்க்கத்துடனான மோதலுக்கான தயாரிப்பாகவே ஆகும். அவர் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தனது "பொருளாதார யுத்தத்தில்", தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகள் அனைத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்துகிறார். எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) அரசாங்கத்துடன் அடிப்படையில் வேறுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இராஜபக்ஷவை போல், அவையும், தீவின் துன்பகரமான உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாக இருந்த மற்றும் இப்போது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீது அழிவுகரமான தாக்குதலை தொடுக்கும் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க அவர்களை அணிதிரட்டுவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றது. எமது வேட்பாளர்கள், தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக -ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை- தொழிலாளர் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கப் போராடுகின்றனர். நாம் எங்களது கூட்டத்திற்கு வருகைதருமாறும் இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு 7. காலம்: மார்ச் 5, வெள்ளிக் கிழமை, மாலை 4 மணிக்கு. |