WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The BP oil spill and the tyranny of private ownership
பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவும் தனியார் உடைமை கொடுங்கோன்மையும்
Tom Eley
11 June 2010
Use this version to print | Send
feedback
அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான சுற்றுச் சூழல் பேரழிவு நடந்து 51வது நாளகியும் வாஷிங்டன் வளைகுடா எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அல்லாது, பிரிட்டிஷ் பெட்ரோலிய மற்றும் எண்ணெய்த் தொழில் முழுவதற்கும் அது காட்டும் நிதிய ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத்தான் இருமடங்காக்கியது.
வியாழனன்று பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் பங்குகளானது கசிவிற்கு முன்பு இருந்த மதிப்பைவிட 40 சதவிகிதம் சரிந்து, நிறுவனத்தின் பத்திரங்களுக்கான பணம் செலுத்த தவறுதலுக்கு எதிராக காப்பீடு செய்வதற்கான செலவுகள் அதிகரித்தவுடன் எச்சரிக்கை மணிகள் அடித்தன. சந்தைகள் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை வரவிருக்கும் ஆதாயப் பங்குத்தொகை அளித்தலை, கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலரை, அது நிறுத்தி வைக்கக்கூடும் என்ற வதந்தியைக் கேட்டு அதை தண்டித்தன என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் நிதியச் செய்தி ஊடகம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் "உரிமை" மற்றும் "கடமை" யான பங்குதாரர்களுக்கு அளிக்கவுள்ள ஆதாயப்பங்குத் தொகை பற்றி ஒரு முழுக்குரலை பாதுகாப்பிற்காக உயர்த்தியது--அதே நேரத்தில் எண்ணெய் பெருநிறுவனம் வளைகுடாக் கடலோரப்பகுதியில் கசிவின் விளைவாக உயிரிழந்தவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கு தடுப்புக்களையும் தாமதங்களையும் செய்கிறது. வியாழனன்று பைனான்சியல் டைம்ஸின் லண்டனிலிருந்து வந்த முக்கிய கட்டுரை பிரிட்டிஷ் தொழில்துறையில் வாஷிங்டனுடைய பிரிட்டிஷ் பெட்ரோலியத்துக்கு எதிரான "பொருத்தமற்ற" வனப்புரையை பற்றி ஏற்பட்ட "பீதியைப்" பற்றித் தகவல் கொடுத்தது.
இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்கப் பெரும் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடாப் பேரழிவைப் பயன்படுத்தி சந்தையில் கூடுதலான பங்கைப் பற்றிக் கொள்ளக்கூடும், அதையொட்டி பிரிட்டனை தளமாகக் கொண்ட நிறுவனத்தைவிட ஒரு போட்டி நலனை அடையக்கூடும் என்ற அச்சங்களை பிரதிபலிக்கிறது. உண்மையில், ஏற்கனவே பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் வங்கிகள், முக்கிய பங்குதாரர்கள், பத்திரம் வைத்திருப்பவர்கள் ஆகியோரை பில்லியன் கணக்கான டாலர்கள் தூய்மைப்படுத்தும் செலவினங்கள், அபராதச் செலவினங்கள் முதலியவை உள்ள திறனில் இருந்து காப்பாற்றுவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அத்தகைய நிதிய தந்திரோபாயங்கள் இச்செலவுகளை இறுதியில் மக்கள் தலையில் கட்டிவிடும்.
அத்தகைய ஒரு காட்சியில், ஒரு திவால் பதிவு செய்தல் அல்லது பிரிட்டிஷ் பெட்ரோலிய அமெரிக்காவை தளம் கொண்ட எக்ஸன் மொபில் போன்ற போட்டி நிறுவனம் எடுத்துக் கொள்ளுதல் என்பது சமீபத்திய கட்டுரை ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸ் நிதியக் கட்டுரையாளர் ஆண்ட்ரூ ரோஸ் சோர்க்கின்னால் விவரிக்கப்பட்டது.
அவர் எழுதுகிறார்: " பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஒரு நாள் திவாலுக்குப் பதிவு செய்யக்கூடும் என்ற கருத்து, குறிப்பாக கசிவில் இருந்து வரும் செலவினங்களை மூடி ஒதுக்கும் விதத்தில் மேற்கொள்ளக்கூடிய இணைப்பின் ஒரு பகுதியாக என்பது, வோல் ஸ்ட்ரீட்டிற்குள் வடிகட்டி வந்துள்ளது. வங்கியாளர்களும் வக்கீல்களும் ஏற்கனவே ஒப்பந்த திறன்கள் பற்றி ஆராய்கின்றனர் (தங்களுடைய கட்டணத் திறனையும்தான்)."
"ஷெல்லும், எக்ஸன் மொபில்லும் இறைச்சித் துண்டை நக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இரக்கமற்ற சட்டச் சிந்தனை உடையவர்கள் பிரிட்டிஷ் பெட்ரோலிய முன்கூட்டி திட்டமிடப்பட்டுள்ள திவாலைப் பதிவு செய்யும், தூய்மைப்படுத்துவதின் செலவினங்களை தனியே காட்டும்--என்ற காட்சிகளைக் கனவு காண்கின்றன--இதில் சட்ட உரிமைகளாக பில்லியன் கணக்கான டாலர்கள் வரும் திறன் உண்டு--ஒரு தனிப் பெருநிறுவனம் ஏற்படுத்தப்படலாம்."
பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஒரு சுதந்திர நிறுவனமாக தப்பிப் பிழைக்குமா அல்லது அதன் உயர்மட்ட பங்குதாரர்களும், கடன் கொடுத்தவர்களும் எக்ஸன் மற்றும் ஷெல்லில் பாதுகாப்பு கொடுக்கப்படவரா என்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எண்ணெய் தொழில் முழுவதையும் காப்பாற்ற வேண்டும் என்பதோடு பார்க்கையில் இரண்டாம் பட்ச அக்கறைதான். அனைத்து நோக்கங்களுக்கும் அதன் ஊதியப் பட்டியலில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மூலம், எண்ணெய் தொழில்துறை அதன் செயற்பாடுகளில் எவ்வித, தற்காலிகமானவை உட்பட, தடைகளும் கூடாது என்று கோருகிறது.
கடந்த வாரத்தில் ஜனாதிபதி ஒபாமாவின் ஆறு மாத கால மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கடல் எண்ணெய் தோண்டும் செயல்களுக்குத் தடை என்பது தொழில்துறையின் பிரச்சாரத்திற்கு இலக்காகியது. இழிந்த முறையில் அது வேலைகள் பாதுகாப்பு பற்றிப் பேசி மூடிமறைக்கப் பார்க்கிறது.
செனட் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் குழுவின் விசாரணை புதனன்று நடைபெற்றபோது, ஜனநாயக கட்சியின் லூயிசியானா உறுப்பினர் மேரி லாண்ட்ரூ, எண்ணெய்த் தொழில்துறையின் முக்கிய "சொத்து" உள்துறை மந்திரி கென் சலாசர் இடைக்கால தடையை அகற்ற வேண்டும் என்றும், "இது இன்னும் சில மாதங்கள் கூடுதலாக நீடித்தால், இப்பகுதியில் பொருளார அழிவைக் கொண்டுவரும் திறனைக்கொண்டுள்ளது, அது BPகசிவு ஏற்படுத்தியுள்ள அழிவை விட அதிகமாகும்" என்று அபத்தமாகக் கூறினார்.
உண்மையில் செய்தி ஊடகம் தவறாக முழுத் தடை ஆழ்கடல் எண்ணெய் தோண்டுதலில் என்று காட்டுவது 33 புதிய தோண்டும் செயல்களை மட்டும்தான் பாதிக்கும். ஏற்கனவே நடந்து கொண்டிருப்பவை பற்றி அல்ல. ஒபாமாவின் பெயரளவு நடவடிக்கையில் இருந்து விளையும் எத்தகைய வேலை இழப்புக்களும் இப் பகுதியில் மீன்பிடித்தல், சுற்றுலாத் தொழில்களில் ஏற்பட்ட இழப்புகளை காணும்போது அற்பமாகிவிடும். பிந்தையவற்றில் நூறாயிரக்கணக்கான மக்கள் எழுந்திருக்க முடியாத நிலை என்பது தோன்றிவிட்டது.
இதற்கு விடையிறுக்கையில் சலாசர் கசிவு பற்றி விசாரணை நடத்த ஒபாமா நியமித்துள்ள குழு புதிய ஆழ்கடல் தோண்டுதல் செயல்களை நிறுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கினார். அதன் நோக்கம் "சற்றே நிற்க என்னும் பொத்தானை அழுத்துவதே தவிர நிறுத்தும் பொத்தானை அழுத்துவது அல்ல." என்று சலாசர் கூறினார். "அது சற்றே நிற்க பொத்தான், அதையோட்டி நாம் OCS [வெளிக்கண்டத் தட்டு] எண்ணெய் தோண்டுதலில் முன்னேற்றத்தை உறுதியாகக் காணமுடியும்--அதை ஒட்டி மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் அது இருக்கும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்கும்" என்று சலாசர் சேர்த்துக் கொண்டார்.
மூன்று அல்லது ஆறுமாத காலப் பரிசீலனைக்கு பின்னர் தக்க செயல்முறை விதிகள் ஆழ்கடல் தோண்டுதலை பாதுகாப்பாக நடத்துவதற்கு கொண்டுவரப்படும் என்னும் கூற்றிற்கு எவ்வித நம்பகத் தன்மையும் இல்லை--அதிலும் சிறப்பாக ஒபாமாவின் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக கோனோகோபிலிப்ஸின் இயக்குனர் குழு உறுப்பினர் ஒருவர் அமர்ந்திருக்கும்போது.
எண்ணெய்க் கசிவின் முழு அனுபமும் அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும்--வெள்ளை மாளிகையில் இருந்து காங்கிரஸ், மாநிலம், உள்ளூர் ஆட்சிகள் வரை--பெருவணிகத்திற்குத் தாழ்ந்து நிற்கிறது, அதன் அடிப்படை நலன்களை அச்சுறுத்தும் விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதைக் காட்டுகிறது.
ஆளும் வர்க்கம் ஒருபுறத்தில் வேலைகளை அளித்தல், மறுபுறம் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் நலன்களைப் பற்றி இயைந்திருக்க முடியாத எதிர்த்தன்மைகள் என்று கூறுவது ஒரு பழைய தந்திரோபாயம் ஆகும். திகைப்புடன் உள்ள தொழிலாளர்களை இன்னும் அதிக வேலை இழப்புக்கள் என்று அச்சுறுத்தி, எண்ணெய்த் தொழிலும் அதன் அரசியல்வாதிகளும் தங்கள் நிபந்தனைகளைப் போடுகின்றனர். எண்ணெய் எடுத்தலை நிறுத்தி எண்ணெய் தொழிலாளர்கள் வேலையை இழக்கடியுங்கள் அல்லது எண்ணெய் எடுத்தலை தொடருங்கள், மற்றொரு பேரழிவு இடருக்கு வகை செய்யுங்கள் என்பதே அது.
இத்தவறான விருப்புரிமை உடைமை மற்றும் எண்ணெய் தொழில் மீதான கட்டுப்பாடு தனியார் கரங்களில்தான் இருக்க வேண்டும் என்ற முன்கருத்தைத் தளமாகக் கொண்டுள்ளதோடு, எரிசக்தி அளித்தல் என்பது தனியார் இலாபத்திற்கு தாழ்த்தப்படுகிறது. உண்மையில் வேலைகளைக் காட்டுதல், வளைகுடா சுற்றுச் சூழல் ஆபத்தில் இருந்து தப்புவது என்பதைக் காட்டுவது, இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இயைந்து இருக்காது என்பது போல் தோன்றச் செய்வது என்பது எண்ணெய் தொழில்துறை முதலாளித்துவ உடைமையின் கீழ் இருப்பதால் விளையும் பகுத்தறிவற்ற தன்மை மற்றும் பேரழிவுத்தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எண்ணெய், மீன்பிடித்தல், சுற்றுலாத் துறைகள் மற்றும் கணக்கிலடங்கா சிறிய, நடுத்தர வணிகப் பிரிவுகளில் வேலைகளை காப்பதற்கும் சூற்றுச் சூழலைக் காப்பதற்கும் ஒரே அடிப்படை தனியார் உடைமை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். தற்போதைய பேரழிவு தற்கால வெகுஜன சமூகம், பெரும் இடைத்தொடர்பும் சிக்கல்களையும் கொண்டது மற்றும் ஒரு சிறிய உயரடுக்கின் செல்வக்கொழிப்பை தளமாகக் கொண்ட, காலம் கடந்துவிட்ட பொருளாதார முறையும் பொருந்தி இருக்க முடியாத தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வளைகுடாப் பகுதியை தூய்மைப்படுத்த தேவையான வளங்களைத் திரட்டவும், வேலைகளை அளிக்கவும், பிரிட்டிஷ் பெட்ரோலிய யின் குற்றம் சார்ந்த புறக்கணிப்பால் பேரழிவிற்கு உட்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அளிக்கவும் BP யின் சொத்துக்கள், வளங்கள் ஆகிவை பறிக்கப்பட்டு அவற்றை அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள், பெரிய முதலீட்டாளர்கள் நலன்களுக்கு என்று இல்லாமல் சமூக நலனுக்கு எனப் பயன்படுத்துவதுதான்.
இது எரிசக்தித் தொழிலை தேசியமயமாக்கி அதை ஒரு பொதுப் பயன்பாடாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த சோசலிச தீர்வு தொழிலாள வர்க்கமானது ஒபாமா நிர்வாகம், பெருவணிகத்தின் இரு கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதின் மூலமும் ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவப் பாடுபடுவதின் மூலம்தான் முடியும்.
வளைகுடா எண்ணெய்க் கசிவிற்கு விடையிறுப்பு பிரிட்டிஷ் பெட்ரோலியமானது ஓபாமா நிர்வாகம் ஆகியவற்றின் கரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். அறிவியல் வல்லுனர்கள், பொறியியல் வல்லுனர்கள் தலைமையில் ஒரு சுயாதீனக்குழு அமைக்கப்பட்டு அதற்கு கசிவு பற்றிய பகுப்பாய்வும், பெரும் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத் தலைமைதாங்கும் பொறுப்பும் கொடுக்கப்பட வேண்டும். ஒபாமா பெருமை அடித்துக் கொள்ளும் 20,000 என்று இல்லாமல் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தக்க பயிற்சி, பாதுகாப்புக் கருவிகள் மற்றும் நல்ல ஊதியங்கள் நலன்களும் கொடுக்கப்பட வேண்டும்.
|