WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
One year since the GM bankruptcy
ஜெனரல் மோட்டர்ஸ் திவாலின் ஓராண்டிற்கு பின்னர்
Jerry White
4 June 2010
Use this version to print | Send
feedback
ஓராண்டிற்கு முன் இவ்வாரத்தில், அமெரிக்க கார்த் தொழிலின் மாபெரும் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய தொழில்துறைத் தோல்வியாக திவாலாவதை அறிவித்தது. ஒபாமா நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்ட ஜூன் 1, 2009 திவால் பதிவு செய்யப்படலால் பல்லாயிரக்கணக்கான வேலைகள் அழிப்புக்கள், டஜன் கணக்கான இணைப்புப்பிரிவுகள், உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட கார் விற்பனை நிலையங்கள் மூடப்படல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
உலக கார்த் தயாரிப்பாளர் திவாலானது சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் கனடாவில் பணிநீக்கங்கள், பெல்ஜியத்தில் ஓப்பல் ஆலை மூடப்படலால் ஜேர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 8,300 வேலைகள் தகர்க்கப்பட்டமை ஆகியவையும் அடங்கும்.
2012ல் ஜெனரல் மோட்டார்ஸின் மறுகட்டமைப்புத் திட்டம், அமெரிக்காவில் அதன் அமெரிக்க வேலைத் தொகுப்பில் இருந்த 96,000 பேராக இருந்ததில் இருந்து 31,000 மணித்தியால மற்றும் மாதாந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அகற்ற வைத்தது. இந்த நடவடிக்கை ஜெனரல் மோட்டார்ஸின் ஊதியச் செலவுகளை 30 சதவிகிதம் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இது மிச்சிகன், ஒகையோ இன்னும் பிற பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் உள்ள நகரங்களிலும் சமூகங்களிலும் விளைவுகளை மிகக் கொடூரமான முறையில் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடங்களில் மிகஅதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை இழந்து கொண்டிருக்கின்றனர், உள்ளூர் அரசாங்கங்களும் பள்ளிகளும் போதிய பணமில்லாது உள்ளன.
வேலை வெட்டுக்களைத் தவிர ஜூலை 10. 2009 அன்று திவால் நீதிமன்றங்களில் இருந்து வெளிப்பட்ட புதிய பெயரான "புதிய ஜெனரல் மோட்டார்ஸில்" ஊதியங்கள், மற்றும் சலுகைகள் இரக்கமின்றி குறைக்கப்பட்டன. அமெரிக்க நிதி அமைச்சரகம் ஆணையிட்டிருந்த விதிகளின் படி, ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் சுமத்தியிருந்த விதிகளின்படி, தற்போதைய தொழிலாளர்களின் ஊதியங்கள் உயர்த்தப்படாது வைக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கைச் செலவின உயர்விற்கான படிகள் அகற்றப்பட்டுவிட்டன, இடைவெளி நேரங்கள், விடுமுறை தினங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டன, மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பற்கள் மற்றும் கண்கள் பாதுகாப்பு உட்பட மருத்துவ நலன்கள் குறைக்கப்பட்டுவிட்டன.
அடுத்த தலைமுறை கார்த் தொழிலாளர்கள் இன்னும் மோசமான நிலைமையை எதிர்கொள்வர். புதிய தொழிலாளர்களின் ஆரம்ப சம்பளம் 14$ இருப்பதுடன், வருடாந்த மொத்த வருமானம் வரிகள், சங்கக் கட்டணங்கள் வெட்டப்படுவதற்கு முன்னால் $28,000 ஆக இருக்கும். இது சராசரி அமெரிக்க வீட்டு வருமானத்தில் பாதிக்கும் குறைவாகும். அரசாங்கத்தினால் பெரிதும் குறைமதிப்பிற்குட்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வறுமைக்கோட்டு நுழைவிடத்திற்கு சற்றே அதி்கமாக இருக்கும். ஒரு நூற்றாண்டில் முதல் தடவையாக கார்த் தொழிலாளிகள் தாங்கள் கட்டமைக்கும் கார்களை வாங்கும் திறன் இல்லாமல் இருப்பர்.
City Investment Research பகுப்பாய்வாளர் இத்தாலி மைக்கேலி கடந்த வாரம் ஜெனரல் மோட்டார்ஸின் நிரந்தர செலவினம் வாகனம் ஒன்றிற்கு கடந்த ஆண்டின் $10,400 என்பதில் இருந்து இந்த ஆண்டு $7,280 என்று குறைந்துவிட்டது, 2012 க்குள் $5,772 எனக்குறைந்துவிடும் என்று பெருமை பேசியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் (இது ஏப்ரல் 30, 2009ல் திவால் பதிவு செய்தது) தொழிலாளர் செலவுகள் அமெரிக்காவில் இருக்கும் எந்த தொழிற்சங்கம் அற்ற கார்த்தயாரிப்பு நிறுவனத்தின் ஊதியத்தைவிட மிகக் குறைவாக இருக்கும். இதனால் ஒரு நிறுவனத்திற்கு மெக்சிகோவைவிட அமெரிக்காவிலேயே சிறிய கார்களை தயாரிப்பது இலாபமாகப் போகும்.
இதன் விளைவாக இக்கார்த்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதன் நிகர வருமானம் $865 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒப்புமையில் $6 பில்லியனை இழந்ததாகவும் அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ள நிலையில், சமூகங்களும் வாழ்க்கை நடத்துதலும் அழிவிற்குட்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் உடைமையில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகள் விற்பனைக்கு வரும்போது வோல் ஸ்ட்ரீட் பெரும் இலாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"திட்டமிட்டபடி ஜெனரல் மோட்டார்ஸின் ஆரம்ப பங்குகள் பகிரங்க விற்பனைக்கு வரும்போது வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் 2008 சந்தை கரைப்பிற்குப் பின் மிகப்பெரிய இலாபத்திறன் வரக்கூடிய நாளைப் பற்றி நாக்கில் உமிழ்நீர் சுரந்தபடியுள்ளனர்." என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறித்துள்ளது. சில பகுப்பாய்வாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகள் விற்பனை நிகரமாக $70 பில்லியனைக் கொடுக்கக் கூடும் என்று கணித்துள்ள நிலையில் (ஒரு பங்கு $113 ல் இருந்து $137 வரை என) பெரும் நிதிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட $2 பில்லியனை கட்டணமாகப் பெறும். இது வரலாற்றில் ஒரு பங்கு பற்றிய விற்பனையில் மிக அதிக இலாபம் ஆகும்.
வோல் ஸ்ட்ரிட்டில் "bake-off" என்று அழைக்கப்படும், ஜே.பி.மோர்கன் சேஸ், மோர்கன் ஸ்டான்லி, பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிக்ரூப் மற்றும் கோல்ட்மன் சாஷ்ஸ் ஆகியவற்றின் உயர்மட்ட வங்கியாளர்கள் தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிதி அலுவலர்களுடன் பேச்சுக்கள் நடத்தி ஒபாமா நிர்வாகம் அவர்களை முக்கிய பங்கு விற்பனையளர்களாக இந்த ஏற்பாட்டில் தேர்ந்தெடுக்க நம்ப வைக்கின்றனர்.
வெள்ளை மாளிகையின் "கார் மன்னர்கள்" ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் திவாலை மேற்பார்வையிட்ட மற்றொரு வோல்ஸ்ட்ரீட் நிறுவனமான லாசர்டின் முன்னாள் நிர்வாகிகள் ஆவர். இந்த நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸின் $40 பில்லியன் மதிப்பு பங்கு விற்பனை குறித்து ஆலோசனை தருமாறு அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டது. $600 மில்லியன் நிகர மதிப்புடையவர் என்று கருதப்படும் தனியார் பங்கு முதலீட்டாளர் ஸ்டேவென் ரட்நெர் நியூயோர்க் மாநில ஓய்வூதிய நிதியத்தில் செழித்த முதலீடுகளில் பெற்றார் என்று கூறப்படும் அவருடைய ஒரு சட்டவிரோத பணம் பெறுதல் திட்டத்தில் இருப்பதற்காக பாதுகாப்பு, மாற்றீட்டு ஆணையத்துடன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.
பெரிய முதலீட்டாளர்களை தவிர ஐக்கிய கார் தொழிலாளர் சங்கமும் (UAW) பல பில்லியன்களை ஜெனரல் மோட்டார்ஸ் பங்கு விற்பனையில் இருந்து பெறும் நிலையில் உள்ளது. வேலைகள், பணி நிலைமைகள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின் அழிப்புக்களில் அதன் ஒத்துழைப்புக்கு ஈடாக, ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்திற்கு பல பில்லியன் டாலர் மதிப்புடைய சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகம், இயக்குனர் குழுவில் இடம், ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகளில் 17.5 சதவிகிதம் மற்றும் கிறைஸ்லர் உடைமையில் பெரும்பான்மை ஆகியவை அளிக்கப்பட்டன.
அமெரிக்க பிரஸ் அசோசியேஷன் முன் கடந்த மாதம் பேசிய வெளியேறும் ஐக்கிய கார் தொழிலாளர் சங்க தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் கடந்த தசாப்தத்தில் பலமுறை விட்டுக்கொடுத்த சலுகைகளை பற்றி நியாயப்படுத்தி பேசினார். கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பொழுது "சிறப்பாக" செயல்படுகின்றன, ஜெனரல் மோட்டார்ஸ் இலாபத்தைக் காண்கிறது. கிறைஸ்லர் ஒரு தசாப்தத்தில் முதல் தடைவையாக கார்த் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கிறது என்றார்.
புதிய தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் இருப்பதால் அவர்கள் கார் வாங்கும் திறன் இல்லாமல் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டபோது, கெட்டில்பிங்கர் ஊதியக் குறைப்புக்களை பாதுகாக்கும் வகையில் "நாளை செல்வதற்கு நேற்று என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம்" என்றார். ஒபாமாவின் முடிவான திவால் நீதிமன்றங்களை பயன்படுத்துவதையும் அவர் பாராட்டினார்; அது "சரியான அணுகுமுறை" என்றார். "ஜனாதிபதி விரைந்து செயல்பட்டு அவர் செய்ததை செய்வதற்கு நிறைய தைரியத்தைக் கொண்டிருந்தார் என்று நான் உறுதியாக நினைக்கிறேன், ஆனால் இருந்த குறுகிய நேரத்தில் அது ஒரு பெரிய முடிவாகக் காணப்படும்" என்றார்.
ஜூன் 1, 2009ல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: "கிறைஸ்லரையும், இப்பொழுது ஜெனரல் மோட்டார்ஸையும் திவாலில் தள்ளிய விதத்தில், ஒபாமா நிர்வாகம் பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவில் வர்க்க உறவுகளை அடிப்படையாக மறுகட்டமைக்க பயன்படுத்துகிறது. இதற்கு அடிப்படைத் தொழிற்துறையில் வேலை நீக்கலை செய்யவதும் உள்ளடங்கியிருப்பதுடன், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் பாரியளவும் நிரந்தரமானதுமான வெட்டுக்கள் கொண்டுவரப்படும்."
இந்த எச்சரிக்கை செயலுக்கு வந்துவிட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட மிருகத்தனமான பணிநிலைகள் ஊதிய, நலன்கள் குறைப்பிற்கு அடையாளக் குறியீடாகவும், தொழில்துறை மற்றும் பொதுத்துறை முழுவதும் முன்னொருபோதும் இல்லாதவாறான தாக்குதலை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு போன்ற நலன்களை "திறனற்றவை" எனப்படுபவற்றை தகர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இத்துடன் இணைந்தது. தவிர, பொதுக் கல்வி, இன்னும் பிற முக்கிய சமூக நலன்கள் தகர்ப்பும் கோரப்படுகின்றன.
"ஜெனரல் மோட்டார்ஸ் திவாலின் படிப்பினைகள்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையாளர் போல் இன்கிராசியா இவ்வாரம் முன்னதாக எழுதிய தலையங்கத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது. அவர் எழுதினார்: "தொழிலாளர்களுக்கு கால வரையற்று வேலை செய்யாமல் இருப்பதற்கு (ஐக்கிய கார் தொழிலாளர் சங்க வேலைகள் வங்கி) தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது நகைப்பிற்கு இடமானது, தொடர இயலாது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அதேபோல் தங்க முலாம் பூசிய ஓய்வூதியம், சுகாதாரக் பாதுகாப்பு நலன்களை ஊழியர்களுக்குக் கொடுக்கவும் இயலாது."
இதன் பின் இன்கிராசியா சேர்த்துக் கொள்ளுகிறார்: "நாம் நிலைக்கத் தக்கதற்ற மத்திய ஆட்சி பற்றாக்குறையை கொண்டுள்ளோம் என்பதை அனைவரும் அறிவர். பல மாநிலங்களின் பொதுஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதிகள் அவர்கள் கொடுக்கும் நலன்களுடைய தரத்தைப் பார்க்கும்போது மிகமிகக் குறைவான நிதியங்களைக் கொண்டிருக்கின்றன. அடிப்படைச் சீர்திருத்தங்களை அல்லது பொறுப்புத் தன்மையை வலியுறுத்தாமல் இன்னும் அதிக பணத்தை பொதுப் பள்ளிகளில் கொட்டுவது என்பது தக்க விளைவுகளைக் கொடுக்கவில்லை, வருங்காலத்திலும் கொடுக்காது."
"இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தவிர்க்க முடியாமல் செலவினக் கட்டுப்பாடு மற்றும் பொது ஊழியர் சங்கங்களை எதிர்த்துநிற்றல் தேவை, அதை ஜெனரல் மோட்டார்ஸ் ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் செய்யத் தவறியது. தொடர்ந்து மறுத்தல் மற்றும் தாமதப்படுத்துதல் அழிவிற்கு இடமளிக்கும். வேறுவிதமாகக் கூறினால், ஜெனரல் மோட்டார்ஸை அமெரிக்கா பிணை எடுத்தது. ஆனால் அமெரிக்காவை யார் பிணை எடுக்கப் போகிறார்கள்?'
பெருநிறுவனத்தின் உயர் வட்டங்களில், அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறைக்குள் தொழிலாளர்கள் ஏழ்மையாக்கப்படுவது வேண்டும் "என்பதை அனைவரும் அறிவர்." ஆனால் தொழிலாள வர்க்கம் நிதிய நெருக்கடிக்குப் பொறுப்பு அல்ல, நிதிய உயரடுக்கின் பொறுப்பற்ற ஊக நடவடிக்கைக்கு விலையும் கொடுக்கக் கூடாது. அந்த அடுக்கு மில்லியன் கணக்கான வேலை அழிப்புக்கள், அடிப்படைத் தொழில் அழிப்பு, மற்றும் நகரங்கள், மாநிலங்கள் மற்றும் கிரேக்கம் ஸ்பெயின் போன்ற நாடுகளின் திவாலில் தன்னை செழிப்பு உடையதாக ஆக்கிக் கொண்டது.
சமுதாயம் இனியும் பெருநிறுவன, நிதியப் பிரபுத்துவத்தின் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுண்ணித்தன செயற்பாடுகளுக்கு நிதியளிக்க இயலாது. மாறாக, பெருவணிக இருகட்சி முறையில் இருந்து சுயாதீனமாக, அவற்றை எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்; அது சமூகத்தின் தொழில்துறை, நிதிய ஆதாரங்களை செல்வக் கொழிப்பு உடையவர்களின் கரங்களில் இருந்து அகற்றி தொழிலாளர்களின் கூட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்.
அத்தகைய போராட்டத்திற்கு முன்னிபந்தனை, ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் மற்றும் அதன் பிற்போக்குத்தன வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகள், பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு ஆகியவற்றுடன் முறித்துக் கொள்ளுவதும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு புதிய அமைப்புக்களை நிறுவுவதும் ஆகும்.
|