சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The socialist response to the Gulf oil crisis

வளைகுடா எண்ணெய் நெருக்கடிக்கு சோசலிசப் பதில்

Joe Kishore and Patrick Martin
1 June 2010

Use this version to print | Send feedback

மெக்சிகோ வளைகுடா அடிப்பகுதியில் இருந்து தொடர்ந்து எண்ணெய் கசிவு வெளிவருவது முற்றுமுழுதான ஒரு பேரழிவு ஆகும். இது கணக்கிடமுடியாத பொருளாதாரச், சுற்றுச் சூழல் விளைவுகளை ஏற்படுத்தும்.

பல வாரங்களாக சுயாதீனமான விஞ்ஞான வல்லுனர்கள் அமெரிக்க வரலாற்றில் இது மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என்று கூறிவருவதை ஒபாமா நிர்வாகம் இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது. Deepwater Horizon பகுதியில் இருந்து தடுக்கமுடியாத எண்ணெய் பரவல் ஆகஸ்ட் இறுதிக்குள் கூட நிறுத்தப்பட முடியும் என்பதற்கு வாய்ப்புக்கள் குறைவுதான்.

அரசாங்க விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கலன்கள் எண்ணெய் ஒவ்வொரு நாளும் கசிந்துவெளிவந்த வண்ணம் உள்ளன என்று மதிப்பிட்டுள்ளனர். பிற விஞ்ஞானிகள் இந்த விகிதத்தை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். கோடை இறுதியை ஒட்டிக் குறைந்தது நூறு மில்லியன் கலன்களாவது வளைகுடாப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும். இது 1989 Exxon Valdez கசிவைவிட பல மடங்கு அதிகம் ஆகும். மிக மோசமான காட்சி என்ற சொல்லக்கூடிய நிலையில், முழு இருப்பும் வெளியேறி விடலாம். எவருக்கும் இங்கு எந்தளவு எண்ணெய் இருக்கின்றது என்று தெரியாது.

வளைகுடாப் பகுதியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீன்பிடித்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கைக்கான ஆதாரங்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். பல உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடலாம், நலிந்த சுற்றுச்சூழல் முறைகள் பேரழிவிற்கு உட்பட்டுவிட்டன.

இன்று உத்தியோகபூர்வமாக சூறாவளி/புயல் பருவம் தொடங்குகிறது. குறைந்தது 6 பெரிய புயல்கள் அமெரிக்க நிலப்பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வெண்ணெய்த் திரட்டில் குறுக்கிட்டு வரக்கூடிய ஒரு பெரிய சூறாவளிப்புயல் கச்சா எண்ணெய் மற்றும் இரசாயன கலைப்பான்கள் இரண்டையும் கடலோரப் பகுதிக்குள்ளும் சுற்றுச்சூழலிலும் சேர்த்துவிடும். இது பொதுச் சுகாதாரத்திற்குக் கணக்கிட முடியாத விளைவுகளை உருவாக்கும்.

இந்நிகழ்விற்கு உலகளாவிய தாக்கங்கள் உள்ளன. ஏற்கனவே நடந்திருக்கவில்லை என்றால், இந்த எண்ணெய் விரைவில் “தொடர் வெள்ளம்” என்பதுடன் இணைந்து விடும். அது திரட்டை பிளோரிடா தெற்குமுனைக்கு அருகே இழுக்கும். அங்கிருந்து வளைகுடா நீரோட்டம் நச்சுக்கழிவை அமெரிக்க கிழக்கு கடல் பகுதிக்குப் பரப்பக்கூடும். இறுதியில் இது அட்லான்டிக்கைக் கடந்து மேற்கு ஐரோப்பிய கடற்கரைக்குச் செல்லும்.

பேரழிவின் பாரியதன்மைக்கும் அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் பிரதிபலிப்பிற்கும் இடையே பெரும் பிளவு உள்ளது. ஆரம்பத்தில் இருந்து, நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறைமதிப்பிடும் வழிவகை திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டது. ஒபாமா நிர்வாகம் பல வாரங்கள் ஏதும் செய்யவில்லை. அதன் முக்கிய அக்கறை பிரிட்டிஷ் பெட்ரோலிய பேரழிவு கடலில் எண்ணெய் எடுப்பதை விரிவாக்கும் திட்டங்களை தடுத்துவிடுமோ என்று தான் இருந்தது. புஷ்ஷைப் போலவே ஒபாமாவும் இதற்குத் தீவிர ஆதரவைக் கொடுத்திருந்தார்.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்துடனான உறவைப் பொறுத்தவரை, நிர்வாகம் ஒரு முழு முடக்கத் தன்மையைத்தான் காட்டியுள்ளது. அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மாபெரும் நிறுவனங்களின் நலன்களுடன் மோதும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் மீண்டும் நிற்கிறது.

கசிவை எதிர்கொண்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் முழுப் பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டது. நிர்வாகம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம்தான் நிலைமையைச் சமாளிக்க உரிய விஞ்ஞானத் திறன் உள்ளது என்ற கருத்தையே வலியுறுத்தி வருகிறது. ஒரு தந்திரோபாயத்தை தொடர்ந்து மற்றொரு தந்திரோபாயத்தைத்தான் நிர்வாகம் இதற்குப் பயன்படுத்தியுள்ளது. இவை அனைத்துமே முக்கியமாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் அல்லது அரசாங்கத்திடம் அவசர நெருக்கடித் திட்டம் ஏதும் இல்லை என்ற உண்மையை மூடி மறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒபாமா நிர்வாகம் “கோபமாகவும், வெறுப்புடன்” இருப்பதாகவும் கூறும் வெற்றுச் சொற்களைக் கையாண்டால் போதும் என்ற கருதுகோளுடன் செயல்படுகிறது. இச்சொற்றொடரின் பொருள் மக்கள் சீற்றத்தை எப்படியும் நன்கு சோதிக்கப்பட்டுள்ள செய்தி ஊடக உத்திகளையும் பொதுஉறவுகள் வித்தையையும் பயன்படுத்தினால் போதும் என்பதுதான்.

ஆனால் மக்கள் சீற்றமோ ஒவ்வொரு நாளும் பெருகி வருகிறது. இந்தச் சீற்றமும் எதிர்ப்பும் ஒரு அரசியல் முன்னோக்கால் ஆயுதபாணியாகப்பட வேண்டும். இது இந்தப் பேரழிவிற்கு நேரடிப் பொறுப்பு கொண்டுள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் இன்னும் பிற பெருநிறுவனங்களுக்கு எதிராக மட்டுமின்றி, இத்தகைய பேரழிவைக் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாது என்று செய்துள்ள முழு அரசியல் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிராகவும் இயக்கப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் இப்பேரழிவை எதிர்பார்க்க முடியாத ஒன்று என முன்வைத்தாலும், இது பல தசாப்தங்களாக நடைபெற்றுவரும் “தடையற்ற சந்தை” கொள்கைகளின் விளைவுதான். அவைதான் பெருநிறுவன இலாபத் தயாரிப்பிற்கு எதிராக உள்ள அனைத்து தடுப்புக்களையும் அகற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு நாள் கடக்கப்படும்போதும், எப்படி பிரிட்டிஷ் பெட்ரோலியம் பாதுகாப்பு நெறிகளை வேண்டுமென்றே குறைத்து வந்தது என்பது பற்றிய அதிக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கு வசதியாக மத்திய கனிமப்பொருட்கள் நிர்வாகம் (Minderals Managerment Service-MMS) உள்ளது. அது வெடிப்பு ஏற்படும் தினம் வரை பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் செயல்கள் அனைத்திற்கும் முத்திரையிட்டு ஒப்புதல் அளித்தது. வரவிருக்கும் பேரழிவு பற்றி ஏராளமான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் எண்ணெய் தோண்டுதலைத் தொடர உறுதி கொண்டிருந்தது. அதே நேரத்தில், கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஆதரவு கொடுக்கும் பின்னணி முயற்சிகளும் நிறுவப்படவில்லை. எண்ணெய் தொழிற்துறை அதிக செலவுகளை இதற்காகச் செய்யத் தயாராக இல்லை.

எண்ணெய் தொழில் செயல்களைக் கட்டுப்படுத்துதல், எண்ணெய்த் தொழிற்துறையிடத்திலேயே விட்டு வைக்கப்பட்டது. மத்திய கனிமப்பொருட்கள் நிர்வாகம் மற்றும் அரசாங்கம் பெருநிறுவன நலன்களுக்கு இணைக்கருவிகள் போல்தான் செயல்பட்டு வந்தன. இத்தகைய உறவு சற்றும் குறைவின்றி ஒபாமாவின் கீழும் தொடர்ந்தது. 2009ம் ஆண்டு நிர்வாகம் ஒரு நீதிமன்றம் புஷ்ஷின் கடல் பகுதி எண்ணெய் எடுத்தல் திட்டம் பொதுமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகளைக் கொள்ளவில்லை என்று தீர்ப்பளித்ததும் நேரடியாக குறுக்கீடு செய்தது. உள்துறை மந்திரி கென் சலாசர் வளைகுடாப் பகுதியில் எண்ணெய் எடுத்தல் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி குறிப்பாக Deepwater Horizon இனையும் மேற்கோளிட்டிருந்தார்.

உலக சமூகம் எப்படி தனியார் நிறுவனங்களின் அழிவுதரக்கூடிய செயற்பாடுகளின் பாதிப்பிற்கு உட்படக்கூடும் என்பதற்கு இப்பேரழிவு மற்றொரு நிரூபணம் ஆகும். அவற்றின் வழிகாட்டும் கொள்கை இலாபமும், செல்வக் கொழிப்பு மற்றும் தனிப் பங்குதாரர்களின் நலன்கள்தாம்.

இராணுவத்திற்கும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கும் அரசாங்கம் மகத்தான வளங்களைக் கொடுக்க உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க மக்களுக்கு ஒருவித பயங்கரவாதத் தாக்குதல் பெரிதும் உள்ளது என்னும் போலிக்காரணத்தை இதற்காகக் காட்டியுள்ளது. ஆயினும்கூட, கடந்த தசாப்தத்தின் போக்கில், மிகப் பெரிய பேரழிவுகள் மாபெரும் நிறுவனங்களாலும், முதலாளித்துவ முறையினாலும்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 2005ல் கத்தரீனா சூறாவளி அமெரிக்காவின் சமூக உள்கட்டுமானத்தின் சரிவை அம்பலப்படுத்தியது. 2008ல் நிதி நிறுவனங்களின் செயல்முறைகள் உலகையே ஒரு பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியது. இப்பொழுது பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் மெக்சிகோ வளைகுடாப் பகுதியை நச்சுக்குட்பட வழிவகுத்துவிட்டன.

இப்பேரழிவை சமாளிக்க அவசரக்கால நடவடிக்கைகள் தேவையாகும். முதலில் பரந்த பொருளாதார, சமூக வளங்கள் இயன்றளவு சுற்றுச் சூழல் பேரழிவைக் குறைப்பதற்கு திரட்டப்பட்டு இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைகளை அளிப்பதற்கு முயல வேண்டும். பிரிட்டிஷ் பெட்ரோலியம் உழைக்கும் திறனுடையவர்களிடம் மிகச் சிறிய சதவிகிதத்தையே வேலைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நிறுவனம் என்றவகையில் அதன் அடித்தளமான குறிக்கோளில்தான் கவனமாக நிற்கிறது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம், டிரான்ஸ் ஓஷன், ஹாலிபர்ட்டன், இன்னும் பிற நிறுவனங்களின் நடவடிக்கள் பற்றிய ஒரு குற்ற விசாரணை தொடக்கப்பட வேண்டும். உயர்மட்ட நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டு இப்பேரழிவிற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

விஞ்ஞானிகள் மற்றும் பிற வல்லுனர்களின் சர்வதேசக் குழு ஒன்று கூட்டப்பட வேண்டும். இது அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக இருந்து பேரழிவின் பரப்பு பற்றியும் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் நிர்ணயிக்க வேண்டும். பிரிட்டிஷ் பெட்ரோலியம், மற்றும் எண்ணெய்த் தொழில்துறையை மூடிமறைக்க எதையும் செய்யத்தயாராக உள்ள ஒபாமா நிர்வாகம் அல்லது அரசியல் நடைமுறையின் எப்பிரிவின்மீதும் நம்பிக்கை வைக்கப்படலாகாது.

நாட்களும் வாரங்களும் கடந்து செல்லுகையில், பேரழிவின் பாதிப்பு அதிகரிக்கும். ஏனெனில் எதிர்பார விளைவுகள் வெளிச்சத்திற்கு வரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இப்பேரழிவின் செலவினங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் என்று இருக்கும். இதற்கான இருப்புக்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்துதான் வரவேண்டும். பிரிட்டிஷ் பெட்ரோலியமும் மற்ற எரிசக்தி நிறுவனங்களும் உடனடியாகத் தேசியமயமாக்கப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்க, உலகப் பொருளாதாரங்கள் ஒரு இன்னும் பரந்த சோசலிச மறுசீரமைப்பின் பகுதியாக விளங்க வேண்டும். இப்பேரழிவு முதலாளித்துவ முறையின் வரலாற்று திவால்தன்மையின் வெளிப்பாடு ஆகும். இது சோசலிசம் பிரதியீடு செய்யப்படவேண்டும். அதாவது தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல், சமூகத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்திற்கான போராட்டத்திற்கு வழிவகுக்க சோசலிச சமத்துவக் கட்சி தலைமை ஏற்றுள்ளது. இத்திட்டத்துடன் உடன்படுபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் இத்திட்டத்திற்குப் போராடுமாறும் வலியுறுத்துகிறோம்.