சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year after Iran's presidential election

ஈரானில் ஜனாதிபதித் தேர்தலின் ஓராண்டின் பின்னர்

Peter Symonds
12 June 2010

Use this version to print | Send feedback

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து ஓராண்டு முடிவதை இன்று குறிக்கிறது. அது ஈரானிய ஆளும் உயரடுக்கில் கடுமையான உட்பூசல்களை தூண்டிவிட்டு பச்சை எதிர்ப்பு இயக்கம் என்ற வடிவத்தில் வெளிவந்தது. தோல்வியுற்ற ஜனாதிபதி வேட்பாளர் மீர் ஹொசைன் மௌசவி, மற்ற "சீர்திருத்தவாதிகள்" என்று கூறப்பட்டவர்களுடைய ஆதரவைக் கொண்டு, உடனடியாக மஹ்முத் அஹ்மதிநெஜட்டின் மறுதேர்வு ஒரு மோசடி என்று கண்டித்து, நன்கு திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரத்தை ஆரம்பித்து தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட வேண்டும், ஒரு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தெஹ்ரானிலும் மற்ற நகரங்களிலும் நடத்திய எதிர்ப்புக்களுக்கு பின்னணியில் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் தமது செயலில் இறங்கின. ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இந்த "வண்ணப் புரட்சி" மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்க நலன்களுக்குப் பரிவுணர்வு காட்டும் ஈரானிய ஆட்சியை நிறுவுவதற்கு ஒரு வாய்ப்பு என்று கருதப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போக்கின்போது, மௌசவி வெளிப்படையாக அஹ்மதிநெஜட்டின் அமெரிக்க எதிர்ப்பு வார்த்தைஜாலங்களை பற்றிக் குறைகூறி, அதுதான் நாட்டின் பொருளாதார தனிமைப்படலுக்கு காரணம் என்று வாதிட்டிருந்தார்.

இந்த எதிர்ப்பியக்கத்தின் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ வர்க்கத் தன்மை, தன் ஆதரவாளர்கள் பெரும்பாலும் நகர்ப்புற செழிப்புடைய மத்தியதர வர்க்கங்களில் இருந்து எடுக்கப்பட்டிருந்த விதத்தில் பிரதிபலித்ததுடன், அஹ்மதிநெஜாட் வளங்களை தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த நிதானமான உதவித் தொகைகள், சமூகநலத் திட்டங்களுக்காக "சூறையாடுவதாகவும் மௌசவி தாக்கினார்.

சர்வதேசரீதியாக அமெரிக்காவில் நேஷன் ஏடு, பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, பிரிட்டனின் சோசலிஸ்ட் தொ்ழிலாளர் கட்சி போன்ற பல இடது--தாராளவாத, குட்டிமுதலாளித்துவ "இடது அமைப்புக்கள்", போன்றவையும் முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் இருந்து அதிகம் மாறுபட்டிராத நிலைப்பாட்டையே கொண்டன. இவை அனைத்தும் எதிர்ப்பு இயக்கத்தை மிக ஒளிவீசும் "ஜனநாயக", "புரட்சி" வண்ணத்தில் தீட்டி, அதன் வலதுசாரித் தலைமையின் வர்க்கத் தன்மையையும், அவற்றின் வெளிப்படையான ஏகாதிபத்திய ஆதரவு தன்மையையும் மூடிமறைத்தன.

ஓராண்டிற்கு பின்னர், பசுமை இயக்கம் பெரிதும் அடங்கிவிட்டது. மௌசவியும் அவருடைய சகச்சீர்திருத்தக்காரர்களும், கடைசி நிமிடத்தில் இன்று திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்புக்களைக் கைவிட்டனர்; "மக்களுடைய வாழ்வும் சொத்துக்களும் காப்பாற்றப்பட வேண்டும்" என்ற காரணம் கூறப்பட்டது; மேலும் "சட்டபூர்வமற்ற" அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். ஈரானிய எதிர்க்கட்சியாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் செய்தி ஊடகமும் "தில்லுமுல்லு" தேர்தல் பற்றி இடைவிடாக் குறிப்புக்களைப் பேசியும்கூட, அஹ்மதிநெஜாட் நம்பகத்தன்மை உடையவிதத்தில் வெற்றிபெறவில்லை என்பதற்கு எவ்விதச் சான்றும் கொடுக்கப்படவில்லை.

பசுமை இயக்கத்தின் சரிவு பற்றி பகுப்பாய்வதற்கு சர்வதேச செய்தி ஊடகத்தில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இயக்கம் அரசாங்க அடக்குமுறையால் நசுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எப்பொழுதாவதுதான் எதிர்க்கட்சியின் வர்க்கத் தன்மை பற்றிய குறிப்பு வெளிவருகிறது. உதாரணமாக பைனான்சியல் டைம்ஸில் வந்த ''சீர்திருத்தவாதிகள் மறுஒழுங்கமைத்துக்கொள்ள போராடுகின்றனர்'' என்னும் தலைப்பில் வந்த கட்டுரை ஒன்று மௌசவி, "தன்னுடைய ஆதரவுத்தளத்தை படித்த மத்தியதர வர்க்கத்திற்கும் அப்பால் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும் பேசிய விதத்தில் விரிவாக்க முயன்றார், ஆனால் தொழிலாளர்களும் சமூகத்தின் வறிய பிரிவுகளும் அவருடைய அழைப்புக்களுக்கு இதுவரை செவிமடுக்கவில்லை" என்று கூறியுள்ளது.

மௌசவிக்கு தொழிலாள வர்க்கத்திடம் ஆதரவு இல்லாத நிலை தேர்தல் நேரத்திலேயே நன்கு வெளிப்பட்டிருந்தது. அஹ்மதிநெஜாட் பற்றி எத்தகைய குறைகூறல்கள் இருந்தாலும், தொழிலாளர்களும் கிராமப்புற வறியவர்களும் மௌசவியையும் அவருடைய சக "சீர்திருத்தக்காரர்களையும்" ஆழ்ந்த சந்தேகத்துடன்தான் காண்கின்றனர். "ஜனநாயகம்" பற்றி மௌசவி என்ன கூறினாலும், 1981 ல் இருந்து 1989 வரையில் அவர் பிரதம மந்திரியாக இருந்தபோது, ஆயிரக்கணக்கான இடதுசாரிகளை சிறையில் அடைத்து கொலை செய்வதற்கும் காரணமாக இருந்தார். இவருக்கு இரு முன்னாள் ஜனாதிபதிகள்---அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மற்றும் முகம்மத் கட்டாமியின் ஆரதவும் உண்டு. ரப்சஞ்சானி நாட்டின் செல்வச் செழிப்புடைய வணிகர், கட்டாமிதான் சந்தைச் சார்பு செயற்பட்டியலைத் தொடக்கினார். அதுவோ வாழ்க்கைத் தரங்களில் பேரழிவு தரக்கூடிய பாதிப்பைக் கொடுத்தது.

மௌசவி, ரப்சஞ்சானி மற்றும் கட்டாமி ஆகியோர் பிற்போக்குத்தன இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பிரிவைப் பிரதிபலிக்கின்றனர். அது அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டு பொருளாதாரத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாட்டை இன்னும் நெருக்கமாக உலகந்தழுவிய உற்பத்திமுறையுடன் இணைக்கவும் விரும்புகிறது. கடந்த ஆண்டு எதிர்ப்புக்களில் தெளிவாகியதைப்போல், அவர்கள் ஈரானில் உள்ள நகர்ப்புற செழிப்பான மத்தியதர வர்க்கம் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் ஈரானியர்கள் என்ற அடுக்குளினால் ஆதரவிற்கு உட்பட்டுள்ளது. அவர்கள் மீதான தடைகள் அகற்றப்பட வேண்டும், அப்பொழுதுதான் தாங்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையையும் விழைவுகளையும் தொடரமுடியும் என்று கருதுகின்றனர். சிலர் வெளிப்படையாக தங்கள் சீற்றத்தை தொழிலாளர்கள், வறியவர்கள்மீது காட்டும் விதத்தில் அவர்களை அஹ்மதிநெஜாட்டின் போலிகள் என்றும் அவர் கொடுக்கும் குறைந்த நிதியத்தில் இருந்து நன்மை பெறுபவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பசுமை இயக்கம் கூடதலாக இரட்டைத் தன்மை, உட்பிளவுகளை கொண்டுள்ள நிலையில், முற்றிலும் பொதுவான முறையில் அது இன்னும் வலதிற்குப் பாய்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதன் ஆர்ப்பாட்டங்கள் வெளிப்படையான ஏகாதிபத்திய சார்புடன் அமைக்கப்பட்டன. கோஷங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றிற்கு ஆதரவாக அடையாளம் காட்டின. "காசாவிற்கும் லெபனோனுக்கும் வேண்டாம் என்போம், என்னுடைய உயிரை ஈரானுக்கு கொடுப்பேன்" போன்றவை இருந்தன. வேறு சிலர், "சீனாவிற்கு இறப்பு!, ரஷியாவிற்கு இறப்பு" என்றனர்; இது அஹ்மதிநெஜாட்டின் ஆதரவாளர்கள் "அமெரிக்காவிற்கு இறப்பு!" என்று கோஷமிட்டதற்கு பதில் ஆகும்.

அரசாங்கத்தின் மீதான குறைகூறலை கவனத்திற்கொண்ட மௌசவி அமெரிக்காவுடன் பிணைப்புக்கள் அல்லது ஆதரவு ஆகியவற்றை மறுக்க பெரும் முயற்சிகளைக் கொண்டு, ஆட்சியை அகற்றும் நோக்கமும் இல்லை என்றார். மற்ற எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவ்வளவு நிதானத்தைக் காட்டவில்லை. ஈரானியத் திரைப்பட இயக்குனரும், எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளருமான மொஹீன் மக்மல்பப் வெளிப்படையாக அமெரிக்க ஆதரவிற்கு குரல் கொடுத்தார்: நேற்றய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் "ஈரானின் பச்சை இயக்கத்திற்கு மேற்கு எவ்வாறு உதவலாம்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் இது வெளிப்பட்டது.

ஜனாதிபதி ஒபாமா முன்னதாக ஈரானிய அணுசக்தி திட்டம் பற்றி அஹ்மதிநெஜாட்டுடன் உடன்பாடு கொள்ள முற்பட்டதற்கு குறைகூறியபின், மக்மல்பப் "முதல்படி அமெரிக்கா அதன் ஆயுதங்கிடங்கில் கொண்டுள்ள மிக முக்கியமான கருவியான Voice of America ஒளிபரப்பை மாற்ற வேண்டும். ஈரானிய மக்களுக்கு வழிகாட்டும் நோக்கம் கொண்ட நிர்வாகத்தை அதில் போட வேண்டும்.... ஐரோப்பியர்களும் பெர்சிய மொழியில் யூரோ நியூஸை ஒளிபரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்" என்று எழுதினார்.

ஒபாமா நிர்வாகத்திற்கு ஊக்கம் கொடுக்கத் தேவையில்லை. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவின் மூலம் புதனன்று புதிய பொருளாதார தடைகளைக் கொண்டுவந்துள்ளது. ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளபடி, இது ஈரானில் உள்ள அரசியல் எதிர்ப்பிற்கு உதவும் வடிவத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் தெஹ்ரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் பற்றியும் அழுத்தம் கொடுக்கிறது. இத்தடைகள் குறிப்பாக அஹ்மதிநெஜாட்டின் ஆதரவுத்தளத்தை இல்லாதொழிக்கும் விதத்தில் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையை இலக்கு கொண்டுள்ளன.

தெஹ்ரான் எதிர்த்தரப்பின் வலைத்தளங்கள் மற்றும் மேலை ஒளிபரப்புக்களை தடுத்ததற்கு விடையிறுக்கும் வகையில் வாஷிங்டன் ஈரானிய எதிர்க்கட்சிக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கிறது. வியாழனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது: "பசுமை இயக்கப் பிரதிநிதிகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் பரந்த உரையாடல் தொடர்பு கொண்டுள்ளதாகவும், எப்படி ஈரானில் ஜனநாயகத்தை சிறந்த முறையில் கொண்டுவருவது என்பது பற்றியும் பேசுவதாகக் கூறுகின்றனர். இக்கூட்டங்கள் ஐரோப்பாவிலும் வாஷிங்டன் ஓட்டல்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களுடன் சமீப மாதங்களில் நடந்தன என்று பங்கு பெற்றவர்கள் கூறுகின்றனர். வெளிவிவகாரத்துறை இத்தகைய கூட்டங்கள் நடந்தது பற்றி உறுதி செய்துள்ளது."

ஈரானிய தேர்தலின் ஆண்டு நிறைவு பொதுவாக முன்னாள் தீவிரவாத அமைப்புக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன; அவை ஓராண்டிற்கு முன் பசுமை இயக்கத்திற்கு பெரும் ஆர்வத்துடன் ஆதரவளித்தன. ஒரு விதிவிலக்கு பிரிட்டனை தளமாகக் கொண்ட International Marxist Tendency (IMT) ஆகும். இது நேற்று தன் ஈரானில் உள்ள ஆதரவாளர்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை தளர்வடையாமல் இருக்குமாறு கோரி அளித்துள்ளது. "சக்திவாய்ந்த இயக்கம்", அதன் "நம்பமுடியாத அளவிற்கு உள்ள வீரம்" உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு மகத்தான ஊக்க ஆதாரம் என்றும் "இது அனைத்து கோழைகள், விட்டோடிகள் மற்றும் மக்களின் புரட்சிகரத் திறனைச் சந்தேகித்த துரோகிகளுக்கு இறுதிவிடை" என்றும் கூறியுள்ளது.

பின் தொடரும் எந்தப் பக்கங்களிலும் பசுமை இயக்கத்தைப் பற்றிய வர்க்கப் பகுப்பாய்வோ, அதன் தலைமையின் கொள்கைகள் பற்றியோ குறிப்பு இல்லை. வெற்றுத்தனமான "புரட்சிகர" பேச்சு IMT மற்ற முன்னாள் முற்போக்குத்தன அமைப்புக்கள் போல், தொழிலாள வர்க்கத்தை ஒரு வெளிப்படையான முதலாளித்துவ இயக்கத்திற்கு அடிபணிய செய்ய விரும்புகிறது. அந்த இயக்கமோ இஸ்லாமிய ஆட்சியின் உள் எதிர்ப்புப் பிளவு ஒன்றின் தலைமையின்கீழ் உள்ளது. தொழிலாளர்கள், ஏழைகளிடையே உயர்ந்த வேலையின்மை, வறுமை ஆகிய சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, எதிர்ப்பு அடையாங்களுக்கு இடையே இது நடந்துள்ளது. இது அஹ்மதிநெஜாட்டின் முடிவான பல அடிப்படைப்பொருட்களுக்கு தொடர்ச்சியான மானியங்களை குறைப்பது என்பதினால் தீவிரமாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஈரானில் நிரந்தர அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகைகளை தேடும் இளைஞர்களும் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் உலக சோசலிச வலைத் தளம் கடந்த ஆண்டு எதிர்ப்புக்களுக்கு இடையே எச்சரித்தது போல், "ஆளும் உயரடுக்கின் பிரிவுகளில் ஒன்றிற்குப்பின் பொறியில் அகப்பட்டது போல் இருக்கும் வரை, விளைவு தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதும் மற்றொரு சுற்று அரசியல் அடக்குமுறையும்தான். இந்த அரசியல் பொறியில் இருந்து மீளும் ஒரே வழிவகை தொழிலாள வர்க்கமும் அடக்கப்பட்ட மக்களும் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு சோசலிச ஈரானை நிறுவ சுயாதீனமாக திரண்டு எழுவதுதான். அத்தகைய முன்னோக்கு மத்திய கிழக்கிலும் சர்வதேச அளவிலும் ஐக்கிய சோசலிச நாடுகளுக்கான பரந்த போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் கருதிப்பார்க்கவும் முடியும்."

கடந்த ஆண்டின் அரசியல் படிப்பினைகள் பற்றி எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம், எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்று ஈரானிலும், அப்பிராந்தியம் முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் புரட்சிகர தலைமையாக கட்டியமைப்பதுதான்.