WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German Chancellor Merkel visits Russia, Asia as criticism of foreign policy grows
வெளியுறவுக் கொள்கை பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கையில், ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்க்கெல் ரஷ்யா, ஆசியாவிற்கு விஜயம் செய்கிறார்
By Johannes Stern
19 July 2010
Back to
screen version
கடந்த வாரம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின்(CDU) சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ரஷ்யாவிற்கு ஒரு பெரும் அரசாங்க, வணிகப் பிரதிநிதிகள் குழுவுடன் சென்றிருந்தார். ஒரு கூட்டு ஜேர்மனிய-ரஷ்ய மந்திரிசபை கூட்டம் யூரல்ஸில் உள்ள Ekterinburg ல் நடந்தது. இதைத்தவிர பரந்த பொருளாதாரத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பயணத்தின் மற்றய இடங்களில் சீனா, காஜக்ஸ்தானும் அடங்கியிருந்தன.
மேர்க்கெலின் ஆசியப் பயணம் அவருடைய வெளியுறவுக் கொள்கை பற்றி கடுமையான விமர்சனத்தால் சூழ்ந்திருந்தது. அவர் பேர்லினை விட்டு நீங்குவதற்கு முன்பே, அவருடைய அரசாங்கம் ரஷ்யாவுடனான உறவுகளைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
Berliner Zeitung பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஜேர்மனிய வெளியுறவுக் குழுவின் ரஷ்ய பிரிவு வல்லுனர் ஸ்ரெபான் மைஸ்டர், CDU தலைமையில் CSU, FDP ஆகியவற்றுடனான கூட்டணி அரசாங்கம் அமைத்ததில் இருந்து, “ரஷ்யா ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமை பட்டியலில் சரிந்துள்ளது.” என்றார். வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர்வெல்லவினால் (FDP) “ரஷ்யா பற்றிய கருத்தாய்வு” கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றும் இது “உகந்ததில்லை” என்றும் கூறிப்பிட்டார்.
Der Spiegel இதழின் மாஸ்கோவின் தலைமை நிருபர் மத்தியாஸ் ஷெப் உம் ஜேர்மனிய-ரஷ்ய உறவுகளின் நிலை பற்றி அதிக ஆர்வமற்றவராக இருந்தார். FDP மந்திரிகளான வெஸ்டர்வெல்ல மற்றும் றெனர் புரூடர்ல இருவரும் அதிக செல்வாக்கு அற்றவர்கள் எனக் கிரெம்ளினில் கருதப்படுகின்றனர் என்றார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகியவை நீண்டகாலமாக ரஷ்யாவுடன் ஜேர்மனி கொண்டுள்ள முக்கிய நிலைப்பாட்டிற்கு சவால் விடுத்துள்ளன. இதற்கான காரணம் முக்கியமாக மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. அங்கு எவரும் உண்மையில் “ரஷ்யா” பற்றிய பொறுப்பை கொள்ளத் தயாராக இல்லை.
ஷெப் உடைய கருத்தின்படி ஜேர்மனிய பெருநிறுவனங்களின் ரஷ்ய கிளைகளின் பிரதிநிதிகள் நீண்டகாலமாக “பேர்லினில் இருந்து அரசியல் ஆதரவு இல்லாதது” பற்றி உரக்கக் குறை கூறி வருகின்றனர். ஜேர்மனி பின்தங்குகையில், நிதிய நெருக்கடி இருந்த போதிலும்கூட ரஷ்ய-பிரெஞ்சு வணிகம் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Der Spiegel கொடுத்துள்ள தகவல் கீழுள்ள உண்மைகளை மேற்கோளிடுகின்றன: பிரெஞ்சு எரிசக்தி பெருநிறுவனம் GDF Suez, ஜேர்மனிய நிறுவனங்கள் Wintershall, EON-Ruhrgas இன் பால்டிக் கடல் குழாய்த்திட்டத்தில் 9 சதவிகிதப் பங்கை கொண்டுள்ளது. பிரெஞ்சு அணுசக்தி தொழில் தெளிவாக ஜேர்மனியை விட அதிக தொடர்புகளை கொண்டுள்ளது. Rosatom எனப்படும் ரஷ்ய அணுசக்தி அமைப்பு இப்பொழுது பிரெஞ்சு நிறுவனமான EDF உடன் கையெழுத்திட்டுள்ளபோது, Siemens, Rosatom இரண்டிற்கும் இடையே இருக்கும் உறவு தேக்க நிலையில் உள்ளது.
முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி SPD) மேர்க்கேல் அரசாங்கத்தை அதனிடம் “சிந்தனைகள்” இல்லாததற்காகச் சில காலமாக சாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் ஒரு கூட்டு உடன்பாட்டைக் காணவேண்டும், அதுதான் அமெரிக்கா, சீனா போன்ற அதிகார மையங்களிடம் இருந்து தப்ப உதவும் என்று கூறியுள்ளார்.
Die Welt பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் ரஷ்யா, ஜேர்மனிக்கும் ஐரோப்பாவிற்கும் இரு காரணங்களினால் முக்கியம் என்றார். முதலில் ஐரோப்பியர்களுக்கு “பெரும் ரஷ்ய இயற்கை வளங்கள் நேரடியாகக் கிடைக்க வேண்டும்”, இரண்டாவதாக ஐரோப்பாவிற்கான “ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும்” “ரஷ்யாவுடன் மிக நெருக்கமான பங்காளித்தனம் மூலம்தான்” கிடைக்கும் என்றார்.
இந்த கருத்துக்களின் அழுத்தத்தை ஒட்டி, மற்றும் நிதிய நெருக்கடியின் பொருளாதார, அரசியல் விளைவுகளின் பின்னணியில் (ஏற்கனவே அவை ஜேர்மனியையும் அமெரிக்காவையும் விரைவில் பிளவுபடுத்தியுள்ளன) மேர்க்கெல் அரசாங்கம் ஆசியப் பயணத்தை பயன்டுத்தி ஜேர்மனிய-ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தவும் இழந்த தளத்தை மீட்கவும் முயல்கிறது.
இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு மேர்க்கெல் ஜேர்மனிய வணிகத் தலைவர்கள் மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரிவுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். மேலும் முதல் தடவையாக DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மிசெல் சொம்மர் உம் சான்ஸ்லரின் பரிவாரத்தில் சேர்க்கப்பட்டார்.
இடது கட்சி மேர்க்கெலின் குழுவில் அன்திரே பிரீ ஆல் பிரதிநிதித்துவம் பெறுகிறது. இவர் வியாழக்கிழமை Ekaterinburg ல் பத்தாம் முறை கூடிய Petersburg Dialogue குழுவின் ஜேர்மனியின் இயக்கக் குழு உறுப்பினராவார். இந்த அமைப்பு 2001ம் ஆண்டு முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடராலும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினாலும் நிறுவப்பட்டது. ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகளை வளர்கக விரும்பும் இந்த அமைப்பின் இந்த ஆண்டு விவாதங்களுக்கு புரவலர்கள் சான்ஸ்லர் மேர்க்கெல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடெவ் ஆவர்.
இடது கட்சி மாஸ்கோவின்பால் சார்புடைய ஒரு புதிய வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு துணை ஆதரவைத் தருகிறது. அன்திரே பிரீ ஐத்தவிர மற்ற இடது கட்சி உத்தியோகத்தர்களும் IIB எனப்படும் சர்வதேச உறவுகள் அமைப்பில் இருந்து உயர்ந்தவர்கள். IIB ஜேர்மன் ஜனநாயகக் குடியரசசின் (GDR, முன்னாள் கிழக்கு ஜேர்மனி) முக்கிய வெளியுறவுக் கொள்கை பயிற்சி நிலையமாக இருந்தது.
ரஷ்யா மீது பெருகிய கவனம் குறிப்பிட்ட பொருளாதார நலன்கள் மற்றும் அதிக இலாபம் தரும் பெரிய ஒப்பந்தங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய பிரதிநிதிகள் குழுவின் முக்கியமான 25 வணிகத் தலைவர்களில் ரொம் என்டர்ஸ் (Airbus), பீட்டர் லொஸ்ஸர் (Siemens), ஜொகானஸ் ரேஸ்ஸன் (Eon) மற்றும் மார்ட்டின் வின்டர்கொம் (VW) ஆகியோர் அடங்குவர்.
வணிகச் செய்தி ஊடகம் (FAZ, Handelsblatt, Wirtschaftwoche) ஆகியவை இந்த பெரிய ஒப்பந்தங்களையும் வணிக நலன்களையும் விரிவாக விளக்கியுள்ளன. ஜேர்மனிய நிறுவனங்களின் நோக்கம் ஒப்பந்தங்களின் அதிக விகிதத்தை பிரச்சனைக்குள்ளான எரிசக்தி வலைப்பின்னலை நவீனப்படுத்தப்பெறுதல், திறமையற்ற தொழில்களை மறுகட்டமைத்தல், பழைய வீடுகள் இருப்புக்களை புதுப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும். சீமென்ஸும் ஜேர்மனிய எரிசக்தி அமைப்பு Dena வும் Ekaterinjburg நகரில் வணிகத்தின் ஒத்துழைப்புடன் திறமையான கட்டமைப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு ஒரு அலுவலகத்தை திறந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு “நவீனப்படுத்தும் கூட்டையும்” மெட்வெடெவ் அறிவித்தார்; இதில் ஜேர்மனி ஒரு “மத்தியபங்கை” கொள்ளும்.
ஆலோசனைகளின்போது மேர்க்கெலுக்கும் மெட்வெடெவிற்கும் இடையே ஆதரவுக்கான வெளிப்பாடுகளுக்கு குறைவு ஒன்றும் இல்லை. ஜேர்மனிய நிறுவனங்கள் பல பெரிய ஒப்பந்தங்களை பெற்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் சீமென்ஸ் 220 பிராந்திய இரயில்கள் என்று 2.4 பில்லியன் யூரோ மதிப்புடையவற்றை விற்பனை செய்வதுடன் பல சரக்குப் பிரிவுகளையும் 600 மில்லியன் யூரோ செலவில் நவீனப்படுத்தும். ஏயர்பஸ் 2 பில்லியன் யூரோ மதிப்புடைய விமானங்களை விற்கும். ஆனால் இதுகூட பல வணிகத் தலைவர்களின் குறைகூறல்களை அமைதிப்படுத்த முடியவில்லை.
ஜேர்மனிய வணிகத்தின் கிழக்கு குழுவின் தலைவரான கிளவுஸ் மான்கோல்ட் இந்த ஒப்பந்தங்களில் பலவும் “கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளால் வரவில்லை, அவற்றின் தன்மையை மீறி வந்தவை” என்று அறிவித்தார்.
ஜேர்மனிய வெளியுறவுக் குழுவின் வல்லுனரான மைஸ்டர், SPD யின் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இப்பொழுதும் வெளியுறவு மந்திரியாக இல்லை என்பது பற்றி வருத்தம் கொண்டுள்ளார். அவர்தான் “நவீனமயப்படுத்தும் பங்காளித்தனம்” என்ற கருத்தினை கண்டறிந்தவர். Der Spiegel இடம் அவர், “முன்பு வெளியுறவு அமைச்சரகம் ஜேர்மனிய-ரஷ்ய உறவுகளுக்கு மேம்பாட்டைக் கொடுத்தது. ஆனால் வெஸ்டர்வெல்லவிடம் ரஷ்யாவுடனான சரியான உணர்வு இல்லை.” என்றார்.
பெருவணிகத்துடன் அரசியல் உயரடுக்கின் பிரிவுகளும் பாதுகாப்புக் கொள்கையில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை விழைகின்றன. Süddeutsche Zeitung பத்திரிகையில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரை ஒன்றில் முன்னாள் ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி வொல்க்கர் ரூக (CDU) மற்றும் ரஷ்ய தூதர் டிமிட்ரி ரொகோஸின் இருவரும் ரஷ்யாவிற்கு நேட்டோ அங்கத்துவம் வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். இந்த அழைப்பில் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஒரு மூலோபாய அறிக்கையும் அடங்கியிருந்தது. அது பாதுகாப்புக் கொள்கை பற்றி கூட்டாட்சி உயர்கல்விக் கூடம் பேர்லினில் நடத்திய கருத்தரங்கத்திற்கு பின்னர் வந்தது.
ஆனால் பேர்லின்-மாஸ்கோ அச்சில் நெருக்கமான ஒத்துழைப்பு என்பது பிரச்சனையற்றதல்ல. கடந்த வாரம் முன்னாள் ஜேர்மன் வெளியுறவு மந்திரியும் துணை சான்ஸ்லருமான ஜோஷ்கா பிஷ்ஷர் (Alliance 90/பசுமைக் கட்சி) Süddeutsche Zeitung இல் ஒரு கட்டுரையில் மேர்க்கெலை எதிர்க்கண்ணோட்டதில் இருந்து தாக்கி எழுதியுள்ளார். துருக்கியுடன் ஒத்துழைப்பு கொடுப்பதை குற்றம்சார்ந்த வகையில் நிறுத்தியதை இவர் குறைகூறியுள்ளார்; இது ஜேர்மனியின் மூலோபாய நலன்களுக்கு தீமை விளைவிக்கும் என்றும் கூறினார்.
பிஷ்ஷரின் கருத்துப்படி துருக்கி “உலக அரசியலில், குறிப்பாக ஐரோப்பிய பாதுகாப்பிற்கு முக்கிய பகுதிகளில் சரியான பூகோளஅரசியல் இடத்தில் உள்ளது” என்று உள்ளது. துருக்கி இல்லாவிட்டால், மேலை உலகம் முக்கிய பகுதிகளான கிழக்கு மத்தியதரைக் கடல், ஈஜியன், மேற்கு பால்கல்கள், காஸ்பியப் பகுதி, தெற்கு காகஸஸ், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் “எதுவும் அல்லது கிட்டத்தட்ட எதுவும்” செய்யமுடியாது . “அப்பகுதியில் உள்ள ரஷ்ய எரிசக்தி விநியோகங்களுக்கு ஐரோப்பா பெரியளவில் தங்கியிருப்பதற்கு மாற்றீடுகள் தேட முற்பட்டால்” துருக்கியை கடந்துபோக முடியாது என்று முன்னாள் வெளியுறவு மந்திரி எழுதியுள்ளார்.
தன்னுடைய விமர்சனத்தை இவ்விதத்தில் பிஷ்ஷர் சுருக்கமாக தெரிவிக்கிறார்: “துருக்கியை ஐரோப்பா, மேற்குடன் பெரிதும் பிணைப்பதற்கு பதிலாக ஐரோப்பிய கொள்கை அங்காராவை ரஷ்யா, ஈரான் புறம்தான் தள்ளுகிறது!”.
பிஷ்ஷருடைய வாதங்கள் அவருடைய Nabucco குழாய்த்திட்ட ஆலோசனைப் பணியுடன் பிணைக்கப்படுபவை. அதில் German RAW Group ம் தொடர்பு கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கோடையில் அவர் தன் முன்னாள் கூட்டணிப் பங்காளி ஹெகார்ட் ஷ்ரோடரை தொடர்ந்து எரிசக்தி தொழில் இயக்கக் குழுக்களில் சேர்ந்திருந்தார். ஆனால் இருவரும் ஐரோப்பாவிற்கு எரிசக்தி விநியோகிக்கும் தொழிலில் எதிர் முனைகளில் வேலை செய்கின்றனர். 2005 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஷ்ரோடர் சில மாதங்களிலேயே NEGP நிறுவன குழாய்த்திட்ட குழுமத்தில் மேற்பார்வைக் குழுவில் பெரும் ஊதியத்தில் சேர்ந்தார். அதுதான் ரஷ்ய விசைப் பெருநிறுவனம் Gazprom உடன் நெருக்கமான ஒத்துழைப்பில் பால்டிக் கடலின் கீழ் குழாய்த்திட்டம் ஒன்றை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
மேர்க்கெலின் பயணத்திற்கு முன்னதாக Nabucco திட்டத்தை Gazprom வேண்டுமென்றே சிதைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளும் மேர்க்கேல் பயணத்தின் இரண்டாம் கட்டமான சீனா, காஜக்ஸ்தானுக்கு செல்லுகையில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். அழுத்தங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படாவிட்டாலும், பல பூசல்கள் மேலெழுந்த வண்ணம் உள்ளன. உலகின் முக்கிய ஏற்றுமதி நாடு என்னும் இடத்தை ஜேர்மனியிடம் இருந்து சீனா எடுத்துக்கொண்டுள்ளது. அதன் ரஷ்யாவுடனான உறவுகளையும் கணிசமாக விரிவாக்கியுள்ளது. ரஷ்ய மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, ரஷ்யாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இவ்விதத்தில் ஜேர்மனி கொண்டிருந்த பங்கை சீனா இப்பொழுது கொண்டுள்ளது. ரஷ்ய வல்லுனர் அலெக்ஸ்ஸான்டர் ரார் போன்ற அரசாங்க ஆலோசகர்கள் நீண்டகாலமாக ஜேர்மனியும் ஐரோப்பாவும் ரஷ்யாவின் விசுவாசத்தைப் பெறாவிட்டால் சீனாவை நோக்கி ரஷ்யா திரும்பும் ஆபத்து பற்றிப் பேசியுள்ளனர்.
எப்படி ஜேர்மனியின் கிழக்கு கொள்கை இப்பின்னணியில் வளரும் என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. எவ்வாறாயினும், தெளிவாக இருப்பது என்னவெனில், மேர்க்கெல் அரசாங்கத்தின் மீதான தாக்குதல்களில் வெளியுறவுக் கொள்கைகள் முக்கிய பங்குகொள்கின்றன.
|