WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US stocks plunge on signs of renewed slump
புதிய சரிவின் அடையாளங்களை அடுத்து அமெரிக்கப் பங்குகள் வீழ்ச்சியடைகின்றன
By Barry Grey
17 July 2010
Back
to screen version
பொருளாதார வளர்ச்சி தீவிரக்குறைவு அடையும் என்னும் ஏராளமான எதிர்மறைப் பொருளாதாரக் குறிப்புக்களால் சூடேற்றப்பட்டு அமெரிக்க பங்குகள் வெள்ளியன்று சரிந்தன. ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் பங்கு விலைகள் புதிய அமெரிக்க மந்தநிலையின் அடையாளங்களை அடுத்து பரந்த அளவில் குறைந்தன. ஆனால் அமெரிக்கச் சந்தைகள் இன்னும் வியத்தகு அளவில் சரிந்தன.
Dow Jones Industrial Average 261 புள்ளிகள் சரிந்தது (-2.5 சதவிகிதம்), ஸ்டாண்டர்ட் & பூவர் 500 குறியீடு 31.6 புள்ளிகள் (-2.9 சதவிகிதம்) இழப்பைக்கண்டது. நஸ்டக் 70 புள்ளிகள் குறைந்தது (-3.11சதவிகிதம்). இந்த விற்பனை வாரம் முழுவதும் ஏற்பட்டிருந்த உயர்வை Dow ஐ 10,000 புள்ளிகளுக்கு உயர்த்தியதை பெரும் சரிவிற்கு கொண்டுவந்தது.
ஆபத்துக்களை காட்டிய பொருளாதாரத் தகவல்கள் வெள்ளியன்று உச்சக்கட்டமாக மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய நுகர்வோர் நம்பிக்கை அறிக்கை உணர்வை கொண்டுவந்தது. இதன் நுகர்வோர் உணர்வுக் குறியீடு ஜூன் மாதம் இருந்த 76ல் இருந்து ஜூலையில் 66.5 என்று குறைந்தது. 11 மாதங்களில் இந்த அளவீடானது மிகக்குறைந்த அளவாகும்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இவ்வாண்டுப் பொருளாதர வளர்ச்சி பற்றிய பெடரல் ரிசர்வின் திருத்தப்பட்ட கீழ்நோக்கம் கொண்ட கணிப்பு வந்தது. இதில் வேலையின்மை பற்றி கூடுதல் சதவிகித திருத்தம் இருந்தது. அரசாங்க அறிக்கைகள் ஜூன் மாதம் சில்லரை விற்பனைகளில் சரிவையும் மே மாதம் வணிக இருப்புக்களில் உயர்வையும் காட்டின. மற்ற அறிக்கைகள் ஆலை உற்பத்திக் குறைவுகளை காட்டின. மூன்றாவது தொடர்ந்த மாதத்தில் மொத்த விலைகள் சரிவும் புள்ளிவிவரங்களால் வெளிப்பட்டன.
மொத்தத்தில் இந்தக் குறியீடுகள் வியத்தகு குறைவு மற்றும் பணப்புழக்க தளர்வு இன்னும் அதிக வேலையின்மை, கூடுதல் திவால்கள், கடன் கொடுக்கும் சந்தையில் அதிக சுருக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த மகிழ்ச்சியற்ற பொருளாதாரத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள ஒரு சமூகப் பேரழிவிற்கு இடையே வந்துள்ளன. கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலையின்மையில் உள்ளவர்கள் என்று எண்ணப்படும் நிலையில், ஒபாமா நிர்வாகமும், காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சித் தலைமையும் கூட்டாட்சி வேலையின்மை நலன்களை விரிவாக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க மறுப்பது மில்லியன் கணக்கான மக்களை எந்த வருமான ஆதாரமும் இல்லாமல் செய்துவிட்டது. ஏற்கனவே கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள், நலன்களை இழந்துவிட்டனர். இது ஜூன் 1ல் காலாவதியான 26 வாரங்கள் இழப்பீட்டுத் தொகை அளிப்பதற்கு என்று இருந்த கூட்டாட்சி திட்டத்தை விரிவாக்கம் செய்யாததால் வந்தது. இந்த எண்ணிக்கை இம்மாத இறுதிக்குள் 3 மில்லியனுக்கு உயரும்.
சமூகப் பேரழிவில் இருந்து விளைந்துள்ள ஒரு அப்பட்டமான நடவடிக்கை முன்கூட்டிய விற்பனைகள் மூலம் வீடுகள் இழப்பு இரண்டாவது காலாண்டில் மிக அதிகமாயிற்று என்பதுதான். அமெரிக்க வங்கிகள் வீடுகளை 38 சதவிகிதம் போன ஆண்டு இருந்ததை விட அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டன. மொத்தம் இது மிக அதிகமான 250,000 வீடுகள் எடுத்துக் கொண்டதைக் காட்டுகிறது என்று Realty Trac என்னும் சொத்துக்கள் ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது.
மொத்தத்தில் முன்கூட்டிய விற்பனைக்கு வந்துவிட்ட அமெரிக்கச் சொத்துக்கள் 2010ன் முதல் ஆறு மாதங்களில் 2009ல் இதே காலத்தில் இருந்ததை விட 8 சதவிகிதம் உயர்ந்தன. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்த ஆண்டு வங்கிகள் 1 மில்லியனுக்கும் மேலான வீடுகளை உரிமையாளர்களிடம் இருந்து முன்கூட்டி எடுத்துக் கொள்ளும் என்பதை குறிப்பதாக RealtyTrac தெரிவித்துள்ளது.
இச்சமூகப் பேரழிவு ஒரு பொருளாதாரப் பேரழிவும் ஆகும். ஏனெனில் இது வீட்டுச் சந்தையை இது இன்னும் வலுவிழக்கச் செய்து வீடுகள் விலையையும் குறைத்து, புதிய கட்டமைப்புக்களுக்கும் பின்னடைவைக் கொடுக்கிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கைகள் வீடுகள் விற்பனை, வீடுகள் கட்டுதல் ஆகியவற்றில் தீவிர சரிவைக் காட்டுகின்றன. இந்த வாரம் அடைமான வங்கியாளர்கள் சங்கம் மொத்த கடன் விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் முந்தைய வாரத்தைவிட குறைந்தன என்றும் அடைமான விகிதங்கள் பல தசாப்தங்கள் இல்லாத அளவிற்குக் குறைத்தும் இந்நிலை உள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த நெருக்கடியை அடுத்து, ஜனாதிபதி ஒபாமா தொடர்ந்து தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகள் வெற்றி பெற்றுவிட்டன என்ற விதத்தில் பெருமை பேசும் வகையில் பொது உறவுகளை அரங்கேற்றுகிறார். வியாழனன்று மிச்சிகன் ஹோலந்தில் ஒரு புதிய நவீன மின்கல ஆலைக்கு அவர் வந்திருந்தார். இது ஓரளவு கூட்டாட்சி ஊக்கப் பொது நிதியின் உதவியைப் பெற்றது. இவர் மீண்டும் வேலையில்லாதவர்களுக்கு காங்கிரஸ் நலன்களைக் கொடுக்காதது பற்றி ஏதும் கூறவில்லை. இவருடைய ஹெர்பர்ட் ஹூவர் மந்திரமான “நாம் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறாம்” என்பதைத்தான் திருப்பித் திருப்பிக் கூறினார்.
இப்புதிய ஆலை பின்னர் 300 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று ஒபாமா பெருமை அடித்துக் கொண்டார். ஆனால் இது ஹோலந்திலும் மிச்சிகன் முழுவதிலும் வேலை நெருக்கடிகளில் சிறு பாதிப்பைக் கூட ஏற்படுத்தாது. நகரமும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைகளை இழந்துவிட்டன. ஹோலந்து உத்தியோகபூர்வ வேலையின்மையில் 11.8 சதவிகிதம் என்பதைக் கொண்டுள்ளது
சரியும் கருத்துக் கணிப்புச் செல்வாக்கு மற்றும் எழுச்சி பெறும் வெகுஜன அதிருப்தி ஆகியவற்றிற்கு வெள்ளை மாளிகை காட்டும் பொது உறவுகள் பிரச்சாரம் முற்றிலும் இழிந்தது ஆகும். நிர்வாகமும் ஜனநாயகக் கட்சித் தலைமையும் நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் அழுத்தத்தில் இருந்து 2009ல் அவை இயற்றிய குறைந்த தன்மை உடைய ஊக்கப்பொதிக் கொள்கையைக் கூட கைவிட்டுவிட முடிவெடுத்துள்ளான. மாறாக ஒபாமா அரசாங்கக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற கொள்கைகள் என பெருவணிகம் தேவையில்லாத தடை என்பதைப் பரிசீலிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இன்னும் விரைவாக வரவு-செலவுப் திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கு சமூக நலத் திட்டங்களான Medicare, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை வெட்டவும் விரைவில் செயற்படப்போவதாகக் கூறியுள்ளார்.
பல ஆண்டுகள் வேலையின்மை தக்க வைக்கப்படும். அப்பொழுதுதான் தொழிலாள வர்க்கம் பெரும் ஊதியக் குறைப்புக்கள், வாழ்க்கைத் தர குறைப்புக்களை ஏற்கும் கட்டாயத்திற்கும் அவை விரைவில் வருவதற்கும் ஒப்புக் கொள்வர். இதுதான் அமெரிக்க ஏற்றுமதிகள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிப்பேன் என்னும் ஒபாமாவின் உறுதிமொழிக்குத் திறவுகோல் ஆகும்.
பெடரல் தன்னுடைய முந்தைய ஏப்ரல் மாத மதிப்பிட்டில் இருந்து, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கான இந்த ஆண்டு கணிப்பு குறைவாக இருக்கும் என்று அறிவித்து இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதி பேசினார். அமெரிக்க மத்திய வங்கி இப்பொழுது இந்த ஆண்டின் வளர்ச்சி 3 ல் இருந்து 3.5 சதவிகிதம் உயரும் என்று கணிக்கிறது. அதன் முந்தைய கணிப்பு 3.2 ல் இருந்து 3.7 என்று இருந்தது. 2010ன் நான்காவது காலாண்டிற்கு வேலையின்மை விகிதம் 9.2 ல் இருந்து 9.5 சதவிகிதம், மற்றும் 9.1 சதவிகிதத்தில் இருந்து 9.5 சதவிகிதம் என்று கணிப்பை உயர்த்தியுள்ளது.
இத்தகைய கருத்துக்கள் தேவையற்ற நம்பிக்கைத் தன்மையாக போகலாம். Guggenheim Partners என்னும் அமெரிக்க நிலையான வருமான வணிக அமைப்பின் தலைவர் Tom di Galoma வெள்ளியன்று கூறினார்: “இன்று காலை மிச்சிகன் புள்ளிவிவரம் [நுகர்வோர் உணர்வு பற்றியது] கொடூரமான வகையில் மோசமாக இருந்தது. மக்கள் மற்றொரு பொருளாதாரச் சரிவிற்கு தயாராகிக் கொண்டுள்ளனர். இன்று காலை பார்த்த எண்ணிக்கை மிகவும் மந்த நிலையைத் தருவது ஆகும்.”
Capital Economics ன் பால் ஆஷ்வொர்த் வியாழனன்று அமெரிக்க ஆலை உறற்பத்திச் சரிவு பற்றி கூறியது: “[நேற்று] வெளிவந்த புள்ளி விவரங்கள் தொழில்துறை மீட்பு இயக்கத்தை விரைவில் இழந்து வருகிறது, பணத்தளர்வை இன்னும் பெரிய அச்சுறுத்தல் ஆக்கும் என்பதைக் காட்டுகிறது.”
Nouriel Roubini, Ian Bremmer ஆகிய பொருளாதார வல்லுனர்கள் செவ்வாயன்று Financial Times ல் எழுதுகையில் கீழ்க்கண்ட தோற்றத்தை அளிக்கின்றனர்: “அமெரிக்காவில் இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியிலும் 2011 லும் 1.5 சதவிகித வளர்ச்சி என்பது ஒரு மந்த நிலை போல் இருக்கும். ஏனெனில் வேலையின்மை, கூடுதலான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளில் அதிகக்குறைப்பு, வீடுகள் விலைகளில் இன்னும் சரிவு, அடைமானங்கள், கடன்கள் ஆகியவற்றில் வங்கிகள் இன்னும் அதிக இழப்புக்களை காட்டியிருப்பது மற்றும் காப்புவரிக் கொள்கை எழுச்சியானது சீனாவுடன் உறவுகளைச் சேதப்படுத்தும் என்ற ஆபத்தைக் கொடுக்கிறது ஆகியவற்றைக் கொண்ட நிலைப்பாடுகள் இருக்கும் தன்மையில்.”
|