WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Tense standoff between two Koreas
இரு கொரியாக்களுக்கும் இடையே அழுத்தம் நிறைந்த மோதல்
By Peter Symonds
28 May 2010
Back to screen version
மார்ச் மாதம் ஒரு தென்கொரிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து வடக்கு, தென் கொரியா ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல், இந்த வாரம் வாஷிங்டனுடைய ஆதரவுடன் சியோல் திங்களன்று தொடர்ச்சியாக பல பதிலடி நடவடிக்கைகளை அறிவித்ததுடன் தீவிரமாயிற்று.
நேற்று ஒரு பெரிய தென்கொரிய கடற்படைப் பயிற்சிக்கு விடையிறுக்கும் வகையில், வட கொரிய கடற்படை அவசரத் தொலைத் தொடர்பை துண்டிக்கப்போவதாகவும் இரு கொரியாக்களுக்கும் இடையே மஞ்சள் கடல் பகுதியில் பிரசினைக்குட்பட்ட பகுதியில் மோதல்களை தவிர்க்கும் நோக்கம் கொண்டிருந்த ஒரு 2001 உடன்பாட்டை இரத்து செய்ய இருப்பதாகவும் அறிவித்தது. தன்னுடைய நிலப்பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் ஏதேனும் ஊடுருவல்கள் இருந்தால் "விரைவான பதிலடித் தாக்குதல்கள்" மூலம் அவற்றிற்கு விடையிறுப்பு கொடுக்கப்படும் என்று பியோங்யாங் எச்சரித்தது.
ஒரு தென்கொரிய போர்ச் சிறு கப்பலான சியோனன் மார்ச் 26ம் திகதி 46 கடற்படையினருடன் கடலில் மூழ்கியது. கடந்த வாரம் ஒரு தென்கொரியத் தலைமையிலான விசாரணை ஒரு வடகொரிய கடலுக்கடியிலான ஏவுகணைதான் சியோனனை தாக்கியது என்று கண்டறிந்துள்ளது. இந்த நிகழ்வில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பியோங்யாக் கூறியதுடன் சியோல் சான்றுகளைத் போலியாகதயாரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது.
நேற்று நடத்தப்பட்ட தென்கொரிய கடற் பயிற்சிகளில் 10 போர்க் கப்பல்கள், ஒரு 3,500 டன் அழிப்புக்கப்பல் உட்பட, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தயாரிப்புக்களுடன் ஈடுபட்டன. பல முறையும் பிரச்சினைக்குட்பட்ட பகுதிக்கு தெற்கே நிலைப்பாடு கொண்டிருந்த போதிலும், இப்பயிற்சி அழுத்தங்களை அதிகரிக்கத்தான் உதவின. தென்கொரிய, அமெரிக்க கடற்படைப்பிரிவுகள் ஜூலை மாதம் இரு முக்கிய கூட்டுப் பயிற்சிகளை நடத்தத் திட்டம் இட்டுள்ளன.
கடல் எல்லை பற்றிய மோதல் 1953 கொரியப் போர் முடிந்ததில் இருந்து தொடங்கியுள்ளது; அப்பொழுது அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒருதலைப்பட்சமாக வடக்கு எல்லைக் கோட்டை நிர்ணயித்த்து. அது வடகொரியாவால் ஏற்கப்படவே இல்லை. பியோங்யாக் தான் வரையறுத்த எல்லையை 1999ல் அறிவித்தது. அது பிரச்சினைக்குட்பட்ட பகுதியில் 1999 க்கும் 2002க்கும் இடையே பெரும் மோதல்களுக்கு வழிவகுத்தது. அத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் வழிவகைகளின் முறிவு இப்பொழுது இன்னும் பிரச்சினைக்கான ஆபத்தை அதிகரித்துள்ளது.
ஒபாமா நிர்வாகம் மோதலுக்கு இன்னும் எரியூட்டும்விதத்தில் தென்கொரிய ஜனாதிபதி லீ ம்யூங்பாக்கிற்கு ஒருதலைப்பட்ச ஆதரவை அறிவித்துள்ளது. புதனன்று தன்னுடைய ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன், சியோனன் மூழ்கடிக்கப்பட்டது "வடகொரியா நிகழ்த்தியுள்ள ஏற்கத்தகாத அத்திரமூட்டும் செயல்" என்றும் "இதற்கு வலுவான, ஆனால் நிதானமான பதிலளிப்பு" கொடுக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா தென்கொரிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது; அதில் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் வடகொரியாவிற்கு எதிரான தண்டனை நடவடிக்கைகள் தேவை என்ற குரல்கொடுப்பும் இருக்கும்.
இந்த நிகழ்வைப் பயன்படுத்தி வாஷிங்டன் சீனாவிற்கும் அதன் நீண்ட கால நட்பு நாடாகிய வடகொரியாவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயல்கிறது. லீயை சியோலில் சந்தித்த பின்னர் பேசிய கிளின்டன் பின்வருமாறு அறிவித்தார்: "சீனா உட்பட அனைவருடைய நலன்களுக்கும் உகந்தது வடகொரியா தன் போக்கை மாற்றிக் கொள்ள தக்க அறிவுறுத்தல் தேவை என்பதுதான்." பெய்ஜிங் தென்கொரிய அரசாங்கத்தின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது பற்றிய அறிக்கையின் கண்டறிதல்கள் ஆய்வுசெய்யுமாறும் அவர் பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் பல பிரச்சினைகள் பற்றி மூன்று நாட்கள் விவாதித்த பின்னர் இப்பொழுதுதான் சீனாவை விட்டு நீங்கியுள்ளார். நியூ யோர்க் டைம்ஸ் கருத்துப்படி, "திருமதி கிளின்டன் கொரிய மோதலில் தனித்து நிற்கும் சீனப் போக்கை மாற்றுவதற்கு கடினமாக முயற்சித்தார். சீனத் தலைவர்களுடன் அவர் பல மணிநேரப் பேச்சுக்களை தென் கொரிய அறிக்கையில் நுட்பமான கருத்துக்கள் பற்றிக் கொண்டார்; வட கொரியாவின் தொடர்பு பற்றி மற்ற சான்றுகளையும் எடுத்துக் கூறினார்."
ஆனால் இன்று வரை சீனா தென்கொரியாவின் குற்றச்சாட்டுக்களை ஏற்கவும் இல்லை, வட கொரியாவின் மறுப்புக்களுக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. புதனன்று அமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவை ஐக்கிய நாடுகள் சபை முறையாகக் கண்டிப்பதற்கு சீனா ஆதரவு கொடுக்கக்கூடும் என்று கூறினர். ஆனால் சீன வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் மா ஜாவோக்சு பின்னர் சீனாவின் நிலைப்பாடு மாறவில்லை என்று அறிவித்தார். "இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கல் வாய்ந்தது. சீனாவிற்கு நேரடியான தகவல் ஏதும் வரவில்லை. அனைத்துப்புறத்திலும் வரும் தகவல்களை நாங்கள் கவனத்துடன் பரிசீலிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
சீனா பெருகிய முறையில் ஒரு கடினமான சமநிலைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. வடகொரியாவிற்கு எதிராக அதன் அணுவாயுத சோதனைகள் பற்றி ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு கொடுத்தாலும், சீனா தன்னுடைய நட்பு நாட்டைக் கைவிடத் தயாராக இல்லை, ஏற்கனவே ஆழ்ந்த பொருளாதார, அரசியல் நெருக்கடியைக் கொண்டிருக்கும் நாட்டிற்குப் பிரச்சினைகளை அதிகரிக்கவும் விரும்பவில்லை. வடகொரிய ஆட்சியின் சரிவு சீனாவிற்குள் வெள்ளமென அகதிகள் வருவதற்கு வகை செய்யும் என்றும், சீன எல்லையில் ஒரு இடைத்தாங்கி நாடாக இருப்பதின் பங்கு முடிந்துவிடும் என்றும் பெய்ஜிங் கவலை கொண்டுள்ளது.
அதே நேரத்தில் தென் கொரியாவுடன் மலரும் பொருளாதார உறவுகளையும் சீனா கொண்டுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் விளக்குகிறது; "தென்கொரிய நிறுவனங்கள் இப்பொழுது சீனாவின் உற்பத்தி சக்திக்கூடத்தின் அளிக்கும் சங்கிலியின் இணைந்த பகுதிகள் ஆகும். சீனாவில் சாம்சுங் 16 ஆலைகளைக் கொண்டுள்ளது, ஹுயாண்டை சீனச் சந்தையில் ஏற்றமிகு வணிகத்தைக் கொண்டுள்ளது. சீனச் சந்தைக்காக கூட்டு முயற்சியில் பெய்ஜிங் நகரசபையின் சொந்தக் கார்த் தயாரிப்பாளருடன் ஈடுபட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே வாரத்திற்கு ஒரு விமானப் பயணம்தான் இருந்தது. இப்பொழுது 642 தடவை செல்ல முடியும்."
சீனப் பிரதமர் வென் ஜிபாவோ இன்று சியோலுக்கு ஜப்பான், தென்கொரியாவுடன் ஒரு முத்தரப்பு உச்சிமாநாட்டிற்குச் செல்ல உள்ளார். அங்கு அவர் வடகொரியாவிற்கு எதிராக தண்டனை நடவடிக்கை கொடுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு கட்டாயம் உட்படுவார். தன்னுடைய பங்கிற்கு ஜப்பானியப் பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா கடற் கப்பல் நிகழ்வை பயன்படுத்தி கடந்த ஆண்டு தேர்தலின் போது தான் கொடுத்த உறுதியான அமெரிக்காவுடன் உடன்பாடு மீண்டும் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்படும், அமெரிக்க இராணுவத் தளம் ஓகினாவாவில் இருந்து அகற்றப்படும் என்பது மாற்றப்பட்டுவிட்டதை நியாயப்படுத்துவார்.
தென்கொரிய ஜனாதிபதி லீ இப்பிரச்சினையைப் பயன்படுத்தித் தன்னுடைய கட்சியின் வாய்ப்புக்கள் அடுத்த மாதம் வரவிருக்கும் உள்ளூர் தேர்தல்களுக்கு ஏற்றம் கொடுக்கவும் மற்றும் தன்னைப் பற்றிக் குறைந்த கருத்துக் கணிப்புக்களுக்கு ஏற்றம் கொடுக்கவும் உறுதி கொண்டுள்ளார். வலதுசாரி Grand National Party (GNP) ஐ சேர்ந்த லீ தன்னுடைய உடனடியான இரு முந்தைய பதவியில் இருந்தவர்கள் வடகொரியாவை வெளிநாட்டு முதலீட்டுக்கு திறப்பது பற்றிய கருத்துக்களைக் குறைகூறியிருந்தார். திங்களன்று அவர் வட கொரியாவுடன் அதிக வணிக, முதலீடு ஆகிய செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
GNP பிரச்சாரத்தை எதிர்கொள்ள முற்பட்டுள்ள தென்கொரிய எதிர்க்கட்சிகள் அரசாங்கம் சியோனன் மூழ்கடிக்கப்பட்டதை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி விசாரணையின் கண்டுபிடிப்புக்களையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன. ஜனநாயகக் கட்சி ஒரு தனி பாராளுமன்ற விசாரணை இது பற்றி வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வூ சாங் ஹோ கடந்த வாரம் அரசாங்க விசாரணையின் முடிவுகள் "அனைத்துச் சந்தேகங்களையும் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை" என்று அறிவித்தார்.
மூழ்கடித்தலை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் ஜனாதிபதி லீ எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். கொரியத் தீபகற்பத்திற்குள் எழும் அழுத்தங்கள், ஐரோப்பியப் பொருளாதாரக் கொந்தளிப்பால் அதிகமாகப் போகின்ற என்பதோடு தென்கொரிய நாணயத்தையும் பங்குச் சந்தைகளையும் சரிவிற்கு உட்படுத்தியுள்ளன. தன்னுடைய பதிலடி பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து வடகொரிய எல்லையில் இருந்து சற்றே அருகில் உள்ள கேசாங் தொழில்துறை வளாகத்தை நீக்குவதில் கவனமாக இருந்தார். இந்த வளாகம், இரு கொரியாக்களாலும் கூட்டாக இயக்கப்படுவது மொத்தத்தில் 120 தென்கொரிய ஆலைகளைக் கொண்டு 45,000 வடகொரியத் தொழிலாளர்களை பணியில் கொண்டுள்ளது. கேசாங் வளாகம் மூடப்படும் என்ற8 அச்சறுத்தல் கொடுக்கப்பட்ட போதிலும், வட கொரியா இதுவரை அவ்வாறு செய்யவில்லை.
ஆனால் கொரியத் தீபகற்பத்தில் நிலைமை ஆபத்தான முறையில்தான் உள்ளது. இரு பகுதியினரிலும் எவரும் முழுமோதலை விரும்பவில்லை என்றாலும் இராணுவப் பிரிவுகள் முழு எச்சரிக்கையான நிலையில் உள்ளன. அமெரிக்கத் தளத்தைக்கொண்ட சிந்தனைக்குழு Stratfor கூறியுள்ளபடி, "அழுத்தங்கள் அதிகமாக இருக்கையில், இரு பக்கமுமே தங்கள் நாடுகள் வரையறுத்துள்ள பிரச்சினைக்குட்டபட்ட எல்லைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், போர் விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறு மோதல் பரந்த போராக விரிவடையக்கூடிய தன்மை பெரும் கவலையைத்தான் கொடுக்கிறது."
|