சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German unions and employers unite against the right to strike

ஜேர்மனிய தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமைக்கு எதிராக ஐக்கியப்படுகின்றனர்

By Dietmar Henning
14 June 2010

Use this version to print | Send feedback

ஜூன் மாத ஆரம்பத்தில் ஜேர்மனிய தொழிற்சங்க அமைப்பின் (DGB) தலைவரான மைக்கல் சொமரும், ஜேர்மனிய முதலாளிகள் சங்க (BDA) தலைவரான டீட்டர் ஹுண்ட்டும் கூட்டாக "ஒற்றை ஒப்பந்த முறை" என்ற கொள்கையை கொண்ட சட்டவரைவு ஒன்றை அளித்தனர். இதன் நோக்கம் தொழிற்சாலை தொழிலாளர் பூசல்களை அடக்குவது ஆகும். DGB இதற்கு முன்னதாக முதலாளிகளின் நலன்களுக்கு சார்பாக ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக தெளிவாகத் தோற்றமளித்தது அபூர்வமாகும்.

இச்சட்ட வரைவு ஒரு தொழிற்சாலையில் ஒரு கூட்டு உடன்பாடுதான் செயல்படுத்தப்படும் என்பதற்கு வகை செய்கிறது. "ஒரு நிறுவனத்தில் பல தொழிற்சங்கங்களின் பல கூட்டு ஒப்பந்தங்கள் இருந்தால், பணியிடத்தில் அதிகப் பெரும்பான்மை கொண்ட உறுப்பினர்களை கொண்ட சங்கத்துடனான கூட்டு உடன்பாடுதான் செயல்படுத்தப்படும்" என்று கூட்டு வாசகத்தை வெளியிடும்போது சொமர் கூறினார்.

"சிறப்புக் கூட்டு உடன்பாடுகள் என்று ஒவ்வொருதுறை தொழிற்சங்கங்கள் அழைத்துக் கொள்ளுவது" பெரும்பாலான உறுப்பினர்களை கொண்ட சங்கத்திற்கு மாற்றாக ஒரு கூட்டு உடன்பாட்டிற்கு வருவதை இது தடுக்கும் என்று அவர் சேர்த்துக் கொண்டார். இதன்பின் அவர் முக்கியமான கருத்துரைக்கு வந்தார்: பெரும்பான்மை உள்ள தொழிற்சங்கம் ஒரு கூட்டு உடன்பாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டது என்றால், தொழிலாளர் பிரிவில் சிறுபான்மையைப் பிரதிபலிக்கும் எந்தத் தொழிற்சங்கத்திற்கும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்ற விதி பொருந்தும் என்பதே அது. "தொழில்துறை நடவடிக்கை பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தக் காலத்தில் தடைக்கு உட்படும்" என்று அவர் வலியுறுத்தினார்.

பல தொழிற்சங்கங்களுடன் பல கூட்டு உடன்பாடுகளைக் கையெழுத்திடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறும் அளவிற்கு சொமர் செல்லவில்லை. அது அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சங்கம் அமைக்கும் உரிமைக்கு முற்றிலும் எதிரிடையாகிவிடும். ஆனால் அத்தகைய ஒப்பந்தங்களின் முன்தேவை "ஊழியர் குழுக்கள், ஒன்றையொன்று மீறாவண்ணம் பார்த்துக் கொள்ளும், உடன்பட்ட ஒப்பந்தங்களுக்கு அனைவரும் இணக்கம் காட்ட வேண்டும் என்பதாகும்". வேறுவிதமாகக் கூறினால், சிறு தொழிற்சங்கங்கள் தனிப்பட்ட தொழில் குழுக்களின் கூட்டு உடன்பாடுகளை மட்டும்தான் அடையமுடியும். உதாரணமாக மருத்துவ மனை வைத்தியர்கள் அல்லது புகையிரத சாரதிகள் அதுவும் முறையான DGB தொழிற்சங்கமும் முதலாளிகளும் தங்கள் முன்கூட்டிய அனுமதியைக் கொடுத்தால்தான்.

இந்தக் கூட்டுத் துவக்க முயற்சி பொருளாதார நெருக்கடியின் விளைவுகளுக்கு வரக்கூடிய சாத்தியமான எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளியெறிதல் என்பதை தவறுக்கு இடமின்றி சொமர் தெளிவாக்கினார். ஒரு கடுமையான நிதியப், பொருளாதார நெருக்கடியின் நடுவே, "குடிமக்கள் இப்பொழுது அனைத்தும் சரிந்து கொட்டிக்கொண்டிருக்கவில்லை என்பதற்கான சைகையின் தேவையை கொண்டுள்ளனர்." அவர்கள் "தங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கக்கூடிய ஒரு உறுதியான நங்கூரத்தைக் காண விரும்புகின்றனர்." DGB, BDA உடைய கூட்டு முயற்சி "அத்தகைய உறுதியான நங்கூரத்தை அளிக்கிறது."

"தொழிற்சங்கங்களும் முதலாளிகளின் பிரதிநிதிகளும் இந்த நெருக்கடியில் தங்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளனர். எங்கு இயலுமோ, தேவையோ, அங்கு அவர்கள் ஒன்றாகச் செயல்படுகின்றனர்." என்று DGB யின் தலைவர் கூறினார். "பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்கள் கூட்டாக தீர்வைத் தேடுகின்றனர், எங்கு பொருத்தமோ, தேவையோ அங்கு அரசியல் வாதிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்". சமூகப் பங்காளித்துவம் தன்னை நிரூபித்திவிட்டது, மேலும் இப்பொழுது பணியிடத்தில் ஒற்றை ஒப்பந்த முறையை உறுதிப்படுத்த தொடரப்படுகிறது.

BDA தலைவர் ஹுண்ட் கூட்டுத் துவக்க முயற்சி பணியிடத்தில் தொழில்துறை பூசல்களைத் தடுக்க உதவுகிறது என்றும் வலியுறுத்தினார். ஒற்றை ஒப்பந்த முறை, "தவிர்க்க முடியாதது, ஏனெனில் நாம் மீண்டும்மீண்டும் தொடர்ந்துவரும் பணியிடப் பூசல்களை எதிர்கொள்ள முடியாது." என்று அவர் கூறினார்.

சொமரும் ஹுண்ட்டும் ஏற்கனவே தங்கள் திட்டத்தைக் கூட்டாக சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலிடம் அளித்துள்ளனர்; அரசாங்கத்திடம் இருந்து அரசியல் ஆதரவை அது பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

"ஒரு பணியிடம்-ஒரு ஒப்பந்தம்" என்ற கொள்கை பணியிடத்தில் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதால் கூட்டு அணுகுமுறையை சொமர் நியாயப்படுத்த முயன்றார்; ஏனெனில் இது "பணியிடத்தின் தனித்தனி பகுதிகள் ஒன்றோடு ஒன்று எதிர்த்து நிற்காமல் இருப்பதை" தடுக்கும் என்றும் கூறினார்.

உண்மையில், DGB சங்கங்கள் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முழு உரிமை பெற்றிராத நிலையிலேயே பல ஆண்டுகள் தடைக்குட்படுத்தும் ஒப்பந்தங்களை சுமத்தியுள்ளது. அவற்றை தொழிலாளர்கள் எதிர்க்க முடியாது. உதாரணமாக சேவைத்துறை தொழிற்சங்கமான Verdi தொடர்ந்து பல உடன்பாடுகளை ஊதியக் குறைப்புக்கள், கூடுதல் பணிநேரச் சுமை, பொதுத்துறையில் பணி இழப்புக்கள் ஆகியவற்றிற்கு செய்துள்ளது. மிகப் பெரிய தொழில்துறை சங்கமான IG Metall உம் இதையே செய்துள்ளது. அது ஊதிய விட்டுக்கொடுப்புகளை சுமத்தி, வேலைக் குறைப்புக்கள் இன்னும் பல "தியாகங்களை" கார்த்தயாரிப்புத் தொழிலில் சுமத்தியதில் அதன் கையெழுத்து தெளிவாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இதற்கு பல நேரங்களில் எதிர்ப்புக்கள் வந்துள்ளன. பொதுவாக இவை இன்னும் கூடுதலான சில தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கன்சர்வேடிவ் தொழிற்சங்கங்களான GdL (புகையிரத சாரதிகள்), Cockpit (விமான ஓட்டிகள்), UFO (விமானப் பணியாளர்கள்) அல்லது Murburger Bund (மருத்துவமனை டாக்டர்கள்) என்பவற்றில் இருந்து எதிர்ப்பை எதிர்நோக்கியது.

2008ம் ஆண்டு GdL உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்தது புகையிரத பணிகளைத் தற்காலிகமாக முடக்கியது. DGB தொழிற்சங்கமான Trananet இன் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் நோக்கத்தை அந்த வேலைநிறுத்தம் கொண்டிருந்த்தது; அதுவோ ஊதியக் குறைப்புக்கள், வேலை இழப்புக்கள், சரியும் பணி நிலைகள் இவற்றிற்கு ஒப்புக் கொண்டு Deutsche Bahn ஐ பங்குச் சந்தையில் பதிவு செய்ய உதவியிருந்தது. புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் பரந்த முறையில் ஆதரிக்கப்பட்டது. இதற்கு மாறாக அந்த நடவடிக்கை கடுமையாக ட்ரானாநெட்டினால் எதிர்க்கப்பட்டது. அதுதான் உத்தியோக பூர்வ GDBA தொழிற்சங்கம் ஆகும். மற்றும் செய்தி ஊடகம், இடது கட்சி உட்பட அரசியல் கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. GdL இறுதியில் நிபந்தனையற்ற சரணடைய வேண்டியதாயிற்று. ஏனெனில் அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் முன்னணியில் அது நிற்க விரும்பவில்லை.

Transnetம் GDBA புகையிரத தொழிற்சங்கங்களும், இரு ஆண்டுகளுக்கு முன்பு புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் திட்டத்தை வகுத்தவை, ஆர்வத்துடன் சொமர் மற்றும் ஹுண்ட்டின் திட்டங்களை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. "ஒற்றை ஒப்பந்தம் என்பத பணியிடத்திலும் சமூகத்திலும் ஒற்றுமை என்பதைக் காட்டும்" என்று இரு தொழிற்சங்கங்களின் தலைவர்களான கிளவுஸ் -டீட்டர் ஹெமல் உம், அலெக்சாந்தர் கிர்ஷனரும் கூறினர். அதிலும் தற்காலத்தில் இப்பொழுதுள்ள சகாப்தத்தில் "ஒவ்வொரு நிறுவனத்திலும் அனைத்து ஊழியர்களின் நலன்களைக் காப்பதில் இது முக்கியமான காரணியாகும்".

சொமரும் ஹுண்ட்டும் கொண்டுள்ள துவக்க முயற்சி போட்டியிடும் சங்கங்களான GdL, Cockpit, UFO, Marburger Bund இவற்றிற்கு எதிரான நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய முன்னோக்குகள் பல தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட அடிப்படையில் DGB இனதில் இருந்து வேறுபட்டிருக்கவில்லை. அவர்களுடைய கூடுதலான அச்சம் ஒரு உண்மையான, சுயாதீன சமூக இயக்கம் ஆலைகளிலும் பணியிடங்களிலும், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சி பெற்றுவிடக்கூடும் என்பதுதான்.

இந்த சட்டவரைவு முயற்சி அத்தகைய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான். சட்டபூர்வமாக ஒற்றை ஒப்பந்தமுறையைக் கொண்டுவந்து, வேலைநிறுத்தம் கூடாது என்ற சட்டத்தையும் சுமத்திவிட்டால், DGB. BDA இரண்டும் வருங்காலத்தில் எழுச்சி பெறும் தொழிலாளர்களுடன் மோதல் வரும்போது, தங்களுக்கு நீதிமன்றமும் அரசாங்க அடக்குமுறையும் உதவும் என்பதை உறுதிபடுத்துகின்றன.

சொமர் மற்றும் ஹுண்ட் ஆரம்பித்துள்ள முயற்சிக்கு உடனடிக் காரணம் BAG எனப்படும் மத்திய தொழில்துறை நீதிமன்றம் ஜனவரி மாதம் ஒற்றை ஒப்பந்த முறை பற்றிய தன்னுடைய சட்டபூர்வ அணுகுமுறையை மாற்றும் என்று அறிவித்ததுதான். கடந்த காலத்தில் நீதிமன்றம் பொதுவாக ஒற்றை ஒப்பந்த முறைக்கு ஆதரவாகத் தீர்ப்புக்களை அளிந்திருந்தது. ஆனால் இதற்கு சட்டபூர்வத் தளம் ஏதும் இல்லை. இப்பொழுது அது ஒரே தொழில் குழுக்களில் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் கூட்டு உடன்பாட்டை அனுமதிக்க விரும்புகிறது.

பிரச்சினையில் குறிப்பான நிலமை என்பது DGB, BDA தொடக்கியுள்ள முயற்சியின் திசையை தெளிவாக்குகிறது. Marburger Bund சேர்ந்த மருத்துவமனை டாக்டர் BAGக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுத்துள்ளார். TVoD எனப்படும் DGB, Verdi தொழிற்சங்கங்கள் பொதுத்துறை முழுவதற்கும் கூட்டாகக் கொண்ட உடன்பாட்டின் விளைவாக நிதிய முறையில் முன்னைவிட மோசமான நிலை வந்ததை சரி செய்ய அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். Marburger Bund, TVoD உடன்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அரச உத்தியோகத்தருக்கான சம்பள உடன்பாட்டை (Federal Staff Contract, BAT), என்பதைச் சான்றாகக் கொண்டுள்ளது; இதுதான் அதுவரை நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது, அதன் உறுப்பினர்களுக்கு ஒரு சிறந்த ஊதியத்தைக் கொடுக்கிறது. இப்பொழுது மத்திய தொழில்துறை நீதிமன்றம் விரைவில் மனுதாரருக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுக்கும் என்று தோன்றுகிறது; DGB, BDA சட்டவரைவு முயற்சி அந்த விளைவிற்கு எதிராக இயக்கப்படுகிறது.

இந்த முயற்சி இடது கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளது; அதன் தலைவர் கிளவுஸ் எர்ன்ஸ்ட் மற்றும் பொதுச் செயலர் வெயர்னர் டிரைபுஸ் ஆகியோர், "DGB தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள முயற்சியை" அன்றே ஒரு செய்தி ஊடக அறிவிப்பில் வரவேற்றுள்ளனர். இது சரியான நேரத்தில் வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். தங்கள் வெட்கங்கெட்ட ஆதரவளித்தலை நியாப்படுத்தும் விதத்தில் உண்மைகளை திரித்துள்ளனர்.

முதலில் முதலாளிகளும் ஆதரவு கொடுக்கும் ஒரு கூட்டு முயற்சி இது என்று அவர்கள் கூறவில்லை. இரண்டாவதாக, உண்மைகள் மாறாக நிலமையைக் காட்டியபோதிலும், அவர்கள் முயற்சி "மஞ்சள் சங்கங்களுக்கு" எதிரானவை என்று கூறியுள்ளனர்; அவை கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) அல்லது முதலாளிகள் சங்கங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. "ஒற்றை ஒப்பந்த முறையின் கொள்கையை வினாவிற்கு உட்படுத்த விரும்புவர்கள், புரிந்தோ புரியாமலோ, ஊதிக்குறைப்பிற்கு வகை செய்கின்றனர்" என்று எர்நாட் கூறினார். "கூட்டாட்சி தொழிலாளர் நீதிமன்றம் ஒற்றை ஒப்பந்தமுறைக் கொள்கைகளை தூக்கி எறிய விரும்பினால், அது ஊதியங்களைக் குறைக்க விரும்ப்புவர்களின் விருப்பத்தை செயல்படுத்துவது போலாகும்" என்று டிரைபுஸ் கூறினார்.

சொமரும் ஹுண்ட்டும் கூறிய கூடுதலான கருத்துக்கள் உண்மையில் என்ன தொடர்புடையவை என்று காட்டுகின்றன; இது நிதிய நாளேடு Handelsblatt. ஆல் காட்டப்படுகிறது. இருவருமே 1970 களில் நிலவிய "பிரித்தானிய நிலைமைகளுக்கு" எதிராக எச்சரித்தனர்.

அந்த நேரத்தில் பிரிட்டன் வன்முறை வர்க்கப் போராட்டங்களை குறிப்பாகக் கொண்டிருந்தது. தொழிலாள வர்க்கம் பெரியளவு வேலைநிறுத்தங்கள் மூலம் சில மகத்தான ஊதிய உயர்வுகளைப் பெற்றிருந்தது. 1974ல் அது கன்சர்வேடிவ் அரசாங்கமான எட்வர்ட் ஹீத்துடையதை இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தியது. TUC எனப்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரிட்டனில் DGB க்கு ஒப்பானது. மற்றும் பல காலத்திற்கு தொழிற்கட்சி, இரண்டும் இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. 1978-79 ல் "அதிருப்தி குளிர் காலம்" என்று அழைக்கப்பட்ட நேரத்தில், தொழிலாளர்கள் சர்வதேச நிதிய நிறுவனம் கோரிய கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முயன்ற ஜேம்ஸ் கலகனுடைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக நடந்து கொண்டனர்;

"புகையிரத சாரதிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள், மற்றவர்களுடைய போன்ற தொழிற்சங்கங்களின் பரந்த நடவடிக்கைகள் [பிரிட்டனில் வரவிருப்பதை ஒத்து இருக்கக்கூடிய] ஜேர்மனியில் வரவிருக்கும் வளர்ச்சி பற்றிய முன்கூட்டிய சுவைதான் என்று சொமரும் ஹுண்டும் அஞ்சுகின்றனர் என்று Handelsblatt தெரிவித்துள்ளது.

இறுதியாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்ததின் விளைவாக, பிரிட்டன் மார்க்கரெட் தாட்சரின் தலைமையில் கன்சர்வேடிவ் வெற்றிக்குத் தளத்தைத் தயாரித்தது. அவர் TUC தலைமையுடன் சேர்ந்து கொண்டு தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை உடைத்து எறிந்தார். அக்காலத்திய கன்சர்வேடிவ் கட்சி மூலோபாய நாளேடு, "தொழிற்சங்க பிரச்சினையை தீர்ப்பது பிரிட்டனின் மீட்புக்கு திறவு கோல்" என்று எழுதியது.

"பிரிட்டிஷ் நிலைமை" பற்றி எச்சரித்ததில், தன்னை தாட்சரின் மரபில் இருத்தியுள்ளது. ஆனால் இயக்கத்தையே அடக்கும் பணியை, அதை அரசாங்கத்திற்கு விட்டுவிடுவதற்குப் பதிலாக தான் மேற்கோண்டுள்ளது. BDA உடன் கொண்டுள்ள கூட்டுச் சட்டவரைவு முயற்சி DGB ஐ அரசாங்கம், பெருவணிகம் ஆகியவற்றின் அடக்குமுறைக் கருவியாக மாற்றுவதில் மற்றொரு கட்டத்தைக் குறிக்கிறது.

இவ்வாறு செய்கையில் DGB க்கு ஜனநாயக உரிமைகள் மீது எந்த மதிப்பும் இல்லை. முக்கிய நீதிப் பிரிவு வல்லுனர்களின் கருத்துப்படி, சட்ட முயற்சி ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் உள்ள மனித உரிமைகள் மற்றும் ஜேர்மனிய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் பொருந்தியிராது. ஜேர்மனிய அரசியலமைப்பின் விதி 9, பத்தி 3 தெளிவாக அனைவருக்கும் "பணி நிலை, பொருளாதார நிலைமைகள் பாதுகாக்க, முன்னேற்றுவிக்க சங்கங்கள் அமைக்கும் உரிமையை அளிக்கிறது. அதையொட்டி ‘தொழில்துறை மோதல்களை நடத்தும்’ உரிமையும் உண்டு."