சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Socialist candidate blocked from addressing building workers rally

Unions deflect anger over Labor’s prosecution of South Australian construction worker

கட்டிடத் தொழிலாளர்கள் அணிவகுப்பில் பேசுவதற்கு சோசலிச வேட்பாளர் தடை செய்யப்பட்டார்

தெற்கு ஆஸ்திரேலிய கட்டிடத் தொழிலாளர் மீது தொழிற் கட்சி அரசாங்கக் குற்ற விசாரணையை பற்றிய சீற்றத்தை தொழிற்சங்கங்கள் திசைதிருப்புகின்றன

By Alex Messenger
21 July 2010

Use this version to print | Send feedback

கூட்டாட்சி தொழிற் கட்சி அரசாங்கத்தின் கட்டிட தொழிற் கண்காணிப்பு அமைப்பின் வினாக்களுக்கு விடையளிக்க மறுத்ததற்கு குற்றச் சாட்டுக்களை கொண்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய கட்டிடத் தொழிலாளி Ark Tribe மீதான விசாரணை நேற்று அடிலெய்ட் குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. அடிலெய்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிட்னியில் 2,000 தொழிலாளர்கள் இன்னும் இதேபோல் எண்ணிக்கையில் மெல்போர்னில் தொழிலாளர்கள் டிரைப்பிற்கு ஆதரவாக ஒன்று கூடி அணிவகுத்தனர். அவர் 6 மாதம் சிறைத் தண்டணை பெறக்கூடும்.

சிட்னியில், தொழிலாளர்கள் சிட்னி துறைமுகத்தில் உள்ள பெரும் Barangaroo கட்டிடப் பகுதியில் தளத்திற்கான உதவிப் பணப் படியை தரவேண்டும் என்று முதலாளிகளை கோரியுள்ளனர். இவர்கள் நகரத்தின் தெருக்களில் சிட்னி நகர அரங்கில் இருந்து Barangaroo திட்டத்தின் தலைமை ஒப்பந்தக்காரர் போவிஸ் லெண்ட் லீஸ் அலுவலகம் வரை அணிவகுத்துச் சென்றனர்.

ஆனால் தொழிற்சங்கங்கள், ருட் அரசாங்கத்தின் பணியிடப் பிரிவு மந்திரியாக இருந்த, தற்பொழுது பிரதம மந்திரியாக இருக்கும் ஜூலியா கில்லார்ட் உறுதிமொழி பற்றிய விவாதங்களைத் தடுத்து விட்டனர். அவரோ டிரைப்பிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட கட்டாயப்படுத்தும் அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ABCC எனப்படும் ஆஸ்திரேலிய கட்டிட, கட்டமைப்புக் குழுவின் அதிகாரங்களை Labor’s Fair Work Australia தொழில் துறை நீதிமன்றத்தின் சிறப்புப் பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள அமைப்பு, கட்டமைப்புத் தொழிலில் “காவலில் உள்ள புதிய பொலிஸ்” என்று கில்லார்ட் விவரித்திருந்தார்.

A section of the Sydney protest
சிட்னி ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பிரிவினர்

பேச்சாளர்களில் எவரும் கில்லார்ட் பற்றியோ கடந்த மாதம் வணிக ஆதரவு கொண்ட சதி ஒன்று அவருக்கு முன்பு பதவியில் இருந்த கெவின் ருட்டைத் திடீரென அகற்றியது பற்றியோ கூறவில்லை. சுரங்க நிறுவனங்கள் மற்றும் பெருவணிகங்கள் ருட் அகற்றப்பட்டதில் கொண்டிருந்த பங்கு பற்றி தொழிற்சங்க அலுவலர்கள் கொண்டிருக்கும் பதட்டத்தை இது நிரூபிக்கிறது. அதேபோல் 2008ல் மெல்போர்ன் வெஸ்ட்கேட் பாலம் கட்டமைப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அதை கருங்காலிகள் மூலம் கலைத்து இழிவு பெற்ற கில்லார்டின் விடையிறுப்பு பற்றியோ ஏதும் பேசவில்லை.

இந்த அணிகளுக்குப் பின் இருந்த நோக்கம் தெளிவானதுதான். தொழிலாளர்களின் சீற்றத்தை கில்லார்டிடம் இருந்து திசைதிருப்பி தொழிலாளர்கள் மீண்டும் ஆகஸ்ட் 21 கூட்டாட்சித் தேர்தலில் தொழிற் கட்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு செய்வதுதான். தொழிற் சங்கத் தலைவர்கள் லிபரல் எதிர்க்கட்சி தலைவர் டோனி ஆபொட்டை கண்டித்துப் பேசினர். அவர் மறுபடியும் முந்தைய ஹோவர்ட் அரசாங்கத்தின் “வேலை விருப்பங்கள்” எனப்படும் தொழில்துறை உறவுகள் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவார் என்று கூறினார். உண்மையில் கில்லார்டின் “நியாயமான வேலை” என்பது பற்றிய சட்டங்கள் “வேலை விருப்பங்களில்” இருந்த அனைத்து வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

2005ல் முதன்முதலில் ஹோவர்டின் தொழிற் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய, ஆனால் கில்லர்டின் விருப்பப்படி தயக்கமின்றி 2007 முதல் தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தொழில்துறை சட்டங்களின் கீழ் டிரைப் குற்ற விசாரணைகு உட்படுத்தப்பட்டுள்ளார். அடிலெய்டில் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டு வேலையை நிறுத்துதல் பற்றிய கூட்டம் ஒன்று தொடர்பான வினாக்களுக்கு விடையிறுக்க மறுக்கும் குற்றம் டிரைப் மீது சுமத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அந்த இடத்தில் தொடர்ந்து இருந்து பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Ark Tribe
ஆர்க் டிரைப்

கட்டிடம் கட்டும் நிறுவனமான Hindmarsh Constructions பொலிசை அழைத்ததுடன், மறுநாள் தொழிலாளர்களையும் ஆலைக்கு வெளியே நிறுத்திவிட்டது. “சட்டவிரோத” தொழில்துறை நடவடிக்கைக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமுடைய ABCC, ஹிந்த்மார்ஷ் நிறுவனத்தின் சார்பாகக் குறுக்கிட்டு டிரைபும் மற்ற தொழிலாளர்களும் தங்கள் சக தொழிலாளிகளைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியது. ABCC முன் கொண்டுவரப்படும் தொழிலாளர்களுக்கு, மிக மோசமான குற்ற விசாரணைகளில் இருக்கும் ஜனநாயக உரிமையான பேசாமல் இருக்கும் உரிமை கூடக் கிடையாது.

நேற்று டிரைபின் வக்கீல்கள் ABCC க்கு டிரைபை கேள்வி கேட்கும் உரிமை உண்டா என்று வினவினர். ABCC விசாரணைக் குழுவில் ஒருவரான Seamus Flynn, குறுக்கு விசாரணையில் டிரைப் தொழில்துறை நடவடிக்கையில் பங்கு கொண்டதாக தன்னிடம் “எந்தச் சான்றும் இல்லை” என்று ஒப்புக் கொண்டார். பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் வேலை நிறுத்துவது கூட்டம் பற்றிய விசாரணை ABCC யின் பங்கான பாதுகாப்பு ஆய்வு அமைப்புடன் பொருந்தியிருக்காது என்றும் வாதிட்டுள்ளனர். பிளின் சட்டபூர்வமாக இரு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்றும் வாதிட்டனர்.

கடந்த இரு ஆண்டுகளாக Construction Forestry Mining and Energy Union (CFMEU) எனப்படும் நாட்டின் முக்கிய கட்டமைப்பு தொழிற்சங்கம் டிரைபின் மீதான குற்றவிசாரணை பற்றி எதிர்ப்பு அணிவகுப்புகளை நடத்தியுள்ளது. அதேபோல் ABCC யின் தண்டனை கொடுக்கும் அதிகாரங்களையும் எதிர்த்துள்ளது. ஆனால் CFMEU அங்கத்தவர்களின் எதிர்ப்பு அதன் கட்டுப்பாட்டைவிட்டு மீறுவதைத் தடுப்பது பற்றியும் முழு நனவு கொண்டுள்ளது. இதற்கு ஒரு காரணம் CFMEU தொழிலாளர்கள் உரிமை பற்றி என்ன பேசினாலும், ABCC உடன் முழுமையாக ஒத்துழைத்து, ABCC பேட்டிகளில் கலந்து கொண்டு, எதிர்ப்புக்குரல் கொடுக்காமல் மில்லியன்களை அபராதமாகவும் செலுத்தியுள்ளது. இதில் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக வேலைநிறுத்த விசாரணைக்கே கொடுக்கப்பட்ட 20,000 டொலரும் அடங்கும். தொழிற்சங்கம் வெகுஜன தொழில்துறை நடவடிக்கை பற்றி குழப்பமான உறுதி மொழிகளைத்தான் கொடுத்துள்ளது. அதுவும் கூட டிரைப் சிறையில் அடைக்கப்பட்டால்தான்.

உண்மையில் கட்டமைப்புத் தொழிற்சங்கங்கள் டிரைப் இந்த வார இறுதியில் வழக்கு முடிவுற்று சிறையில் அடைக்கப்பட்டால் வெகுஜன வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதற்கான வாய்ப்பு பூஜ்யம்தான். சுரங்கத் தொழிலின் சார்பில் ருட்டை அகற்றிய கில்லார்ட் மீது தொழிலாளர்கள் பலர் சீற்றம் கொண்டுள்ளனர். அடுத்த மாதத் தேர்தலில் தொழிற் கட்சி ஒரு பதிலடியை எதிர்பார்க்கக் கூடிய நிலையில் தொழிற்சங்கங்களானது தொழிற் கட்சிக்கு எதிரான உணர்வைப் பெரிதும் குறைத்து தொழிற் கட்சி தொழில்துறை உறவுகள் முறையைப் பற்றிய குறைகூறல்களையும் திசைதிருப்ப குவிப்புக் காட்டுகின்றன.

சிட்னி அணிவகுப்பில் CFMEU மாநிலச் செயலாளர் Andrew Ferguson, நியூ காஸ்டிலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வேட்பாளர் Noel Holt ஐப் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் பெர்கூசன் கில்லார்ட் அரசாங்கப் பிரதிநிதி ஒருவரை—தொழிற் கட்சி செனட்டர் Doug Camerron—மேடைக்கு வரவேற்றார். நியூ சௌத் வேல்ஸ் தொழிற்சங்க அதிகாரிகளும் SEP வேண்டுகோளான “அனைவரும் பேசும் கூட்டம்”, அதில் ஹோல்ட்டும் மற்ற அடிப்படைத் தொழிலாளர்களும் கில்லார்ட் அரசாங்கத்தின் பங்கைப் பற்றிப் பேசலாம் என்பதை முழுமையாக நிராகரித்தனர். பின்னர் ஹோல்ட் தான் கூட்டத்தில் பேச இருந்த கருத்துக்களின் பிரதி ஒன்றை வெளியிட்டார். அதில் தொழிற்சங்கத் தலைவர்கள் எப்படி கருத்துக்கள் வெளியிடப்படாமல் செய்கின்றனர் என்பது கூறப்பட்டது. (See: “SEP candidate calls for political struggle against Labor’s anti-strike laws”).

தொழிற் கட்சியின் “நியாயமான வேலை” சட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பது பற்றி பெர்கூசன் வலியுறுத்தி, “அனைவருக்கும் ஒரே சட்டம்தான் வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்புவதில் முன்னின்றார். இது கட்டிடத் தொழிலாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட நிறுவனங்கள் தவிர தொழில்துறை நடவடிக்கை கூடாது என்று தடைசெய்யும் சட்டத்திற்கு தொழிலாளர்களை உட்படுத்துகிறது. ஆகஸ்ட் 21 கூட்டாட்சி தேர்தல் ஆபோட்டிற்கும் லிபரல்களுக்கும் “மணலில் ஒரு வரி போல்” செய்துவிடுமாறு பெர்கூசன் தொழிலாளர்களை வலுயிறுத்தினார். ஆபோட் அதிகாரத்திற்கு வந்தால் தொழிலாளர்கள் அடிப்படை நிலைமைகளையும் இழப்பர் என்று அவர் அறிவித்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை “சட்டத்தின் முழு சக்தியும்” தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று பல முறை கில்லார்ட் அச்சுறுத்தியது பற்றிப் பேசவில்லை.

ஒரு முன்னாள் தொழிற்சங்கத் தலைவரான காமெரோன் ABCC ஒரு “இழிவு” என்று விவரித்து, “தேர்தல் முடிந்தவுடன் விரைவாக அதை நாம் அகற்ற வேண்டும்” என்றார். இது தொழிற் கட்சியின் நீண்ட கால உறுதிமொழியான 2010 முடிவில் அது ABCC ஐ கலைத்து அதன் அதிகாரங்களை Fair Work Australia என்பதற்குள் மறு முத்திரையிட்ட ஒரு பிரிவிற்கு மாற்றும் எனக் கூறுவது பற்றிய வலியுறுத்தலே அன்றி வேறொன்றுமில்லை.

உண்மையில் தற்போதைய பணியிட உறவுகள் மந்திரி Simon Crean, ACTU எனப்படும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கக் குழு நிர்வாகத்திடம் நேற்று இரவு அரசாங்கம் அதன் திட்டமான ABCC யின் வலியுறுத்தும் அதிகாரங்களை Fair Work நீதிமன்றத்திற்கு மாற்றும் திட்டத்தில் இருந்து பிறழ்வதாக இல்லை என்றார்.

Peter Dedic
பீட்டர் டெடிக்

சிட்னி அணிவகுப்பில் WSWS நிருபர்களுக்குக் கொடுத்த பேட்டியில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சி மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் அணிவகுப்பு நடத்தப்படும் முறை பற்றியும் கோபத்தைத் தெரிவித்தனர். ஒரு பண்ணைத் தொழிலாளியான பீட்டர் டெடிக் தான் தொழிற் கட்சிக்கு 40 ஆண்டுகளாக வாக்களித்து வருவதாகவும், இனி “தொழிற் கட்சிக்கு ஒருபொழுதும் வாக்களிக்க மாட்டேன். கில்லார்ட் ருட்டை முதுகில் குத்தினார். ABCC ஐ அகற்ற அவர் எதுவும் செய்யவில்லை” என்றார். முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்து வந்த டெடிக் கூறினார்: “சட்டங்கள் மாற்றப்படும் வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும். தொழிற் கட்சியும் லிபரல்களும் அதை மாற்ற மாட்டார்கள்.” தொழிற் கட்சி அரசாங்கத்தின் செயல் பற்றி பேச்சாளர்கள் ஏன் ஏதும் கூறவில்லை என்பது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு டெடிக் தொழிலாளர்கள் உணர்வைக் கருத்திற் கொண்டு, இந்த அதிகாரிகள் தொழிற் கட்சி பற்றி பேசக்கூடாது என உத்திரவிடப்பட்டிருப்பர் என்றார்.

Adrian Harrigan
ஆட்ரியன் ஹாரிகன்

ஒரு இயந்திரத்துறைக் குழாய்த் தொழிலாளியான ஆட்ரியன் ஹாரிகன் பல வினாக்களுக்கு ஆர்ப்பாட்ட அணி விடையிறுக்கவில்லை என்றார். “ABCC இன்னும் எதற்காக உள்ளது? 2007ல் தொழிற் கட்சி முதல் நடவடிக்கையாக அதை அகற்றுவதாகக் கூறியது. ABCC க்குப் பதிலாக வேறு அமைப்பு என்பது வெறும் பெயரில்தான் இருக்கும்.” மூன்று ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் இருந்து குடியேறியுள்ள ஹாரிகன் ருட் அகற்றப்பட்டதை “சிறிதும் இரக்கமற்ற செயல்…. சுரங்க வரி விதிப்பிற்காக அவர் பலிகடா ஆக்கப்பட்டார்” என்று விவரித்தார். “ஊக்கப் பொதிகளை நிறுத்த விரைவில் நடவடிக்கை எடுக்காததற்காக ருட் விலை கொடுக்க நேர்ந்தது.” என்றார்.

தொழிற் கட்சி, லிபரல் “இரண்டுமே ஒரேமாதிரி மோசம் தான். லிபரல்களுக்காக மாசுபடிந்த செயல்களை தொழிற் கட்சி செய்கிறது” என்றார். அவர் மேலும் கூறியது: “டுக் காமெரோன் பற்றி எந்த வினாக்களும் எழுப்பப்படவில்லை. தான்தான் பாராளுமன்றத்தில் தொழிற்சங்கங்களின் குரல் என்றார் அவர். ABCC க்கு பதிலாக வேறு அமைப்பு வரும் என்ற கில்லார்ட் விதிகள் பற்றி ஒருவரும் பேசவில்லை.” தொழிற்சங்க அதிகாரிகள் Noel Halt ஐ இப்பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்காதது பற்றி ஹாரிகன் கோபமுற்றார். “தொழிற்சங்கங்கள் இன்றைய ஜனநாயக முறையைக் கொண்டவை, என்று பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு அதிகாரத்துவ தொகுப்பாகத்தான் உள்ளனர்.”

மெல்போர்னில் Crosn Casino வில் கட்டிடத் தொழிலாளியாக இருக்கும் போல் தொம்சன் WSWS இடம் கூறினார்: “ஜூலிய கில்லார்ட் சரியில்லை. இந்த ABCC போன்றவற்றை அகற்றுவதாக தொழிற் கட்சி இருந்தது. நான் சற்று ஏமாற்றத் திகைப்பில் உள்ளேன். அவர் என்ன செய்துள்ளார் என்பது பற்றிய உண்மைகளை இப்பொழுதுதான் கேட்கிறேன்.”

நான் மின்சாரப் பிரிவு தொழிற்சங்கத்தில் உள்ளேன். தொழிற் கட்சியுடன் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்று இப்பொழுதுதான் வாக்களித்துள்ளோம். நாம் அடிமட்டத்தில் இருந்து பணிபுரிய வேண்டும், எல்லா அணிகளிலும் பங்கு பெற வேண்டும். இங்கு வந்து St.Kilda Rd. ஐ பார்த்து அது எங்குள்ளது எனத் தெரிந்துகொள்ள விரும்பினோம். எங்கள் பணியிடத்தில் பல இளைய பயிற்சித் தொழிலாளிகள் உள்ளனர். அவர்கள் ஒரு தொழில்துறை நடவடிக்கையைக்கூட பார்த்ததில்லை. நாங்கள் தான் வரவேண்டும் என்று முடிவெடுக்கும் வரை அவர்கள் சற்று கவலையுடனேயே இருந்தனர்.”

ஆர்க் டிரைப்பின் வழக்கு இன்று தொடர்கிறது.