WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Spending cuts in Britain worst since World War II
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் மோசமான சமூக நலச் செலவு வெட்டுக்கள்
By Chris Talbot
28 June 2010
Back to screen version
இங்கிலாந்தின் கூட்டணிக் கட்சியின் வரவு-செலவுத் திட்ட அளவீடுகள் குறித்து விரிவான ஆய்வை நடத்திய பின்னர் The Institute for Fiscal Studies (IFS), “நாடு இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், மிக நீண்ட, ஆழ்ந்த, தொடர்ந்த பொதுப் பணிச் செலவு வெட்டுக் காலத்தை முகங்கொடுக்கிறது” என்று கூறியுள்ளது. ஒரு பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பொது நலச் செலவு வெட்டுக்களை திட்டமிட்டு முன்வைத்துள்ளது இது தான் முதல் தடவையாகும்.
கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் அலங்காரச் சொற்களான “ஏழைகளை விட செல்வந்தர்கள் அதிக வேதனையை உணர்வர்” என்ற கூற்றை மறுக்கும் வகையில், “2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சீர்திருத்தங்களை காண்போமாயின் அவை வறியவர்களைப் பெரிதும் தாக்கும் என்பதுடன், உண்மையில் இனி ஒவ்வொரு ஆண்டும் இன்னும் அதிகமாகத் தொடர்ந்து தாக்கப் போவதை உணர்வீர்கள்” என்று கூறியுள்ளது.
மேலும், “பொதுப் பணிகளுக்கு வரவிருக்கும் செலவு வெட்டுக்கள்….செல்வந்தர்கள் இல்லங்களை விட வறியவர்களின் குடும்பங்களைக் கணிசமான அளவு கடுமையாகத் தாக்கும்” என்றும் IFS கூறியுள்ளது.
வரவு-செலவுத் திட்ட விவரங்களைக் கூறும் கருவூலச் சிவப்பு புத்தகத்தில் உள்ள சிறிய எழுத்துக்களின் உட்குறிப்புக்களை வல்லுனர்கள் ஆராய்ந்தபின், தங்கள் வீடுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் வெளியேறும் நிலை உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 90,000 மக்கள், தனியார் வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டுப்படியை நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் 40 சதவிகிதம் குறைக்கும் திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டு நலன்களை இழப்பர். நூறாயிரக்கணக்கான மக்கள் உள்ளூர் அதிகாரங்களில் இருந்தும் வீட்டுச் சங்கங்களில் இருந்தும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் நலன்கள் மாறுதல்களை ஒட்டி குடும்பத்தர சொத்துக்களில் இருந்து (வீடுகளில் இருந்து) வெளியேறும் கட்டாயத்திற்கு உட்படுவர். வீடுகள் நல மாற்றங்களினால் மொத்தம் மூன்று மில்லியன் மக்கள் பாதிப்பிற்கு உட்படுவர்.
கன்சர்வேடிவ் மதிப்பீடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 725,000 வேலைகள் பொதுத் துறையில் இழக்கப்படும் என்று தெரிவிக்கின்றன. மற்றும் ஒரு 200,000 மக்கள் மதிப்புக்கூட்டு வரி உயர்வினால் (VAT) வேலைகளை இழக்கக்கூடும். தற்போதைய உத்தியோகபூர்வ வேலையின்மைத் தர மொத்தம் 2.51 அல்லது தொழிலாளர் தொகுப்பில் 8 சதவிகிதம் என்று உள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறைந்தது மற்றும் ஒரு மில்லியனை அந்த எண்ணிக்கையில் கூட்டும்.
வேலையின்மை, தகுதிக்குக் குறைவான வேலையில் இருப்பவர்களின் மொத்த உண்மை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது ஆகும். தற்பொழுது முழு நேரப்பணி கிடைக்காததால் ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் பகுதி நேர வேலையில் உள்ளனர்.
துணைப் பிரதம மந்திரியும், லிபரல்-டெமக்ராட் தலைவருமான நிக் கிளெக் BBC யின் Today நிகழ்ச்சியில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிதாயிற்று என்று கூறினார். “ஐரோப்பாவில் நாம் இத்தகைய பொருளாதாரத் தீப்புயலை நம் வாயிற் கதவருகே காண்கிறோம், இதையொட்டி சந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக பல நாடுகளின் மீது பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளன—கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் இப்படி ஒவ்வொரு நாட்டின் கதவும் தட்டப்படுகிறது. இப்பொழுது நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் தான் அடுத்த பாதிப்பாளர்களாகப் போவோம்—சொல்லப்போனால் அத்தகைய சந்தைப் பீதி தான் உள்ளது.
நிழல் மந்திரிசபையின் நிதி மந்திரி அலிஸ்டர் டார்லிங் கூட்டணி வரவு-செலவுத் திட்டத்தை குறைகூறி, அதன் இடர்கள் இங்கிலாந்தை இரட்டை வகை மந்தநிலைக்கு தள்ளியுள்ளதாக எச்சரித்து, தொழிற் கட்சி இத்தகைய கடும் வெட்டுக்களைச் செய்திருக்காது என்றும் கூறினார். இவ் வெட்டுக்களில் பல ஏற்கனவே கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போதே நடைமுறைக்கு வர இருந்தன என்பது தான் உண்மை. தொழிற் கட்சி மொத்தத்தில் 20 சதவிகித வெட்டுக்களைத்தான் திட்டமிட்டிருந்தது. கிட்டத்தட்ட 70 சதவிகித நிதிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொழிற் கட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால், தொழிற் கட்சி நிதிய செல்வத்தட்டை திருப்தி செய்ய தங்கள் திட்டமிட்ட வெட்டுக்களை விரிவாக்கியிருப்பர்.
வரவு-செலவுத் திட்ட நடவடிக்கைகளின் முழுப் பாதிப்பும் அறியப்பட்டவுடன், சந்தைகள் இதற்குச் சாதகமான விடையிறுப்பைக் கொடுத்தன. தர நிர்ணயம் செய்யும் அமைப்பான மூடிஸ் அரசாங்கத்தின் AAA தரத்தை உறுதி செய்து, வரவு-செலவுத் திட்டம் “கடந்த இரு ஆண்டுகளாக இருந்த அரசாங்கத்தின் நிதி நிலையின் கணிசமான சரிவை மாற்றுவதற்கு இது முக்கிய படியாகும்” என்று அறிவித்தது.
பத்திரச் சந்தைகளும் (bond markets) வரவு-செலவுத் திட்டம் பற்றி மகிழ்ச்சி அடைந்தன. 10 ஆண்டுகள் முலாம் பூசப் பெற்றவை இரு அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 3.43 சதவிகிதம் என்று நின்றன. சந்தைகளின் நம்பிக்கைக்குக் காரணம் வெட்டுக்களின் பெரும் அளவு ஆகும். ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் 25 சதவிகித குறைப்பு என்ற ஓஸ்போர்ன் கூறியிருந்தாலும், உண்மையான வெட்டுக்கள் அளவு IFS கருத்தின்படி 33 சதவிகிதமாக இருக்கக்கூடும்.
“புகழ் பெற்றவரோ, இகழ்வுற்றவரோ, பெரு பொதுநல அரசாங்கத்தை கோடாலியால் சாய்க்கும் ஆர்வத்தைக் கொண்டிருந்த மார்கரெட் தாட்சர் கூட, இந்த அளவு வெட்டுக்களை செய்திருக்க மாட்டார்” என்று பைனான்சியல் டைம்ஸில் பிலிப் ஸ்டீபன்ஸ் கருத்துக் கூறியுள்ளார்.
பைனான்சியல் டைம்ஸிலேயே மார்ட்டின் வொல்ப் சுட்டிக்காட்டியுள்ளபடி, இதன் பொருள் உயர் கல்வி, உள்துறை அலுவலகம், நீதித்துறை, போக்குவரத்து, வீட்டுத் துறைகளில் மூன்றில் ஒரு பகுதி வெட்டுக்கள் ஆகும். “இது அரசியல் அளவில் நீடிப்பது கடினம்…. இன்னும் அதிக நலன் வெட்டுக்கள் தேவை என்பது வெளிப்படை. IFS கருத்துப்படி மற்ற துறைகளில் வெட்டுக்கள், உண்மைத் தன்மையில், அரசாங்கம் மற்றும் ஒரு 13 பில்லியன் பவுண்டுகளை பொது நலச் செலவுகளில் அடையாளம் காணமுடிந்தால், “25 சதவிகிதம்தான்” இருக்கும்.
இவை இலையுதிர்கால செலவுப் பரிசீலனையின் போதும் இப்பொழுது திட்டமிடப்படும் பொதுத்துறை ஓய்வூதியங்கள், பொதுத்துறை வேலைகள் பற்றிய பரிசீலனைகளின் போதும் வரும்.
Economist ன் Bagehot கட்டுரை வரவிருக்கும் வெட்டுக்கள் பற்றி எச்சரிக்கை குறிப்புக்கள் கொடுத்ததுடன் அவை பெறக்கூடிய விடையிறுப்பு பற்றியும் கூறியுள்ளன:
“திரு ஓஸ்போர்னின் செலவு வெட்டுக்களுக்கும் வரி உயர்வுகளுக்கும் இடையே உள்ள உயர்ந்த விகிதத்தின் பின்னணியில் மனிதர்கள் உள்ளனர். அவர்களில் பலர் மிக அதிகமாகக் கொடுப்பர்: அதாவது தங்களது வேலைகளையே-- அவர்களில் பலருக்கு இப்பொழுது கொடுக்க வேண்டிய விலை அது என்பது இன்னமும் தெரியாது. ஒரு சர்வாதிகார நாட்டில் ஏராளமான மக்கள் படையெடுப்பார்களுக்கு அல்லது போர்களில் தியாகம் செய்யப்படுவது போல், ஆணையர்களை தொந்திரவு கொடுக்கும் வகையில் பாதிக்கப்படுபவர்கள் ஏதும் செய்வதற்கு இல்லை. பிரிட்டனில், அவர்கள் வாக்களிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் லண்டன் வழியே அணிவகுத்துச் செல்லலாம், வேலைநிறுத்தங்கள், கலகம் மூலம் கூட நாட்டை முடக்க முடியும்.” |