சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China responds to US pressure on the yuan

யுவான் பற்றிய அமெரிக்க அழுத்தத்திற்கு சீனா விடையிறுக்கிறது

By John Chan
25 June 2010

Use this version to print | Send feedback

பெருகிய அமெரிக்க அழுத்தத்தின் நடுவே, சீன அரசாங்கம் அதன் நாணய மாற்று விகித முறை “சீர்திருத்தத்த” முறையை கடந்த வார இறுதியில் அறிவித்தது. இந்த நிலை மாற்றம் சந்தையில் கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மையை அனுமதிப்பதுடன், 2008 ஜூலையில் இருந்து நடைமுறையில் இருந்த யுவானின் டாலருக்கு எதிரான ஒரே மதிப்பையும் முடிவிற்குக் கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கை கனடாவில் இந்த வார இறுதியில் நடக்கவுள்ள G20 உச்சிமாநாட்டிற்கு முன்பு விமர்சனம் வருவதைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கடந்த வாரமோ ஜனாதிபதி ஒபாமா தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்—அது குறிப்பாக சீனா, ஜேர்மனி போன்ற அதிக வணிக உபரிகளைக் கொண்ட நாடுகளை இலக்கு வைத்திருந்தது.

டாலருக்கு எதிராக யுவான் 14 ஆண்டுகள் ஒரே மதிப்பில் நிறுத்தப்பட்டிருந்ததை 2005ல் சீனா அமெரிக்காவில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்த பின் நிறுத்தியது. இது டாலருக்கு எதிரக யுவானின் மதிப்பை 21 சதவிகிதம் படிப்படியாக அதிகரிக்கச் செய்தது. ஆனால் 2008 நடுப்பகுதியில், உலக நிதிய முறை கொந்தளிப்பில் ஆழ்ந்தபோது, சீன மத்திய வங்கி மிகத் திறமையுடன் யுவானை டாலருக்கு 6.82 என்று பழையபடி நிலைநிறுத்தியது. இது சீன ஏற்றுமதிகளின் போட்டித் தன்மையை தக்க வைத்தது. அப்பொழுது முதல் பெய்ஜிங் வாஷிங்டனிடம் இருந்து “வணிக நலன்களைப் பாதுகாக்கும்”, “காப்புவரி முறை கொண்ட” தாக்குதல்களை வாஷிங்டனில் இருந்து பெற்றது. சீனா தன்னுடைய ஏற்றமதியை எப்படியும் அதிகரித்து மாபெரும் அமெரிக்க வணிகப் பற்றாக்குறையை குறைக்க விரும்புகிறது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் ஒபாமா நிர்வாகம் தொடர்ச்சியான கடுமையான வணிக அபராதங்களை சீன எஃகுக் குழாய்கள் மற்றும் பிற பொருட்கள் மீது சுமத்தியபின் இந்த ஆண்டு முன்னதாக அதிகரித்திருந்தன. வாஷிங்டன் மேலும் தைவானுக்குப் பெரிய ஆயுத விற்பனைக்கு ஒப்புதலைத் தூண்டிவிடும் விதத்தில் கொடுத்திருந்தது. சீனாவோ அப்பகுதியை அதன் இறைமைக்கு உட்பட்டதாகத்தான் கருதுகிறது. ஒபாமா பெய்ஜிங்கின் எதிர்ப்புக்களை புறக்கணித்து நாடுகடத்தப்பட்டுள்ள திபெத்திய தலாய் லாமாவையும் சந்தித்தார். அமெரிக்கா சீனாவை ஒரு பொருளாதாரப் போட்டி நாடு என்று மட்டும் கருதாமல், அதன் பெருகிய உலகளாவிய மூலோபாயச் செல்வாக்கு வளர்வதையும் கட்டுப்படுத்த முற்படுகிறது.

ஒபாமா நிர்வாகம் சீனாவை ஒரு “நாணய சூழ்ச்சித் திறனுடைய நாடு” என்று முறையாக ஏப்ரல் மாதம் காங்கிரசில் கொடுக்க இருந்த அறிக்கையில் முத்திரையிட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த நடவடிக்கையில் இருந்து பின் வாங்கியது. ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஈரானுக்கு எதிரான புதிய தடைகளுக்கு பெய்ஜிங்கின் ஆதரவிற்கு ஈடாக வாஷிங்டன் அதை ஒத்திப்போட்டது, அதற்கான உடன்பாடு தோன்றியது என்று கூறப்படுகிறது. இம்மாதம் அத்தீர்மானம் இயற்றப்பட்ட பின்னர் மீண்டும் சீன நாணயப் பிரச்சினை மோதலாக திரும்பியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் சீனா பற்றிய பொருளாதார வல்லுனர் ஈஸ்வர் பிரசாத் பைனான்சியல் டைம்ஸிடம் இந்த வாரம் யுவான் நிலைநிறுத்தலை முடிவிற்குக் கொண்டுவரும் பெய்ஜிங்கின் தீர்மானம் G20 உச்சி மாநாட்டில் வாஷிங்டனின் “இடிமுழக்கத்தை” தகர்த்துவிடும் ஒரு தந்திரோபாய வடிவமைப்பு என்றார். “G20 மேசையில் இருந்து இப்பிரச்சினையை அவர்கள் அகற்றிவிட்டனர். உலக நிதிய உறுதியின் உண்மையான பிரச்சினை என்று அவர்கள் காண்பதின் மீது மறுகுவிப்புக் காட்டுவதற்காக—அதாவது முன்னேறிய பொருளாதாரங்களில், குறிப்பாக அமெரிக்காவில் உயரும் அரசாங்கக் கடன் பற்றி.”

சர்வதேச விடையிறுப்புக்கள் மோசமாகிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் இடையே முக்கிய சக்திகளிடம் அழுத்தம் தீவிரமாகி வருவதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. சீனாவின் நாணய மாற்றுவிகித முறை பற்றிய முடிவை ஒபாமா, “ஒரு ஆக்கபூர்வமான செயல்” என்று விவரித்துள்ளார். ஆனால் அமெரிக்க நிதி மந்திரி டிம் கீத்னர், “எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவில் அவர்கள் நாணயத்தின் மதிப்பை உயர்த்துகிறார்கள் என்பதுதான் பரிசோதனை” என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய நிதி மந்திரிகளும் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால் ஒரு ஜேர்மனிய நிதி மந்திரி செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்: “எந்த அளவு, எந்த கால வகையில் நாணய மதிப்பு சரிசெய்யப்படும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறோம்” என்றார். சமீபத்திய மாதங்களில் யுவான் யூரோவிற்கு எதிராக 15 சதவிகித சரிவை அடைந்தது. இது ஐரோப்பிய ஏற்றுமதிகள் முகங்கொடுத்த பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய சக்திகளுக்கு சிறு சலுகை என்ற விதத்தில் சீனா இப்பொழுதில் இருந்து அமெரிக்க டாலருக்கு மட்டும் இல்லாமல் யூரோ உட்பட பல நாணயங்களுடனும் இணைக்கும்.

ஜப்பானின் நிதி மந்திரி யோஷிஹிகோ நோடா நாணய விகித மாற்று முறையை “சீனா மற்றும் ஆசியப் பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஒரு கூடுதல் புள்ளியாகும்” என்று பாராட்டினார். நாணய விகிதப் பிரச்சினையில் சீனாவிற்கு எதிராக ஒரு நிலைப்பாடு கொள்ளுமாறு டோக்கியோ வாஷிங்டனில் இருந்து அழுத்தம் பெற்று வருகிறது. ஜப்பான் அதைச் செய்வதில் தயக்கம் காட்டிவந்தது. சீனா இப்பொழுது ஜப்பானுக்கு மூலதனப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு மிகப் பெரிய சந்தை ஆகும். இவை பின்னர் ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு.

முக்கிய அரசாங்கங்கள் எச்சரிக்கையும் பெய்ஜிங்கின் முடிவை வரவேற்றிருக்கையில், சீன மத்திய வங்கி ஞாயிறன்று ஒரு தொடர் அறிக்கையை வெளியிட்டு, அதில் யுவான் அதிக மதிப்பைக் கொடுக்கப்படுவது “சீனாவின் நலன்களுக்கு உகந்தது அல்ல”, மாற்றுவிகிதம் “அடிப்படையில் உறுதியாகத்தான்” இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை உடனடியாக அமெரிக்க காங்கிரஸில் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர் தலைமையில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக் குழு ஒன்றிடம் குறைகூறலை பெற்றது. அவர்கள் சீன இறக்குமதியை தடுப்பிற்கு உட்படுத்த ஒரு சட்டத்திற்கு பிரச்சாரம் செய்கின்றனர். “ஒரு நாள் முழுவதும் சீனா தன் கொள்கையை இறுதியில் மாற்றிக் கொண்டது பற்றிப் பெரும் பரபரப்பு இருந்தது, ஆனால் ஏற்கனவே அவர்கள் அதைப் பின் வாங்கிவிட்டனர்” என்று ஷ்யூமர் அறிவித்தார். “இது நம்முடைய ஆரம்ப அவநம்பிக்கையை உறுதிபடுத்துகிறது. சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு நாங்கள் ஆர்வத்துடன் முயல்வோம்.” என்றும் கூறினார்.

அமெரிக்க குறைகூறலைத் தவிர்க்க, பெய்ஜிங் அமெரிக்க டாலருக்கு எதிராக யுவானை 0.4 சதவிகிதம் திங்களன்று மதிப்பை அதிகரித்தது—இது ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் ஆகும். உலகப் பங்குச் சந்தைகளும் சாதகமாக எதிர்கொண்டுள்ளன; யூரோ ஸ்டாக்ஸ் 50 குறியீடு உயர்ந்து 1.1 சதவிகிதம் அதிகமாயிற்று; டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.6 சதவகிதமும் ஜப்பானின் நிக்கேய் 2.4 சதவிகிதம் 225 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தை எதிர்கொண்ட விதம் யுவான் மதிப்பு உயர்ந்த தற்கு மட்டும் என்று இல்லாமல், அமெரிக்க-சீன அழுத்தங்கள், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கேனும், தளரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஒட்டியும் இருந்தது.

ஆனால் சீன, மற்றும் உலகப் பொருளாதாரங்களின் அடித்தளத்தில் பிரச்சினைகள் தொடர்கின்றன. உறுதியான நாணய மாற்றுவிகிதத்தைத் தக்க வைக்க, சீன மத்திய வங்கி ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு நாணயச் சந்தைகளில் தலையிட்டு வெளிநாட்டு நாணயங்களை குறிப்பாக டாலரை வாங்குகிறது. சீன மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நாணய இருப்புக்களை $2.4 டிரில்லியன் என்று கொண்டுள்ளது; இது அவற்றை முக்கியமாக அமெரிக்க அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு முன்னதாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் யுவான் மதிப்புக்கூடுதல் என்பது அமெரிக்கச் சொத்துக்களை சீனா வாங்குவதைக்குறைக்கும் என்ற கவலைகளைத் தெரிவித்திருந்தது; அது அமெரிக்க அரசாங்கத்திற்குக் கிடைத்த குறைந்த வட்டிக்கான கடனை வரண்டுவிடச் செய்யும் என்ற அச்சமும் இருந்தது.

சீனா ஏற்றுமதிகளையும் மூலதன முதலீடுகளின்மீதும் அது நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் அழுத்தம் இருந்தபோதிலும்கூட, பெய்ஜிங் உள்நாட்டு நுகர்வைக் கணிசமாக உயர்த்த முடியவில்லை; இது அதன் மிகப் பெரிய ஊக்குவிக்கும் தொகுப்பின் மூலம் நடக்கிறது. இந்த ஊங்குவிப்பு செலவு பெய்ஜிங்கின் பொருளாதாரப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது; ஏனெனில் மகத்தான ஊகச் சொத்துக் குமிழ் தோன்றியுள்ளது; அது அரசாங்கத்திற்கும் அரசாங்க வங்கிகளுக்கும் மாபெரும் மோசமான கடன் தரங்களை அளிக்கும் திறன் கொண்டது ஆகும்.

கடந்த வாரம் Washington Post சீனாவின் உள்ளூராட்சிகள் அவற்றின் முதலீட்டு நிறுவனங்கள் நடத்தும் சொந்துக்கள் வளர்ச்சியில் உள்ள பெரும் குழப்ப உள்கட்டுமானம் பற்றிக் கவனத்தை ஈர்த்துள்ளது. அவை இப்பொழுது 7.11 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 1.16 டிரில்லியன்) “கடன் குண்டுத்திறன்” மீது அமர்ந்துள்ளன. பொருளாதார வல்லுனர் Xu Xiaoian ஐ செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது; அவர் சீன நகரங்களில் வந்துள்ள ஊகச் சொத்துக் குமிழ்களை துபாயில் வளைகுடா எமிரேட்டில் ஏற்பட்ட வெடிப்புடன் ஒப்பிட்டுள்ளார். “பல பத்து, நூறுகள் என்ற துபாய்கள் இப்பொழுது வரவுள்ளன” என்று அவர் அறிவித்தார்.

சீன அரசாங்கம் நாணய மாற்றுவிகிதங்கள் பற்றி இரு இடைத்தொடர்புடைய பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது. முதலாவது டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு கூடுவது ஊக முதலீடு இன்னும் அதிகமாக வரும் என்பதற்கு வகை செய்யும்; அது ஏற்கனவே பெருத்துள்ள சொத்துச் சந்தைக்கு முக்கியமாகச் செல்லும். கடந்த வார இறுதியில் முடிவை அறவிக்கையில், சீன மத்திய வங்கி “வளைந்து கொடுக்கும் தன்மை” என்ற சொல்லை கவனத்துடன் பயன்படுத்தினார்: இது ஊகக்காரர்களின் எதிர்பார்ப்பை, டாலரக்கு எதிராக ஒருக்கால் குறைக்க அனுமதிக்க க்கூடும் என்பதைக் காட்டுகிறது.

இரண்டாவதும் இன்னும் அதிக அடிப்படைப் பிரச்சினை யுவான் மதிப்பு உயர்தல் என்பது சீனாவின் ஏற்றுமதித் தொழில்களுடைய நெருக்கடியை அதிகரிக்கும்; இவை ஏற்கனவே மிகக் குறைந்த இலாப விகிதத்தில் இயங்குகின்றன. இது சீனத் தொழிலாளர்கள் அதிக ஊதியங்களுக்காக கோரிக்கைகளை விடுத்து வேலைநிறுத்தங்கள் நடத்துவதற்கு இடையே நடைபெறுகிறது.

இந்த ஆண்டு முன்னதாக நடத்தப்பட்ட “அழுத்தச் சோதனைகளில்” சீன அரசாங்கம் ஒரு 3 சதவிகித மறுமதிப்பீடு வீட்டுப் பொருட்கள், கார்கள், கைபேசி உற்பத்தியாளர்களுக்கு 30 முதல் 50 சதவிகித இலாபச் சரிவைக் கொடுக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இலேசான தொழில்கள் இன்னும் கூடுதலான பாதிப்பிற்கு உட்படும், 1 சதவிகித யுவான் மதிப்புக்கூடல் ஜவுளித் தொழில் இலாபங்கள் மீதும் இதேவகைப் பாதிப்பைக் கொடுக்கும். யுவான் மதிப்பு ஒரு சதவிகிதம் உயர்ந்தாலும், சீனப்பீங்கான் தொழில் செயலற்றுப்போகும். ஒரு சிறிய யுவான் மதிப்பு உயர்வினால் 25 மில்லியன் ஜவுளித் தொழில்துறை வேலைகள் அச்சுறுத்தலுக்கு உட்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சரியும் இறக்குமதிகளால் விளையக்கூடிய வெடிப்புத்தன்மை நிறைந்த சமூக விளைவுகள் இருக்கையில், சீன ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் சில அமெரிக்க கோரிக்கைகளுக்கு எதிராக கடின நிலைப்பாடு தேவை என வலியுறுத்துகின்றன. Global Times ல் ஜூன் 12 அன்று வந்த தலையங்கம் ஒன்று தங்கள் காப்புவரி முறையை அமெரிக்க அரசியல் வாதிகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வது கைவிடப்பட வேண்டும் என்றும் சீன அதற்குப் பதிலாக பதிலடி நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றைப் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என்று கோருகிறது. “அத்தகைய விவாதம் அமெரிக்கர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு மட்டும் இல்லாமல், சீன மக்களுக்கு அமெரிக்காவுடன் ஒரு உண்மையான வணிகப்போர் ஏற்படலாம் என்பதை அறிவுறுத்தும். நாம் சில நஷ்டங்களைப் பெறக்கூடும், ஆனால் இன்னும் அதிக சேதங்களை அமெரிக்காவிற்குக் கொடுக்க வேண்டும்; அமெரிக்கப் பாதுகாப்புவரி ஆர்வலர்களுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் உண்மையான பாடம் கற்பிக்க வேண்டும்.”

சீனா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் இத்தகைய சீற்றமான காப்புவரி பற்றிய கருத்துக்களின் எழுச்சி உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையை அடிக்கோடிட்டு காட்டுவதுடன் ஒவ்வொரு சக்தியும் தன்னுடைய பொருளாதார அவலத்தை போட்டியாளரிடம் சுமத்த முற்படுவதையும் காட்டுகிறது. பெரிய சக்திகளுக்கு இடையே பிளவுகள் வெளிப்படையாக வார இறுதியில் நடக்கவுள்ள G20 மாநாட்டில் வெடிக்காது என்றாலும், அவை மூடிய கதவுகளுக்குப் பின் சில அழுத்தமான கருத்துப் பறிமாற்றங்களுக்கு வகை செய்யும்