சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

G-20 orders U-turn: from stimulus to austerity

G-20 ஊக்கப் பொதியில் இருந்து சிக்கன நடவடிக்கைகளுக்கு பாதையை திருப்ப உத்தரவிடுகிறது

By Nick Beams
7 June 2010

Use this version to print | Send feedback

கடந்த இரண்டு மாதங்களாக உலக நிதிய நெருக்கடி தீவிரமாகியுள்ளமைக்கு, உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் நிதி மந்திரிகள் நிதிக்கொள்கையின் பாதையை முற்றிலும் மாற்றிக் கொள்வதற்கு உத்தரவிட்டுள்ள வகையில் தமது பிரதிபலிப்பை காட்டினர்.

தென் கொரியாவில் ஜூன் 4-5 திகிதிகளில் நடைபெற்ற G-20 நிதி மந்திரிகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை, செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிந்த தற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிதிய ஊக்கப் பொதிகள் நிறுத்திவிடப்பட வேண்டும் என்றும் ஒரு புதிய சிக்கனத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நிதி மந்திரிகள் ஒன்றாக்கூடிப் பேசிய பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கை முடிவுரையாக “தொடர்ச்சியான பொது நிதிகளின் ஆதரவுக் கொள்கையை வளர்ச்சிக்கு பெரிதும் நம்பியிருக்கும் நாடுகளில் மீட்பு தனியார்துறை உந்துதலால் உறுதியாகும் வரை, மற்றும் நன்கு வேரூன்றும் வரை இது (ஊக்கப்பொதி) தொடரவேண்டும்.” எனக் கூறியிருந்தது.

இன்று வார்த்தைகள் முற்றிலும் மாறிவிட்டது. “சமீபத்திய நிகழ்வுகள் தொடர்ச்சியான பொதுநிதிகளின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டி, எமது நாடுகள் நம்பகத்தன்மை உடைய, வளர்ச்சிக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நிதிய நிலைத்திருக்கும் தன்மையை வளங்கி, தேசிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கும் விதத்தில் தக்க மாற்றங்கள் கொடுக்கப்பட வேண்டும். தீவிர நிதியச் சவால்களை கொண்டுள்ள நாடுகள் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ளும் வேகத்தை விரைவுபடுத்தும் தேவையை உணர்தல் வேண்டும்.”

பிரிட்டனின் புதிய நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன், இம்மாற்றத்திற்கு பெருமை தேட முற்பட்டுள்ளவர், இந்த புதிய சொற்கள் “நிதிய உறுதிப்படுத்திக்கொள்ளல் பற்றிய வார்த்தைகளின் குரல் ஒலிக்கும் விதம், G-20 ன் ஒப்புதலைப்பெறுவதற்கு ஒரு “குறிப்பிடத்தக்க வெற்றியாகும்” என்று கூறியுள்ளார்.

இந்தக் கொள்கை மாற்றம், நிதியச் சந்தைகளின் மகத்தான வெற்றி மற்றும் அரசாங்கத் திட்டங்களில் அவை செலுத்தும் கட்டுப்பாடு பற்றிய ஒரு வெளிப்பாடு ஆகும். ஹங்கேரியின் சந்தைகள், அதன் பிரதம மந்திரி, நாடு ஒரு கிரேக்க மாதிரியான நெருக்கடியை நோக்கிச் செல்கிறது என்று கூறியபின் சரிந்தபோது அந்தச் சக்தியின் ஆற்றல் பற்றி இக்கூட்ட ஆரம்ப தினத்தன்று தீவிர நினைவுக் குறிப்பை பெற்றது.

கிரேக்க அரசாங்கக் கடன் நெருக்கடி வெடித்தெழுந்தது, பின்னர் யூரோப்பகுதியில் நிதியக் கொந்தளிப்பு ஏற்பட்டது ஆகியவை நிதிய ஊக்கப் பொதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து அரசாங்க சமூகநலத் திட்டங்களின் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்களை தொடக்க வேண்டும் என்பதற்கான மிகத் தெளிவான அடையாளம் ஆயின.

“சர்வதேச கூட்டுழைப்பின் முக்கியத்துவம்” பற்றி கட்டாயமாகக் குறிப்பிட வேண்டிய சொற்றொடர் அறிக்கையில் இருந்தாலும், நிதிய ஊக்கப்பொதி பின்வாங்கப்பட்டுவிட்டதுடன் மற்றைய முடிவுகளும் G20க்குள் பிளவுகள் விரிவடைவதலை குறிக்கின்றன.

அரசாங்க ஊக்கப் பொதியைப் பொறுத்தவரையில், ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றொரு நாட்டின் ஏற்றுமதிச் சந்தையாக உள்ளது. எனவே கூட்டம் தொடங்குவதற்கு முன், அமெரிக்க நிதி மந்திரி டிம் கீத்னர் G-20 நிதிமந்திரிகளுக்கு ஊக்கப் பொதிகள் நடவடிக்கைகளை திரும்பப்பெறப்படல் எந்தப் பொருளாதார மீட்பையும் வலுவிழக்கச் செய்துவிடும் என்ற கவலையை தெரிவித்து கடிதம் எழுதினார்.

“நிதியச் சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கு தேவையானவை. ஆனால் பூகோள மீட்சியில் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தாவிட்டால் அவை வெற்றி அடைய முடியாது. இடைக்காலத்தில் நிதிய நிலைப்பாட்டை வளங்கும் திறனை நிரூபித்தல் என்பதே ஒரு சவால் ஆகும். இதற்கு ஒரு பொதுவான, வேறுபாடற்ற, உறுதிப்படுத்தும் திட்டங்கள் முன்னேற்றப்பட வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவிக்காமல் ஏதும் செய்ய முடியாது. நிதிய, நாணய ஊக்கப் பொதிகள் தேவையான முறையில் தவிர்க்க முடியாமல் திரும்பப் பெறவேண்டும் என்பது, நம் பொருளாதாரங்களில் தனியார்துறை மீட்பை வலுப்படுத்தும் முயற்சிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் எழுதினார்.

வேறுவிதமாகக் கூறினால், நீண்ட கால அடிப்படையில் நிதிய ஊக்கப் பொதித் தேவைகள் குறைக்கப்பட வேண்டும் என்றாலும், எல்லா அரசாங்கங்களும் ஒரே நேரத்தில் அத்தகைய திட்டத்தில் ஈடுபட்டால், அது உலகப் பொருளாதாரத்தில் கணிசமான சரிவை ஏற்படுத்தக்கூடும்; அதிலும் தனியார்துறையின் தேவை (demand) வளர்ச்சி விகிதங்களை தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக இல்லாத நிலையில். தன்னுடைய கடிதத்தில் அமெரிக்காவில் நுகர்வோர் தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கப் பொருளாதாரம் உலக ஏற்றுமதிகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள முடியவில்லை, “உலகத் தேவையில் மறுசீர் நிலையில் அதிக முன்னேற்றம் இல்லாத நிலையில், உலக வளச்சி விகிதங்கள் திறனைவிடப் பெரிதும் குறைந்து நிற்கும் இந்தப் பின்னணயில், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்நாட்டுத் தேவையில் கணிக்கப்படும் வலுவற்ற தன்மை பற்றி நாம் கவலை கொண்டுள்ளோம்.” என்று கீத்நர் எச்சரித்துள்ளார்.

மற்ற கவலைகளும் கூறப்பட்டுள்ளன. முன்னாள் நிதி மந்திரியும், தென்னாபிரிக்க உயரலுவலரான டிரெவர் மானுவல் கூட்டத்தை தொடர்ந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் “உலக மீட்பு எவ்வளவு நலிந்தது என்பதை அறிந்து கொள்ளுதல்” முக்கியமானது என்றார். உலகத் தலைவர்கள் “உலகம் ஒரு புதிய மந்தநிலைக்கு செல்வதை தடுக்கும்” வாய்ப்பைக் கொண்டுள்ளனர். “நாடுகள் வெளிக் கருத்துக்களை கேட்டு தங்கள் பன்முகப் பொறுப்புக்களைப் புறக்கணித்து தமது இறைமை வழியிலான முடிவுகளை எடுக்கும் போக்கை கொண்டுள்ளன” என்றார்.

சீன நிதி மந்திரி ஜி ஜுரென் G 20 நாடுகள் தற்பொழுதுள்ள நிதிய ஊக்கப் பொதித் திட்டங்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். நிதியக் கொள்கைகளில் சீனா “தீவிர நடவடிக்கை கொள்கைகளை தொடரும்”, “ஒரு நிதானமான தளர்ச்சி உள்ள நிதியக் கொள்கையைப் பின்பற்றும்” என்றார். சீனாவில் மத்திய வங்கியின் வலைத் தளத்தில் வெளிவந்துள்ள ஒரு அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சர்வதேச வங்கிகளை கட்டுப்படுத்துவது பற்றி முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றியும் பிளவுகளுக்கான அடையாளங்கள் தென்பட்டன. அமெரிக்காவும், இங்கிலாந்தும் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய மூலதனம் மற்றும் நீர்மை ஆகிவை அதிகரிக்கப்படுவதற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று முயல்கின்றன. ஆனால் ஐரோப்பிய சக்திகள் அவற்றை நீர்த்துவிடச் செய்கின்றன அல்லது அவை அறிமுகமாகவதை தாமதப்படுத்துகின்றன. ஏனெனில் அது ஐரோப்பிய வங்கிகளுக்கு மறுபடியும் மூலதனம் அளிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி, அவற்றின் கடன்கொடுக்கும் தன்மையில் வெட்டைக் கொண்டுவந்து, அதனால், அமெரிக்க, பிரிட்டிஷ் வங்கிகள் அவற்றின் சந்தைகளில் தலையீடு செய்ய வகை செய்யும்.

பிரான்சின் நிதி மந்திரி கிறிஸ்டீன் லாகார்ட் பிரான்ஸ் இந்த நிகழ்வுப்போக்கை தாமதப்படுத்த முயல்கிறது என்னும் கருத்தை மறுத்து, 2012 முடிவிற்குள் என்ற நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அது முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதை வலியுறுத்தினார். ஆனால் தன் கவலைகளைப் பற்றி குறிப்பில், இவ்வம்மையார் சேர்த்துக் கொண்டார்: “இப்பொருள் பற்றி தரமான தொழில்நுட்ப மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும்; அது அவசரமாகச் செயல்படுத்துவதற்கு உகந்தல்லாமல் சிக்கல் நிறைந்தது ஆகும்.”

கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸ் தளத்தைக் கொண்ட Bruegal சிந்தனைக் குழுவின் நிக்கோலோ வெர்னோன் தயாரித்த அறிக்கை ஒன்று ஐரோப்பாவில் உள்ள தேசிய வங்கி அலுவலர்கள் சில முக்கிய ஐரோப்பிய வங்கிகளின் “வருந்தத்தக்க நிலையை” மூடி மறைக்கின்றன, அவற்றின் உண்மையான நிலைமை வெளிப்படுத்தப்பட்டால், அவற்றை எடுத்துக் கொள்ள இலக்கைக் கொடுத்து விடும்” என்று கூறியுள்ளது.

G-20 கூட்டம், வங்கிகள் மீது ஒரு சர்வதேச வரிவிதிப்புத் திட்டத்தை செயலிழக்கச் செய்துவிட்டது போல் தோன்றுகின்றது. இதற்கு கடுமையான எதிர்ப்பு ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிடம் இருந்து அந்நாடுகளின் வங்கிகள் எந்த நேரடி பிணை எடுப்பையும் பெறவில்லை, ஆதலால் அவை ஒன்றும் வரி கொடுக்க வேண்டும் என்று வரக்கூடாது என்றன.

G-20 அறிக்கை அரசாங்கத் தலையீட்டிற்கான செலவுகளுக்கு நிதியத்துறை தமது பங்கினை கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடு காட்டினாலும், அத்தகைய நடவடிக்கைகள் “தனிநாட்டின் சூழல், விருப்பங்கள்” ஆகியவற்றைக் கணக்கில் கொண்டுதான் வளர்க்கப்பட வேண்டும் என்று சேர்த்துக் கொண்டது. பைனான்சியல் டைம்ஸ் இந்த அறிக்கை வாடிக்கையான அறிக்கை போன்றதே ஜார்கன் இதை ஒரு திட்டத்தின் இறப்பு பற்றி அறிவிக்கப் பயன்படுத்தப்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது.