WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா Honda rocked by further strikes in China
சீனாவில் மேலும் கூடுதலான வேலை நிறுத்தங்களால் ஹொண்டா அதிர்கிறது
By John Chan
10 June 2010
Use this version to print | Send
feedback
ஜப்பானிய கார் தயாரிப்பாளர் ஹொண்டாவின் Foshan கடத்திகள் உற்பத்திக் கூடத்தில் நீடித்த வேலைநிறுத்தத்தை, கணிசமான ஊதிய உயர்வு அளித்து நிறுத்த முடிந்த சில நாட்களுக்குள்ளேயே இன்னும் இரண்டு வேலைநிறுத்தங்களானது சீனாவில் உள்ள இணை உதிரிப்பாக உற்பத்திக் கூடத்தில் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்துறை பூசல்களுடன், ஹொண்டா வேலை நிறுத்தங்களும் பெய்ஜிங், மற்றும் சர்வதேச நிதிய வட்டாரங்களிலும் பல மில்லியன் பேர் கொண்ட சீனத் தொழிலாள வர்க்கத்தில் பரந்த அமைதியின்மைக்கான திறன் பற்றி கணிசமான பதட்டத்தை தூண்டிவிட்டுள்ளது.
திங்களன்று போஷன் பெங்பு கார் உதிரிபாகங்கள் நிறுவனம், கூட்டு ஹொண்டாவிற்கு சொந்தமான துணை நிறுவனமான யுடகா கிகென்னும் தைவானின் புவீ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திலும் இரண்டாவது ஹொண்டா வேலைநிறுத்தம் வெடித்துள்ளது. இந்த உற்பத்திக் கூடத்தில் 460 தொழிலாளர்கள் குவாங்கி ஹொண்டா காருக்காக வாயு கழிவகற்றும் முறைகளைத் தயாரிக்கின்றனர். இந்த பொருத்துதல் கூடம் Accord, Odyssey, Fit மாதிரிகளுக்காக குவாங்ஜோவில் கொண்டுள்ளது. உதிரிபாகங்கள் போதுமான அளவு இல்லாததால், குவாங்கி ஹொண்டாவில் இரு ஆலைகள் செவ்வாயன்று உற்பத்தியை நிறுத்தின. இது அது மீண்டும் செயற்படத் தொடங்கிய சில நாட்களுக்குள் இது நடந்தது.
திங்களன்று காலை 20 தொழிலாளர்கள் ஆலை நுழைவாயிலில் தங்கள் சக ஊழியர்களைச் சேர்த்துக் கொண்டவுடன் வேலைநிறுத்தம் தொடங்கியது. நண்பகலுக்குள் 215 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர், மாலைக்குள் இது 250 என்ற எண்ணிக்கையை எட்டியது. ஹுனன் மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு 22 வயதுத் தொழிலாளி South China Morning Post இடம் முன்னைய ஹொண்டா கடத்திகள் தயாரிப்பு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தின் போது கட்டாயமாக விடுமுறை எடுக்குமாறு கோரப்பட்டனர் என்றும் அதன் பின் இழந்த மணிகளுக்காக கூடுதல் நேர ஊதியம் கொடுக்கப்படாமல் வேலை செய்யுமாறும் கட்டாயப்படுத்தப்படுத்தனர் என்றார்.
தொழிலாளர்கள் கடத்திகள் உற்பத்திக் கூடத்தில் முன்னர் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் இருந்து ஊக்கம் பெற்றனர். "அவர்களுடைய வேலைநிறுத்தம் வெற்றி அடையாமல் இருந்திருந்தால், இங்குள்ள நம் தொழிலாளிகள் இப்பொழுது கொண்டுள்ள ஒற்றுமையை ஒருபோதும் கொண்டிருக்கமாட்டார்கள்" என்று போஸ்ட்டிடம் ஒரு தொழிலாளர் கூறினார். மேலும் தொழிலாளர்கள் ஆலையிலுள்ள அரசு நடத்தும் தொழிற்சங்கத்தின் தலைவர் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அவர் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகத்தான் உள்ளார். ஆலையில் உள்ளவர்கள் மாதம் ஒன்றிற்கு மாற்றுகை உற்பத்திக் கூடத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெற்றதற்கு முன் வாங்கிய ஊதியத்தை விட 1,500 யுவன்கள் (அமெரிக்க $ 220) குறைவாகத்தான் பெறுகின்றனர் என்றும் அவர் கூறினார். நேற்று இரவு ஹொண்டா நிர்வாகம் வேலை நிறுத்தத்தை முடிப்பதற்கு உடன்பாட்டை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு மூன்றாவது வேலை நிறுத்தம் ஹொண்டா லாக் (குவாங்டாங்) ஜோங்ஷான் உற்பத்திக் கூடத்தில் புதனன்று காலை 930 யுவனில் இருந்து 1,600 ஆக மாத ஊதியம் உயர்த்தப்பட வேண்டும், தொழிலாளர்களை முறையற்று நடத்துவதற்காகப் பாதுகாப்புக் காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் மறுகட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கம் தேவை ஆகியவற்றைக் கோரித் தொடங்கியது. தொழிலாளர்கள் 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினர். ஒரு ஹொண்டா லாக் தொழிலாளி South China Morning Post இடம் பொலிசார் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது, ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை கொடுக்கப்படக்கூடும் என்று எச்சரித்து துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தனர் என்று கூறினார். மற்றொருவர், "நாங்கள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் செய்வோம். ஹொண்டா கார் உதிரிபாகத் தயாரிப்புத் தொழிலாளர்கள் பெறும் அதே ஊதியத்தைக் கேட்கிறோம்." என்றார்.
ஹொண்டாவில் நடைபெறும் அதிக வேலைநிறுத்தங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள ஒரு கட்டுரை கூறியது: "பல ஆலைகளிலும் தொழிலாளர்கள் தங்கள் செயல்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும், முதல் ஹொண்டா வேலைநிறுத்தத்தின் வெற்றி வெகுஜன நடவடிக்கை விளைவுகளைக் கொடுக்கும் என்று தொழிலாளர்களுக்குத் தைரியம் கொடுத்துள்ளது."
ஞாயிறன்று ஒரு தைவானிய கார் ஒலிக் கருவிப் பாகங்கள் ஆலையான Shenzhen ல் உள்ள Merry Electronics ல் ஒரு வேலைநிறுத்தம் நடந்ததை கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. அங்கு தொழிலாளர்கள் தங்களுடைய ஷிப்ட்டுக்களில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அருகிலுள்ள சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் கட்டுக்கு அடங்காமல் போய்விடும் என்ற பயத்தில் நிர்வாகம் 22 சதவிகித ஊதிய உயர்வை அறிவித்தது. நேற்று உள்ளூர் Shenzhen அரசாங்கமானது நகரத்தில் அரசாங்கத்திலும், தனியார் துறையிலும் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ஜூலையில் இருந்து 10 சதவிகிதம் தான் உயர்த்துவதாக அறிவித்தது.
மின்னணுப் பொருட்கள் தயாரிக்கும் பெருநிறுவனமான பாக்ஸ்கான் அது தன்னுடைய தொழிலாளர்களின் ஊதியத்தை 122 சதவிகிதம் உயர்த்தப் போவதாகவும், ஷென்ஜெனின் பெரிய ஆலையில் ஏற்பட்ட தற்கொலை அலையால் வந்த விரும்பத்தகாத விளம்பரத்தை எதிர்க்கும் என்றும் அறிவித்துள்ளது. அங்கு 400,000 தொழிலாளர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு முறைகள் போன்றவற்றில் உழைக்கின்றனர். அறிவிப்பைக் கொடுக்கையில், பாக்ஸ்கானின் பில்லியனர் தலைவர் டெரி கௌ, தன் நிறுவனம் அடிமை உழைப்புக் கூடம் அல்ல என்பதை நிரூபிக்க 80 மில்லியன் யுவன் ஐ அறக்கட்டளைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் என்றார்.
South China Morning Post கருத்துப்படி, பல பாக்ஸ்கான் தொழிலாளர்கள் இந்த அறிவிப்பு "ஒரு தந்திரம்" என்று பார்க்கின்றனர். ஊதிய உயர்வுகள் அளிக்கப்படும் அதே நேரத்தில் நிறுவனம் அதன் ஆலை நகர முறையை பரிசீலிக்கிறது, இதில் உணவு மற்றும் இடவசதி தொழிலாளர்ளுக்குக் கொடுப்பதும் அடங்கும். "தைவானில் ஒரு தொழிலாளி உணர்ச்சி வசப்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டால், அவருடைய முதலாளி பொறுப்பாக்கப்பட மாட்டார், ஆனால் சீனாவில் இங்கு நாங்கள் பாதிக்கப்படுகிறோம், ஏனெனில் அவர்கள் இங்கு எங்களுடைய கூட்டு இருப்பிடத்தில் தங்கித், தூங்குகின்றனர்" என்று கௌ விளக்கினார்.
இந்த வேலைநிறுத்தங்கள் நிதியச் செய்தி ஊடகங்களில் ஊதிய உயர்வுகளைப் பற்றிய விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளன. Deutsche Bank AG China உடைய தலைமைப் பொருளாதார வல்லுனரான Jun Ma, ப்ளும்பெர்க்கிடம் கூறினார். "தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சமூக உறுதிப்பாடு அச்சுறுத்தலுக்கு உட்படும்." ரென்மின் பல்கலைக்கழகத்தில் Institute of Labour Relations இயக்குனராக உள்ள Chang Kai, பேர்ல் ஆறு டெல்டாப் பகுதியில் குறைவூதிய ஆட்சி இருப்பது ஒரு சமூக வெடிப்பத்தன்மையை வளர்க்கிறது என்று கூறி ஹொண்டாவும் மற்ற நிறுவனங்களும் வேலைநிறுத்தங்கள் பரவுதலைத் தடுக்க ஊதிய உயர்வைக் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சில வர்ணனையாளர்கள் முதலாளிகள் கொடுக்க வேண்டும் என்று ஊக்கம் அளித்துள்ளனர். நேற்று பைனான்சியல் டைம்ஸ் பாக்ஸ்கான் ஊதியங்களை இருமடங்காக்கியுள்ளமை தொழிலாளர்கள் மீது பெரிய பாதிப்பைக் கொடுக்காது, ஏனெனில் தொழிலாளர் மீதான செலவினங்கள் மொத்தச் செலவினங்களில் ஒரு சிறு பகுதிதான் என்றார். "மேலும் பல பெரிய உற்பத்தியாளர்களும் ஊதிய உயர்வை உறிஞ்சிக் கொள்ளும் திறன் உடையவை. 1994ல் இருந்து 2008 வரை Normura மதிப்பீடுகளின்படி, தொழில்துறை நிறுவனங்கள் 21 சதவிகித ஆண்டு தொழிலாளர் உற்பத்தித் திறன் வளர்ச்சியை அடைந்தன, அதே நேரத்தில் ஆண்டு ஊதிய வளர்ச்சி 13 சதவிகிதத்திற்கு சற்றே கூடுதல்தான் என்று தெரியவருகிறது. மற்ற பகுப்பாய்வாளர்கள் ஊதிய அதிகரிப்பு உள்நாட்டு நுகர்விற்கு ஏற்றம் கொடுக்கும், பெய்ஜிங் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஊக்கப் பொதி செலவினத்தை நம்புவதைக் குறைக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் பேர்ல் ஆறு டெல்டாப் பகுதியில் விளையாட்டுப் பொருட்கள், காலணிகள், ஆடைகள், வீட்டுக் கருவிகள் இன்னும் பல பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் அதிக ஊதிய உயர்வைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் அதிக ஊதிய உயர்வு கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டால், ஆலைகள் மூடப்பட வேண்டும், அது அதிக வேலையின்மை சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும். ஷென்ஜன்னில் தைவான் வணிகர் கழகத்தின் துணை இயக்குனரான Tsau Cheng-fu செய்தி ஊடகத்திடம் புதிய ஆலைகள் பாக்ஸ்கானின் பல மில்லியன் டாலர் பொது உறவுச்செயல்களைப் பின்பற்றலாம் என்றார். உயரும் மூலப் பொருட்களின் விலை, யுவான் மறுமதிப்பிடப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தம், மற்றும் மேலை பெருநிறுவன வாடிக்கையாளர்கள் குறைவூதியம் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கசப்புடன் குறைகூறினார்: "ஆலை முதலாளிகள் தொழிலாளர் தொகுப்பை பிழிந்து எடுப்பதைவிட வேறு ஒன்றும் செய்ய முடியாது."
தொழிலாள வர்க்கம் முதலாளிகளுடனும் இறுதியில் சீன ஆட்சியுடனும் ஒரு மோதல் பாதையில் நகர்கிறது. பெய்ஜிங்கின் ஊக்கப்பொதி உள்கட்டுமானத் திட்டங்களில் குவிப்புக் காட்டுவது, உள் மாநிலங்களில் வேலைகளை தோற்றுவித்துள்ளது. இது முதல் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் பற்றாக்குறையை குவாங்டாங்கில் மட்டும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக பல நகரங்களும் இந்த ஆண்டு உத்தியோகபூர்வ குறைந்தபட்ச ஊதியங்களை உயர்த்தியுள்ளன. ஆனால் இந்த உயர்வுகள் , வீடுகள், உணவு இன்னும் அடிப்படைப் பொருட்களின் தீவிரமாக உயரும் விலைகளால் பயனற்றுப் போகின்றன.
இந்த வேலைநிறுத்தங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடத்தில் (CCP) அதன் பொலிஸ் அரச ஆட்சிக்கு எதிராக அரசியல் இயக்கம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சுறுத்தலைத் தூண்டியுள்ளது. நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் "புதிய வேலைநிறுத்த வடிவம் பெய்ஜிங்கிற்கு தொந்திரவு கொடுக்கிறது" என்ற தலைப்பில் வந்த கட்டுரை CCP அதிகாரத்துவத்தின் சில பிரிவுகள் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படும் எந்த ஊக்கமும் "கணிசமான அச்சுறுத்தல், ஏனெனில் இதேபோன்ற வேலைநிறுத்த அலையை அவை கொடுப்பது கட்சி மற்றும் அதன் உத்தியோகபூர்வ அமைப்பான All China Federation of Trade Unions ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சுயாதீனமான, நம்பகத் தன்மை உடைய குழுக்கள் ஒன்றாக வருவதற்கு உதவும்" என்று கருதுகின்றன என எழுதியுள்ளது. இக்கட்டுரை பிரச்சார அதிகாரிகள் சீனச் செய்தி ஊடக்திற்கு கடந்த வாரம் ஹொண்டா வேலைநிறுத்தங்கள் பற்றியோ பாக்ஸ்கான் தற்கொலைகள் பற்றியோ தகவல்கள் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அது தொடங்கியதில் இருந்தே, சீன ஆட்சியானது தொழிலாள வர்க்கத்தை பற்றி தீவிர பயம் கொண்டுள்ளது, பலமுறையும் பொலிஸ் அடக்குமுறையை வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்கள் ஆகிவற்றை அடக்குவதற்குப் பயன்படுத்தியுள்ளது. டாங்குகள், அதிக ஆயுதங்கள் உடைய துருப்புக்களை CCP தியன்மென் சதுக்க எதிர்ப்புக்களில் 1989ல் பயன்படுத்தியது. அதே நேரத்தில்தான் ஜனநாயக உரிமைகளுக்காகப் போரிட்ட மாணவர்களும், கணிசமான தொழிலாளர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கையை எழுப்பியவர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இப்பொழுது சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை வெடிப்பது விரைவில் பெருகும், ஆனால் நலிந்த பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரிக்கும். ஹொண்டா பங்குகள் டோக்கியோ பங்குச் சந்தைகளில் சரிகையில், நிக்கேய் வணிக ஏடு கடலோரச் சீனாவில் எழுச்சி பெறும் தொழில்துறை அமைதியின்மை வெளிநாட்டு முதலீட்டாளர்களை "அச்சுறுத்தி", அவர்களால் சீனாவின் உட்பகுதிகளுக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவிற்கு செல்ல வைக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இது பெய்ஜிங் இன்னும் அதிக வேலைநிறுத்தங்களை அடக்க வேண்டும் என்பதற்கான நயமான அழைப்பு அல்ல.
பொலிசும் வேலைநிறுத்தக்காரர்களும் ஏற்கனவே மோதிவிட்டனர். கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் வெள்ளியன்று தாய்வானியர்கள் நடத்தும் KOK International என்ற கிழக்கு ஜியாங்சு மாநிலத்தில் உள்ள குன்ஷான் நகர, தொழில்துறை பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகம் பல கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினர். அவற்றுள் ஆலையில் இருக்கும் பொறுக்க முடியாத வெப்பநிலைக்கு ஏதேனும் செய்ய வேண்டும், ஊதியம் கொடுக்கப்படாத கூடுதல் பணிநேரம், குறைவூதியம் ஆகியவை அடங்கியிருந்தன. பூசலில் தலையிட்டுத் தீர்ப்பதாகக் கூறிய உள்ளூர் அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராகப் பொலிசாரை அனுப்பிவைத்தது.
திங்களன்று பொலிசார் தொழிலாளர்களை அவர்கள் எதிர்ப்பை ஆலை கதவிற்கு வெளியே கொண்டுவந்தபோது தாக்கினர். இம் மோதல் ஒருமணி நேரம் நீடித்தது, 50 தொழிலாளர்கள் காயமுற்றனர், 30-40 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இளம் பெண் செய்தி ஊடகத்திடம் கூறினார்: "எங்களை பொறுப்பின்றி பொலிசார் அடித்தனர். அனைவரையும் அடித்து, மிதித்தனர். அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும். பல கலகப் பிரிவு பொலிசார் தரையில் விழுந்த ஒரு தொழிலாளியை அடித்து அதன் பின் அவரை தங்கள் வண்டிவரை இழுத்துச் சென்றதை நான் பார்த்தேன்." இத்தகைய வன்முறை இருந்தபோதிலும், தொழிலாளர்கள் செவ்வாயன்று தங்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.
தற்பொழுது பெய்ஜிங் ஒப்புமையில் எச்சரிக்கையாக செயல்பட்டுள்ளது. ஏனெனில் இன்னும் பரந்த தொழில்துறை நடவடிக்கையை அது தூண்ட விரும்பவில்லை. ஆனால் பரந்த இயக்கமாக வேலைநிறுத்தங்கள் அதிகரித்ததால், CCP தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது.
கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.
தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றி சீனாவில் இணைய தள விவாதம் |