World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Washington comes to aid of Israel over Gaza convoy massacre

காசா உதவி நிவாரண கப்பல் தொடரணியில் வந்தோரைப் படுகொலை செய்த இஸ்ரேலிற்கு வாஷிங்டன் உதவி செய்ய வருகிறது

By Jean Shaoul
2 June 2010

Back to screen version

காசாவிற்கு வந்து கொண்டிருந்த சர்வதேச உதவிக் கப்பல்கள் தொடரணியின் மீது நடத்தப்பட்ட கொலைகார அத்துமீறிய கடற் தாக்குதல் நடவடிக்கை பற்றிய விமர்சனங்களை குறைக்கும் விதத்தில் இஸ்ரேலின் உதவிக்கு ஒபாமா நிர்வாகம் விரைந்துள்ளதுடன், இராஜதந்திர விளைவுகள் மோசமடைவதையும் நிறுத்த முற்பட்டுள்ளது. திங்கள் அதிகாலை இஸ்ரேலிய படைகளானது தொடரணியை தாக்கியது சர்வதேசக் கண்டனங்களை தூண்டிவிட்டிருந்தது. இஸ்ரேலானது அதன் காசா மீதான மூன்றாண்டு முற்றுகையை நிறுத்த வேண்டும் என்ற முறையீடுகள் மற்றும் உலக எதிர்ப்புக்கள் ஆகியவற்றின் பின்னணியில் இது வந்துள்ளது.

ஒரு இஸ்ரேலிய கமாண்டோப் பிரிவு காசா கடலோரப்பகுதியில் இருந்து 70 மைல்கள் தொலைவில் சிமென்ட், சக்கர நாற்காலிகள், கடுதாசி, நீரைத்தூய்மையாக்கும் முறைகள் ஆகியவை அடங்கிய உதவிப் பொருட்களைக் கொண்டுவந்திருந்த ஆறு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு துருக்கிய உதவி அமைப்பான IHH எனப்படும் இன்சானி யார்டிம் வக்பி உதவிக்காக அனுப்பியிருந்த 3 கப்பல்களில் ஒன்றான மாவி மர்மரா பயணிகள் கப்பலில் கமாண்டோக்கள் ஏறி, இத்தாக்குதலை நடத்தினர்.

துருக்கி, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கிரேக்கம், கனடா, பெல்ஜியம், அயர்லாந்து இஸ்ரேல், இன்னும் பிற நாடுகளில் இருந்து வந்த 600 முதல் 700 வரை இருந்த செயற்பாட்டு ஆர்வலர்களை மாவி மர்மரா ஏற்றிக் கொண்டு வந்திருந்தது. இதில் இருந்த முக்கியமான பிரமுகர்களில் ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர் ஹென்னிங் மன்கெல், இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள், மூன்று ஜேர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு அரபு இஸ்ரேலியும் நெசட்டின் உறுப்பினருமான ஹனன் ஜுபி ஆகியோர் இருந்தனர். இஸ்ரேலிய கமாண்டோப் பிரிவு குறைந்தது ஒன்பது பேரைக் கொன்று டஜன் கணக்கானவர்களையும் காயப்படுத்தியது. பாதிப்பிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கியர்கள் என்று கருதப்படுகிறது.

இக்கப்பல்கள் இஸ்ரேலில் உள்ள Ashod க்குத் திருப்பிவிடப்பட்டன. குறைந்தது 40 பயணிகளாவது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் நிலை கவலைக்கிடம் என்று நம்பப்படுகிறது. ஆறு இஸ்ரேலிய படையினர்களும் குறைந்த, தீவிரக் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். நாடுகடத்தலுக்கு ஒப்புக் கொண்டு ஆவணங்களில் கையெழுத்திட மறுத்த பயணிகள் இஸ்ரேலில் உள்ள பல தடுப்புக் காவல் மையங்களுக்கு விசாரணைக்காகப் பிரித்து அனுப்பப்பட்டனர் அவர்களில் 50 பேர்தான் ஒப்புதல் கொடுத்திருந்தனர். தங்கள் பெயர்களைக் கொடுக்க மறுத்ததற்காக குறைந்தது 30 பேராவது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள், காயமுற்றவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், சிறையில் அடைப்பவர்கள் என்ற பட்டியலை இன்னமும் இஸ்ரேல் கொடுக்கவில்லை.

பாலஸ்தீன ஒற்றுமைச் செயற்பாட்டாளர்களின் சர்வதேசக் கூட்டணியான Free Gaza Movement என்னும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னும் இரு கப்பல்கள் ஒரு இஸ்ரேலிய முற்றுகைக்கு சவால் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கப்பல் Rachel Corrie என்று பெயரிடப்பட்டுள்ளது, ஒரு மாற்றப்பட்டுள்ள வணிகக் கப்பலானது இஸ்ரேலிய புல்டோசர் ஒன்றினால் கொல்லப்பட்ட அமெரிக்க ஆர்வலர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டது. ஏற்கனவே சைப்ரஸில் இருந்து வருவதாகவும் காசா நீர்நிலைக்கு ஜூன் 2 புதனன்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அதில் உள்ள பயணிகளில் 1976 நோபல் பரிசு பெற்றவரும் பாரிய இன அழிப்பில் (Holocaust) தப்பிப்பிழைத்தவருமான வடக்கு அயர்லாந்தை சேர்ந்த Mairead Corrigan-Maguire ம் உள்ளார்.

Jerusalem Post இடம் ஒரு இஸ்ரேலிய கடற்படைத் தளபதி இராணுவம் அடுத்த இரு கப்பல்களுக்கு எதிராகவும் வன்முறைக்கு தயாராக உள்ளது என்று குறிப்புக் காட்டினார். “நாங்கள் கப்பலில் ஏறினோம், ஏதோ போர் போல் தாக்கப்பட்டோம். அதன் பொருள் வருங்காலத்தில் ஒரு போருக்குத் தயாராவது போல் நாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான்.”

துருக்கிய கப்பலை இலக்கு கொண்டு கமாண்டோத் தாக்குதல் நடத்தி பெரும்பாலான துருக்கிய செயற்பாட்டாளர்களை கொன்றதற்கு துருக்கி தனது சீற்றத்தை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு கொடுத்த உரை ஒன்றில், பிரதம மந்திரி Recep Tayyip Erdogan இஸ்ரேலிய தாக்குதலை “குருதிகொட்டிய படுகொலை” என்று குறிப்பிட்டார்.

தற்பொழுது ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி பாதுகாப்புக் குழுவில் இருந்து ஒரு நீர்த்த அறிக்கையை ஏற்க வைப்பதற்கு ஒபாமா நிர்வாகம் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. மாலையும், இரவுமாக அவசரக் கூட்டத்தில் விவாதம் 11 மணி நேரம் இது பற்றி நீடித்திருந்தது.

அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் அதன் தடுப்பதிகாரப் பயன்பாடு என்பதின் விளைவாக ஐ.நா. நேரடியாக இஸ்ரேலை கண்டிக்கவில்லை. நிகழ்வு பற்றி ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதையும் அகற்றிவிட்டது. செயற்பாட்டாளர்கள் முறியடிக்க முற்பட்டிருந்த காசா மீதான பொருளாதாரத் தடைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அது வலுவிழக்கச் செய்தது.

“காசாவிற்கு சென்று கொண்டிருந்த தொடரணிக் கப்பல்களுக்கு எதிராக சர்வதேச நீர்நிலையில் இஸ்ரேலிய இராணுவச் செயலை ஒட்டி வந்த வலிமையை பயன்படுத்தியதால் எற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் பற்றி ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக” ஒரு அறிக்கையை பாதுகாப்புக் குழு வெளியிட்டது. கப்பல்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் குடிமக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், காசாவில் உள்ள நிலைமை “ஏற்கத்தக்கது அல்ல” என்றும் வலுவற்ற முறையிலும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் பற்றி ஒரு பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று கூறியது. வாஷிங்டன் இதற்கு இஸ்ரேலை அதன் மூடிமறைக்கும் செயலை விருப்பப்படி செய்யலாம் என்ற விளக்கத்தைக் கொடுத்துவிட்டது.

இஸ்ரேலிய நாளேடான Haaretz கருத்துப்படி ஒபாமாவின் வெள்ளை மாளிகையானது பிரதம மந்திரி பின்யமின் நெத்தன்யாகு மீது வாஷிங்டனுக்கு திட்டமிட்டிருந்த வருகை இரத்து செய்ய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை ஆதராத்தைக் காட்டிக் கூறப்படுகிறது. அந்த ஆதாரம் இரு உதவியாளர்களும் இது திங்கள் நடத்தப்படலாம் என்று பேசினார், ஆனால் அது செயல்படுத்தப்பட முடியவில்லை என்றார்.

வெள்ளை மாளிகை வலைத்தளத்தில் திங்களன்று நெத்தன்யாகுவுடன் ஒபாமாவின் தொலைபேசி உரையாடலின் சுருக்கம், கூட்டம் “அடுத்த முதல் வாய்ப்பில் நடத்த திட்டமிடப்படும்” என்று கூறுகிறது.

வெளியுறவுச் செயலகத்தின் படுகொலை பற்றிய அறிக்கை ஒன்று தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்தியதற்கான அதன் ஆதரவை இன்னும் தெளிவாக்கி, கொலைகளுக்குக் காரணம் பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் என்று காட்ட முற்பட்டுள்ளது.

அதனுடைய சொந்த குற்றம் பற்றிய “ஒரு முழு நம்பகத் தன்மை உடைய விசாரணையை நடத்துமாறு இஸ்ரேலிய அராசங்கத்தைக் கோரிய பின், “ஆனால், சர்வதேச உதவிப் பொருட்கள் கப்பலில் வருதல், அரசு சாரா அமைப்புக்களின் பணி இவற்றில் ஹமாஸ் தலையீடுவது மற்றும் வன்முறையை அது பயன்படுத்தி ஒப்புதலைக் கொடுத்தலானது காசா நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. அரசாங்கங்களும் குழுக்களும் உதவி செய்ய விரும்பினால் அதற்கான வழிவகைகள் உள்ளன. இவைதான் காசாவில் உள்ள அனைவருடைய நலன்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று அறிக்கையில் வெளியுறவுச் செயலம் சேர்த்துக் கொண்டது.

டெல் அவிவ்வின் நடவடிக்கைகளை எதிர்த்து லண்டன், மான்செஸ்டர், பாரிஸ், ஸ்வீடன், நோர்வே, இத்தாலி, சைப்ரஸ் இன்னும் கிரேக்கத்தில் 20 க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இன்னும் அதிகமானவை இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.

தன்னுடைய நடவடிக்கைகள் பற்றி இஸ்ரேல் ஒரு முழு இருட்டடிப்பிற்கு உத்திரவிட்டுள்ளது. இப்படித்தான் அது 2008-09 காசா மீதான தாக்குதல்களின் போதும் செய்திருந்தது. இதற்குக் காரணம் நிகழ்வுகளைப் பற்றிய இதன் கூற்றுக்கள்தான்- அதாவது கமாண்டோக்கள் தவிர்க்க முடியாத உதைபட்டு இறப்பதற்கு எதிரான தற்காப்பு முறையில்தான் செயல்பட்டனர் என்பது—மக்களிடையே பரப்பப்பட வேண்டும் என்பதுதான். முக்கிய செய்தி ஊடகங்கள் தணிக்கையை ஏற்று, பயணிகள் சிறையில் உள்ள நிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் செய்திகள் பற்றிப் பெரும் கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர். ஆஷ்டோடில் உள்ள கடற்படைத் தளத்திற்குச் செல்ல அனுமதி செய்தியாளர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டது. அது மூடப்பட்டுவிட்ட இராணுவப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமாண்டோக்கள் ஒரு சட்டபூர்வ முற்றுகையைச் செயல்படுத்தினர் என்று நெத்தன்யாகு கூறியுள்ளார். தற்காப்பிற்காகத்தான் அவர்கள் சுட்டனர் என்றும் கூறியுள்ளனர். இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி Avigdor Liberman ஐரோப்பிய தூதர்களிடம் கப்பலின் பயணிகள் “பயங்கரவாத ஆதரவாளர்கள், IDF சிப்பாய்கள் மீது கப்பலில் ஏறியவுடன் சுட்டனர்” என்றார்.

ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவின் திருத்தப்பட்ட காட்சியை IDF வெளியிட்டது. கப்பல் மேல்தளத்தில் ஒரு குழப்பம் இருந்தது, தன் படைகள் பெரும் ஆயுதங்களை சந்தித்தன, அதில் செயற்பாட்டாளர்கள் ஒரு படையினரை “கடத்த“ முயன்றனர் என்று காட்டப்படுவதாக அது கூறுகிறது. ஆனால் Yediot Aharonot செய்தித்தாளின் செய்தியாளர், அங்கு நேரடியாக பார்த்த Ron Ben shai உடைய கருத்துப்படி இந்த “ஆயுதங்கள்” தற்காலிகமாக தயாரிக்கப்பட்டவை, தாங்கள் அதிக எண்ணிக்கையினரால் சூழப்பட்டுவிட்டோம் என்ற பின், தங்கள் உயரதிகாரிகளிடம் இருந்து அனுமதியின் பேரில்தான் இஸ்ரேலியத் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தின என்று தெரிவிக்கிறார்.

படுகொலை பற்றிய இஸ்ரேலிய வர்ணனை, மாவி மர்மரா கப்பலின் தளத்தில் இருந்த பயணிகளால் முழுமையாக மறுக்கப்படுகின்றன. சுடுகின்ற ஒலி, எரிவாயு குண்டுகளைப் பயன்படுத்தி கப்பல்களில் ஏறி, உண்மையான தோட்டாக்களை ஆயுதமற்ற சாதாரண மக்கள் மீது, ஒரு வெள்ளை சமாதானக் கொடி காட்டியும்கூட, இஸ்ரேலிய கமாண்டோக்கள் தாக்குதலைத் தொடக்கினர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மற்ற கப்பல்களில் இருந்த பயணிகளுக்கு வன்முறை பிரயோகம் இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் கூறியதற்கு மாறாக, பிளாஸ்டிக் தோட்டாக்களால் சுடப்பட்டு, உதைகளையும், துப்பாக்கிக் கட்டைகளால் அடியும், மின் ஸ்டென் துப்பாக்கியையும் பயன்படுத்தியிருந்தனர். செயற்பாட்டாளர்கள் மேல்தளத்தில் படுக்குமாறு வற்புறத்தப்பட்டு கமாண்டோக்களால் மிருகத்தனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

“அவர்களை விசாரிக்கும்போது, பலரும் மோசமான முறையில் எங்கள் கண்கள் முன்பு தாக்கப்பட்டனர்” என்று துருக்கியக் கப்பலுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த Free Mediterranean என்னும் கப்பலில் வந்த பயணி Aris Papadokostopoulos கூறினார்.

நெசட்டின் முன்னாள் உறுப்பினர், மற்றும் இஸ்ரேலின் கஷ் ஷலோம் அமைதிக் குழுவின் தலைவருமான Uri Avnery, “அரசாங்கமும் இராணுவச் செய்தித் தொடர்பாளர்களும் கூறும் பொய்களையும் காரணங்களையும் உலகில் எவரும் நம்பமாட்டார்கள்” என்றார்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் பொதுச் சட்டப் பேராசிரியரும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் சிறப்பு அதிகாரியுமான ரிச்சார்ட் பாக் இத்தாக்குதல் “கடல் நடுவே ஒரு தெளிவான குற்றச் செயல் ஆகும்” என்றார்.

“இக்கப்பல்களில் இருந்தவர்களிற்கு ஓரளவு தற்காப்பு உரிமை உண்டு, ஏனெனில் இஸ்ரேல் என்று இல்லாமல் இவர்கள்தான் தூண்டுதலற்ற ஒரு தாக்குதலின்கீழ் வந்தனர்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தாக்குதல் ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா ஆகியவற்றிற்கு எதிராக போரை நடத்த ஒரு காரணம் தேட இஸ்ரேல் தூண்டிவிட்ட நிகழ்ச்சிகள்தான் இவை என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. அதன் முற்றுப்பெறாப் போர்களை முடிக்கப்பெறா விடயங்கள் என்றுதான் டெல் அவிவ் காண்கிறது: முதலில் 2006 லெபனானில், பின்னர் 2009-09 ல் காசாவில்.

கப்பல்கள் தொடரணி மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது இஸ்ரேலின் உள் பாதுகாப்பு மந்திரிசபையால் ஒப்புதல் பெறப்பெற்றது. இதற்கு பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் தலைமை தாங்குகிறார். இதை உறுதிபடுத்திய IDF, “இந்த IDF கடற்படைத் தாக்குதல் அரசியல் தலைமையின் உத்தரவின் கீழ் நடத்தப்பட்டது” என்றார்.

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்புக்கள் எழுந்து காசாவில் அழுத்தங்கள் பெருகின. ஐ.நா. அறிக்கை வெளிவந்த உடன், காசாவின் எல்லையில் இஸ்ரேலுடன் துப்பாக்கிச் சூட்டுப் பறிமாற்றங்கள் இருந்தன. இதில் இரு பாலஸ்தீனியப் போராளிகள் உயிரிழந்தனர். பின் இஸ்ரேலிய விமானங்கள் ஐந்து பாலஸ்தீனிப் போராளிகளைக் கொன்றன.

அரேபிய உயர்மட்டக் கண்காணிப்புக் குழு இஸ்ரேலிய அரேபியர்களிடையே ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தது. எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கி பொலிசார் உயர்மட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலானது பிராந்தியம் முழுவதும் அழுத்தங்களை எரியூட்டியுள்ளது. பெய்ரூட், டமாஸ்கஸ், பாக்தாத் மற்றும் தெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி, முற்றுகையை செயல்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருப்பது, குறிப்பிடத்தக்க வகையில் பேதம் காட்டும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் கருத்து வலிமை மற்றும் கெய்ரோவில் வெளியுறவு அமைச்சரகத்திற்கு வெளியே நடந்த எதிர்ப்புக்களின் வலிமையை ஒட்டி, காசாப் பகுதிக்கும் எகிப்திற்கும் இடையே உள்ள ராபா எல்லைக் கடப்பை மனிதாபிமான உதவி செல்லுவதற்கு அனுமதிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால் எத்தனை நாள் இது நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

மிக வலுவான விடையிறுப்பு துருக்கியில் இருந்து வந்தது. அங்கு இஸ்ரேலுக்கு எதிரான சீற்றம் மிகுந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேலின் நீண்ட கால இராணுவ நட்பு நாடான அங்காரா, தன் தூதரை டெல் அவிவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு கூட்டு இராணுவப் பயிற்சிகளை இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி, துருக்கிக்கு பயணிக்கும் திட்டமுடைய மக்களை தாமதப்படுத்த அல்லது பயணத்தை இரத்து செய்யுமாறு கோரி, துருக்கியில் உள்ள இஸ்ரேலியர்கள் தாயகம் திரும்புமாறும் வலியுறுத்தியுள்ளார்.

துருக்கிய பாராளுமன்றத்தில் ஒரு மணி நேரம் பேசிய —இது முன்னோடியில்லாத விதத்தில் அதே நேரத்தில் ஆங்கிலம், அரபு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது— துருக்கிய பிரதம மந்திரி எர்டோகன் கூறினார்: “இஸ்ரேலின் சட்டமற்ற தன்மையை இனியும் மூடிமறைக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது. காசாப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்து சென்றிருந்த இக்கப்பல்கள் மீது நடத்தப்பட்டுள்ள குருதி கொட்டிய படுகொலைகள் அனைத்துவிதச் சாபங்களுக்கு உட்படும். சர்வதேச சட்டம், மனிதகுலத்தின் மனச்சாட்சி மற்றும் உலக அமைதி ஆகியவற்றிற்கு எதிராக இத்தாக்குதல் நடந்துள்ளது. குருதி கொட்டியது பற்றித் தன் கைகளை இஸ்ரேல் கழுவிவிட முடியாது.”

இஸ்ரேலிய தாக்குதலை நேரடியாகக் கண்டிக்காததற்காக துருக்கிய அரசாங்கம் வாஷிங்டனை குறை கூறியுள்ளது: “நாங்கள் தெளிவான கண்டனத்தை எதிர்பார்க்கிறோம்” என்று வெளியுறவு மந்திரி Ahmet Davutoglu செவ்வாயன்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹில்லாரி கிளின்டனையும், ஒபாமா நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸையும் சந்திக்கப் புறப்படுகையில் கூறினார்

“எங்களுடன் முழு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். “இது துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எது விரும்பப்படுகிறது என்று காணப்படக்கூடாது. சரி, தவறு இவற்றிற்கு இடையே, சட்டத்திற்குட்பட்டது, சட்டவிரோதம் என்பவற்றிற்கு இடையே எது என்று காணப்படவேண்டும்” என்று Davutoglu சேர்த்துக் கொண்டார்.

துருக்கிய அரசாங்கமானது காசாவிற்கு செல்லும் தொடரணிகளுக்குப் பாதுகாப்பாக கடற்படைக் கப்பல்களை அனுப்புமா என்று கேட்கப்பட்டதற்கு வெளியுறவு மந்திரி அத்தகைய நடவடிக்கை பற்றி அரசாங்கம் முடிவெதுவும் எடுக்கவில்லை என்றார்.

பெயரிடப்படாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளை மேற்கோளிட்டு Jerusalem Post, துருக்கிய போர்க் கப்பல்கள் செயல்படுதல் இருக்காது என்று கருதுகையில் நேட்டோவில் துருக்கிய உறுப்புத்தன்மையை கொண்டுபார்க்கும்போது, டெல் அவிவ்வுக்கு “இது பெரும் கவலையளிப்பதுதான்” என்றார்.

“இது வரக்கூடிய வாய்ப்புத்தான், இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று ஒரு மூத்த இராணுவ அதிகாரி செய்தித் தாளிடம் செவ்வாயன்று கூறினார். இது இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு மோதலுக்குத் தயாராகிறது, அப்பகுதியல் இது ஒரு பேரழிவுப் போரைத் தூண்டக்கூடும் என்பதைத் தெரிவிக்கிறது.