சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A lie exposed

ஒரு பொய் அம்பலமாகிறது

Jerry White
20 July 2010

Use this version to print | Send feedback

செய்தி ஊடகத்தாலும் முழு தாராளவாத ஆளும் தட்டினரலும் 1960 களில் இருந்து மிக முன்னேற்றமான சமூகச் சீர்திருத்தம் என்று பாராட்டப்பட்ட ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு நான்கு மாதங்களுக்கு பின்னர் அதன் பிற்போக்குத்தனமான விளைவுகள் இன்னும் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மையத்தானம் பல மில்லியன் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களுக்கு அதனை விரிவாக்கம் செய்வது, சராசரி குடிமக்களுக்கு கட்டுபடியாகாதிருந்த மருத்துவ பாதுகாப்பு செலவுகளைக் குறைத்தல் என்று வெள்ளை மாளிகை கூறியது. செலவுக்குறைப்புக்கள் மற்றும் “திறமைகளைச்” செயல்படுத்துதலும் மருத்துவபாதுகாப்பின் தரத்தைக் குறைத்துவிடாது என்று ஜனாதிபதி கூறினார். மேலும் ஏற்கனவே காப்பீடு செய்துள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களையும், மருத்துவ திட்டங்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியபடி, இக்கூற்றுக்கள் பொய்யாகிவிட்டன. சட்டத்தின் நோக்கம் காப்பீடுகளைக் குறைத்தல், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு இல்லாது செய்தல் மூலம் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தலாகும்.

ஒபாமாவின் “சீர்திருத்தத்தில்” பெருநிறுவனங்கள் தங்களால் நிதி கொடுக்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தை கைவிட முடியும், அல்லது குறைந்த பட்சம், தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை தேர்ந்தெடுக்கும் திறனைக் குறைக்க முடியும் என்பதற்கான சந்தர்ப்பமாக ஆளும்வர்க்கம் கண்டுகொண்டது.

இதன் விளைவு ஒரு வர்க்க அடித்தளமுடைய முறையை நிறுவுதல் ஆகும், இதில் தொழிலாளர்கள் குறைந்த தரமுடைய பாதுகாப்பைப் பெறுவர், செல்வந்தர்கள் பணத்தால் பெறக்கூடிய மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை அடைவர் என்று WSWS எச்சரித்தது.

சமீபத்திய செய்தி ஊடகத் தகவல்கள் இந்த எச்சரிக்கையை உறுதிபடுத்தியுள்ளன.

ஜூலை 18 New York Times கட்டுரை, “காப்புறுதி நிறுவனங்கள் மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதை குறைக்கும் திட்டங்களை முன்வைக்கின்றனர்” என்ற தலைப்பில் கூறுவதாவது: “புதிய தேசிய சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த தொடங்குகையில், நாட்டின் மிகப் பெரிய காப்பீடு செய்யும் நிறுவனங்கள் குறைந்த கட்டணத் தொகையுடன் கட்டுபடியாகக்கூடிய திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர்; அவற்றில் பங்கு பெறுபவர்கள் குறைந்த அளவு மருத்துவர்கள் அல்லது மருத்துவமனையை விரும்ப முடியும்.”

பெரும் காப்பீட்டு நிறுவனங்களான Aetna, Cigna, UnitedHealth Group, WellPoint ஆகியவை ஏற்கனவே நியூயோர்க், சான் டியேகோ மற்றும் சிக்காகோவில் உள்ள சிறுஎண்ணிக்கை கொண்ட “குறைந்த சுகாதார வலைப் பின்னல்களுக்கு” ஏற்கனவே திட்டங்களையும். விதிக்குறைப்புக்களையும் அளித்துள்ளன. மேலும் காப்பீட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆலோகர்களும் “அனைத்துத் தர வணிகங்களும் செலவுகளை குறைக்க இத்திட்டங்கள் பக்கம் வந்து சேர்வர்” என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் எழுதுகிறது: “இந்த வணிக முயற்சியின்படி அதிக அமெரிக்கர்கள் புதிய வலைப்பின்னல்களுக்கு வெளியே இருந்தால் தங்கள் விருப்பப்படி டாக்டர்களை தேர்ந்தெடுக்கலாம் அல்லது தங்கள் சொந்த டாக்டர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக பணம் செலுத்த கேட்கப்படுவர். இது ஜனாதிபதி ஒபாமா மற்றும் பிற அதிகாரிகள் நுகர்வோர் பலவகை சுகாதாரப் பாதுகாப்பு விருப்புரிமைகளை பெற்றிருப்பர் என்று பலமுறையும் கூறிய உத்தரவாதங்களை நினைவில் வைத்திருப்போருக்கு ஒரு வியப்பாக அமையக்கூடும்.”

உதாரணமாக Aetna வின் “புதிய இணைய” திட்டம் இதன் மரபார்ந்த தொகுப்பில் உள்ள டாக்டர்களில் பாதிப் பேரையும் மருத்துவ மனைகளில் முன்றில் இரண்டையும்தான் அணுக வாயப்பு கொடுக்கிறது. சான் டியேகோவில் 80,000 பள்ளி ஊழியர்கள், United Health காப்பீட்டின்கீழ் வருபவர்கள் பல அடுக்குத் திட்டத்தின் கீழ் இருத்தப்பட்டுள்ளனர். அவற்றில் அவர்கள் கூடுதலாகச் செலவு செய்யும் பணம் அவர்கள் விரும்பும் மருத்துவர்களின் தரம், கட்டணம் ஆகியவற்றை பொறுத்து இருக்கும்.

இத்தகைய வழிவகைகளில் முதலாளிகள் 15 சதவிகிதம் செலவுகளை மிச்சப்படுத்த முடியும்.

“கட்டுபடியாவதுதான் செயற்பட்டியலில் மிக முக்கியமான விடயமாகும்” என்று United Health ன் மருத்துவத் திட்டங்களின் தலைமை மருத்துவ அதிகாரியான Dr.Sam Ho செய்தித்தாளிடம் கூறினார். ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புச் “சீர்திருத்தங்கள்” ஆரம்பத்தில் இருந்தே செலவைக் குறைப்பது பற்றி உள்ளனவே ஒழிய, அதிக காப்பீடுகள் பெறுவது பற்றி இல்லை. இந்த உண்மை பற்றி டைம்ஸ் மற்றும் பிற தாராளவாத ஆளும்வர்க்கமும் அறியும். ஆனால் அவை திறமையுடன் பொதுமக்களிடம் இருந்து மறைக்கின்றன. கட்டுரை சுட்டிக்காட்டுவது போல், Cignaவில் காப்பீட்டு நிர்வாகிகள், தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மிக மலிவான திட்டங்கள் பற்றி கூறுகின்றனர்; கட்டணத் தயாரிப்பின் போதே இது நடைபெறுகிறது.

“இது அகற்றுவது Gucci மருத்துவர்களைத்தான்” என்று கலிபோர்னியா, விஸ்டாவில் உள்ள Haro Bicycle Corporation கட்டுப்பாட்டு அதிகாரி பீட்டர் ஸ்கோடா செய்தித்தாளிடம் கூறினார். “தன் கட்டணங்களில் ஒருவேளை 35 சதவிகிதம் உயரக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கையில் Haro, ஒரு Aetna திட்டத்திற்கு மாறியது; அதுவோ ஊழியர்கள் சான் டியேகோவில் Scripps Health முறையுடன் இணைந்துள்ள இரு மருத்துவக் குழுவிலுள்ள டாக்டர்களை பார்ப்பதை தடுத்துவிடுகிறது. ஊழியர்கள் ஒதுக்கப்பட்ட டாக்டர்களிடம் சென்றால், முழுக் கட்டணத்தையும் அவர்களேதான் கொடுக்கும் பொறுப்பைக் கொள்வர்” என்று டைம்ஸ் ஒப்புதல் கொடுத்து எழுதுகிறது.

1990 களில் சுகாதார மேலாண்மை அமைப்புக்கள் அல்லது HMO க்கள் நிறுவப்பட்டபோது கடைசியாக பெருநிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பு வைத்தியர்கள் மற்றும் மருத்துவ மனைகளை அணுகுவதை குறைத்தபோது அது பாரிய மக்கள் எதிர்ப்பைக் கண்டது. எனவேதான் நியூயோர்க் டைம்ஸ் இன்னும் பிற செய்தி ஊடகங்களின் உதவியுடன் தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்பு “சீர்திருத்தத்தின்” உண்மைப் பொருளுரை பற்றி ஒபாமா மக்களிடம் இருந்து மறைக்க முற்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின் விதிகள்படி, தற்பொழுது உள்ள காப்பீட்டுத் தரங்களை தக்கவைத்துக் கொள்வது ஒருபுறம் இருக்க, பெருநிறுவனங்கள் காப்பீடு அளிக்க வேண்டிய கட்டாயமே இல்லை. மாறாக அரசாங்கம் மிக்கூடிய செலவு என்று கருதும் காப்பீட்டுத் திட்டங்களை கொள்ளும் நிறுவனங்கள் ஒரு அபராத வரியைச் செலுத்த நேரிடும். மேலும் முதலாளிகள் காப்பீட்டு முறையில் இருந்து தங்கள் ஊழியர்களை அகற்றிவிட்டால், ஒரு சிறிய அபராதத்தைத்தான் கொடுக்க வேண்டும், இது கட்டணத்தை தொடரும் செலவை விட மிகக்குறைவுதான்.

மாநில அரசாங்கம் 2006ல் ஒரு சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தத்தை இயற்றியுள்ள மாசாச்சுசட்ஸில் நூற்றுக்கணக்கான முதலாளிகள் காப்பீட்டுச் செலவை தகர்த்து தொழிலாளர்கள் அரசாங்க உதவி பெறும் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்துகின்றனர். சமீபத்திய Boston Globe கட்டுரை ஒன்றின்படி, செலவுகள் உயரும் நிலையில், தொடர்ந்த பொருளாதாரச் சரிவு இருக்கும் நிலையில், நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குக் காப்பீடு கொடுப்பதற்குப் பதிலாக அரசாங்கத்திற்கு அபராதம் கட்டுவது செலவுக் குறைவு என்கின்றன— ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணத் தொ்கையைக் கொடுப்பதற்குப் பதிலாக ஆண்டு ஒன்றுக்கு $295 ஒரு ஊழியருக்கு என்று அபராதம் கொடுத்தால் போதும்.

இதேபோன்ற நிதிய ஊக்கங்களும் தேசிய அளவில், ஒபாமா முழுமையாக தன் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும்.

தற்பொழுது காப்பீடு இல்லாதவர்களுடன் இணைந்த விதத்தில் சட்டத்தின்கீழ் முதலாளிகள் கொடுக்கும் நலன்களை இழக்கும் தொழிலாளர்கள் அரசாங்கங்கள் நடத்தும் காப்பீட்டு அமைப்புக்கள் மூலம் காப்பீட்டை வாங்கும் கட்டாயத்திற்கு உட்படுவர். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவர்.

பெரும் காப்பீட்டு நிறுவனங்கள், கிட்டத்தட்ட 24 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களின் வெள்ளமென வரும் நிலையில் பெரும் பணமழையை பெறக்கூடும். தரமான காப்பீட்டிற்கு வசதி இல்லாத தொழிலாளர்களிடையே தங்கள் குறைந்த விகிதத் திட்டங்கள் செல்வாக்குப் பெறும் என்று பந்தயமும் கட்டுகின்றன என்று டைம்ஸ் கூறியுள்ளது. “அடுத்த சில ஆண்டுகளில் இது பெறும் வெற்றியைக் கொடுக்கும்” என்று நாட்டின் மிகப் பெரிய தனியார் சுகாதாரக் காப்பீட்டு அமைப்பான WellPoint ன் துணை நிர்வாகத் தலைவர் கென் கௌலெட் செய்தித்தாளிடம் கூறினார்.

ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் இயற்றப்பட ஆதரவு கொடுக்கும் பிரச்சாரத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் முன்னின்றது. மார்ச் 24ம் திகதி “சுகாதாரச் சட்டத்தில் ஒபாமா செல்வச் சமத்துவமற்ற நிலையைத் தாக்குகிறார்” என்ற டைம்ஸ் கட்டுரையில், “மத்திய அரசாங்கத்தின் மிகப் பெரிய தாக்குதல் பொருளாதார சமத்துவத்தின் மீது நடக்கிறது; மூன்று தசாப்தங்களுக்கு முன் சமத்துவமற்ற தன்மை உயரத் தொடங்கியதற்கு பின்னர் இது மிகப் பெரிய தாக்குதல் ஆகும்” என்று டேவிட் லியோன்ஹார்ட் எழுதியுள்ளார். “இது ரேகன் காலம் என்று வரலாற்றாளர்கள் அழைப்பதை நிறுத்தும் தெளிவான முயற்சியின் ஒரு பகுதியாகும்” என்று அவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.

இது ஒரு அப்பட்டமான முழுப்பொய்யாகும். டைம்ஸிடம் நிறைய சம்பளம் வாங்கும் எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் இது பற்றி நன்கு அறிவர். உண்மையில் ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமே 1980களில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருநிறுவன-அரசாங்கத் தாக்குதல் தொடங்கிய பணியின் முற்றுப்பெறாத பகுதிதான். இதற்கும் ஜனநாயக ஜனாதிபதி கடந்த ஆண்டு கார்த் தொழிலாளர்கள் மீது கட்டாயமாக சுகாதார நலன்களைப் பாதிக்கும் விதத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் மீது திவாலைக் கொண்டு வந்து மறுகட்டமைபன்பு செய்தபோதே பச்சை விளக்கு காட்டப்பட்டது.

ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புச் “சீர்திருத்தம்” பற்றி WSWS கூறிவந்துள்ள கருத்துக்கள் இந்த தொழிலாள வர்க்க எதிர்ப்புச் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த போலி இடது அமைப்புக்கள் மற்றும் மத்தியதர தாராளவாத வெளியீடுகளான நேஷன் போன்றவற்றிடம் இருந்து நம்மைத் வேறுபடுத்திக் காட்டுகின்றன.